தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, April 27, 2008

பனி விழும் மலர் வனம் - 4

கதை எழுத ரொம்ப நாளானதுக்கு மன்னிச்சிடுங்க மக்கா...

..........

பாருங்க. நம்ம தான் டகால்ட்டினு பார்த்தா இந்த பொண்ணு நமக்கு மேல இருக்குங்க. எப்படி தான் இப்படி கூச்சப்படாம பொய் சொல்றாங்களோனு தெரியலைங்க. இப்ப எதுக்கு என்னை அப்படி பார்க்கறீங்க? நான் சும்மா ஒரு பொய் சொன்னேன். அந்த பொண்ணு எப்படி தொடர்ந்து கண்டினியுஸா அடிச்சுது பார்த்தீங்க இல்லை. இதுல எனக்கு அட்வைஸ் வேற. கூகுல்ல வேலை செய்யற எனக்கு ஆறு மாசமா வேலை தேடற பொண்ணு அட்வைஸ் பண்ணுது பாருங்க. அது தான் கொடுமை.

.....

என்னடா இன்னைக்கு வெள்ளிக்கிழமை இவன் ஊருக்கு போகலைனு பார்க்கறீங்களா? நான் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் தான் ஊருக்கு போகறது வழக்கம். போன வாரம் போனதால இந்த வாரம் போகலை. இப்ப என் ரூமுக்கு போயிட்டு இருக்கேன். என் ரூம் கோரமங்கலா பக்கத்துல இருக்குற விவேக் நகர்ல இருக்கு. அதான் இந்த 201 பஸ் பிடிச்சி போயிட்டு இருக்கேன். 141 வர கொஞ்ச நேரமாகும் போல.

இன்னைக்கு என்ன ப்ளானு கேக்கறீங்களா? கயுத கெட்டா கூட்டி சுவருங்கற மாதிரி நாங்க ஃபிரியா இருந்தா Forum. அப்படியே அங்க ஒரு ரெண்டு மூணு மணி நேரம் சுத்திட்டு, கிருஷ்ணா கபேல ஒரு வெட்டு வெட்டிட்டு வந்து பாலாஜில ஒரு படம் பார்த்துட்டு, தூக்கம் வரலைனா சீட்டு விளையாடிட்டு ஒரு நாலு, அஞ்சு மணிக்கா படுப்போம்.

இருங்க ஏதோ போன் வருது யாருனு பார்க்கறேன். எதோ புது நம்பர்ல இருந்து வருது.

"ஹலோ, ரவி ஹியர்"

"நாங்க விப்ரோல இருந்து கூப்பிடறோம். நீங்க எங்க வாட்ச்மேன்கிட்ட கொடுத்த ரெஸ்யும் கிடைச்சுது. உங்களுக்கு நாளைக்கு இண்டர்வியூ. காலைல அஞ்சு மணிக்கு எலக்ட்ரானிக் சிட்டி ப்ராஞ்ச்க்கு வந்துடுங்க. அங்க நீங்க ரெஸ்யும் கொடுத்த வாட்ச்மேன் இருப்பாரு. அவர்கிட்ட இன்னைக்கு சனிக்கிழமை நாளைக்கு வெள்ளிக்கிழமைங்கற கோட் வேர்ட் சொன்னா அவர் இண்டர்வியூ நடக்கற இடத்துக்கு உங்களை கூப்பிட்டு வருவாரு"

இது அந்த பொண்ணு வேலை தாங்க. ஊருல இருந்து வந்துட்டா போல

"காலைல அஞ்சு மணிக்கா?"

"ஆமாங்க"

"நான் இப்ப ஊருக்கு கிளம்பறேன். திங்க கிழமை காலைல மூனு மணிக்கா அந்த பக்கம் வருவேன். அப்ப வேணா அட்டெண்ட் பண்ணலாமா? நான் வேணா முந்தா நேத்து சனிக்கிழமை நேத்து வெள்ளிக்கிழமைனு கோட் வேர்ட் சொல்றனே"

"இப்படியெல்லாம் பண்றதால தான் உங்களுக்கு வேலையே கிடைக்க மாட்டீங்குது. போன வாரம் தானே ஊருக்கு போனீங்க. அதுக்குள்ள என்ன திரும்ப ஊருக்கு"

"விப்ரோ HRக்கு நான் போன வாரம் ஊருக்கு போனதெல்லாம் கூட தெரியுது. அதனால தாங்க நீங்க இந்தியாவிலயே பெரிய கம்பெனியா இருக்கீங்க"

"ஹலோ நான் நித்யா பேசறேன்"

"எந்த நித்யா?"

"ஹிம்... நினைவெல்லாம் நித்யா. உங்க கூட அன்னைக்கு பஸ்ல வந்தனே அந்த நித்யா"

"ஓ... நம்ம டூபாக்குர் பார்ட்டி. நாலு ஆஃபர் லெட்டர் வாங்கன நித்யாவா?"

"ஆமாம். நீங்க சொல்றதை பார்த்தா நிறைய நித்யாவை தெரியும் போல?"

"அதெல்லாம் இல்லைங்க... எனக்கு உங்க பேர் கூட மறந்து போச்சு"

"ஆமா. இவர் கஜினி சூர்யா. எல்லாத்தையும் மறந்து போயிட்டாரு. சும்மா கதைவிடாதப்பா"

செம வாயாடியா இருக்கா பாருங்க.

"சரி சொல்லுங்க. எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க?"

"நான் இன்னைக்கு காலைல தான் வந்தேன். வியாழக்கிழமை கிளம்பினா கூட்டம் அதிகம் இருக்காதுனு யோசிச்சி வந்தேன்"

"பயங்கரமான புத்திசாலிங்க நீங்க. உங்களுக்கே வேலை கிடைக்கலனா அதுல ஏதோ சதி இருக்குனு நினைக்கிறேன்"

"சதி இல்லைங்க. என் விதி. நான் வேலை தேடி பெங்களூர் வந்தே ஒரு மாசம் தான் ஆச்சு"

"ஓ அதானே பார்த்தேன்... இல்லைனா உங்க புத்திசாலித்தனத்துக்கு ஒரு பத்து பதினைஞ்சி ஆஃபர் லெட்டர் வாங்கியிருப்பீங்களே."

"அப்பறம் அன்னைக்கு நீங்க பண்ண உதவிக்கு ரொம்ப நன்றி. இல்லைனா அன்னைக்கு பஸ் பிடிச்சி போக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கனும். இந்த தடவை மறக்காம காலண்டர் எடுத்துட்டு வந்துட்டேன். பௌர்ணமி அன்னைக்கு கண்டிப்பா புறப்பட மாட்டேன்"

"ஹிம்ம்ம்"

"அப்பறம் இந்த வாரம் ஏதாவது இண்டர்வியூ அட்டெண்ட் பண்றீங்களா?"

"இல்லைங்களே. ஏன் நீங்க ஏதாவது அட்டெண்ட் பண்றீங்களா?"

"ஆமாம். நாளைக்கு கோரமங்களால XYZ கம்பெனில காலைல 10 மணிக்கு வாக் இன். 70% க்கு மேல இருந்தா அட்டெண்ட் பண்ணலாம். வெறும் C தெரிஞ்சா போதும்னு சொல்றான். சும்மா வந்து அட்டெண்ட் பண்ணி பார்க்கறீங்களா?"

ஆஹா... என்னங்க இது வம்பா போச்சு? இப்ப என்ன பண்ணலாம்? இப்போழுதைக்கு உண்மையை சொல்ல வேண்டாம். நாமலும் அவளை கலாய்ப்போம்.

"சரிங்க. வர ட்ரை பண்றேன்"

"என்னது ட்ரையா? உங்களுக்கே ஓவரா தெரியல. ஒழுங்கா நாளைக்கு வந்து சேருங்க"

என்னங்க இப்படி பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ணிட்டா? ரொம்ப ராங்கி பிடிச்ச பொண்ணா இருக்கா. நம்ம கைல ராங்கு காட்னா எல்லாம் ராங்கா போயுடும்னு பாட்டு பாடற நமக்கேவாங்க? நாளைக்கு போகாம எஸ்கேப் ஆகிடலாம். அவ கேட்டா பொய் சொல்றதுக்கு நமக்கு தெரியாதா என்ன?

(தொடரும்...)

29 comments:

ஆயில்யன் said...

//? நான் வேணா முந்தா நேத்து சனிக்கிழமை நேத்து வெள்ளிக்கிழமைனு கோட் வேர்ட் சொல்றனே"//


:))))))))))))))))))

Sumathi. said...

ஹாய் பாலாஜி,

//நான் வேணா முந்தா நேத்து சனிக்கிழமை நேத்து வெள்ளிக்கிழமைனு கோட் வேர்ட் சொல்றனே"//

ஏன் இன்னிக்கு திங்கள்கிழமை, நேத்து ஞாயிற்றுக்கிழமை னு சொன்னா ஒத்துக்க மாட்டாங்களா?
ஹா ஹா ஹா சூப்பர் கலக்கல் போங்க.

கப்பி | Kappi said...

:))

வல்லிசிம்ஹன் said...

இப்போதானே கதை ஆரம்பிக்குது??
சரி சரி.
கோட் வேர்ட் உலகம்னு ஒரு பதிவே போடலாம் போல இருக்கெ:)
நல்ல ஆரம்பம் பாலாஜி.

கருப்பன் (A) Sundar said...

//
இன்னைக்கு சனிக்கிழமை நாளைக்கு வெள்ளிக்கிழமைங்கற கோட் வேர்ட் சொன்னா அவர் இண்டர்வியூ நடக்கற இடத்துக்கு உங்களை கூப்பிட்டு வருவாரு
//
விப்ரோல கழுதைக்கு மனுஷவேஷம் போட்டு கூட்டிட்டு போனாக்கூட கம்ப்யூட்டர் ஜாப் கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஒரு வேளை அதை ஃபில்டர் பண்னுறதுக்குதான் இந்த கோட் வேர்டோ??

கிரி said...

ஹா ஹா ஹா நல்ல இருந்ததுங்க படிக்க. வாழ்த்துக்கள்.

ரசிகன் said...

//நான் வேணா முந்தா நேத்து சனிக்கிழமை நேத்து வெள்ளிக்கிழமைனு கோட் வேர்ட் சொல்றனே"//

:))))

Divya said...

After a long time........ungalukey urithana style yil kathai padika romba romba nala irunthathu vetti!

njyd reading it....

waiting for the next part!!

Divya said...

\\நம்ம கைல ராங்கு காட்னா எல்லாம் ராங்கா போயுடும்னு பாட்டு பாடற நமக்கேவாங்க?\\

innuma......ipdi paditu irukireenga???

G.Ragavan said...

கலக்கல் வெட்டி. ரொம்ப நாள் கழிச்சி திரும்பவும் தொடங்கீருக்க. அற்புதம். அற்புதம்.

இப்பிடி ஒருத்தரயொருத்தர் ஏமாத்திக்கிட்டேயிருந்தா கண்டிப்பா காதல் வரனுமே.... வரட்டும். காதல்தான. அதுனால மோதல் வராம இருந்தாச் சரி.

வசீகரா said...

/*ஹலோ நான் நித்யா பேசறேன்"
"எந்த நித்யா?"
"ஹிம்... நினைவெல்லாம் நித்யா. உங்க கூட அன்னைக்கு பஸ்ல வந்தனே அந்த நித்யா"
"ஓ... நம்ம டூபாக்குர் பார்ட்டி. நாலு ஆஃபர் லெட்டர் வாங்கன நித்யாவா?"
"ஆமாம். நீங்க சொல்றதை பார்த்தா நிறைய நித்யாவை தெரியும் போல?"
"அதெல்லாம் இல்லைங்க... எனக்கு உங்க பேர் கூட மறந்து போச்சு"
"ஆமா. இவர் கஜினி சூர்யா. எல்லாத்தையும் மறந்து போயிட்டாரு. சும்மா கதைவிடாதப்பா"
செம வாயாடியா இருக்கா பாருங்க. */

Chance e illa... Amrakalam.. kalakiteenga vetti anna! kadai romba viruviruppa pogudhu! Amazing!!!

- Kandan Mani kandan

Sathiya said...

நானும் வரும் வரும்னு பார்த்து இதை பத்தி மறந்தே போயிட்டேன். இப்பவாச்சும் போட்டீங்களே. நன்றி;)
ஆமா, அந்த பொண்ணு உங்க மேல எவ்வளவு அக்கறையா உங்களுக்கு வேலை தேட உதவி பண்ணுது. நீங்க வேலைய வச்சுக்கிட்டு அவங்களுக்கு உதவி பண்ணும்னு யோசிக்காம அவங்கள ஏமாத்திட்டு இருக்கீங்களே? நியாயமா?

Unknown said...

Kathai Romba nalla poguthu..ungaluku yen valthukal..

Unknown said...

Kathai nalla poguthuga. ungalluku yen valthukal... waiting for next part..

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன். said...

//? நான் வேணா முந்தா நேத்து சனிக்கிழமை நேத்து வெள்ளிக்கிழமைனு கோட் வேர்ட் சொல்றனே"//


:))))))))))))))))))//

:-)))))))))))))))))))))

(ஸ்மைலிக்கு ஸ்மைலி... கப்பி ஸ்டைல் ;))

வெட்டிப்பயல் said...

//Sumathi. said...

ஹாய் பாலாஜி,

//நான் வேணா முந்தா நேத்து சனிக்கிழமை நேத்து வெள்ளிக்கிழமைனு கோட் வேர்ட் சொல்றனே"//

ஏன் இன்னிக்கு திங்கள்கிழமை, நேத்து ஞாயிற்றுக்கிழமை னு சொன்னா ஒத்துக்க மாட்டாங்களா?
ஹா ஹா ஹா சூப்பர் கலக்கல் போங்க.//

தெரியலையே.. வேணும்னா நீங்க சொல்லி பார்த்துட்டு எங்களுக்கு சொல்லுங்களேன் ;)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

:))//

:)))

(ஒண்ணு அதிகமா போட்டிருக்கேன் ;))

வெட்டிப்பயல் said...

//வல்லிசிம்ஹன் said...

இப்போதானே கதை ஆரம்பிக்குது??
சரி சரி.
கோட் வேர்ட் உலகம்னு ஒரு பதிவே போடலாம் போல இருக்கெ:)
நல்ல ஆரம்பம் பாலாஜி.//

வல்லியம்மா,
இது நாலாவது பாகம். முதல் பாகத்துகா 4 னு போடுவேன்?

வெட்டிப்பயல் said...

//கருப்பன்/Karuppan said...

//
இன்னைக்கு சனிக்கிழமை நாளைக்கு வெள்ளிக்கிழமைங்கற கோட் வேர்ட் சொன்னா அவர் இண்டர்வியூ நடக்கற இடத்துக்கு உங்களை கூப்பிட்டு வருவாரு
//
விப்ரோல கழுதைக்கு மனுஷவேஷம் போட்டு கூட்டிட்டு போனாக்கூட கம்ப்யூட்டர் ஜாப் கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஒரு வேளை அதை ஃபில்டர் பண்னுறதுக்குதான் இந்த கோட் வேர்டோ??//

இதெல்லாம் டூ டூ மச்... விப்ரோல எனக்கு தெரிஞ்சி டெக்னிக்கல் இண்டர்வியு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.

வெட்டிப்பயல் said...

//கிரி said...

ஹா ஹா ஹா நல்ல இருந்ததுங்க படிக்க. வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி கிரி :-)

வெட்டிப்பயல் said...

//ரசிகன் said...

//நான் வேணா முந்தா நேத்து சனிக்கிழமை நேத்து வெள்ளிக்கிழமைனு கோட் வேர்ட் சொல்றனே"//

:))))//

:)))))

கப்பி | Kappi said...

//ஒண்ணு அதிகமா போட்டிருக்கேன் //

அதெல்லாம் இருக்கட்டும்..மொதல்ல அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க :))

Anonymous said...

fyi

http://twitter.com/icarusprakash/statuses/820213621

Unknown said...

நானும் வெட்டிப்பயல் தான். இன்னா தல பண்ணுறது. ஊர் சுத்த உன்ன மாதிரி ஒரு ஆள் இல்லை. ஆமா நீ எங்க இருக்க. நானும் உன் கூட சுத்த வரேன்

Unknown said...

வெட்டி எங்க என் comment. பயப்படாதே. நான் உண் கூட ஊர் சுத்த வரமாட்டேன். என் வழி தனி வழி

ஜி said...

:)))

Anonymous said...

Kanavillai....Thanga Thalaivar VETTY Kanavillai .....Thaliva Adutha pagutih Eppo ...Roma porumaya sothikireenga

:((

Anbu

Ramya Ramani said...

நல்லா விருவிருப்பா போகுது கதை! அடுத்த பார்ட் போடுங்க! :))

Anonymous said...

where is part 5 vetti