தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, October 31, 2006

மதுர!!!

மதுரை மக்களே!!! இது உங்களை பத்தி இல்லை...
நம்ம இளைய தளபதி விஜய் நடிச்ச படம்... அப்ப பாக்காம விட்டுட்டேன். நேற்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பாத்துட்டு என்னால பதிவு போடாம இருக்க முடியலை.

இந்த படம் யார் யார் பார்க்கலாம்.
நம்ம முன்னால் பிரதம மந்திரி நரசிம்ம ராவ் மாதிரி சிரிப்பது எப்படினு தெரியாதா? கண்டிப்பா நீங்க இந்த படம் பாக்கனும். நம்ம வாழ்க்கையவிட இந்த உலகத்துல ஏதாவது கொடுமை இருக்கானு விரக்தில இருக்கீங்களா? இது உங்களுக்காகத்தான்.

படத்தோட கதை என்னனா? மன்னிச்சிடுங்க அப்படி எதுவும் இல்லை.

விஜய் மதுரைல கலக்டர். நான் கான்வெண்ட்ல படிச்சி கலெக்டராகல கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சி கலக்டரானவன்னு ஹை-பிட்ச்ல டயலாக் பேசிக்கிட்டே இருப்பாரு (இது எங்களை மாதிரி கவர்மெண்ட் பள்ளிகளில் படித்தவர்களை கேலி செய்வதற்காகத்தான்). சோனியா அகர்வாலை கொலை செய்துவிட்டார் என்ற குற்றத்திற்காக தலை மறைவாக மாறு வேடத்தில் வாழ்கிறார்.

எங்கனு கேக்கறிங்களா? சென்னைல கோயம்பேடு மார்க்கெட்ல. ஆனா 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட்டுட்டு சண்டை போட்டுட்டு இருப்பாரு. அதுவும் லாரி லாரியா ஆளுங்க வந்து அடி வாங்கிட்டு போறாங்க :-)

அப்பறம் மாறு வேஷத்தப்பத்தி சொல்லியே ஆகனும். மீசைய ட்ரிம் பண்ணிட்டு (பேரையும் ட்ரிம் பண்ணிடுவாரு... மதுரைவேல் IASஅ மதுரனு ட்ரிம் பண்ணிடுவாரு.. அடையாளம் தெரியக்கூடாதுனு), கைல டேட்டூ குத்திருப்பாரு. அப்பறம் கட் பணியன் வேற போட்டுருப்பாரு. ஒரு சின்ன சூச்சூவைக் கேட்டக்கூட சொல்லிடும் அது விஜய்னு. ஆனா தமிழ்நாடு போலிஸால கண்டுபிடிக்க முடியாது.

அப்பறம் டாக்டருங்கெல்லாம் இந்த படம் பார்த்தே ஆகணும். ஊமை குழந்தையை எப்படி பேச வைக்கனும்னு ஒரு ஐடியா தராரு நம்ம தலைவர். அதாவது அந்த குழந்தைய நீங்க பீச்சுக்கு கூட்டிட்டு போகனும். அப்பறம் நீங்க கடல்ல குதிச்சு உங்களை கடல் இழுத்துட்டு போற மாதிரி பாவ்லா பண்ணனும் (அப்படியே உங்களை கடல் இழுத்துட்டு போனா அதுக்கு நான் பொறுப்பில்லை). அதை பார்த்து அந்த குழந்தை பயிந்து பேசிடும். இப்பவே கண்ண கட்டுதேனு பாக்கறீங்களா... இன்னும் இருக்கு!!!

ஹீரோயின்னு ஒருத்தவங்க (ரக்ஷிதா) வறுமையில வாடறவங்க (பாவம் துணிய பாத்தா அப்படித்தான் தெரியுது... ஆனா மினிஸ்டர் பொண்ணு) அந்த மார்க்கெட்ல ஏதோ ரிசர்ச் பண்றாங்க. என்ன ரிசர்ச்னு யாருக்கும் தெரியாது... ஆனா விஜய சுத்தி சுத்தி படம் எடுக்கறாங்க. ஒரு வேலை அதுதான் ரிசர்ச்சானு தெரியலை. ஸ்கிரின்ல நாலுல மூணு பகுதி இவுங்க எடுத்துக்கறாங்க.

வில்லன் பசுபதிதான் படத்தோட பெரிய ப்ளஸ் பாயிண்ட். அவருக்கு படத்தில் இரண்டு ரோல். ஒன்று வில்லன் அடுத்தது காமெடியன். அவர் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை. அவரோட இண்ட்ரொடக்ஷன் அருமை. கண்ணாடி டம்ப்ளர்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கொண்டிருப்பார். அப்போழுது (விஜயிடம் போட்டு கொடுத்த) கூட்டாளி ஒருவன் அவர் காலில் விழும் போது தவறி அந்த டம்ப்ளர்களை தட்டிவிடுகிறார். உடனே பசுபதி "நான் இவ்வளவு கஷ்டப்பட்டு கட்டின கோட்டைய ஒரே நிமிஷத்துல கலச்சிட்டயேடா"னு (டபுள் மீனீங்காம்!!! ) சொல்லிட்டு அவரை சட்டத்திடம்(?) ஒப்படைக்கிறார். அங்கே அவரே நீதிபதி மாதிரி வந்து காமெடியா அவரை சுத்தியளால் அடித்து கொல்கிறார்.

சோனியா அகர்வால் மதுரைல இவர் கலக்டரா இருக்கும் போது இவருக்கு அசிஸ்டெண்டா இருக்காங்க. வில்லன் வீட்ல ஏதோ ரகசிய டாக்குமெண்ட் எடுக்கறன்னு போயி மசாலா அரைச்சி அங்க இருக்குற 2 தினத்தந்தி கட்டிங்க பாத்ரூம்ல இருந்து விஜய்க்கு ஃபேக்ஸ் பண்றாங்க. (அந்த கட்டிங் கலக்டர் ஆபிஸ்ல இருக்கும்னு பாவம் அவுங்களுக்கு தெரியல.)

அத நம்ம தலைவர் பசுபதி எப்படி கண்டுபிடிப்பார்னா அவருக்கு அந்நிய மூச்சுக்காத்து அடிக்குமாம் (எப்படிடா இப்படி எல்லாம் சிந்திக்கறீங்க?) அதை வெச்சி அவர் சோனியா அகர்வாலை கண்டுபிடித்துவிடுவாராம். பிறகு வழக்கம் போல் விஜயை மிரட்ட விஜய் அந்த தினத்தந்தி கட்டிங்கை அடை மழையில் நினைந்து கொண்டு எடுத்து வருகிறார். பிறகு அங்கு நடக்கும் சண்டையில் படத்தில் இருக்கும் ஒரே நல்ல ஃபிகரான சோனியா அகர்வாலையும் கொன்று விடுகிறார்கள்.

படத்துல முழுக்க குத்து பாட்டுதான்... "மச்சான் பேரு மதுரை", "பம்பரக் கண்ணு", "எலந்தை பழம் எலந்தை பழம் உனக்குத்தான்" (நியாயமா பலாப்பழம்னுதான் பாடியிருக்கனும்) ...

படத்தின் க்ளைமாக்ஸ்தான் வெயிட்டான சீன். ஊருல இருக்குற எல்லாருக்கும் அஞ்சி ரூபா செல் போன் விற்கிறார் பசுபதி. அதில் பாம் வைத்து சரியாக பத்து நிமிடத்திற்கு முன் விஜயிடம் இதை தெரிவிக்கிறான். இதை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க!!!

(டைரக்டர் மாதேஷிக்கு தெலுகு ஃபீல்டில் நல்ல எதிர்காலம்ம் இருக்கிறது. ரவி தேஜாவை வைத்து இவர் படமெடுக்கலாம்)

36 comments:

நாமக்கல் சிபி said...

//நிர்மல் said...

இதுல இந்த படம் சரியா ஒடலே வேற வருத்தப்பட்டாங்க, //
யாருங்க புரொடியசர்தானே??? வேற என்னங்க அவரால பண்ண முடியும் :-)

Anonymous said...

இதையும் பார்த்துட்டியா..பாராட்டுகள்!
இந்த படத்துல ஹைலைட்டே, பல முறை தனி ஆளா விஜய் லாரி லாரியா வர்ற எல்லாத்தையும் அடிச்சு நொருக்குவாரு பாரு.. அட அட, மெய் சிலிர்க்க வச்சுருவாரு!! :)

-விநய்*

Arunkumar said...

first attendance pottutu poren..
dinnerku approm padichitu comment podren...

till then, namma kadai pakkam oru visit vidungalen !!!

Arunkumar said...

//ஒரு சின்ன சூச்சூவைக் கேட்டக்கூட சொல்லிடும் அது விஜய்னு. ஆனா தமிழ்நாடு போலிஸால கண்டுபிடிக்க முடியாது.
//
LOL :)

inda padatha ippo paaka vendiya avasiyam unga vaalkaila vandade nenacha manasukku romba kashtamaa irukku :(

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
இதையும் பார்த்துட்டியா..பாராட்டுகள்!
இந்த படத்துல ஹைலைட்டே, பல முறை தனி ஆளா விஜய் லாரி லாரியா வர்ற எல்லாத்தையும் அடிச்சு நொருக்குவாரு பாரு.. அட அட, மெய் சிலிர்க்க வச்சுருவாரு!! :)

-விநய்* //
குளிர்காலம் வந்துடுச்சு.... அதனால இந்த கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு...

அப்பறம் நம்ம கேப்டனோட நரசிம்மா பார்த்தேன்.... சீக்கிரம் அதை பற்றியும் பதிவு போடறேன் ;)

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...
first attendance pottutu poren..
dinnerku approm padichitu comment podren...

till then, namma kadai pakkam oru visit vidungalen !!! ///
np :-)

attendance poatachinga...
thappa eduthukama intha maathiri appa appa sonnengana udane vanthuduven...

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...
//ஒரு சின்ன சூச்சூவைக் கேட்டக்கூட சொல்லிடும் அது விஜய்னு. ஆனா தமிழ்நாடு போலிஸால கண்டுபிடிக்க முடியாது.
//
LOL :)

inda padatha ippo paaka vendiya avasiyam unga vaalkaila vandade nenacha manasukku romba kashtamaa irukku :( //

இந்த மாதிரி படத்தையெல்லாம் பார்த்தாதாங்க மக்களோட ரசனையை எப்படி புரிஞ்சி இயக்குனர்கள் படம் எடுக்கறாங்கனு புரியுது ;)

வேந்தன் said...

//அப்பறம் நம்ம கேப்டனோட நரசிம்மா பார்த்தேன்.... சீக்கிரம் அதை பற்றியும் பதிவு போடறேன் ;)//

மதுர பார்த்தது, அதுவுமில்லாமல் அந்தக் கொடுமையை எல்லாரும் மறந்து இருந்த நேரத்தில் எல்லோருக்கும் மறுபடியும் நினைவு படுத்தியது, அது மட்டுமில்லாமல் கேப்டன் படம் பற்றி எழுதப் போவதாக வலையுலகை மிரட்டியது ஆகிய குற்றங்களுக்காக அதிகபட்ச தண்டனை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
:))))))))

நாடோடி said...

ஆஹா வேலவெட்டி (சாரி வெட்டிதான் பேர்ல இருக்குல) இல்லையா?..

இந்த மாதிரி மொக்கை படமா பாத்தது வேற இல்லாம அத பத்தி பதிவு வேறவா?..
முடிஞ்சா "புதிய கீதை" யையும் பத்தி போட வேண்டியதுதானே?..

நாமக்கல் சிபி said...

//மதுர பார்த்தது, அதுவுமில்லாமல் அந்தக் கொடுமையை எல்லாரும் மறந்து இருந்த நேரத்தில் எல்லோருக்கும் மறுபடியும் நினைவு படுத்தியது, அது மட்டுமில்லாமல் கேப்டன் படம் பற்றி எழுதப் போவதாக வலையுலகை மிரட்டியது ஆகிய குற்றங்களுக்காக அதிகபட்ச தண்டனை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
:)))))))) //
நான் நல்ல பையனா தாங்க இருந்தேன்... விஜய் படத்த லொள்ளு பண்ணமாட்றென்னு நண்பர் ஒருத்தர் சொன்னாரு.. சரினு இந்த படத்தை பார்த்தா... படமுழுக்க லொள்ளாத்தான் இருக்கு...

இதப்போய் விட முடியுமா???

நரசிம்மா... சாமி!!!
இந்தியா வந்தவுடனே DVD வாங்கி வைக்கனும்...

நாமக்கல் சிபி said...

//நாடோடி said...
ஆஹா வேலவெட்டி (சாரி வெட்டிதான் பேர்ல இருக்குல) இல்லையா?..

இந்த மாதிரி மொக்கை படமா பாத்தது வேற இல்லாம அத பத்தி பதிவு வேறவா?..
முடிஞ்சா "புதிய கீதை" யையும் பத்தி போட வேண்டியதுதானே?.. //
மொக்கை படம்தாங்க... பதிவும் மொக்கையாவா இருக்கு?

குளிர் ஆரம்பிச்சிடுச்சு... என்ன பண்ண?

புதிய கீதை ஏற்கனவே பாத்தாச்சு... பதிவுதானே போட்டுட்டா போச்சு ;)

Anonymous said...

hi vets

nice review about "madura". i too watched that film and feel the same. enaku enamo thiruppachi ithe vida comedya irunthuchu. but "thirumalai" konjam nalla irunthuchu..keep post some reviews..

Cheers
Yogen

கார்த்திக் பிரபு said...

ada padam nalla thanapa iruku ..ivvalavu samacharagala padathila iruka..che idhu theriyama poche!!!

ps: nan vijay rasikan illai

Unknown said...

வெட்டி இந்தப் படத்துல்ல வர்ற மச்சான் பேர் மதுர நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களில் ஒன்று.. இந்தப் பாட்டுல்ல விஜய் டான்ஸ் நல்லா இருக்கும் என்பது என் கருத்து.. படம் பத்தி நீங்களே வெளுத்துக் கட்டிட்டீங்க...

அப்படியே புதிய கீதை, ஆதி, பகவதி ..இதுக்கெல்லாம் ஒரு விமர்சனம் போடுமாறு கேட்டுக்கிறேன்.

கப்பி | Kappi said...

உமக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாய்யா?? ;)))

//இதை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க!!!
//

அது நோபல் பரிசு கொடுக்க வேண்டிய மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு..அந்த சீனைப் பார்த்து என் கண்ல ரத்தக் கண்ணீரே வந்துடுச்சு... :))

கதிர் said...

வெட்டி,

நீ கூட எதுனா கொல பண்ணீட்டின்னா பயந்துராத நேரா கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போயி பிகரோடா நாலு டூயட் பாடு. யாருமே கண்டுபிடிக்க மாட்டாங்க.

உனுக்கு யாருயா இந்த மாதிரி படமெல்லாம் சிபாரிசு பண்றது?

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

hi vets

nice review about "madura". i too watched that film and feel the same. enaku enamo thiruppachi ithe vida comedya irunthuchu. but "thirumalai" konjam nalla irunthuchu..keep post some reviews..

Cheers
Yogen //
திருப்பாச்சினா,
சந்தனத்தை முகத்துல பூசிட்டு கொலை பண்ணுவாறே அதுதான... அதுக்கும் எழுதிட்டா போச்சி ;)

நாமக்கல் சிபி said...

//கார்த்திக் பிரபு said...

ada padam nalla thanapa iruku ..ivvalavu samacharagala padathila iruka..che idhu theriyama poche!!!

ps: nan vijay rasikan illai //
இவ்வளவு சமாச்சாரம் தெரியாம படம் பாத்துட்டு நல்லா இருக்குனு சொன்னா எப்படிப்பா???

இன்னொரு முறை தைரியமிருந்தால் பார்த்து சொல்லவும் ;)

நாமக்கல் சிபி said...

//தேவ் | Dev said...

வெட்டி இந்தப் படத்துல்ல வர்ற மச்சான் பேர் மதுர நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களில் ஒன்று.. இந்தப் பாட்டுல்ல விஜய் டான்ஸ் நல்லா இருக்கும் என்பது என் கருத்து.. படம் பத்தி நீங்களே வெளுத்துக் கட்டிட்டீங்க...

அப்படியே புதிய கீதை, ஆதி, பகவதி ..இதுக்கெல்லாம் ஒரு விமர்சனம் போடுமாறு கேட்டுக்கிறேன். //

பாட்டும் விஜய் டேன்ஸும் சூப்பரா இருக்கும்... படமும் காமெடி படம்தான்... என்ன எல்லாமும் உள்குத்தோட இருக்கும் நம்மதான் புரிஞ்சிக்கனும்...

காமெடில ரெண்டு வகை இருக்கு ஒண்ணு படம் எடுக்கறவங்க காமெடினு நினைச்சி எடுப்பாங்க..இதுல ஒரு சில படம்தான் நல்ல காமெடி இருக்கும்...

அடுத்த வகை அவுங்க சீரியஸ்னு நினைச்சி எடுப்பாங்க... அது முதல் வகையவிட நல்ல காமெடியா இருக்கும்..

இது ரெண்டாவது வகை... கேப்டனுடைய சமீப கால படங்களெல்லாம் இந்த வகையை சார்ந்ததுதான் ;)

நாமக்கல் சிபி said...

//Sadaiappa said...

இப்போ "உயிர், வல்லவன் & வறலாறு" போன்ற சமூக சிந்ததனை(?) உள்ள படங்களெல்லாம் வரும் பொழுது இது போன்ற காமெடி படத்திற்கெல்லாம் விமர்சனம் தேவையா?. //
அதுக்கேல்லாம் என்னும் DVD வரலையே :-(

வந்தவுடனே போடறேன் :-)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

உமக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாய்யா?? ;)))
//
:-))

//
//இதை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க!!!
//

அது நோபல் பரிசு கொடுக்க வேண்டிய மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு..அந்த சீனைப் பார்த்து என் கண்ல ரத்தக் கண்ணீரே வந்துடுச்சு... :)) //

இத நான் ஒரு தெலுகு பிரண்டோட பார்த்தேன் (பொதுவா தெலுகு படத்தை நான் கண்ட படி ஓட்டுவேன்... நான் பிளாக்ல நல்ல படத்தை பத்தி எழுதறது அவனுக்கு தெரியாது)... இந்த சீனை பார்த்துட்டு அவன் என்னை கேவலமா ஒரு லுக் விட்டான் பாருங்க... நான் அப்ஸ்காண்ட் ஆயிட்டேன் :-)

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

வெட்டி,

நீ கூட எதுனா கொல பண்ணீட்டின்னா பயந்துராத நேரா கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போயி பிகரோடா நாலு டூயட் பாடு. யாருமே கண்டுபிடிக்க மாட்டாங்க.
//
ஏன் இந்த கொலை வெறி :-)

//
உனுக்கு யாருயா இந்த மாதிரி படமெல்லாம் சிபாரிசு பண்றது? //
எல்லாம் உன்னை மாதிரி நல்ல ஜீவன்கள்தான் :-)

Boston Bala said...

நொந்தவுடன் உடனடியாக எழுதியது: ஈ - தமிழ் :: மதுர (September 17, 2004)

Syam said...

மதுர படம் இவ்வளோ நாளா பார்காம பண்ண தப்ப இப்போ விமர்சனம் பண்ணி புன்னியம் தேடிக்கிட்டீங்க...
:-)

Syam said...

அருமையான விமர்சனம்...அப்படியே பிரிச்சு மேஞ்ச்சு இருக்கீங்க அதுலயும் அந்த பலாப்பழம் சூப்பர் :-)

நாமக்கல் சிபி said...

//Boston Bala said...

நொந்தவுடன் உடனடியாக எழுதியது: ஈ - தமிழ் :: மதுர (September 17, 2004) //
நீங்களும் அந்த கொடுமையை அனுபவிச்சீங்களா???

நாமக்கல் சிபி said...

//Syam said...

மதுர படம் இவ்வளோ நாளா பார்காம பண்ண தப்ப இப்போ விமர்சனம் பண்ணி புன்னியம் தேடிக்கிட்டீங்க...
:-) //

அப்ப கொஞ்சம் பிஸியா இருந்ததால விட்டுட்டேன்... சாமீ!!! எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பாங்களோ ;)

நாமக்கல் சிபி said...

//Syam said...

அருமையான விமர்சனம்...அப்படியே பிரிச்சு மேஞ்ச்சு இருக்கீங்க அதுலயும் அந்த பலாப்பழம் சூப்பர் :-) //
ஹி ஹி ஹி...

மிக்க நன்றி தலைவா!!!

Anonymous said...

//அங்கு நடக்கும் சண்டையில் படத்தில் இருக்கும் ஒரே நல்ல ஃபிகரான சோனியா அகர்வாலையும் கொன்று விடுகிறார்கள்.
//

ippo sonningala..athu romaba correctu...
aniyayama avalai konutanga...

//ஒரு சின்ன சூச்சூவைக் கேட்டக்கூட சொல்லிடும் அது விஜய்னு.//

oru kalakkal ponga.. appadiyae.. namma "Varalaru" paduthuku onnu eludhaunga parkalam.. idha vida comedya irukkum..
illa..dharmapuri? indha diwali release ellamae sari comedy...
vattaram konjam thevalai :)

நாமக்கல் சிபி said...

//oru kalakkal ponga.. appadiyae.. namma "Varalaru" paduthuku onnu eludhaunga parkalam.. idha vida comedya irukkum..
illa..dharmapuri? indha diwali release ellamae sari comedy...
vattaram konjam thevalai :)//

ட்ரீம்ஸ்,
மிக்க நன்றி!!!
நான் இன்னும் அந்த படமெல்லாம் பார்க்கல... கேப்டன் படம் கண்டிப்பா பார்ப்பேன்.. அதுவும் நம்ம பேரரசு டைரக்ட் பண்ண படமாச்சே!!! பார்த்துட்டு கண்டிப்பா விமர்சனம் போடறேன் ;)

துளசி கோபால் said...

அட! என்னை விட பெரிய ஆளா இருக்கீங்க!!!!!

இவ்வளொ ரசிச்சுப் பார்த்ததைச் சொன்னேன்:-))))

நாமக்கல் சிபி said...

//துளசி கோபால் said...

அட! என்னை விட பெரிய ஆளா இருக்கீங்க!!!!!
//
டீச்சர் என்ன குண்டத்தூக்கி போடறீங்க...
டீச்சரை மிஞ்சாத ஸ்டண்ட்ஸ் நாங்க :-)

// இவ்வளொ ரசிச்சுப் பார்த்ததைச் சொன்னேன்:-)))) //
ஓ!!! இத சொல்றீங்களா??? வேற வழியில்ல... கஷ்டத்துலயும் ஏதாவது சந்தோஷ்மிருக்கானு பாக்கணும் ;)

ராம்குமார் அமுதன் said...

என்ன தல இது??? விஜய் எதிர்ப்பு படலமா???? ஏன் இப்படி???? ஏங்க இப்படி????? காதலுக்கு மரியாதை, பூவெல்லாம் உனக்காக இதெல்லாம் பத்தி பதிவு போடுங்களேன்.... சில பெரிய கைகளுக்கு கூட சில படங்கள் சறுக்குவது உண்டு... அப்படி இருக்கேல விஜய்யெல்லாம் கொஞ்சம் வளர விடுங்களேன்.....

நாமக்கல் சிபி said...

//அமுதன் said...
என்ன தல இது??? விஜய் எதிர்ப்பு படலமா???? ஏன் இப்படி???? ஏங்க இப்படி????? காதலுக்கு மரியாதை, பூவெல்லாம் உனக்காக இதெல்லாம் பத்தி பதிவு போடுங்களேன்.... சில பெரிய கைகளுக்கு கூட சில படங்கள் சறுக்குவது உண்டு... அப்படி இருக்கேல விஜய்யெல்லாம் கொஞ்சம் வளர விடுங்களேன்..... //
அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா!!!
கில்லிக்கூட எனக்கு பிடித்திருந்தது. அதற்காக மதுரய நல்ல படம்னு எழுத முடியுமா?

நல்ல படமெல்லாம் அங்க இருக்கும் போதே பார்த்தாச்சுப்பா... அதனாலத்தான் மதுர மாதிரி படமெல்லாம் இப்ப பாக்கறேன் ;)

Anonymous said...

//அப்பறம் மாறு வேஷத்தப்பத்தி சொல்லியே ஆகனும். மீசைய ட்ரிம் பண்ணிட்டு (பேரையும் ட்ரிம் பண்ணிடுவாரு... மதுரைவேல் IASஅ மதுரனு ட்ரிம் பண்ணிடுவாரு.. அடையாளம் தெரியக்கூடாதுனு), கைல டேட்டூ குத்திருப்பாரு. அப்பறம் கட் பணியன் வேற போட்டுருப்பாரு. ஒரு சின்ன சூச்சூவைக் கேட்டக்கூட சொல்லிடும் அது விஜய்னு. ஆனா தமிழ்நாடு போலிஸால கண்டுபிடிக்க முடியாது.//


ரொம்ப correctஆ சொண்னிங்க!! MGR காலத்து படங்கள்ல ஒரே ஒரு ஒட்டு மீசை, தாடி வச்சு north india,africa ன்னு சொல்லி கயா மியா ன்னு எவ்வளவு பெரிய எதிரி வீட்டுக்கும் போய் பேசுவாங்களாம், பழகுவாங்களாம்!!
அந்த காலத்தில் சரி, மக்கள் அப்பாவியா,வெற்றிலை சாப்பிட்டா மாடு முட்டும்னு நம்பற caseஆ இருந்தாங்க..
நம்ம எப்பேர் பட்ட ஆளு ;-)..
அப்துல் கலாம் சொன்னால் கூட அஞ்சு தர ஆராய்ச்சி பண்னுவோம்..
இதை இன்னும் நம்ம கிட்டயே continue பண்றது தான் கொடுமை!!

நாமக்கல் சிபி said...

//
ரொம்ப correctஆ சொண்னிங்க!! MGR காலத்து படங்கள்ல ஒரே ஒரு ஒட்டு மீசை, தாடி வச்சு north india,africa ன்னு சொல்லி கயா மியா ன்னு எவ்வளவு பெரிய எதிரி வீட்டுக்கும் போய் பேசுவாங்களாம்,
பழகுவாங்களாம்!!
//
முகத்துல மருவெல்லாம் சில சமயம் வெச்சிருப்பாரு நம்ம புரட்சி தலைவர்...

//
அந்த காலத்தில் சரி, மக்கள் அப்பாவியா,வெற்றிலை சாப்பிட்டா மாடு முட்டும்னு நம்பற caseஆ இருந்தாங்க..
நம்ம எப்பேர் பட்ட ஆளு ;-)..
அப்துல் கலாம் சொன்னால் கூட அஞ்சு தர ஆராய்ச்சி பண்னுவோம்..
இதை இன்னும் நம்ம கிட்டயே continue பண்றது தான் கொடுமை!!//
கமல், விக்ரம், சூர்யா எல்லாம் நிறைய வெரைட்டி கொடுக்கும் போது விஜய்க்கு மட்டும் இன்னும் பயம் இருக்கு :-(