நேத்து கப்பிக்கு கொடுத்த வாக்குறுதியை மீற கூடாதுனு படம் பார்க்க ஆரம்பிச்சேன். கடைசி வரைக்கும் பார்த்தேன். அஜித் படம்னாவே ஒரு பயம் தான். அது சிட்டிசன்ல ஏற்பட்டது. இன்னும் இருந்துட்டே இருக்கு. இந்த மாதிரி ஒரு 3-4 படம் நடிச்சா மாறிடும்னு நினைக்கிறேன்.
முதல்ல இந்த கதைல நடிச்சதுக்கு அஜித்தை பாராட்டனும். மலையாளத்துல ஹிட்டான கதைனாலும், வாழ்க்கைல தோக்கற ஒருத்தனா, கமெர்ஷியல் ஹீரோவான அஜித் இதுல நடிச்சது கண்டிப்பா ஒரு ஆச்சர்யம்தான். படத்துல அஜித்துக்கு சமமான பாத்திரம் ராஜ்கிரனுக்கு. பின்னி பெடலுடுத்திருக்கிறார். த்ரிஷா தெலுகு படத்துல நடிச்சி அழகாயிட்டாங்க (நல்லா மேக்கப் போட கத்துக்கிட்டாங்க).
ஆரம்பத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் நிஜமாலுமே சிரிக்க வைக்கிறது. சந்தானம் டபுள் மீனிங் ஜோக்ஸ் இல்லாம நடிச்சிருக்கார். யாருமே இல்லாத பஸ் ஸ்டாப்ல கூட்டமா இருக்குனு சொல்லி கூட்டமா இருக்கற ரெஸ்டாரண்டுக்கு கூப்பிட்டு போற சீன் சூப்பர். அதே மாதிரி தண்ணி தோட்டில த்ரிஷா பேசறதும், கீழ இருக்கறவங்க கேக்கறதும் நகைச்சுவை வர வைத்தது.
படத்துல பல இடங்களில் அஜித் நடிப்பில் மிளிர்கிறார். ஒரு சீன்னு சொல்ல முடியாது. பல இடங்களில் அவ்ர் முக பாவனை பல வசனங்களை நமக்கு சொல்லிவிடுகிறது. சில இடங்கள்ல வசனம் இல்லாததே ரொம்ப அருமையா இருந்துச்சு. ராஜ்கிரண் மாதிரி பல அப்பாக்கள் இன்னும் இருக்கத்தான் செய்றாங்க. ஒரு சிலருக்கு அது சிரிப்பை வர வைக்கலாம். ஆனா எனக்கு நினைவு தெரிஞ்சி நான் எங்க ஊர்ல இருந்து தனியா பஸ் ஏறி போற மாதிரி இருந்தா எங்க அப்பாதான் என்னை வந்து பஸ் ஏத்திவிடுவார். பெங்களூர்ல வேலைக்கு போகும் போது கூட வந்து என்னை பஸ் ஏத்திவிட்டு நான் கம்ஃபர்டபுல இருக்கனானு பார்த்து கண்டக்டரிடம் என்னை பத்திரமா இறக்கிவிட சொல்லி, (நான் எலக்ட்ரானிக் சிட்டில இறங்குவேன். தூங்கிட்டே போயிடுவனோனு ஒரு பயம்) தண்ணி பாட்டில், படிக்க ஏதாவது ஒரு புத்தகம் வாங்கி கொடுத்து பஸ் புறப்படும் வரை இருந்துவிட்டு தான் புறப்படுவார். இதுவரை அது மாறவே இல்லை. (இப்ப கூட ஃபிளைட்டுக்கு நான் கீழ இருந்தே உன் ஃபிளைட்ட பாக்க முடியுமானு கேட்டு என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டார்). சரி திரும்ப படத்துக்கு வருவோம்.
அப்படி ஒரு அப்பாவோ, குடும்பமோ இருக்கறது ஒரு சாதாரணமான விஷயம்தான். திரிஷாக்கு வேற இடத்துல கல்யாணம்னு சொன்னதுக்கப்பறம் அவுங்க கல்யாணத்தை ஒரு சோகப்பாட்டுல காட்டததுக்கு டைரக்டருக்கு ஒரு ஸ்பெஷன் நன்றி. க்ளைமாக்ஸ்ல அஜித் அழுவற சீன்ல பட்டைய கிளப்பியிருக்கார். படத்துல அஜித் வில்லன் கூட்டத்தை கண்டு ஓடுவதும், சண்டைக்கு ஏதாவது ஒரு தடியை பயன்படுத்துவதும் ஓரளவிற்கு இயல்பாக இருப்பதை போலவே பட்டது. தல தள படங்களை பார்ப்பதில்லை போலும்.
நீங்க சினிமா ரசிகரா இருந்தா கண்டிப்பா இந்த படம் பார்க்கலாம். படத்துல பாட்டு எல்லாம் இன்னும் நல்லா வந்திருந்தா இது கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். எப்படி பார்த்தாலும் இது தலைக்கு முள் கிரீடம் கிடையாது.
43 comments:
தைரியமா பாக்கலாங்கறீங்க?
இந்த வீக் எண்டு உங்கள நம்பி பாக்கப் போறேன்.
மலையாளக் கிரீடம் பாத்தீங்களா? அதப் பாருங்க. அசத்தலா இருக்கும் மோகன்லாலின் நடிப்பு.
லாலின் அப்பாவா நடிச்சவரு பின்னி பெடலெடுத்திருப்பாரு.
ஹ்ம்ம்ம்ம்
யாரைத்தான் நம்புவதோ! பேதை நெஞ்சம்!!.......
:-P
நல்ல விமிர்சன்ம் வெட்டி!! :-)
ஒருவேளை இந்த அப்பா செண்டிமெண்ட் தான் எனக்கு படம் பிடிக்க காரணமோ என்னவோ :))
நல்லவேளை உங்களுக்கும் பிடிச்சிருச்சு..இல்லன்னா உன்னால தானேடா மண்டையான்னு என் தலை உருண்டிருக்கும் :)))
பாக்கலாங்கறீங்க. என்னோட பார்க்கவேண்டிய listல வச்சுக்கறேன்.
படத்தோட முடிவையே விமர்சனத்தில் எழுதிட்டீங்க போலிருக்கு? பாவம் படத்தை எடுத்தவர்கள்!
//SurveySan said...
தைரியமா பாக்கலாங்கறீங்க?
இந்த வீக் எண்டு உங்கள நம்பி பாக்கப் போறேன்.
//
தாரளமா பாருங்க... ஆனா மலையாள படத்தோட கம்பேர் பண்ணாதீங்க. மோகன்லால் நடிப்போட யாரையும் கம்பேர் பண்ண முடியாது.
// மலையாளக் கிரீடம் பாத்தீங்களா? அதப் பாருங்க. அசத்தலா இருக்கும் மோகன்லாலின் நடிப்பு.
லாலின் அப்பாவா நடிச்சவரு பின்னி பெடலெடுத்திருப்பாரு. //
நான் பாக்கல. ஆனா கேள்விபட்டிருக்கேன். என்னுடைய பழைய ப்ராஜக்ட்மேட்டோட ஃபேவரைட் படம் அது...
//CVR said...
ஹ்ம்ம்ம்ம்
யாரைத்தான் நம்புவதோ! பேதை நெஞ்சம்!!.......
:-P
நல்ல விமிர்சன்ம் வெட்டி!! :-) //
பசங்க சொல்லி நீங்க எல்லாம் என்னைக்கு கேட்டிருக்கீங்க. என்னுமோ போங்க ;)
// kappi guy said...
ஒருவேளை இந்த அப்பா செண்டிமெண்ட் தான் எனக்கு படம் பிடிக்க காரணமோ என்னவோ :))
நல்லவேளை உங்களுக்கும் பிடிச்சிருச்சு..இல்லன்னா உன்னால தானேடா மண்டையான்னு என் தலை உருண்டிருக்கும் :))) //
kappi guy,
நீங்க எங்க கப்பி இல்லை போலிருக்கே...
கப்பிக்கே போலியா?
//Sathia said...
பாக்கலாங்கறீங்க. என்னோட பார்க்கவேண்டிய listல வச்சுக்கறேன். //
பொறுமையா பாருங்க. நல்ல ப்ரிண்ட் வந்ததுக்கப்பறம்.
// Balaji said...
படத்தோட முடிவையே விமர்சனத்தில் எழுதிட்டீங்க போலிருக்கு? பாவம் படத்தை எடுத்தவர்கள்! //
அங்க அங்க படத்தை அக்கு வேற ஆணி வேறையா பிரிச்சி மெய்ஞ்சிட்டாங்க. இதுல நாம சொல்லி என்ன ஆகப்போகுது...
பாலாஜி...
முள் கிரீடமே இல்லை.
முத்துக் கிரீடம்!
தல வாயால பேஸ்வேன் பேஸ்வேன் என்றெல்லாம் பேசாமல், கண்ணுலயே உணர்ச்சிய காட்டறாரு!
ஒரு மெட்டூரிட்டி தெரியுது படம் முழுக்க!
//த்ரிஷா தெலுகு படத்துல நடிச்சி அழகாயிட்டாங்க//
என்ன இருந்தாலும் வுட்டுக் கொடுக்க மாட்டீங்களே! :-)
நான் த்ரிஷாவைச் சொல்லலை
தெலுங்கைச் சொன்னேன்!
//எங்க அப்பாதான் என்னை வந்து பஸ் ஏத்திவிடுவார். பெங்களூர்ல வேலைக்கு போகும் போது கூட வந்து என்னை பஸ் ஏத்திவிட்டு நான் கம்ஃபர்டபுல இருக்கனானு பார்த்து கண்டக்டரிடம் என்னை பத்திரமா இறக்கிவிட சொல்லி//
பாலாஜி
நீங்களும் நம் இன்னொரு சக பதிவர் மாதிரி...."நான் பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகன்" -ன்னு எல்லாம் சொல்ல வரலீயே? :-)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பாலாஜி...
முள் கிரீடமே இல்லை.
முத்துக் கிரீடம்!
தல வாயால பேஸ்வேன் பேஸ்வேன் என்றெல்லாம் பேசாமல், கண்ணுலயே உணர்ச்சிய காட்டறாரு!
ஒரு மெட்டூரிட்டி தெரியுது படம் முழுக்க!
//
ரொம்ப சரி...
மோர் ஓவர் எனக்கு தல படம்னாவே ஒரு திகில் தான். ஆனா இதுல அவர் நடிப்பு நிஜமாலுமே நல்லா இருந்துச்சி...
//
//த்ரிஷா தெலுகு படத்துல நடிச்சி அழகாயிட்டாங்க//
என்ன இருந்தாலும் வுட்டுக் கொடுக்க மாட்டீங்களே! :-)
நான் த்ரிஷாவைச் சொல்லலை
தெலுங்கைச் சொன்னேன்! //
யாருக்கு யாரை விட்டு கொடுக்கறது. எங்க இருந்தாலும் அழகா இருந்தா சரிதான் ;)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//எங்க அப்பாதான் என்னை வந்து பஸ் ஏத்திவிடுவார். பெங்களூர்ல வேலைக்கு போகும் போது கூட வந்து என்னை பஸ் ஏத்திவிட்டு நான் கம்ஃபர்டபுல இருக்கனானு பார்த்து கண்டக்டரிடம் என்னை பத்திரமா இறக்கிவிட சொல்லி//
பாலாஜி
நீங்களும் நம் இன்னொரு சக பதிவர் மாதிரி...."நான் பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகன்" -ன்னு எல்லாம் சொல்ல வரலீயே? :-) //
எங்க அப்பா அப்படி நினைச்சிருக்கலாம் ;)
பாத்தாச்சி
என்ன இருந்தாலும் வீராச்சாமி அளவுக்கு இல்லை :)
மலையாளத்தில் பெருவெற்றி பெற்ற படம். திலகனும் மோகன்லாலும் கலக்கிய படம். அதை எடுத்துச் செய்வதற்கே துணிச்சல் வேண்டும். அதற்காக அஜீத்தைப் பாராட்டுவோம். தெலுங்கிலிருந்து மசாலப் படத்தை இறக்குமதி செய்து வெற்றி முரசு கொட்டுவதை விட இந்த முயற்சிகள் தாவலாம். ஆனால் நம்மவர்கள் ரசனை என்று ஒன்று இருக்கிறதே. கேரள சதயத்தை விட ஆந்திர கோங்குரா சுவையாகப் படுகிறது என்று நினைக்கிறேன்.
//மின்னுது மின்னல் said...
பாத்தாச்சி
என்ன இருந்தாலும் வீராச்சாமி அளவுக்கு இல்லை :) //
இது ஓவர்...
வீராச்சாமி ஹாலிவுட் படம். இது கோலிவுட் படம். ரெண்டுத்துக்கும் வித்யாசமிருக்கு ;)
//G.Ragavan said...
மலையாளத்தில் பெருவெற்றி பெற்ற படம். திலகனும் மோகன்லாலும் கலக்கிய படம். அதை எடுத்துச் செய்வதற்கே துணிச்சல் வேண்டும். அதற்காக அஜீத்தைப் பாராட்டுவோம். தெலுங்கிலிருந்து மசாலப் படத்தை இறக்குமதி செய்து வெற்றி முரசு கொட்டுவதை விட இந்த முயற்சிகள் தாவலாம். ஆனால் நம்மவர்கள் ரசனை என்று ஒன்று இருக்கிறதே. கேரள சதயத்தை விட ஆந்திர கோங்குரா சுவையாகப் படுகிறது என்று நினைக்கிறேன். //
ஆமாம் ஜி.ரா.
அதுக்கே அஜித்தை பாராட்டியாகனும்.
மசாலா எப்பவுமே ருசிதான். ஹைதிராபாதி பிரியாணி மாதிரி வருமா?
இதுலயும் அவர் கடைசியா போலிஸ் ஆகற மாதிரி எடுத்திருந்தா தில் மாதிரி ஆகியிருக்கும். சில சீன்ஸ் கடப்பேத்தர மாதிரி இருந்தாலும் பல சீன்ஸ் அஜித் நடிப்பும், ராஜ்கிரண் நடிப்பும் நம்மை சந்தோஷப்படுத்துகின்றன.
சிலர் நல்லா இல்லேன்னு சொன்னாங்க வெட்டி. முக்கியமா, ராசா. அவர் ஒரு அஜீத் ரசிகர். ஆனா படம் அவருக்கு புடிக்கல. ரசிகர் இல்லாதவங்க நல்லா இருக்குன்னு சொல்றாங்க, நீங்களுமா? என்ன ஒன்னும் தில்லா படம் பார்க்கலாம். அது இது ன்னு கைய நீட்டாத எல்லா அஜீத் படமும் பார்க்கிற மாதிரிதான் இருக்கு.
விளம்பரம் ஒண்ணுப் போட்டுக்கறேன்... த்ரிஷா ரசிகர்களை அஜீத்துக்கு எதிராக விஜய் தூண்டினாரா ;)
//ILA(a)இளா said...
சிலர் நல்லா இல்லேன்னு சொன்னாங்க வெட்டி. முக்கியமா, ராசா. அவர் ஒரு அஜீத் ரசிகர். ஆனா படம் அவருக்கு புடிக்கல.
//
அது தான் மேட்டரே.. படத்துல ஹீரோயிசம், தக்காளி ரசம்னு ப்ளேடு போடல.
// ரசிகர் இல்லாதவங்க நல்லா இருக்குன்னு சொல்றாங்க, நீங்களுமா? என்ன ஒன்னும் தில்லா படம் பார்க்கலாம். அது இது ன்னு கைய நீட்டாத எல்லா அஜீத் படமும் பார்க்கிற மாதிரிதான் இருக்கு. //
அந்த தைரியத்துலதான் படம் பார்க்கவே ஆரம்பிச்சேன். நல்ல படம். தாராளமா பார்க்கலாம். அஜித் ஆக்டிங் அருமை. வேற என்ன சொல்ல?
//Boston Bala said...
விளம்பரம் ஒண்ணுப் போட்டுக்கறேன்... த்ரிஷா ரசிகர்களை அஜீத்துக்கு எதிராக விஜய் தூண்டினாரா ;) //
தெய்வமே,
எப்படி உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது?
கட கடனு எல்லாத்தையும் அப்டேட் பண்ணி வெச்சிருக்கீங்க? ஒண்ணு ஒண்ணா பார்க்கலாம். எல்லாம் என்ன சொல்லியிருக்காங்கனு
முடிவு மாறிட்டு தல :)
மலையாள கிரீடம் -> ஹிந்தி கர்திஷ் -> தமிழ் கிரீடம்
best -> better -> good
//இந்த மாதிரி ஒரு 3-4 படம் நடிச்சா மாறிடும்னு நினைக்கிறேன்.//
நெனப்பு பொழப்பைக் கெடுக்காம இருந்தா சரிதான் :-))
Four Ants are moving through a forest.
They see an ELEPHANT coming towards them. Ant 1 says : we should KILL him.
Ant 2 says : No, Let us break his Leg alone. Ant 3 says : No, we will just throw him away from our path.
Ant 4 says : No, we will LEAVE him because he is ALONE and we are FOUR.
இது பபா அல்லது பீபா சங்கத்தை குறிப்பிடுவது அல்ல, அல்ல..., அல்ல
மங்களூர் சிவா
//kappi guy,
நீங்க எங்க கப்பி இல்லை போலிருக்கே...
கப்பிக்கே போலியா?//
அது நான்தான்ண்ணே :)
//kappi guy,
நீங்க எங்க கப்பி இல்லை போலிருக்கே...
கப்பிக்கே போலியா?//
அது நான்தாண்ணே :)
// மலையாள கிரீடம் -> ஹிந்தி கர்திஷ் -> தமிழ் கிரீடம்
best -> better -> good //
ஆ!!! இப்படியா ஒப்பிடுவது?
இன்னமும் தமிழ் கிரீடம் பார்க்கவில்லை. ஆனால், மலையாளத்திலும் (திரையிலும், பின்னர் சொந்தமாக சி.டி.யிலும்) கர்திஷ் திவிசிடியிலும் பார்த்திருக்கிறேன். ஹிந்தியில் படத்தை அப்படியே தலைகீழாகப் போட்டு புரட்டி இருப்பார்கள் - ஜாக்கி ஷெரஃபின் பிம்பத்துக்குத் தகுந்த மாதிரி. 'அம்மா தேக்' என்ற ஒரு பாடல் தான் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் படத்தைப் பார்த்து நொந்து போனது தான் மிச்சம்.
அஜித்தின் கிரீடத்தின் சில காட்சிகளை தொலைகாட்சியின் தயவால் பார்க்க நேர்ந்தது. பார்த்த வரையிலும் சிறப்பாக செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
மோகன்லாலுடன் ஒப்பிட்டு அஜித்தைப் பார்ப்பது சரியல்ல. மலையாளத்தில் ஒரு கதாநாயகனுக்குள்ள அனுகூலம் (இயல்பான தோற்றம், உடைகள், சுற்றுச் சூழல் என பல...அவற்றை விரும்பவும் செய்யும் மலையாள ரசிகர்கள்.) ஆனால் அஜித் தன் பிம்பத்த்தில் தானே சிறைபட்டுக் கொண்ட ஒரு நல்ல நடிகர். நடுவே எடுப்பார் கைப்பிள்ளையாகி சில மோசமான படங்கள் செய்தார். சிட்டிசன் உட்பட.
ஆனால், முகவரி என்ற படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
வெற்றி பெறாத நாயகனாக.
தன் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக தன் கனவுகளைத் தற்காலிகமான ஒரு ஒத்திவைப்பில் இழப்பதன் மூலம், ஒரு நல்ல நடிகனாகப் பரிமாணித்திருந்தார்.
ஆனால், பின்னர் எங்கோ வழி தவறி விட்டார்.
கிரீடம் - ஷாலினியின் Choiceஆ? பார்க்கலாம் - அஜித்தை ஷாலினி எவ்வாறு வழி நடத்திச் செல்கிறார் என்று.
அன்புடன்,
நண்பன்
பாலாஜி,
படம் பார்த்தாச்சு...முகவரிக்கு பிறகு வேறொ ஒரு தளத்தில் முடிவை காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ளாமல் இயல்பாக சொல்லி இருக்காங்க.
உங்கள் விமர்சனமும் 100% விழுக்காடு நன்றாகவே இருக்கு !
வெட்டி,
இப்ப க்ளைமாக்ஸை அஜித் போலிஸ் ஆகற மாதிரி மாதிட்டாங்க. அஜித் ஒழுங்கா ஒரு படம் நடிச்சா அதுவும் இப்படி ஆயிடுச்சு.
படம் பாத்தாச்சு.
அஜித் ஜெயிலுக்கு போர versionதான் பாத்தேன். நல்லாவே இருந்தது.
மலையாளத்திலிருந்து அப்படியே லிப்ட் இல்லாமல், கொஞ்சம் மசாலா பூசியே எடுத்திருக்காங்க.
இப்ப க்ளைமாக்ஸ மாத்தி, சொதப்பிட்டாங்களாமே?
//த்ரிஷா தெலுகு படத்துல நடிச்சி அழகாயிட்டாங்க //இதெல்லாம் ரொம்ப ஒவரு ராசா..
ப்ரச்சனை என்னான்னா, ஒரு படம் ஹிட் ஆயிட்டா உடனே திரும்பவும் நம்ம மக்கள் காமெராவை பாத்து விரலை சொடக்கி பேச ஆரம்பிச்சுடுவாங்க. அது மாதிரி இல்லாம அஜித் இப்படியே தொடர்ந்தா நல்லாத்தான் இருக்கும். ஹ்ம்ம்... பாப்போம்.
//சும்மா அதிருதுல said...
முடிவு மாறிட்டு தல :) //
அதானே! எப்படி அஜித படம் நல்லாயிருக்கலாம்.
நல்லா இருங்கடே...
//சுதர்சன்.கோபால் said...
மலையாள கிரீடம் -> ஹிந்தி கர்திஷ் -> தமிழ் கிரீடம்
best -> better -> good
//
மோகன் லாலோட அஜித் ஆக்டிங்கை கம்பேர் பண்ண முடியாது. அதுவுமில்லாம மலையாள படம் கொஞ்சம் மசாலா கம்மியா இருக்கும்.
//
//இந்த மாதிரி ஒரு 3-4 படம் நடிச்சா மாறிடும்னு நினைக்கிறேன்.//
நெனப்பு பொழப்பைக் கெடுக்காம இருந்தா சரிதான் :-)) //
நீங்க கடைசி மூணு வருஷமா தல படம் பாக்கறதே இல்லையா???
//கப்பி பய said...
//kappi guy,
நீங்க எங்க கப்பி இல்லை போலிருக்கே...
கப்பிக்கே போலியா?//
அது நான்தாண்ணே :) //
என்னுமோ நல்லா இருந்தா சரிதான்...
//நண்பன் said...
// மலையாள கிரீடம் -> ஹிந்தி கர்திஷ் -> தமிழ் கிரீடம்
best -> better -> good //
ஆ!!! இப்படியா ஒப்பிடுவது?
இன்னமும் தமிழ் கிரீடம் பார்க்கவில்லை. ஆனால், மலையாளத்திலும் (திரையிலும், பின்னர் சொந்தமாக சி.டி.யிலும்) கர்திஷ் திவிசிடியிலும் பார்த்திருக்கிறேன். ஹிந்தியில் படத்தை அப்படியே தலைகீழாகப் போட்டு புரட்டி இருப்பார்கள் - ஜாக்கி ஷெரஃபின் பிம்பத்துக்குத் தகுந்த மாதிரி. 'அம்மா தேக்' என்ற ஒரு பாடல் தான் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் படத்தைப் பார்த்து நொந்து போனது தான் மிச்சம்.
அஜித்தின் கிரீடத்தின் சில காட்சிகளை தொலைகாட்சியின் தயவால் பார்க்க நேர்ந்தது. பார்த்த வரையிலும் சிறப்பாக செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
மோகன்லாலுடன் ஒப்பிட்டு அஜித்தைப் பார்ப்பது சரியல்ல. மலையாளத்தில் ஒரு கதாநாயகனுக்குள்ள அனுகூலம் (இயல்பான தோற்றம், உடைகள், சுற்றுச் சூழல் என பல...அவற்றை விரும்பவும் செய்யும் மலையாள ரசிகர்கள்.) ஆனால் அஜித் தன் பிம்பத்த்தில் தானே சிறைபட்டுக் கொண்ட ஒரு நல்ல நடிகர். நடுவே எடுப்பார் கைப்பிள்ளையாகி சில மோசமான படங்கள் செய்தார். சிட்டிசன் உட்பட.
ஆனால், முகவரி என்ற படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
வெற்றி பெறாத நாயகனாக.
தன் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக தன் கனவுகளைத் தற்காலிகமான ஒரு ஒத்திவைப்பில் இழப்பதன் மூலம், ஒரு நல்ல நடிகனாகப் பரிமாணித்திருந்தார்.
ஆனால், பின்னர் எங்கோ வழி தவறி விட்டார்.
கிரீடம் - ஷாலினியின் Choiceஆ? பார்க்கலாம் - அஜித்தை ஷாலினி எவ்வாறு வழி நடத்திச் செல்கிறார் என்று.
அன்புடன்,
நண்பன் //
சரியா சொல்லியிருக்கீங்க. மலையாள கிரீடமுக்கு இணையா மலையாளத்துலே படமில்லைனு சொல்ற மல்லூஸ் எனக்கு தெரியும். அதோட இதை ஒப்பிட்டு பார்க்க முடியாது. மத்த அஜித படத்தோட பார்த்தா இது தேவலை...
//கோவி.கண்ணன் said...
பாலாஜி,
படம் பார்த்தாச்சு...முகவரிக்கு பிறகு வேறொ ஒரு தளத்தில் முடிவை காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ளாமல் இயல்பாக சொல்லி இருக்காங்க.
உங்கள் விமர்சனமும் 100% விழுக்காடு நன்றாகவே இருக்கு ! //
மிக்க நன்றி கோவி...
முடிவ மாத்திட்டானுங்களாம் :-)))))
//Simply Senthil said...
வெட்டி,
இப்ப க்ளைமாக்ஸை அஜித் போலிஸ் ஆகற மாதிரி மாதிட்டாங்க. அஜித் ஒழுங்கா ஒரு படம் நடிச்சா அதுவும் இப்படி ஆயிடுச்சு. //
அழுவறதா சிரிக்கறதானே தெரியல :-/
//SurveySan said...
படம் பாத்தாச்சு.
அஜித் ஜெயிலுக்கு போர versionதான் பாத்தேன். நல்லாவே இருந்தது.
மலையாளத்திலிருந்து அப்படியே லிப்ட் இல்லாமல், கொஞ்சம் மசாலா பூசியே எடுத்திருக்காங்க.
இப்ப க்ளைமாக்ஸ மாத்தி, சொதப்பிட்டாங்களாமே? //
ஆமாம் கேள்விப்பட்டேன்... மக்கள் ரசனை இப்படித்தானு முடிவு பண்ணிட்டாங்க போல.
அப்ப அடுத்து தல விரல சொடுக்க ஆரம்பிச்சிடும்...
// லக்ஷ்மி said...
//த்ரிஷா தெலுகு படத்துல நடிச்சி அழகாயிட்டாங்க //
இதெல்லாம் ரொம்ப ஒவரு ராசா..
//
ஹி ஹி ஹி...
அக்கா, இதெல்லாம் கண்டுக்ககூடாது
// ப்ரச்சனை என்னான்னா, ஒரு படம் ஹிட் ஆயிட்டா உடனே திரும்பவும் நம்ம மக்கள் காமெராவை பாத்து விரலை சொடக்கி பேச ஆரம்பிச்சுடுவாங்க. அது மாதிரி இல்லாம அஜித் இப்படியே தொடர்ந்தா நல்லாத்தான் இருக்கும். ஹ்ம்ம்... பாப்போம். //
இனிமே விரல சொடுக்கனா கொஞ்ச நாளைக்கு பிழைக்கறது கஷ்டம் தான். அஜித் நடிப்பே போதும். இந்த ஸ்டைல், ஹீரோயிஸமே வேண்டாம் அவருக்கு...
mugavari-ku apparam practical-a oru character.. nalla senjirukkaru thala and rajkiran.
onnu gavanichingala? rendu padathukkum double climax.. vaazga jananaayagam :)
இவனெல்லாம் நடிக்கனும்னு யாரு அழுதாங்க?டப்பிங்காவது வேற ஒருத்தன பேசச்சொல்லித்தொலையலாம்.அப்பா சாமி......... முடியல
தலை அட்டகாசமா பண்ணியிருக்க படம்.. எல்லாப் படங்களைப் போல சில குறைகள் இருந்தாலும், தரத்திலும் இயல்பான காட்சியமைபுகளும் ரசிக்கவே வைக்கின்றன..
ஆனால், அஜித் படம் என்றாலே அதில் ஏதாவது குறை சொல்வது, கண்டுபிடிப்பதையுமே தொழிலாய் வைத்திருப்பவர்கள் பற்றி என்ன சொல்வது..
நல்ல விமர்சனம் வெட்டி.
Post a Comment