தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, May 03, 2009

Tenant Commandments - நான் பார்த்த நாடகம்

எனக்கு ரொம்ப நாளா மேடை நாடகம் பார்க்கணும்னு ஆசை. ஒரு வழியா நேத்து அது நிறைவேறியது. நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் நடத்திய சித்திரை திருவிழாவில் ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் (Stage Friends) நடத்திய டெனண்ட் கமெண்ட்மெண்ட் (Tenant Commandment) நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.


இது பல ஆண்டுகளுக்கு முன் எஸ்.வி.சேகர் நாடகக் குழுவில் க்ரேஸி மோகன் இருந்த பொழுது நடத்தப்பட்ட நாடகம். அதை தூசி தட்டி ஒரு சில மாற்றங்களுடன் ஸ்டேஜ் பிரெண்ட்ஸால் நடத்தப்பட்டது. கதை, வசனம் : க்ரேஸி மோகன். இயக்கம் : குரு. எஸ்.வி.சேகர் ஏற்று நடத்திய பாத்திரத்தையும் அவரே செய்தார். 

இது நாடகத்தைப் பற்றிய என் விமர்சனமல்ல. எனது எண்ணங்கள். அவ்வளவே.

நாடகத்தின் கதை இது தான், வீட்டு சொந்தக்காரரால் சிரமத்திற்குள்ளாகும் வாடகைக்கு குடியிருக்கும் குடித்தினக்காரர், சொந்தமாக வீடு கட்டி, அதில் வாடகைக்கு குடியேறுபவர்களை பத்து விதிகள் விதித்து கொடுமைப்படுத்தி வீட்டைவிட்டு துரத்துகிறார். அவருடைய லட்சியம் அதைப் போல் நூறு பேரைத் துரத்துவது தான். அவருடைய இந்த செயலை வெறுக்கும் அவர் மகனும், வீட்டு புரோக்கரும் சேர்ந்து அவருக்கு புத்தி வர வைக்கிறார்கள். இரண்டேகால் மணி நேர நாடகத்தை இரண்டு வரிகளில் சொல்வது கஷ்டம். 



சாது சங்கரனா நடிச்ச மோகன் கொன்னுட்டார். அட்டகாசமான நடிப்பு. செம எக்ஸ்ப்ரஷ்ன்ஸ் அண்ட் டைம்லி டயலாக் டெலிவரி. அவரால அட்டகாசமா காமெடி ரோல் பண்ண முடியும். அதே மாதிரி ரொம்ப ரொம்ப இயல்பா நடிச்சிருக்காரு அய்யாசாமி கேரக்டர்ல நடிச்ச ரமணி. அவர் நிஜமா நடிச்ச மாதிரியே தெரியல. அவ்வளவு இயல்பு. அவர் டயலாக் இல்லாதப்பவும் சரியான முகபாவம் காண்பித்து கொண்டிருந்தார். இவுங்க ரெண்டு பேர் நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.


நாடகத்தை இயக்கி, பத்து வேடத்தை (உடனே தசாவதாரம் கமலுக்கு போட்டியானு நினைச்சிடாதீங்க. இது கேரக்டர் பேரு) ஏற்று எந்த குறையும் இல்லாமல் செய்தார் குரு. அவருடைய நடிப்பிலும் எந்த குறையும் இல்லை. நஷ்ட ஈடு நாதமுனி கேரக்டர் இன்னும் பலமாக அமைத்திருக்கலாம். அவர் எந்த குறையும் இல்லாமலே நடித்தார். அதே போல் செல்வராஜ் கேரக்டர் செய்த பாஸ்கர், கே.டி. பெருமாள் பாத்திரத்தில் நடித்த ராம், ஆரோக்கிய சாமி பாத்திரத்தில் நடித்த அரவிந்த், ஆதிகேசவன் கேரக்டரில் நடித்த ஸ்ரீநிவாசன், நவநீதமாக நடித்த சுரேஷ், குழந்தைசாமி பாத்திரத்தில் நடித்த கணேஷ் சந்திரா அனைவரும் நன்றாகவே நடித்திருந்தார்கள். குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா...

இனி என் இரண்டணாக்கள் :

அமெரிக்காவில் நடத்தப்படும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலானோர் வருவது தங்கள் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் பார்க்க வைத்து, அவர்களும் பெருமைப்பட தான். அதனால் இங்கே நடத்தப்படும் நிகழ்ச்சிகள் சில்ட்ரெண் ஃபிரெண்ட்லியாக (Children Friendly) இருக்க வேண்டும். ஆனால் இந்த நாடகத்தில் நிறைய டபுல் மீனிங் டயலாக்ஸ், மேலும் நிறைய so called கெட்ட வார்த்தைகள். அதை இவர்கள் சரி செய்ய வேண்டும்.

அடுத்து டயலாக்ஸ் இன்னும் கொஞ்சம் பிரில்லியண்டாக இருந்திருக்கலாம். என்னடா இவன் க்ரேஸி டயலாக்கையே குறை சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம். எடுத்துக்காட்டிற்கு வீட்டு புரோக்கர் பரமசிவத்திடம் ஆதிகேசவன் ”உங்க வீட்டு ஓனர் உங்களை கொடுமைப்படுத்தினத்துக்கு நீங்க அவரை பழிவாங்காம டெனண்ட்ஸை பழி வாங்கறது என்ன நியாயம்?” அப்படினு கேக்கற இடத்துல அவர் சொல்ற டயலாக்ஸ் கச கசனு இருக்கு.

அதுக்கு பதிலா, 

ப்ரோக்கர் : உங்க வீட்டு ஓனர் உங்களை கொடுமைப்படுத்தினத்துக்கு நீங்க அவரை பழிவாங்காம டெனண்ட்ஸை பழி வாங்கறது என்ன நியாயம்?

ஆதிகேசவன் : வீட்டு ஓனரை பழி வாங்கறது எப்படினு உனக்கு தெரியுமா?

ப்ரோக்கர் : தெரியாதே

ஆதிகேசவன் : எனக்கும் தெரியலை. அதனால தான் வீட்டில குடியிருக்க வரவங்களை நான் பழிவாங்கறேன்.

அப்படினு சொல்லியிருக்கலாம்.



அப்பறம் ப்ரோக்கர் பரமசிவமாக நடித்த ராஜகோபால் எதிர்ல இருக்கறவரைப் பார்த்தே பேச மாட்றார். எப்பவுமே ஆடியன்ஸை பார்த்தே பேசறார். செம காமெடியா இருந்தது. எதிர்ல இருக்கறவர் ஏதாவது பேசினா இவர் நேரா நம்மல பார்த்து பேசறார். அடுத்து கண்ணை சிமிட்டி சிமிட்டி பேசினா வெக்கப்படறதுனு நினைச்சிட்டார் போல கமலா கேரக்டர்ல நடிச்ச கிரித்திகா. அப்பறம் அவுங்க ரொம்ப டென்ஷனா நடிச்ச மாதிரி இருந்தது. இயல்பா இல்லை. அதே மாதிரி மகமாயி மங்களமா நடிச்ச ராதிகா மேடமும் ரொம்ப டென்ஷனா நடிச்ச மாதிரி இருந்தது.

அப்பறம் கவுண்டர்னு சொல்ற சாது சங்கரன், ஐயர் ஆத்து பாஷைல பேசறார். ரியலிஸ்டிக்கா இல்லை.

நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோள். நாடகம் நடந்த வேகத்தை விட குழந்தைகள் அங்க இங்கனு ஓடிட்டு இருந்த வேகம் தான் அதிகமா இருந்தது. இது நாடகம் பார்க்கறவர்களை பாதிப்பதை விட நாடகத்தில நடிப்பவர்களுக்கு அதிக இடையூறாக இருக்கும். அவர்களுடைய கவனமும் சிதற வாய்ப்பிருக்கிறது. அதனால் பெற்றோர்களுக்கு முன்னெச்செரிக்கையாக இதை அறிவிக்கலாம். அதே போல் சினிமா தியேட்டர் செல்லும் போது செல்ஃபோன்களை அணைப்பதை போல நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் அனைவரையும் அதை அணைக்க சொல்லிவிடலாம். நடிப்பவர்களுக்கு இடையூறாக இல்லாமல் இருக்கும். அதே போல் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதை போலவும் இருக்கும்.

ஒரு நல்ல மாலை பொழுதை எங்களுக்கு அமைத்து கொடுத்த நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்துக்கும், ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் குழுவினருக்கும் என் நன்றிகள் பல. 

Stage Friends, You guys really rock. All the best!!!

12 comments:

Venkat said...

வெட்டிப்பயலே,

பலே விமரிசனம்! தங்களது எழுத்து திறமையை மெச்சுகிறேன். உங்களது Dialogueஐ உபயோகித்தால் உங்களுக்கு ஒரு சன்மானமும் கொடுக்க வேண்டாமென்றால், எங்களது New Jersey அரங்கேற்றத்தில் நிச்சயமாக கேட்கலாம். நன்றி.

ரமணி.

ILA (a) இளா said...

இன்னும் 13 நாள்ல நானும் இப்படி பதிவு எழுதுவேனோ என்னமோ..

வெட்டிப்பயல் said...

// Venkat (aka) Ramani (aka) Venki said...
வெட்டிப்பயலே,

பலே விமரிசனம்! தங்களது எழுத்து திறமையை மெச்சுகிறேன். உங்களது Dialogueஐ உபயோகித்தால் உங்களுக்கு ஒரு சன்மானமும் கொடுக்க வேண்டாமென்றால், எங்களது New Jersey அரங்கேற்றத்தில் நிச்சயமாக கேட்கலாம். நன்றி.

ரமணி.//

உங்களோட இந்த பின்னூட்டமே சன்மானம் தான். தாராளமாக நீங்க பயன்படுத்தலாம்.

உங்களோட நடிப்பு அருமை. I didn't feel you were acting. It was so real.

ஒரு நல்ல நாடகம் பார்த்த திருப்தியை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றிகள் பல.

வெட்டிப்பயல் said...

//ILA said...
இன்னும் 13 நாள்ல நானும் இப்படி பதிவு எழுதுவேனோ என்னமோ..//

இளா,
நிச்சயம் தவறவிடாதீர்கள். ஒரு நல்ல நாடகத்தைப் பார்த்த திருப்தி நிச்சயம் கிடைக்கும். It was really good.

Boston Bala said...

வெட்டி, தூள் விமர்சனம்.

(இனி நான் எழுத என்ன பாக்கி வச்சீங்க :)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...
வெட்டி, தூள் விமர்சனம்.

(இனி நான் எழுத என்ன பாக்கி வச்சீங்க :)//

உங்க விமர்சனத்தை தான் ஆவலோட எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் :-)

எப்படி பிரிச்சி மேய போறீங்கனு பார்க்கணும்.

Boston Bala said...

ஒளிப்படங்களுக்கு நன்றி! ( New England Tamil Sangam: Chithirai Vizha Drama Photos « 10 Hot )

Sridhar V said...

பத்து வேஷத்தைப் பத்தி எழுதினீங்க... கணேஷ் சந்திரா நாலு வேஷம் போட்டாரே (இந்த நாடகத்தில்தானே?) அதப் பத்தி ஏன் எழுதல? :)

சின்னப் பையன் said...

நல்ல விமர்சனம். முடிஞ்சா (ட்ராமா இல்லே... எனக்கு) பாக்கறேன்....

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...
பத்து வேஷத்தைப் பத்தி எழுதினீங்க... கணேஷ் சந்திரா நாலு வேஷம் போட்டாரே (இந்த நாடகத்தில்தானே?) அதப் பத்தி ஏன் எழுதல? :)
//

illai thala. ithula oru role thaan. Kuzhanthai Samy.

Romba ezhuthathathuku kaaranam, bloggernu romba pugazharanganu teamla mathavanga ninaipangaloanu oru ennam thaan. He did his role well.

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...
நல்ல விமர்சனம். முடிஞ்சா (ட்ராமா இல்லே... எனக்கு) பாக்கறேன்....
//

My sincere suggestion is "Please don't miss it". It was really good and it will help you to understand how drama works (if you don't have much idea). Apparam neengalum try pannalam :-)

MSV Muthu said...

என‌க்கு இன்னும் இந்த‌ ஆசை நிறைவேறாமலே இருக்கு..