தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, October 13, 2008

தமிழ் சினிமா - கேள்வி பதில் ஆட்டம்

நம்மல இந்த ஆட்டத்துக்கு கூப்பிட்ட முரளி கண்ணனுக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எப்படியும் பிறந்த ஒரு மாசத்துலயே பார்க்க ஆரம்பிச்சிருப்பேனு நினைக்கிறேன். வீட்ல அந்த அளவுக்கு படம் பார்ப்பாங்க. அப்படி ஒரு மாசத்துல இல்லைனாலும் ஆறாவது மாசத்துல “தீராத விளையாட்டு பிள்ளை”க்கு என்னை தூக்கிட்டு போனாங்க. அங்க எங்க பக்கத்துல உட்கார்ந்து என்னை தூக்கினவங்களை எங்க அம்மாவுக்கு பிடிச்சி போச்சு. அப்பறம் விசாரிச்சு பார்த்த எங்க அம்மாவோட அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எங்க மாமா இப்பவும் சொல்லுவாரு தீராத விளையாட்டு பிள்ளைக்கு போய் என்னை மாட்டிவிட்டுட்டியேடா மாப்பிளைனு. இது நடந்தது திருக்கோவிலூர் தனலட்சுமி தியேட்டர்ல.

நினைவு தெரிந்து பார்த்த முதல் படம்னா “நாயகன்”. அப்ப எங்க பாட்டி வீட்ல அடிக்கடி வாடகைக்கு டெக் எடுப்பாங்க. காலைல நல்ல மழை பெஞ்சுட்டு இருந்துச்சு. எழுந்தவுடனே டெக்ல நாயகன் படம் போட்டுட்டாங்க. கூரைல இருந்து தண்ணி சொட்டிட்டு இருந்ததெல்லாம் ஞாபகமிருக்கு. எங்க மாமா பசங்க எல்லாம் ஏமாத்தி பள்ளிக்கூடம் மட்டம் போட்டுட்டாங்க. எப்பவுமே பாலாஜி நல்ல பையனு சொல்லி சொல்லியே என்னை ஏமாத்திடுவாங்க. நான் மட்டும் பள்ளிக்கூடம் கிளம்பிட்டு இருந்தேன். சரியா நான் சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பும் போது தான் நிழல்கள் ரவி செத்து கமல் அழுவுற சீன். கிளம்பவே மனசில்லை. நான் போக மாட்டேனு சொன்னா எங்க அம்மாவுக்கு எங்க அப்பாக்கிட்ட இருந்து திட்டு விழும். அதனால போகறதுக்கு கொஞ்சம் கூட மனசில்லாம பள்ளிக்கூடம் போனேன். அந்த தென்பாண்டி சீமையிலே பாட்டு ரொம்ப நாளைக்கு காதுல ஒலிச்சிக்கிட்டே இருந்தது. 

மத்தபடி தியேட்டர்ல பார்த்த படம்னா, கள்ளக்குறிச்சில கீத்து கொட்டாய்ல பார்த்த ”வல்லவன் ஒருவன்”. அந்த படத்துக்கு போகும் போது சரியா வீட்டை பூட்டாம போயிட்டோம்னு பயிந்துட்டு படம் போட்ட கொஞ்ச நேரத்துலயே வந்துட்டோம். பூட்டினவங்க சரியா பூட்டாம வந்துட்டாங்களேனு கடுப்பா இருந்துச்சு.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

போன வாரம் சரோஜா பார்த்தேன். சென்னை 28 இயக்கிட்டு இப்படி ஒரு படம் இயக்கிருக்காரேனு வருத்தமா இருந்துச்சு. சென்னை 28 நம்ம படம்னு ஒரு ஃபீலிங் இருந்துச்சு. பொண்ணுங்களை கடத்தற படம் சமீபத்துல நிறைய பார்த்ததும் (அஞ்சாதே, Silence of the lambs, வேட்டையாடு விளையாடு, அப்பறம் நான் எழுதின ஆடு புலி ஆட்டம் இந்த மாதிரி நிறைய) படம் பிடிக்காம போனதுக்கு காரணமா இருக்கலாம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

வெள்ளி - ஐயா, தாம் தூம், நாயகன் (ரித்திஷ்)
சனி - Horton Hears a who, Iron Man, Pink Panther, You've got Mail, ஜெயம்கொண்டான்
ஞாயிறு - சக் தே இந்தியா
திங்கள் (இன்று) - அரசாங்கம். (இதை எழுதும் போது குருவி பார்த்துட்டு இருக்கேன். இண்டர்வெல் முடிஞ்சிருக்கு. தாங்க முடியல...)

அரசாங்கம்ல வேற யாராவது கதாநாயகனா நடிச்சிருக்கலாம். இல்லைனா விஜயகாந்த் இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்த படத்துல நடிச்சிருக்கலாம். கொஞ்சம் இங்கிலீஷ் பேசறதையும் Gaptain தவிர்த்திருக்கலாம். படம் விறுவிறுப்பா இருந்தது உண்மை. 

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

உன்னால் முடியும் தம்பி

உதயமூர்த்தி கேரக்டரும், அந்த தாத்தா கேரக்டரும், அக்கம் பக்கம் பாராட சின்ன ராசா பாட்டும் எப்பவும் மனசை பிசைஞ்சிக்கிட்டே இருக்கும். நம்ம படிச்ச படிப்புக்கு இந்த சமுதாயத்துக்கு நல்லது ஏதாவது செய்யனும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்

பாபா. 

படம் மட்டும் பாட்ஷா மாதிரி இருந்திருந்தா....


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

மை டியர் குட்டிச்சாத்தான். 3-D.

ரீ-ரிலிஸ்ல பார்த்தேன். ரொம்ப ரசிச்சேன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கைல எந்த பேப்பர்ல சினிமா பத்தி கிடைச்சாலும் தவறாம வாசிக்கறதுண்டு. ஆனா பாதிக்கு மேல டுபாக்கூரா இருக்கும்னு ஒரு நம்பிக்கை :)
குமுதம், விகடன், சினிக்கூத்து, வண்ணத்திரை, வாரமலர் இப்படி எதுவும் விடறதில்லை.

7.தமிழ்ச்சினிமா இசை?

பொதுவா எனக்கு காதல் பாட்டு எல்லாம் பிடிக்காது. தன்னிம்பிக்கை கொடுக்கற பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அதனால அதிகமா பிடிச்சது பட்டுக்கோட்டையார் பாடல்கள் தான். சோக பாட்டு எல்லாம் சுத்தமா பிடிக்காது. அதே மாதிரி ஃபீலிங்ஸ் பாட்டும். குத்து பாட்டு ஓகே :) 

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய தெலுகு படம் பார்ப்பேன். அது ஊருக்கே தெரியும். அதிகம் தாக்கிய படம்னா “ஆ நலுகுரு”.  அட்டகாசமான படம். அதுக்கு அடுத்து பொம்மரில்லு.

உலக திரைப்படம்னா - ஆங்கிலப்படம் தான். அதுல ரொம்ப பிடிச்ச படம்னா "Terminal". "shawshank redemption"ம் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா அதை விட பிடிச்ச படம் Terminal. 

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இதுவரை இல்லை. தொடர்ந்து டெவில் ஷோ எழுதியிருந்தா ஆட்டோ வந்திருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரொம்ப நல்லா இருக்கு. வித விதமான படங்கள். ஒரு பக்கம் ஹை பட்ஜட் படங்கள், ஒரு பக்கம் லோ பட்ஜட்லயே கலக்கற படங்கள். இப்படி நிறைய வெரைட்டி படங்கள் நமக்கு காத்திருக்கிறது. 

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எல்லார் வீட்லயும் நாடகம் பார்த்து உயிர வாங்குவாங்க. டீவியையும் ப்ளாக் பண்ணிட்டா ரொம்ப நல்லா இருக்கும். அப்படி நடந்தா நான் நிறைய புத்தகம் படிப்பேன். சின்ன பசங்க எல்லாம் சாயந்திரம் வீட்டை விட்டு வெளியே வந்து ஏதாவது ஓடி பிடிச்சி விளையாடுவாங்க. ஆனா இது ஒரு வருஷம்னு இல்லாம ஒரு ஏழு எட்டு வருஷமிருந்தா நல்லா இருக்கும் :)

சரி... அஞ்சு பேரை கூப்பிடுனுமாம்...

1. நாகை சிவா 
2. தேவ்
3.KRS
4. ராயல் ராம் 
5. இளா13 comments:

முரளிகண்ணன் said...

super balaji

வெட்டிப்பயல் said...

//
முரளிகண்ணன் said...
super balaji//

மிக்க நன்றி முக :)

Sathiya said...

//வெள்ளி - ஐயா, தாம் தூம், நாயகன் (ரித்திஷ்)
சனி - Horton Hears a who, Iron Man, Pink Panther, You've got Mail, ஜெயம்கொண்டான்
ஞாயிறு - சக் தே இந்தியா
திங்கள் (இன்று) - அரசாங்கம்//

நடுவுல சோறு தண்ணி ஏதாச்சும் உண்டா?

Bleachingpowder said...

//உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
மை டியர் குட்டிச்சாத்தான். 3-D.
ரீ-ரிலிஸ்ல பார்த்தேன். ரொம்ப ரசிச்சேன்.//

இது தமிழ் படம் அல்ல. மலையாள திரைப்படம், தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டார்கள்.

வெட்டிப்பயல் said...

//
sathiya said...
//வெள்ளி - ஐயா, தாம் தூம், நாயகன் (ரித்திஷ்)
சனி - Horton Hears a who, Iron Man, Pink Panther, You've got Mail, ஜெயம்கொண்டான்
ஞாயிறு - சக் தே இந்தியா
திங்கள் (இன்று) - அரசாங்கம்//

நடுவுல சோறு தண்ணி ஏதாச்சும் உண்டா?//

நடுவுல ஞாயிறு வெளிய ஃபால் கலர் பார்க்க போயிட்டேன். ராத்திரி வந்து பார்த்தேன் :)

அன்னைக்கு கோஸ் கூட்டு செஞ்சி, காலி ஃபிளவர் ஃபிரை செஞ்சேன் :)

வெட்டிப்பயல் said...

//
bleachingpowder said...
//உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
மை டியர் குட்டிச்சாத்தான். 3-D.
ரீ-ரிலிஸ்ல பார்த்தேன். ரொம்ப ரசிச்சேன்.//

இது தமிழ் படம் அல்ல. மலையாள திரைப்படம், தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டார்கள்.//

மிக்க நன்றி பிளிச்சிங் பவுடர் :)

கபீஷ் said...

//உன்னால் முடியும் தம்பி


உதயமூர்த்தி கேரக்டரும், அந்த தாத்தா கேரக்டரும், அக்கம் பக்கம் பாராட சின்ன ராசா பாட்டும் எப்பவும் மனசை பிசைஞ்சிக்கிட்டே இருக்கும். நம்ம படிச்ச படிப்புக்கு இந்த சமுதாயத்துக்கு நல்லது ஏதாவது செய்யனும்.//


ரிப்பீடேய்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தொழில்நுட்பத்தில் தாக்கிய படம் ன்னா... ஆச்சரியபட வைத்தன்னு அர்த்தமா நான் இது தெரியாம சாய்ஸ் ல விட்டுட்டேனே.. ( சாய்ஸ் எங்கே இருந்தது பதிலை எழுதல அவ்வளோதான்)

வெட்டிப்பயல் said...

//Kabheesh said...
//உன்னால் முடியும் தம்பி


உதயமூர்த்தி கேரக்டரும், அந்த தாத்தா கேரக்டரும், அக்கம் பக்கம் பாராட சின்ன ராசா பாட்டும் எப்பவும் மனசை பிசைஞ்சிக்கிட்டே இருக்கும். நம்ம படிச்ச படிப்புக்கு இந்த சமுதாயத்துக்கு நல்லது ஏதாவது செய்யனும்.//


ரிப்பீடேய்
//

டாங்கிஸ் கபீஷ் :)

வெட்டிப்பயல் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
தொழில்நுட்பத்தில் தாக்கிய படம் ன்னா... ஆச்சரியபட வைத்தன்னு அர்த்தமா நான் இது தெரியாம சாய்ஸ் ல விட்டுட்டேனே.. ( சாய்ஸ் எங்கே இருந்தது பதிலை எழுதல அவ்வளோதான்)
//

தாக்கிய படம்னா மனதை தாக்கிய படம்னு வெச்சிக்கலாம்னு இப்படி எழுதிட்டேன்க்கா :)

எனக்கு அந்த படத்தோட திரைக்கதை ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த 3 Dக்கு ஏத்த மாதிரி திரைக்கதை :)

Divyapriya said...

சினிமா இல்லன்னா எப்டி இருக்கும்னு சொன்னது சூப்பர்...நிஜம் :))

கப்பி | Kappi said...

//அரசாங்கம் - படம் விறுவிறுப்பா இருந்தது உண்மை. //

இப்படி சொல்லி நாலு பேரை உசுப்பேத்தி பார்க்கவிட்டு ஆப்படிக்கனும்..இதானே உங்க ப்ளானு? :))

SurveySan said...

///shawshank redemption"ம் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா அதை விட பிடிச்ச படம் Terminal. ////

really?
in my view shawshank gets 95% and terminal gets 40%. ;)