தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, July 31, 2008

ஆடு புலி ஆட்டம் - 3

"எக்ஸ்க்யூஸ் மீ! நீங்க ஃப்ரெஷ்ஷரா வேலை தேடறீங்களா?"

"ஆமாங்க... நீங்க என்ன பண்றீங்க?"

"எனக்கு இங்க நாலு கம்பெனில வேலை கிடைச்சிருக்கு. எதுல சேரலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்" சொல்லிவிட்டு லேசாக சிரித்தாள்.

"கலக்கறீங்க. எப்படிங்க ஒரே சமயத்துல நாலு கம்பெனில வேலை? ஒரு கம்பெனில வேலை கிடைச்சா சேராம திரும்பவும் வேலை தேடுவீங்களா?"

"இல்லைங்க. போன மாசம் இன்ஃபோஸிஸ் அட்டெண்ட் பண்ணேன். இந்த மாசம் அக்சண்சர், ஐபிஎம், சத்யம் மூணும் அட்டெண்ட் பண்ணேன். எல்லாத்துக்கும் இந்த வாரம் தான் ரிசல்ட் வந்துச்சு. ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் ட்ரீட் கொடுத்துட்டு இன்னைக்கு தான் ஊருக்கு கிளம்பறேன். அங்க போய் எங்க வீட்ல அப்பா, அண்ணாகிட்ட எல்லாம் பேசி ஏதாவது ஒரு முடிவு செய்யனும்"

"நீங்க என்ன முடிவு செஞ்சிருக்கீங்க?"

"எனக்கும் எதை டிசைட் பண்றதுனு இன்னும் தெரியல. அனேகமா அக்சண்சர் தான் சேருவேனு நினைக்கிறேன்"

"ஆல் தி பெஸ்ட்ங்க"

"தேங்க்ஸ்ங்க. நீங்க வந்து ஆறு மாசமாச்சுனு சொன்னீங்க இன்னும் வேலை கிடைக்கலயா?"

"என்னங்க பண்ண. லக்கே இல்லைங்க"

"லக் எல்லாம் சொல்லாதீங்க. எல்லாத்துக்கும் முயற்சி தாங்க முக்கியம். இதே என்னை எடுத்துக்கோங்க. இன்ஃபோஸிஸ் மட்டும் அட்டெண்ட் பண்ணிட்டு நிறுத்தியிருக்கலாம். விடா முயற்சியால தான் இப்ப கைல நாலு ஆஃபர் வெச்சிருக்கேன்"

"என்னங்க பண்ண. எவனும் கால் லெட்டரே அனுப்ப மாட்றானுங்க. நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சி தான் பாக்கறேன்"

"நீங்க எப்படி எல்லா கம்பெனிக்கும் அப்ளை பண்றீங்க?"

"நான் ஒவ்வொரு கம்பெனிக்கா ரெஸ்யும் எடுத்துட்டு போய் அந்த கம்பெனி வாட்ச் மேன்கிட்ட கொடுப்பேங்க. அவர் வாங்கி வெச்சிக்குவார்"

"அப்பறமா அதை எல்லாம் எடைக்கு போட்டு சுண்டல் வாங்கி சாப்பிட்டுடுவாரு. என்னங்க இது தமிழ் சினிமா ஹீரோ மாதிரி பண்றீங்க? யாராவது தெரிஞ்சவங்க இருந்தா ரெஃபர் பண்ண சொல்றதை விட்டுட்டு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க?"

"எனக்கு தெரிஞ்சவங்க யாரும் இங்க இல்லைங்க. நாங்க தான் எங்க காலேஜ்ல முதல் செட்டு. அதனால சீனியர்ஸும் இல்லை. நாங்க நாலு ஃபிரெண்ட்ஸ் வீடு எடுத்து தங்கி வேலை தேடிட்டு இருக்கோம். ஒருத்தவனுக்கும் இன்னும் கால் லெட்டரே வரல"

"இப்படி வேலை தேடினா கால் லெட்டர் வராது. கால் வலி தாங்க வரும். ஆன் லைன்ல ஒழுங்கா அப்ளை பண்ணுங்க. அப்படியே உங்க மெயில் ஐடியும், ஃபோன் நம்பரும் எனக்கு கொடுங்க. எனக்கு ஏதாவது தெரிஞ்சா உங்களுக்கு அனுப்பறேன்"

"சரிங்க"

"உங்களுக்கு என்ன லாங்வேஜ் தெரியும்?"

"தமிழ், இங்கிலிஷ்"

"ஏன் கன்னடம், மலையாளம் எல்லாம் கத்துக்க வேண்டியது தானே? இந்த ஜன்மத்துல உங்களுக்கு வேலையே கிடைக்காதுனு நினைக்கறேங்க"

"ஏங்க இப்படி சொல்றீங்க?"

"நான் என்ன ப்ரோகராமிங் லாங்வேஜ் தெரியும்னு கேட்டேன். நீங்க என்னனா கற்றது தமிழ், இங்கிலிஷ்னு கதையை விட்டுட்டு இருக்கீங்க?"

"என்னங்க பண்ண உங்களை மாதிரி நிறைய இண்டர்வியு அட்டெண்ட் பண்ணிருந்தா தெரியும். எனக்கு C கொஞ்சம் கொஞ்சம் தெரியுங்க"

" 'C' யே கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியுமா? இப்பல்லாம் பொறக்கற குழந்தையே லினக்ஸ், ஜாவானு எல்லாம் தெரிஞ்சிட்டு தான் பொறக்குதுங்க. நீங்க என்னனா 'C' யே கொஞ்சம் தான் தெரியும்னு சொல்றீங்க"

"என்னங்க பண்றது. சட்டில இருக்கறது தான் அகப்பைல வரும்"

இவ்வளவு கேள்விக்கு பேசாம கூகுல வேலை செய்யறனே சொல்லியிருக்கலாம் போல இருக்குங்க. நல்லா கடலை வறுத்திருக்கலாம். இப்ப மொக்கையா போச்சு.

"ஹிம்ம்ம்... ஊருல இருந்து வந்தவுடனே எனக்கு மறக்காம ஃபோன் பண்ணுங்க. என் ஃபிரண்டு ஒருத்தன் 'C'ல பிஸ்து. அவன்கிட்ட உங்களுக்கு இண்ட்ரோ பண்ணிவிடறேன்"

"சரிங்க. கண்டிப்பா. ஆமா நீங்க திருண்ணாமலையேவா?" பேச்சை திசை திருப்பியே ஆகனுங்க.

"இல்லைங்க. நான் கள்ளக்குறிச்சி. திருண்ணாமலைல இருந்து பஸ் மாறி போகனும்"

"ஆமாம் இன்னைக்கு பௌர்ணமியாச்சே. நீங்க ஏன் சேலம் போய் போகாம இந்த ரூட்ல வறீங்க?"

"இன்னைக்கு பௌர்ணமியா? எனக்கு அது தெரியாதே. இந்த பக்கம் கொஞ்சம் சீக்கிரமா போகலாம்னு வந்துட்டேன். அப்படி போனா ரெண்டு மணி நேரம் பக்கம் அதிகமாகுமே"

"சரி விடுங்க. ஸ்பெஷல் பஸ் ஏதாவது இருக்கும் மாறி போயிக்கலாம்"

"சரிங்க. நீங்க எப்ப மறுபடியும் பெங்களூர் வறீங்க?"

"நான் திங்ககிழமை இங்க இருப்பேன். நீங்க?"

"நான் ஒரு வாரம் கழிச்சி தான். ஜாயினிங் டேட் இன்னும் ரெண்டு வாரம் கழிச்சி தான் இருக்கு. சீக்கிரம் வந்து மட்டும் என்ன செய்ய போறோம் சொல்லுங்க"

"அதுவும் சரிதான்"

"ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?"

"சொல்லுங்க"

"உங்க பேரு என்னானு சொல்லவேயில்லையே?"

"என் பேரு நித்யா. உங்க பேரு?"

"ரவி சங்கர்"

ஒரு வழியாக திருவண்ணாமலைக்கு வந்துட்டோங்க. அடப்பாவிகளா பஸ்ஸ எதுக்கு இங்க நிறுத்தனானுங்க? அநியாயமா ரெண்டு கிலோ மீட்டருக்கு முன்னாடியே நிறுத்திடானுங்களே. ஏன்டா திருவண்ணாமலைக்கு பௌர்ணமி அன்னைக்கு வரவனுங்க எல்லாருமே கிரிவலத்துகா வரானுங்க. உங்க பக்திக்கு ஒரு அளவே இல்லையா? ஒரே சாமியார் கூட்டமா தெரியுதே.

"என்னங்க இது பஸ் ஸ்டாண்ட் மாதிரி தெரியலையே?" தூக்க கலக்கத்திலிருந்தாள் நித்யா.

"ஆமாங்க. பஸ்ஸை மலை பக்கத்துல நிறுத்திட்டானுங்க. பாருங்க திருவிழா மாதிரி இருக்கு"

"ஆமாம். இப்ப என்ன பண்றது?"

"அப்படியே நடந்து போனா பஸ் ஸ்டேண்ட் வந்துடும் வாங்க"

ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வந்ததுல ரெண்டு கிலோ மீட்டர் நடந்ததே தெரியலைங்க. பேசாம பத்து கிலோ மீட்டருக்கு முன்னாடியே வண்டிய நிறுத்தியிருக்கலாம் போல. அண்ணாமலையார் மகிமையே தனிதான் போல.

கள்ளக்குறிச்சில இருந்து வந்த ஸ்பெஷல் பஸ்ஸெல்லாம் எடுக்காம நிறுத்தி வெச்சிருக்காங்க. எல்லாம் கூட்டமா இருக்காங்க ஆனா எவனும் அங்க இருக்குற ஆபிசர்ஸை போய் கேக்க மாட்றாங்கங்க. இருங்க நானே போய் கேக்கறேன். என்னங்க எல்லா பஸ்ஸும் நாலு மணிக்கு மேல தான் எடுப்பனு சொல்றானுங்க.
பாவம் இந்த பொண்ணை விட்டுட்டு போகவும் மனசு வரலை. இப்ப நான் என்ன பண்ண? மூணு மணி நேரம் பஸ் ஸ்டாண்ட்ல உக்காரதா?

நான் கேட்க ஆரம்பிச்சதும் எல்லா மக்களும் இந்த ஆபிஸ் பக்கம் வர ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாரும் கேட்டா எப்படியும் ஒரு பஸ்ஸாவது விடுவான். எப்படியும் ஏத்தி விட்டுட வேண்டியது தான்.

என்னடா கூட்டத்திலிருந்து வெளிய வந்துட்டனு பாக்கறீங்களா? அப்ப தானே பஸ்ல இடம் பிடிக்க முடியும். எப்பவும் கூட்டத்தோட கோவிந்தா போடவே கூடாதுங்க. ஆஹா அங்க ஒரு பஸ் வர மாதிரி தெரியுதே. ஆமா கள்ளக்குறிச்சி பஸ் தான். திருப்பதில இருந்து வந்துட்டு இருக்கு. எல்லாரும் உள்ள சண்டை போட்டுட்டு இருக்கறாங்க. எப்படியோ நமக்கு உதவறதுக்கு அந்த திருப்பதி பாலாஜியே பஸ் அனுப்பியிருக்கான்.

ஒரு வழியா பஸ்ல நித்யாக்கு சீட்டு போட்டு உக்கார வெச்சாச்சுங்க. வெள்ளிக்கிழமைங்கறதால ரிட்டர்ன் ட்ரிப்ல கூட்டம் இல்லை. ஜன்னல் சீட்லயே உக்கார வெச்சாச்சு. இருங்க அவ ஏதோ எங்கிட்ட பேசனும்னு முயற்சி பண்ற மாதிரி இருக்கு. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.

"ஏ ரவி... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். கண்டிப்பா பெங்களூர் வந்தவுடனே உனக்கு கால் பண்றேன். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்..."

(தொடரும்...)

37 comments:

Anonymous said...

romba nalla irukku

ப்ரசன்னா said...

//எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்...//

அட்ரா சக்கை!!!!! அட்ரா சக்கை அட்ரா சக்கை...திருப்பு முனை........

நிறைய முன் அனுபவம் போலிருக்கு. :-)

வெங்கட்ராமன் said...

4 பாகம் எப்போ?
வெயிட்டிங்.

rapp said...

:):):)

வெட்டிப்பயல் said...

//Karuppiah said...

romba nalla irukku//

மிக்க நன்றி கருப்பையா...

வெட்டிப்பயல் said...

//ப்ரசன்னா said...

//எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்...//

அட்ரா சக்கை!!!!! அட்ரா சக்கை அட்ரா சக்கை...திருப்பு முனை........

நிறைய முன் அனுபவம் போலிருக்கு. :-)//

ஆஹா.. கதை எழுத முன் அனுபவம் வேணுமா என்ன ;)

அப்ப ராஜேஷ்குமார் எத்தனை பேரை கொலை செஞ்சிருக்கனும் :-)

விஜய் ஆனந்த் said...

கலக்கல் !!!!
// இல்லைங்க. போன மாசம் இன்ஃபோஸிஸ் அட்டெண்ட் பண்ணேன். இந்த மாசம் அக்சண்சர், ஐபிஎம், சத்யம் மூணும் அட்டெண்ட் பண்ணேன். எல்லாத்துக்கும் இந்த வாரம் தான் ரிசல்ட் வந்துச்சு. ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் ட்ரீட் கொடுத்துட்டு இன்னைக்கு தான் ஊருக்கு கிளம்பறேன். அங்க போய் எங்க வீட்ல அப்பா, அண்ணாகிட்ட எல்லாம் பேசி ஏதாவது ஒரு முடிவு செய்யனும் //
பொண்ணுங்க பீட்டருல ரொம்ப அனுபவம் போல!!!!

// இவ்வளவு கேள்விக்கு பேசாம கூகுல வேலை செய்யறனே சொல்லியிருக்கலாம் போல இருக்குங்க. //

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...ஹூம்ம்ம்...ஆம்பளங்க பொழப்பே இந்த மாதிரிதான் ஆயி போச்சி....

மங்களூர் சிவா said...

/
இவ்வளவு கேள்விக்கு பேசாம கூகுல வேலை செய்யறனே சொல்லியிருக்கலாம் போல இருக்குங்க. நல்லா கடலை வறுத்திருக்கலாம். இப்ப மொக்கையா போச்சு.


பேச்சை திசை திருப்பியே ஆகனுங்க.
/

:))))))))

மங்களூர் சிவா said...

/
"ஏ ரவி... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். கண்டிப்பா பெங்களூர் வந்தவுடனே உனக்கு கால் பண்றேன். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்..."
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

இதுக்குதான் இவ்ளோ பில்டப் குடுத்தாளா அவ!?!?

:))))))))

விஜய் ஆனந்த் said...

// நமக்கு உதவறதுக்கு அந்த திருப்பதி பாலாஜியே பஸ் அனுப்பியிருக்கான் //

திருப்பதி பாலாஜியா, இல்ல திருக்கோவிலூர் பாலாஜியா ????

Anonymous said...

:-)))....

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...

4 பாகம் எப்போ?
வெயிட்டிங்.//

நாளையோட 4 பாகம் முடியும்.. அதுக்கு அப்பறம் நீங்க தொடர்ந்து படிக்கலாம் :-)

வெட்டிப்பயல் said...

// rapp said...

:):):)//

மிக்க நன்றி வெட்டி ஆபிசர் :-)

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

கலக்கல் !!!!

//

மிக்க நன்றி :-)

//
// இல்லைங்க. போன மாசம் இன்ஃபோஸிஸ் அட்டெண்ட் பண்ணேன். இந்த மாசம் அக்சண்சர், ஐபிஎம், சத்யம் மூணும் அட்டெண்ட் பண்ணேன். எல்லாத்துக்கும் இந்த வாரம் தான் ரிசல்ட் வந்துச்சு. ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் ட்ரீட் கொடுத்துட்டு இன்னைக்கு தான் ஊருக்கு கிளம்பறேன். அங்க போய் எங்க வீட்ல அப்பா, அண்ணாகிட்ட எல்லாம் பேசி ஏதாவது ஒரு முடிவு செய்யனும் //

பொண்ணுங்க பீட்டருல ரொம்ப அனுபவம் போல!!!!
//
தமிழ் படம் பார்த்து வந்த அனுபவம் :-)

// // இவ்வளவு கேள்விக்கு பேசாம கூகுல வேலை செய்யறனே சொல்லியிருக்கலாம் போல இருக்குங்க. //

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...ஹூம்ம்ம்...ஆம்பளங்க பொழப்பே இந்த மாதிரிதான் ஆயி போச்சி....//
என்னத்த பண்ண :-)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

இதுக்குதான் இவ்ளோ பில்டப் குடுத்தாளா அவ!?!?

:))))))))//

இந்த பொண்ணுங்களே இப்படி தான்...
கடல போடுங்க எஜமான் கடல போடுங்க. அப்படினு சொல்றிய சிவா :-)

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

// நமக்கு உதவறதுக்கு அந்த திருப்பதி பாலாஜியே பஸ் அனுப்பியிருக்கான் //

திருப்பதி பாலாஜியா, இல்ல திருக்கோவிலூர் பாலாஜியா ????//

திருப்பதில பாலாஜி
திருக்கோவிலூர்ல உலகளந்த பெருமாள் :-)

108 திவ்ய ஸ்தலங்கள்ல முதல் ஸ்தம் திருக்கோவிலூர் தான் :-)

Selva Kumar said...

//ஏ ரவி... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். கண்டிப்பா பெங்களூர் வந்தவுடனே உனக்கு கால் பண்றேன். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்..."
//

நல்ல ட்விஸ்ட்டு..

எப்படியோ போன் நெம்பர் கொடுத்தீட்டிங்கள்ள பிரச்சனையில்ல..

நிச்சயம் கூப்பிடுவாங்க..:))

Divya said...

\உங்களுக்கு என்ன லாங்வேஜ் தெரியும்?"

"தமிழ், இங்கிலிஷ்"

"ஏன் கன்னடம், மலையாளம் எல்லாம் கத்துக்க வேண்டியது தானே? இந்த ஜன்மத்துல உங்களுக்கு வேலையே கிடைக்காதுனு நினைக்கறேங்க"\\


comedy super:))



\\அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்..."\\


ada......super twistuuu:))

தமிழினி..... said...

//"ஏ ரவி... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். கண்டிப்பா பெங்களூர் வந்தவுடனே உனக்கு கால் பண்றேன். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்..."
//

ஆஹா...கிளம்பிட்டாயா...கிளம்பிட்டாயா...!!
அவ சொல்லும்போதே,என்னடா ரொம்ப ஓவரா பேசுறா னு நெனச்சேன்...anyways....கதை நல்ல போகுது....Continue maadi...

Syam said...

//"உங்களுக்கு என்ன லாங்வேஜ் தெரியும்?"

"தமிழ், இங்கிலிஷ்"
//

நக்கல் சூப்பர்...சீ யூ அட் நெக்ஸ்ட் பார்ட் டுமாரோ :-)

விஜய் ஆனந்த் said...

// திருப்பதில பாலாஜி
திருக்கோவிலூர்ல உலகளந்த பெருமாள் :-)

108 திவ்ய ஸ்தலங்கள்ல முதல் ஸ்தம் திருக்கோவிலூர் தான் :-) //

மெய்யாலுமா??? இது போலதான் எங்க ஊரு திருவந்திபுரம் பெருமாளை திருப்பதிகாரருக்கே அண்ணன்னு சொல்றாங்க..ஒண்ணுமே புர்லப்பா....

Anonymous said...

super appu:-)...

Anonymous said...

super appu:-)...

Anonymous said...

super appu:-)...

Subramanian Vallinayagam said...

Hi,

3 partsm erkanave padichurunthalum..... thirumbavum padithen... ungalathu ezhuthu nadai unmaiyileye super...

waiting for the next parts....

Siva Subramanian, Bangalore

manikandan said...

//"ஏ ரவி... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். கண்டிப்பா பெங்களூர் வந்தவுடனே உனக்கு கால் பண்றேன். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்..."
//

ரவி இனிமே நல்லா வேல தேடினா மாதிரி தான் !

Anonymous said...

nalla irukku boss..

:-)

Kathir

Anonymous said...

ம்... சும்மா அடிச்சு ஆடுங்க வெட்டி...

குரங்கு said...

நல்லருக்கு...

// "உங்களுக்கு என்ன லாங்வேஜ் தெரியும்?"

"தமிழ், இங்கிலிஷ்"

"ஏன் கன்னடம், மலையாளம் எல்லாம் கத்துக்க வேண்டியது தானே? இந்த ஜன்மத்துல உங்களுக்கு வேலையே கிடைக்காதுனு நினைக்கறேங்க" //

:)

வெட்டிப்பயல் said...

// வழிப்போக்கன் said...

//ஏ ரவி... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். கண்டிப்பா பெங்களூர் வந்தவுடனே உனக்கு கால் பண்றேன். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்..."
//

நல்ல ட்விஸ்ட்டு..

எப்படியோ போன் நெம்பர் கொடுத்தீட்டிங்கள்ள பிரச்சனையில்ல..

நிச்சயம் கூப்பிடுவாங்க..:))//

எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றீங்க வழிப்போக்கன்?

நிறைய கால்ஸ் வந்திருக்கும் போல ;)

வெட்டிப்பயல் said...

//Divya said...

\உங்களுக்கு என்ன லாங்வேஜ் தெரியும்?"

"தமிழ், இங்கிலிஷ்"

"ஏன் கன்னடம், மலையாளம் எல்லாம் கத்துக்க வேண்டியது தானே? இந்த ஜன்மத்துல உங்களுக்கு வேலையே கிடைக்காதுனு நினைக்கறேங்க"\\


comedy super:))



\\அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்..."\\


ada......super twistuuu:))//

ரொம்ப டாங்ஸ் கதயாயினி :-)

வெட்டிப்பயல் said...

//தமிழினி..... said...

//"ஏ ரவி... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். கண்டிப்பா பெங்களூர் வந்தவுடனே உனக்கு கால் பண்றேன். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்..."
//

ஆஹா...கிளம்பிட்டாயா...கிளம்பிட்டாயா...!!
அவ சொல்லும்போதே,என்னடா ரொம்ப ஓவரா பேசுறா னு நெனச்சேன்...anyways....கதை நல்ல போகுது....Continue maadi...//

மிக்க நன்றி...

புலி ஆடுனு எல்லாம் போன பகுதியிலே அடிச்சி ஆடனீங்களே :-)

வெட்டிப்பயல் said...

//Syam said...

//"உங்களுக்கு என்ன லாங்வேஜ் தெரியும்?"

"தமிழ், இங்கிலிஷ்"
//

நக்கல் சூப்பர்...சீ யூ அட் நெக்ஸ்ட் பார்ட் டுமாரோ :-)//

நாட்ஸ்,
அடுத்த பகுதி போட்டாச்சி :-)

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

// திருப்பதில பாலாஜி
திருக்கோவிலூர்ல உலகளந்த பெருமாள் :-)

108 திவ்ய ஸ்தலங்கள்ல முதல் ஸ்தம் திருக்கோவிலூர் தான் :-) //

மெய்யாலுமா??? இது போலதான் எங்க ஊரு திருவந்திபுரம் பெருமாளை திருப்பதிகாரருக்கே அண்ணன்னு சொல்றாங்க..ஒண்ணுமே புர்லப்பா....//

ஓ... திருவந்திபுரமா நீங்க???

நான் கடலூர் St.Joseph School (manjakuppam)ல தான் படிச்சேன் :-)

திருவந்திபுரத்துல இருக்கறது பெருமாளோட அண்ணனு சொல்லி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். திருப்பதில இருந்து துணி எல்லாம் கூட வரும்னு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மையா என்று தெரியாது.

திருக்கோவிலூரை பற்றி சொன்னது உண்மை தான் :-)

விஜய் ஆனந்த் said...

// திருக்கோவிலூரை பற்றி சொன்னது உண்மை தான் :-) //

அப்படீங்களா !!! அப்ப சரி !!!

// நான் கடலூர் St.Joseph School (manjakuppam)ல தான் படிச்சேன் :-) //

தெரியுங்க...ஏற்கனவே உங்க பதிவுல படிச்சிருக்கேன்...நானும் St.Joseph's தான்...ஆனா உங்க ஸ்கூல் இல்ல... :-))))

கயல்விழி said...

நித்யாவே முன் வந்து இத்தனை சொல்லி, பிறகு கடைசியில் அப்படியும் மாற்றினாரா? அது தான் கொஞ்சம் நம்பமுடியாமல் இருக்கு.

வரிக்கு வரி நகைச்சுவை அருமை!