தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, October 05, 2006

பொம்மரில்லு

தெலுகு படம்னா வெறும் மசாலா(மாஸ்) படம்னு ரொம்ப நாளா நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு என்று ஒரு சில படங்கள் எனக்கு புரிய வைத்தன.

அதில் குறிப்பிடத்தக்கவை "ஆ நலுகுறு" , "அனுகோக்குண்ட ஒக ரோஜு" மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் "பொம்மரில்லு".

"பொம்மரில்லு" என்றால் "பொம்மை வீடு" என்று பொருள். அதாவது வீட்டில் உள்ள அனைவருக்கும் சாவி கொடுப்பது ஒருவர் மற்றவர்கள் எல்லோரும் இயங்கும் பொம்மைகளே என்பது தான் அதன் கதை.

முதல் காட்சியிலே படத்தின் கருவை சொல்லிவிடுகிறார் இயக்குனர். கடற்கரையில் குழந்தையின் கைப்பிடித்து அந்த குழந்தைக்கு நடை பழக சொல்லி கொடுக்கிறார் தந்தை. இதுவே அந்த தந்தை குழந்தை பெரியவனாகியும் அவன் கையை விடாமல் பிடித்து நடக்க சொல்லி கொடுத்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? இது தான் படத்தின் மையக்கரு.

கண்டிப்பான தந்தை என்று சொல்வதைவிட, எங்கே தனியாகவிட்டால் மகன் தடுக்கி விழுந்திடுவானோ என்று அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் தந்தையாக பிரகாஷ்ராஜ். வழக்கம் போல் அருமையாக நடித்திருக்கிறார். சராசரி அம்மாவாக ஜெயசுதா.

அப்பாவிடமிருந்து விடுதலை பெற்று தன் சொந்த காலில் நிற்க துடிக்கும் துடிப்புள்ள இளைஞனாக நடித்திருக்கிறார் சித்தார்த். ஆனால் தந்தை முன் அதை வெளிப்படுத்த முடியாமல் திணறுகின்ற பாத்திரம். தன் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் சித்தார்த்.

இதற்கு நேரெதிராக பட்டாம்பூச்சி போல் சுதந்திரமாக சுற்றி திரியும் பாத்திரத்தில் ஜெனிலியா. படத்தில் அனைவரையும் கவரும் கதாப்பாத்திரம். காபி சப்ளை செய்யும் சிறுவன், பானி பூரி கடை வைத்திருப்பவர், ஐஸ் விற்பவர் என்று சகலமானவர்களும் இவருக்கு பேர் சொல்லி கூப்பிடுமளவுக்கு பழக்கம்.

இயற்கையின் நீதியான எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்பது இங்கேயும் உண்மையாகிறது. முதலில் அவர்கள் இருவரும் நண்பர்களாகி வழக்கம் போல் காதலர்களாகிறார்கள். இறுதியில் காதலர்கள் எவ்வாறு இணைகிறார்கள். பிரகாஷ்ராஜ் எவ்வாறு தன் தவறை உணர்கிறார் என்பதே கதை.

யாராவது தலையில் ஒரு முறை முட்டினால் கொம்பு வரும் என்று நம்பும் அளவுக்கு குழந்தைத்தனம் மற்றும் ரசிக்கக்கூடிய பாத்திரம் ஜெனிக்கு. இறுதியில் பிரகாஷ்ராஜ் தலையில் ஒரு முறை தெரியாமல் முட்டிவிட, கொம்பு வருவதை தவிர்க்க இரண்டாவது முறை முட்ட ஜெனிலியா முயல்வதும் அதை தடுக்க சித்தார்த் தவிப்பதும் அருமையான காட்சி.

இது டைரக்டர் பாஸ்கருக்கு முதல் படம். முதல் படத்திலே அசத்தியிருக்கிறார் மனிதர். வழக்கமாக தெலுகு படத்தில் பாடல்களுக்கு குடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த படத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. பாட்டு சுமார் ரகம்தான்.

பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். முடியாதவர்கள் காத்திருக்கவும். தமிழில் இந்த படத்தை எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. விஜய், ஜெயம் ரவி, பரத், ரவி கிருஷ்ணா முதலானோர் இந்த படத்தின் தமிழாக்கத்தில் நடிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது.

62 comments:

இலவசக்கொத்தனார் said...

சரி. தமிழில் வரட்டும் பாக்கறேன்.

நாமக்கல் சிபி said...

கொத்ஸ்,
தமிழ்ல யாரு ஹீரோயின்னு தெரியல...
ஆனால் நல்லா எடுப்பாங்கனு நம்பலாம் ;)

இல்லைனா DVD எடுத்து பாத்துக்கோங்க... சப்-டைட்டிலோட :-)

நாமக்கல் சிபி said...

//நிர்மல் said...

அண்மையில் வந்த கோதாவரியும் மிக நல்ல படமாம். //

கோதாவரியும் லவ் ஸ்டோரிதான்... கமலானி முகர்ஜி அவ்வளவு சூப்பரில்லைனு கேள்விப்பட்டேன்...
ஆனால் தாராளமாக பார்க்கலாம்.

முடிந்தால் போக்கிரி பார்க்கவும்...

நாமக்கல் சிபி said...

நிர்மல்,
அப்படியெல்லாம் இல்லைங்க...
நான் 10 தடவைக்கு மேல பாத்திருப்பேன்...

Its a different style of movie...

கதைய சொல்ல வேண்டாம்னு பாக்கறேன்... எப்படியும் பொங்களுக்கு வருது. பிரபுதேவா எப்படி எடுத்திருப்பாருனு தெரியல...

Anonymous said...

இப்ப வர தமிழ் படங்களுக்கு, பேசாம இந்த மாதிரி சில நல்ல படங்கள சப்-டைட்டிலோட பார்க்கலாம். நன்றி பாலாஜி!

-விநய்*

நாமக்கல் சிபி said...

//இப்ப வர தமிழ் படங்களுக்கு, பேசாம இந்த மாதிரி சில நல்ல படங்கள சப்-டைட்டிலோட பார்க்கலாம். நன்றி பாலாஜி!

-விநய்* //
விநய்,
ஒரு பத்து படம் பாத்தீங்கனா அதுக்கப்பறம் சப்-டைட்டில் தேவையில்லை. நாங்க அப்படித்தான் பார்த்து பழகிக்கிட்டோம்.

அதுவும் இந்த 6 மாசத்துல வந்த நல்ல தமிழ் படங்கள் மிக குறைவு. அதை இந்த மாதிரி பார்த்து சரி செய்து கொள்ளலாம்.

Unknown said...

என்னங்க திடீர்ன்னு தெலுகு படங்களுக்கு போயிட்டீங்க? தமிழ் படங்கள் பிடிக்காம போயிடுச்சா?:-))

ஜெயம் ரவி இந்த படத்தின் உரிமையை வாங்கிட்டதா எங்கேயோ படிச்சேன். அவரது அண்ணன் 'ரீமேக்' ராஜாவின் இயக்கத்தில் நடிக்கிறார் என படித்த நினைவு

SathyaPriyan said...

Vettipayal,

Please check. One of your posts is in Behindwoods. Author is mentioned as Rajesh. Please contact them and correct the same.

http://www.behindwoods.com/tamil-movie-articles/movies-04/06-10-06-tamil-movies.html

நாமக்கல் சிபி said...

// செல்வன் said...
என்னங்க திடீர்ன்னு தெலுகு படங்களுக்கு போயிட்டீங்க? தமிழ் படங்கள் பிடிக்காம போயிடுச்சா?:-))

ஜெயம் ரவி இந்த படத்தின் உரிமையை வாங்கிட்டதா எங்கேயோ படிச்சேன். அவரது அண்ணன் 'ரீமேக்' ராஜாவின் இயக்கத்தில் நடிக்கிறார் என படித்த நினைவு
//

பிடிக்காம போயிடுச்சுனு இல்லை... இருக்கற எல்லா படமும் பாத்தாச்சு... அதுதான் தெலுகு படம் பார்க்க ஆரம்பிச்சாசு.

அப்படியா, நான் கேள்வி பட்ட வரைக்கும் யாரும் வாங்கலைனு தான் சொன்னாங்க... பாக்கலாம் எப்படி டைரக்ட் பண்றாங்கனு ;)

வடுவூர் குமார் said...

தெலுங்கு படமா??
இங்கு வந்தாலும் வரும்.மொழி பிரச்சனையில்லாததால் கவலையில்லை.
பாத்துடுவோம்.

SP.VR. SUBBIAH said...

ஏமண்டி பாலாஜி காரு
பிலிம் சூசாரு காதா - டயலாக்ஸ் அன்னி மீக்கு அர்த்தமாயிந்தாண்டி?
எந்துக்கண்டே அர்த்தமாயி சூஸ்தே இன்கா பாக உண்ட ஒச்சு!

Anonymous said...

FYI, although its a telugu film, baskar is a pakka tamilian. also the cinematographer and most technicians

in tamil film industry, its difficult for relatively new comers to prove their talent. otherwise, this type of films should be produced by shankar or prakashraj.

Karthik Jayanth said...

//கமலானி முகர்ஜி அவ்வளவு சூப்பரில்லைனு கேள்விப்பட்டேன்...//

வெட்டிபயல் இதுதானே வேணாங்குறது.. பெயரை தப்பா எழுதுனதே மன்னிக்க முடியாத குற்றம். இதுக்கே உங்க Lowellக்கு ஒரு டேங்கர் லாரி நிறைய ஆசிட் அனுப்பனும்.இனிமே இப்படி எழுதுனா நல்லா இருக்காது சொல்லிட்டேன் :)

கார்த்திக் பிரபு said...

innnum konjam jeniliya padathai thoovi vitrukalam..he he he..adhu 'kolti' niyabathila poster i parkiradhi vitutu ippolam padathukey poga arambichiteengal..nall munneram

நாமக்கல் சிபி said...

//SathyaPriyan said...

Vettipayal,

Please check. One of your posts is in Behindwoods. Author is mentioned as Rajesh. Please contact them and correct the same.//
Hi Sathyapriyan,
Thx a lot for the info. I have mailed the editor. let's see...

நாமக்கல் சிபி said...

//வடுவூர் குமார் said...

தெலுங்கு படமா??
இங்கு வந்தாலும் வரும்.மொழி பிரச்சனையில்லாததால் கவலையில்லை.
பாத்துடுவோம்.//

வடுவூர் குமார்,
தாராளமா பாருங்க... நல்ல படம்.

நாமக்கல் சிபி said...

//
SP.VR.SUBBIAH said...

ஏமண்டி பாலாஜி காரு
பிலிம் சூசாரு காதா - டயலாக்ஸ் அன்னி மீக்கு அர்த்தமாயிந்தாண்டி?
எந்துக்கண்டே அர்த்தமாயி சூஸ்தே இன்கா பாக உண்ட ஒச்சு!//
சார்,
நாக்கு சால அர்த்தமாயிந்தி... கானி அந்தங்கா மாட்லாட ராது...

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

FYI, although its a telugu film, baskar is a pakka tamilian. also the cinematographer and most technicians

in tamil film industry, its difficult for relatively new comers to prove their talent. otherwise, this type of films should be produced by shankar or prakashraj.//

Even I thought that he must be a Tamilian from his name. Its really bad that we are not using such talented directors :-(

நாமக்கல் சிபி said...

//Karthik Jayanth said...

//கமலானி முகர்ஜி அவ்வளவு சூப்பரில்லைனு கேள்விப்பட்டேன்...//

வெட்டிபயல் இதுதானே வேணாங்குறது.. பெயரை தப்பா எழுதுனதே மன்னிக்க முடியாத குற்றம். இதுக்கே உங்க Lowellக்கு ஒரு டேங்கர் லாரி நிறைய ஆசிட் அனுப்பனும்.இனிமே இப்படி எழுதுனா நல்லா இருக்காது சொல்லிட்டேன் :)//

கார்த்திக்,
மன்னி்க்கவும் கமலுக்கு ஜோடியா நடிச்ச நியாபகத்துல கமிலினிய கமலானினு போட்டுட்டேன்...

மன்னிக்கவும்...

அந்த படத்துல அவ்வளவு அழகா இல்லைனு கேள்விப்பட்டேன்...

நாமக்கல் சிபி said...

//கார்த்திக் பிரபு said...

innnum konjam jeniliya padathai thoovi vitrukalam..he he he..adhu 'kolti' niyabathila poster i parkiradhi vitutu ippolam padathukey poga arambichiteengal..nall munneram//

கார்த்திக்,
நம்ம பிளாக் முழுசா ஜெனி படமே போடலாம்... ஆனா கொஞ்சம் டூ மச்சா இருக்கும்... வேண்டும்னா அதுக்கு தனி பதிவு போடலாம்.

இன்னும் நீ அத மறக்கலையா??? அந்த ஒரு காரணத்துக்காகதான் நான் தெலுகு பட விமர்சனமே எழுதாம இருந்தேன்.

என் பழைய ரூம் மேட் தெலுகு. அதனால வாரா வாரம் இங்க பாஸ்டன்ல தெலுகு படத்துக்கு போவோம்... அதுவும் ஜினியர் என்.டீ.ஆர், பாலைய்யா படமெல்லாம் நம்ம Gaptain படத்தைவிட ஜோக்கா இருக்கும்... அதை பற்றி சீக்கிரம் பதிவிடுகிறேன். அதற்கு முன்னால் ஒரு சில நல்ல படங்களை பற்றியும் உங்களுக்கு சொல்லலாம்னு தான் இந்த பதிவு...

Anonymous said...

Saw ur review for 'Bommerillu' - nice story line. If possible, do publish reviews for other two telugu movies which u've mentioned

கார்த்திக் பிரபு said...

gaptain padathai comedy nu solararu vettipaiyal yarange...ennap yarumey illaya?????(bore adiku adhan he he)

கார்த்திக் பிரபு said...

gaptain padathai comedy nu solararu vettipaiyal yarange...ennap yarumey illaya?????(bore adiku adhan he he)

Mani said...

என்னது? போக்கிரி படத்த 10 தடவை பார்த்தீங்களா? அப்படின்னா நிஜமாமே நீங்க வெட்டிப்பய தானா?

இன்னொரு விசயம். அது பொங்கள் இல்ல. பொங்கல்.

ஸ்டாலின் எப்படி?

ILA (a) இளா said...

நமக்கு புடிச்ச அம்மணி நடிச்சதனால ஒரு தடவ பார்க்கனும்னு நினைச்சேன். ஆனா நமக்கு சுத்தமா தெலுங்கு தெல்லேது. படம் சூப்பர்ன்னு சொல்லி இருக்கீங்க வட்டு கிடைச்சா பார்க்கலாம்.

Unknown said...

மன இன்டி மெகா ஸ்டார் சீரஞ்சிவிகாரு நடிச்ச நம்மூர் முருகதாஸ் படம் எப்பிடி இருக்காம்.. அது பத்தி ஒரு பதிவு போடு ராசா.. எல்லா பத்திரிக்கையும் பாக உந்தின்னு செப்புதானு:)

(HOWS MY TELUGU?)

ILA (a) இளா said...

தேவ்,
ஸ்டாலின் கொஞ்சம் சொதப்பல்ன்னு பல ஆந்திர காருக்கள் சொல்லியாச்சு. முருகதாசு, ஏம்பா இப்படின்னு ஒருத்தர் கேட்டாருன்னா பார்த்துக்கங்களேன்.

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
Saw ur review for 'Bommerillu' - nice story line. If possible, do publish reviews for other two telugu movies which u've mentioned
//
Hi,
Thx.
Will try to publish reviews for other movies also asap

நாமக்கல் சிபி said...

//கார்த்திக் பிரபு said...
gaptain padathai comedy nu solararu vettipaiyal yarange...ennap yarumey illaya?????(bore adiku adhan he he)
//
கார்த்திக்,
கடைசியா 10 வருஷத்துல நீ எத்தனை படம் (Gaptain's) தியேட்டர் போய் பாத்த... உண்மைய சொல்லு.

நாமக்கல் சிபி said...

//Mani said...
என்னது? போக்கிரி படத்த 10 தடவை பார்த்தீங்களா? அப்படின்னா நிஜமாமே நீங்க வெட்டிப்பய தானா?

இன்னொரு விசயம். அது பொங்கள் இல்ல. பொங்கல்.

ஸ்டாலின் எப்படி?
//
போக்கிரி கில்லி மாதிரிங்க (ஃபாஸ்டா போகும்)...
கில்லி ஒக்கடுவோட ரீ-மேக்...
இலியானா நல்லா இருப்பா. (KDல கேவலமா காட்டியிருக்காங்கனு நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன)

பொங்கல் அடிக்கும் போது "போங்கள்" நியாபகமாவே இருந்துச்சு.. அதுதான் :-)

//ஸ்டாலின் எப்படி? //
சுமார்னு கேள்விப்பட்டேன்...
கடைசி 20 நிமிஷம் ஓகேவாம் ;)

நாமக்கல் சிபி said...

// ILA(a)இளா said...
நமக்கு புடிச்ச அம்மணி நடிச்சதனால ஒரு தடவ பார்க்கனும்னு நினைச்சேன். ஆனா நமக்கு சுத்தமா தெலுங்கு தெல்லேது. படம் சூப்பர்ன்னு சொல்லி இருக்கீங்க வட்டு கிடைச்சா பார்க்கலாம்.
//
தாராளமா பாருங்க... படம் புரியும்.
DVDல பாருங்க.. VCD எல்லாம் எஃபக்ட் இருக்காது

நாமக்கல் சிபி said...

//Dev said...
மன இன்டி மெகா ஸ்டார் சீரஞ்சிவிகாரு நடிச்ச நம்மூர் முருகதாஸ் படம் எப்பிடி இருக்காம்.. அது பத்தி ஒரு பதிவு போடு ராசா.. எல்லா பத்திரிக்கையும் பாக உந்தின்னு செப்புதானு:)

(HOWS MY TELUGU?)
//
படம் சுமார்தான்...
முருகதாஸ் எங்க ஊர்க்காரர் ;)
சொதப்பிட்டாரு. சீக்கிரம் படம் பாத்துட்டு போடறேன்.

மீரு தெலுகு பாக உந்தி ;)

நாமக்கல் சிபி said...

//ILA(a)இளா said...
தேவ்,
ஸ்டாலின் கொஞ்சம் சொதப்பல்ன்னு பல ஆந்திர காருக்கள் சொல்லியாச்சு. முருகதாசு, ஏம்பா இப்படின்னு ஒருத்தர் கேட்டாருன்னா பார்த்துக்கங்களேன்.
//
கரெக்ட் :-)

கப்பி | Kappi said...

//இயற்கையின் நீதியான எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்பது இங்கேயும் உண்மையாகிறது. முதலில் அவர்கள் இருவரும் நண்பர்களாகி வழக்கம் போல் காதலர்களாகிறார்கள். //

படத்தில் ஒரு கதாநாயகன், கதாநாயகி இருந்தால் திரைக்கதையில் வேறு என்னதான் செய்ய முடியும் :))

எப்படியும் இந்த படத்தை இங்க யாராவது தரவிரக்கம் செஞ்சு வச்சிருப்பானுங்க..இந்த வாரம் வேற படம் எதுவும் கிடைக்கலைன்னா இந்த ஷோ ஓட்டிடுவோம் ;)

//ஜெயம் ரவி இந்த படத்தின் உரிமையை வாங்கிட்டதா எங்கேயோ படிச்சேன். அவரது அண்ணன் 'ரீமேக்' ராஜாவின் இயக்கத்தில் நடிக்கிறார் என படித்த நினைவு
//

மறுபடியும் சொதப்ப போறாங்களா...

நாமக்கல் சிபி said...

// கப்பி பய said...

எப்படியும் இந்த படத்தை இங்க யாராவது தரவிரக்கம் செஞ்சு வச்சிருப்பானுங்க..இந்த வாரம் வேற படம் எதுவும் கிடைக்கலைன்னா இந்த ஷோ ஓட்டிடுவோம் ;)
//
வேற படம் இருந்தாலும் இத ஒரு ஷோ ஓட்டிப்பாரு... ஒரு படம்தான் பாக்கனும் ரூல்ஸ் இருக்கா என்ன?

////ஜெயம் ரவி இந்த படத்தின் உரிமையை வாங்கிட்டதா எங்கேயோ படிச்சேன். அவரது அண்ணன் 'ரீமேக்' ராஜாவின் இயக்கத்தில் நடிக்கிறார் என படித்த நினைவு
//

மறுபடியும் சொதப்ப போறாங்களா...
//
பாக்கலாம்... விஜய்க்கும் நல்லா இருக்கும்னு தோனுது ;)

கதிர் said...

சொல்லவே இல்ல, கொல்டி படம் பாத்துட்டு விமர்சனம் எழுதற அளவுக்கு தெலுங்கு தெரியுமா?

நீரு எவரு நாக்கு தெள்ளீதே :)))

//படத்தில் ஒரு கதாநாயகன், கதாநாயகி இருந்தால் திரைக்கதையில் வேறு என்னதான் செய்ய முடியும் :))

இந்த ஒரு டயலாக்தான் புலிகேசில எனக்கு புடிச்ச டயலாக். கப்பி ஒனக்கும் புடிக்குமா?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வெட்டிப்பயல், நல்ல பதிவு போட்டீங்க..நானும் கொஞ்சம் நாளா தமிழ்ல நல்ல படம் வராத சோகத்துல தெலுங்குப்படம் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன்..மூணு படம் பார்த்தப்புறம், நீங்க சொன்ன மாதிரி சப்டைட்டில் உதவி தேவைப்படலை..தெலுங்குல நிறையதமிழ், ஆங்கில வார்த்தைகள் கலந்து பேசுறது நம்மள மாதிரி ஆளுங்களுக்கு நல்லதா போச்சு..புது மொழியும் கத்துக்க முடியுது..சிடி, திருட்டு சிடியவிட டிவிடி காப்பில நல்லா இருக்கு படங்கள்..இனனும் தெலுங்குப் படம்னா கலர் சட்டை பாட்டு, இரட்டை அர்த்த வசனம்னு பல பேர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க..அத எல்லாம் மாறிப் போச்சு..நம்ம ஊருல ஒரு படம் ரீமேக் ஆகி வர்ற வரைக்கும் காத்திருக்காம நேரடியாவே பாத்திடுறது ஒரு வசதி..போக்கிரி, அத்தடு, நுவ்வொஸ்தானன்டே நேனொத்தண்டா பார்த்தேன்..தெலுங்கு மாதிரியே தமிழ்லயும் எடுத்தாங்கன்னா, போக்கிரி - விஜய்க்கு ஒரு sure hit. அத்தடு அருமையா இருக்க..4 முறை பார்த்துட்டேன்..இதுவும் போக்கிரியும் பார்க்கப் பார்க்க சலிக்காம இருக்கு..அத்தடுவ ஏன் யாரும் தமிழ்ல எடுக்கலன்னு தெரில..சம்திங் சம்திங்க விட ஆந்திர நு.நே அருமை..வேற ஏதாச்சும் நல்ல படம் பார்த்தாலும் தெரியப்படுத்தங்க..கோதாவரி, பொம்மரில்லு நல்ல படம்னு இங்க உள்ள குல்டி காரங்க சொன்னாங்க..பார்க்கணும்..உங்களுக்கு தெரிஞ்ச தெலுங்கு டிவிடி பட பதிவிறக்கத் தளம் இருந்தா சொல்லுங்க..நான் தமிழ்டொரன்ட்ஸ் தளத்தில் இருந்து இறக்கிப் பார்க்கிறேன்

நாமக்கல் சிபி said...

//தம்பி said...
சொல்லவே இல்ல, கொல்டி படம் பாத்துட்டு விமர்சனம் எழுதற அளவுக்கு தெலுங்கு தெரியுமா?

நீரு எவரு நாக்கு தெள்ளீதே :)))
//
நீ இந்தி படத்துக்கெல்லாம் எழுதற... நான் பக்கத்து ஸ்டேட்ல இருக்கற தெலுகு படத்துக்கு தானப்பா எழுதினேன் ;)

தெலுகு நல்லா புரியும்... நாலு படம் பாரு... அப்பறம் நீயும் இதுவே தான் சொல்லுவ ;)

நாமக்கல் சிபி said...

ரவிசங்கர்,
மிக்க நன்றி!!!
நானும் அத்தடு நிறைய தடவ பாத்துட்டேன்... போன வாரம் கூட ஒரு தடவை பாத்தேன். அத்தடு தமிழ்ல எடுத்தா நல்லா வருமானு தெரியல. தெலுகுலையே மகேஷ் பாபுவைத் இல்லாம வேற யாராவது நடிச்சிருந்தாலும் ஓடாதுனு தோனுது.

Desitorrent முயற்சி செய்து பாருங்க.. நானும் Tamiltorrentsல இருந்து தான் தரவிரக்கம் செய்து பார்க்கிறேன்.

முன்னாடி எல்லாம் DVD எடுத்து பாப்போம்.. இல்லைனா தியேட்டருக்கு போவோம். இப்ப வேற வீட்டுக்கு வந்துட்டோம்...

Boston Bala said...

---மறுபடியும் சொதப்ப போறாங்களா...---

ஓ... 'ஜெயம்' & 'சம்திங் சம்திங்' இரண்டுமே தமிழில் மட்டுமே பார்த்ததாலோ என்னவோ... பிடித்திருந்தது!

---இலியானா நல்லா இருப்பா. (KDல கேவலமா காட்டியிருக்காங்கனு நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன)---

'எனக்கு 20 உனக்கு 18' என்று சொதப்பியவுடனேயே நிறுத்தியிருக்க வேண்டும். அல்லது மேபடி படங்களின் மொழிமாற்று வல்லுனர் இயக்குநர் ராஜா போல் ஒழுங்காக மொழியாக்கத்திலாவது இறங்கலாம். இரண்டும் செய்யாமல், இலியானாவுக்கு துரோகம் செய்த ஜோதி கிருஷ்ணாவை என்ன செய்தால் தகும்! :)

நாமக்கல் சிபி said...

// Boston Bala said...
---மறுபடியும் சொதப்ப போறாங்களா...---

ஓ... 'ஜெயம்' & 'சம்திங் சம்திங்' இரண்டுமே தமிழில் மட்டுமே பார்த்ததாலோ என்னவோ... பிடித்திருந்தது!

//
பாபா,
கரெக்டா சொன்னீங்க... ஒரே மொழியில் பார்த்தால் படம் பிடிக்கும்.

இரண்டு மொழிகளிலும் படம் பார்த்தால் பொதுவாக முதலில் பார்த்த படம்தான் பிடிக்கும். கில்லி பார்த்துவிட்டு ஒக்கடு பார்த்தால் கில்லி தான் பிடிக்கும் ;)

//'எனக்கு 20 உனக்கு 18' என்று சொதப்பியவுடனேயே நிறுத்தியிருக்க வேண்டும். அல்லது மேபடி படங்களின் மொழிமாற்று வல்லுனர் இயக்குநர் ராஜா போல் ஒழுங்காக மொழியாக்கத்திலாவது இறங்கலாம். இரண்டும் செய்யாமல், இலியானாவுக்கு துரோகம் செய்த ஜோதி கிருஷ்ணாவை என்ன செய்தால் தகும்! :) //
ஜோதி கிருஷ்ணா மேல நானும் பயங்கர கோபத்திலிருக்கிறேன். எ20உ18ல் த்ரிஷா, ஷ்ரேயா இருவரையும் கேவலமாக காட்டியிருந்தார்.

த்ரிஷா படம் பார்க்க விரும்புவோர் "அத்தடு" பார்க்கவும். ஷ்ரேயா படம் பார்க்க விரும்புவோர் "சந்தோஷம்" (நாகார்ஜினா படம்) பார்க்கவும் :-)

G.Ragavan said...

இந்தப் படக் கதை எம் மகன் கதை மாதிரியே இருக்குதே!

எல்லாத் தெலுங்கும் தெலுங்கல்ல பொம்ம
ரில்லு தெலுங்கே தெலுங்கு -ன்னு சொல்றீங்க...

தெலுங்குப் படங்கள்ள ஒரு பொழுது போக்கு இருக்கும். சை-ன்னு ஒரு படம் வந்தது. மசாலாதான். வெட்டுதான். குத்துதான். ஆனா பாக்க நல்லாயிருந்தது. ரக்பி விளையாட்ட வெச்சி. என்னென்னவோ முயற்சி செய்றாங்க அவங்களும். நம்மாளுங்க திரும்பத் திரும்பி போக்கிரித்தனமா படம் எடுக்குறாங்க.

அதென்னவோ விஜய் நடிச்ச படமாம். பிரகாஷ்ராஜ் அண்ணன். இவரு தம்பீன்னு சொல்லாம ஊருக்குப் போய் அம்மாவுக்கும் தங்கைக்கும் உதவி செய்வாரு. பாதியிலேயே விட்டுருங்கன்னு கதறிக்கிட்டு ஓடி வந்தேன். இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுங்க.

ஸ்ரீகிருஷ்ணார்ஜுன யுத்தம், ராமேஞ்சனேய யுத்தம், த்ரௌபதி வஸ்த்ராபஹரனமு, பூகைலாஸ், தான வீர சூர கர்ணா, ஜம்ப்பலக்கடி பம்ப்பா, அப்பு சேசி பப்பு கூடு, எல்லாம் பாத்தாச்சா?

Boston Bala said...

----இரண்டு மொழிகளிலும் படம் பார்த்தால் பொதுவாக முதலில் பார்த்த படம்தான் பிடிக்கும்.---

ஆமாம். சில விதிவிலக்குகள்: முன்னாபாய் எம்.பி.பி.எஸ் & வசூல்ராஜா; கமலின் ஆங்கிலத் தழுவல் தமிழ்ப்படங்கள்.

முதலில் பார்த்து பிடித்துப் போனது: ஜோ ஜீதா வஹி சிக்கந்தர் (பத்ரி), ஹம் ஆப்கே தில் மே ரஹ்தே ஹை (பிரியமானவளே)

Anonymous said...

Hai, vettipayale ....

Ur site is simple and good,...

I come across to know about ur site in Anandha Vigadan @ 13.08.06
further i like to visite ur site for more informations.... reg new technology avail in the IT Industry.

I hope u read this mail and Reply to vasudevan.may3@gmail.com

Further i like to convey my greets that I too the current student of SREC, Coimbatore but i am searching for the main projects with in a month.

Iam sure i will visit ur site daily from our Net Center. I like to get a list of use full sites from u.

Thankyou
Varungala Vettippayal

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...
இந்தப் படக் கதை எம் மகன் கதை மாதிரியே இருக்குதே!
//
இல்லை... எம்(டன்)மகன்ல அப்பா கேரக்டர் வேற மாதிரி இந்த படத்துல வேற மாதிரி... ஒரு வேளை நான் சொன்னது உங்களை அப்படி சிந்திக்க வெச்சிருக்கலாம்... படத்துல மெயினான விஷயமே ஜெனிலியாதான். ஜெனி பிரகாஷ்ராஜ் வீட்ல 10 நாள் தங்குவா... அந்த 10 நாளும் கொண்டாட்டம்தான். செம காமெடியா இருக்கும் :-)

//
எல்லாத் தெலுங்கும் தெலுங்கல்ல பொம்ம
ரில்லு தெலுங்கே தெலுங்கு -ன்னு சொல்றீங்க...

தெலுங்குப் படங்கள்ள ஒரு பொழுது போக்கு இருக்கும். சை-ன்னு ஒரு படம் வந்தது. மசாலாதான். வெட்டுதான். குத்துதான். ஆனா பாக்க நல்லாயிருந்தது. ரக்பி விளையாட்ட வெச்சி. என்னென்னவோ முயற்சி செய்றாங்க அவங்களும். நம்மாளுங்க திரும்பத் திரும்பி போக்கிரித்தனமா படம் எடுக்குறாங்க.
//
இப்ப புதுசு புதுசா எடுக்கறாங்க... நம்ம ஆளுங்கதான் அங்க போய் கலக்கறாங்க ;)

//
அதென்னவோ விஜய் நடிச்ச படமாம். பிரகாஷ்ராஜ் அண்ணன். இவரு தம்பீன்னு சொல்லாம ஊருக்குப் போய் அம்மாவுக்கும் தங்கைக்கும் உதவி செய்வாரு. பாதியிலேயே விட்டுருங்கன்னு கதறிக்கிட்டு ஓடி வந்தேன். இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுங்க.
//
சிவகாசி... நம்ம பேரரசு டைரக்ஷன் ;)

//
ஸ்ரீகிருஷ்ணார்ஜுன யுத்தம், ராமேஞ்சனேய யுத்தம், த்ரௌபதி வஸ்த்ராபஹரனமு, பூகைலாஸ், தான வீர சூர கர்ணா, ஜம்ப்பலக்கடி பம்ப்பா, அப்பு சேசி பப்பு கூடு, எல்லாம் பாத்தாச்சா?
//
இதுல ஜம்பலக்கடி பம்ப்பா மட்டும் பாத்திருக்கேன் ;)

நாமக்கல் சிபி said...

//Boston Bala said...
----இரண்டு மொழிகளிலும் படம் பார்த்தால் பொதுவாக முதலில் பார்த்த படம்தான் பிடிக்கும்.---

ஆமாம். சில விதிவிலக்குகள்: முன்னாபாய் எம்.பி.பி.எஸ் & வசூல்ராஜா; கமலின் ஆங்கிலத் தழுவல் தமிழ்ப்படங்கள்.

முதலில் பார்த்து பிடித்துப் போனது: ஜோ ஜீதா வஹி சிக்கந்தர் (பத்ரி), ஹம் ஆப்கே தில் மே ரஹ்தே ஹை (பிரியமானவளே)
//

பாபா,
முதல்ல முன்னா பாய் பாத்தீங்களா இல்ல வசூல் ராஜா பாத்தீங்களா?

முன்னா பாய் பாத்தவங்க... வசூல் ராஜ கேவலமா இருக்குனு சொன்னாங்க. ஆனா எனக்கு வசூல் ராஜா பிடிச்சிருந்தது :-)

ராசுக்குட்டி said...

புரியாதோன்னு நெனச்சு பாக்காம விட்டுட்டேன்...அடுத்தமுறை வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் பார்க்கிறேன்.

கோதாவரி-ல அம்மணி சூப்பர்ன்னு வேறேதோ பதிவுல பார்த்த ஞாபகம் நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க! ம்ம்...

G.Ragavan said...

// இப்ப புதுசு புதுசா எடுக்கறாங்க... நம்ம ஆளுங்கதான் அங்க போய் கலக்கறாங்க ;) //

அட மக்கா! நம்மாளுக அங்க போயி கலக்குறது சரிதாம்ல. ஆனா இங்கருக்குற நம்மாளுக வயித்தல்லா கலக்குதாங்க. வரவர தமிழ்ல வர்ர படங்க பிடிக்க மாட்டேங்கி.

// //
அதென்னவோ விஜய் நடிச்ச படமாம். பிரகாஷ்ராஜ் அண்ணன். இவரு தம்பீன்னு சொல்லாம ஊருக்குப் போய் அம்மாவுக்கும் தங்கைக்கும் உதவி செய்வாரு. பாதியிலேயே விட்டுருங்கன்னு கதறிக்கிட்டு ஓடி வந்தேன். இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுங்க.
//
சிவகாசி... நம்ம பேரரசு டைரக்ஷன் ;)//

நம்ம பேரரசா! யய்யா! ஆள விடு சாமி...உண்மையிலே நான் நொந்து நூலாப் போனேன் அந்தப் படத்துல மொதப் பாதியப் பாத்துட்டு...பாதியிலே பாக்காம விட்ட படம் அதுதான்.

// //
ஸ்ரீகிருஷ்ணார்ஜுன யுத்தம், ராமேஞ்சனேய யுத்தம், த்ரௌபதி வஸ்த்ராபஹரனமு, பூகைலாஸ், தான வீர சூர கர்ணா, ஜம்ப்பலக்கடி பம்ப்பா, அப்பு சேசி பப்பு கூடு, எல்லாம் பாத்தாச்சா?
//
இதுல ஜம்பலக்கடி பம்ப்பா மட்டும் பாத்திருக்கேன் ;) //

ஹா ஹா ஹா itz nonsense comedy...but good time pass...கண்ட்டா பகிலி போயிந்தின்னு வில்லி வரும் போது நமக்கே கொஞ்சம் திக்குன்னு இருக்கும்.

நாமக்கல் சிபி said...

// ராசுக்குட்டி said...
புரியாதோன்னு நெனச்சு பாக்காம விட்டுட்டேன்...அடுத்தமுறை வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் பார்க்கிறேன்.

கோதாவரி-ல அம்மணி சூப்பர்ன்னு வேறேதோ பதிவுல பார்த்த ஞாபகம் நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க! ம்ம்...
//
கண்டிப்பா பாருங்க...
படம் அருமை... ஜெனிலியா நடிப்பு பிரமாதம்!!!

நான் கேள்வி ஞானத்துலதான் சொல்றேன்!!! வாய்ப்பு கிடைச்சா பாருங்க... எதுவும் தப்பில்லை ;)

நாமக்கல் சிபி said...

// G.Ragavan said...
// இப்ப புதுசு புதுசா எடுக்கறாங்க... நம்ம ஆளுங்கதான் அங்க போய் கலக்கறாங்க ;) //

அட மக்கா! நம்மாளுக அங்க போயி கலக்குறது சரிதாம்ல. ஆனா இங்கருக்குற நம்மாளுக வயித்தல்லா கலக்குதாங்க. வரவர தமிழ்ல வர்ர படங்க பிடிக்க மாட்டேங்கி.
//
ஆமாம்...
நல்ல தமிழ் படம் பார்த்து ரொம்ப நாளான மாதிரி ஒரு ஃபீலிங்... எப்படியும் சீக்கிரமே நல்ல படங்கள் வருமென்று எதிர்பார்க்கிறேன்...

//நம்ம பேரரசா! யய்யா! ஆள விடு சாமி...உண்மையிலே நான் நொந்து நூலாப் போனேன் அந்தப் படத்துல மொதப் பாதியப் பாத்துட்டு...பாதியிலே பாக்காம விட்ட படம் அதுதான்.
//
அப்பறம் எங்க Gap10அ வெச்சி படம் எடுக்கறாரு... சும்மாவா ;)

//ஹா ஹா ஹா itz nonsense comedy...but good time pass...கண்ட்டா பகிலி போயிந்தின்னு வில்லி வரும் போது நமக்கே கொஞ்சம் திக்குன்னு இருக்கும். //
ஆமாம்... அடிக்கடி தேஜா டிவில போடுவாங்க... அப்ப பாத்தது :-)

நாமக்கல் சிபி said...

Hi Vasudeva,
Thx for the comments.

I feel the mail Id that you have mentioned is not correct... Please let me know the correct one.

With Regards,
Balaji

பழூர் கார்த்தி said...

விமர்சனம் சூப்பர்.. ஸ்டாலின் படத்தை பத்தி ஏதாவது சொல்லுங்களேன், படம் வெற்றியா ??
நல்லா இருக்கா ???

Anonymous said...

hi vets

nice review about the film. enaku thelugu film pakura chances romba rare, tamil remake vantha pakalam. i feel bharath will suite to the character wel..heroin jenlia'vaye podalam. i agree with that illena issue..pokirila super iruntha..KD la sodapitanunga.

Yogen...

நாமக்கல் சிபி said...

// சோம்பேறி பையன் said...
விமர்சனம் சூப்பர்.. ஸ்டாலின் படத்தை பத்தி ஏதாவது சொல்லுங்களேன், படம் வெற்றியா ??
நல்லா இருக்கா ???
//
மிக்க நன்றி...

ஸ்டாலின் படம் சுமார்தானாம்... கடைசி 20 நிமிடம் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன்...

படம் போட்ட காச ஒரு வாரத்துலையே எடுத்துருக்கும் ;)

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
hi vets

nice review about the film. enaku thelugu film pakura chances romba rare, tamil remake vantha pakalam. i feel bharath will suite to the character wel..heroin jenlia'vaye podalam. i agree with that illena issue..pokirila super iruntha..KD la sodapitanunga.

Yogen...
//

யோகன்,
பரத்துக்கு பதிலா சித்தார்த்தையே போட்டுடலாம் ;)

பரத்தும் நல்ல சாய்ஸ்தான்... பாக்கலாம் ;)

aruna said...

இதுக்கு முன்னாடி ரெண்டு தடவ இங்க வந்திருக்கேன். எப்படி இத கவனிக்காம் போனேன் ? நீயும் SREC-ஆ?, அட நான் உன் சீனியர்பா !!..உன் பேரும் பாலாஜியா??... நீயும் ....
அட என்ன லிஸ்ட் நீண்டுட்டே போகுது!!

நம்ம ஜுனியர்னு தெரிஞ்சவுடனே பழைய பதிவு எல்லாம் படிச்சேன். அருமையான நகைச்சுவை ! வாழ்த்துக்கள்!!

நாமக்கல் சிபி said...

//aruna said...
இதுக்கு முன்னாடி ரெண்டு தடவ இங்க வந்திருக்கேன். எப்படி இத கவனிக்காம் போனேன் ? நீயும் SREC-ஆ?, அட நான் உன் சீனியர்பா !!..உன் பேரும் பாலாஜியா??... நீயும் ....
அட என்ன லிஸ்ட் நீண்டுட்டே போகுது!!
//
அக்கா... நீங்க நம்ம காலேஜா!!!
நான் 2003 ஐடி. நீங்க???(அது என்ன கடைசி நீயும்???)

//
நம்ம ஜுனியர்னு தெரிஞ்சவுடனே பழைய பதிவு எல்லாம் படிச்சேன். அருமையான நகைச்சுவை ! வாழ்த்துக்கள்!!
//
மிக்க நன்றி!!! எல்லாமே நகைச்சுவை பதிவு இல்லைங்கக்கா... கொஞ்சம் சீரியஸ் பதிவும் இருக்கும்... அதை நம்ம நண்பர்கள் எல்லாம் நகைச்சுவை பதிவாக்கிட்டாங்க ;)

Anonymous said...

Vishal in tamil version of this movie. See below.

http://www.behindwoods.com/tamil-movie-news/mar-07-02/15-03-07-vishal.html

- Unmai

Sundar said...

Anne, Bommarillu Director Baskar oru tamilan. athaan padam nalla irukku pothumaa....

Anonymous said...

நான் வெட்டிப்பயல் னு blogspot ஆரம்பிக்க தான் வந்தேன், ஏன்னா நான் தட்ஸ்தமிழ் சைட் ல வெட்டிப்பயல் ங்கற பெயரில் கமெண்ட் எழுதிட்டு இருக்கேன் ரொம்ப வருசமா, சரி இதை blog ல போடுவோம்னு வந்தேன், பட் நீங்க ஏற்கனவே ஆரம்பிச்சு பக்காவா பண்ணிட்டு வரிங்க...எனிவே ஆல் தி பெஸ்ட் .. நீங்க தானே சொல்லி இருந்திங்க இவ்வளோ தூரம் வந்துட்டு ஒண்ணும் சொல்லாம போன எப்படின்னு.. அதுக்காக சொல்லல உண்மையாவே இது தான் சொல்ல வந்தேன் :D

கைப்புள்ள said...

//விஜய், ஜெயம் ரவி, பரத், ரவி கிருஷ்ணா முதலானோர் இந்த படத்தின் தமிழாக்கத்தில் நடிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது//

யப்பா...என்ன ஒரு தீர்க்க தரிசனம்? வெட்டிகாரு மீரு மன்ச்சி தீர்க்கதரிசனங்காரு அண்டி....

நேத்து தான் தமிழ் பொம்மரில்லு பாத்தேன். நல்லா எடுத்திருக்காங்க. படம் பாத்ததும் உங்க ஞாபகம் தான் வந்ததுன்னா பாத்துக்கங்களேன்.
:)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இத்திரைப்படத்தை இங்கு பெறலாம்.