தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, July 29, 2008

ஆடு புலி ஆட்டம் - 1

Warning : : இந்த தொடரில் நிறைய Adult Content வருமென்பதால் 18 வயதிற்கு குறைந்தவர்களும், இளகிய மனம் கொண்டவர்களும் படிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இது பரபரப்பிற்காக சொல்லவில்லை.

அப்பாடா ஒரு வழியா மெஜெஸ்டிக் வந்து சேர்ந்தாச்சுங்க. இந்த பெங்களூர் ட்ராபிக் ஜாம் இருக்கே. கொடுமைலயும் கொடுமைங்க. MGரோட்ல இருக்குற எங்க ஆபிஸ்ல இருந்து மெஜெஸ்டிக் வந்து சேரதுக்குள்ள எங்க ஊர்ல இருந்து கடலூர்க்கே போயிடலாங்க. ஓ எங்க ஊர் என்னனே உங்களுக்கு சொல்லலை இல்லை. எங்க ஊர் பேரு திருக்கோவிலூர்ங்க. திருவண்ணாமலைல இருந்து அரை மணி நேரத்துல போயிடலாம்.

இப்ப கூட திருவண்ணாமலை பஸ் தான் பிடிக்க போறேன். இன்னைக்கு வேற பௌர்ணமியா போயிடுச்சி. பஸ்ல எப்படியும் சீட் கிடைக்கறது கஷ்டம் தான். அதான் மடிவாலா போகாம நேரா மெஜெஸ்டிக்கே வந்துட்டேன். மெஜெஸ்டிக் பஸ் ஸ்டாண்ட்ல கொஞ்சம் கஷ்டப்பட்டா சீட் பிடிச்சிடலாம்.

மெஜெஸ்டிக்ல உள்ள நுழைஞ்சதும் முதல்ல ஒரு காபி குடிச்சிடறது நம்ம பழக்கங்க. அதுவும் அந்த கோத்தாஸ் காபிதாங்க நம்ம ஃபேவரைட். அஞ்சு ரூபாய்க்கு இவ்வளவு சூப்பரான காபி நம்ம ஊர்ல கிடைக்காதுங்க. இருங்க ஒரு காபி குடிச்சிட்டு வந்திடறேன்.

காபி வழக்கம் போல சூப்பரா இருந்துச்சுங்க. அதுவும் நமக்கு ஏத்த மாதிரி ஸ்டராங்கா, சக்கரை கொஞ்சம் கம்மியா. சுருக்கமா சொன்னா நம்ம கோயமுத்தூர் அண்ணபூர்ணா காபி மாதிரி. சரி காபி புராணத்த நிறுத்துவோம். நான் அதை பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருப்பேன்.

இவ்வளவு நேரம் பேசிட்டே இருக்கோம். என் பேரை சொல்லல பாருங்க. என் பேரு... ஐயோ அங்க வர பஸ் திருவண்ணாமலை பஸ் மாதிரி தெரியுது. இருங்க முதல்ல பஸ்ல போய் இடம் பிடிப்போம்.

ஆஹா... அந்த பஸ்ல உக்கார இடமில்லைங்க. அதான் இந்த பஸ்ல ஏறிட்டேன். அஞ்சு மணி நேரம் நின்னுட்டு போக முடியாது இல்லையா? இந்த மூணு பேர் உக்கார சீட்ல உக்காரவே எனக்கு பிடிக்காது. இருந்தாலும் வேற வழியில்லாததால உக்கார்ந்துக்கிட்டேங்க. அடுத்து யாராவது வந்தா நடு சீட்ல உக்கார சொல்லனும். ஜன்னல் சீட்ல இருக்கற அந்த ஆளை எப்படியும் நகர சொல்ல முடியாது. நடுல உக்கார்ந்து போறதை விட வேற கொடுமை இல்லை. அதான் இப்படி ஓரமாவே ஒட்டிட்டு உக்கார்ந்து இருக்கேன்.

என்னங்க இவ்வளவு பேசியும் என் பேரை சொல்ல நேரமில்லை பாருங்க. நான் தாங்க ரவி. ரவி சங்கர். இந்த ட்ராபிக் ஜாம் ஊர்ல தான் கூகுள்ல வேலை செய்யறேன். அண்ணா யுனிவர்சிட்டி கேம்பஸ்ல நானும் என் எதிரி மாலதியும் செலக்ட் ஆனோம். அவ MS பண்ண போயிட்டா. நான் மூணு வருஷமா அங்க தான் குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

நான் நல்ல பையங்க. ஆனா அப்பப்ப கொஞ்சம் பொய் மட்டும் சொல்லுவேன். அதுல முக்கியமான ஒண்ணு பஸ்ல போகும் பக்கத்துல இருக்குற யார் கேட்டாலும் வேலை தேடிட்டு இருக்கறனு சொல்றது. கொஞ்சம் நல்லா கல கலனு போகும். நிறைய பேர் அட்வைஸ் கொடுப்பாங்க. அட்டகாசமான டிப்ஸ் எல்லாம் கொடுப்பாங்க. நானும் நல்ல பையனா கேட்டுக்குவேன். ஏன்னா வேலைக்கு போறனு சொன்னா சம்பளத்தை பத்தி தான் அதிகம் பேசுவாங்க. அதான் இப்படி.

இன்னைக்கு யாரும் சிக்க மாட்டாங்க போல. சரி பார்க்கலாம். எப்படியும் பக்கத்துல ஒரு ஆள் வருவான் இல்லை.

ஆஹா... என்னங்க அந்த பொண்ணு நம்ம பக்கத்துல வந்து நிக்குது. இடத்தை மாத்த சொல்ல போறாங்களா? திரு திருனு முழிச்சிட்டு நிக்குது.அனேகமா நகுந்து உக்கார சொல்லுதுனு நினைக்கிறேன்...

நடு சீட்டுக்கு போக வெச்சிட்டாளே!!! என்னை நடு சீட்ல உக்கார வெச்ச அவளுக்கு இருக்குங்க ஆப்பு...

(தொடரும்...)

64 comments:

வெட்டிப்பயல் said...

இந்த கதை ஆறு மாதங்களுக்கு முன்னர் பனிவிழும் மலர்வனம்னு ஆரம்பித்தேன். நேரமின்மை காரணத்தால் தொடர முடியாமல் போனது.

நண்பர்கள் தூண்டுதலால் இப்பொழுது மீண்டும் தூசு தட்டி எழுத ஆரம்பித்தேன். பனிரெண்டு பாகம் முடித்துவிட்டேன். இன்னும் சில பாகங்கள் எழுத வேண்டியுள்ளது.

இது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும்...

மங்களூர் சிவா said...

வார்னிங் ஜூப்பர்

மங்களூர் சிவா said...

தொடரோட ட்ரைலர் ஜூப்பர்

மங்களூர் சிவா said...

சீக்கிரம் ஆரம்பிங்க அங்கங்க தூவ வேண்டியதை தூவி வார்னிங்கை பொய்ப்பிக்காம அசத்துங்க வெட்ட்ட்ட்டி

உண்மை said...

பரபரப்பான தொடக்கம். ஒரு 25 தொடர் எதிர்பார்கிறேன்

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

வார்னிங் ஜூப்பர்//

ரொம்ப டாங்க்ஸ் ;)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

தொடரோட ட்ரைலர் ஜூப்பர்//

அடப்பாவி.. இது கதயோட ஸ்டார்டிங் :-)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

சீக்கிரம் ஆரம்பிங்க அங்கங்க தூவ வேண்டியதை தூவி வார்னிங்கை பொய்ப்பிக்காம அசத்துங்க வெட்ட்ட்ட்டி//

வார்னிங்ல இருக்கறது எல்லாம் ஒரு பத்து பாகத்துக்கு மேல தான் வரும் :-)

இருந்தாலும் இப்பவே போடறது தான் நல்லதா பட்டுச்சு :-)

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

பரபரப்பான தொடக்கம். ஒரு 25 தொடர் எதிர்பார்கிறேன்//

உண்மை,
எப்படியும் 20ஆவது வரும்னு என்னோட கணிப்பு... 25 வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :-)

திவாண்ணா said...

oo pa.vi.ma.va avLOthaanaa? sari sari.
எங்க வீட்லே இட்டலி மீந்து போச்சுனா அடுத்த நாள் அதையே உப்புமா மாதிரி ஆக்கிடுவாங்க. அதுக்கு "விட்டேனா பார்" ன்னு பேர் வெச்சு இருக்கேன்.
அது போல இருக்கு இது!
:-))

வெட்டிப்பயல் said...

// திவா said...

oo pa.vi.ma.va avLOthaanaa? sari sari.
எங்க வீட்லே இட்டலி மீந்து போச்சுனா அடுத்த நாள் அதையே உப்புமா மாதிரி ஆக்கிடுவாங்க. அதுக்கு "விட்டேனா பார்" ன்னு பேர் வெச்சு இருக்கேன்.
அது போல இருக்கு இது!
:-))//

ப.வி.ம.வ தான் இது. வேற பேர்ல எழுதற மாதிரி கதை மாறிடுச்சி. இங்க பனி பெய்யும் பொழுது எழுத ஆரம்பிச்சேன். அதுல காதல் மட்டும் அதிகமா வர மாதிரி இருக்கும். இப்ப கொஞ்சம் மசாலா அதிகமானவுடனே அந்த பெயர் சரியாக படவில்லை :-)

நிறைய பேருக்கு மறந்திருக்கும்னு தான் முதல்ல இருந்தே ஆரம்பிக்கிறேன் :-)

உங்களுக்கு கதை ஞாபகமிருந்தால் ஐந்தாவது பகுதியிலிருந்து படிக்க ஆரம்பிக்கவும்.

முதல் நான்கு பகுதி மட்டும் தினமும் இட முடிவு செய்திருக்கிறேன். அதற்கு பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் :-)

நாமக்கல் சிபி said...

பதிவை வெளியிடும் முன்னர் ஒரு தபா ப்ரூஃப் ரீடிங்க் விடுங்க வெட்டி!

நாமக்கல் சிபி said...

இடித்துரைத்தல் என் கடமை! அதான்! தப்பா எடுத்துக்காதீங்க!

நாமக்கல் சிபி said...

//ஃபெவரைட்// - ஃபேவரைட்
//கொயம்பத்தூர்// - கோயமுத்தூர்

நாமக்கல் சிபி said...

//இது பரபரப்பிற்காக சொல்லவில்லை.//

முதல் பகுதியிலேயே அட்டகாசமான திருப்பம்!

:))

siva gnanamji(#18100882083107547329) said...

//நிறைய பேருக்கு மறந்திருக்கும்னுதான்.....//

விளையாடாதீங்க...3 மாசத்துக்குள்ளே
மறக்கக்கூடியதா 'பனி விழும் மலர்வனம்'?

Divya said...

habbada....oru valiya restart paniteengla 'பனிவிழும் மலர்வனம்' thodar kathai:))

was waiting for it....good to see the restart!!

Divya said...

\\சுருக்கமா சொன்னா நம்ம கொயமுத்தூர் அண்ணபூர்ணா காபி மாதிரி\\

anna, you have a good taste bud for coffee:))

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

பதிவை வெளியிடும் முன்னர் ஒரு தபா ப்ரூஃப் ரீடிங்க் விடுங்க வெட்டி!//

தள,
என் பதிவை திரும்ப படிக்கிறது எனக்கே கஷ்டமா இருக்கு :-)

ஜஸ்ட் கிட்டிங்.. அப்படி படிச்சிம் ஒரு சிலது எல்லாம் விட்டு போகுது..

Coimbatoreனு இருக்கறதை அப்படியே பேச்சு வழக்குல போட்டுட்டேன்.

பஸ்லயும் பெரும்பாலும் கோவைனு தான் போட்டிருக்கும் :-)

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

இடித்துரைத்தல் என் கடமை! அதான்! தப்பா எடுத்துக்காதீங்க!//

தள,
உங்களுக்கு இல்லாத உரிமையா??? தாராளமா சொல்லலாம். தப்பா எடுத்துக்காதீங்கனு சொன்னா தான் தப்பா எடுத்துக்குவேன் :-)

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

//ஃபெவரைட்// - ஃபேவரைட்
//கொயம்பத்தூர்// - கோயமுத்தூர்//

மாத்தியாச்சி தள:-)

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

//இது பரபரப்பிற்காக சொல்லவில்லை.//

முதல் பகுதியிலேயே அட்டகாசமான திருப்பம்!

:))//

தள,
இதுல எதுவும் உள்குத்து இல்லையே? :-)

வெட்டிப்பயல் said...

// siva gnanamji(#18100882083107547329) said...

//நிறைய பேருக்கு மறந்திருக்கும்னுதான்.....//

விளையாடாதீங்க...3 மாசத்துக்குள்ளே
மறக்கக்கூடியதா 'பனி விழும் மலர்வனம்'?//

ஆஹா...
நிஜமா சொல்றீங்களா இல்லை ஏதாவது உள்குத்து இருக்கானே தெரியலையே :)

ஆடு புலி ஆட்டமும் பட்டையை கிளப்பும் :-)

வெட்டிப்பயல் said...

//Divya said...

habbada....oru valiya restart paniteengla 'பனிவிழும் மலர்வனம்' thodar kathai:))

was waiting for it....good to see the restart!!//

இது ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சிட்டேன். பனிரெண்டு பாகம் முடித்தவுடன் ஃப்லோ சரியில்லைனு மீண்டும் ஆறு பாகம் எழுத வேண்டியதாக போய் விட்டது...

பார்க்கலாம்.. நல்லா வருதானு.

வெட்டிப்பயல் said...

//Divya said...

\\சுருக்கமா சொன்னா நம்ம கொயமுத்தூர் அண்ணபூர்ணா காபி மாதிரி\\

anna, you have a good taste bud for coffee:))//

காபி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் அண்ணபூர்ணா காபி மாதிரியோ இல்லை கேத்தாஸ் காபி மாதிரியோ இருந்தா இப்ப கூட அடுத்த நாலு பகுதி எழுதற அளவுக்கு எனர்ஜி வந்திடும்.

ஆனா Whole Milkல காபி குடிச்சா 500 கலோரினு போன வாரம் வீட்டுக்கு வந்த நண்பர் ஒருத்தர் சொல்லிட்டு போயிட்டாரு :-(

ரெண்டு நாளா காபி வேற குடிக்காம இருக்கேன் :-(

Kavinaya said...

எச்சரிக்கையைப் பாத்தப்புறம் கதையைப் படிக்க பயமா இருக்கு... கதை முடிஞ்ச பொறவு வாரேன்...

நாமக்கல் சிபி said...

//
தள,
இதுல எதுவும் உள்குத்து இல்லையே? :-)//

ச்சேச்சே

உள்குத்து மட்டுமே உள்ளது! வேறெதுவும் இல்லை!


:)

வெட்டிப்பயல் said...

//கவிநயா said...

எச்சரிக்கையைப் பாத்தப்புறம் கதையைப் படிக்க பயமா இருக்கு... கதை முடிஞ்ச பொறவு வாரேன்...//

நல்லது. அதுக்கு தான் வார்னிங் கொடுத்துட்டேன்.. படிச்சிட்டு என்னை திட்டக்கூடாது இல்லை :-)

வெட்டிப்பயல் said...

// நாமக்கல் சிபி said...

//
தள,
இதுல எதுவும் உள்குத்து இல்லையே? :-)//

ச்சேச்சே

உள்குத்து மட்டுமே உள்ளது! வேறெதுவும் இல்லை!


:)//

அதான பார்த்தேன்.. ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்.. இப்ப நிம்மதி :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Warning : : இந்த தொடரில் நிறைய Adult Content வருமென்பதால் 18 வயதிற்கு குறைந்தவர்களும், இளகிய மனம் கொண்டவர்களும் படிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்//

இந்தக் கதை சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டதா?
இல்லை சென்-"சாரு" போர்டுக்காச்சும் அனுப்பப்பட்டதா? :))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Warning : : இந்த தொடரில் நிறைய Adult Content வருமென்பதால் 18 வயதிற்கு குறைந்தவர்களும், இளகிய மனம் கொண்டவர்களும் படிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்//

பதிவில் பெரிதாக A-sign வைங்க பாலாஜி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//18 வயதிற்கு குறைந்தவர்களும்//

ரிஷான், u are not allowed!

//இளகிய மனம் கொண்டவர்களும்//

இதுக்கு யாரைச் சொல்லலாம்?
ஆமாம், நம்ம பாலாஜியே இருக்காரு-ல்ல!
கதையை எழுது! ஆனாப் படிச்சிறாத பாலாஜி! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மங்களூர் சிவா said...
தொடரோட ட்ரைலர் ஜூப்பர்//

அடப்பாவி.. இது கதயோட ஸ்டார்டிங் :-)//

சிவா
வெட்டி சொல்லறது ஸ்டார்டிங் ட்ரைலர்!
அடுத்த பாகம் தான் ரியல் ட்ரைலர்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Divya said...
\\சுருக்கமா சொன்னா நம்ம கொயமுத்தூர் அண்ணபூர்ணா காபி மாதிரி\\

anna, you have a good taste bud for coffee:))//

திவ்யா...
ஏங்க சொல்ல மாட்டீங்க?
அவரு taste bud நல்லாத் தான் இருக்கு!
எங்க taste bud-க்குத் தான் ஆப்பு வச்சாரு தல!

எங்க பாலாஜி இந்த ஊரு Deep Roasted Maxwell House காபிய தெரியாத்தனாமா வாங்கி, அளவு தெரியாம போட்டு, ஊத்திக் கொடுத்தாரு பாருங்க! அதுக்கே "கசப்பாஆஆஆஆஆன" பின்னூட்டம் நாலு போடணூம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் தாங்க ரவி. ரவி சங்கர்//

இட்லி-ல தான் நானு!
உப்புமாவிலும் நானே நானா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அண்ணா யுனிவர்சிட்டி கேம்பஸ்ல நானும் என் எதிரி மாலதியும் செலக்ட் ஆனோம். அவ MS பண்ண போயிட்டா//

யோவ்..எத்தினி வாட்டியா சொல்லுறது?
அவ பேரு பாரதி!
நாட் மாலதி!
:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இளகிய மனம் கொண்டவர்களும்//

இதுக்கு யாரைச் சொல்லலாம்?
ஆமாம், நம்ம பாலாஜியே இருக்காரு-ல்ல!//

நான் சொன்னது பாஸ்டன் பாலாஜியை அல்ல என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! :))

வெட்டிப்பயல் said...

//திவ்யா...
ஏங்க சொல்ல மாட்டீங்க?
அவரு taste bud நல்லாத் தான் இருக்கு!
எங்க taste bud-க்குத் தான் ஆப்பு வச்சாரு தல!

எங்க பாலாஜி இந்த ஊரு Deep Roasted Maxwell House காபிய தெரியாத்தனாமா வாங்கி, அளவு தெரியாம போட்டு, ஊத்திக் கொடுத்தாரு பாருங்க! அதுக்கே "கசப்பாஆஆஆஆஆன" பின்னூட்டம் நாலு போடணூம்! :)//

இது முற்றிலும் பொய்...

காபி போட தெரியாம காபி போடறேனு நிறைய காபி தூளை கொட்டி வைத்தது நீங்க தான். அதை சரி செய்தது தான் நான்.

நான் போட்ட காபியோட பெருமை நம்ம பாபாக்கு தெரியும் :-)

Divya said...

\\ஆனா Whole Milkல காபி குடிச்சா 500 கலோரினு போன வாரம் வீட்டுக்கு வந்த நண்பர் ஒருத்தர் சொல்லிட்டு போயிட்டாரு :-(

ரெண்டு நாளா காபி வேற குடிக்காம இருக்கேன் :-(\\


aaha.......whole milk la coffee aa??
ayo annna....2% milk la coffee....athuvum Nescafe Sunrise try panunga, super aa irukum :)))

Sathiya said...

//இந்த கதை ஆறு மாதங்களுக்கு முன்னர் பனிவிழும் மலர்வனம்னு ஆரம்பித்தேன். நேரமின்மை காரணத்தால் தொடர முடியாமல் போனது.//
இதை படிக்க ஆரமிக்கும் பொழுது 'பனிவிழும் மலைவனம்' என்ன ஆச்சுன்னு கேக்கலாம்னு இருந்தேன்;) கொஞ்ச படிக்க ஆரமிச்சவுடனே தான் விஷயம் புரியுது.

//இன்னும் சில பாகங்கள் எழுத வேண்டியுள்ளது.//
சீக்கிரம் முடிச்சுடுங்க....நமக்கு இந்த மெகா சீரியல் எல்லாம் ஒத்து வராது;)

Raghav said...

// வெட்டிப்பயல் said...
ரெண்டு நாளா காபி வேற குடிக்காம இருக்கேன் :-( //

ஹா ஹா ஹா.. இதுக்குத்தான் என்னைய மாதிரி புத்திசாலியா இருக்கனும். நான் இங்க வரும்போதே ரெண்டு கிலோ கோதாஸ் காபி பொடி வாங்கிட்டு வந்துட்டேன்.

தினல் காலைல, சாயந்திரம் அட்டகாசமான பில்டர் காபி.. பேஸ் பேஸ்...

Divyapriya said...

பனிவிழும் மலர்வனம் பேர் ரொம்ப நல்லா இருந்துச்சே :-(
12 partsaa? super!!! waitings...

Sen22 said...

நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருக்கேன் இந்த கதையை...

சீக்கிரமா எழுதுங்க வெட்டி...

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Warning : : இந்த தொடரில் நிறைய Adult Content வருமென்பதால் 18 வயதிற்கு குறைந்தவர்களும், இளகிய மனம் கொண்டவர்களும் படிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்//

இந்தக் கதை சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டதா?
இல்லை சென்-"சாரு" போர்டுக்காச்சும் அனுப்பப்பட்டதா? :))))//

ஏன் இந்த கொல வெறி???

நானே சென்சார் :-)

Ramya Ramani said...

ada restart pannitteengala sooperu... appa neengalavadhu adutha adhuthta pagangalai seekirima pottirunga :)))

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Warning : : இந்த தொடரில் நிறைய Adult Content வருமென்பதால் 18 வயதிற்கு குறைந்தவர்களும், இளகிய மனம் கொண்டவர்களும் படிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்//

பதிவில் பெரிதாக A-sign வைங்க பாலாஜி!//

படம் முழுசாவா A வைக்கறாங்க :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//18 வயதிற்கு குறைந்தவர்களும்//

ரிஷான், u are not allowed!
//
ஏன் இந்த பொழப்பு?

// //இளகிய மனம் கொண்டவர்களும்//

இதுக்கு யாரைச் சொல்லலாம்?
ஆமாம், நம்ம பாலாஜியே இருக்காரு-ல்ல!
கதையை எழுது! ஆனாப் படிச்சிறாத பாலாஜி! :)))//

கண்டிப்பா... அதனால தான் இவ்வளவு எழுத்துப்பிழை வருது ;)

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நான் தாங்க ரவி. ரவி சங்கர்//

இட்லி-ல தான் நானு!
உப்புமாவிலும் நானே நானா?//

நீங்க ரவி "ஷ"ங்கர்... இது ரவி "ச"ங்கர் ;)

வெட்டிப்பயல் said...

// Divya said...

\\ஆனா Whole Milkல காபி குடிச்சா 500 கலோரினு போன வாரம் வீட்டுக்கு வந்த நண்பர் ஒருத்தர் சொல்லிட்டு போயிட்டாரு :-(

ரெண்டு நாளா காபி வேற குடிக்காம இருக்கேன் :-(\\


aaha.......whole milk la coffee aa??
ayo annna....2% milk la coffee....athuvum Nescafe Sunrise try panunga, super aa irukum :)))//

நெஸ்காபே சன்ரைஸ் தான்மா வெச்சிருக்கேன். இவர் வந்த நேரம் கரெக்டா அது தீர்ந்து போச்சு. இந்தியன் ஸ்டோர் போய் வாங்கறதுக்கு சோம்பேறி தனம்.

அப்பவும் நான் போட்ட காபி சூப்பரா இருந்துச்சுனு பாபா சொன்னாரு. இவருக்கு பொறாமை. டன்கின் டோனட் காபி குடிக்கறவருக்கு இந்த அருமை எங்க தெரியும்?

2% மில்க்லயா??? நான் பால்ல ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம இருந்தா தான் காபியே குடிப்பேன். டீ தண்ணியா இருக்கலாம். ஆனா காபினா சுண்ட காய்ச்சுன பால்ல தான் இருக்கனும் :-)

வெட்டிப்பயல் said...

//Sathiya said...

//இந்த கதை ஆறு மாதங்களுக்கு முன்னர் பனிவிழும் மலர்வனம்னு ஆரம்பித்தேன். நேரமின்மை காரணத்தால் தொடர முடியாமல் போனது.//
இதை படிக்க ஆரமிக்கும் பொழுது 'பனிவிழும் மலைவனம்' என்ன ஆச்சுன்னு கேக்கலாம்னு இருந்தேன்;) கொஞ்ச படிக்க ஆரமிச்சவுடனே தான் விஷயம் புரியுது.
//
அதனால தான் முதல்ல இருந்தே போடறோம் :-)

//
//இன்னும் சில பாகங்கள் எழுத வேண்டியுள்ளது.//
சீக்கிரம் முடிச்சுடுங்க....நமக்கு இந்த மெகா சீரியல் எல்லாம் ஒத்து வராது;)//

எப்படியும் இன்னும் இருபது நாளைக்கு ஒப்பேத்தலாம். அதுக்குள்ள முடிச்சிடுவேன் :-)

வெட்டிப்பயல் said...

// Raghav said...

// வெட்டிப்பயல் said...
ரெண்டு நாளா காபி வேற குடிக்காம இருக்கேன் :-( //

ஹா ஹா ஹா.. இதுக்குத்தான் என்னைய மாதிரி புத்திசாலியா இருக்கனும். நான் இங்க வரும்போதே ரெண்டு கிலோ கோதாஸ் காபி பொடி வாங்கிட்டு வந்துட்டேன்.

தினல் காலைல, சாயந்திரம் அட்டகாசமான பில்டர் காபி.. பேஸ் பேஸ்...//

இங்க நான் நெஸ்காபே சன்ரைஸ் வெச்சிருக்கேன். நான் குடிக்காம இருந்தது 500 கலோரிக்கு பயந்து தான் :-)

கோதாஸ் காபியா????

பாஸ்டன் ஏரியா தானே? சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் ;)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...

பனிவிழும் மலர்வனம் பேர் ரொம்ப நல்லா இருந்துச்சே :-(
12 partsaa? super!!! waitings...//

இந்த கதைக்கு இந்த தலைப்பு நல்லா வரும்னு பட்டுச்சு. பின்னாடு போக போக கதைக்கு பேர் காரணம் உங்களுக்கே புரியும் ;)

வெட்டிப்பயல் said...

// Sen22 said...

நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருக்கேன் இந்த கதையை...

சீக்கிரமா எழுதுங்க வெட்டி...//

இனிமே தொடர்ந்து வரும் :-)

இலவசக்கொத்தனார் said...

கேஆர்எஸ் பின்னூட்டம் ஒண்ணுக்கு நான் சொல்வது

ரிப்பீட்டேய்ய்ய்ய்!!!

rapp said...

ஏங்க பழசுக்கு லிங்க் கொடுத்திட்டு நீங்க விட்ட இடத்தில் இருந்து கதையை தொடர வேண்டியதுதானே. நான் அதை ரொம்ப விரும்பிப் படிச்சேன். சீக்கிரம் ஆரம்பிங்க. எனக்கு பனி விழும் மலர்வனம் தலைப்புதான் பிடிச்சிருக்கு. சரி பரவாயில்லை, சீக்கிரம் தொடருங்க :):):)

தமிழினி..... said...

பாலாஜி,
இந்த கதைய ரொம்ப விரும்பி படித்தேன்...கதைய படிக்க,படிக்க இதான் ஏற்கனவே போட்டுடாரே னு யோசிச்சிக்கிட்டே பின்னூட்டத்துக்கு வந்தா தான் தெரியுது....இது ஒரு repeated பதிவு னு..அன்ய்வய்ஸ் அடுத்த பதிவுக்காக ஆவலாக காத்திருக்கிறேன்...

அப்படியே என் வலை பூவுக்கும் வந்துட்டு போங்க...வழக்கம் போல ஒரு அவார்டை கைமாற்றிவிட்டுருக்கிறேன்... :)))...

நன்றிகளுடன்,தமிழினி.

Mukil said...

அட மறு ஒளிபரப்பா...

-முகிலரசிதமிழரசன்

ALIF AHAMED said...

ஸ்டார்ட் மியுஜிக் :)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

கேஆர்எஸ் பின்னூட்டம் ஒண்ணுக்கு நான் சொல்வது

ரிப்பீட்டேய்ய்ய்ய்!!!//

அதே பதில். ஏன் இந்த கொல வெறி?

வெட்டிப்பயல் said...

//rapp said...

ஏங்க பழசுக்கு லிங்க் கொடுத்திட்டு நீங்க விட்ட இடத்தில் இருந்து கதையை தொடர வேண்டியதுதானே.//
இல்லைங்க. அந்த அளவுக்கு நம்ம மக்களுக்கு பொறுமை இருக்காது. பொறுமையா படிக்கலாம்னு விட்டுடுவாங்க :-) (நானும் அப்படி தான்)

// நான் அதை ரொம்ப விரும்பிப் படிச்சேன்.//
மிக்க மகிழ்ச்சி :-)

//சீக்கிரம் ஆரம்பிங்க.//
அதான் ஆரம்பிச்சாச்சே! இனிமே நேரா முடிவு தான் :-)

// எனக்கு பனி விழும் மலர்வனம் தலைப்புதான் பிடிச்சிருக்கு. சரி பரவாயில்லை, சீக்கிரம் தொடருங்க :):):)//

இந்த கதை முடியும் போது உங்களுக்கே புரியும் ஏன் இந்த 'ஆடு' 'புலி' 'ஆட்டம்'னு :-)

வெட்டிப்பயல் said...

//தமிழினி..... said...

பாலாஜி,
இந்த கதைய ரொம்ப விரும்பி படித்தேன்...கதைய படிக்க,படிக்க இதான் ஏற்கனவே போட்டுடாரே னு யோசிச்சிக்கிட்டே பின்னூட்டத்துக்கு வந்தா தான் தெரியுது....இது ஒரு repeated பதிவு னு..அன்ய்வய்ஸ் அடுத்த பதிவுக்காக ஆவலாக காத்திருக்கிறேன்...//

ஆறு மாசத்துக்கு முன்னாடி எத்தனை பேர் படிச்சாங்கனு தெரியல. அதனால தான் முதல்ல இருந்து ஆரம்பிச்சிட்டேன். கதை ஓட்டத்துலயும் நிறைய மாற்றங்கள். கதை முடிச்சிட்டு அதை பத்தி எழுதலாம்.

// அப்படியே என் வலை பூவுக்கும் வந்துட்டு போங்க...வழக்கம் போல ஒரு அவார்டை கைமாற்றிவிட்டுருக்கிறேன்... :)))...

நன்றிகளுடன்,தமிழினி.//

Done :-)

வெட்டிப்பயல் said...

//Mukilarasi said...

அட மறு ஒளிபரப்பா...

-முகிலரசிதமிழரசன்//

ஆமாங்க :-)

வெட்டிப்பயல் said...

//மின்னுது மின்னல் said...

ஸ்டார்ட் மியுஜிக் :)//

மின்னலு.. இத்தனை நாள் எங்கப்பா போன?

மீசிக் ஆரம்பிச்சாச்சி :-)

நிஜமா நல்லவன் said...

//ஏன்னா வேலைக்கு போறனு சொன்னா சம்பளத்தை பத்தி தான் அதிகம் பேசுவாங்க. அதான் இப்படி.//

அடடா இது நல்ல ஐடியாவா இருக்கே. இது தெரியாம நான் கேட்கிற எல்லோர் கிட்டயும் வேலை பார்க்கிறேன்னு சொல்லி அவங்களும் மறக்காம சம்பளத்தை பற்றி கேட்டு....நானும் இஷ்டம் போல எதையாவது சொல்லி வைப்பேன்:)