தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, December 05, 2006

நெல்லிக்காய் 7

காய் 6
மக்களே ஒரு சிலர் கதையை மறந்திருக்கக்கூடும்... அதனால் போன பகுதியின் கடைசி சில வரிகள்

"சரி சும்மா சண்டை போடாம சாப்பிடுங்க.ரெண்டு பேரும் பெரிய ஆளுங்க தான். அதுவும் இல்லாம ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ். நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃபிரெண்ட்ஸா இருந்தாதான் அவுங்களுடைய உண்மையான ரசிகர்கள்" நச்சென்று சொல்லிமுடித்தான் கார்த்திக்...

"சண்டை போட்ட ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?" வேகமாக சொன்னாள் தீபா...

அருண் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்...

ஒரு வழியாக படம் பார்த்துவிட்டு அனைவரும் வெளியே வந்தனர். ராஜிக்கும் அருணுக்கும் படம் பிடித்திருந்தது.

"மணி அஞ்சே கால்தான் தான் ஆகுது. பேசாம பெசண்ட் நகர் பீச் போயிட்டு அப்படியே ஈவனிங் டின்னர் சாப்பிட்டு போலாமா?" என்றான் கார்த்திக்.

"அப்படியே அஷ்டலட்சுமி கோவிலுக்கும் போய்ட்டு வரலாம்", தீபாவை சம்மதிக்க வைக்க ராஜி வேகமாக சொன்னாள்.

அருணும் தீபாவும் என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்க, அருணுக்கு "நைட் டின்னரும்னா ஓ.கே" என்று அவன் சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது.

"தீபா, நான் ராஜிய என் கூட வண்டீல கூப்பிட்டு போறேனே. நீ அருண்கூட வரியா ப்ளீஸ்" பரிதாபமாக கெஞ்சினான் கார்த்திக்.

"ஏய் அதெல்லாம் வேணாம். நாங்க பஸ்லயே வரோம்" வேகமாக சொன்னாள் ராஜி.

"எதுக்கு ரெண்டு வண்டி இருக்கும் போது நீங்க பஸ்ல வரணும்? பாரு தீபாவே ஓகே சொல்லிட்டா. உனக்கு என்ன?" கார்த்திக் எப்படியாவது ராஜியை சம்மதிக்க வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.

"நான் எப்ப ஓ.கே சொன்னேன்?" முகத்தில் அதிர்ச்சியோடு கேட்டாள் தீபா

"ப்ளீஸ் ப்ளீஸ் நீ என் பெஸ்ட் ஃப்ரெண்ட் இல்லை" தீபாவிடம் கெஞ்சினான் கார்த்திக். அருணுக்கு கார்த்திக்கை பார்க்க பாவமாக இருந்தது.

"தீபா நீ என்கூட வருவியா? மாட்டியா" கொஞ்சம் தைரியத்தை வர வழித்து கொண்டு கேட்டான் அருண்.

அருணை ஆச்சர்யத்துடன் பார்த்தனர் மூவரும். தீபாவும் வேறு எதுவும் பேசாமல் "ஹிம்" என்று பொறுமையாக சொன்னாள்.

கார்த்திக்கிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.

நால்வரும் வண்டியை நெருங்கினர். அருணுடைய சாவி திடீரென்று காணாமல் போனது.
"கார்த்திக் நீ முன்னாடி ராஜிய கூப்பிட்டு போயி கோவில்ல இரு. சாவி நம்ம உக்கார்ந்த சீட்ல தான் இருக்கும்னு நினைக்கறேன். நான் போய் பார்த்து எடுத்துட்டு வரேன். தீபா நீ என் கூட வா"சொல்லிவிட்டு யார் சம்மதத்திற்கும் எதிர்பார்க்காமல் வேகமாக தியேட்டரை நோக்கி நடந்தான் அருண்.

தீபாவும் அவன் பின்னாலே வேகமாக ஓடினாள்.

"இவன்கிட்ட இதுதான் பிரச்சனை. சரி நம்ம கிளம்பலாம்" சொல்லிவிட்டு கார்த்திக்கும் ராஜியும் கிளம்பினர்.

தியேட்டர் அருகே சென்றவுடன் அருண் நின்று தீபா வரும் வரை காத்திருந்தான். அவன் அருகில் வந்ததும் "சரி வா 23Cல போகலாம்" என்றாள் தீபா.

"சாவி? உள்ள போய் பார்க்க வேணாமா?" ஆச்சரியமாக கேட்டான் அருண்.

"இங்க பாரு அருண், சாவி உன்கிட்டதான இருக்குனு எனக்கு நல்லா தெரியும். நான் ஒண்ணும் கார்த்திக்கோ, ராஜியோ இல்லை. நீ அவ்வளவு உரிமையா கூப்பிடும் போதே எனக்கு தெரியும் இதுல ஏதாவது ஃபிராடு தனம் வெச்சிருப்பனு"

அருணுக்கு தீபாவை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.அவனை அங்குலம் அங்குலமாக புரிந்து வைத்திருக்கிறாளென்று.

"ஃபிராடா? யார் நானா? பாவம் அவன் ரொம்ப ஆசைப்படறானெனுதான் இந்த மாதிரி பண்ணேன்.அதுவும் சாவி தொலையற ஐடியா எனக்கு வண்டி கிட்டக போனவுடனேதான் வந்துச்சு.நான் கூப்பிட்டவுடனே நீ பதில் எதுவும் சொல்லாம வரேனு சொன்னதுதான் இன்னும் கொஞ்சம் பயமாயிடுச்சு"

"ஏன் வண்டில போகும் போது நான் தள்ளிவிட்டுடுவன்னு பயமா?"

"தள்ளிவிட்டா நீயும் தான் விழனும். உனக்கு விருப்பமில்லைனு உன் முகத்திலே தெரிஞ்சிதே"

"ஆமாம். இவர் பெரிய சைக்காட்ரீஸ்ட். விருப்பமில்லாம நான் எதையும் சொல்லமாட்டேன். அதே மாதிரி உன்னய மாதிரி ஃபிராடு தனம் எனக்கு தெரியாது"

"யார் நான் ஃபிராடா? சரி... அப்ப வா என் வண்டியிலே போகலாம்"

"சரி வா..." சொல்லிவிட்டு அருணுக்கு காத்திராமல் வண்டியை நோக்கி சென்றாள் தீபா

அருணுக்கும் என்ன சொல்வதென்றே தெரியாமல் வண்டியிருக்குமிடத்திற்கு சென்று வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

எதை பற்றியும் யோசிக்காமல் வண்டியில் அருண் பின்னாள் அமர்ந்தாள்.

அருணுக்கு தீபா மனதை புரிந்து கொள்ள முடியாத குழப்பத்துடன் வண்டியை கோவிலை நோக்கி செலுத்தினான். எப்ப பாரு சண்டை போடறா, வார்த்தைக்கு வார்த்தை ஃபிராடுனு சொல்றா, நம்மல அங்குல அங்குலமா புரிஞ்சி வெச்சிருக்கா... இவ நம்மல பத்தி என்னதான் நினைக்கிறா???

பீச்ல கண்டிப்பா இத பத்தி பேசணும். எப்படியும் கார்த்திக்கும், ராஜியும் பிஸியா இருப்பாங்க. அதனால தாராளமா பேசலாம். வழக்கமா எல்லா பொண்ணுங்க மாதிரி நீ என் ஃபிரெண்டுனு சொல்லுவா. பசங்கள பத்தி தெரியாதானு கேட்பா. இவக்கிட்ட நம்ம எதுக்கு கேக்கனும்? கண்டிப்பா நான் கேக்க மாட்டேன்.

இவ்வாறு அவன் மனம் பல திசைகளில் யோசித்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு திருப்பத்தில் அருண் வேகமாக திருப்ப அதே சமயம் எதிர் திசையிலிருந்து வந்த ஒரு லாரியும் வலது பக்கம் திருப்ப, லாரியில் மோதி அருணும் தீபாவும் வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டனர்...

(தொடரும்)

அடுத்த பகுதி

50 comments:

Unknown said...

அய்யோ அய்யோ என்னப்பா ஆச்சு? இப்படி திருப்பத்துல்ல விட்டுட்டுப் போயிட்டீங்க?

G.Ragavan said...

வெட்டி......உன்னோட மனசுல என்னதான் நெனச்சுக்கிட்டிருக்க....இப்பிடி மொதமொதலா வண்டீல போறவங்கள ஆக்சிடெண்டு செஞ்சிட்டியே....பாவம்....இதெல்லாம் ரொம்பத் தப்பு. இவ்வளவ்வு சோகமால்லாம் வெட்டி எழுதக் கூடாது. சந்தோஷமா இருந்தாத்தான் படிப்போம். :-(

பெசண்ட் நகர் பீச் சரி. பக்கத்துல அஷ்டலட்சுமி கோயிலும் சரி...பக்கத்துல இருக்குற அறுபடை முருகன் கோயில விட்டுட்டியேப்பா! பக்கத்துலயே முருகன் இட்லிக் கடை இருக்கு. அங்க டின்னர் போடலாம்னு சொல்லீருக்கலாம். 23C? அது பெசண்ட் நகர் பீச்சுக்குப் போகாது. அதுவுமில்லாம ஈவினிங் ஸ்நாக்ஸ்தான் சாப்பிடுவாங்க. டின்னர் இல்லை. ;-) நீ மட்டும் அவங்கள ஆக்சிடெண்ட் பண்ணலாமா? அதான் உன்னய இப்பிடி மடக்கி மடக்கி கேள்வி கேக்குறேன். பதில் சொல்லு.

Anonymous said...

hi vets

story nalla poguthu..deepa mathiri friend namakum iruntha nalla irukume'nu nenachite vaasikumbothu vandi accident ayduchu..anyway hoping for a happy ending..cheers

yogen

கப்பி | Kappi said...

ஏன்யா காதல் வலைல விழ வைப்பீங்கன்னு பார்த்தா இப்படி ஆக்ஸிடெண்ட்ல விழ வச்சிட்டீங்களே? ;)

Anonymous said...

ஆகா, கதை சுப்பர்ரா போகுது.


- உண்மை

Sivabalan said...

பாலாஜி

புக் மார்க் செய்து வைத்துள்ளேன்...

படித்துவிட்டு சொல்கிறேன்..

நன்றி!

இராம்/Raam said...

அடபாவி வெட்டி,

இதுக்குதாய்யா தொடர்கதையெல்லாம் படிக்கிறோப்பா ரொம்பவே யோசிச்சு படிப்பேன். இன்னிக்கு எந்த வெள்ளக்கார தொரையும் இல்லேன்னு 4'ம் பாகத்திலிருந்து 7'ம் பாகம் வரைக்கும் கண்டினீயூ'வா படிச்சேன். கடைசியிலே அவங்க ரெண்டு பேரையும் ஆக்சிடெண்ட் பண்ண வைச்சிட்டியே???? அடுத்த பாகத்திலே லேசான சிறாய்ப்புகளோடு எழுந்திருந்தனரு'ன்னு கதையே ஆரம்பிக்கணும் ஆமாம்...

:-)))))

நாமக்கல் சிபி said...

//தேவ் | Dev said...

அய்யோ அய்யோ என்னப்பா ஆச்சு? இப்படி திருப்பத்துல்ல விட்டுட்டுப் போயிட்டீங்க? //

நம்ம கைல என்ன இருக்கு தேவ்...
பார்ப்போம் என்ன நடக்குதுனு ;)

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

வெட்டி......உன்னோட மனசுல என்னதான் நெனச்சுக்கிட்டிருக்க....இப்பிடி மொதமொதலா வண்டீல போறவங்கள ஆக்சிடெண்டு செஞ்சிட்டியே....பாவம்....இதெல்லாம் ரொம்பத் தப்பு. இவ்வளவ்வு சோகமால்லாம் வெட்டி எழுதக் கூடாது. சந்தோஷமா இருந்தாத்தான் படிப்போம். :-(
//
இன்னும் சோகமே வரலையே...
கதையோட தலைப்பை படித்த பின்பும் கதை யூகிக்க முடியவில்லையா? ;)

//பெசண்ட் நகர் பீச் சரி. பக்கத்துல அஷ்டலட்சுமி கோயிலும் சரி...பக்கத்துல இருக்குற அறுபடை முருகன் கோயில விட்டுட்டியேப்பா!
//
அதுக்கு வேணும்னா நம்ம அடுத்த கதை நாயகன் ராகவனை போக சொல்லலாம் ;)

//
பக்கத்துலயே முருகன் இட்லிக் கடை இருக்கு. அங்க டின்னர் போடலாம்னு சொல்லீருக்கலாம்.
//
ஆக்சிடெண்ட் ஆனதுக்கப்பறம் யார் இப்ப சாப்பிட போறா?

//
23C? அது பெசண்ட் நகர் பீச்சுக்குப் போகாது
//
23C பெசண்ட் நகர் போகும்.
நேத்து நீங்க சொன்னதும் தப்புனு செந்தில் போன பார்ட்ல சென்னை மேப் லிங்க் கொடுத்திருக்கார்.

25 வருஷம் சென்னைல இருந்த எனக்கு தெரியாதானும் சொல்றார். விவரம் தெரிஞ்சவங்க யாரையாவது கேட்டு சொல்லுங்க...

// அதுவுமில்லாம ஈவினிங் ஸ்நாக்ஸ்தான் சாப்பிடுவாங்க. டின்னர் இல்லை. ;-)//
ஈவனிங் பீச்ல இருந்துட்டு ஒரு 7:30க்கா டின்னர் சாப்பிடலாம்னு ப்ளான் ;) (எங்களுக்கேவா ;))

// நீ மட்டும் அவங்கள ஆக்சிடெண்ட் பண்ணலாமா? அதான் உன்னய இப்பிடி மடக்கி மடக்கி கேள்வி கேக்குறேன். பதில் சொல்லு.//
நானா ஆக்ஸிடெண்ட் செஞ்சேன்... ராமா!!!

நாமக்கல் சிபி said...

//jvenga said...

Balaji, What happened to them? //

Let you know soon :-)

நாமக்கல் சிபி said...

//jvenga said...

Ela, enna aachu unaku? En engala pathara vaikura? Anyway It is going very interesting... //

இராத்திரி மூனு மணிக்கு உக்கார்ந்து யோசிச்சா இப்படித்தான் வருது ;)
என்ன பண்ண?

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

hi vets

story nalla poguthu..deepa mathiri friend namakum iruntha nalla irukume'nu nenachite vaasikumbothu vandi accident ayduchu..anyway hoping for a happy ending..cheers

yogen //

யோகன்,
கவலைப்பட வேண்டாம்...
நல்லதே நடக்கும் :-)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

ஏன்யா காதல் வலைல விழ வைப்பீங்கன்னு பார்த்தா இப்படி ஆக்ஸிடெண்ட்ல விழ வச்சிட்டீங்களே? ;) //

கப்பிமா,
நான் என்ன பண்ண? எதுலயாவது விழனும்னு ரெண்டு பேருக்கும் இருக்கு...

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

ஆகா, கதை சுப்பர்ரா போகுது.


- உண்மை //

மிக்க நன்றி உண்மை...

நாமக்கல் சிபி said...

//Sivabalan said...

பாலாஜி

புக் மார்க் செய்து வைத்துள்ளேன்...

படித்துவிட்டு சொல்கிறேன்..

நன்றி! //

சிபா,
பொறுமையாக படித்துவிட்டு சொல்லவும் :-)

நாமக்கல் சிபி said...

//ராம் said...

அடபாவி வெட்டி,

இதுக்குதாய்யா தொடர்கதையெல்லாம் படிக்கிறோப்பா ரொம்பவே யோசிச்சு படிப்பேன். இன்னிக்கு எந்த வெள்ளக்கார தொரையும் இல்லேன்னு 4'ம் பாகத்திலிருந்து 7'ம் பாகம் வரைக்கும் கண்டினீயூ'வா படிச்சேன். கடைசியிலே அவங்க ரெண்டு பேரையும் ஆக்சிடெண்ட் பண்ண வைச்சிட்டியே???? அடுத்த பாகத்திலே லேசான சிறாய்ப்புகளோடு எழுந்திருந்தனரு'ன்னு கதையே ஆரம்பிக்கணும் ஆமாம்...

:-))))) //

முதல்ல பழைய கதையெல்லாம் படிங்க...

சரி கவலைப்பட வேண்டாம்... நல்லதே நடக்கும் என்று இறைவனை பிரார்த்திப்போம் ;)

Anonymous said...

கதையில இப்பத்தான் ஒரு திருப்புமுனையே?

மீதி கதைய நான் சொல்லட்டா?

தீபாக்கு அடி பலமாப் பட, அருண் பதறிப்போய், அவள மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போக, டாக்டர் கண்ணாடியக் கழட்டிட்டு ரொம்ப கஷ்டம்னு சொல்ல, அருண் ரத்தம் கொடுக்க, இறைவனை வேண்ட, ஒருப் பாட்டு ஒன்னு அவன் பாட, அது தீபா காதுல விழ, அவ விரல் அசைய, டாக்டர், 'இது மெடிக்கல் மிராக்கல்'னு சொல்ல, அங்க பத்திக்கும் காதல். கரெக்டா?

Divya said...

\" நீ அவ்வளவு உரிமையா கூப்பிடும் போதே எனக்கு தெரியும் இதுல ஏதாவது ஃபிராடு தனம் வெச்சிருப்பனு"\"

எவ்வளவு சரியா கண்டுபிடிச்சிருக்கா, சூப்பர்!

வெட்டி கதை செம speed ஆ போய் accident ஆகிடுச்சு, அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங், சீக்கிரம் போடுங்க வெட்டி.

[ அந்த ஃப்ராடு தனம் எல்லாம் வெறும் கற்பனை தானா????]

நாமக்கல் சிபி said...

// ஜி said...

கதையில இப்பத்தான் ஒரு திருப்புமுனையே?
//
அப்ப இது வரைக்கும் நீங்க எதிர்பார்த்த மாதிரியே போயிட்டு இருந்துதா???

// மீதி கதைய நான் சொல்லட்டா?

தீபாக்கு அடி பலமாப் பட, அருண் பதறிப்போய், அவள மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போக, டாக்டர் கண்ணாடியக் கழட்டிட்டு ரொம்ப கஷ்டம்னு சொல்ல, அருண் ரத்தம் கொடுக்க, இறைவனை வேண்ட, ஒருப் பாட்டு ஒன்னு அவன் பாட, அது தீபா காதுல விழ, அவ விரல் அசைய, டாக்டர், 'இது மெடிக்கல் மிராக்கல்'னு சொல்ல, அங்க பத்திக்கும் காதல். கரெக்டா? //

கொஞ்சம் சரி... நிறைய தப்பு ;)

நாமக்கல் சிபி said...

//Divya said...

\" நீ அவ்வளவு உரிமையா கூப்பிடும் போதே எனக்கு தெரியும் இதுல ஏதாவது ஃபிராடு தனம் வெச்சிருப்பனு"\"

எவ்வளவு சரியா கண்டுபிடிச்சிருக்கா, சூப்பர்!
//
தீபா,அருணை நல்லா புரிஞ்சி வெச்சிருக்கானு நினைக்கிறேன் :-)

//
வெட்டி கதை செம speed ஆ போய் accident ஆகிடுச்சு, அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங், சீக்கிரம் போடுங்க வெட்டி.
//
சீக்கிரம் போடறேனுங்கோ!!!

// [ அந்த ஃப்ராடு தனம் எல்லாம் வெறும் கற்பனை தானா????] //
No comments :-)

Anonymous said...

//கொஞ்சம் சரி... நிறைய தப்பு ;)//

ஒருவேளை, அருணுக்கு லேசா கால்ல அடிப்பட்டு, அவன் ஆஸ்பத்திரில இருக்கும்போது தன்னாலத்தான் அவனுக்கு அடிப் பட்டுடுச்சுன்னு பரிதாபப்பட்டு, அவனுக்கு உதவி செஞ்சி காதல் வயப்படுவாளோ?

எதுவா இருந்தா என்ன? அடுத்தப் பகுதில தெரிஞ்சிடப் போகுது. நான் அப்பப் பாத்துக்குறேன்.

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
இன்னும் சோகமே வரலையே...
கதையோட தலைப்பை படித்த பின்பும் கதை யூகிக்க முடியவில்லையா? ;) //

அந்த அளவுக்கு அறிவிருந்தா நான் ஏன் இப்படியிருக்கேன் :-(

// //பெசண்ட் நகர் பீச் சரி. பக்கத்துல அஷ்டலட்சுமி கோயிலும் சரி...பக்கத்துல இருக்குற அறுபடை முருகன் கோயில விட்டுட்டியேப்பா!
//
அதுக்கு வேணும்னா நம்ம அடுத்த கதை நாயகன் ராகவனை போக சொல்லலாம் ;) //

என்னது...ராகவனா? டி.சி.பி ராகவனா? தேர்தல் கமிஷனர் ராகவனா?


//// பக்கத்துலயே முருகன் இட்லிக் கடை இருக்கு. அங்க டின்னர் போடலாம்னு சொல்லீருக்கலாம்.
//
ஆக்சிடெண்ட் ஆனதுக்கப்பறம் யார் இப்ப சாப்பிட போறா? //

ஒரு நல்ல கடையில சாப்பிடக் கூடாதே....பக்கத்துலயே டாலர் ஷாப் இருக்கு. எதையெடுத்தாலும் 49 ரூவா 99ரூவான்னு இருக்கும். கொஞ்சம் அப்படித் திரும்பி வந்தா பொன்னுச்சாமி. நெத்திலி வறுவல் பிரமாதமா இருக்கும்.

//// 23C? அது பெசண்ட் நகர் பீச்சுக்குப் போகாது
//
23C பெசண்ட் நகர் போகும்.
நேத்து நீங்க சொன்னதும் தப்புனு செந்தில் போன பார்ட்ல சென்னை மேப் லிங்க் கொடுத்திருக்கார்.//

பெசண்ட் நகர்..இந்தக் கடைசீல இருந்து அந்தக் கடைசீ வரைக்கும் இருக்கு. நான் என்ன சொன்னேன். பெசண்ட் நகர் பீச்சுக்குப் போகாதுன்னுதானே சொன்னேன். ;-) மேப் போட்டவர இப்பக் கூப்புடு.

// 25 வருஷம் சென்னைல இருந்த எனக்கு தெரியாதானும் சொல்றார். விவரம் தெரிஞ்சவங்க யாரையாவது கேட்டு சொல்லுங்க...//

25 வருசம் சென்னையில இருக்குறதுல பெரிய விஷயமில்லை. ஆனா எவ்வளவு விவரம் தெரியுதுங்குறதுதான் முக்கியம். காமராஜர் அரங்கம், அலையன்ஸ் பிரான்சே, நேரு உள்விளையாட்டு அரங்கமெல்லாம் போனதுண்டான்னு சென்னைச் செந்தமிழன் செந்தில் கிட்ட கேளு.

// நானா ஆக்ஸிடெண்ட் செஞ்சேன்... ராமா!!! //

ஓ ராமாதான் ஆக்சிடெண்ட் செஞ்சாரா? அவரு நல்ல டிரைவர் இல்ல போலிருக்கே!

Anonymous said...

//இன்னும் சோகமே வரலையே...
கதையோட தலைப்பை படித்த பின்பும் கதை யூகிக்க முடியவில்லையா? ;)//

நெல்லிக்காய் சாப்பிடும் பொழுது துவர்ப்பா இருக்கும்,கொஞ்ச நேரம் கழிச்சு தண்ணீர் குடிச்சா இனிப்பாயிருக்கும்..அதுமாதிரி கதைல முதல்ல சோகம்,மோதல் எல்லாம்,அப்புறம் காதல்,சந்தோஷம் எல்லாம்.....

என்ன பாலாஜி,கரெக்டா?

Priya said...

சூப்பரா எழுதறீங்க. நான் எல்லா பகுதியையும் ஒண்ணா படிச்சதால ஒரு நாவல் படிச்ச effect. அவங்க கூடவே இருந்து பாக்கற மாதிரி இருந்தது.

நல்ல ரொமாண்ட்டிக்கா போகும்னு பாத்தா திடீர்னு accident அது இதுங்கறீங்க. அது பெரிசா ஒண்ணும் இல்லனு அடுத்த வாட்டி சொல்லிட்டு, ரொமாண்ட்டிக் வழிலயே கொண்டு போய்டுவிங்க தானே?

நாமக்கல் சிபி said...

// ஜி said...

//கொஞ்சம் சரி... நிறைய தப்பு ;)//

ஒருவேளை, அருணுக்கு லேசா கால்ல அடிப்பட்டு, அவன் ஆஸ்பத்திரில இருக்கும்போது தன்னாலத்தான் அவனுக்கு அடிப் பட்டுடுச்சுன்னு பரிதாபப்பட்டு, அவனுக்கு உதவி செஞ்சி காதல் வயப்படுவாளோ?

எதுவா இருந்தா என்ன? அடுத்தப் பகுதில தெரிஞ்சிடப் போகுது. நான் அப்பப் பாத்துக்குறேன். //

இதுலயும் கொஞ்சம் சரி நிறைய தப்பு...

கதை இன்னும் 4 - 5 பாகமாவது போகும். அதனால அவசரப்படாம படிங்க ;)

நாமக்கல் சிபி said...

//அந்த அளவுக்கு அறிவிருந்தா நான் ஏன் இப்படியிருக்கேன் :-(//

அதுவும் சரிதான்... வெட்டி அளவுக்கு யோசிச்சா நீங்க உங்க ரேஞ்சுல இருந்து குறைஞ்சிடுவீங்க.. நீங்க உயரத்திலே இருங்க ;)

//என்னது...ராகவனா? டி.சி.பி ராகவனா? தேர்தல் கமிஷனர் ராகவனா?//
ரெண்டு பேர பத்தியும் மகரந்தம்ல எழுதினாரே அந்த ராகவன் ;)

//
ஒரு நல்ல கடையில சாப்பிடக் கூடாதே....பக்கத்துலயே டாலர் ஷாப் இருக்கு. எதையெடுத்தாலும் 49 ரூவா 99ரூவான்னு இருக்கும். கொஞ்சம் அப்படித் திரும்பி வந்தா பொன்னுச்சாமி. நெத்திலி வறுவல் பிரமாதமா இருக்கும்.//
ஹிம்... நோட் பண்ணிக்கிறேன் :-)

//பெசண்ட் நகர்..இந்தக் கடைசீல இருந்து அந்தக் கடைசீ வரைக்கும் இருக்கு. நான் என்ன சொன்னேன். பெசண்ட் நகர் பீச்சுக்குப் போகாதுன்னுதானே சொன்னேன். ;-) மேப் போட்டவர இப்பக் கூப்புடு.//
அது வரைக்கும் தான் பஸ் போகும். மணல்குள்ள பஸ் போகாதுனு சொல்ல சொல்லி சொல்றாரு... தனா விழுந்து விழுந்து சிரிக்கிறான்... அதுக்கு மேல போகனும்னா நடந்துதான் போகனும்...
இது வரைக்கும் நீங்க பெசண்ட் நகர் பீச்சிக்கே போயிருக்க மாட்டீங்கனு சொல்றான். பஸ்ஸ மட்டும் பாத்துட்டு ஓவரா பேச வேணாம்னு சொல்லறான் :-)

//காமராஜர் அரங்கம், அலையன்ஸ் பிரான்சே, நேரு உள்விளையாட்டு அரங்கமெல்லாம் போனதுண்டான்னு சென்னைச் செந்தமிழன் செந்தில் கிட்ட கேளு.//

இந்த மூணு இடத்துக்கும் போயிருக்காராம். இந்த இடத்துக்கு மட்டும் போயிட்டு ஓவரா பேச வேணாம்னு சொல்லறாரு.

உங்களுக்கு பெங்களூர்ல லக்கசந்திரா, கொணப்பனக்ரஹாரா தெரியுமானு தனா கேக்கறான்.

//ஓ ராமாதான் ஆக்சிடெண்ட் செஞ்சாரா? அவரு நல்ல டிரைவர் இல்ல போலிருக்கே!//
:-)

நாமக்கல் சிபி said...

//நெல்லிக்காய் சாப்பிடும் பொழுது துவர்ப்பா இருக்கும்,கொஞ்ச நேரம் கழிச்சு தண்ணீர் குடிச்சா இனிப்பாயிருக்கும்..அதுமாதிரி கதைல முதல்ல சோகம்,மோதல் எல்லாம்,அப்புறம் காதல்,சந்தோஷம் எல்லாம்.....

என்ன பாலாஜி,கரெக்டா?//
அனானி... அடிச்சி பின்னறியே!!!
ரொம்ப சரி :-)

நாமக்கல் சிபி said...

Priya said...
//
சூப்பரா எழுதறீங்க. நான் எல்லா பகுதியையும் ஒண்ணா படிச்சதால ஒரு நாவல் படிச்ச effect. அவங்க கூடவே இருந்து பாக்கற மாதிரி இருந்தது.
//
ரொம்ப நன்றிங்க...
எல்லாம் நம்ம கூட இருக்கறவங்க மாதிரிதான் :-)

//
நல்ல ரொமாண்ட்டிக்கா போகும்னு பாத்தா திடீர்னு accident அது இதுங்கறீங்க. அது பெரிசா ஒண்ணும் இல்லனு அடுத்த வாட்டி சொல்லிட்டு, ரொமாண்ட்டிக் வழிலயே கொண்டு போய்டுவிங்க தானே?
//
:-))
தெரியலமா.. தெரியல.. (சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

Priya said...

உங்க 'பிரிவு'ம் படிச்சேன், ரொம்ப நல்லா இருந்தது. கதை கற்பனைனு சொல்றிங்க, நம்ப தான் முடியல. இன்னும் நிறைய நல்ல posts இருக்கு இங்க. அப்பப்ப வந்து படிக்கறேன்.

நாமக்கல் சிபி said...

//Priya said...

உங்க 'பிரிவு'ம் படிச்சேன், ரொம்ப நல்லா இருந்தது. கதை கற்பனைனு சொல்றிங்க, நம்ப தான் முடியல. இன்னும் நிறைய நல்ல posts இருக்கு இங்க. அப்பப்ப வந்து படிக்கறேன். //

ரொம்ப நன்றிங்க...
அது கற்பனை தாங்க..
இதுலயும் நம்பிக்கையில்லைனா மீதி கதைங்களையும் படிச்சி பாருங்க...

போரடிக்கும் போது வந்து படிச்சு... உங்க கருத்தை சொல்லுங்க :-)

Anonymous said...

ச்சே..இதுக்குத்தான்யா இந்த தொடர்கதையெல்லாம் தொடர் முடியிற வரைக்கும் படிக்கக் கூடாதுங்கறது. சரி அடுத்த பகுதி போட்டவுடனே, மறக்காம 'அடுத்த பகுதி போட்டாச்சுனு' எனக்கு ஒரு Email அனுப்பிடு, (அப்ப தான்) நீ நல்லாயிருப்ப. இல்ல ஒரு 'Mailing List' தொடங்க எண்ணம் இருந்தால் என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோ!

மத்தபடி, கதை செம்ம Interesting'ஆ போகுது...

-விநய்

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
அதுவும் சரிதான்... வெட்டி அளவுக்கு யோசிச்சா நீங்க உங்க ரேஞ்சுல இருந்து குறைஞ்சிடுவீங்க.. நீங்க உயரத்திலே இருங்க ;) //

இதுக்கு ஒரு பதிலும் சொல்ல முடியாது.

////என்னது...ராகவனா? டி.சி.பி ராகவனா? தேர்தல் கமிஷனர் ராகவனா?//
ரெண்டு பேர பத்தியும் மகரந்தம்ல எழுதினாரே அந்த ராகவன் ;) //

ஓ அவரா! அவரு ரொம்பவும் ராங்கி பிடிச்ச ஆளு. அவர வெச்சல்லாம் கத எழுதாத.

//// ஒரு நல்ல கடையில சாப்பிடக் கூடாதே....பக்கத்துலயே டாலர் ஷாப் இருக்கு. எதையெடுத்தாலும் 49 ரூவா 99ரூவான்னு இருக்கும். கொஞ்சம் அப்படித் திரும்பி வந்தா பொன்னுச்சாமி. நெத்திலி வறுவல் பிரமாதமா இருக்கும்.//
ஹிம்... நோட் பண்ணிக்கிறேன் :-) //

இப்பிடி வெவரம் எங்கிட்டக் கேட்டாச் சொல்வேன். அத விட்டுக்கிட்டு செந்தில் தனான்னு கேட்டுக்கிட்டு.

// //பெசண்ட் நகர்..இந்தக் கடைசீல இருந்து அந்தக் கடைசீ வரைக்கும் இருக்கு. நான் என்ன சொன்னேன். பெசண்ட் நகர் பீச்சுக்குப் போகாதுன்னுதானே சொன்னேன். ;-) மேப் போட்டவர இப்பக் கூப்புடு.//
அது வரைக்கும் தான் பஸ் போகும். மணல்குள்ள பஸ் போகாதுனு சொல்ல சொல்லி சொல்றாரு... தனா விழுந்து விழுந்து சிரிக்கிறான்... அதுக்கு மேல போகனும்னா நடந்துதான் போகனும்...
இது வரைக்கும் நீங்க பெசண்ட் நகர் பீச்சிக்கே போயிருக்க மாட்டீங்கனு சொல்றான். பஸ்ஸ மட்டும் பாத்துட்டு ஓவரா பேச வேணாம்னு சொல்லறான் :-) //

யாரு தனாவா? தனாவா அப்படிச் சொன்னது? இல்ல நீயா சொல்றியா? பெசண்ட் நகர் பீச்சுக்கு எந்த பஸ்சும் போகாது. பெசண்ட் நகர் பஸ்செல்லாம் பஸ்ஸ்டாண்டோட நின்னுரும். அங்கிருந்து நடந்து பக்கத்துல இருக்குற பீச்சுக்குப் போனா கருவாட்டு மணத்தோடதான் காதலிக்கனும். பெசண்ட் நகர் பீச் என்று வழங்கப் படுவது...பீச்சின் நுழைவு தொடங்கி Planet Yumm வரைக்குந்தான். இண்டு இடுக்கு முண்டு முடுக்குன்னு பீச்சு மகாபலிபுரத்தத் தாண்டி கன்னியாகுமரி வரைக்கும் ஓடுது. விட்டா அதெல்லாம் பெசண்ட் நகர் பீச்சுன்னு சொல்வீங்க போலிருக்கே!

////காமராஜர் அரங்கம், அலையன்ஸ் பிரான்சே, நேரு உள்விளையாட்டு அரங்கமெல்லாம் போனதுண்டான்னு சென்னைச் செந்தமிழன் செந்தில் கிட்ட கேளு.//

இந்த மூணு இடத்துக்கும் போயிருக்காராம். இந்த இடத்துக்கு மட்டும் போயிட்டு ஓவரா பேச வேணாம்னு சொல்லறாரு. //

ஓவரா! நானா! நானா! ஆழ்வார்ப்பேட்டை coffee world தெரியுமா? dollors and pounds தெரியுமா? அதோட புது showroom எங்க இருக்கு தெரியுமா? fashion folks தெரியுமா? சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள்ள இருக்குற பிரஸ்டீஜியஸ் கிரிக்கெட் கிளப் போனதுண்டா? அங்க பாப்புலர் டிரிங் என்னன்னு தெரியுமா? எந்தப் புத்தகம் வேணும்னாலும் தி.நகர்ல எங்க கிடைக்கும் தெரியுமா? வானதி பதிப்பகம், கண்ணதாசன் பதிப்பகம், பழநியப்பா பிரதர்ஸ், அல்லயன்ஸ் பதிப்பகம், இதெல்லாம் தெரியுமா? சஞ்சீவினி எதுக்கு பாப்புலர் தெரியுமா? இன்னும் நெறைய தெரியுமா இருக்கு....மொதல்ல இதுக்கு பதில் சொல்லட்டும்.

// உங்களுக்கு பெங்களூர்ல லக்கசந்திரா, கொணப்பனக்ரஹாரா தெரியுமானு தனா கேக்கறான். //

அது சரி..கோனேன அக்ரஹாரா தெரியுமா? பூப்பசந்திரா தெரியுமா? தொட்டபொம்சந்திரா தெரியுமா? அஷ்வத்நகர் தெரியுமா? கங்கனஹள்ளிக்கும் கங்காநகருக்கும் என்ன வேறுபாடு தெரியுமா? தரளபாலகேந்திரா எங்கயிருக்கு தெரியுமா? பெங்களூர்ல ஒரு மீனாட்சியம்மன் கோயில் இருக்கு. அது எங்கன்னு தெரியுமா?

நாமக்கல் சிபி said...

//இதுக்கு ஒரு பதிலும் சொல்ல முடியாது.//
அது ;)

//இப்பிடி வெவரம் எங்கிட்டக் கேட்டாச் சொல்வேன். அத விட்டுக்கிட்டு செந்தில் தனான்னு கேட்டுக்கிட்டு.//
அப்ப தினமும் காலைல நமக்கு ஒரு போன் கால் போடுங்க ;)

//யாரு தனாவா? தனாவா அப்படிச் சொன்னது? இல்ல நீயா சொல்றியா? //
நானா சொன்னா நான் சொல்றனு சொல்ல மாட்டனா??? எனக்கு தெரியாததால தான இவுங்க சொன்னாங்கனு சொல்றேன். எனக்கு என் கதைல இடமெல்லாம் சும்ம மத்தவங்க ரியல இருக்கும்னு நினைக்கற அளவுக்கு இருந்தா போதும். இல்லைனா கற்பனைனு சொல்லிடுவேன் ;)

சரி.. உங்களுக்கான கேள்விகள் :
திருவான்மியூர்ல வால்மீகி தெரு தெரியுமா? அங்க பாப்பலரான ஒருத்தவர் வீடு இருக்கு தெரியுமா?

எல்.பி. ரோட்ல ஹோட்டல் பரணி தெரியுமா? அது பக்கத்துல நாயர் கடை டீ ஸ்டால் தெரியுமா? அது பக்கத்துல இருக்கற வயின் ஷாப் தெரியுமா?

சென்னைல பில் க்ளிண்டன் ரொட் தெரியுமா?

அண்ணா யூனிவர்சிட்டி கேண்டின்ல ஈவனிங் 3-5 என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ரஜினிக்கு பசிச்சா எங்க சாப்பிடுவாரு தெரியுமா?

இதுக்கெல்லாம் உங்களை பதில் சொல்ல சொல்றாங்க :-)

இதுக்கெல்லாம் மேல என்னோட கேள்வி...

1. இன்ஃபோஸிஸ்ல ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஏன் செடி வைக்கல தெரியுமா?

2. ஜாஹித் உசைன் தெரியுமா? அவர் எதுக்கு ஃபேமஸ் தெரியுமா? இப்ப அவர் இடத்தை யார் ஃபில் பண்ணியிருக்காங்க தெரியுமா?

3. நம்ம லைப்ரரில லிங்குஸ்டிக் செக்ஷன் எங்க இருக்கு தெரியுமா?

லாஸ்ட்ட் பட் நாட் லிஸ்ட்

ஜெர்ரி படம் எதனால ஹிட்டாச்சு தெரியுமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//லாரியில் மோதி அருணும் தீபாவும் வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டனர்...//

இருவரும் ஒன்றாக(?) அருகில் வந்த கோயம்பேடு பூக்கடை வண்டியில் விழுந்தனர்! அந்த வண்டியில் ஒரே மல்லிகைப் பூவாய் இருக்க,....
(கனவு சீன்...பாட்டு...நெல்லிக்காய் நெல்லிக்காய்...)
என்ன பாலாஜி சரி தானே? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// நானா ஆக்ஸிடெண்ட் செஞ்சேன்... ராமா!!! //

//ஓ ராமாதான் ஆக்சிடெண்ட் செஞ்சாரா? அவரு நல்ல டிரைவர் இல்ல போலிருக்கே!//

அட என்ன ஜிரா நீங்க! ராமனின் போட்டியில் ஜெயிச்சுட்டு இப்படியெல்லாம் கேள்வி கேக்கறீங்க!

ராமர் நல்ல கண்டக்டர்!!
நல்ல டிரைவர் கிருஷ்ணர் தானே! :-)
உங்களுக்காகவே மகாபாரதத்தில் ஒரு போட்டி வைக்கணும் போல இருக்கே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அட ஜிரா, பாலாஜி

நாங்களே பாவம் அந்த அருணுக்கும் தீபாவுக்கும் என்னாச்சுதோன்னு கவலையில இருக்கோம்;
நீங்க என்னடான்னா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம மெட்ராஸ்ல அது தெரியுமா இது தெரியுமான்னு சவுண்டு விட்டுக்குனு இருக்கீங்க!:-))

மொதல்ல மெட்ராஸ்ல அருணும் தீபாவும் இப்ப எங்க இருக்காங்க; அவுங்களுக்கு என்ன உதவி தேவைன்னு போய் கண்டுபுடிச்சிட்டு வாங்க ரெண்டு பேரும்!!

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

ச்சே..இதுக்குத்தான்யா இந்த தொடர்கதையெல்லாம் தொடர் முடியிற வரைக்கும் படிக்கக் கூடாதுங்கறது. சரி அடுத்த பகுதி போட்டவுடனே, மறக்காம 'அடுத்த பகுதி போட்டாச்சுனு' எனக்கு ஒரு Email அனுப்பிடு, (அப்ப தான்) நீ நல்லாயிருப்ப. இல்ல ஒரு 'Mailing List' தொடங்க எண்ணம் இருந்தால் என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோ!

மத்தபடி, கதை செம்ம Interesting'ஆ போகுது...

-விநய்//
விநய்,
எல்லாம் நம்ம எதிர்பார்த்த மாதிரியா நடக்குது :-)

மெயிலென்ன போனே பண்ணி சொல்றேன் :-)

நாமக்கல் சிபி said...

//இருவரும் ஒன்றாக(?) அருகில் வந்த கோயம்பேடு பூக்கடை வண்டியில் விழுந்தனர்! அந்த வண்டியில் ஒரே மல்லிகைப் பூவாய் இருக்க,....
(கனவு சீன்...பாட்டு...நெல்லிக்காய் நெல்லிக்காய்...)
என்ன பாலாஜி சரி தானே? :-)//

நம்ம என்ன படமாங்க எடுக்கறோம்...
அடுத்த பகுதில பார்த்தா தெரியப்போகுது :-)

நாமக்கல் சிபி said...

//
ராமர் நல்ல கண்டக்டர்!!
நல்ல டிரைவர் கிருஷ்ணர் தானே! :-)
//
சூப்பர்...

//
உங்களுக்காகவே மகாபாரதத்தில் ஒரு போட்டி வைக்கணும் போல இருக்கே!//
எப்ப வைக்கறீங்க...
நான் காத்திருக்கேன்...
கதா பாத்திரத்தை வெச்சி கேளுங்க... அப்பதான் நானெல்லாம் பாஸாக்க முடியும் :-)

நாமக்கல் சிபி said...

///kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அட ஜிரா, பாலாஜி

நாங்களே பாவம் அந்த அருணுக்கும் தீபாவுக்கும் என்னாச்சுதோன்னு கவலையில இருக்கோம்;
நீங்க என்னடான்னா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம மெட்ராஸ்ல அது தெரியுமா இது தெரியுமான்னு சவுண்டு விட்டுக்குனு இருக்கீங்க!:-))

மொதல்ல மெட்ராஸ்ல அருணும் தீபாவும் இப்ப எங்க இருக்காங்க; அவுங்களுக்கு என்ன உதவி தேவைன்னு போய் கண்டுபுடிச்சிட்டு வாங்க ரெண்டு பேரும்!!///
தலைப்பிலே சொல்லிட்டேன் பதிவ பட்டிச்சா அனுபவிக்கனும், ஆராயக்கூடாதுன :-)

Anonymous said...

besh besh... romba nanna irukku!

Arunkumar said...

யப்பா வெட்டி, அருணும் தீபாவும் சொர்க்கத்துல ஒன்னு சேர்ந்துட்டாங்கனு சொல்லி முடிச்சிராதீங்க. நல்ல படியா ரெண்டு பேத்துக்கும் காதல் கல்யாணம் நடத்தி வச்சிருங்க :))

கதிர் said...

கதையில ஒரு திருப்பம்னு சொல்லிக்கிட்டே இருந்தியே! இதானா அது!

நல்லாருக்குய்யா!

Anonymous said...

aiyooo enna idhu...
en indha commercial tamil padam maadhiri accident tragedy ellam eludhareenga......:(
dhayavukoorndhu yaarukkum edhuvum aagaama paathukonga...

waiting for Nellikai 8 briskly. :)

Adiya said...

enna thalai sudden oru sudden break pottu erukinga.. mm.. seeikram next part publish pannuinga.

நாமக்கல் சிபி said...

//Dreamzz said...

besh besh... romba nanna irukku! //

மிக்க நன்றி ட்ரீம்ஸ்...

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

யப்பா வெட்டி, அருணும் தீபாவும் சொர்க்கத்துல ஒன்னு சேர்ந்துட்டாங்கனு சொல்லி முடிச்சிராதீங்க. நல்ல படியா ரெண்டு பேத்துக்கும் காதல் கல்யாணம் நடத்தி வச்சிருங்க :)) //

என்ன நடக்குதுனு பார்க்கலாம் அருண்...
பயப்படாதீங்க.. தம்ம தீபாவுக்கு ஒன்னுமாகாது :-)

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

கதையில ஒரு திருப்பம்னு சொல்லிக்கிட்டே இருந்தியே! இதானா அது!

நல்லாருக்குய்யா! //

அது இது இல்லை :-)

நாமக்கல் சிபி said...

//bomMAI said...

aiyooo enna idhu...
en indha commercial tamil padam maadhiri accident tragedy ellam eludhareenga......:(
dhayavukoorndhu yaarukkum edhuvum aagaama paathukonga...

waiting for Nellikai 8 briskly. :) //

:-))

பயப்படாதீங்க...
எதுவும் ஆகாது :-)

Anonymous said...

Kathai superda..

Enna herova potta kathaya vida supera iruku :)

Dhana