தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, July 18, 2007

நடிப்புக் கடவுள்

கைலாயத்தில் ஈசன் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார்.

பார்வதி: ஸ்வாமி! தாங்கள் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதன் காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?

ஈசன்: உமா! உனக்கு தெரியாததில்லை. என் பக்தன் ஈசானபட்டன் ஒரு வாரமாக அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் எம்மை தேடி கொண்டிருக்கிறான். இன்னும் அவன் அந்த இடத்தை நெருங்கக்கூட இல்லை.

பார்வதி: அவர் கனவில் தோன்றிய தாங்களே சரியான இடத்தை சொல்லியிருந்தால் அவர் இந்நேரம் ஆலயமே கட்ட ஆரம்பித்திருப்பார்.

ஈசன்: உமா! கஷ்டப்படாமல் கிடைக்கும் பொருளின் அருமை என்றுமே உணரப்படுவதில்லை. உனக்கு தெரியாதா என்ன? இன்றே அவருக்கு நாம் காட்சியளிப்போம். நீ கவலைப்படாதே.

பார்வதி: உங்கள் திருவிளையாடலால் நன்மை நடந்தால் சரி...

..........................

ஈசன்: தேவதத்தா! உன்னால் எனக்கு ஒரு காரியமாக வேண்டும். அதற்காகவே யாம் உன்னை இங்கே அழைத்தோம்!!!

தேவதத்தன்: கட்டளையிடுங்கள் ஸ்வாமி

ஈசன்: அதோ பார்...
என் பக்தன் ஈசானபட்டன் என்னை தேடி ஒரு வாரமாக அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் அலைந்து கொண்டிருக்கிறான். நீ அவன் முன் புலியாக தோன்றி அவனை அதோ அந்த காவிரி கரையை நோக்கி வர வைக்க வேண்டும். அங்கே அவன் தானாக எம்மை சந்திப்பான். அப்போது நீ மறைந்துவிட வேண்டும். புரிகிறதா?

தேவதத்தன்: நன்றாக புரிகிறது ஸ்வாமி.. இதோ புறப்படுகிறேன்.

புலியாக மாறிய தேவதத்தன், ஈசானபட்டரை துறத்த ஆரம்பித்தான். பசியால் உடல் இளைத்தாலும், ஈசன் கட்டளையிட்ட பணியை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, உயிர் பிழைக்க வேகமாக ஓடினார் ஈசானப்பட்டர். திடீரென அவர் கால் ஒரு கல்லில் (சிவலிங்கம்) தடுக்கிவிட கீழே விழுந்தார் ஈசானப்பட்டர். புலியாக வந்த தேவதத்தன் தன்னை மறந்து ஈசானபட்டர் மேல் பாய்ந்தான். ஈசானபட்டர் மேல் புலி நகங்கள் பட உதிரம் எட்டி பார்த்தது. தன் பக்தனின் உடலிலிருந்து வந்த உதிரம் தரையில் வீழ்வதற்குள் லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட ஈசன் புலியின் மேல் தன்னுடைய சூலத்தை பாய்ச்சினார். தேவதத்தன் தன் சுய உருவை அடைந்து அங்கே நிகழ்ந்ததை உணர்ந்து அதிர்ச்சிக்குள்ளானான்.

ஈசன்: தேவதத்தா! என் பக்தனை கொல்ல உனக்கு எவ்வளவு துணிச்சல். அவன் இரத்தம் சிந்த காரணமான நீ இந்த பூவுலகில் மனிதனாக பிறக்கக்கடவாய்!

தேவதத்தன்: ஸ்மாமி! என்னை மன்னித்தருளுங்கள். புலியாக உருவெடுத்தப்பின் நான் யாரென்பதையே மறந்துவிட்டேன். புலியின் குணங்கள் முழுதும் பெற்றதால் செய்வதறியாமல் தவறிழைத்துவிட்டேன். மன்னித்தருளுங்கள் ஸ்மாமி. இந்த ஏழைக்கு இரக்கம் காட்டுங்கள்.

ஈசன்: தேவதத்தா! நீ செய்த பாவத்திற்கு பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஈசனப்பட்டரின் காயங்கள் மறைந்தன. அவருக்கு அருள் புரிந்துவிட்டு ஈசன் மறைந்தார்.

..................................

பார்வதி: ஸ்மாமி! இது என்ன அநியாயம்? உங்களுக்கு உதவ வந்த தேவதத்தனுக்கு இப்படி ஒரு அநீதி இழைத்துவிட்டீர்களே!

ஈசன்: உமா! நான் யாருக்கும் என்றும் அநீதி இழைப்பதில்லை. தேவதத்தனின் புகழை பரப்பவே யாம் இதை செய்தோம். புலியாக மாறிய அவன் புலியாகவே ஆனான். நடிப்பில் அவனை மிஞ்ச யாருமில்லை. பூமியில் பிறக்கும் அவன் மக்களை தன் நடிப்பால் மகிழ்விப்பான். நடிப்பு கலையை உலகுக்கு சொல்லி தருவான். என் திருவிளையாடலைக்கூட மக்களுக்கு நடித்து காட்டுவான். அவனே நடிப்புக் கடவுளாவான்... ஆமாம் அவனே நடிப்புக் கடவுள்.

(வரும் ஜீலை 21 நடிப்புக் கடவுளின் நினைவு தினம்... அதை முன்னிட்டு எழுதிய பதிவு)







சில காட்சிகள்








49 comments:

Unknown said...

நான் தான் ஃப்ஸ்ட்.

ILA (a) இளா said...

ahaha,, enna kadhai. Superapppu

ஜோ/Joe said...

//வரும் ஜீலை 21 நடிப்புக் கடவுளின் நினைவு தினம்//

அது!
வாழ்க நடிகர் திலகம் புகழ்!

CVR said...

பரமசுவரனில் இருந்து கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன் என்று நம் அனைவரின் கற்பனையிலும் அந்தந்த பாத்திரமாகவே வாழ்ந்தவர்!!!
நல்ல பதிவு வெட்டி!!!
உங்கள் மரியாதையை நல்ல வித்தியாசமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!!!
வாழ்த்துக்கள்!!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

த: பிரிக்க முடியாதது என்னவோ?
ஈ: வெட்டியும் லொள்ளும்!

த: பிரியக் கூடாதது?
ஈ: வெட்டியும் பதிவும்

த: சேர்ந்தே இருப்பது?
ஈ: வெட்டியும் கற்பனையும்!:-)

//புலியாக மாறிய அவன் புலியாகவே ஆனான். நடிப்பில் அவனை மிஞ்ச யாருமில்லை//

"புலி போல்" என்று சொன்னால்
"புலியாகவே" வந்தான்!
அவனே நடிப்புக்கு இலக்கணம்! திலகம்! சிவாஜியின் புகழ் என்றென்றும் நிற்கும்! நினைவு நாள் அஞ்சலிகள்!

கப்பி | Kappi said...

நல்ல கற்பனை!! நல்ல பதிவு வெட்டி! :)

ரவி said...

Good Imagination...Nall Post...Nall Ninaivu kooral...!!!

Arunkumar said...

Super imagination Vetti.. Hats off..

vaazga nadigar thilagam sivaji !!

வெட்டிப்பயல் said...

//நெல்லை காந்த் said...

நான் தான் ஃப்ஸ்ட். //

போஸ்ட படிச்சிங்களா?

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

ahaha,, enna kadhai. Superapppu //

மிக்க நன்றி விவா...

வெட்டிப்பயல் said...

//ஜோ / Joe said...

//வரும் ஜீலை 21 நடிப்புக் கடவுளின் நினைவு தினம்//

அது!
வாழ்க நடிகர் திலகம் புகழ்! //

நன்றி ஜோ!!!
விரும்புவதும் அதே...

வெட்டிப்பயல் said...

//CVR said...

பரமசுவரனில் இருந்து கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன் என்று நம் அனைவரின் கற்பனையிலும் அந்தந்த பாத்திரமாகவே வாழ்ந்தவர்!!!
நல்ல பதிவு வெட்டி!!!
உங்கள் மரியாதையை நல்ல வித்தியாசமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!!!
வாழ்த்துக்கள்!!! :-)
//

நடிகர் திலகத்தால் தான் பல நல்லவர்களை நான் அறிந்து கொண்டேன்...

Unknown said...

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவைப் போற்றும் ஒரு நல்ல பதிவு வெட்டி.

அனுசுயா said...

ஆகா வெட்டி தலைப்பு பார்த்துட்டு வழக்கம்போல சிரிப்பு பதிவுனு நினைச்சேன். ஆனா படிச்சு பார்த்தாதான் தெரியுது சீரியஸ் பதிவு ஆழமான கருத்துள்ள பதிவு நல்ல கற்பனை கலக்கறீங்க. அப்படியே நடிகர் திலகத்துக்கு ஒரு வணக்கம்

Sumathi. said...

ஹாய் வெட்டி,

பிரிக்க முடியாதது என்னவோ? வெட்டியும் லொள்ளும்!

சேர்ந்தே இருப்பது?
வெட்டியும் கற்பனையும்!:-)

நீங்கல்லாம் சிவாஜிய கூட ரசிப்பீங்களா?
ஏன்னா அவரு ரொம்ம்ப பழைய ஆளாச்சே.. அதுமில்லாம அவரோட பழைய படங்கல்லாம் ரொம்ம்ப நல்லாவே இருக்கும். இப்ப அதெல்லாம் யாரு ரசிக்கறாங்க.. அதனால தான் கேட்டேன்.

உங்களோட இந்த பதிவு கற்பனையானாலும் நிஜமாவே நல்லாயிருந்தது.

Anonymous said...

Its very impressive article with brilliant vision. However, its a story, but it reveals great truth and potentiality of "Sivaji The Great". Hats off Vetti...

வெ. ஜெயகணபதி said...

பாலாஜி, அற்புதமான பதிவு...

நடிகர் திலகத்தின் ஆளுமைக்கு உங்களின் இந்த பதிவு ஒரு பெரிய விருது...

தமிழக மக்களின் நினைவலைகளில் இருந்து என்றென்றும் மாறாது அவரின் உருவம்....( கப்பலோட்டிய தமிழனாக, பாரதியாக, சிவனாக, ராஜராஜசோழனாக இன்னும் எத்தனை எத்தனயோ உருவங்களில்... )

நன்றி பாலாஜி...

Anonymous said...

We are gestating an exclusive article about The Acting Don Sivaji from his devotee Mr.Joe.
Joe, could you do this task for us?

Anonymous said...

என்னாங்க சிவாஜியப் போயி நடிப்புக்
கடவுள்னு சொல்றீங்க.

இப்போ சிவாஜின்னா அது ரஜினிதான்.

அப்போ ரஜினி நடிப்புக்கடவுளா?

TBCD said...

Adutha thalaimuraikum, aduthu varugindra thalimuraikum thalai maganai vilagum, vilangapogum , nadippu thayin muthal magan...
Valarga Sivaji avargalin Pugal..

Anonymous said...

எப்படிங்க இப்டி ??? அமெரிக்காவுல ரூம் போட்டு யோசிச்சா வருமோ ;)

ரசித்தேன் :)

சிநேகிதன்.. said...

வாழ்க நடிகர் திலகம் புகழ்!!
அருமையான பதிவு!! அருமையான video clips ...

G.Ragavan said...

சூப்பர். சூப்பர். சூப்பர். இப்ப ஆபீசுக்கு ஓடுறேன். வந்து பின்னூட்டம் போடுறேன்.

நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமைக்கு எனது வணக்கங்கள்.

ஜெகதீசன் said...

நல்ல பதிவு!!!!
உங்கள் படைப்புகள் அனைத்தும் நன்றாக உள்ளது...
நான் தமிழ் பதிவுலகத்திற்குப் புதியவன்..

இப்பொழுது உங்கள் விசிறி ஆகிவிட்டேன்...

விரைவில் நானும் பதிவுகளை எழுதத் தொடங்குவேன்....

Unknown said...

சூப்பர் பதிவு.'சிவாஜி'யே நடிப்புக் கடவுள்..வாழ்க 'சிவாஜி' (In a lighter vein:)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

த: பிரிக்க முடியாதது என்னவோ?
ஈ: வெட்டியும் லொள்ளும்!

த: பிரியக் கூடாதது?
ஈ: வெட்டியும் பதிவும்

த: சேர்ந்தே இருப்பது?
ஈ: வெட்டியும் கற்பனையும்!:-)
//

ஆஹா...
நானே கூச்சப்படற அளவுக்கு புகழறீங்க...

//
//புலியாக மாறிய அவன் புலியாகவே ஆனான். நடிப்பில் அவனை மிஞ்ச யாருமில்லை//

"புலி போல்" என்று சொன்னால்
"புலியாகவே" வந்தான்!
அவனே நடிப்புக்கு இலக்கணம்! திலகம்! சிவாஜியின் புகழ் என்றென்றும் நிற்கும்! நினைவு நாள் அஞ்சலிகள்! //

அதே அதே!!!

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

நல்ல கற்பனை!! நல்ல பதிவு வெட்டி! :) //

மிக்க நன்றி கப்பி...

வெட்டிப்பயல் said...

//செந்தழல் ரவி said...

Good Imagination...Nall Post...Nall Ninaivu kooral...!!! //

மிக்க நன்றி ரவி அண்ணா...

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

Super imagination Vetti.. Hats off..

vaazga nadigar thilagam sivaji !! //

மிக்க நன்றி அருண்...

வெட்டிப்பயல் said...

//தேவ் | Dev said...

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவைப் போற்றும் ஒரு நல்ல பதிவு வெட்டி. //

மிக்க நன்றி தேவ்!!!

வெட்டிப்பயல் said...

//அனுசுயா said...

ஆகா வெட்டி தலைப்பு பார்த்துட்டு வழக்கம்போல சிரிப்பு பதிவுனு நினைச்சேன்.//
எப்பவுமே சிரிப்பா எழுத முடியுமா? அப்ப அப்ப வெரைட்டியா எழுதனா தான் எல்லாரும் படிப்பாங்க ;)

//
ஆனா படிச்சு பார்த்தாதான் தெரியுது சீரியஸ் பதிவு ஆழமான கருத்துள்ள பதிவு நல்ல கற்பனை கலக்கறீங்க. அப்படியே நடிகர் திலகத்துக்கு ஒரு வணக்கம் //
மிக்க நன்றி...

நடிகர் திலகத்திற்கு இணை யாருமில்லை...

வெட்டிப்பயல் said...

// Sumathi. said...

ஹாய் வெட்டி,

பிரிக்க முடியாதது என்னவோ? வெட்டியும் லொள்ளும்!

சேர்ந்தே இருப்பது?
வெட்டியும் கற்பனையும்!:-)
//
மிக்க நன்றி...

//
நீங்கல்லாம் சிவாஜிய கூட ரசிப்பீங்களா?
ஏன்னா அவரு ரொம்ம்ப பழைய ஆளாச்சே.. அதுமில்லாம அவரோட பழைய படங்கல்லாம் ரொம்ம்ப நல்லாவே இருக்கும். இப்ப அதெல்லாம் யாரு ரசிக்கறாங்க.. அதனால தான் கேட்டேன்.
//

நான் சிவாஜியோட தீவிர ரசிங்கங்க... அவரோட பலே பாண்டியா, தெய்வ மகன், ஆண்டவன் கட்டளை, பரா சக்தி, சபாஷ் மீனா.. வேணாங்க சொன்னா பதிவு தாங்காது... அத்தன படத்தையும் பல தடவை பார்த்திருக்கேன்

//
உங்களோட இந்த பதிவு கற்பனையானாலும் நிஜமாவே நல்லாயிருந்தது. //
மிக்க நன்றி...

வெட்டிப்பயல் said...

// Rasigan said...

Its very impressive article with brilliant vision. However, its a story, but it reveals great truth and potentiality of "Sivaji The Great". Hats off Vetti... //

மிக்க நன்றி ரசிகன்...

வெட்டிப்பயல் said...

// Jeyaganapathi said...

பாலாஜி, அற்புதமான பதிவு...
//
மிக்க நன்றி ஜெயகணபதி...

//
நடிகர் திலகத்தின் ஆளுமைக்கு உங்களின் இந்த பதிவு ஒரு பெரிய விருது...
//
அவருக்கு கிடைக்க வேண்டிய பல விருதுகள் கிடைக்காததால் அந்த விருதுகளின் புகழ் குறைந்தன...

சிவாஜிக்கு கொடுத்ததால் தான் செவாலியே விருதுக்கு பெருமை...

//
தமிழக மக்களின் நினைவலைகளில் இருந்து என்றென்றும் மாறாது அவரின் உருவம்....( கப்பலோட்டிய தமிழனாக, பாரதியாக, சிவனாக, ராஜராஜசோழனாக இன்னும் எத்தனை எத்தனயோ உருவங்களில்... )

//
ரொம்ப சரியா சொன்னீங்க...

வெட்டிப்பயல் said...

// கார்ல் சாகன் said...

என்னாங்க சிவாஜியப் போயி நடிப்புக்
கடவுள்னு சொல்றீங்க.

இப்போ சிவாஜின்னா அது ரஜினிதான்.

அப்போ ரஜினி நடிப்புக்கடவுளா? //

இது காமெடி போஸ்ட் இல்லைங்க...

ரஜினியை எனக்கும் பிடிக்கும்... நடிப்புக் கடவுள் யாரு, ஸ்டைல் மன்னன் யாரு, சூப்பருக்கே சூப்பர் ஸ்டார் யாருனு அவரையே கேட்டு பாருங்க. உண்மை புரியும் ;)

குமரன் (Kumaran) said...

ஆகா. எங்கேயோ படித்த புராணக்கதையா பாலாஜி? நன்கு இணைத்துவிட்டீர்களே?! அருமை. :-)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

ஆகா. எங்கேயோ படித்த புராணக்கதையா பாலாஜி? நன்கு இணைத்துவிட்டீர்களே?! அருமை. :-) //

குமரன்,
இது நானே சிந்தித்து எழுதிய சொந்த கதை... அதனால் தான் இடம் எதையும் சொல்லவில்லை.

It took 3 days for me to get this plot... I thought almost 100 different plots... but they were all complicated...

G.Ragavan said...

மண்ணிலே தோண்டிய களிமண்ணைப் பிசைந்து உருட்டி...சக்கரத்திலிட்டுச் சுற்றி....கை கொண்டு திருத்தி...பாண்டமாக்கி அதையும் நெருப்பில் இட்டுச் சுட்டு வைத்தால் பாத்திரமாகும். அதற்குள்ளே தண்ணீரையும் ஊற்றலாம். அரிசையைப் போடலாம், பழங்களையடுக்கலாம்.

அப்படியிருக்கையிலே தமிழகத்திலே பிறந்து நடிப்பு என்பதை தன்னோடு கலந்து சிறப்புற்று இருக்கும் நடிகர் திலகம் பாத்திரமானால் அதிலே பரமசிவனை வைக்கலாம். கட்டபொம்மனை வைக்கலாம். கப்பலோட்டிய தமிழனை வைக்கலாம். பாரதியை வைக்கலாம். "Now let me talk like a policeman" தங்கப்பதக்கம் சௌத்திரியை வைக்கலாம். "ஆனைக்கு அடி சறுக்குனா என்னாகும் தெரியுமோல்யா" பாரிஸ்டர் ரஜினிகாந்த்தை வைக்கலாம். "நாளைக்கி ஒம் மகந் திம்பான். ஆனா விதை...அது இன்னைக்கி நாம் போட்டது" தேவரய்யாவை வைக்கலாம். அட...குங்குமம் படம் பார்த்திருந்தால் பெண்ணையும் வைக்க்கலாம் என்று புரிந்திருக்கும்.

அவரது நடிப்புத்திறமைக்குச் சிறப்பு செய்த வெட்டிக்கு நன்றி பல.

ராஜ நடராஜன் said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.இந்த நாள் அன்று போல் இல்லையே....

குமரன் (Kumaran) said...

நல்ல சிந்தனை பாலாஜி. எங்க ஊருக்கு (மினசோட்டாவுக்கு) ஒரு தல புராணம் வேணும். நீங்க எழுதுனா அருமையா இருக்கும்ன்னு நினைக்கிறேன். (கிண்டல் இல்லை. பாராட்டே).

சிவபாலன் said...

.......PLS DO NOT PUBLISH....

சற்றுமுன் போட்டியில் கலந்துகொள்ளுவர் ஒவ்வொருவருக்கும் MP3 பாடல்கள் அனுப்புவேன் என்று என் பதிவில் அறிவிருத்திருந்தேன். அதன் படி சில் MP3 பாடல்களை வலை ஏற்றியுள்ளேன்.

அதன் சுட்டிகளை கீழே கொடுத்துள்ளேன். இங்கே சென்று Download செய்துகொள்ளவும்.

நன்றி.

Only Instrument வைத்து இசைக்கப்பட்ட பாடல்கள். ( Like Senthalam poovil - only in instrument)

கர்நாடக சங்கீதம்

நாதஸ்வர இசை

வயலின் இசை

வீணை

சேக்ஸபோன்

மேண்டலின்


http://www.megaupload.com/?d=R38GTCIS - Instrument Songs - 1 to 10

http://www.megaupload.com/?d=518MTMW6 - Instrument Songs - 11 to 20

http://www.megaupload.com/?d=0B9AV6L6 - Instrument Songs - 21 to 30

http://www.megaupload.com/?d=I3CVGML9

http://www.megaupload.com/?d=KOUVTNKT

http://www.megaupload.com/?d=CDZT6X77

http://www.megaupload.com/?d=CDZT6X77

Dreamzz said...

சிவாஜி! கண்டிப்பா அவர் நடிப்பு, தமிழக சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்!

Dreamzz said...

40!

Thillakan said...

superb !!!

இராம்/Raam said...

பாலாஜி,

நல்ல பதிவு'ப்பா.....

முரளிகண்ணன் said...

இது வெட்டியான பதிவு இல்லை

SurveySan said...

really good!

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

நல்ல சிந்தனை பாலாஜி. எங்க ஊருக்கு (மினசோட்டாவுக்கு) ஒரு தல புராணம் வேணும். நீங்க எழுதுனா அருமையா இருக்கும்ன்னு நினைக்கிறேன். (கிண்டல் இல்லை. பாராட்டே). //

நிஜமா சொன்னீங்கனா ஒண்ணு ரெடி பண்ணிடலாம்...

கான்ஸெப்ட் வேணா இப்படி வெச்சிக்கலாம்.. மதுரைல ஒரு சிவனடியார் இருக்காரு. தினமும் கோவிலுக்கு வருவாரு. அலுவலக வேலைக்காக அமெரிக்கா வருகிறார்.

கடமைக்காக வந்தாலும் இறைவனை தரிசிக்காததால் மனம் வாடுகிறார்.. இதுக்கு மேல நீங்களே டெவலப் பண்ண மாட்டீங்க ;)

Subramanian Vallinayagam said...

hi balaji,

ரொம்ப நாள் கழிச்சு இப்பொதான் உங்க blog படிக்க chance கிடச்சுது!

இப்பதான் உங்க பழைய பதிவு எல்லாம் படிச்சு முடிச்சேன்! ம் நல்லா எழுதுறீங்க! பாராட்டுக்கள்!

அதிலும் இந்த "நடிப்புக் கடவுள்" - ரொம்ப அருமை! ரசிச்சு படித்தேன்!

எதோ காமெடி கதைனு நெனச்சேன். ஆனா சீரீயஸா ன matter nu அப்புறம் தான் புரிஞ்சுது!

எனக்கும் சிவாஜி மேல நல்ல மதிப்பு உண்டு ! உங்க அளவு பல சிவாஜி படங்கள் பாக்கல! ஆனாலும் சில படங்கள் பாத்திருக்கேன்.

அவருக்கு நல்ல மரியாதை செய்திருக்கீங்க!


சிவ சுப்பிரமணியன்.