அப்பாடா இன்னைக்கு ஞாயித்திக்கிழமை. அம்மா, அப்பா, அக்கா எல்லாரோடையும் சேர்ந்து வெளிய போகலாம்.
இன்னைக்கு எப்படியும் பீச்க்கு கூப்பிட்டு போகனும்னு சின்ன அக்கா போன வாரமே அழுது அப்பாவை ஒத்துக்க வெச்சிட்டா. அதனால கண்டிப்பா இன்னைக்கு அப்பா பீச்சுக்கு கூப்பிட்டு போவாரு. அங்க போயி ஜாலியா விளையாடிட்டு வரலாம்.
சரியாக 4 மணிக்கு காரில் கிளம்பினோம். சின்ன அக்கா அப்பாவோட முன்னாடி உக்கார்ந்துக்கிட்டா. பெரிய அக்காவும் அம்மாவும் பின்னாடி ஜன்னல் பக்கத்துல உக்கார்ந்துக்கிட்டாங்க. நான் ரெண்டு பேருக்கும் நடுவுல அம்மா மடில தலை வெச்சி படுத்துட்டு வந்தேன். எப்பவுமே எனக்கு மட்டும் ஜன்னல் சீட் தர மாட்றாங்க. எல்லாம் இந்த பெரிய அக்கா பண்ற வேலை.
பீச் போய் சேரும் போது மணி 5:30. இப்பவே நல்லா குளிர் காத்து வீசிட்டு இருக்கு. அக்காங்க ரெண்டு பேரும் ஐஸ் கிரிம் கேட்டாங்க. இந்த குளிர்ல எனக்கு ஐஸ் கிரிம் வேணாம்னு நான் சொல்லிட்டேன். அவுங்க ரெண்டு பேருக்கு மட்டும் அப்பா கோன் ஐஸ் கிரிம் வாங்கி கொடுத்தாரு.
அதுக்கு அப்பறம் பீச்ல விளையாட ஆரம்பிச்சோம். நாங்க மூணு பேரும் சேர்ந்து வீடு கட்டி விளையாடினோம். பெரிய அக்கா தான் நிறைய மண்ணு போட்டு கோபுரம் அழகாக்குச்சு. அப்பறம் தண்ணில போய் காலை வெச்சி விளையாடிட்டு இருந்தோம். சின்ன அக்கா கொஞ்சம் நல்லா தண்ணிக்குள்ள போக ஆரம்பிச்சா. அப்பறம் நான் போட்ட சத்தத்துல அப்பா வந்து அவள தண்ணில இருந்து இழுத்துட்டு வந்து நல்லா அடிச்சாரு. அக்கா அழுதுச்சி. நாந்தான் அவ கண்ணை துடைச்சேன். இருந்தாலும் அவளுக்கு என் மேல கோபம் போகல. எங்கிட்ட எதுவுமே பேசல. போய் அம்மா மடில படுத்துக்குச்சு.
அப்பறம் எல்லாரும் கோவிலுக்கு போனோம். அங்க எல்லாம் நல்லா சாமி கும்பிட்டோம். அந்த கோவில் ஐயர் எனக்கு மட்டும் கைல குங்குமம் கொடுக்காம அம்மாக்கிட்டே சேர்த்து கொடுத்துட்டாரு. அவர் எப்பவுமே அப்படித்தான். எந்த குழந்தைக்கும் அவர் கொடுக்க மாட்டாரு. கேட்டா நாங்க எல்லாம் கீழ போட்டுடுவோமாம். எல்லாரும் தூண்ல மட்டும் போடறாங்க.அது மட்டும் தப்பில்லை.
அப்பறம் ஹோட்டலுக்கு போய் எல்லாரும் சாப்பிட்டு வீட்டுக்கு வந்து சேரும் போது மணி 11:00. நல்ல வேளை எனக்கு இன்னும் ஸ்கூல் ஆரம்பிக்கல. அக்காங்கதான் நாளைக்கு சீக்கிரம் எழுந்திரிச்சி அழுதுட்டே கிளம்புவாங்க. அம்மா தான் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் கிளப்பிவிடுவாங்க.
மணி 11:30. எல்லோரும் படுக்க போனோம். அக்காங்க ரெண்டு பேரும் அப்பா, அம்மாவுக்கு நடுவுல படுத்துக்கிட்டாங்க. பெரிய அக்கா அப்பா பக்கத்துல படுத்துக்கிட்டா. சின்ன அக்காக்கு அம்மா மேல காலை போட்டுட்டு தூங்கினா தான் தூக்கம் வரும்னு சொல்லுவா. நான் இப்ப எங்க படுக்கறது. நான் கேட்டாலும் அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. நான் அவுங்களுக்கு இந்த பக்கம் படுத்துக்கறேன்.
எல்லாரும் தூங்கிட்டாங்க. வீடே அமைதியா இருட்டா இருக்கு. எனக்கு பயமா இருக்கு. இந்த மாதிரி இருட்டான இடத்துல நான் இருக்கும் போது தான் எனக்கு அந்த வலி வந்துச்சு. அத நினைச்சா இப்பவும் பயமா இருக்கு. என் கை, கால், தலை எல்லாம் பிச்சாங்க...அப்பறம் தான் நான் வெளியவே வந்தேன்....
அம்மா... இப்பவாவது என் குரல் உனக்கு கேக்குதாம்மா. மூணாவது பெண் குழந்தையா உருவானது என் தப்பாமா? சொத்த பார்த்துக்க பையன் தான் வேணுமா? நாங்க உங்களை பார்த்துக்க மாட்டோமா? ஏன் இப்படி பண்ணீங்க... இந்த மூணு வருஷமா நான் தினமும் உங்கக்கிட்ட பேசறனே உங்களுக்கு கேக்கவே இல்லையா? என் அழுகைக் கூட உங்களுக்கு கேக்கலையா? நான் உங்களை எல்லாம் பாசமா பார்த்துக்குவேணே!!! ஏன் இப்படி பண்ணீங்க? ஏன்???
80 comments:
லவ் ஸ்டோரியும், சாப்ட்வேர் பத்தி மட்டுமே எழுதறனு பல இடத்துல இருந்து வந்த கம்ப்ளைண்ட்க்காக இந்த பதிவு...
சோகமா இருக்கறதுக்கு மன்னிக்கவும்...
கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்க்கின்றன பாலாஜி. பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளையும் கருவிலேயே கொல்வதைப் பற்றி இந்தப் பதிவைப் படித்த பிறகு அதிகம் கவலைப்படத் தொடங்கிவிட்டேன்.
பாலாஜி
நல்லா எழுதியுள்ளீர்கள்..
இது மாதிரி எத்தனை குழந்தைகள் இல்லாமல் போனதோ??
ம்ம்ம்ம்ம்ம்....
//குமரன் (Kumaran) said...
கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்க்கின்றன பாலாஜி. பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளையும் கருவிலேயே கொல்வதைப் பற்றி இந்தப் பதிவைப் படித்த பிறகு அதிகம் கவலைப்படத் தொடங்கிவிட்டேன். //
ஆமாம் குமரன்...
கருவை அழிப்பது மிகவும் கொடுமையான செயல். அதுவும் கொலைக்கு நிகரானதே!!!
//Sivabalan said...
பாலாஜி
நல்லா எழுதியுள்ளீர்கள்..
//
மிக்க நன்றி சிபா...
// இது மாதிரி எத்தனை குழந்தைகள் இல்லாமல் போனதோ??
ம்ம்ம்ம்ம்ம்.... //
:-((((
நீங்க pro-choice-ஆ அல்லது pro-life-ஆ?
பாலாஜி!
நல்லா எழுதியிருக்கீங்க!
//இந்த மாதிரி இருட்டான இடத்துல நான் இருக்கும் போது தான் எனக்கு அந்த வலி வந்துச்சு. அத நினைச்சா இப்பவும் பயமா இருக்கு. என் கை, கால், தலை எல்லாம் பிச்சாங்க...அப்பறம் தான் நான் வெளியவே வந்தேன்....
//
:(((
//Boston Bala said...
நீங்க pro-choice-ஆ அல்லது pro-life-ஆ? //
பாபா,
இதை படிச்சா உங்களுக்கு நான் என்னவா இருப்பனு தோனுது???
வழக்கமான பாணி கதையோன்னு நினைச்சேன். அப்புறமா அது ஒரு வளர்ப்புப் பிராணியோன்னு நினைச்சேன். ஆனா அதுவுமில்லாம வித்தியாசமா முடிச்சிட்டீங்க.
ரொம்ப சோகமாப் போச்சுங்க. இதைப் படிச்சு.
//நாமக்கல் சிபி said...
பாலாஜி!
நல்லா எழுதியிருக்கீங்க!
//
மிக்க நன்றி சிபி...
//இலவசக்கொத்தனார் said...
வழக்கமான பாணி கதையோன்னு நினைச்சேன். அப்புறமா அது ஒரு வளர்ப்புப் பிராணியோன்னு நினைச்சேன். ஆனா அதுவுமில்லாம வித்தியாசமா முடிச்சிட்டீங்க.
ரொம்ப சோகமாப் போச்சுங்க. இதைப் படிச்சு. //
கொத்ஸ்,
இது எனக்கு தெரிஞ்சி நிஜமாலுமே நடந்த ஒரு விஷயம்... அதை அப்படியே கதையா மாத்திட்டேன்... யாராவது இதை படிச்சாவது மாறினால் சந்தோஷமே!!!
பாபா,
நானே சொல்லிடறேன்...
நான் முட்டையும் Non-Vegனு சொல்ற கேஸ்...
பாலாஜி, இந்தப் பதிவைப் படித்த போது ஏற்கனவே இதே போல் ஒரு பதிவைப் படித்திருக்கிறோமே என்று தோன்றியது. இப்போது தான் நினைவிற்கு வந்தது தேசிகனும் இதே பாணியில் ஒரு பதிவு எழுதியிருந்தார் என்று. இதோ அந்தப் பதிவின் சுட்டி.
http://www.desikan.com/blogcms/?item=103
//குமரன் (Kumaran) said...
பாலாஜி, இந்தப் பதிவைப் படித்த போது ஏற்கனவே இதே போல் ஒரு பதிவைப் படித்திருக்கிறோமே என்று தோன்றியது. இப்போது தான் நினைவிற்கு வந்தது தேசிகனும் இதே பாணியில் ஒரு பதிவு எழுதியிருந்தார் என்று. இதோ அந்தப் பதிவின் சுட்டி.
http://www.desikan.com/blogcms/?item=103 //
குமரன்,
இப்போழுதுதான் படித்தேன்... அருமையாக எழுதியிருக்கிறார்... ஆனால் கருப்பொருள் வித்யாசமிருக்கிறது...அதை போல் கதையின் சம்பவங்களும் வித்யாசமாக இருப்பதாகவே உணர்கிறேன் :-)
படிக்க ஆரம்பிக்கும் போது இது பையன் ஏதோ ஜாலியான கதைனு நினைச்சேன்....கடைசி பாரா படிக்கும் போது ரொம்ப சோகமா போச்சு வெட்டி...ஆனா இது இன்னும் தொடருதுனு நினைக்கும் போது நம்ம மக்களோட அறியாமய நினைச்சு கஷ்டமா இருக்கு....
பாலாஜி,
பிறக்காத அந்தக் குழந்தையை ஏன் உருவாக்கினார்கள்?
பெற்றோர் செய்யும் தவறுக்கு அளவே இல்லை பாருங்கள்.
எங்க வீட்டிலேயும் இந்த மாதிரி
மூணாவதுன்னா, மூணாவதா??????? அப்படின்னாங்க.
நானும் பிடிவாதமா எனக்கு இந்தக் குழந்தையும் வேண்டும்னு சொல்லிட்டேன்.
அதுவும் 36வருடங்களுக்கு முன்னாலியே.:-)
நல்ல கதை பாலாஜி.
குமரன், தேசிகன் எழுதுனது வேற, இவர் எழுதுனது வேற. ஆனா தேசிகன் எழுதின கதை மாதிரியே ஓகை நடராஜன் ஒரு கதை எழுதி இருக்காரு. அதன் சுட்டி இதோ
இப்படியும் நடந்துட்டு தான் இருக்குங்கறது ரொம்ப வருந்தத்தக்கது...
பல முகம் காட்டுறீங்க வெட்டி... வருந்த வைக்கும் கதை :(((((
வெட்டி,
மனதைத் தொட்ட கதை. இன்றும், குறிப்பாக இந்தியாவின் பல பகுதிகளில் இப் பெண் சிசுக் கொலைகள் நடப்பதாக அண்மையில் BBC யில் படித்த ஞாபகம். என்ன சொல்வதென்றே தெரியவில்லை :(
//சோகமா இருக்கறதுக்கு மன்னிக்கவும்...//
என்ன செய்வது சோகங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லையே? ஆனால் இம்மாதிரி சோகங்கள் தவிர்க்க முடியுமென்றாலும் சிலரால் இன்னும் தொடர்வதுதான் சோகம்.
ரொம்ப சோகமா இருக்கு வெட்டி. இப்பிடி இன்னமும் நடக்குறது அத விட சோகம் :(
//Syam said...
படிக்க ஆரம்பிக்கும் போது இது பையன் ஏதோ ஜாலியான கதைனு நினைச்சேன்....கடைசி பாரா படிக்கும் போது ரொம்ப சோகமா போச்சு வெட்டி...ஆனா இது இன்னும் தொடருதுனு நினைக்கும் போது நம்ம மக்களோட அறியாமய நினைச்சு கஷ்டமா இருக்கு....//
கோஞ்சம் சீரியஸா எழுதலாம்னு போட்ட பதிவு தான் இது...
அடுத்து ஜாலி கதை தான்...
//வல்லிசிம்ஹன் said...
பாலாஜி,
பிறக்காத அந்தக் குழந்தையை ஏன் உருவாக்கினார்கள்?
பெற்றோர் செய்யும் தவறுக்கு அளவே இல்லை பாருங்கள்.
//
ஆமாம்மா...
யார் செய்யும் தவறுக்கு யார் தண்டனை அனுபவிப்பது? ஆனா அந்த அம்மாவுக்கும் வலி இருக்கவே செய்யும்...
//
எங்க வீட்டிலேயும் இந்த மாதிரி
மூணாவதுன்னா, மூணாவதா??????? அப்படின்னாங்க.
நானும் பிடிவாதமா எனக்கு இந்தக் குழந்தையும் வேண்டும்னு சொல்லிட்டேன்.
அதுவும் 36வருடங்களுக்கு முன்னாலியே.:-)
//
ரொம்ப சந்தோஷமா இருக்குமா!!!
மூணாவது பெண் குழந்தை பிறந்தால் வீட்டில் செல்வம் சேரும் ::-)
//
நல்ல கதை பாலாஜி.
//
மிக்க நன்றிம்மா..
//சேதுக்கரசி said...
இப்படியும் நடந்துட்டு தான் இருக்குங்கறது ரொம்ப வருந்தத்தக்கது...//
ஆமாங்க சேதுக்கரசி...
thalaiva nnalla avndhruku!!
adhu enna "en kai kalgalai inge than picchi erinjanga nnu" oru vari enaku puriyalai??abarshanai than appdi solreengala?
என்ன வெட்டி....முடிவுல மட்டும் முடிச்சு போடுற வித்தை கைவந்துருச்சு போல. கதை நல்லாயிருந்தது.
கருக்கலைப்பு...சரியா தவறா என்று தெரியவில்லையே. அது குழந்தைக்கு வலிக்குமா? கருக்கலைப்பு என்பதை முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் செய்வார்கள். அப்படிச் செய்வது குழந்தைக்கு வலியை உண்டாக்குமா? தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.
ஒருவேளை குழந்தை பிறவிக்கோளாறோடு பிறக்கும் பொழுது...அப்பொழுதும் கருக்கலைப்பு தவறாகுமா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
நல்லா எழுதியிருக்கீங்க!
வருத்தப்பட வைக்கும் கதைன்னாலும்
எழுதப்படவேண்டிய விஷயம்.
ஹாய் வெட்டி!!!
நல்ல அருமையான கதை!!! கருத்தம்மாவை பார்த்தப்போவெ கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது!!! என்ன பண்றது ...
கவிஞர் சொல்ர மாதிரி :- திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!! அந்த மாதிரி தான் இதுவும்
இன்றும் பல கிராமங்களில் பெண் சிசுக்கள் கண் திறந்து மண் பார்க்கும் முன் கண் மூடி மண் பார்த்துகொண்டு தான் இருக்கின்றன...
என்ன தான் நாம் விடியலை நோக்கி முன்னேறி கொண்டு இருந்தாலும் நாம் எதிர்பார்க்கும் அந்த 'கிராமத்து விடியல்' எட்டாக்கனியாகவே உள்ளது...
என்று விடியுமோ.........
http://ullathilirundhu.blogspot.com
வருமுன் காப்போம் தான் சிறந்த பாலிசி.
சிலர் இங்கே கூறியது போல் கண்ணில் கண்ணிர் வரவைகிற கதை.
- உண்மை
//ஒருவேளை குழந்தை பிறவிக்கோளாறோடு பிறக்கும் பொழுது...அப்பொழுதும் கருக்கலைப்பு தவறாகுமா? //
ஜிரா, அதுவும் தவறெனாறு சொல்ல சிலர் இருந்தாலும் எனது அனுபவங்களில் இருந்து நான் சொல்வது, இது போன்ற பிறவிக் கோளாறு இருக்கையில் கலைத்து விடுவதே நல்லது.
கோளாறென நான் சொல்ல வருவது பிறந்த பின் அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அது மற்றவர்களைச் சார்ந்தே இருக்கும் அளவிற்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருப்பது போன்ற நிலமைகளில். வேறு சிறு குறைகளுக்காக இல்லை.
//ஒருவேளை குழந்தை பிறவிக்கோளாறோடு பிறக்கும் பொழுது...அப்பொழுதும் கருக்கலைப்பு தவறாகுமா? //
ஜிரா, அதுவும் தவறெனாறு சொல்ல சிலர் இருந்தாலும் எனது அனுபவங்களில் இருந்து நான் சொல்வது, இது போன்ற பிறவிக் கோளாறு இருக்கையில் கலைத்து விடுவதே நல்லது.
கோளாறென நான் சொல்ல வருவது பிறந்த பின் அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அது மற்றவர்களைச் சார்ந்தே இருக்கும் அளவிற்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருப்பது போன்ற நிலமைகளில். வேறு சிறு குறைகளுக்காக இல்லை.
பாலாஜி,
உங்க உந்துதலால் ஒரு கவிதை போட்டிருக்கேன் பாருங்க.
http://manamumninavum.blogspot.com/2007/01/24.html
---இதை படிச்சா உங்களுக்கு நான் என்னவா இருப்பனு தோனுது???---
விபி,
ப்ரோ-லைஃப்.
கதைக் கருவை ரொம்ப அலசினால், அடுத்த முறை எழுத உட்காரும்போது, கை மட்டுப்பட்டு விடும் அல்லது முகமூடி தேடும் ; )
ஆகவே, நடை நன்றாக இருந்தது. கதைக் களத்துடன் எனக்கு .01% கூட ஒப்புதல் கிடையாது.
தொடர்ந்து கலக்க வாழ்த்துகள் : )
//ஜி said...
பல முகம் காட்டுறீங்க வெட்டி... //
மிக்க நன்றி ஜி...
//
வருந்த வைக்கும் கதை :(((((
//
யாராவது திருந்தினால் பரவாயில்லை...
//வெற்றி said...
வெட்டி,
மனதைத் தொட்ட கதை. இன்றும், குறிப்பாக இந்தியாவின் பல பகுதிகளில் இப் பெண் சிசுக் கொலைகள் நடப்பதாக அண்மையில் BBC யில் படித்த ஞாபகம். என்ன சொல்வதென்றே தெரியவில்லை :(//
வெற்றி,
நான் இதை என் தெரிந்தவர்கள் மத்தியிலே கேட்டு பதறி போனேன்...
ஆனா ஒரு 5 வருஷம் இருக்கும்... எனக்கு அதிகமா எதுவும் தெரியாது.
எங்க அம்மாக்கிட்ட கேட்டது இதுதான்... அந்த பாப்பாக்கு வலிக்காதாம்மா???
அபார்ஷன் பண்ணதுக்கு ஒரே காரணம் மூணாவது பெண் குழந்தை...
//சிந்தாநதி said...
//சோகமா இருக்கறதுக்கு மன்னிக்கவும்...//
என்ன செய்வது சோகங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லையே? ஆனால் இம்மாதிரி சோகங்கள் தவிர்க்க முடியுமென்றாலும் சிலரால் இன்னும் தொடர்வதுதான் சோகம்.//
ஆமாம் சிந்தாநதி...
தவிர்க்க இயலாத காரணமென்றால் சரி.. ஆனால் பெண் குழந்தை என்ற ஒரே காரணத்திற்காக இதை செய்தால் கொடுமை..
அருமையான கதை வெட்டி!
உண்மை தான் பாலாஜி (& கொத்ஸ்). பாலாஜி எழுதியிருப்பதும் தேசிகன் எழுதியிருப்பதும் வெவ்வேறு கருப்பொருட்கள் தான். ஆனால் அந்த பாணியைப் பற்றி சொன்னேன். முதலிலிருந்து நன்கு விவரித்துக் கொண்டு வந்து கடைசியில் புதிரை விடுவிப்பதைச் சொன்னேன்.
---ஆனால் பெண் குழந்தை என்ற ஒரே காரணத்திற்காக இதை செய்தால்---
தல... உங்க 'பெரியார்' பதிவு லாஜிக் படியே வரேன் :D
ஏற்கனவே, வூட்ல ரெண்டு ஆண் குரங்கு கும்மாளமிட்டு ரணகளமாக்குது. அப்போ, 'குச்சி குச்சி ராக்கம்மா' என்று முயற்சிக்கிறாங்க. வந்ததும் ஆணாக இருந்தால், இதை செய்தால் சரியா?
(ரெண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்பது அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் ;)
பாலாஜி
/* G.Ragavan said...
கருக்கலைப்பு...சரியா தவறா என்று தெரியவில்லையே. */
இராகவன், என்னைப் பொறுத்த வரையில்:
[1] கருவைச் சுமப்பதால், கருவைச் சுமக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்றாலோ
அல்லது
[2]ஒரு பெண் கற்பழிக்கப்பட்டோ அல்லது பாலியல் பலவந்தத்தினாலோ கற்பம் ஆனால் கருக்கலைப்பு செய்வதில் தவறில்லை.
மற்றும்படி, இந்த 21ம் நூற்றாண்டில் பாதுகாப்பாக , கற்பமாகாமல் உடலுறவை அனுபவிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது.
ஆக நான் மேற்கூறிய 2 சந்தர்பங்கள் தவிர, மற்றைய சந்தர்பங்களில் நடாத்தப்படும் கருக்கலைப்புக்கள் கிரிமினல் குற்றமாகப்[கொலைக் குற்றமாக] பார்க்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து.இப்படியான கருக்கலைப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என நான் நம்புகிறேன்.
//கருக்கலைப்பு என்பதை முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் செய்வார்கள்//
ஜிரா, கருக்கலைப்பு வலியை உண்டாக்குமா என்பதற்கு எனக்கு பதில் தெரியவில்லை. ஆனால் முதல் இரண்டு மூன்று மாதங்களுக்குள் தான் செய்வார்கள் என்றில்லை.. சுமார் 5 மாதம் வரை செய்வார்கள். உதாரணத்துக்கு, டவுன்ஸ் சிண்ட்ரோம் போன்ற குரோமோசோம் குளறுபடிகள் முதல் இரண்டு மூன்று மாதங்களில் தெரியவே தெரியாது. நான்காவது அல்லது ஐந்தாவது மாதத்தில் தான் தெரியும். தெரிந்தபிறகு கருக்கலைப்பு ஆப்ஷன் கொடுக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
//கார்த்திக் பிரபு said...
தலைவா நல்லா வந்துருக்கு!!
//
மிக்க நன்றி காதல் பிரபு
//
adhu enna "en kai kalgalai inge than picchi erinjanga nnu" oru vari enaku puriyalai??abarshanai than appdi solreengala?///
//
ஆமாம்பா... கருக்கலைப்பு அப்ப அந்த மாதிரி தான் ஒவ்வொரு பாகமா போகும்னு படிச்சிருக்கேன்!!!
//Arunkumar said...
ரொம்ப சோகமா இருக்கு வெட்டி. இப்பிடி இன்னமும் நடக்குறது அத விட சோகம் :(//
ஆமாம்...
படிச்சவங்க மத்தியிலும் இருப்பது கொடுமை!!!
//G.Ragavan said...
என்ன வெட்டி....முடிவுல மட்டும் முடிச்சு போடுற வித்தை கைவந்துருச்சு போல. கதை நல்லாயிருந்தது.
///
மிக்க நன்றி ஜி.ரா
எல்லாம் உங்கக்கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்...
//
கருக்கலைப்பு...சரியா தவறா என்று தெரியவில்லையே. அது குழந்தைக்கு வலிக்குமா? கருக்கலைப்பு என்பதை முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் செய்வார்கள். அப்படிச் செய்வது குழந்தைக்கு வலியை உண்டாக்குமா? தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.
//
வலிக்கும்னு தான் நான் படிச்சிருக்கேன். ஒரு பவர் பாயிண்ட் கூட வரும்... இப்படி ஒவ்வொரு உறுப்பாக உடையுமென்று. கிடைத்தான் அனுப்பி வைக்கிறேன்...
//
ஒருவேளை குழந்தை பிறவிக்கோளாறோடு பிறக்கும் பொழுது...அப்பொழுதும் கருக்கலைப்பு தவறாகுமா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.//
பிறவிக்கோளாறுனு நீங்க சொல்றது மூளை வளர்ச்சி இல்லாம அப்படினா என்னை பொறுத்த வரை தவறில்லை.
ஆனா நாங்க சும்மா இந்த குழந்தைக்கு முயற்சி செஞ்சோம் அது கிடைக்கலைனு சொல்லி கருவை கலைக்க அது ஒண்ணும் டெஸ்டிங் எண்விரான்மெண்ட் இல்லை...
//லட்சுமி said...
நல்லா எழுதியிருக்கீங்க!
வருத்தப்பட வைக்கும் கதைன்னாலும்
எழுதப்படவேண்டிய விஷயம்.//
மிக்க நன்றி லட்சுமி...
//dubukudisciple said...
ஹாய் வெட்டி!!!
நல்ல அருமையான கதை!!! கருத்தம்மாவை பார்த்தப்போவெ கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது!!! என்ன பண்றது ...
கவிஞர் சொல்ர மாதிரி :- திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!! அந்த மாதிரி தான் இதுவும்//
இல்லைங்க சுதா...
இதுக்கும் சட்டம் போடனும். கருக்கலைப்பும் கொலையே...
ஆரோக்கியமில்லாத குழந்தைனா பராவாயில்லை... சும்மா டெஸ்ட் பண்றதுக்கு எல்லாம் மருத்துவத்தை பயன்படுத்தக்கூடாது...
//Ullathil Irundhu.......... said...
இன்றும் பல கிராமங்களில் பெண் சிசுக்கள் கண் திறந்து மண் பார்க்கும் முன் கண் மூடி மண் பார்த்துகொண்டு தான் இருக்கின்றன...
என்ன தான் நாம் விடியலை நோக்கி முன்னேறி கொண்டு இருந்தாலும் நாம் எதிர்பார்க்கும் அந்த 'கிராமத்து விடியல்' எட்டாக்கனியாகவே உள்ளது...
என்று விடியுமோ.........
http://ullathilirundhu.blogspot.com//
உள்ளத்திலிருந்து,
கிராமத்துல படிக்காதவங்க பொதுவா பண்றது கள்ளிப்பால் கொடூத்து கொல்வது. அது சட்டப்படி குற்றம்னு சொல்லியாச்சு... ஆனா இது அப்படியில்லை...
//Anonymous said...
வருமுன் காப்போம் தான் சிறந்த பாலிசி.
சிலர் இங்கே கூறியது போல் கண்ணில் கண்ணிர் வரவைகிற கதை.
- உண்மை//
உண்மை,
சரியா சொன்னீங்க... வருமுன் காப்பதே சிறந்தது...
//Anonymous said...
வருமுன் காப்போம் தான் சிறந்த பாலிசி.
சிலர் இங்கே கூறியது போல் கண்ணில் கண்ணிர் வரவைகிற கதை.
- உண்மை//
உண்மை,
சரியா சொன்னீங்க... வருமுன் காப்பதே சிறந்தது...
//நாமக்கல் சிபி said...
பாலாஜி,
உங்க உந்துதலால் ஒரு கவிதை போட்டிருக்கேன் பாருங்க.//
இதோ வரேன் தள...
//Boston Bala said...
---இதை படிச்சா உங்களுக்கு நான் என்னவா இருப்பனு தோனுது???---
விபி,
ப்ரோ-லைஃப்.
//
ஹிம்ம்ம்ம்...
//
கதைக் கருவை ரொம்ப அலசினால், அடுத்த முறை எழுத உட்காரும்போது, கை மட்டுப்பட்டு விடும் அல்லது முகமூடி தேடும் ; )
//
:-))
//
ஆகவே, நடை நன்றாக இருந்தது.
//
மிக்க நன்றி பாபா!!! பாஸாய்யிட்டனா??? (5க்கு 2 மார்க் மேல வருமா?)
//
கதைக் களத்துடன் எனக்கு .01% கூட ஒப்புதல் கிடையாது.
//
இருக்கலாம்... நீங்க Pro-choice நான் Pro-life :-)
// தொடர்ந்து கலக்க வாழ்த்துகள் : )//
மிக்க நன்றி பாபா...
//adhu enna "en kai kalgalai inge than picchi erinjanga nnu" oru vari enaku puriyalai??abarshanai than appdi solreengala?///
//ஆமாம்பா... கருக்கலைப்பு அப்ப அந்த மாதிரி தான் ஒவ்வொரு பாகமா போகும்னு படிச்சிருக்கேன்!!!//
அப்படியல்ல என்று நினைக்கிறேன் பாலாஜி. முழுமையாகத் தான் எடுப்பார்கள். விசயம் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தலாம். ஆனால் பாகம் பாகமாக எடுக்கப்படுவது என்று கூறப்படுவது....... புரளி என்று நினைக்கிறேன்.
//கப்பி பய said...
அருமையான கதை வெட்டி!//
மிக்க நன்றி கப்பி...
//குமரன் (Kumaran) said...
உண்மை தான் பாலாஜி (& கொத்ஸ்). பாலாஜி எழுதியிருப்பதும் தேசிகன் எழுதியிருப்பதும் வெவ்வேறு கருப்பொருட்கள் தான். ஆனால் அந்த பாணியைப் பற்றி சொன்னேன். முதலிலிருந்து நன்கு விவரித்துக் கொண்டு வந்து கடைசியில் புதிரை விடுவிப்பதைச் சொன்னேன்.//
ஆமாம் குமரன்,
கடைசியில் இரண்டும் கருவறையில் நடந்த நிகழ்ச்சிகளிலே இருக்கிறது :-)
//Boston Bala said...
---ஆனால் பெண் குழந்தை என்ற ஒரே காரணத்திற்காக இதை செய்தால்---
தல... உங்க 'பெரியார்' பதிவு லாஜிக் படியே வரேன் :D
ஏற்கனவே, வூட்ல ரெண்டு ஆண் குரங்கு கும்மாளமிட்டு ரணகளமாக்குது. அப்போ, 'குச்சி குச்சி ராக்கம்மா' என்று முயற்சிக்கிறாங்க. வந்ததும் ஆணாக இருந்தால், இதை செய்தால் சரியா?
//
பாபா,
இது என்ன டெஸ்டிங் எண்விரான்மெண்ட்டா இந்த கோட் போட்டு பார்ப்போம் வரலைனா வேற போடுவோம்னு சொல்றதுக்கு?
கண்ணுக்கு தெரியலைனாலும் அங்க இருக்கறது மனித உயிர்தான்...
எந்த குழந்தை பிறக்கும்னு கடவுள் (இயற்கை...)தான் தீர்மானிக்கறாரு...
//
(ரெண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்பது அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் ;)
பாலாஜி//
இது ஓகே :-)
//ஆக நான் மேற்கூறிய 2 சந்தர்பங்கள் தவிர, மற்றைய சந்தர்பங்களில் நடாத்தப்படும் கருக்கலைப்புக்கள் கிரிமினல் குற்றமாகப்[கொலைக் குற்றமாக] பார்க்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து.இப்படியான கருக்கலைப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என நான் நம்புகிறேன்.//
Vetri,
I agree with u...
//சேதுக்கரசி said...
//கருக்கலைப்பு என்பதை முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் செய்வார்கள்//
ஜிரா, கருக்கலைப்பு வலியை உண்டாக்குமா என்பதற்கு எனக்கு பதில் தெரியவில்லை. ஆனால் முதல் இரண்டு மூன்று மாதங்களுக்குள் தான் செய்வார்கள் என்றில்லை.. சுமார் 5 மாதம் வரை செய்வார்கள். உதாரணத்துக்கு, டவுன்ஸ் சிண்ட்ரோம் போன்ற குரோமோசோம் குளறுபடிகள் முதல் இரண்டு மூன்று மாதங்களில் தெரியவே தெரியாது. நான்காவது அல்லது ஐந்தாவது மாதத்தில் தான் தெரியும். தெரிந்தபிறகு கருக்கலைப்பு ஆப்ஷன் கொடுக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.//
இந்த மாதிரி மருத்துவ ரீதியான பிரச்சனைகளிருக்கும் பட்சத்தில் மருத்துவரே அறிவுருத்தும் பட்சத்தில் இதை அனுமதிக்கலாம்...
வெற்றி சொன்னது :
//[1] கருவைச் சுமப்பதால், கருவைச் சுமக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்றாலோ
அல்லது
[2]ஒரு பெண் கற்பழிக்கப்பட்டோ அல்லது பாலியல் பலவந்தத்தினாலோ கற்பம் ஆனால் கருக்கலைப்பு செய்வதில் தவறில்லை.//
வெட்டி சொன்னது
//Vetri,
I agree with u...//
நான் சொன்னது
//பிறவிக் கோளாறு இருக்கையில் கலைத்து விடுவதே நல்லது. கோளாறென நான் சொல்ல வருவது பிறந்த பின் அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அது மற்றவர்களைச் சார்ந்தே இருக்கும் அளவிற்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருப்பது போன்ற நிலமைகளில்.//
வெட்டி, வெற்றி, இதுவும் நியாயமான சூழ்நிலைதான் என்பது என் கருத்து.
//கருக்கலைப்பு என்பதை முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் செய்வார்கள்//
ஜிரா,
Ohhh!! இன்னொரு விசயத்தை இங்கே குறிப்பிட மறந்துவிட்டேன்! என்ன குழந்தை என்பதும் முதல் 2,3 மாதத்தில் தெரியாது! 4வது அல்லது 5வது மாதத்தில் தான் தெரியும்! எனவே, பெண்குழந்தை என்பதால் கருக்கலைப்பு நடக்கிறதென்றால் அது 4வது, 5வது மாதத்தில் தான் நடக்கமுடியும்!
I am neither pro-choice nor pro-life but the story is written well.
---கண்ணுக்கு தெரியலைனாலும் அங்க இருக்கறது மனித உயிர்தான்...---
கருக்கலைப்பு தவறு என்று சட்டமாக்கினால் பாதிக்கப்படுவது என்னவோ ஏழைகள்தான். (பெண்களும்தான்). பாதுகாப்பாக இருக்கவும் தெரியாமல், பெற்று போட்டதை வளர்க்கவும் முடியாமல் திண்டாடப் போவது அவர்கள்தான்.
'சாமீ கண்ணை குத்தும்' என்பது மாதிரி, 'உசிரைக் கொன்னுட்டா, பேயா வந்து வீட்டை சுத்தும்' என்பது போல் இந்த 'உயிர்' வாதம் எனக்குப் படுகிறது.
சுருக்கமாக... Abortion is a personal matter for the people involved. It’s none of society’s business என்பதுதான் ப்ரோ சாய்ஸ் கருத்து.
என் ஸ்டைலில் கண்ணில் பட்ட சில சுட்டிகள்:
அ. Are Liberal Abortion Laws Responsible For Female Foeticide? By Pavan Nair - இந்திய நிலையும் சட்டத்தின் ஓட்டைகளும்
ஆ. Women Still Are Second-class Citizens In Much Of The World By Dian Harrison - கட்டாய குழந்தை பிறப்பை உலக அரங்கில் வலியுறுத்தும் அமெரிக்க கன்சர்வேடிவ் சித்தாந்தம்
இ. Zoe Williams: Is the right to abortion under threat? | Health | SocietyGuardian.co.uk - யுனைடெட் கிங்டம் புள்ளிவிவரங்கள்: வருவாய் வித்தியாசங்களும் வாய்ப்புகளும்
ஈ. Split by Abortion: The Front Lines of the Religious War in God's Own Country - International - SPIEGEL ONLINE - News - ஆயிரம் மைல் கடந்தால்தான் அமெரிக்காவில் கருக்கலைப்பு சாத்தியம். அதுவும் முதல் தடவையே செய்து முடித்து வீட்டுக்குத் திரும்ப முடியாது. முதல் தடவை, 'கருக்கலைப்பு ஏன் கூடாது?' என்று பாடங்கள் எடுக்கப்படும். அதன் பிறகு, ஒரு வாரம் கழித்து, மீண்டும் ஒரு வார நாளில் ஆயிரம் மைல் பயணப்பட்டால்தான் கருவை அழிக்க முடிகின்ற நிலை.
//'சாமீ கண்ணை குத்தும்' என்பது மாதிரி, 'உசிரைக் கொன்னுட்டா, பேயா வந்து வீட்டை சுத்தும்' என்பது போல் இந்த 'உயிர்' வாதம் எனக்குப் படுகிறது.//
பாபா,
பேயா வீட்டை சுத்தாது தான். ஆனால் கருக்கலைப்பு செய்த உள்ளம் தன்னுள் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வாய்ப்புண்டல்லவா? சிலருக்கு அந்தச் செயலே lifelong misery-யைத் தர வாய்ப்புண்டு. இது ஒரு கண்ணோட்டம் என்று நினைக்கிறேன்.
Boston Bala,
/* கருக்கலைப்பு தவறு என்று சட்டமாக்கினால் பாதிக்கப்படுவது என்னவோ ஏழைகள்தான். */
ஆட்சேபனை இல்லையெனின், எந்த அடிப்படையில் அல்லது என்ன காரணங்களால் இப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?
வெட்டி தம்பி, மனதை கனக்க செய்யும் கதை.
1. தாய்மைக்கு அர்த்தம் தெரியாத காட்டுமிராண்டி ஆண்வர்கம்
2.பெண்மைக்கு அர்த்தம் தெரியாத அடி முட்டாள் ஆண்வர்கம்
3. தன் காலத்தில் தன்னால் வெட்டி சாய்க்க முடியாத எதிரியை கொல்ல தன் ஜாடையுடன் கடா மீசை மகன் வேண்டும் என நினைக்கும் மட்டமான பொறுக்கி ஆண்வர்கம்
4.சம்பாதிக்கும் காலத்தில் சும்மா காமலீலை புரிந்துவிட்டு பிறக்கும் ஆண் மகவு தன் பிற்காலத்தை பாத்துக்கும் என நினைக்கும் சோம்பேறி பிச்சைகார ஆண் வர்க்கம்
மேலும்
5.இதற்கெல்லாம் துணை போகும்(பயமோ/நிர்பந்தமோ/கணவனே கண் கண்ட தெய்வம் டைப்போ)மரியாதைகெட்ட பெண் வர்க்கம்
மேற்கண்ட இந்த 5 வர்க்கங்களும் ஒழிக்கப்பட்டாலே 75% விடிவு காலம் பிறக்கும்.
அபி அப்பா!
அப்பப்பா, என்ன ஒரு வக்கிரம் ஆண் மீது? ஒன்றும் சொல்வதற்கில்லை போங்கள்!..
//நான் சொன்னது
//பிறவிக் கோளாறு இருக்கையில் கலைத்து விடுவதே நல்லது. கோளாறென நான் சொல்ல வருவது பிறந்த பின் அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அது மற்றவர்களைச் சார்ந்தே இருக்கும் அளவிற்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருப்பது போன்ற நிலமைகளில்.//
வெட்டி, வெற்றி, இதுவும் நியாயமான சூழ்நிலைதான் என்பது என் கருத்து.//
கொத்ஸ்,
நீங்க சொல்றதையும் தான் நான் சொல்லியிருக்கிறேன்!!!
//குமரன் (Kumaran) said...
I am neither pro-choice nor pro-life but the story is written well.//
np Kumaran...
Thx for ur comment...
//Boston Bala said...
---கண்ணுக்கு தெரியலைனாலும் அங்க இருக்கறது மனித உயிர்தான்...---
கருக்கலைப்பு தவறு என்று சட்டமாக்கினால் பாதிக்கப்படுவது என்னவோ ஏழைகள்தான். (பெண்களும்தான்). பாதுகாப்பாக இருக்கவும் தெரியாமல், பெற்று போட்டதை வளர்க்கவும் முடியாமல் திண்டாடப் போவது அவர்கள்தான்.
//
:-))))))))
திருட்டை தடை செய்தாலும் பாதிக்கப்படுவது ஏழைகள் தான் :-)
தவறை எப்படி சரி செய்ய வேண்டும் என்று பார்ப்பதைவிட்டு அதை நியாயப்படுத்தப் பார்க்க கூடாது...
//
'சாமீ கண்ணை குத்தும்' என்பது மாதிரி, 'உசிரைக் கொன்னுட்டா, பேயா வந்து வீட்டை சுத்தும்' என்பது போல் இந்த 'உயிர்' வாதம் எனக்குப் படுகிறது.
//
கொலை செய்தாலும் அதுதான்...
கதைல நான் சொன்னவிதம் வேணா... ஆவி ஆன்மானு இருக்கலாம். ஆனா அதுவும் உயிர்கொலை தான்...
அபி அப்பா,
முதல்ல இது தப்புனு சொல்லி எல்லார்ருக்கும் புரிய வைக்கணும்...
இது சட்டப்படி சரினு இருக்கும் போது அவரவர் மனசாட்சியே அவரவருக்கு உதவும்...
hi vets
story neraya sinthikka vachuthu..kannuku theriyattiyum oru uyira azhikurathu jenma paavam.
Ungalta irunthu innum ithae madiri padaipugalai edhir parkiren.
keep up your good work.
regards
yogen
hi,i always read ur blogs...Bt i donno hw i missed ths story..bt i dnt accept with the fact in this..becos,i m the fourth daughter for my parents...I have no brothers:).
FYI,First 2 of my sisters are MCA's n my third akka n me are Engineering Graduates..!!
// Anonymous said...
hi vets
story neraya sinthikka vachuthu..kannuku theriyattiyum oru uyira azhikurathu jenma paavam.
Ungalta irunthu innum ithae madiri padaipugalai edhir parkiren.
keep up your good work.
regards
yogen //
மிக்க நன்றி யோகன்...
மேலும் இதை போல எழுத முயற்சிக்கிறேன்!!!
// Anonymous said...
hi,i always read ur blogs...Bt i donno hw i missed ths story..bt i dnt accept with the fact in this..becos,i m the fourth daughter for my parents...I have no brothers:).
FYI,First 2 of my sisters are MCA's n my third akka n me are Engineering Graduates..!! //
Dear Friend,
First of all, Convey my high regards to ur parents...
Even I have seen families where there are 3 girls but this is what I have seen with one of my relatives some time back...
I just want to present that in a different way!!! Thx for ur comments
Romba urukkama irundhuchu-nga Balaji..
//ராஜி said...
Romba urukkama irundhuchu-nga Balaji..//
மிக்க நன்றி ராஜி...
நாமக்கல் சிபியாலெ, வெட்டிபயலான உங்களையும் நனைச்சிட்டேங்க, நினைவிலே வெக்கிறேங்க. எங்க கருத்துக்களை சொல்லும்போது எங்க லிங்ஸ்[links] வெளிபடுத்தற கட்டங்கட்டி காட்டறது எப்படிங்க? சொல்லிக்கொடுப்பிங்களா?
கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்னா எனும் சோதனையே இந்தியாவில் சட்டவிரோதம்.
அதனால் பெண் குழந்தை எனும் ஒரே காரணத்தால் அபார்ஷன் செய்வது தவறு.
மற்றபடி அபார்ஷன் எந்த காரணத்தால் செய்யப்பட்டாலும் அது தவறல்ல.குழந்தை பெற விருப்பமற்ற பெண்னை குழந்தை பெறும்படி கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
Tears rolled down my cheeks....very touchy story!
Post a Comment