தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, February 23, 2009

நான் கடவுள்! சில பதில்கள், பல கேள்விகள்

நேற்று ஒரு வழியாக நான் கடவுள் பார்த்தாகிவிட்டது. 

பல விமர்சனங்களுக்கிடையே எனக்கு படம் பிடித்திருந்தது. வலைப்பதிவில் பல கேள்விகளை முன் வைத்திருந்தனர் நம் நண்பர்கள். அந்த கேள்விகள் மனதில் பதிந்திருந்து படம் பார்த்ததால் சில எண்ணங்கள் உடனே என் மனதில் பட்டன. அதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. இது விமர்சனமல்ல. எனக்கு விமர்சனம் பண்ணவும் தெரியாது. ஒரு படத்தில் எது பிடித்திருந்தது எது மனதை நெருடியது என்ற மட்டுமே சொல்ல தெரியும்.

முதல் கேள்வி : கண் பார்வையற்றவருக்கு அழகில்லாதவரை திருமணம் செய்து வைத்தால் என்ன தவறு?

என் மனதில் தோன்றிய பதில். இந்த உலகத்தை நாமே பல முறை நம் பெற்றவர்களும், நண்பர்களும், சுற்றி இருப்பவர்களும் போட்டுவிடும் கண்ணாடியால் தானே பார்க்கிறோம். நமக்கு ஒரு சட்டை பிடித்து அதை அணிந்து வருகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். அதை பார்த்து ஒரு பத்து பேர் ”என்ன பாலாஜி, இந்த மாதிரி டிசைன்ல சட்டை போட்டிருக்க. உனக்கு இது எடுப்பாக இல்லை” என்று சொன்னால் அடுத்த முறை அந்த சட்டை அணிய எத்தனை முறை யோசிப்போம். அது போலவே அம்சவல்லி உலகை தன்னை சுற்றி இருக்கும் தன் நண்பர்கள் மூலமே அறிகிறாள். அவளை என்ன செய்ய போகிறார்கள் என்பதே அவளுக்கு சொல்லப்படவில்லை. அவளுக்கு ஏதோ பெரிய தீங்க ஏற்பட போகிறது என்பது மட்டுமே அவளுக்கு தெரியப்படுத்துகிறார்கள். 

அவளுக்கு தெரியப்படுத்துபவர்களும் அந்த விஷயத்தை அவர்கள் மனதில் மிகவும் கொடுமையானவன் என்று பதிந்த நாயர் மூலம் தெரிந்து கொள்வதாலே அப்படி ஒரு முடிவுக்கு வருகின்றனர். யாருக்கும் சிந்திக்க அவகாசமில்லை. அப்படி சிந்தித்து முடிவெடுக்கவும் அவர்களுக்கு உரிமையில்லை. அவர்கள் மேல் எதுவும் தப்பிருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை. அவர்களால் அருவருப்பாக பார்க்கப்படும் அந்த நபரும் குணத்தால் நல்லவராகவே எனக்கு தெரிகிறார். நல்ல முறையில், அவளுக்கு வேண்டியவர்கள் சொல்லியிருந்தால் அம்சவல்லி அவரை மனந்திருக்கலாம்.

மாற்று திறன் கொண்டவர்களுக்கு\ வாழ முடியாதவர்களுக்கு மரணம் தான் வரமா? அவளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்க முடியாதா?

இங்கே கடவுள்\கடவுளாக தன்னை நினைத்து கொண்டிருக்கும் ருத்ரன் தானாக வரம் அளிக்கவில்லை. அப்படி அளித்திருந்தால் அங்கே எத்தனை பேருக்கு வரம் அளித்திருக்க வேண்டும். அது அம்சவல்லியாக கேட்ட வரம். அது ருத்ரனுக்கு நியாயமாக பட்டது. அதனால் அதை அவன் அளித்தான். அது ருத்ரனுக்கு மட்டும் தான் நியாயமாக பட்டதா? அப்படி இருந்தால் அவன் அம்சவல்லியை எரித்துவிட்டு வரும் பொழுது அங்கே நின்றிருப்பவர்கள் யாரும் கதறி அழுதிருப்பார்கள். அங்கே அவளை நேசித்தவர்களுக்கும் அது வரமாகவே பட்டது. 

திடீரென்று தாண்டவன் வருவதும்\ தனியாக சண்டை போடுவதும் படத்தில் ஒட்டவில்லை.

இதுல எனக்கு எதுவும் பெருசா ஒட்டாத மாதிரி தெரியல. நீதிமன்றத்தில் இருந்து ருத்ரன் வருவதை தாண்டவன் பார்க்கிறார். நீதிமன்றத்திற்கெதிரில் சண்டை போடவோ, தாக்கவோ முடியாது. ருத்ரன் அங்கிருந்து நேராக செல்லுமிடம் அந்த குன்று தான். அதனால் அதனருகில் சண்டை. அங்கேயும் தாண்டவன் ஏன் தனியாக வந்து சண்டை போடுகிறான். தாண்டவனுடன் இருப்பவர்கள் யாரும் மற்றவர்களை பெரிதும் அடிப்பதோ, காயப்படுத்துவதாகவோ காட்டப்படவில்லை. அது முழுக்க முழுக்க தாண்டவனால் நடத்தப்படுகிறது. தாண்டவனும் நல்ல உடல் வளம் கொண்டவன்தான். அதனால் தனியாக சண்டை போடுவது வித்தியாசமாக தெரியவில்லை.

எனக்கு மனதில் தோன்றிய சில கேள்விகள்\ நெருடல்கள்.

1. ருத்ரன் காசியிலிருந்து புறப்படும் போது உனக்கு எதுவும் உறவுகளில்லை. நீ அனைத்தையும் உதறிவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். அவன் அதை அவன் தாயிடம் தூமைனா என்னனு தெரியுமில்லை என்ற காட்சியிலே முடித்துவிடுகிறான். அதற்கு பிறகு அவன் அவர்களை சந்திக்கவில்லை. அதன் பிறகு அங்கிருந்து கிளம்பாமல், இரண்டு தண்டனைகளையும், ஒரு வரத்தையும் கொடுக்கும் வரை அங்கு தங்கியிருக்க வேண்டிய அவசியமென்ன? அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப வேண்டிய காரணமென்ன? அவன் காசியிலிருந்த வந்த காரணத்தில் இதுவும் ஒன்றா?

2. அம்சவல்லி பாடும் பாடல்களுக்கு அந்த பின்னனி இசை அவசியமா?

3. நீதிமன்ற காட்சியில் அவரை குற்றவாளியாக நீதிபதி ஏற்காமல் காவல் துறை ஆய்வாளரை கேள்வி கேட்குமிடம் சரியாக புரியவில்லை.

4. இவன் தான் என் பிள்ளை என்று ருத்ரனை அந்த தந்தை கண்டுபிடிப்பது கொஞ்சம் நெருடினாலும், ருத்ரன் தான் அவர்களின் பிள்ளையா? இல்லை ஒரு தாயின் குறையை போக்க அவன் குருஜி அனுப்பி வைக்கிறாரா? ருத்ரன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு படத்தை பார்த்து நிற்பதும், பிறகு அவன் தந்தையிடம் இவனை நீதான் கொன்னயா?னு கேட்குமிடம் அவன் சின்ன வயதில் நம்மை காசியில் விட்டு சென்றார்கள் என்று கோபத்தில் கேட்டதா இல்லை மகனை காசியில் கொண்டு வந்து விட்டு சென்றவன் எதை வேண்டுமானுலும் செய்வான் என்று கேட்பதா?

5. தாண்டவனின் கையாள் முருகனிடம் வேலை செய்வோர், முருகன் கோவிலில் பிச்சை எடுப்பது எதை குறிப்பதற்காக? 

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது... இன்னும் ஒரு நான்கைந்து முறை பார்த்துவிட்டு கேட்கிறேன்.

24 comments:

வெட்டிப்பயல் said...

இத்தனை பேர் படிக்கறீங்க... ஒருத்தர் கூட எதுவும் பதில் சொல்ல மாட்றீங்களே...

SurveySan said...

நல்ல கேள்விகள் :)

பூஜா கூட திடீர்னு மாதா கோயிலுக்கும், மலைக்கோயிலுக்கும் தடால் தடால்னு வந்து நிப்பாங்களே. அது நெருடலயா?

உங்க கேள்விக்கும் மத்த ருசியான கண்ண்ணோட்டமும், பைத்தியக்காரனின் பின்னூட்டத்தில் கிட்டும் இங்கே: http://www.narsim.in/2009/02/blog-post_13.html

SurveySan said...

//இத்தனை பேர் படிக்கறீங்க... ஒருத்தர் கூட எதுவும் பதில் சொல்ல மாட்றீங்களே...//

எல்லாரும் ரஹ்மான் புயல்ல சிக்கி இருக்காங்க ;)

வெட்டிப்பயல் said...

// SurveySan said...
நல்ல கேள்விகள் :)

பூஜா கூட திடீர்னு மாதா கோயிலுக்கும், மலைக்கோயிலுக்கும் தடால் தடால்னு வந்து நிப்பாங்களே. அது நெருடலயா?

உங்க கேள்விக்கும் மத்த ருசியான கண்ண்ணோட்டமும், பைத்தியக்காரனின் பின்னூட்டத்தில் கிட்டும் இங்கே: http://www.narsim.in/2009/02/blog-post_13.html

//

மாதா கோவில் சென்ற பிறகு அவர் அடி வாங்கிய பிறகே மலைக்கோவிலுக்கு வருகிறார் என நினைக்கிறேன்...

அது மட்டுமில்லாம மாதா கோவிலுக்கு போயிட்டு அதே நாள் நான் மாரியாத்தா கோவிலுக்கும் போவேன்... நிறைய தடவை போயிருக்கேன் :)

வெட்டிப்பயல் said...

//நல்ல கேள்விகள் :)//

பதில்கள் கொஞ்சமும் திருப்தியில்லையா?

வெட்டிப்பயல் said...

//SurveySan said...
//இத்தனை பேர் படிக்கறீங்க... ஒருத்தர் கூட எதுவும் பதில் சொல்ல மாட்றீங்களே...//

எல்லாரும் ரஹ்மான் புயல்ல சிக்கி இருக்காங்க ;)//

ரைட்டு... தப்பான நேரத்துல பதிவை போட்டுட்டேன் போல :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//ருத்ரன் காசியிலிருந்து புறப்படும் போது உனக்கு எதுவும் உறவுகளில்லை. நீ அனைத்தையும் உதறிவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். அவன் அதை அவன் தாயிடம் தூமைனா என்னனு தெரியுமில்லை என்ற காட்சியிலே முடித்துவிடுகிறான். அதற்கு பிறகு அவன் அவர்களை சந்திக்கவில்லை. அதன் பிறகு அங்கிருந்து கிளம்பாமல், இரண்டு தண்டனைகளையும், ஒரு வரத்தையும் கொடுக்கும் வரை அங்கு தங்கியிருக்க வேண்டிய அவசியமென்ன? அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப வேண்டிய காரணமென்ன?//

உறவை அத்து எறிவது தான் குறி என்றால் வந்த அன்றே "தூமை" வசனத்தைச் சொல்லி விட்டுத் திரும்பிச் சென்றிருக்கலாம். அதையும் தாண்டி ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை மலைக்கோவிலில் தங்கி இருக்கச் செய்திருக்க வேண்டும். "உறவை அத்து எறி. எப்போது திரும்ப வர வேண்டும் என்று உனக்கே தெரியும்" என்று குரு சொல்கிறார். இப்போது புறப்பட்டுப் போகலாம் என்ற உணர்வு தாண்டவனைக் கொன்ற பிறகு வந்திருக்கலாம்.

வெட்டிப்பயல் said...

// ரவிசங்கர் said...

6:25 AM//

நன்றி ரவிசங்கர்...

முதல் நாளே அப்படி சொல்லியிருந்தால் அந்த அதிர்ச்சியும், புரிந்துணர்வும் வருமா என்பது சந்தேகமே. அதற்கு முன்பே அந்த தாய்க்கு பல அதிர்ச்சியை கொடுத்துவிட்டார் ருத்ரன்...

இருந்தாலும் தாங்கள் சொல்லியதை போல “எப்போது திரும்ப வர வேண்டும் என்று உனக்கே தெரியும்" என்று குரு சொல்லியதன் அர்த்தம் இதுவாக இருக்கலாம்.

நாமக்கல் சிபி said...

நான் இன்னும் படம் பார்க்கவிலை! அதனால எல்லாக் கேள்விகளும் சாய்ஸில்!

நாமக்கல் சிபி said...

//நீதிமன்றத்திற்கெதிரில் சண்டை போடவோ, தாக்கவோ முடியாது//

என்ன அபத்தம் இது?

இப்பவெல்லாம் சட்டக் கல்லூரி, நீதிமன்ற வளாகம், நீதி மன்ற உள் அறைகள் இங்கயெல்லாம் சண்டை போடலாமே! அதானே டிரெண்டு?

வாட் ஹேப்பண்ட் டூ யூ வெட்டி?

நாமக்கல் சிபி said...

//ரைட்டு... தப்பான நேரத்துல பதிவை போட்டுட்டேன் போல :)//

கரெக்ட்டுபா!

நான் கடவுள் : ரொம்ப லேட்!

நாமக்கல் சிபி said...

//அது மட்டுமில்லாம மாதா கோவிலுக்கு போயிட்டு அதே நாள் நான் மாரியாத்தா கோவிலுக்கும் போவேன்... நிறைய தடவை போயிருக்கேன் :)//

இதிலென்ன ஆச்சரியம் இருக்கு!

நான் கூட காலைல சர்ச்சுக்கு போயிட்டு சாயங்காலம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிருக்கேன்!

நாகை சிவா said...

ரைட்... இன்னும் நான் படம் பாக்கல. ஆனா கண்டிப்பாக பார்ப்பேன் :)

Divyapriya said...

ஆர்யாவ பாத்தாலே பயமா இருக்கு, அதனாலையே படம் பாக்க தோன மாட்டேங்குது :( நீங்க எழுதி இருக்கறதா பாத்தா, இன்னும் பயங்கரமா இருக்கும் போல?

Anonymous said...

ஜெயமோகன் அவரது இணைய தளத்தில் சில விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். குறிப்பாக உங்கள் 1, 2 கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். விருப்பமிருந்தால் ஏழாம் உலகம் வாசித்துப் பாருங்கள். படம் எனக்கு பிடித்திருந்தது.

SurveySan said...

check this out. interesting answers.
http://jeyamohan.in/?p=1873

வெட்டிப்பயல் said...

//Namakkal Shibi said...
//நீதிமன்றத்திற்கெதிரில் சண்டை போடவோ, தாக்கவோ முடியாது//

என்ன அபத்தம் இது?

இப்பவெல்லாம் சட்டக் கல்லூரி, நீதிமன்ற வளாகம், நீதி மன்ற உள் அறைகள் இங்கயெல்லாம் சண்டை போடலாமே! அதானே டிரெண்டு?

வாட் ஹேப்பண்ட் டூ யூ வெட்டி?

//

தள,
அப்படி சண்டை போடறதுக்கு அவர் என்ன வக்கிலா இல்லை வக்கிலுக்கு தான் படிக்கிறாரா?

வெட்டிப்பயல் said...

// Namakkal Shibi said...
//ரைட்டு... தப்பான நேரத்துல பதிவை போட்டுட்டேன் போல :)//

கரெக்ட்டுபா!

நான் கடவுள் : ரொம்ப லேட்!

9:11 AM//

இங்க நேத்து தானே ரிலிஸ் ஆச்சு :(

வெட்டிப்பயல் said...

// Namakkal Shibi said...
//அது மட்டுமில்லாம மாதா கோவிலுக்கு போயிட்டு அதே நாள் நான் மாரியாத்தா கோவிலுக்கும் போவேன்... நிறைய தடவை போயிருக்கேன் :)//

இதிலென்ன ஆச்சரியம் இருக்கு!

நான் கூட காலைல சர்ச்சுக்கு போயிட்டு சாயங்காலம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிருக்கேன்!//

நம்ம சர்வேஸ் தான் வித்தியாசமா தெரியுதுனு சொன்னாரு :)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...
ரைட்... இன்னும் நான் படம் பாக்கல. ஆனா கண்டிப்பாக பார்ப்பேன் :)///

கண்டிப்பா பாரு புலி... எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது :)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...
ஆர்யாவ பாத்தாலே பயமா இருக்கு, அதனாலையே படம் பாக்க தோன மாட்டேங்குது :( நீங்க எழுதி இருக்கறதா பாத்தா, இன்னும் பயங்கரமா இருக்கும் போல?

//

இந்த படமெல்லாம் வேண்டாம்மா... சிவா மனசுல சக்தி நல்லா இருக்குனு கேள்வி பட்டேன்... அது வேணா பாரு .

வெட்டிப்பயல் said...

// Anonymous said...
ஜெயமோகன் அவரது இணைய தளத்தில் சில விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். குறிப்பாக உங்கள் 1, 2 கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். விருப்பமிருந்தால் ஏழாம் உலகம் வாசித்துப் பாருங்கள். படம் எனக்கு பிடித்திருந்தது.

6:22 PM//

நன்றி தோழரே!

ஜெயமோகன் இதை பத்தி பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்னு நினைக்கிறேன். பொறுமையாக படிக்கிறேன்.

ஏழாம் உலகம், இந்தியா வந்தவுடன் படிக்க வேண்டும் :)

வெட்டிப்பயல் said...

// SurveySan said...
check this out. interesting answers.
http://jeyamohan.in/?p=1873//

கலக்கல் சர்வேஸ்...

நான் சொன்ன பதில்கள் எல்லாம் பெரும்பாலும் சரியா இருக்கு. பார்த்தீங்களா?

நிறைய கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டாரு. சரியான நேரத்துல நான் பதிவு போட்டுட்டேன் :)

கார்த்தி said...

Annan Bala adutha padathulayavuthu eero eeroyinia sethu vecha nalla irukkum :)