தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, October 18, 2006

கவிதை! கவித!! கவுஜ!!!

நேத்து எனக்கும் என் நண்பனுக்கும் நடந்த உரையாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

"டேய் பாலாஜி, ப்ளாக்ல கதையெல்லாம் எழுதறியே! நீ ஏன் கவிதை எழுத முயற்சி பண்ண கூடாது?"

"என்னது கவிதையா??? ஏன்டா யாரும் என் பிளாக் பக்கம் வரக்கூடாதுனு முடிவு பண்ணிட்டயா?"

"இல்லைடா... நீ எழுதறதை எல்லாம் கதைனு ஒத்துக்குறாங்க இல்லை... அதே மாதிரி கவிதையையும் ஒத்துக்குவாங்க"

"அட நாதாரி!!! இத சொல்லத்தான் போன் பண்ணியா?"

"இல்லடா மச்சி... நான் சீரியஸாத்தான் சொல்றேன்"

"டேய்!!! கவிதை எழுதனும்னா லவ் பண்ணனும்... நம்மளப்பத்தி தான் தெரியுமே. அப்பறம் நமக்கு எப்படி கவிதை வரும்"

"டேய் லூசு... அதெல்லாம் ஒண்ணும் இல்லை... பாரதியார் எழுதல... அவர் என்ன லவ்வா பண்ணாரு"

"டேய் அவர் லவ் பண்ணாரா இல்லையானு நமக்கு எப்படிடா தெரியும். அவர் எல்லா பாட்டுலையும் கண்ணம்மானு ஒருத்தவங்க வருவாங்க... ஒரு வேளை அவருக்கும் லவ் ஃபெயிலர் இருந்திருக்கலாம். விட்டா மணிரத்னம் டைரக்ட் பண்ணல அதே மாதிரி நீயும் டைரக்ட் பண்ணுனு சொல்லுவ"

"அதெல்லம் தேவையில்லைடா... சமுதாய கோபமிருந்தா தானா கவிதை வரும்"

"அது என்னடா கோபம்? "

"இந்த சமுதாயத்து மேல உனக்கு கோபமிருக்கா இல்லையா? உண்மைய சொல்லு"

"ஆமாம்...கண்டிப்பா"

"என்ன கோபம்???"

" அஜித் படத்தையும், கேப்டன் படத்தையும் தொடர்ந்து ஃபிளாப் ஆக்கறாங்க இல்லை.. அதனால கொஞ்சம் லைட்டா கோபமிருக்கு. அதெப்படி உனக்கு தெரிஞ்சிது?"

"போடா நாயே!!! அன்னைக்கு கமல் கவிதைக்கு "சூப்பர்.. அருமையா எழுதியிருக்காரு"னு பின்னூட்டம் போட்டிருந்த"

"ஓ!!! அதுவா? ஒண்ணுமே புரியலை... எல்லாரும் அட்டகாசமா இருக்குனு சொல்லிட்டாங்க... கமல் எப்படியும் நல்லாதான் எழுதியிருப்பாருனு அந்த மாதிரி பின்னூட்டம் போட்டுட்டேன். இதெல்லாம் இப்ப ஏன்டா நோண்டற?"

"உன்கிட்ட இத கேட்டது என் தப்புதான்... நான் போனை வெக்கறேன்" சொல்லிட்டு வெச்சிட்டான்.

நானும் இத பத்தி ரொம்ப யோசிச்சேன்... அப்ப ஒரு சந்தேகம் வந்துச்சு. திருக்குறள் கவிதையா???
யார்ட்ட கேக்கலாம்னு தெரியல... சரினு நம்ம நண்பன் ஒருத்தனுக்கு போன் பண்ணேன்.

"டேய் மச்சி ஒரு பயங்கரமான சந்தேகம்டா"

"என்னடா??? சிக்கன் சாப்பிட்டா சிக்கன்குனியா வருமானா? அந்த சந்தேகத்துலதான் நான் மட்டன் சாப்பிட்டு இருக்கேன்"

"அதெல்லாம் இல்லை. திருக்குறள் கவிதையா?"

"என்னடா திடீர்னு இப்படி கேட்டுட?"

"சொல்லு... அது கவிதையா?"

"இல்லைடா மச்சி... கவிதைனா கடைசி வார்த்தை எதுகை, மோனைல வரும் இல்ல"

"அப்ப அது ஒருவேளை கட்டுரையா இருக்குமோ???"

"இருக்கலாம். ஆனால் கட்டுரைனா பெருசா இருக்கும்டா. எதுக்கும் நீ நம்ம பாண்டிய கேளு அவந்தான் இதுல எல்லம் பெரிய ஆளு"

சரினு பாண்டிக்கு போன் செய்தேன்

"டேய் பாண்டி ஒரு சந்தேகம்"

"என்ன சொல்லு"

"திருக்குறள் கவிதையா?"

"ஆமாம். இதுல என்ன சந்தேகம்"

"எப்படி சொல்லற?"

"திருக்குறள் படிச்சா உனக்கு புரியுமா?"

"புரியாது?"

"திருக்குறள் பாட புத்தகத்துல எந்த பகுதியில வருது?"

"செய்யுள் பகுதில"

"முக்கியமான ஒண்ணு... "உன்னருகே நானிருந்தால்"ல பார்த்தி என்ன சொன்னாரு?"

"என்ன சொன்னாரு?"

"ஒரு வரி எழுதும் போது அந்த வரில நிறைய இடமிருந்தாலும் அடுத்த வரில எழுதுனா அது தான் கவிதைனு சொன்னாரில்லை"

"ஆமாம்"

"அப்ப திருக்குறள் கவிதை தானே???"

"ஆமாம்டா மச்சி... நீ பெரிய ஆள்தாண்டா"

------------------------------------

பி.கு: கவிஞர்களே... இது உங்களை கிண்டல் பண்ணி எழுதின பதிவு இல்லை. எந்த கவிதை படிச்சாலும் நமக்கு ஒண்ணும் புரிய மாட்டீங்குதுங்கற ஃபீலிங்ல எழுதனது. தப்பா எடுத்துக்காதீங்க ;)

84 comments:

Unknown said...

பாலாஜி,

எதாவது எழுதும்போது
வெட்டி, வெட்டி
எழுதினால் அது
கவிதை
முடிக்கும்போது
தேவை ஒரு
பஞ்ச்

மேலே நான் எழுதியது ஒரு கவிதையாக்கும்:-)))

நாமக்கல் சிபி said...


அப்ப
இதுவும்
கவிதையா???

இந்த ஆட்டம் நல்லாயிருக்கே ;)

Unknown said...

ஆம்.
இது
கவிதை
தான்:-))

இலவசக்கொத்தனார் said...

அட இதுக்கெல்லாம் போயி இவ்வளவு ஃபீலிங்ஸ் ஆகிக்கிட்டு. உங்க சங்கத்துல நான் கவுஜ பத்திப் போட்டா பதிவை படிப்பா நல்லா...

Anonymous said...

Balaji,
You can try to write Kavithai.......you have that talent I hope.

Divya

நாமக்கல் சிபி said...

தலிவா
என்னையே
கவிஞனாக்கிட்டீங்களே! (ஆச்சர்யக்குறி)

மக்கா வாங்க எல்லாரும் இப்படியே கவிஞர்களாகிடலாம் ;)

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...
அட இதுக்கெல்லாம் போயி இவ்வளவு ஃபீலிங்ஸ் ஆகிக்கிட்டு. உங்க சங்கத்துல நான் கவுஜ பத்திப் போட்டா பதிவை படிப்பா நல்லா...
//
கொத்ஸ்,
பிரச்சனை கவிதை எழுதறதப்பத்தி இல்ல... படிச்ச பாதிக்கூட புரிய மாட்டீங்குது... எல்லாரும் கலக்கிட்டீங்க!!!
பின்னீட்டீங்க...
சூப்பர்னு
பின்னூட்டம் போட்டுருக்கறதப் பாத்தாதான் பயமா இருக்கு. நமக்கு மட்டும்தான் புரியலைனா ஒரு சந்தேகம். அதனாலத்தான் இந்த பதிவு ;)

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
Balaji,
You can try to write Kavithai.......you have that talent I hope.

Divya
//
Hi Divya,
Thx a lot!!!

I have "kavithai thoasham". will explain it in some other post :-)

கதிர் said...

//நேத்து எனக்கும் என் நண்பனுக்கும் நடந்த உரையாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...//

இப்படி காமெடி பண்ணிட்டியே வெட்டி!! :(

வரேன்

aruna said...

திருக்குறள் கவிதையான்னு கேட்டு குழப்பீட்டியே! ஆனா பதிவுல எப்பவும் போல நகைச்சுவை அருமை!

நாமக்கல் சிபி said...

//தம்பி said...
//நேத்து எனக்கும் என் நண்பனுக்கும் நடந்த உரையாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...//

இப்படி காமெடி பண்ணிட்டியே வெட்டி!! :(

வரேன்
//
என்னப்பா ஃபீலிங்?
பதிவு நல்லா இல்லையா???

நாமக்கல் சிபி said...

//aruna said...
திருக்குறள் கவிதையான்னு கேட்டு குழப்பீட்டியே! ஆனா பதிவுல எப்பவும் போல நகைச்சுவை அருமை!
//
ரொம்ப டாங்ஸ்க்கா!!

Anonymous said...

ROTFL :)

ஆமா திருக்குறள் உண்மையிலே கவிதையா?? இல்லையா ??

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ்,
பிரச்சனை கவிதை எழுதறதப்பத்தி இல்ல... படிச்ச பாதிக்கூட புரிய மாட்டீங்குது... எல்லாரும் கலக்கிட்டீங்க!!!
பின்னீட்டீங்க...
சூப்பர்னு
பின்னூட்டம் போட்டுருக்கறதப் பாத்தாதான் பயமா இருக்கு. நமக்கு மட்டும்தான் புரியலைனா ஒரு சந்தேகம். அதனாலத்தான் இந்த பதிவு ;)//

யப்பா சாமி, அதெல்லாம் தெரிஞ்சுதானே நம்ம பதிவுக்குப் போகச் சொன்னேன். இப்பவாவது இந்தப் பதிவுக்குப் போங்கப்பா.

நாமக்கல் சிபி said...

//Vicky said...
ROTFL :)

ஆமா திருக்குறள் உண்மையிலே கவிதையா?? இல்லையா ??
//
விக்கி,
மிக்க நன்றி!!!
அதுதான் நம்ம பாண்டி சொல்லிட்டாரு இல்ல.. அது கவிதை தான் ;)

நாமக்கல் சிபி said...

//யப்பா சாமி, அதெல்லாம் தெரிஞ்சுதானே நம்ம பதிவுக்குப் போகச் சொன்னேன். இப்பவாவது இந்தப் பதிவுக்குப் போங்கப்பா. //

கொத்ஸ்,
கலக்கல்...
எம் சந்தேகம் தீர்ந்தது...
அப்படியே நான் இங்க எழுதியிருக்கிற

//வெட்டிப்பயல் said...

அப்ப
இதுவும்
கவிதையா???
//

//
வெட்டிப்பயல் said...
தலிவா
என்னையே
கவிஞனாக்கிட்டீங்களே! (ஆச்சர்யக்குறி)
//

இதுக்கு உங்க பாணில விளக்கம் சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!

Syam said...

எப்பவும் போல கலக்கல்...எனக்கு கவித மேல இருந்த சந்தேகம் எல்லாம் தீர்ந்து போச்சு...புடியுங்கள் பொற்கா...இருங்க கவிதாவ பத்தி ஒரு சந்தேகம் இருக்கு அதயும் தீர்த்து வெச்சிட்டு அப்புறமா பொற்காசுகள் வாங்கிக்குங்க :-)

Syam said...

//எல்லாரும் அட்டகாசமா இருக்குனு சொல்லிட்டாங்க... கமல் எப்படியும் நல்லாதான் எழுதியிருப்பாருனு அந்த மாதிரி பின்னூட்டம் போட்டுட்டேன். இதெல்லாம் இப்ப ஏன்டா நோண்டற//

இந்த இங்கிலீஸ்,இந்தி படத்துக்கு போனா எல்லாரும் சிரிக்கும் போது நாமும் சிரிப்போமே அதுமாதிரி தான...சேம் பிளட் :-)

நாமக்கல் சிபி said...

//Syam said...
எப்பவும் போல கலக்கல்...எனக்கு கவித மேல இருந்த சந்தேகம் எல்லாம் தீர்ந்து போச்சு...புடியுங்கள் பொற்கா...
//

மிக்க நன்றி தலைவா!!!
கவித மேல இருந்த சந்தேகம் தீர்ந்துடுச்சா??? ரொம்ப சந்தோஷம்...

//இருங்க கவிதாவ பத்தி ஒரு சந்தேகம் இருக்கு அதயும் தீர்த்து வெச்சிட்டு அப்புறமா பொற்காசுகள் வாங்கிக்குங்க :-) //
எந்த கவிதா???

சாமுராய்ல வர ஜெயசீலா??? அவுங்க ஏன் அந்த மாதிரி பண்ணாங்கனு எனக்கும் இன்னும் புரியல :-(

நாமக்கல் சிபி said...

//இந்த இங்கிலீஸ்,இந்தி படத்துக்கு போனா எல்லாரும் சிரிக்கும் போது நாமும் சிரிப்போமே அதுமாதிரி தான...சேம் பிளட் :-) //

அதே தான்...
இதுல இந்தி படத்துக்கு போனா பிரச்சனை இல்லை.. இந்தி தெரியாதுனு ஈஸியா சொல்லிடலாம்.
இங்கிலிஷ் படம்தான் பிரச்சனை.

நான் சொன்னா ஏதோ விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைச்சிக்கறாங்க... என்னத்த பண்றது... கவுண்டரு பணக்காரன் பார்த்த மாதிரிதான் இருக்கும் ;)

கதிர் said...

வா
னில் நட்
சத்திரங்கள்
தோன்றுகின்றன.

இதாம்பா எல்லாத்துக்கும் காரணம்.

சரியா வெட்டி!

Anonymous said...

சத்தியமா எனக்கும் புரியலை... இத 'வெட்டி' படிக்கனுமா, இல்ல படிச்சு வெட்டனுமா?? விவரம் தெரிந்சவங்க தயவு செய்து கொஞ்சம் விளக்குங்களேன்! உங்களுக்குப் புன்னியமா போகும் :)

பாலாஜி அதான் முன்னாடியே சொல்லிட்டேன்ல..கயிதை அடச்சே கவித விளக்கம் ரொம்ப நல்லா இருக்கு! இந்த பாண்டி என்னா புத்திசாலியா இருக்காரு :)

-கணேஷ்

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

வா
னில் நட்
சத்திரங்கள்
தோன்றுகின்றன.

இதாம்பா எல்லாத்துக்கும் காரணம்.

சரியா வெட்டி!//

ஏன் இதோட நிறுத்திட்ட?? இதுக்கு எனக்கு அர்த்தம் தெரியலைனு வானத்த பாத்து சிரிச்சயே அதையும் சொல்ல வேண்டிதான???

ஆனால் இது மட்டும் நம்ம இந்த படைப்புக்கு காரணமில்லை :-)

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
சத்தியமா எனக்கும் புரியலை... இத 'வெட்டி' படிக்கனுமா, இல்ல படிச்சு வெட்டனுமா?? விவரம் தெரிந்சவங்க தயவு செய்து கொஞ்சம் விளக்குங்களேன்! உங்களுக்குப் புன்னியமா போகும் :)
//
கணேஷ்,
என்னாதிது சின்னப்புள்ள தனமா?
படுத்துக்கிட்டும் போத்திக்கலாம்... போத்திக்கிட்டும் படுத்துக்கலாம் ;)

//
பாலாஜி அதான் முன்னாடியே சொல்லிட்டேன்ல..கயிதை அடச்சே கவித விளக்கம் ரொம்ப நல்லா இருக்கு! இந்த பாண்டி என்னா புத்திசாலியா இருக்காரு :)

-கணேஷ்
//
பாண்டிக்கிட்ட இத சொல்லிடறேன்... ரொம்ப சந்தோஷப்படுவான் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Hi Divya,
Thx a lot!!!
I have "kavithai thoasham". will explain it in some other post :-)//

இன்னாது கவித தோஷமா? வாங்க பரிகாரம் பன்ணிடலாம்! தட்சிணையை மட்டும் உங்க கவிதை ஸ்டைலில் ஒரே வரியில் வைக்காம, ஒவ்வொரு வரிக்கும் வச்சிடுப்பா பாலாஜி கண்ணா!
ஓ = $11.00
அப்ப = $51.00
இதுவும் = $101.00
கவிதையா??? = $501.00

பாலாஜி கவித தோஷம் போயிந்தா? :-))

G.Ragavan said...

பெரும்பாலான இன்றைய கவிஞர்களைப் பற்றி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கவிதை. யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். கவிஞர்கள் நமது இலக்கிய ஆதாரமான மரபின் மீதும் பார்வை திரும்ப வேண்டும் என்று எழுதியது.

உரைநடையினை
உடைத்துப் போட்டு
உடைப்பெடுக்கிறதே
தன் கவிதையென்பார்
ஓசையில்லாமல்
ஓசை நயத்தையும் அழிப்பார்
அசைகளைப் பாடல்களில்
வேர் நுனியோடு
அசைத்தறுத்தெடுப்பார்
சீர்களைக் கவிதையில்
சீர் குலைத்து விட்டு
சீர்மை மிகு பாடலென்பார்
வெண்பாவில்
ஒன்றேனும் எழுதியிராமல்
பெண் பாவை
அங்கத்தையே பெரும்பாலும்
தங்கமாய்ச் சொல்லிக்
கவி சமைப்பார்
ஆசிரியர் மேல்
என்ன சினமோ
ஆசிரியப்பாவின்
இலக்கணம் தெரியாமல்
பிலாக்கணமாய்
வரிகளைத் தொகுப்பார்
உவமையையும்
உருவகத்தையும்
உருத் தெரியாதமற்
சிதைத்திருப்பார்
எளிமை என்பார்
அழகு என்பார்
அருமை என்பார்
இதுவே புதுமையும் என்பார்
ஒரு பாவுக்கேனும்
இலக்கணம் தெரியாதெனவுரையார்
வினவிப் பாருங்களேன்
போடா பழைய பஞ்சாங்கமேயென
பொரித்தெடுப்பார் - அவரே
இருபத்தோறாம் நூற்றாண்டில்
தமிழ்க் கவிஞர்!

இன்றைக்குப் பிரபலமான பெரும் புதுக்கவிஞர்கள் எல்லாரும் மரபும் அறிந்தவர்கள் என்பதைப் பெரும்பாலானோர் மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கே இந்தக் கவிதை.

நாமக்கல் சிபி said...

//இன்னாது கவித தோஷமா? வாங்க பரிகாரம் பன்ணிடலாம்! தட்சிணையை மட்டும் உங்க கவிதை ஸ்டைலில் ஒரே வரியில் வைக்காம, ஒவ்வொரு வரிக்கும் வச்சிடுப்பா பாலாஜி கண்ணா!
ஓ = $11.00
அப்ப = $51.00
இதுவும் = $101.00
கவிதையா??? = $501.00

பாலாஜி கவித தோஷம் போயிந்தா? :-))//
இல்லைங்க KRS,
இது இந்த மாதிரி பரிகாரத்துல எல்லாம் போகாதுங்க...

சரி பில்ட் அப் எல்லாம் வேணாம். உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு...

இப்ப எப்படி எல்லா கவிதையும் நல்லா இருக்குனு சொல்றனோ இதுக்கு முன்னாடி ஒரு 7-8 வருஷத்துக்கு முன்னாடி எந்த கவிதையா இருந்தாலும் எழுதறவங்களை புடிச்சி நானும் என் பெரியம்மா பையனும் செமையா ஓட்டுவோம்...

எங்கக்கா எழுதின கவிதையெல்லாம் ஒரு தடவை எங்க கைல மாட்டிடுச்சு. அதை வெச்சி வரவங்க போறவங்க எல்லார்டையும் சொல்லி சொல்லி ஓட்டிட்டு இருந்தோம். (அந்த கவிதைக்கு டிஸ்ட்ரிக்ட் லெவல்ல இண்டர் காலேஜ் லெவெல்ல முதல் பரிசு கிடைச்சிருந்தது. அந்த தைரியத்துலதான் எங்ககிட்ட கொடுத்தாங்க.)

ஆனால் நாங்க ஓட்டன ஓட்டுல அதுக்கு அப்பறம் எந்த கவிதையும் எங்ககிட்ட காட்டல. இப்ப எல்லாம் எழுதறதுமில்லை.

ஒரு வேளை அவுங்க சாபமாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். இன்னைக்கு போன் பண்ணி கேக்கனும்.

இதுக்கு இந்த பரிகாரமெல்லாம் செல்லுமா???

Anonymous said...

awesome post. why dont try writing poetry everybody does understand? because i am also stuck with this modern poetry thing.

நாமக்கல் சிபி said...

ஜிரா,
எங்கேயோ போயிட்டீங்க!!!
6 வருஷத்துக்கு முன்னாடியே உங்களுக்கு இவ்வளவு திறமையா???

நீங்க ஏன் கவிதைக்குனு ஒரு வலைப்பூ ஆரம்பிக்க கூடாது???

பினாத்தல் சுரேஷ் said...

கவிதை பற்றி முழுமையாக அறிய ஒரு அற்புதமான வாய்ப்பு. கவிமடத்தில் சீடர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:

கவிமடம், துபாய். (நல்லா கவனிச்சு பாருங்க, எந்த மேல்மாடியோ மொட்டைமாடியோ இல்லை:-))

மடத்தலைவர்: சாத்தான்குளத்தார்.
முதன்மைச் சீடர்: பினாத்தலார்.

ஹைக்கு முதல் நவீன கவிதைவரை படி கட்டுவது, கவிதை போலவே தோற்றமளிக்க வைப்பது, வாரமலர் முதல் விருட்சம் வரை கவிதை வரத் தேவையான தகுதிகள் - அனைத்தும் அலசப்படும்.

Arunkumar said...

அடடே
பின்றான்ப்பா
பின்றான்ப்பா
note பன்னுங்கப்பா
note பன்னுங்கப்பா

Anonymous said...

அடப்பாவியளா :-)

பொன்ஸ்~~Poorna said...

நல்லாக்கீதுப்பா..

கவுஜ கவுஜ.. படி படி :)))

(எஸ்கேக்கும் மயிலை மன்னாருக்கும் இந்தப் பதிவு பத்தித் தெரியுமா நைனா? ;)

SP.VR. SUBBIAH said...

உரைநடை அல்லாத எழுத்து எல்லாமே கவிதைதான்

ILA (a) இளா said...

http://vavaasangam.blogspot.com/2006_07_01_vavaasangam_archive.html

Welcome to Group of MaNdoogam

Unknown said...

வெட்டி உனக்கு வள்ளூவர் தாத்தா மேல என்ன கோபம்..? அவர் அந்த ஒண்ணேமுக்கால் அடியை எழுத எவ்வளவு பீலிங் ஆயி என்னப் பாடுபட்டிருப்பார்ன்னு யோசிச்சியா? சும்மா இப்படி எல்லாம் கலாய்க்கக் கூடாது ஆமா..

தமிழ் சங்கம் உறுப்பினர்ன்னு என் கடமையை ஆத்திட்டேன்ப்பா..

கார்த்திக் பிரபு said...

neenga enna venamlum sollunga first rendu lines padichavaudane ennai madhri kavidhai eludhravangaluku konjam varuthama irundhirukum..anal thirkural kavidhai illayannu neenga unga frends kita comedyla kujal agitom..thodarutum ungal kavuja..

adhu sari neenga ellarum ippadi comedy a nakkla pannikey pesuvaangal .illai sujadha madhiri karpna uraiyadala?

பூங்குழலி said...

கவிதை..


(பார்த்தீர்களா... நானும் கவிதை எழுதிட்டேனே.. :) ம்... )
நன்றி,

கப்பி | Kappi said...

கண்மணி அன்போட கப்பி போடற பின்னூட்டம்..பொன்மணி உன் பதிவு சூப்பர்..

அங்கங்க சிரிப்பான், அழுவான்லாம் போட்டுக்க..

இந்த கவிதை பத்தி ஒன்னும் புரியாம ஏங்க ஏங்க அழுகையா வருது..ஆனா எனக்கு புரியலைன்னு சொல்லி அந்த சோகம் உன்னையும் தாக்கிடுமோன்னு நினைக்கும்போது வர்ற அழுகைகூட தானா நின்னுடுது....

எனக்கு புரியாத கவிதை அது தன்னால மறந்து போகும்..ஆனா உனக்கு மறக்குமா..அபிராமி..அபிராமி...

இந்த பதிவைப் பார்க்கும்போது பின்னூட்டம் அருவி மாதிரி கொட்டுது..
ஆனா எழுதனும்னு உட்கார்ந்தா இந்த வார்த்தைதான்....

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித கவுஜை அல்ல....அதையும் தாண்டி புனிதமானது..னிதமா..தமா..னது!!!

:)))

Anonymous said...

idhellam too much! :P

நாமக்கல் சிபி said...

//Nandhu said...
awesome post. why dont try writing poetry everybody does understand? because i am also stuck with this modern poetry thing.
//
Hi Nandhu,
Thx...
I am really happy that I have some company ;-)

நாமக்கல் சிபி said...

//சுரேஷ் (penathal Suresh) said...
கவிதை பற்றி முழுமையாக அறிய ஒரு அற்புதமான வாய்ப்பு. கவிமடத்தில் சீடர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:

கவிமடம், துபாய். (நல்லா கவனிச்சு பாருங்க, எந்த மேல்மாடியோ மொட்டைமாடியோ இல்லை:-))

மடத்தலைவர்: சாத்தான்குளத்தார்.
முதன்மைச் சீடர்: பினாத்தலார்.

ஹைக்கு முதல் நவீன கவிதைவரை படி கட்டுவது, கவிதை போலவே தோற்றமளிக்க வைப்பது, வாரமலர் முதல் விருட்சம் வரை கவிதை வரத் தேவையான தகுதிகள் - அனைத்தும் அலசப்படும்.
//
வாங்க பினாத்தலாரே,
நம்ம வீட்டு முதல் முறையா வந்துருக்கீங்கனு நினைக்கிறேன் :-)

இந்த கோர்ஸ்ல சேர்ந்தா எல்லா கவிதையும் எப்படி புரிஞ்சிக்கறதுனு சொல்லி தருவீங்கனா... நான் ரெடி :-)

இராம்/Raam said...

பாலாஜி,

ஹி ஹி நல்லா இருக்கு இந்த பதிவு,

ஊரு பக்கம் இருக்கிறதினாலே இதுக்கு மேலே என்னதை சொல்ல!!!

(I Don't have tamil type writer tool here)

நாமக்கல் சிபி said...

//prakash said...
அடப்பாவியளா :-)
//
இது கவிதையானு எனக்கு தெரியலையே ;-)

அட!
பாவியலா?

இது கவிதைனு நினைக்கிறேன் ;-)

(பாவியல் - பாடல்களை பற்றிய படிப்பு ;) )

நாமக்கல் சிபி said...

//பொன்ஸ் said...
நல்லாக்கீதுப்பா..

கவுஜ கவுஜ.. படி படி :)))
//

ஐயய்யோ பொன்ஸக்கா இப்படி எழுத கூடாது

கவுஜ
கவுஜ
படி
படி

இப்படி தான் எழுதனும்..

//
(எஸ்கேக்கும் மயிலை மன்னாருக்கும் இந்தப் பதிவு பத்தித் தெரியுமா நைனா? ;)
//
இன்னும் அண்ணாத்தயக் காணோம் ;)

நாமக்கல் சிபி said...

// SP.VR.SUBBIAH said...
உரைநடை அல்லாத எழுத்து எல்லாமே கவிதைதான்
//
அப்ப திருக்குறள் கவிதைதானே???

நாமக்கல் சிபி said...

// ILA(a)இளா said...
http://vavaasangam.blogspot.com/2006_07_01_vavaasangam_archive.html

Welcome to Group of MaNdoogam
//
கொத்ஸ் வந்து ஏற்கனவே கொடுத்துட்டு போயிட்டாரு ;)

இண்டர்வியூவுக்கு படின்னு சொன்ன இங்கத்த என்ன விளையாட்டு வேண்டி கெடக்கு ;)

நாமக்கல் சிபி said...

// தேவ் | Dev said...
வெட்டி உனக்கு வள்ளூவர் தாத்தா மேல என்ன கோபம்..? அவர் அந்த ஒண்ணேமுக்கால் அடியை எழுத எவ்வளவு பீலிங் ஆயி என்னப் பாடுபட்டிருப்பார்ன்னு யோசிச்சியா? சும்மா இப்படி எல்லாம் கலாய்க்கக் கூடாது ஆமா..

தமிழ் சங்கம் உறுப்பினர்ன்னு என் கடமையை ஆத்திட்டேன்ப்பா..
//
அடுத்த பதிவில் விடையளிக்கப்படும்

நாமக்கல் சிபி said...

//கார்த்திக் பிரபு said...
neenga enna venamlum sollunga first rendu lines padichavaudane ennai madhri kavidhai eludhravangaluku konjam varuthama irundhirukum..//
உன்னை மாதிரி கவிதை எழுதறவங்க எல்லாம் ஃபீலிங் ஆகத்தேவையில்லைப்பா...

//
anal thirkural kavidhai illayannu neenga unga frends kita comedyla kujal agitom..thodarutum ungal kavuja..
//
மிக்க நன்றி!!1

//adhu sari neenga ellarum ippadi comedy a nakkla pannikey pesuvaangal .illai sujadha madhiri karpna uraiyadala?
//
இது முழுக்க கற்பனைதான்...
உண்மை என்னனா நம்ம தம்பி ஒரு கவிதை காட்டி அர்த்தம் கேட்டாரு... நமக்கு வழக்கம் போல ஒண்ணும் பிரியலை. அத வெச்சி போட்டதுதான் இந்த பதிவு ;)

நாமக்கல் சிபி said...

//பூங்குழலி said...
கவிதை..


(பார்த்தீர்களா... நானும் கவிதை எழுதிட்டேனே.. :) ம்... )
நன்றி,
//
ஆஹா...
கலக்கிட்டீங்க :-)

நாமக்கல் சிபி said...

//Sadai Appa said...
Chicken Sappitta Chikcken kuniy varuma. Bayama Irukkuthu appu.

Appa dengukku enna karanam. Kontcham Arayalame.
//
அதுக்குத்தான் மட்டன் சாப்பிடுங்கனு சொல்லிருக்கான் நம்ம ஃபிரெண்ட்...

மீன், இரா, நண்டு எல்லாம் கூட சாப்பிடலாம் ;)

நாமக்கல் சிபி said...

//
இந்த கவிதை பத்தி ஒன்னும் புரியாம ஏங்க ஏங்க அழுகையா வருது..ஆனா எனக்கு புரியலைன்னு சொல்லி அந்த சோகம் உன்னையும் தாக்கிடுமோன்னு நினைக்கும்போது வர்ற அழுகைகூட தானா நின்னுடுது....//
இந்த நிலமை தான் நமக்கும்...
பாதி கவிதைக்கு இப்படித்தான் பின்னூட்ட்ம் போட வேண்டியதா இருக்கு ;)

கவிஞர் கப்பி நிலவன்...வாழ்க!!!

நாமக்கல் சிபி said...

//ராம் said...
பாலாஜி,

ஹி ஹி நல்லா இருக்கு இந்த பதிவு,

ஊரு பக்கம் இருக்கிறதினாலே இதுக்கு மேலே என்னதை சொல்ல!!!

(I Don't have tamil type writer tool here)
//
மிக்க நன்றி...

அறிஞர். அ said...

ஒரு வரிக்காக
ஒராயிரம்
பின்னூட்டம்

இது நவீன ப்ளாக்கர் கவியாக்கும்

-மாஹிர்

நாமக்கல் சிபி said...

//மாஹிர் said...

ஒரு வரிக்காக
ஒராயிரம்
பின்னூட்டம்

இது நவீன ப்ளாக்கர் கவியாக்கும்

-மாஹிர்//

அருமை... அருமை

ஆமாம்... நம்ம பிளாக்கை பத்தி சொல்லலயே!!!

Arunkumar said...

vetti/all,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

புதுசா கட open பன்னியிருக்கேன். நேரம் கெடச்சா நம்ம கடப்பக்கம் வந்துட்டு போங்க :)

http://findarun.blogspot.com/2006/10/blog-post_19.html

Unknown said...

"டேய்!!! கவிதை எழுதனும்னா லவ் பண்ணனும்... நம்மளப்பத்தி தான் தெரியுமே. அப்பறம் நமக்கு எப்படி கவிதை வரும்"
appadiya enakku theriyaama poche.. adhaan enakku kavidhai ezhudha varlaya? :)

Unknown said...

3. How about a place you have never been to, but would very much like to see?
பத்ரிநாத்.


aanmigavaadhiyo neenga? :)

நாமக்கல் சிபி said...

//appadiya enakku theriyaama poche.. adhaan enakku kavidhai ezhudha varlaya? :)//
இருக்கலாம்... அந்த நம்பிக்கைலதான் நான் இன்னும் சந்தோஷமா இருக்கேன் ;)

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

vetti/all,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)
///
மிக்க நன்றி!!! உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

// புதுசா கட open பன்னியிருக்கேன். நேரம் கெடச்சா நம்ம கடப்பக்கம் வந்துட்டு போங்க :)
///
வந்து அட்டெண்டென்ஸ் போட்டுட்டேன் ;)

நாமக்கல் சிபி said...

//3. How about a place you have never been to, but would very much like to see?
பத்ரிநாத்.

aanmigavaadhiyo neenga? :)//
பத்ரிநாத்தைவிட எனக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் தரது எங்க வீடுதான்பா...

ஆன்மீகவாதியா??? நானா??? :-))

கோவிலுக்கு என்னய கூப்பிட்டு போறதுக்குள்ள எங்க வீட்ல படற கஷ்டம் எங்க அம்மாவுக்குதான் தெரியும் ;)

பினாத்தல் சுரேஷ் said...

//இந்த கோர்ஸ்ல சேர்ந்தா எல்லா கவிதையும் எப்படி புரிஞ்சிக்கறதுனு சொல்லி தருவீங்கனா//

எங்க கோர்ஸ் அதுக்கு ஒரு படி மேலே.. யாருக்கும் புரியாத கவிதைய எழுதச் சொல்லித் தருவோம்;-)

பழூர் கார்த்தி said...

எம்
போன்ற
கவிஞர்களை
கிண்டல் பண்ணுவது
போல்
இவ்விடுகை
இருந்தாலும்
பின்னூட்டம் இடுகிறோம்,
ஏனென்றால்
இன்னும் இருக்கிறது ஆகாயம்...

*****

:-)))o

தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!

:-)))o

அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்

கார்த்திக் பிரபு said...

//கார்த்திக் பிரபு said...
neenga enna venamlum sollunga first rendu lines padichavaudane ennai madhri kavidhai eludhravangaluku konjam varuthama irundhirukum..//
உன்னை மாதிரி கவிதை எழுதறவங்க எல்லாம் ஃபீலிங் ஆகத்தேவையில்லைப்பா...//

idhula edho ulkuthu irukira madhiri iruku

கைப்புள்ள said...

//"ஒரு வரி எழுதும் போது அந்த வரில நிறைய இடமிருந்தாலும் அடுத்த வரில எழுதுனா அது தான் கவிதைனு சொன்னாரில்லை"

"ஆமாம்"

"அப்ப திருக்குறள் கவிதை தானே???"

"ஆமாம்டா மச்சி... நீ பெரிய ஆள்தாண்டா"
//

அட ஆமாம்பா! உம்ம மச்சி உண்மையிலேயே பெரிய ஆள் தான். இதையே தான் இலவசக்கொத்தனாருன்னு ஒரு பெரியவரு 500 பின்னூட்டம் வாங்கி ஒரு வகுப்பா ஜூலை மாசத்துல சொல்லிக் குடுத்தாரு...

கைப்புள்ள said...

//"ஒரு வரி எழுதும் போது அந்த வரில நிறைய இடமிருந்தாலும் அடுத்த வரில எழுதுனா அது தான் கவிதைனு சொன்னாரில்லை"

"ஆமாம்"

"அப்ப திருக்குறள் கவிதை தானே???"

"ஆமாம்டா மச்சி... நீ பெரிய ஆள்தாண்டா"
//

அட ஆமாம்பா! உம்ம மச்சி உண்மையிலேயே பெரிய ஆள் தான். இதையே தான் இலவசக்கொத்தனாருன்னு ஒரு பெரியவரு 500 பின்னூட்டம் வாங்கி ஒரு வகுப்பா ஜூலை மாசத்துல சொல்லிக் குடுத்தாரு...

கைப்புள்ள said...

//இந்த கவிதை பத்தி ஒன்னும் புரியாம ஏங்க ஏங்க அழுகையா வருது..ஆனா எனக்கு புரியலைன்னு சொல்லி அந்த சோகம் உன்னையும் தாக்கிடுமோன்னு நினைக்கும்போது வர்ற அழுகைகூட தானா நின்னுடுது....//

இதெல்லாம் ஜாவா பாவலர் கவிஞ்சரு கப்பி நிலவன் சொல்றாருங்கிறது தான் ஜீரணம் ஆக மாட்டேங்குது.
:)

கைப்புள்ள said...

//இந்த கவிதை பத்தி ஒன்னும் புரியாம ஏங்க ஏங்க அழுகையா வருது..ஆனா எனக்கு புரியலைன்னு சொல்லி அந்த சோகம் உன்னையும் தாக்கிடுமோன்னு நினைக்கும்போது வர்ற அழுகைகூட தானா நின்னுடுது....//

இதெல்லாம் ஜாவா பாவலர் கவிஞ்சரு கப்பி நிலவன் சொல்றாருங்கிறது தான் ஜீரணம் ஆக மாட்டேங்குது.
:)

கப்பி | Kappi said...

//இதெல்லாம் ஜாவா பாவலர் கவிஞ்சரு கப்பி நிலவன் சொல்றாருங்கிறது தான் ஜீரணம் ஆக மாட்டேங்குது.
:) //

முருகேஷா நான் கேட்டேனா???
இப்படி என்னை பஞ்சர் பண்ணிட்டீயே தல...

நாமக்கல் சிபி said...

//சுரேஷ் (penathal Suresh) said...
//இந்த கோர்ஸ்ல சேர்ந்தா எல்லா கவிதையும் எப்படி புரிஞ்சிக்கறதுனு சொல்லி தருவீங்கனா//

எங்க கோர்ஸ் அதுக்கு ஒரு படி மேலே.. யாருக்கும் புரியாத கவிதைய எழுதச் சொல்லித் தருவோம்;-) //

அப்ப நான் ரெடி!!! சீக்கிரம் நம்மலும் கவிஞர் ஆயிடலாமா?

நாமக்கல் சிபி said...

//
சோம்பேறி பையன் said...
எம்
போன்ற
கவிஞர்களை
கிண்டல் பண்ணுவது
போல்
இவ்விடுகை
இருந்தாலும்
பின்னூட்டம் இடுகிறோம்,
ஏனென்றால்
இன்னும் இருக்கிறது ஆகாயம்...

*****

:-)))o
//
இது யாரையும் நக்கல் பண்ற போஸ்ட் இல்லைங்க... எல்லாம் ஒரு ஃபீலிங்ல எழுதன போஸ்ட் ;)

//
தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!

:-)))o

அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன் //
மிக்க நன்றி...
தங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

//idhula edho ulkuthu irukira madhiri iruku //
இதுல என்னப்பா உள்குத்து இருக்கு...
நீ எழுதன கவிதைதான் நமக்கு புரியுதே ;)

நாமக்கல் சிபி said...

//அட ஆமாம்பா! உம்ம மச்சி உண்மையிலேயே பெரிய ஆள் தான். இதையே தான் இலவசக்கொத்தனாருன்னு ஒரு பெரியவரு 500 பின்னூட்டம் வாங்கி ஒரு வகுப்பா ஜூலை மாசத்துல சொல்லிக் குடுத்தாரு... //
ஆமாம் தல... அத அவர் வந்து சொல்லிட்டாரு...

நானும் இப்ப அதை புரிஞ்சிக்கிட்டேன் ;)

நாமக்கல் சிபி said...

//இதெல்லாம் ஜாவா பாவலர் கவிஞ்சரு கப்பி நிலவன் சொல்றாருங்கிறது தான் ஜீரணம் ஆக மாட்டேங்குது.
:) //
அவர் நமக்காக சும்மா சொன்னது...

அவர் திறமை எல்லாருக்கும் தெரியும் :-)

நாமக்கல் சிபி said...

//முருகேஷா நான் கேட்டேனா???
இப்படி என்னை பஞ்சர் பண்ணிட்டீயே தல... //
கப்பி,
கேட்டாலும் கேக்கலைனாலும் நியாயம்னு ஒண்ணு இருக்கு இல்ல

கைப்புள்ள said...

//கப்பி,
கேட்டாலும் கேக்கலைனாலும் நியாயம்னு ஒண்ணு இருக்கு இல்ல //

வாய்யா என் சிங்கக்குட்டி,
நல்லா அப்படி கேளுப்பா நியாயத்தை
:)

நாமக்கல் சிபி said...

//வாய்யா என் சிங்கக்குட்டி,
நல்லா அப்படி கேளுப்பா நியாயத்தை
:) //
தல,
உனக்கு ஒண்ணுனா விட்டுடுவோமா??? ஆப்பு வெக்கத்தான் நாங்க இருக்கோமில்ல ;)

Anonymous said...

Super conversation nga...
enjoyed a lot !!!

நாமக்கல் சிபி said...

//Sundari said...
Super conversation nga...
enjoyed a lot !!!
//
romba thxnga

குமரன் (Kumaran) said...

பாலாஜி. நானும் ரெண்டு கவிதைகளை கூடல் பதிவுல போட்டிருக்கேன். படிச்சீங்களா? ஏறக்குறைய உரைநடையை மடிச்சி மடிச்சுப் போட்டது தான். :-)

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran) said...

பாலாஜி. நானும் ரெண்டு கவிதைகளை கூடல் பதிவுல போட்டிருக்கேன். படிச்சீங்களா? ஏறக்குறைய உரைநடையை மடிச்சி மடிச்சுப் போட்டது தான். :-) //
கடைசியா போட்டதா?
அதை படித்தேன்... சூப்பரா இருந்துச்சுங்க...

அறிஞர். அ said...

//ஆமாம்... நம்ம பிளாக்கை பத்தி சொல்லலயே!!!//

அட உங்க வலைப்பூவைத்தான் சொன்னேனுங்க!

(ஒரு கல்ல இரண்டு மாங்காய்...ஹிஹி...சமாளிபிகேசன்)

நாமக்கல் சிபி said...

//மாஹிர் said...

//ஆமாம்... நம்ம பிளாக்கை பத்தி சொல்லலயே!!!//

அட உங்க வலைப்பூவைத்தான் சொன்னேனுங்க!

(ஒரு கல்ல இரண்டு மாங்காய்...ஹிஹி...சமாளிபிகேசன்) //

இது எல்லாம் கொஞ்சம் ஓவருங்கோ :-)

Anonymous said...

அட!
பாவியலா?

இது கவிதைனு நினைக்கிறேன் ;-)

(பாவியல் - பாடல்களை பற்றிய படிப்பு ;) )

து

சூ
ப்

ர்!