தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, February 12, 2008

துரியோதனனுக்கு ஏன் அரசுரிமையில்லை?

மகாபரத கதைல எனக்கு எப்பவும் இருக்கறது இந்த சந்தேகம். யாராவது விளக்கம் தெரிஞ்சா சொல்லுங்க.

திருதராஷ்டிரன் கண் பார்வை இழந்ததனால் அரச பொறுப்பை ஏற்க முடியாமல் போனதால் அரசு உரிமையை இழக்கிறான். உரிமையை இழக்க காரணம் பொறுப்பை ஏற்க முடியாது என்பது தான். ஆனால் அதே பொறுப்பை அவன் தம்பி பாண்டு காட்டுக்கு செல்லும் போது ஏற்கிறான். எதன் காரணமாக அவன் உரிமையை இழந்தானோ அந்த பொறுப்பையே அவன் ஏற்று திறம்பட நடத்துவதால் (பிதாமகர், விதுரர் துணையோடு தான்) அவனுக்கு அந்த உரிமை மீண்டும் கிடைப்பது தானே தருமம்?

அப்படி அவனுக்கு உரிமை கிடைக்கும் பட்சத்தில் குரு வம்சத்தின் மூத்த மகனின் மகனான துரியோதனனுக்கு தானே அரச பதவி கிட்டியிருக்க வேண்டும்? விதுர நீதி இதை ஏற்காதது ஏன்? (இதில் திறமையை அவர்கள் முன் வைக்கவேயில்லை. அப்படி பார்த்திருந்தல் 105 பேருக்கும் போட்டி வைத்தே இளவரசனை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்). இங்கே உரிமை தான் முதலில் பேசப்படுகிறது.

இதுல இன்னொரு சந்தேகமும் இருக்கு. விதுரனை எமதர்மனின் அவதாரம் என்று சொல்வார்கள். யுதிஷ்டிரன் எம தர்மனின் மகன். ஒரு வேளை இது தான் விதுர நீதியாக யுதிஷ்டிரனுக்கு அரச பட்டத்தை அளிக்கிறதா?

79 comments:

அரை பிளேடு said...

மூத்தவர்களின் வாரிசுகளுக்குத்தான் பட்டம் கிடைக்க வேண்டும்.

பாண்டு திருதராஷ்டிரன் ஆகியோரில் மூத்தவன் திருதராஷ்டிரன்.

அவனது வாரிசான துரியோதனனுக்கே அரசு பட்டம் உரிமையானது.

துரியோதனனுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

என்ன செய்வது எல்லா காலத்திலும் தோற்பவர்கள் வில்லன்களாகி விடுகிறார்கள். வெல்பவர்கள் கதாநாயகர்களாகி விடுகிறார்கள்.

:)

வெட்டிப்பயல் said...

//அரை பிளேடு said...

மூத்தவர்களின் வாரிசுகளுக்குத்தான் பட்டம் கிடைக்க வேண்டும்.

பாண்டு திருதராஷ்டிரன் ஆகியோரில் மூத்தவன் திருதராஷ்டிரன்.

அவனது வாரிசான துரியோதனனுக்கே அரசு பட்டம் உரிமையானது.

துரியோதனனுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

என்ன செய்வது எல்லா காலத்திலும் தோற்பவர்கள் வில்லன்களாகி விடுகிறார்கள். வெல்பவர்கள் கதாநாயகர்களாகி விடுகிறார்கள்.

:)//

ரொம்ப கரீக்டா சொன்னீங்க :-)

குமரன் (Kumaran) said...

இந்த இடுகைக்கு ஆன்மிகம்ன்னு லேபிள் ஒட்டியிருக்கீங்களே பாலாஜி. இதில் ஆன்மிகம் எங்கே வந்தது? இலக்கியம்ன்னு சொல்லியிருந்தா சரியா இருக்கும்.

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

இந்த இடுகைக்கு ஆன்மிகம்ன்னு லேபிள் ஒட்டியிருக்கீங்களே பாலாஜி. இதில் ஆன்மிகம் எங்கே வந்தது? இலக்கியம்ன்னு சொல்லியிருந்தா சரியா இருக்கும்.//

எப்படியும் இது நீங்க, KRS எல்லாம் வந்து பேசி ஆன்மீகமாகிடும்னு ஒரு நம்பிக்கை தான் ;)

Anonymous said...

கண்பார்வை இல்லாததால் திருதரஷ்டிரனின் அரசுரிமை பறிபோய் விட்டது.அரசுரிமை பறிபோனபின் அதன்பின் அது திரும்பி கிடைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.அப்படி உரிமை திரும்ப கிடைக்குமென்றால் முதலில் அது பீஷ்மரை சென்றடைவதுதான் நியாயம்.

தம்பியின் மரணம் அவனை ராஜ்யத்தின் கார்டியனாக தான் மாற்றுகிறது.பட்டத்துக்கு உரிமை அற்ற பீஷ்மர் கூட திருதராஷ்டிரனும், பாண்டுவும் குழந்தைகளாக இருந்தபோது ராஜ்யத்தை கார்டியனாக நிர்வகித்து வந்திருக்கிறார். திருதரஷ்டிரனுக்கு இருந்தது அதுபோன்ற கேர்டேக்கர் பதவிதான். ஆனால் தற்காலிக பிரதமர் என்றாலும் அவரும் செயலளவில் பிரதமர் என்றே அழைக்கப்படுவதுபோல் தற்காலிக மன்னனான திருதரஷ்டிரனும் முழு அளவிலான மன்னனாக செயல்பட்டே வந்திருக்கிறான்.

நடுவே யுதிச்டிரனை அரக்கு மாளிகையில் கொளுத்தியது போன்ற சம்பவங்கள் நடைபெற்றதால் ராஜ்யத்தை இரண்டாக பிரித்து ஒன்றை யுதிஷ்டிரனுக்கும் இன்னொன்றை துரியோதனனுக்கும் கொடுக்கிறான். தந்தையை பதவி விலக துரியோதனன் சொல்லவில்லை. சதிதிட்டத்தில் மூழ்கி விட்டான்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மிகவும் அருமையான ஆழ்ந்த சிந்தனை கொண்ட பதிவு வெட்டி!

பேரரசன் துரியனுக்கு இழைக்கபட்ட அநீதி எல்லாம் கண்டு இன்னுமும் என் நெஞ்சு பொறுக்குதில்லையே! :-(

//எப்படியும் இது நீங்க, KRS எல்லாம் வந்து பேசி ஆன்மீகமாகிடும்னு ஒரு நம்பிக்கை தான் ;)//

Who is this KRS?
அவனுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம் ஐயா? :-))

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

கண்பார்வை இல்லாததால் திருதரஷ்டிரனின் அரசுரிமை பறிபோய் விட்டது.அரசுரிமை பறிபோனபின் அதன்பின் அது திரும்பி கிடைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.அப்படி உரிமை திரும்ப கிடைக்குமென்றால் முதலில் அது பீஷ்மரை சென்றடைவதுதான் நியாயம்.//

தான் அரச பதவி ஏற்காவிட்டாலும் தனக்கு பிறகு பிறக்கும் பிள்ளைகள் தன் தம்பி பிள்ளைகளிடம் அரச பதவியை (உரிமையை) கேட்டால் என்ன செய்வது என்று பிரம்மச்சாரியாக வாழ்ந்த பிதாமகருக்கும் திருதராஷ்டிரனுக்கும் இருக்கும் வித்யாசத்தை அறியாமலா பேசுகிறீர்கள்?

அங்கேயும் இதே பிரச்சனை (தான் அரச பதவி ஏற்காவிட்டாலும் தன் பிள்ளைகளுக்கு உரிமை இருப்பது) இருப்பதால் தான் தேவவிருதன் பிரம்மச்சரியத்தை ஏற்று "பீஷ்மர்" ஆகிறான்.

இளவரசு பட்டம் கட்டிய பிறகு அரசு பதவி வேண்டாம் என்று ஒதுங்கியவர் பிதாமகர். திருதராஷ்டிரனுக்கு உரிமை மறுக்கப்பட்டது (பறிக்கப்பட்டது).

Anonymous said...

யப்பா வெட்டி!

//குரு வம்சத்தின் மூத்த மகனின் மகனான துரியோதனனுக்கு தானே அரச பதவி கிட்டியிருக்க வேண்டும்?//

அதான் தந்தை திருதிராஷ்டன் உயிரோட இருக்காரே!
அப்புறம் என்ன அதுக்குள்ள அவசரம் துரியோதனனுக்கு?

அநீதி இழைக்கப்பட்டது துரியோதனனுக்கு இல்ல!
பாவம் திருதிராஷ்டனுக்குத் தான்!
யாரு இழைச்சாங்க?
பெத்த புள்ள, மத்த புள்ள - எல்லாரும் தான்!

நாட்டாம-தலைப்பை மாத்தி எழுது!:-)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

யப்பா வெட்டி!

//குரு வம்சத்தின் மூத்த மகனின் மகனான துரியோதனனுக்கு தானே அரச பதவி கிட்டியிருக்க வேண்டும்?//

அதான் தந்தை திருதிராஷ்டன் உயிரோட இருக்காரே!
அப்புறம் என்ன அதுக்குள்ள அவசரம் துரியோதனனுக்கு?

அநீதி இழைக்கப்பட்டது துரியோதனனுக்கு இல்ல!
பாவம் திருதிராஷ்டனுக்குத் தான்!
யாரு இழைச்சாங்க?
பெத்த புள்ள, மத்த புள்ள - எல்லாரும் தான்!

நாட்டாம-தலைப்பை மாத்தி எழுது!:-)//

தெய்வமே,
இங்க பிரச்சனை இளவரசு பட்டத்துக்கு. அடுத்த அரசு பட்டம் துரியனக்கு இல்லை யுதிஷ்டிரனுக்குனு சொன்னது தான் பிரச்சனை...

அதுக்கு காரணம் திருதராஷ்டிரன் மன்னனாக முடிசூட்டி கொள்ளவில்லை. அவன் பாண்டு காட்டுக்கு செல்லும் பொது அரச பொறுப்பை பார்த்து கொள்ளும் நபராகத்தான் அமர்த்தப்பட்டார்... அவருக்கு உரிமை மறுக்கப்பட்டது.

ILA (a) இளா said...

இரும்படிக்கிற இடத்துல ஈ'க்கு என்ன வேலை? அதனால பறந்து போயிட்டேன்

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
//குமரன் (Kumaran) said...

இந்த இடுகைக்கு ஆன்மிகம்ன்னு லேபிள் ஒட்டியிருக்கீங்களே பாலாஜி. இதில் ஆன்மிகம் எங்கே வந்தது? இலக்கியம்ன்னு சொல்லியிருந்தா சரியா இருக்கும்.//

எப்படியும் இது நீங்க, KRS எல்லாம் வந்து பேசி ஆன்மீகமாகிடும்னு ஒரு நம்பிக்கை தான் ;) //

ஆன்மீகச் செம்மல்..சண்மதச் செல்வர்..பல்நூல் பயில் பகலர், சொல்லின் செல்வர்....மாலடியர்...கீதைக்குப் பாதை போடும் மேதையர்...திரு கே.ஆர்.எஸ் வாழ்க வாழ்க..வாழ்க...வாழ்க :)

சுருங்கச் சொன்னா...ஆன்மீகம்னா கே.ஆர்.எஸ்...கே.ஆர்.எஸ்னா ஆன்மீகம். :)

G.Ragavan said...

இப்பிடியெல்லாம் கேள்வி கேட்காதீங்க. எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. என்னவா இருந்தாலும் கே.ஆர்.எஸ் வந்து விளக்குவாரு. அவரு சொன்னா...அதான் முடிவு. அவர் சொல்லட்டும். அப்புறமா நான் வந்து வழிமொழியிறேன். :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
என்னவா இருந்தாலும் கே.ஆர்.எஸ் வந்து விளக்குவாரு. அவரு சொன்னா...அதான் முடிவு//

இது என்னப்பா வம்பாப் போச்சுது?
"நான் சொன்னதே முடிவு" -ன்னு சொல்றத்துக்கு என் பேரு ராவணேஸ்வரன் கூட இல்லையே!:-)

சினிமாவுல கூட "நான் சொன்னதே முடிவு"-ன்னு மகாபாரதத்துல யாரோ சொல்லுவாங்கப்பா! யாரு பாலாஜி அது?

//அவர் சொல்லட்டும். அப்புறமா நான் வந்து வழிமொழியிறேன். :)//

அதான் சொல்லிட்டேனே ஜிரா!
சீக்கிரம் வழி மொழியுங்க! :-)

பாலாஜியின் பெரும் சந்தேகத்தைத் தீர்ர்து வைக்க இந்தப் பாண்டியன் சபையிலே ஒருவர் கூட இல்லையா? எனன கொடுமை ராகவன்!

பாலாஜி, பேசாம ஆயிரம் பொன் பரிசு-ன்னு முரசறிவிக்கறீங்களா? :-)

குமரன் (Kumaran) said...

//பாலாஜி, பேசாம ஆயிரம் பொன் பரிசு-ன்னு முரசறிவிக்கறீங்களா? :-)
//

அப்படி செஞ்சீங்கன்னா இரவிசங்கர்கிட்ட எழுதி வாங்கிகிட்டு வந்து சொல்லி பரிசை நான் வாங்கிக்க முயற்சி செய்வேன். :-)

Anonymous said...

இது ஏதோ கருணாநிதி - ஸ்டாலின் - அழகிரி பிரச்னை இல்லியே? உள்குத்தை யாரும் கவனிக்காம போயிட்டாங்களோ? ;-)

வவ்வால் said...

வெட்டி,

இது சகஜதம் தான், சாதாரணமாக யார் முறையாக அரசனாக ஆகிட்டாங்களோ அவர்கள் வாரிசுக்கே மீண்டும் பதவியை அளிக்க வருவாங்க, அதற்கு முன்னர் உரிமை இருந்து விட்டுக்கொடுத்தவர் மீண்டும் கேட்டாலும் கிடைக்காது.(அது அநியாயம் இல்லையா?)

பொன்னியின் செல்வன் கதை... ராஜா ராஜ சோழனின் உண்மை வரலாறை சார்ந்ததே அதிலும் இப்படித்தான் வரும்,

கண்டராதித்தருக்கு வாரிசு இல்லை என அவர் தம்பி அரிஞ்செயனுக்கு அரசப்பதவியை அளிப்பாரகள், பின்னர் அரிஞ்செயன் மகன் சுந்தர சோழன் பதவிக்கு வருவார், இடைப்பட்டக்காலத்தில் ... ரொம்ப வயதான பிறகு கண்டராதித்தருக்கு மதுராந்தகன் என்ற உத்தமசோழன் மகனாக பிறப்பான், இப்போ அடுத்த அரச உரிமை பார்த்தா மதுராந்தகனுக்கு தான் வரனும், ஆனால் வராது மீண்டும் சுந்தர சோழர் மகன் ஆதித்த கரிகாலனுக்கு பட்டம் சூட்டப்பார்ப்பார்கள், அதனால் அவரை மதுராந்தகன் கொல்வான்.அதன் பின்னரும் பொன்னியின் செல்வனுக்கு பட்டம் சூட்ட பார்ப்பார்கள், பின்னர் பொன்னியின் செல்வனே முன்வந்து மதுராந்தகனுக்கு ராஜ்யத்தை அளித்து விடுவார்.

மதுராந்தகனுக்கு பிறகே பொன்னியின் செல்வன், ராஜ ராஜ சோழன் என அரசன் ஆவார்.ராஜ ராஜ சோழன் விட்டுக்கொடுத்ததால் சண்டை தவிர்க்கப்பட்டது.

மகாபாரதத்தில் இப்படி புரிந்து கொள்ளல் இல்லை சண்டைப்போட்டுக்கிட்டாங்க.

இரண்டு சம்பவங்களிலும் நேரடியாக உரிமை உள்ள வாரிசுகள்(துரியோதனன், மதுராந்தகன்) வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தவறான வழியை தேர்வு செய்கிறார்கள், அதனால் வில்லானாக்கப்பட்டு விட்டார்கள்.

துரியோதனன் கெட்டவன் ஆனது சூழலால் , அவனையும் கதையில் கொஞ்சம் உயர்வுப்படுத்தி இருப்பார்கள்.

Anonymous said...

நல்ல கேள்வி.

திருதராஷ்டிரன் பிறவி குறையினால் பாண்டுவிற்கு பட்டம் அளிக்கப்படுகிறது.

பாண்டு சாபத்தினால் தனக்கு குழந்தை பிறக்காது என்ற காரணத்தினால் பட்டத்தை திருதராஷ்டிரனுக்கு திருப்பி அளிக்கிறார்.

ஆனால் குந்தி பெற்ற வரத்தினால் பாண்டுவிற்கு குழந்தை பிறக்கிறது.

அப்போது அரசு பாண்டுவின் குழந்தைக்கு தானே?
(ஆனால் இளவரசன் பட்டம் இதனால் அளிக்கப்படவில்லை)

திருதராஷ்டிரன், யுதிச்டிரன் இருவரில் யுதிச்டிரனே மூத்தவன். குரு வம்சத்தின் மூத்தவனான யுதிச்டிரனுக்கு இளவரசன் பட்டம் அளிக்கப்பட்டது.

யுதிச்டிரன் விதுரரின் மகன் என்றும் அது பாண்டவர்களுக்கு சாதகமாக மறைக்கப்பட்டுவிட்டது என்றும் ஒரு வாதம் உண்டு. ஆனால் அது சரியல்ல என்று ஒதுக்கப்பட்டுவிட்டது.

நன்றி
நித்யா பாலாஜி

வவ்வால் said...

//திருதராஷ்டிரன், யுதிச்டிரன் இருவரில் யுதிச்டிரனே மூத்தவன். குரு வம்சத்தின் மூத்தவனான யுதிச்டிரனுக்கு இளவரசன் பட்டம் அளிக்கப்பட்டது.//

யாருங்க இது ஒரே அடியாக குழப்புவது, யுதிஷ்டிரன் என்பது தர்மரை தான், அவர் எப்படி திருதராஷ்டிரன் விட மூத்தவர் ஆவார் ?

மேலும் அவர் விதுரன் மகன் என்று எப்படி சொல்ல வறிங்க? குந்திக்கு காட்டில் மந்திரம் மூலம் பிறந்தவர் ஆச்சே.

குமரன் (Kumaran) said...

நித்யா சொல்ல வந்தது சரி தான். ஆனால் துரியோதனன் என்று சொல்வதற்குப் பதில் திருதராஷ்ட்ரன் என்று சொல்லிவிட்டார். காட்டில் தருமன்/யுதிஷ்டிரன், பீமன் இருவரும் பிறந்த பின்னர் தான் கௌரவர் நூற்றுவர் பிறக்கிறார்கள். கூட 101வதாக ஒரு பெண்ணும். இந்த 107 சகோதரருக்கு ஒரே சகோதரி அவள் தான்.

1. திருதராஷ்ட்ரன் பிறவிக் குருடன் என்பதால் பாண்டுவிற்கு அரசாட்சி.
2. பின்னர் பாண்டு சாபம் பெற்ற பிறகு திருதராஷ்ட்ரன் பாண்டுவின் பிரதிநிதியாக அரசாட்சி
3. பாண்டுவின் மரணத்திற்குப் பிறகு குலத்திற்குத் தலைமகனான யுதிஷ்டிரனுக்கு, உண்மையான அரசனான பாண்டுவின் மூத்த புதல்வனுக்கு இளவரசுப் பட்டம்
4.அரக்கு மாளிகை நிகழ்விற்குப் பின்னர்/பாஞ்சாலி திருமணத்திற்குப் பின்னர் இராச்சியம் இரண்டாக பிரிக்கப் பட்டு யுதிஷ்டிரன் இந்திரபிரஸ்தத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு பாகத்திற்கு அரசனாகிறான்; திருதராஷ்ட்ரன் அஸ்தினாபுரத்தைத் தலைநகராகக் கொண்டு மறு பாகத்திற்கு உண்மை அரசனாகிறான்; அதே நேரத்தில் துரியோதனன் அந்தப் பகுதிக்கு இளவரசனாகிறான்.
5. பாதி ராச்சியம் கொடுத்ததையும் மறுக்கிறான் துரியோதனன். தொடர்கிறது மகாபாரதம்.

அந்தக் கால நீதியின் படி திருதராஷ்ட்ரனுக்கு அரசு பதவி முதலில் கொடுக்காமல் பின்னர் துரியனின் வற்புறுத்தலால் அஸ்தினாபுரத்திற்கு அரசனாக்குகிறார்கள். இது முதலில் தவறு செய்து பின்னர் சரி செய்வது போல் இருக்கிறது. இதில் எது நியாயம் எது அநியாயம் என்று சொல்ல வந்தால் ஒவ்வொருவர் பார்வையிலும் சொல்லத் தொடங்கலாம். :-)

பினாத்தல் சுரேஷ் said...

பாண்டுவா திருதராஷ்டிரனான்ற கேள்வி வந்தப்பவே, அதுல திருத்ஸ் தோத்துட்டதால, ராஜாவாக க்ளெயிமையே விட்டுட்டதா ஒரு பை-லைன் சொல்லுதாம். அடுத்த ஜெனெரஷன்ன்லேயும் போட்டோ பினிஷ்லே தருமன் முதல்லே பொறந்துட்டான் -- அப்படின்னு ஒரு கணக்கு சொல்றாங்க!

ஆனா, இந்த பீஷ்மரும் விதுரரும் சேந்துதான் துரியோதனனை வில்லன் ஆக்கினாங்க - அதுல டவுட்டே இல்லை! மகாபாரதத்துல எனக்கு பேவரைட் கேரக்டர் துரியோதனன் தான் - கேவலம் பெர்ஸ்பெக்டிவ் னால வில்லன் ஆயிட்டான் :-(

Anonymous said...

//திருதராஷ்டிரன், யுதிச்டிரன் இருவரில் யுதிச்டிரனே மூத்தவன்//

மன்னிக்கவும், துரியோதனனுக்கு திருதராஷ்டிரன் என்று அடித்துவிட்டேன்.

விதுரர் அம்பை அம்பாலிகாவின் பணிப்பெண்ணுக்கும் வியாசருக்கும் பிறந்தவர். ஓரு சாபத்தின் காரணமாக தர்மராஜன் விதுரராக பிறந்தவர்.

குந்தி தர்மராஜனை வேண்டி பிறந்தவர் யுதிச்டிரன். ஆகவே விதுரர் யுதிச்டிரனுக்கு சாதகமாக நடந்துகொண்டதாக ஒரு கருத்து உண்டு.


நன்றி

நித்யா பாலாஜி

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மிகவும் அருமையான ஆழ்ந்த சிந்தனை கொண்ட பதிவு வெட்டி!

பேரரசன் துரியனுக்கு இழைக்கபட்ட அநீதி எல்லாம் கண்டு இன்னுமும் என் நெஞ்சு பொறுக்குதில்லையே! :-(
//

சரி... அதுக்கு இப்ப என்ன சொல்றீங்க??

//
//எப்படியும் இது நீங்க, KRS எல்லாம் வந்து பேசி ஆன்மீகமாகிடும்னு ஒரு நம்பிக்கை தான் ;)//

Who is this KRS?
அவனுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம் ஐயா? :-))//

இதுக்கு பதிலை ஜி.ரா சொல்லிட்டாரு :-)

வெட்டிப்பயல் said...

//ILA... said...

இரும்படிக்கிற இடத்துல ஈ'க்கு என்ன வேலை? அதனால பறந்து போயிட்டேன்//

நீங்களே இப்படி சொன்னா எப்படி தல ;)

வெட்டிப்பயல் said...

//ஆன்மீகச் செம்மல்..சண்மதச் செல்வர்..பல்நூல் பயில் பகலர், சொல்லின் செல்வர்....மாலடியர்...கீதைக்குப் பாதை போடும் மேதையர்...திரு கே.ஆர்.எஸ் வாழ்க வாழ்க..வாழ்க...வாழ்க :)

சுருங்கச் சொன்னா...ஆன்மீகம்னா கே.ஆர்.எஸ்...கே.ஆர்.எஸ்னா ஆன்மீகம். :)//

அதே அதே!!!

வெட்டிப்பயல் said...

//சினிமாவுல கூட "நான் சொன்னதே முடிவு"-ன்னு மகாபாரதத்துல யாரோ சொல்லுவாங்கப்பா! யாரு பாலாஜி அது?
//
அது "நான் சொன்னதே நல்ல பதில் தான்" இப்படி அசோகன் கர்ணன் படத்துல சொல்லுவாரு ;)

//
//அவர் சொல்லட்டும். அப்புறமா நான் வந்து வழிமொழியிறேன். :)//

அதான் சொல்லிட்டேனே ஜிரா!
சீக்கிரம் வழி மொழியுங்க! :-)

பாலாஜியின் பெரும் சந்தேகத்தைத் தீர்ர்து வைக்க இந்தப் பாண்டியன் சபையிலே ஒருவர் கூட இல்லையா? எனன கொடுமை ராகவன்!

பாலாஜி, பேசாம ஆயிரம் பொன் பரிசு-ன்னு முரசறிவிக்கறீங்களா? :-)//

பதிவு போட்டு ஒரு மணி நேரத்துல பதில் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல... பொறுமையா பார்க்கலாம் ;)

வெட்டிப்பயல் said...

// குமரன் (Kumaran) said...

//பாலாஜி, பேசாம ஆயிரம் பொன் பரிசு-ன்னு முரசறிவிக்கறீங்களா? :-)
//

அப்படி செஞ்சீங்கன்னா இரவிசங்கர்கிட்ட எழுதி வாங்கிகிட்டு வந்து சொல்லி பரிசை நான் வாங்கிக்க முயற்சி செய்வேன். :-)//

இன்னும் நீங்க என்னை சரியா புரிஞ்சிக்கலையே குமரன்... அப்படியெல்லாம் பரிசு கொடுக்கற மாதிரி இருந்தா அந்த கேள்விக்கு பதில் என் மனசுல தானா தோனுச்சுனு நானே பரிசை வாங்கிடுவேன் :-)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

இது ஏதோ கருணாநிதி - ஸ்டாலின் - அழகிரி பிரச்னை இல்லியே? உள்குத்தை யாரும் கவனிக்காம போயிட்டாங்களோ? ;-)//

எப்பவுமே இதே சிந்தனை தானா???

வெட்டிப்பயல் said...

//வவ்வால் said...

வெட்டி,

இது சகஜதம் தான், சாதாரணமாக யார் முறையாக அரசனாக ஆகிட்டாங்களோ அவர்கள் வாரிசுக்கே மீண்டும் பதவியை அளிக்க வருவாங்க, அதற்கு முன்னர் உரிமை இருந்து விட்டுக்கொடுத்தவர் மீண்டும் கேட்டாலும் கிடைக்காது.(அது அநியாயம் இல்லையா?)
//

வவ்வால்,
அதே அதே!!!

இங்கே முதல்ல திருதராஷ்டிரனுக்கு அநீதி இழைக்கப்பட்டது. மீண்டும் விதி வசாத்தால் அவனுக்கு அது வந்து சேர்ந்தது. ஆனால் அவனுக்கு உரிமையானதை அவன் தம்பியின் பிரதிநிதியாக ஆள நேர்ந்தது கொடுமை.

பொன்னியின் செல்வனை நானும் சொல்லலாம்னு பார்த்தேன். ஆனால் பதிவு திசை திரும்பிடும் அதனால் தேவைப்பட்டால் பின்னூட்டத்தில் சொல்லலாம்னு பார்த்தேன்... நீங்க முந்திக்கிட்டீங்க :-)

வெட்டிப்பயல் said...

//திருதராஷ்டிரன் பிறவி குறையினால் பாண்டுவிற்கு பட்டம் அளிக்கப்படுகிறது.

பாண்டு சாபத்தினால் தனக்கு குழந்தை பிறக்காது என்ற காரணத்தினால் பட்டத்தை திருதராஷ்டிரனுக்கு திருப்பி அளிக்கிறார்.//

இது தான் என் கேள்வியே :-)

திருதராஷ்டிரன் கண் பார்வை இழந்ததனால் அரச பொறுப்பை ஏற்க முடியாமல் போனதால் அரசு உரிமையை இழக்கிறான். உரிமையை இழக்க காரணம் பொறுப்பை ஏற்க முடியாது என்பது தான். ஆனால் அதே பொறுப்பை அவன் தம்பி பாண்டு காட்டுக்கு செல்லும் போது ஏற்கிறான். எதன் காரணமாக அவன் உரிமையை இழந்தானோ அந்த பொறுப்பையே அவன் ஏற்று திறம்பட நடத்துவதால் (பிதாமகர், விதுரர் துணையோடு தான்) அவனுக்கு அந்த உரிமை மீண்டும் கிடைப்பது தானே தருமம்?

வெட்டிப்பயல் said...

//
மேலும் அவர் விதுரன் மகன் என்று எப்படி சொல்ல வறிங்க? குந்திக்கு காட்டில் மந்திரம் மூலம் பிறந்தவர் ஆச்சே.//

வவ்ஸ்,

இதை நான் பதிவுலயே சொல்லியிருக்கனே :-)

//இதுல இன்னொரு சந்தேகமும் இருக்கு. விதுரனை எமதர்மனின் அவதாரம் என்று சொல்வார்கள். யுதிஷ்டிரன் எம தர்மனின் மகன். ஒரு வேளை இது தான் விதுர நீதியாக யுதிஷ்டிரனுக்கு அரச பட்டத்தை அளிக்கிறதா?//

இதை நீங்க வேற மாதிரி புரிஞ்சிக்கிட்டா என் தப்பில்லை ;)

Anonymous said...

பாண்டு தவறான காரணத்தினால் தானே பட்டத்தை திருப்பி கொடுக்கிறான். காரணமே பொய்த்தப்பின் ( வாரிசு ) அரசு பாண்டுவிற்க்கும் அவன் வாரிசுகளுக்கும் தானே சேரும்?

நித்யா பாலாஜி

Anonymous said...

I think kirnaa is right.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்ன செய்வது எல்லா காலத்திலும் தோற்பவர்கள் வில்லன்களாகி விடுகிறார்கள். வெல்பவர்கள் கதாநாயகர்களாகி விடுகிறார்கள்.
:)//

ஹிஹி
இதிகாசங்கள்:
நாரதர், மகாபலி, பாணாசுரன், இடும்பன்
வரலாறு:
நெப்போலியன், பாரஸ் (இந்திய அரசன்), வீர சிவாஜி, வீரக் கட்டபொம்மன், மருது பாண்டியர்கள்

என்று...சதியாலோ இல்லை வேறெதாலோ தோற்றவர்கள் நிறைய பேரு!
- இவங்க எல்லாம் வில்லன்கள் ஆகி விட்டார்களா என்ன? :-)))

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல கேள்வி.....பதிலுக்கு நானும் காத்திருக்கிறேன். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//விதுரனை எமதர்மனின் அவதாரம் என்று சொல்வார்கள்.
யுதிஷ்டிரன் எம தர்மனின் மகன்.
ஒரு வேளை இது தான் விதுர நீதியாக யுதிஷ்டிரனுக்கு அரச பட்டத்தை அளிக்கிறதா?//

விதுரன் - எமனின் அம்சமாகவே பிறந்தவன்!
யுதிட்டிரன் - தருமராஜன் (எமனின்) அருளால் ஒரு மகனாகப் பிறந்தவன்!!

அப்படி இருக்க, விதுரன் சூதாட வருமாறு தருமனிடம் அழைப்பு எடுத்துச் செல்வானா? முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க மாட்டானா?

இந்த அரசுரிமைச் சண்டையில், விதுரனை இடையில் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்! விதுரருக்குத் தான் எமனின் அம்சம் என்றே தெரியாது! அப்படி இருந்தால் தானே யுதிட்டிரன் மீது அவர் ஓரவஞ்சனை காட்டுவதற்கு?

Sridhar V said...

பாரதப் போரின் அடிப்படையான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் ஒரு டயலாக் அடிக்கடி வரும் 'நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்'... ஏன்னா அத சொல்லிட்டா அப்புறம் கிளைமேக்ஸ் இருக்காதே :-) ஆனால் கேள்வியின் அடிப்படையில் சில தவறுகள் இருக்கின்றன.

1. திருதராஷ்டிரன் பிறக்கும் முன்னரே அவனுக்கு அரசுரிமை கொடுக்க முடியாது என்று அவனது பாட்டி (சத்யவதி) முடிவு செய்து விடுகிறார் அப்பொழுதே. அதனால்தான் பாண்டுவே பிறக்கிறான். பாண்டுவும் 'வெளுப்பாக' (possibly albumin disease) பிறப்பதால், மீண்டும் வியாசரை (ஆம். இவர்கள் மூவருக்கும் தந்தை அவர்தான்) வேண்டிக் கொள்ள பிறந்தவர்தான் விதுரர். அதாவது திருதராஷ்டிரருக்கு உரிமை பின்னர் மறுக்க படவில்லை. பிறக்கும் முன்னரே அது முடிவு செய்யப்பட்டு விடுகிறது. அவர் தாய் பயத்தில் கண்ணை மூடியிருந்த்தால் வியாசர் அப்பொழுதே சொல்லிவிடுகிறார் பிறக்கும் குழந்தை குருடாக இருக்கும் என்று.

2. பாண்டு அரசராக ஆனவுடன் திக்விஜயம் புறப்பட்டு விடுகிறார் திருதராஷ்டிரர் பொறுப்பில் ஆட்சியை விட்டுவிட்டு. பிறகும் கூட அவர் காட்டிற்க்கு சென்று விடுகிறார் மான் வேட்டையாட. கூடவே இரு மனைவிகளையும் அழைத்து கொண்டு சென்றுவிடுகிறார். அங்குதான் பாண்டவர்கள் பிறக்கிறார்கள்.

3. பாண்டுவின் இறப்பிற்க்கு பின்னரும் உடனே தருமருக்கு பட்டம் அளிக்கபடவில்லை.

4. இளவரசு பட்டம் பற்றி பேச்சு வரும்பொழுது விதுரரின் வாதம் இதே அடிப்படையில் அமைகிறது. பாண்டு அரசராகவே இருக்கிறார். அரசராகவே இறக்கிறார். திருதராஷ்டிரருக்கு பட்டாபிஷேகம் நடக்கபடவில்லை. அது மட்டுமல்லாமல் தருமர் மூத்தவராக வேறு ஆகிவிடுகிறார் அல்லவா?

5. ஆனால் இதோடு நின்றுவிடவில்லை. தருமர் மற்றும் துரியோதனன் இரண்டு பேருக்கும் சமமாக பிரித்து கொடுத்துவிடுகிறார்கள். ஹஸ்தினாபுரம் துரியோதனனனுக்கு. ஒன்றுமில்லாத இடம் தருமருக்கு என்று. அங்கே பாண்டவர்கள் புதிய நகரமாக இந்திரபிரஸ்தத்தை நிர்மாணிக்கிறார்கள். சீரும் சிறப்புமாக ஆட்சி செய்கிறார்கள். பிறகுதான் சூதாட்டம், பணயம் வைக்கறது, அஞ்ஞாத வாசம் எல்லாம்...

6. இறுதியாக கிருஷ்ணர் தூது வருகிறார். 'ஊசி முனையளவு கூட இடம் இல்லை' என்கிறான் துரியோதனன். அதன் பிறகுதான் பாரதப் போர்.

சொல்லப்போனால் துரியோதனன்தான் இறக்கும் வரையில் அரசனாகவே இருக்கிறான். அவனுக்கு அரசுரிமை மறுக்கப்படவில்லை. பாண்டவர்கள்தான் 13 வருட வனவாசம் எல்லாம் அனுபவித்துவிட்டு பாரதப் போர் முடிந்து மீண்டும் அரசுரிமை பெறுகிறார்கள்.

அரை பிளேடு said...

குமரன்

//இந்த 107 சகோதரருக்கு ஒரே சகோதரி அவள் தான்.
//

100+5 = 105.

105 பேருக்கு ஒரே சகோதரி அல்லவா. இல்லை நான் யாரையாச்சும் கவுண்டிங்ல மிஸ் பண்ணிட்டேனா :)

rv said...

அரசனுக்கு வாரிசு இல்லை என்ற பட்சத்தில் மட்டுமே சுற்றத்தவர்களுக்கு (அரசனின் அண்ணன் தம்பி மகன்களுக்கும்) வாய்ப்பு கிடைக்கும். இது அரச குடும்பங்களில் காணப்படும் பரவலான விஷயம்.

பாண்டுவிற்கு பட்டம் கட்டியாகிவிட்டது. அவன் தான் அரசன். திருதராஷ்ட்ரன் வெறும் caretaker மட்டுமே. [aragorn vs boromir/faramir கதைதான் :) ஜிரா ஒத்துப்பாருன்னு நினைக்கிறேன்.]

சமீபத்திய [:)] ஆங்கில அரச குடும்ப வரலாறும் இதே போன்றதுதான்.

ஹென்றி VII இன் முதல் பெண் மார்கரெட் டுடோர். அடுத்து ஒரு மகள். அடுத்தவன் ஆர்தர். அவன் குழந்தையில்லாமல் இறந்துவிட்டான். அவன் மனைவியை மணமுடித்து இளையமகனான ஹென்றி VIII பதவிக்கு வந்தார்.

ஹென்றி VIII-ன் முதல் மனைவிக்கு பிறந்த பெண் குழந்தை மேரி I. இரண்டாவது மனைவிக்கு பிறந்த பெண் குழந்தை எலிஸபெத் I. மூன்றாவது மனைவிக்கு பிறந்த மகன் எட்வர்ட் VI.

ஹென்றி VIIIக்கு பிறகு எட்வர்டுக்குதான் அரசபதவி. அவன் இளவயதிலேயே வாரிசின்றி இறந்ததனால் மூத்த மனைவியின் மகளுக்கு அரசாட்சி. அவளும் பிள்ளை பேறின்றி இறந்தனால் அடுத்து மூன்றாவது மனைவியின் மகள் எலிஸபெத் I ஆட்சிக்கு வந்தாள். அவளுக்கும் குழந்தையில்லாமல் போன ஓரே காரணத்தால் மட்டுமே...

அவளுடைய பெரியம்மா, ஹென்றி VIIIன் அக்காள் மார்கரெட்டின் பேத்தியும் ஸ்காட்லாந்தின் அரசியுமான மேரியின் மகனான ஜேம்ஸ் I க்கு பதவி வந்தது.

ஸோ, கம்மிங் டு த பாயிண்ட், பாண்டுவின் மகன் யுதிஷ்ட்ரனே பட்டத்து இளவரசன். சரியா? :))

குமரன் (Kumaran) said...

அரை பிளேடு. தப்பா நூத்தியேழு சகோதரர்கள்ன்னு சொல்லிட்டேன். நூத்தியாறுன்னு சொல்லியிருக்கணும். கடைசியாகப் பிறந்த பெண் நூத்தியாறு பேருக்கு ஒரே சகோதரி.

நீங்க ஒருத்தரை மிஸ் பண்ணிட்டீங்க. நான் ஒரு எண்ணைக் கூட்டி எண்ணிட்டேன். :-)

நீங்க சிரிப்பானைப் போட்டதப் பார்த்தாலே தெரியுது நீங்க யாரை மிஸ் பண்ணினீங்கனு உங்களுக்குத் தெரியும்ன்னு. மத்தவங்களுக்கு ஒரு க்ளூ - அந்த ஆளு சொன்னது 'ஆறிலும் சாவு; நூறிலும் சாவு'. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஸோ, கம்மிங் டு த பாயிண்ட், பாண்டுவின் மகன் யுதிஷ்ட்ரனே பட்டத்து இளவரசன். சரியா? :)//

மருத்துவரே! வோட்காதிபதியே! ருஷ்ய ராமநாதரே! அதெல்லாம் ஒப்புத்துக்க முடியாது!
வெள்ளைக்காரங்க, Faramir எல்லாம் அயல் நாட்டுக் கலாச்சாரம்!
நம்ம பண்பாட்டில் மட்டும் தான் ஒப்பிட்டுப் பேசனும்! :-)

அவங்க கலாச்சாரத்துல பெண்கள் கூட பேரரசியா வராங்களே! ஆணோ, பெண்ணோ...நேரடி வாரிசாக இருந்தாப் போதும் என்பது அவிங்களுது!
ஆனா இங்க அப்படி இல்லியே! ஆண் வாரிசு-ன்னு தானே கலாச்சாரமா இருக்கு? நேரடிப் பெண் வாரிசு ஒருத்தி இருந்தாலும், பங்காளி ஆண் வாரிசு-ன்னு இல்ல பாக்குறாங்க?

ஸோ, உங்கள் வாதம் ஜிராவின் சிஷ்யப் பிள்ளையான அடியேனால் மறுக்கப்படுகிறது! :-)
துரியோதனனுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதே சரி!!! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அரை பிளேடு said...
//இந்த 107 சகோதரருக்கு ஒரே சகோதரி அவள் தான்.
//

தல அரைபிளேடு, தல குமரன்
107 சகோதரர் என்று சொன்னதே சரி தான்!
கர்ணன்=1
பாண்டவர்=5
துரியன் முதலான கெளரவர்=100
ப்ளஸ்
காந்தாரி கர்ப்பமாக இருந்த போது, திருதிராட்டனுக்கும், அவன் தாதிக்கும் பிறந்த இன்னொரு மகன் (யுயுத்சு என்னும் கர்ணன்)=1
மொத்தம் 107 ஆண்கள், 1 பெண் = Total Count 108! :-))

அந்த நூறு பேர் லிஸ்ட்டில், name sake இருப்பதால் கொஞ்சம் கன்பூசன் வரலாம்! பீமன், இன்னொரு யுயுத்சு, இன்னொரு கர்ணன்-ன்னு இருப்பாங்க! அதுக்கென்ன பண்ணுறது? கதையே கன்பூசன் தானே? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாண்டு அரசராகவே இருக்கிறார். அரசராகவே இறக்கிறார். திருதராஷ்டிரருக்கு பட்டாபிஷேகம் நடக்கபடவில்லை//

ஸ்ரீதர் நாராயணன் சொல்வது கிட்டத்தட்ட Nearest Answer to the Question! வவ்வால் முன்பே லைட்டாகத் தொட்டுச் சென்று விட்டார்!

பாலாஜி, புரிகிறதா?
மேல் விளக்கம் தேவைன்னா சொல்லுங்க!

வவ்வால் said...

கண்ணபிரான் ரவிசங்கர்,

நான் லேசாக மட்டும் இல்லை முழுசாவே அதைத்தான் சொல்ல வந்தேன், அதற்கு தான் பொன்னியின் செல்வன் உதாரணம் தந்தேன்.ஆனாலும் இதில் துரியோதனன் பக்கம் நியாயம் இருக்கிறது ஏன் எனில் அவனைக்கேட்டு விட்டு ஒன்றும் திருதராஷ்டிரன் எனக்கு பதவி வேண்டாம் என்று பாண்டுவை அரசனாக ஆக்கவில்லை. அதாவது வாரிசு மைனராக இருக்கும் போது அப்பா கொடுத்த தானத்தை வாரிசு மேஜர் ஆன பிறகு எதிர்க்கும் நம்ம ஊரு சொத்துரிமை வழக்கு போன்றதே இது, பாரம்பரிய சொத்தாக இருப்பின் வாரிசின் வழக்கு வெல்லும், இங்கே இந்து கூட்டுக்குடும்ப சொத்து சட்டப்படிப்பார்த்தால் துரியோதனன் பக்கம் நியாயம் இருக்கு என்றே சொல்லலாம்.

மேலும் பாண்டு ஒன்றும் சும்மா ஜாலி டிரிப்பாக வனம் போகவில்லை, அவன் சாபம் காரணமாக இனி வாழ முடியாது என்ற நிலையில் திரும்பி வர மாட்டோம் என்று தெரிந்தே அந்திமக்காலத்தை அமைதியாக கழிக்கலாம் என்றே வனம் சென்றான், அப்போது அவனுக்கு வாரிசும் இல்லை, எனவே அவனோ , அவன் வாரிசோ வந்தால் பதவியை தரவேண்டும் என்ற ஒப்பந்தம் அப்போது எதுவும் ஏற்படவில்லை, எனவே அவன் பெற்ற தானத்தை மீண்டும் தானம் கொடுத்தவருக்கே பாண்டுக்கொடுத்ததாக கருதப்பட வேண்டும்.

ஆனால் பாண்டவர்கள் தான் ஹீரோ என்று கதாசிரியர் முடிவு செய்து விட்டப்படியால், அவர்களுக்கே ஜெயம் சித்தியாகிறது(பெரியாம்மா ஆகலையானு கேட்கப்படக்கூடாது)

மேலும் துரியோதனன் உரிமையை வாதாடிப்பெறாமல் சூதாடிப்பெற்று பேரைக்கெடுத்துக்கிட்டான் :-))

முகலாயர்கள் காலத்தில் ஒவ்வொரு முறை அரசன் இறக்கும் போதும் war of succession கண்டிப்பாக நடக்கும் , மூத்தவன், இளையவன் என்ற பாகுப்பாடுலாம் கிடையாது வலுத்தவன் ஆள்வான்.அதுக்குள்ளாம் முன்னோடி பாரதம் தான் போல இருக்கு :-))

ஸ் ..ஸ் அப்பா முடியல , எப்படிலாம் விளக்க வேண்டி இருக்கு, பதிவ படிச்சா அனுபவிக்கனும் ஆராயக்கூடாதுனு சொல்ர வெட்டி இப்படிலாம் கேள்விக்கேட்கலாமா :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மேலும் துரியோதனன் உரிமையை வாதாடிப்பெறாமல் சூதாடிப்பெற்று பேரைக்கெடுத்துக்கிட்டான் :-))//

வவ்ஸ்...கலக்கிட்டீரு! அச்சுன்னு சொன்னாலும் நச்-னு சொல்லிட்டீரு! :-)

வெட்டிக்கு நானும் பொன்னியின் செல்வன் எடுத்துக்காட்டைச் சொல்லி இருந்தேன்! அதில், நீங்க சொன்னதில் இருந்து ஒரே வேறுபாடு என்னான்னா...

அருண்மொழிவர்மர் பழைய மதுராந்தகன் இருக்கும் போது, இப்படி அரசுரிமை விட்டுக் கொடுக்கச் சித்தமாய் இருந்தாரா என்பது தெரியாது. அவன் மீது அவ்வளவு நல் அபிப்ராயமும் அவர் கொண்டிருக்கவில்லை! அவனிடம் நாடு சென்றால் என்ன நிலை ஆகும் என்பதைப் பற்றியும் யோசித்திருக்கலாம்!

பின்னால் வந்த சேந்தன் அமுத மதுராந்தகரின் நற்குணங்களைக் கண்டு, துணிவுடன் ஒப்புவித்திருக்கக் கூடும்! இப்படிப் பதவி ஆசை கடந்து, அதே சமயம் வீரராகவும் செயல்பட்டதாலேயே அருண்மொழி பலர் மனங்களில் உயர்ந்து நிற்கிறார்!

தருமன் விட்டுக் கொடுக்கத் தயாராய்த் தான் இருந்தான்; ஆனால் அதை வீரமாகச் செய்யவில்லை! அதனால் தான் அவனுக்கு என் உள்ளத்தில் மதிப்பில்லை! :-)

//ஆனால் பாண்டவர்கள் தான் ஹீரோ என்று கதாசிரியர் முடிவு செய்து விட்டப்படியால், அவர்களுக்கே ஜெயம் சித்தியாகிறது//

ஆகா...சித்தியா?
சித்தீக்களால் எப்பமே பிரச்சனை தான்! :-)
ஆனா ஒரே ஒரு கரெக்சன்...மகாபாரதத்தில் ஹீரோ பாண்டவர்கள் இல்லை!
யாரு வெட்டி அது? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாலாஜி
பாரதத்தைக் கரைச்சிக் கஷாயம் வச்சிக் குடிச்ச நீங்களா இப்படி எல்லாம் ஐயுறுவது? எத்தினி சித்தீஸ் & பாட்டீஸ்-க்கு நீங்களே கதை சொல்லி இருக்கீங்க! இன்னொரு கா லேசா தூசு தட்டிப் பாருங்க! புரிஞ்சிடும்!

சரி....
அண்ணன் ஜிராவின் சிஷ்யனா ஆட்டத்துல எறங்கிர வேண்டியது தான்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மொதல்ல கேள்வியின் underlying assumptionஏ கேள்விக்குரியது!

அம்பிகா மகன் திருதிராஷ்டன், அம்பாலிகை மகன் பாண்டு!
இதுல மூத்த, இளைய மனைவின்னு யாருமே கிடையாது! அம்பிகா, அம்பாலிகை இருவருமே ஏக காலத்தில் விசித்திரவீரியனை மணந்தவர்கள்! பட்ட மகிஷி என்று ஆரும் கிடையாது! அதனால் திருதிராஷ்டனுக்குப் பெருசா claim எல்லாம் ஒன்னும் கிடையாது!

திருதிராஷ்டனுக்கு இருக்கும் ஒரே உரிமை, மன்னனுக்குப் பிறந்த முதல் ஆண் வாரிசு என்பது தான்! ஆனால் அவன் பார்வை அற்றுப் பிறப்பதால், அப்போதே உரிமையும் அடிபட்டுப் போகிறது?

ஏன்?
அந்தக் கால (useless) நியதியின் படி!
பெண் வாரிசு முதல் வாரிசா இருந்தாலும் எதுக்கு அவளுக்கு உரிமை மறுத்தார்கள் அக்காலத்தில்? போருக்குப் போக முடியாது என்ற ஒரே காரணம் தான்!

அதே காரணம் தான் இங்கு திருதிராஷ்டனுக்கும்! அதனால் அவன் பிறக்கும் போதே அரசுரிமை இழந்து தான் பிறக்கிறான்! இது அவனுக்கும் நன்றாகத் தெரியும்! இது குறித்து அவன் வருத்தப்பட்டதும் இல்லை! (துரியோதனன் பிறக்கும் வரை)

திருதிராஷ்டன், பாண்டு, விதுரன் மூவரும் சகோதரர்களாய் விளையாடும் கால கட்டத்தில் கூட, மற்ற இருவரும் பாண்டுவின் தலைமையை ஏற்றுக் கொள்வது பாரதத்தில் சொல்லப்படுகிறது! ஊன்றிப் படியுங்கள்!

பாண்டு மட்டுமே பல போர்களில் வெற்றி பெற்று, நாட்டை விரிவுபடுத்துகிறான்! இதைத் திருதிராஷ்டனே பலரிடம் சொல்லிப் பாண்டுவைப் பாராட்டுகிறான்!

ஆக, நாட்டின் வளர்ச்சி பாண்டுவால் வந்தது!
நாட்டை வளர்த்தவனுக்கு முதல் உரிமையா?
இல்லை சும்மா ரெண்டு நிமிஷம் முன்னால் பிறந்த ஒரே காரணத்துக்காக முதல் உரிமையா?

சொல்லுங்க பாலாஜி! சொல்லுங்க! :-)

உண்மை என்னவென்றால்,
திருதிராஷ்டனே அரசுரிமை மேல் பற்றற்று தான் இருக்கிறான், திரியோதனன் வளர்ந்து வெறுப்பு கக்கும் வரை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அப்படியே ஒரு chronology பாத்துருவோம்!

1. பாண்டு வனவாசம் செல்லும் முன்னர், "பொறுப்பை" திருதிராட்டனிடம் ஒப்படைத்துச் செல்லவில்லை! பீஷ்மரிடம் சொல்லி விடுங்கள் என்று சொல்லி விட்டுத் தான் போகிறான்!

2. பின்னர், பீஷ்மர் முதலானவர்கள் தான் அரசுப் "பொறுப்பை" ஏற்று நடத்துகிறார்கள்! திருதிராட்டனுக்குப் பட்டாபிசேகம் எல்லாம் செய்யவில்லை! அவன் ஒரு figurative-ஆக முன்னிறுத்தப்படுவது இயல்பாய் அமைந்து விட்டதே தவிர வேறெதுவும் இல்லை!
பாண்டு தான் ஹஸ்தினாபுர சக்கரவர்த்தி அப்போதும்!

3. Pandu begets Yudishtra first!
Beema and Duriyodana are born at different places but in the same time! Then all others follow suit!

4. பாண்டு இஸ் மாண்டு போகிறான், இன் கானகம்! சக்கரவர்த்திக்குரிய தகன மரியாதைகள் நடக்கிறது! காட்டுவாசிப் பசங்களான பாண்டவர்களை அத்தினாபுரம் அழைத்து வருகிறார்கள், அத்தினாபுரப் பெரியவர்கள்!

5. இந்த லூசு அத்தினாபுரப் பெரியவர்கள் பண்ண ஒரே தப்பு, ராஜ்ஜியம் சக்கரவர்த்தி இல்லாமல் எப்படி இருக்கலாம்; அதனால் சும்மா ஒரு பேருக்கு இன்னாருக்குப் பட்டாபிசேகம் பண்ணி வைத்து விடுவோம்-ன்னு செய்யாம வுட்டது தான்!

6. துரியன் அரண்மனையிலேயே பிறந்தவன்! அதுனால கொஞ்சம் மெதப்பு! புதுசா வந்த காட்டுவாசிப் பசங்களக் கண்டதும் இனம் புரியாத ஒரு எரிச்சல்....

அங்க தான் விதை! ஐயன் சொல்லுவது போல...
அழுக்காறு உடையான் கண் ஆக்கம் போன்று இல்லை!

வவ்வால் said...

//மகாபாரதத்தில் ஹீரோ பாண்டவர்கள் இல்லை!
யாரு வெட்டி அது? :-)//

நீங்க தான் ஹீரோ அதாவது கண்ணபிரான் :-)) ஆனால் அவர் ஹீரோக்களின்(பாண்டவர்கள்) ஹீரோவா வருவார், அதனால் பாண்டவர்களும் ஹீரொக்களே, இப்படியும் வச்சுக்கலாம் கண்ணனின் அன்பைப்பெற்றவர்கள் வெல்லனும் என்று கதாசிரியர் முடிவுப்பண்ணிட்டார்!

//போருக்குப் போக முடியாது என்ற ஒரே காரணம் தான்!

அதே காரணம் தான் இங்கு திருதிராஷ்டனுக்கும்! அதனால் அவன் பிறக்கும் போதே அரசுரிமை இழந்து தான் பிறக்கிறான்!//

பெரும்பாலும் மன்னர்களை வீரர்கள் தீரர்கள் என்று சொல்லி வைத்தாலும் அவர்களின் படைத்தலைவரின் திறமையால் தான் போரில் வெற்றிக்கிடைக்கிறது என்பதே உண்மை.

வரலாற்றில் இதற்கு பல உதாரணம் இருக்கு.

ராணா பிராதப் சிங்கை வென்றது, மான்சிங்க் என்ற அக்பரின் தளபதி தான். ஏன் எனில் அக்பரே போரிட்டபோதெல்லாம் வெற்றிக்கிடைக்கவே இல்லை.ஆனாலும் அந்த வெற்றி அக்பரின் கணக்கில் தான் வருகிறது.

அலாவுதின் கில்ஜின் தளபதியாக மாலிக்காபூர் தென்னிந்தியாவை வெற்றிக்கொள்ளவில்லையா?

எனவே அவரால் போருக்கு போக முடியாது என்று தகுதி நீக்கம் செய்வது சரியல்லவே.

அதே போல துரியோதனன் பிறந்து வளர்ந்த பிறகு வாரிசுக்காக நாடு வேண்டும் என்று திருதராஷ்டிரன் ஆசைப்பட ஆரம்பித்ததும் நடந்தது , நீங்கள் அதை சரியாக சொல்லிவிட்டீர்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஸோ, திரிதிராட்டனுக்குப் பெருசா Claim இல்லை-ன்னு பார்த்தாச்சு!
Chronologyயும் பாத்தாச்சி!

இப்போ துரியோதன மகாராஜா கிட்ட வருவோம்! பாவம் அவர் மனசுல அவர் தரப்பு நியாயம்-னு ஒன்னு இருக்கும்ல?

துரியோதனன் சரியான லூசுப் பையன்!
வாய மூடிக்கிட்டு இருந்திருந்தாலே வேற மாதிரி ஏதாச்சும் நடந்திருக்கும்!
இத்தனைக்கும் ஒரு இடத்தில் கூடப் புதுசா வந்த காட்டுப் பசங்க "நாங்க தான் வாரிசு"-ன்னு ஒரு சின்ன குரல் கூட கொடுக்கலை! அதுக்குள்ள எதுக்கு காரியத்தைக் கெடுத்துக்கனும்?

ஏன்னா...அழுக்காறு என்னும் பொறாமை!
நாட்டு மக்கள் எல்லாரும் பாண்டவர்களின் வீரம் பற்றி வெளிப்படையாகப் பேச ஆரம்பிக்கிறாங்க! யுதிட்டிரனே அடுத்த மன்னனாக அதிகம் தகுதி-ன்னு மக்கள் பேசறாங்க! இந்தப் பீஷ்மர், துரோணர் எல்லாம் ஏன் இன்னும் முடுவு எடுக்காம இருக்காங்க-ன்னு பேசுவது துரியோதனனே காது படக் கேட்கிறான்!

(என்னா பாலாஜி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எல்லாம் கெடையாதுங்களா? :-)))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

...அங்கே தான் முதல் திரி பத்துது துரியோதனனுக்கு!
ஓடியே வந்து திருதிராஷ்டனிடம் சண்டை பிடிக்கிறான்! பீஷ்மர் பற்றியே மக்கள் தப்பாப் பேசுறாங்க-ன்னு சொல்லுறது பாரதத்தின் சம்பவ பர்வத்தில் வருது! படிச்சிப் பாருங்க!

காட்டுவாசிங்க இப்பக் கூட பெருசா ஒன்னும் கோரவில்லை! ஆனாக் கோருவதற்கு முன்னாடியே இந்த லூசு குதிக்கிறது! ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு-ன்னு சொல்லுரது சரி தான் போல! :-)

அப்பறம் தான் அரக்கு மாளிகைக்கு அனுப்பி எரிப்பது, பின்னாடி கல்யாணம், அது தெரிஞ்சி மீண்டும் அத்தினாபுரத்துக்கு கூட்டி வருவது எல்லாம்!

இப்ப தான் சோ கால்டு பெரியவங்க கொஞ்சம் புத்தியோட வேலை செய்யுறாங்க! துரியனின் எரிமலை மனம் அவிங்களுக்கு நல்லாத் தெரிஞ்சி போகுது! சரி...சமரசமா தீர்த்து வச்சிடலாம்-னு ராஜ்ஜிய பிரிவினை ஐடியா! ஒரு பிரிவுக்கு திருதிராட்டன்...அவனுக்குப் பின் துரியன்...இன்னொரு பிரிவுக்கு யுதிட்டிரன்!

இங்க இன்னோரு காமெடி என்னான்னா...இந்தப் பக்கம் துரியன் இன்னும் இளவரசன் தான்! ஏன்னா அப்பா இருக்காரு! அந்தப் பக்கம் காட்டுப்பய யுதிட்டிரன் சக்கரவர்த்தி...போதாதா பொறாமையால் எரியும் உள்ளத்துக்கு?

லூசு...பிரிவினையே கூடாது! நாங்க தான் ஏகபோக உரிமை-ன்னு சண்டை போட்டிருக்கனும்! ஆனா அல்பத்தனமா, ஒரு காட்டுப் பிரதேசத்தை (காண்டவப் பிரஸ்தம்) நைசா ஒதுக்க ஐடியா கொடுப்பதே துரியோதனன் தான்!

அங்கேயும் அவனுங்க பெருசா வளர்வதைப் பார்த்து மீண்டும் பொறாமை! - சூதாட்டம்!
(இந்தக் கழுதைங்க கட்டின மனைவியை வச்சி ஆடுதுங்க! அது தனிக் கதை)

சரி...கோல்மால் செஞ்சி ஜெயிச்சியே! ராஜ்ஜியத்தைத் தரவே மாட்டேன்னு உறுதியா நிக்கவும் தெரியல!
13 வருசம் கழிச்சி வாங்க, திரும்பித் தாரேன்-ன்னு எதுக்கு பிட்டு போடனும்? அவனுங்க எப்படியோ திரும்பியும் வந்துட்டானுங்க! இவனுக்குத் திரும்பியும் பொறாமை!

இப்படி மீண்டும் மீண்டும் அழுக்காறால் வெந்தா மனுசன் எந்த கதி ஆவான்-னு வள்ளுவர் சொன்னதற்கு பெஸ்டு உதாரணம் தான் நம்ம துரியன் பையன்!

துரியனுக்கு உரிமை கொடுக்கப்பட்டது (அவசியம் இல்லாவிட்டாலும் கூட)!
ஆனாத் தான் செத்தாலும் பரவாயில்லை, அவன் கண்ணு போகனும் என்கிற கதையால் தான் உரிமை இழந்து கெட்டான்!
அழுக்காறு உடையான் கண் ஆக்கம் போன்றில்லை
ஒழுக்கமிலான் கண் உயர்வு!
(ஒரு கட்டத்தில் திருவாளர் சகுனியே வேணாம்டா, அவனுங்க எங்கோ இருக்கானுங்க, விட்டுரு இத்தோட-ன்னு சொல்லியும் கேக்கலை :-)

உங்க கேள்வி ஏன் துரியனுக்கு அரசுரிமை இல்லை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்!
ஆனா இதுக்காகப் பாண்டவர்கள் ஒன்னும் பெருசா புனித ஆத்மாக்கள் எல்லாம் கிடையாது!

நான் பெரிது மதிக்கும் அன்னை தெரசா அவர்களிடமே ஒரு பத்து குறையாச்சும் இருக்கும்! மனுசங்க தானே!
ஆனா ஐயன் சொன்னது தான் மீண்டும்!
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்!

குணம் அதிகம், குற்றம் கம்மி என்பதால் தான் இறைவனும் ஒரு பக்கத்துக்கு உதவ வேண்டி வந்தது!
இந்தப் பக்கமோ பொறாமைத் தீ மட்டும் இல்லாமல், அடங்காமையும் கூட சேந்துக்கிடுச்சி! அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்!

இறைவன் சார்பு நிலை எடுத்தானா என்பது இந்தப் பதிவுக்கு out of scope! மாதவிப் பந்தலில் பார்க்கலாம்! :-)

Dank u Balaji
Bye for now!
இதுக்கு மேல எப்படி வேணும்னாலும் அவிங்க அவிங்க அடிச்சி ஆடிக்கலாம்! :-)

Sridhar V said...

//பாண்டு ஒன்றும் சும்மா ஜாலி டிரிப்பாக வனம் போகவில்லை, அவன் சாபம் காரணமாக இனி வாழ முடியாது என்ற நிலையில் //

கங்குலியின் மகாபாரத மொழிபெயர்ப்பை படித்ததில் பாண்டு சாபத்தின் பேரில் வனவாசம் செல்லவில்லை என்று தெளிவாக சொல்கிறார்கள். அது மட்டுமல்ல வனவாசத்தின் போதுதான் பாண்டவர்கள் பிறக்கிறார்கள். மான் உருவில் இருக்கும் ரிஷியை கொன்று சாபமும் பெறுகிறார். பிறகு மனைவி மாத்ரியுடன் கூடி இறக்கிறார்.

நான் சொல்லவந்தது என்னவென்றால்...

துரியோதனன் அரசகுமாரனாக பிறந்து, அரசனாக வாழ்ந்து, அரசனாகவே இறக்கின்றான். அவனுக்கு அரசுரிமை மறுக்கபடவில்லை. :-))

இதற்கு மறுப்பு ஏதேனும் உண்டா?

//கண்ணனின் அன்பைப்பெற்றவர்கள் வெல்லனும் என்று கதாசிரியர் முடிவுப்பண்ணிட்டார்!//

அட... திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் மூவருமே கதாசிரியரின் புதல்வர்கள்தானே... அப்புறம் என்ன ஓரவஞ்சனை... :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கேள்விக்கு கேள்வி கேட்பது ஒரு வகை.
கேள்விக்குச் சிறந்த பதிலைத் தேட முற்படுவது இன்னொரு வகை!

ஸ்ரீதர் நாராயணன், மற்றும் வவ்வால் இருவருமே தலைப்பை ஒட்டி மட்டுமே கருத்துக்களைக் கோர்வையாக முன் வைத்துள்ளார்கள்!
வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

(அட, பாராட்டறதுக்கு மொதல்ல எனக்கென்ன தகுதி இருக்கு? இருந்தாலும் சொல்லனூம் போல இருந்திச்சி! சொல்லிட்டேன் தல)

வெட்டியின் முடிவுரையைப் பாத்துட்டு அப்பறம் வாரேன்! மூச்சு வாங்குது! ஜோடா கொடுங்க சாமீ...

Sridhar V said...

//13 வருசம் கழிச்சி வாங்க, திரும்பித் தாரேன்-ன்னு எதுக்கு பிட்டு போடனும்? //

இராமாயணத்துக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள ஒத்துமைய பாத்தீங்களா? அங்க 14 வருசம் வனவாசம். இங்க 13 வருட வனவாசம்.

அதுக்கு முன்னாடி திருதராஷ்டிரன் திரௌபதிக்கு 2 வரம் கொடுத்து, பாண்டவர்கள் தோத்ததெல்லாம் திருப்பி கொடுத்திடறார். அதுக்கப்புறம்தான் சகுனி இந்த 13 வருட வனவாசம் அப்படின்னு ஒரு சூதாட்டத்திற்க்கு ஐடியா கொடுக்கறாங்க.

குமரன் (Kumaran) said...

Sridhar Narayanan,

உங்கள் பதிவை நாங்களெல்லாம் படிக்க அனுமதி உண்டா? ஏன் இப்படி பூட்டி வைத்திருக்கிறீர்கள்? இங்கும் என் பதிவிலும் உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்த பின்னர் உங்கள் பதிவில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று பார்க்க முயன்றேன். போடா இங்கே வராதே என்று துரத்துகிறது. :-)

வவ்வால் said...

கண்ணபிரான் ரவிசங்கர்,

துரியோதனன் பலவீனம் குறித்தான அனைத்தையும் சாறு பிழிந்து வச்சுட்டிங்க(ராகவன் சும்மாவா சொன்னார்!). இதுக்கு மேல அதில் சந்தேகம் வருமா!

துரியோதனனுக்கு ஒரு நியாயம் இருந்தது ,"he is a rightful heir of throne " ஆனால் அவனே கெடுத்துக்கிட்டான் முட்டாப்பயனு தான் சொல்லணும்(நான் வேற ஒரு ரீசன் படிச்சேன் அது உண்மையானும் தெரியலை).

ஆனா எனக்கு ஒன்று புரியலை, நல்லா இருந்த பாண்டு வனவாசம் போக அப்போ ஒரு காரணமும் இல்லையே என்னாத்துக்கு காட்டுக்கு போகனும் பதவி வேண்டாம்னு , அதுக்கு ஒரு ஜட்ஜ்மெண்டும் இல்லாம வியாசர் ஏன் அப்படி எழுதினார்,? ஆன்மீக செம்மல் தான் சொல்லனும்!

ஸ்ரீதர் நாரயணன் நீங்க சொன்னது சரி தான் சாபம்லாம் காட்டுக்கு போன பின்னாடி தான், நான் கொஞ்சம் குழம்பிட்டேன், காட்டுக்கு போக அது தான் காரணம்னு.

போர்களில் வெற்றிப்பெற்று மகிழ்வுடன், அவன் வாகனம், யானைக்குதிரை எல்லாம் கூட மகிழ்வை காட்டியதுனு சொல்றார் வியாசர், அப்படி திரும்பிய பாண்டு , வனவாசம் போகணும்னு நினைக்க காரணமே இல்லை, ஒரு வேளைப்போர் சூழல் அப்படி செய்தது என்றால், அவன் மகிழ்வுடன் திரும்பினான்னு எழுதி இருக்க மாட்டார்.

இதுக்கு பதிலே தெரியலை!

Sridhar V said...

குமரன்,

பூட்டி எல்லாம் வைக்கவில்லை. இது வரைக்கும் ஒன்றும் எழுதவில்லை என்பதுதான் உண்மை. :-)

சீக்கிரம் எழுத வேண்டும்.

குமரன் (Kumaran) said...

வவ்வால்,

வனவாசம்ங்கறது பாண்டவர்களுக்குக் கிடைத்தது போல் தண்டனையாகவும் இருக்கலாம்; திருதராஷ்ட்ரன், காந்தாரி, விதுரர் அவர்கள் வாழ்வின் கடைசியில் செல்வது போல் தவத்திற்காகவும் இருக்கலாம்; ஜாலியா இருக்கச் செல்லும் வனபோஜனமாகவும் இருக்கலாம் இல்லையா? பாண்டு சாபம் பெற்ற பிறகு வனத்திற்குப் போகவில்லை, அதற்கு முன்னரே போய்விட்டார் என்றால் இந்த மூன்றாவது வகையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்தக் காலத்துல ரிசார்ட்சுக்குப் போற மாதிரி அந்தக் காலத்துல அவர் ரெண்டு மனைவிகளோடும் வனத்திற்குச் சென்று காட்டேஜ் லைஃப் வாழ்ந்திருக்கலாம். :-)

எப்பவோ அமர்சித்ரகதாவில் இப்படித் தான் படித்ததாக நினைவு. இங்கே மகாபாரதத்தைக் கரைத்துக் குடித்த நாலைந்து பெரியவர்கள் இருக்கிறார்கள்/றீர்கள். அவர்களே/நீங்களே தான் இதனை உறுதி செய்யவேண்டும். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வவ்ஸ்
ஒக்க இஸ்மால் ரிக்வெஸ்டு!
கேஆரெஸ்-ன்னே கூப்புடுருங்களேன்! மூச்சு முட்ட முழுப் பேரையும் சொல்றீங்களே! பாவமா இருக்கு! :-)

//ஆனா எனக்கு ஒன்று புரியலை, நல்லா இருந்த பாண்டு வனவாசம் போக அப்போ ஒரு காரணமும் இல்லையே என்னாத்துக்கு காட்டுக்கு போகனும் பதவி வேண்டாம்னு , அதுக்கு ஒரு ஜட்ஜ்மெண்டும் இல்லாம வியாசர் ஏன் அப்படி எழுதினார்,?//

அது இன்னான்னா...நம்ம அசோகருக்கு ஏற்பட்ட போருக்குப் பின் ஞானம் தான், பாண்டுவுக்கும் ஏற்பட்டது!
ஐயாவுக்கு சிந்தனை அமைதி, மன அமைதி தேவைப்பட்டது! ஓவரா ஜெயிச்சிட்டு வந்ததால் மனசுல எக்கச்சக்கமா கேள்விகள்.

அதான் vacation package போல கெளம்பிட்டாரு! அந்த vacationக்கு ஆள், அம்பு, படை, பரிவாரம், சாப்பாடு எல்லாம் தம்பிங்க அனுப்பிச்சி வச்சதா கதையிலும் வருது!

போன இடத்தில் அவனுக்கு ஒரு புது பழக்கம் தொத்திக்கிச்சி! எப்ப பார்த்தாலும் வேட்டை game!
அப்பறம் தான் முனிவர் சாபம், மனக் கலக்கம், காட்டு வாழ்க்கை எக்ஸ்டென்சன், மரவுரி, தவ வாழ்க்கை எல்லாம்! அதுக்கு முன்னாடி பட்டு பீதாம்பர்ம், கிரீடம் போட்டுக்கிட்டுத் தான் காட்டில் சுத்திக்கிட்டு இருந்தான்! :-)

//ஆன்மீக செம்மல் தான் சொல்லனும்!//

யாருப்பா அது? வந்து சொல்லுங்க!
நான் சொன்னா எல்லாம் வவ்ஸ் கேப்பாரா? ஏழை சொல் அம்பலம் ஏறுமா என்ன? :-)

வவ்வால் said...

குமரன்,
//எப்பவோ அமர்சித்ரகதாவில் இப்படித் தான் படித்ததாக நினைவு. இங்கே மகாபாரதத்தைக் கரைத்துக் குடித்த நாலைந்து பெரியவர்கள் இருக்கிறார்கள்/றீர்கள். அவர்களே/நீங்களே தான் இதனை உறுதி செய்யவேண்டும். :-)//

இதெல்லாம் ஓவராக தெரியுதே , கேஆரெஸ், நீங்க, ராகவன் எல்லாம் ஆன்மீக செம்மல்கள் ஆச்சே, நான் சும்மா எனக்கு தேவையான இடத்தை மட்டும் பிறாய்ந்து வருபவன் :-))

அமர்சித்திரக்கதாவினை நானும் சின்னவயதில் படித்தவன் தான், என்னோட அறிவும் அதே தான் :-))

அதில் தான் பாண்டு சாபம் வாங்கிய பின் தனது அந்திமக்காலம் நெருங்குவதை உணர்ந்து வனம் சென்றான் என்று வரும், எனக்கு நல்லா நினைவில் இருக்கு.

---------------
கேஆரெஸ்,

அந்த ஆன்மீக செம்மலே நீங்க தானே!
உங்களைக்கேட்டா பக்கத்தில இருக்கவங்களை கையைக்காட்டுறிங்க,

போரில் அஷோகருக்கு ஏற்பட்ட மன மாற்றம் பாண்டுவுக்கு ஏற்படவில்லை என்பதை சொல்லவே அவன் மகிழ்வுடன் திரும்ப வந்தான் என்று சொல்லி இருந்தேன்.

மேலும் அவன் ஒரே ஒரு போர் செய்யவில்லை திக்விஜயமாக சென்று பல நாட்டை வென்று அங்கிருந்த செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்தான்.வந்தவன் அதனை தன் தாய் , திருதராஷ்டிரன், பீஷ்மர், என்று அனைவருக்கும் பிரித்தும் கொடுத்தானாம். ரொம்ப சந்தோஷமாகவே அவன் அப்போது இருந்துள்ளான்.என்று இதன் மூலம் தெரியவருகிறது.

அவன் காட்டுக்கு போனதிற்கு ஒரே காரணம் அவனுக்கு பிள்ளைகள் இல்லை என்பது தான். நாட்டில் இருந்தால் வாரிசு ஏன் உருவாகவில்லை என்று கேட்பார்கள் என்று காட்டுக்கு போய் அங்கே இருந்தப்படியே குழந்தைக்கு முயற்சி செய்யலாம் என்று ஆசை போலும்.

வெட்டிப்பயல் said...

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி... பதிவை போட்டாலும் போட்டேன், பயங்கர ஆணி... வலைப்பதிவு பக்கமே தலை வைக்க முடியாம சதி பண்ணிட்டாங்க...

நீங்க எல்லாரும் சொல்றதை பார்த்தா யுதிஷ்டிரன் தான் உண்மையான வாரிசு மாதிரி தெரியுது... நான் எதுக்கும் இன்னொரு முறை யோசிச்சி பார்க்கிறேன் :-)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

பாண்டு தவறான காரணத்தினால் தானே பட்டத்தை திருப்பி கொடுக்கிறான். காரணமே பொய்த்தப்பின் ( வாரிசு ) அரசு பாண்டுவிற்க்கும் அவன் வாரிசுகளுக்கும் தானே சேரும்?

நித்யா பாலாஜி//

நித்யா,
சரியான பதிலை ஸ்ரீதர் வெங்கட், குமரன், KRS எல்லாம் சொல்லிருக்காங்க பாருங்க...

கதையை கதையா பார்த்தா பாண்டு பிறப்பதற்கு காரணமே திருதராஷ்டிரனால் ஆள முடியாது என்ற காரணத்தால் தான்...

அதனால தான் துரியோதனனுக்கு உரிமையில்லைனு எல்லாம் சொல்றாங்க. நான் இன்னும் கொஞ்சம் சிந்திக்கனும் :-)

ஜி.ரா வேற எதுவும் சொல்ல மாட்றாரு...

வெட்டிப்பயல் said...

நான் கேக்கனும்னு நினைச்ச கேள்வியெல்லாம் வவ்வால் கேட்டுட்டாரு. அதுக்கு ஆன்மீக செம்மல் பதில் சொல்லிட்டாரு...

குமரன் படிச்ச மாதிரி தான் நானும் கதை படிச்சிருக்கேன். சாபத்திற்கு அப்பறம் தான் துறவறத்தை மேற்கொண்ட மாதிரி. ஆனா அப்படியில்லைனு தலைவர் சொல்றாரு. மறுபடியும் தேடி பார்க்கனும் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சாபத்திற்கு அப்பறம் தான் துறவறத்தை மேற்கொண்ட மாதிரி. ஆனா அப்படியில்லைனு தலைவர் சொல்றாரு. மறுபடியும் தேடி பார்க்கனும் :-)//

எலே வெட்டி!
பதிவைத் தான் படிக்காம பின்னூட்டம் போடுவ! இப்ப பின்னூட்டத்தைப் படிக்காமயே பின்னூட்டம் போடுறியா? :-)

பாண்டு முதலில் கானகம் செல்வது போருக்குப் பின் வனத்தில் இளைப்பாற, வேட்டையாட!
அப்போ மகுடம், பரிவாரம், ராசா டிரஸ் எல்லாம் இருக்கும்!

அங்க சாபம் வாங்கிக்கிட்டாப் பொறவு, வெறுத்துப் போயி, அதே காட்டுலேயே சாதாரண டிரஸ்ஸெக்கு மாறிடுவான்!
ஆனா "துறவறம்" எல்லாம் ஒன்னும் இல்ல! அப்பவும் குடும்பஸ்தன் தான்!

மொதல்ல டெம்பரரியாத் தான் கானகம் போனான்!
சாபம் வாங்கின பிறகு அங்கேயே நிரந்தரமாத் தங்கிட்டான்! அவ்ளோ தான்!

கீழை ராஸா said...

பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)
ஒரு பதிவுக்கே இப்படின்னா..?மகாபாரத முன்னுரையை படியுமைய
இதை படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாதுன்னு போட்டிருக்க போறாங்கே...

Anonymous said...

Throughout the MahaBharath Pandavas never demanded the kingdom. They were raised fatherless and for some unknown law of the land the general opinion was that they were the ones who should get to rule. There were many attempts to end their life sheerly by the fear of Kourawas which were not very successfull. Even after their 13th year Vanavasam, they were willing to settle for 5 villages which was refused by Dhuryodhana. The fact is Duryodhanan and his group hated and were jealous of Pandavas because they were percieved as better heroes than themselves.

வவ்வால் said...

கீழை ராசா,

இதை நான் ஆரம்பத்திலே சொல்லிட்டேன்,

//ஸ் ..ஸ் அப்பா முடியல , எப்படிலாம் விளக்க வேண்டி இருக்கு, பதிவ படிச்சா அனுபவிக்கனும் ஆராயக்கூடாதுனு சொல்ர வெட்டி இப்படிலாம் கேள்விக்கேட்கலாமா :-))//

வெட்டிப்பதிவை படிச்சா ஆஹா , இல்லைனா இனிமே :-)) போட்டு போய்டலாம்னு பார்க்கிறேன், அவர் சொன்னதை பாலோவ் பண்ணனும்ல :-))

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சாபத்திற்கு அப்பறம் தான் துறவறத்தை மேற்கொண்ட மாதிரி. ஆனா அப்படியில்லைனு தலைவர் சொல்றாரு. மறுபடியும் தேடி பார்க்கனும் :-)//

எலே வெட்டி!
பதிவைத் தான் படிக்காம பின்னூட்டம் போடுவ! இப்ப பின்னூட்டத்தைப் படிக்காமயே பின்னூட்டம் போடுறியா? :-)//

பதிவை படிக்காமலும் பின்னூட்டம் போடலை. பின்னூட்டத்தை படிக்காமலும் பின்னூட்டத்தை போடல.

நான் படிச்சதுல (பார்த்ததுல/கேட்டதுல எப்படி வேணா வெச்சிக்கோங்க) வேட்டைக்கு பிறகு சாபம், பிறகு வனவாசம் என்று படிச்ச மாதிரி நியாபகம். நீங்களும், ஸ்ரீதரும் சாபத்திற்கு முன்பே வனத்திற்கு சென்று விட்டான் பிறகு நாட்டிற்கு வரவில்லைனு சொல்றீங்க. அதை நான் ஒரு தடவை சரி பார்த்துக்கனும்னு சொன்னேன்.

அதுல எங்க இருந்து வந்துச்சு நான் பின்னூட்டம் படிக்காம பதில் சொல்றேனு...

வெட்டிப்பயல் said...

ஜி.ரா எதுவும் கருத்து சொல்லாம ஒதுங்கியது ஏன்னு தெரியல :-(

அவர் ஏதாவது கருத்து சொல்லியிருந்தால் விவாதம் நல்லா சூடு பிடிச்சிருக்கும்...

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//விதுரனை எமதர்மனின் அவதாரம் என்று சொல்வார்கள்.
யுதிஷ்டிரன் எம தர்மனின் மகன்.
ஒரு வேளை இது தான் விதுர நீதியாக யுதிஷ்டிரனுக்கு அரச பட்டத்தை அளிக்கிறதா?//

விதுரன் - எமனின் அம்சமாகவே பிறந்தவன்!
யுதிட்டிரன் - தருமராஜன் (எமனின்) அருளால் ஒரு மகனாகப் பிறந்தவன்!!

அப்படி இருக்க, விதுரன் சூதாட வருமாறு தருமனிடம் அழைப்பு எடுத்துச் செல்வானா? முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க மாட்டானா?

இந்த அரசுரிமைச் சண்டையில், விதுரனை இடையில் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்! விதுரருக்குத் தான் எமனின் அம்சம் என்றே தெரியாது! அப்படி இருந்தால் தானே யுதிட்டிரன் மீது அவர் ஓரவஞ்சனை காட்டுவதற்கு?//

அவர் தூதுவனாக செல்லும் போழுதே விளையாட வர வேண்டாம் என்று தான் சொல்வார். ஆனால் அது தருமமல்ல(???) என்று சொல்லி யுதிஷ்டிரன் செல்கிறான்.

மேலும் யுதிஷ்டிரன் சக்ரவர்த்தியாக பதவி ஏற்கும் பொழுதே இந்திரப்ரஸ்தத்தில் ஒரு முறை சூதாடி சகுனியை யுதிஷ்டிரன் வெல்கிறான். (சகுனி திட்டமிட்டே தோற்கிறான் என்பது வேறு விஷயம்).

அதனால் இந்த வாதம் ஒத்துக்கொள்ள முடியாது...

Anonymous said...

Biological father of Pandavas is not Pondu. Hence the legal heir is only Dhuryodhanan.Others can't make any legal claim. However history and justice is with winner of that time.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
Biological father of Pandavas is not Pondu. Hence the legal heir is only Dhuryodhanan.Others can't make any legal claim.//

அடேங்கப்பா!
Biological father-ஆ?
அப்ப துரியோதனன் யாருங்க அனானி ஐயா?
அவனோட பயோலாஜிக்கல் ஃபாதர் யாருன்னு தெரியுமா? யாரு கொடுத்த வரத்தில் பிறந்தாங்க?
பானைகளில் கருப்பிண்டத்தை ரெண்டு வருசமா அடைத்து வைத்து உருவான கெளரவர்களுக்கு என்ன லீகல் க்ளேய்ம் கொடுக்கப் போறீங்க? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவர் தூதுவனாக செல்லும் போழுதே விளையாட வர வேண்டாம் என்று தான் சொல்வார். ஆனால் அது தருமமல்ல(???) என்று சொல்லி யுதிஷ்டிரன் செல்கிறான்//

இது என்ன வெட்டி பாரதமா? :-)

விதுரர் விளையாட வர வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்! மன்னர் அழைப்பை மறுதலிக்காமல் ஏற்கவும் என்று தான் சொல்லுவார்.

ஆனா தருமன், எது தருமம்-னு கேட்டு வைக்க, சூது தர்மம் இல்லை-ன்னு மட்டுமே சொல்லுவார்.
தருமன் தர்மத்தைக் கரெக்டா கேட்டுக்கிட்டு அதர்மத்தைக் கரெக்டா பண்ணிடுவான்! :-)

விதுரனுக்கு முற்பிறவி ஞானங்களே இருக்காது! (இராமனைப் போலவே)
எனவே எமன், எமன் அம்சத்தில் பிறந்தவனுக்குச் சாதகமா நடந்தான் என்பது லாஜிக்கே இல்லாத வாதம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
ஜி.ரா எதுவும் கருத்து சொல்லாம ஒதுங்கியது ஏன்னு தெரியல :-(//

அண்ணன் ஜிரா ஒதுங்க எல்லாம் இல்லை! அவர் சார்பாக அவர் சீடர்களில் ஒருவரான என்னை அனுப்பி உள்ளார்! அம்புட்டே! :-)

//அதுல எங்க இருந்து வந்துச்சு நான் பின்னூட்டம் படிக்காம பதில் சொல்றேனு...//

பின்னூட்டத்தைப் படிச்சா அனுபவிக்கனும்! ஆராயக் கூடாது வெட்டி! :-)

//நீங்க எல்லாரும் சொல்றதை பார்த்தா யுதிஷ்டிரன் தான் உண்மையான வாரிசு மாதிரி தெரியுது... நான் எதுக்கும் இன்னொரு முறை யோசிச்சி பார்க்கிறேன் :-)//

ஹிஹி
யோசிச்சி முடிச்சாச்சா?
இல்ல ரூம் போட்டு இன்னும் யோசிக்கணூமா? :-))

வவ்வால் said...

கேஆரெஸ்,

//விதுரனுக்கு முற்பிறவி ஞானங்களே இருக்காது! (இராமனைப் போலவே)
எனவே எமன், எமன் அம்சத்தில் பிறந்தவனுக்குச் சாதகமா நடந்தான் என்பது லாஜிக்கே இல்லாத வாதம்!//

என்ன இப்படி சொல்லிட்டிங்க , விதுரர் ஒரு ஞானஸ்தர், பாரதப்போர் நடக்கும் போது களத்தில் நடப்பதை நேரடியாக லைவ் ரிலே செய்தவர்!(அவர் தானே செய்தார்? இப்போ சந்தேகம் வந்திடுச்சு)

விதுர நீதி என்ற நூல் கூட உண்டு!

விதுரர் குருவம்ச வரலாறு , அரச நீதி, முற்பிறவி கதைகளை எல்லாம் திருதராஷ்டிரனுக்கு சொல்வதாக சொல்வார்களே, அதற்காக பிரம்மாவின் மானச புத்திரர் சனத் சுஜாதியர் என்பவரை விதுரர் வர வைத்து கதை சொல்லவைப்பார்.

அப்பொழுதே வினைப்பயன் , முற்பிறவி , கர்மா எல்லாம் சொல்லிவிடுவார் சனத் சுஜாதீயர், விதுரருக்கும் அது தெரியும், நான் சொல்வதை விட அவர் வாயல் சொல்வதே சிறப்பு என்று சொல்வாரே?

எனவே விதுரருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

//பானைகளில் கருப்பிண்டத்தை ரெண்டு வருசமா அடைத்து வைத்து உருவான கெளரவர்களுக்கு என்ன லீகல் க்ளேய்ம் கொடுக்கப் போறீங்க? :-)//

இரண்டு வருசமா வயிற்றிலேயே கருவாக இருந்து சதைப்பிண்டமாக பிறந்தது அதைப்பின்னர் ஜாடிகளில் போட்டு குழந்தைகள் ஆக்கியதாக சொல்வார்கள். பானையில் இரண்டு வருடம்னு படிக்கலையே, மேலும் காந்தாரி தான் முதலில் கருவுற்றால், பின்னரே குந்திக்கெல்லாம் வாரிசு பிறந்தது என்று சொல்வார்கள்.காந்தாரிக்கு இரண்டாண்டுகள் ஆகிவிடும் குழந்தை பிறக்க என்பதால் தாமதமாக ஆகிவிடும்.

குமரன் (Kumaran) said...

வவ்வால். லைவ் ரிலே செய்தவர் சஞ்சயன்.

ஏ.எ.வாலிபன் said...

Who born first ?
Thuri or Thar ?
Is that matters for the King-ship?

sariya Chandrasekaran said...

வ்ரலாற்றில் எவரையும் அடையாளப்படுத்தாமல் அப்படியே மாபாரதத்தைக் காண்பது குழப்பத்துக்கே வழியமைக்கும். அதே மாபாரதத்தில் கிருஷ்ணன் என ஒருவன் இடம்பெற்றுள்ளான். அவந்தான் பாரதத்தின் வாரிசு! அவனை வசிட்டர் எதனால் நாடுகடத்தினார். திரிசங்கு= சத்தியவிரதனின் வரலாற்றைல் இதனைக் காணவேண்டும். எல்லாவற்றுக்கும் வசிட்டனின் சதியே காரணம். இதில் திருதராஸ்ற்றனும் பாண்டுவும் வரலாற்றில் இல்லாதவர்கள். பீஷ்மனும் துர்யோதனின் நிழலே[மனச்சாட்சி] ஆவான். சத்தியவதி என்பவர் சத்திரியகுலப் பெண் அல்ல. அவளுக்குப் பிறந்தோரும் சத்திரியர் அல்ல என்பதாலேயே அவளது மகன் வியாசனுக்கும் அரசுரிமை வழங்கப்படவில்லை. அப்படி யஉள்ளபோது வியாசனுக்குப் பிறந்தோர் என்ன தகுதியில் ஆட்சியைப் பெறமுடியும். சத்தியவதியை இரண்டாவதாக மணந்தவன் சந்தனு என்ற சந்திரகொற்றனே என்பதை எவருமே அறியவில்லை. சந்திரகொற்றனை ஏமாற்றிச் சூத்திரப்பெண்ணை மணமுடிக்கத் துணைநின்றவனே வசிட்டன் என்ற அலெக்சாந்தன். இந்த அலெக்சாந்த ரிச்சிகனுக்குப் பிறந்த மற்றொசு அலெக்சாந்தனே யமதக்கினி. அவனும் சத்தியவதிக்குப் பிறந்ததாகத்தான் காட்டப்படுகிறான். இரண்டு சத்தியவதிகள் மாபாரதத்தில் உள்ளனர். காதியே இவர்கள் அனைவருக்கும் முன்னோன். அவனது மனைவிக்குப் பிறந்த விசுவாமத்திரனுக்கும் ஆட்சிசெய்ய உரிமையை மறுத்தவனே வசிட்டன். அதனால்தான் விசுவாமித்திரன் அனைவரையும் எதிர்த்துநின்று சந்திரகொற்றனின் மகனான கிருஷ்ணன்+ கரவேலனுக்கு வேங்கடமலைக் காட்டில் திருப்பதியில் ஒரு நாட்டை உறுவாக்கி வேந்தனாகவும் ஆக்கினான். அவனுக்குப் பயந்த தேவர்கள் விசுவாமித்திரனிடம் பணிந்ததால் அத்தோடு நிருத்திக்கொண்டான். சந்திரகொற்றனை நாட்டைவிட்டுக் கடத்தியதை மறைக்கவே திருத ராஸ்ற்றனும் பாண்டுவும் புகுத்தப்பட்டுள்ளனர். சந்திரகொற்றனுக்கும் சத்தியவதிக்கும் சித்ராங்கதனும் விச்சித்ரவீர்யனும் பிறந்தபோதே சத்தியவதியின் வாரிசுகளான அவர்களுக்கு ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டை நீங்கிச்செல்ல ஆணையிட்டவன் வசிட்டன். அந்த இருவாரிசுகளான சித்திராங்கதனும் விச்சித்ரவீர்யனுமே பிந்துசாரனும் பிம்பிசாரனும் ஆவர். இதில் பிந்துசாரனைக் கொலைசெய்தோரும் வசிட்ட கூட்டத்தாரே ஆவர். அதனாலேயே பிம்பிசார துர்யோதனன் சற்றே எச்சரிக்கையுடன் செயல்பட்டான். ஆனாலும் சத்திரையன்னல்ல என்பதாலேயே சந்திரகொற்றனின் சகோதரியை மணந்தவனுக்கு ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என்ற நிலை இருந்தது. சந்திரகொற்றனின் சகோதரியே பிரிதா என்ற பிருந்தா எனப்படும் துளசி. அபெண்ணின் மகனே தருமன். இவர்கள் தமிழர்கள். கரிகால்சோழனே தருமன். இளஞ்சேத்சென்னியே பிருந்தாவை மணந்த சூரியகுலத்தவன். அன்று மண்ணெல்லாம் பெண்ணுக்கே உரித்தாக இருந்தது. அதனை மாற்றி ஆண்வாரிசுகளைப் புகுத்த முயன்றவனே அலெக்சாந்த வசிட்டர்கள். அதனாலேயே கிருஷ்ணன் நீதியின் பக்கம் இருந்து தருமனான கரிகால்சோழனுக்கு ஆட்சிகிடைக்கப் போராடினான்; விசுவாமித்திரனும் துணைநின்றான். மாபாரதத்தில் உள்ள கிளைக்கதைகளிலேயே இந்திய = பாரத வரலாறு மறைந்துகிடக்கிறது!

sariya Chandrasekaran said...

முன்னர் பதிவிட்டதற்கு மேலும் சான்றுகளைக் காண விரும்புவோர் எனது http://nhampikkai-kurudu.blogspot.com வலையில் உள்ள கட்டுரைகளைக் காணும்படி கோருகிறேன்.

sariya Chandrasekaran said...

முன்னரே இரண்டு பதிவுகளை இட்டுள்ளேன். அவை என்னவாயின என்பதை அறிய இயலவில்லை!