தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, July 19, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4!!!

மென்பொருள் துறையில் புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான தேர்வு முறை எப்படி இருக்கும்????

பொதுவாக இப்படிதான் எல்லா கம்பெனியும் வேலைக்கு ஆள் எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு முறையை கையாள்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான கம்பெனி கையாளும் முறை என்னவென்றால்,
முதல் சுற்று: Aptitude Test.
இரண்டாவது சுற்று: Technical Interview
மூன்றாவது சுற்று: HR Interview
இதில் ஒரு சில கம்பெனிகளில் Technical Interviewவும், HR Interviewவும் சேர்ந்தே இருக்கும்.

சரி இனி ஒவ்வொரு சுற்றுக்கும் தயார் செய்வது எப்படி, முக்கியமாக ரெசுமே தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம். வேலை தேட முக்கியாமன ஒன்று ரெசுமே (Resume).

நாங்க வேலை தேடும் போது செய்த பெரிய தவறு, நம்மை முதலில் தயார் செய்து கொண்டு ரெசுமே தயார் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டுருந்தது. ஆயுள் முழுக்க படித்தாலும் எந்த ஒரு டெக்னாலஜியுலும் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாது என்று உணர்ந்தோம்.

ஆகவே வேலை தேடும் போது முதலில் தேவைப்படுவது ரெசுமே தான்.
ரெசுமே எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.

1) முக்கியமாக 2-3 பக்கங்களுக்குள் இருப்பது நல்லது.
2) SSLC, +2, டிகிரி மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.
3) எனக்கு நிறைய தெரியும் என்று காட்டிக்கொள்ள நினைத்து தெரியாததை எல்லாம் போடாதீர்கள். டிகிரியில் படித்த அனைத்தையும் Area Of Interestல் போடாதீர்கள். நன்றாக தெரிந்ததையே முடிந்த அளவு போடுங்கள். இல்லையென்றால் ரெசுமேவில் இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நான் பார்த்த ரெசுமே ஒன்றில் இருந்தது:
Known:
Operating System: DOS, Windows 9x/ME/XP, Linux, Unix
Languages: C, C++, Java, COBOL...
Packages: VB, .NET...
DataBase: Oracle 8, MS Access, DB2, Sybase
Area Of Interest**: Data Structure, Object Oriented Concepts, DBMS, Computer Networks, Compiler Design, Microprocessor...
உண்மையில் அவனுக்கு (எனக்கும்) இதில் எதுவுமே ஒழுங்காக தெரியாது. இதில் இருக்கும் அனைத்தையும் தினமும் படிக்க வேண்டும் என்று நினைத்து எதையும் படிக்கமாட்டான்.
4) அதிக பில்ட் அப் கொடுக்காதீர்கள். (Achievements: உண்மையாக ஏதாவது இருந்தால் போடுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுவது நல்லது. College Symposium எல்லாம் போடுவது தேவையில்லை என நினைக்கிறேன்)
5) ரெசுமேவில் பிறந்த நாள் இருப்பது நல்லது. (ஏனென்றால் இன்போஸிஸ் போன்ற கம்பெனிகள் பார்ப்பது பெயர், பிறந்த நாள், மதிப்பெண்கள் தான். Name, DOB, Marks are the primary keys) . பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் தேவை இல்லை.

**Area Of Interest:
நான் படிக்கும் போது ரொம்ப யோசிச்சி எல்லாம் படிச்சதில்லை. எனக்கு வேலை கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள், Object Oriented Conceptsஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் Freshers க்கு கேட்கும் கேள்விகள் ஒரளவிற்கு சுலபமாகத்தான் இருக்கும்.
(Abstraction, Encapsulation, Inheritance, Diff Bw Structural Approach and OOPs...).
முடிந்த அளவு AOI 1 அல்லது 2க்கு மேல் போட வேண்டாம் என்பது என் எண்ணம்.

படிக்கும் போதே நான் நன்றாக புரிந்து படித்தேன். எனக்கென்று ஒரு லட்சியம் இருக்கிறது. நான் ஜாவா டெவலப்பராகவோ/நெட் ஒர்க் அனலிஸ்டாகவோ/ டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டராகவோ தான் ஆவேன் என்பவர்கள் அதற்கான முயற்சியை மட்டும் மேற்கொள்ளுங்கள். கொஞ்சம் லேட் ஆனாலும் நீங்கள் விரும்பிய பணியை செய்யலாம்.

Aptitude Testக்கு தயார் செய்வது எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தொடரும்...

PS:

வைக் அவர்களின் பின்னூட்டம்:
AOI, final year project சம்மந்தப்பட்டதா இருந்தால் நல்லது, அதை பத்தி கேள்வி கேட்டு interview ஓட்டிடலாம் (அதாவது சொந்தமா செஞ்ச project'ஆ இருந்தால் :))

அதாவது அவங்க கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி, எனக்கு இது தெரியுங்கற மாதிரி பில்ட் அப் குடுத்தா , உனக்கு என்ன தெரியும்னு அவங்களுக்கு சோதிக்க தோனும் அதனால வேற எதுலேயும் கேள்வி கேட்க மாட்டாங்க.

10 comments:

Gyanadevan said...

Here is my experience
http://thappu.blogspot.com/2005/12/blog-post.html

நாமக்கல் சிபி said...

ஞானதேவன்,
மிக்க நன்றி. நீங்கள் சொன்னது 100/100 உண்மை.

ஒரு காலத்தில் நாங்களும் அப்படிதான் இருந்தோம். சரியான வழிகாட்டல் இருந்தால் சீக்கிரம் தேறிவிடுவார்கள்.
அதற்கான ஒரு சின்ன முயற்சிதான் இது.

Vaikunth said...

AOI, final year project சம்மந்தப்பட்டதா இருந்தால் நல்லது, அதை பத்தி கேள்வி கேட்டு interview ஓட்டிடலாம் (அதாவது சொந்தமா செஞ்ச project'ஆ இருந்தால் :))
இந்த மாதிரி வைவா'வை ஓட்டிய அனுபவம் உண்டு :) அதாவது அவங்க கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி, எனக்கு இது தெரியுங்கற மாதிரி பில்ட் அப் குடுத்தா , உனக்கு என்ன தெரியும்னு அவங்களுக்கு சோதிக்க தோனும் அதனால வேற எதுலேயும் கேள்வி கேட்க மாட்டாங்க.

-என்னால் முடிந்த 0.02$

நாமக்கல் சிபி said...

Vaik,
மிக்க நன்றி.

நான் இதை மறந்தேவிட்டேன். எனக்கு தெரிந்தவரையில் 90% பேர் சொந்தமாக பிராஜக்ட் பண்ணாதவர்களே.

ஆனால் பிராஜக்டை தெரிந்துவைத்திருப்பார்கள். அதனால் அதையும் AOIல் சேர்ப்பது நல்லது.

வடுவூர் குமார் said...

மென்பொருளைப்பற்றி கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது ஆனால் வேலைக்காக அல்ல.அதனால் சில சமயம் c புத்தகம் படிப்பேன் சில சமயம் Perl படிப்பேன்.
ஓரளவுக்கு மேல் புத்தகத்தில் புரியவில்லை...
பார்ப்போம் உங்கள் வழியாக "வெளிச்சம்" தெரிகிறதா என்று.
தொடருங்கள்

நாமக்கல் சிபி said...

குமார்,
தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.

இந்த தொடர் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு உதவுவதற்காகவே.
எனக்கு தெரிந்தவரையில் சொல்கிறேன்.

நாமக்கல் சிபி said...

எ.பியாரே நன்றி.

தவறுகளை திருத்திவிட்டேன்

குமரன் (Kumaran) said...

//) ரெசுமேவில் பிறந்த நாள் இருப்பது நல்லது. (ஏனென்றால் இன்போஸிஸ் போன்ற கம்பெனிகள் பார்ப்பது பெயர், பிறந்த நாள், மதிப்பெண்கள் தான். Name, DOB, Marks are the primary keys) . பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் தேவை இல்லை.
//

நம்ம ஊருக்கு இது தேவையாய் இருக்கலாம் பாலாஜி. ஆனால் அமெரிக்காவில் தேவையில்லை. இங்கே நேர்முகத்தில் வயதைக் கேட்பதே சட்டவிரோதம். வயதைக் கொண்டு வேலைக்கு எடுப்பதில் வேறுபாடு காட்டக்கூடாது என்பதற்காக. ஆனால் நம் நாட்டில் வயதும் ஒரு தகுதியாக இருப்பதால் நம் நாட்டில் பிறந்த நாளைக் குறிப்பிடுவது சரியே என்று நினைக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

"சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க" என்ற உங்கள் தொடரின் அனைத்து பகுதிகளின் சுட்டிகளையும் ஒருங்கிணைத்து ஒரு பதிவில் போட்டீர்களென்றால் உதவியாக இருக்கும்.

நாமக்கல் சிபி said...

தளபதியாரே!!! முடித்துவிட்டேன்...
நீங்கள் சொன்ன பணியை ;)