தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, December 31, 2006

நன்றி சொல்ல உனக்கு - வார்த்தையில்லை எனக்கு!

2006 - எனக்கு மிகுந்த வருத்தமும், அதைவிட அதிக சந்தோஷத்தையும் கொடுத்த ஆண்டு...

முதல் மாதத்திலே அமெரிக்க விசா கிடைத்தது. கிடைத்த ஒரு மாதத்தில் நியு ஜெர்ஸியில் வந்து இறங்கினேன். இன்னும் கொஞ்ச நாள் இந்தியாவிலிருக்கவே விரும்பினாலும் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாததால் உடனே ஒத்துக்கொண்டு வந்தேன். இதில் மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால் ஆன்சைட் கிடைக்கவில்லை என்றால் திறமையில்லாதவன் என்று இந்த துறையிலிருப்பவர்களே சொல்வதுதான்.

இங்கே வந்த பிறகு ஏன் வந்தோம் என்றே நினைத்தேன். ஒரு சமயத்தில் எங்கே பைத்தியம் பிடித்துவிடுமோ என்றிருந்த நிலையில் கிடைத்ததுதான் இந்த வலையுலக அறிமுகம். ஒன்றிரண்டு மாதங்களில், எழுத வேண்டுமென்ற ஆசையில் இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன்.

என்ன எழுதுவதென்று தெரியாமல் தட்டு தடுமாறி நான் கண்டதையெல்லாம் எழுதியதை தொடர்ந்து படிப்பவர்கள் அறிவார்கள். நான் எழுதிய ஒவ்வொரு பதிவும் யாராவது ஒருவர் கொடுத்த உற்சாகத்தால்தான். இதற்கு முன் பரிட்சையை தவிர எங்கும் எழுதாத நான் எழுத பழகிக்கொள்வது இங்குதான். எனக்கு எது எழுத தெரியும் என்று எனக்கு தெரியாது. பல்சுவை என்று ஒரு சிலர் சொல்வதற்கும் காரணம் அதுதான். மனதில் தோன்றுவதை எல்லாம் எழுதுவது தான்.

என்னடா பல்சுவைனு சொல்றானேனு ஒரு சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆமாம். அதற்காகத்தான் இந்த பதிவு. தெரியாதவங்க இங்க போய் பார்த்துக்கோங்க.

தோத்ததுக்கே நன்றி சொல்றவன் இன்னும் சொல்லலையேனு தப்பா நினைச்சுக்காதீங்க. சர்வேசன் அவர்கள் நடத்திய சர்வேயில் ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

எனக்கு சத்தியமா தெரியும் என்னைவிட இங்க நல்லா எழுதறவங்க நிறைய பேர் இருக்கீங்கனு. இது உங்களுக்கும் தெரியும். இது எனக்கு இன்னும் நல்லா எழுதனும்னு எல்லாரும் கொடுத்த ஒரு டானிக்கா நான் எடுத்துக்கறேன். அவ்வளவுதான்.

சர்வேசன் ஏதோ பரிசுனு சொன்னாரே! அது என்னனு சொல்லவேயில்லைனு நினைக்கறீங்களா? உங்ககிட்ட சொல்லாம போயிடுவனா. பரிசு இதுதான் - $100. இதை நம் அனைவரின் சார்பாகவும் உதவும் கரங்களுக்கு அனுப்ப மிகுந்த சந்தோஷத்துடன் ஒத்து கொண்டார். என் வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷமான நாளாகவே இதை உணருகிறேன். என் எழுத்து மூலம் ஒருவருக்கு உதவ முடிவதே எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

என்னடா தட்டுங்கள் திறக்கப்படும்ல பிடிச்ச வரினு சொல்லி இதை போட்டுட்டு "நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;" இங்க விளம்பரப்படுத்தறானேனு நினைக்காதீங்க. இது என்னுடைய சம்பாதியத்தில் நான் கொடுத்த பணமல்ல. ஆகவே இது தர்மமல்ல.

இதை மேலும் இங்கு தெரியப்படுத்துவதற்கான காரணம். இதை படித்த பிறகு யாருக்காவது புத்தாண்டு பரிசாக அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு உதவ நினைத்தால் இதோ லிங்... (ரொம்ப சுலபமா அனுப்பலாம்)

வேறு யாருக்காவது இதே போல் மற்ற நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணம் அனுப்புவது தெரிந்தால் பின்னூட்டத்தில் லிங் கொடுக்கவும்.

உங்கள் அனைவருக்கும் என் நன்றி மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

62 comments:

அனுசுயா said...

வெட்டி உண்மையிலேயே சந்தோசமான செய்தி நீங்க வலைதளம் ஆரம்பிச்சு பெரிய எழுத்தாளரா ஆனதால உதவும் கரங்களின் பிஞ்சுகளுக்கு ஒரு உதவி அமைஞ்சிருக்கு. உண்மையில பேருதான் வெட்டினு வெச்சீங்க ஆனா உதவி பண்ணி வெட்டியில்லனு நிரூபிச்சுட்டீங்க.

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டுல நீங்க இன்னும் பல பரிசுகள பெற வாழ்த்துகிறேன். அதன் மூலமா சில பல நல்ல காரியங்களும் நடக்கட்டும்.

siva gnanamji(#18100882083107547329) said...

சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்தோம்னு நிம்மதி!

புத்தாண்டு வாழ்த்துகள்!

Anonymous said...

வாழ்த்துக்கள் !!!

Anonymous said...

வாழ்த்துக்கள்!

http://internetbazaar.blogspot.com

Anonymous said...

வாழ்த்துக்கள்!

http://internetbazaar.blogspot.com

குமரன் (Kumaran) said...

உம்முடைய நண்பர்களாக இருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் பாலாஜி.

Arunkumar said...

Wish you a very Happy,Successful and a Prosperous New Year Balaji.

Obviously, we expect more from you in the coming year :)

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் வெட்டி.

பெயரில் மட்டும் வெட்டியை வைத்து கொண்டு உருப்படியாக செய்துக் கொண்டு இருக்கீர்...... தொடரவும்....

பல தொண்டு நிறுவனங்கள் ஆன்லைனில் பணம் பெற்றுக் கொள்கின்றார்கள். பணம் அனுப்புவதற்கு முன்பு நன்கு விசாரித்து விட்டு கொடுப்பது நல்லது. சிலர் இதை தொழிலாக செய்வதால் அந்த விசாரிப்பு....

இன்னும் சில தொண்டு இல்லங்கள் பணத்தை விட அவர்கள் இல்லத்தில் நேரம் செலவிடும் உள்ளங்களை எதிர்பார்க்கின்றார்கள்.

நண்பர்கள் நேரம் இருந்தால் அது போல இல்லங்களில் தங்களின் நேரத்தில் சில மணித் துளிகளை அங்கு செலவு செய்யலாம். (BANYAN போன்ற பல நிறுவனங்கள் உள்ளது)

Unknown said...

பாலாஜி,

உங்களுக்கு இந்த விருது கிடைத்தது உங்கள் எழுத்துக்கு கிடைத்த வாசகர் அங்கீகாரம் என்றே கொள்ள வேண்டும்.இதற்கு முழுக்க முழுக்க தகுதியானவர் தான் நீங்கள். $100 உதவும் கரத்துக்கு அனுப்பியதில் மிக உயர்ந்து நிற்கிறீர்கள்.உங்களுக்கும் சர்வேசனுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

Unknown said...

பாலாஜி,

உங்களுக்கு இந்த விருது கிடைத்தது உங்கள் எழுத்துக்கு கிடைத்த வாசகர் அங்கீகாரம் என்றே கொள்ள வேண்டும்.இதற்கு முழுக்க முழுக்க தகுதியானவர் தான் நீங்கள். $100 உதவும் கரத்துக்கு அனுப்பியதில் மிக உயர்ந்து நிற்கிறீர்கள்.உங்களுக்கும் சர்வேசனுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் பாலாஜி.

நாமக்கல் சிபி said...

//Collapse comments

அனுசுயா
அனுசுயா said...

வெட்டி உண்மையிலேயே சந்தோசமான செய்தி நீங்க வலைதளம் ஆரம்பிச்சு பெரிய எழுத்தாளரா ஆனதால உதவும் கரங்களின் பிஞ்சுகளுக்கு ஒரு உதவி அமைஞ்சிருக்கு. உண்மையில பேருதான் வெட்டினு வெச்சீங்க ஆனா உதவி பண்ணி வெட்டியில்லனு நிரூபிச்சுட்டீங்க.

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டுல நீங்க இன்னும் பல பரிசுகள பெற வாழ்த்துகிறேன். அதன் மூலமா சில பல நல்ல காரியங்களும் நடக்கட்டும்.//

மிக்க நன்றி அனுசயா...
எல்லாம் தங்களை போன்றவர்களின் தொடர் உற்சாகம் தான் காரணம்!!!

நாமக்கல் சிபி said...

//sivagnanamji(#16342789) said...

சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்தோம்னு நிம்மதி!

புத்தாண்டு வாழ்த்துகள்!//

மிக்க நன்றி சிவஞானம்ஜி!!!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

//Shruthi said...

வாழ்த்துக்கள் !!!//

மிக்க நன்றி ஸ்ருதி...

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

வாழ்த்துக்கள்!

http://internetbazaar.blogspot.com//

மிக்க நன்றிங்க!!!

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran) said...

உம்முடைய நண்பர்களாக இருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் பாலாஜி.//

அப்படி இல்லை குமரன்...
நல்ல நண்பர்கள் கிடைத்ததால் தான் நானும் இந்த நிலமையிலிருக்கிறேன்!!!
அதற்கு நான் தான் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்!!!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

Wish you a very Happy,Successful and a Prosperous New Year Balaji.

Obviously, we expect more from you in the coming year :)//

Thx a lot Arun and Wish u the same...

Will try to give my best always!!!

நாமக்கல் சிபி said...

//நாகை சிவா said...

வாழ்த்துக்கள் வெட்டி.

பெயரில் மட்டும் வெட்டியை வைத்து கொண்டு உருப்படியாக செய்துக் கொண்டு இருக்கீர்...... தொடரவும்....
//
மிக்க நன்றி புலி...
எல்லாம் உங்க ஊக்கமும் உற்சாகமும்தான் காரணம்!!!

//
பல தொண்டு நிறுவனங்கள் ஆன்லைனில் பணம் பெற்றுக் கொள்கின்றார்கள். பணம் அனுப்புவதற்கு முன்பு நன்கு விசாரித்து விட்டு கொடுப்பது நல்லது. சிலர் இதை தொழிலாக செய்வதால் அந்த விசாரிப்பு....
//
ஆமாம்! அதற்காகத்தான் தங்களுக்கு தெரிந்த நல்ல தொண்டு நிறுவனங்கள் இருந்தால் அளிக்குமாறு கூறினேன். ஒரே நிறுவனத்திற்கு உதவுவதற்கு பதில் பல நிறுவனங்களுக்கு உதவினால் நல்லது தானே!

// இன்னும் சில தொண்டு இல்லங்கள் பணத்தை விட அவர்கள் இல்லத்தில் நேரம் செலவிடும் உள்ளங்களை எதிர்பார்க்கின்றார்கள்.

நண்பர்கள் நேரம் இருந்தால் அது போல இல்லங்களில் தங்களின் நேரத்தில் சில மணித் துளிகளை அங்கு செலவு செய்யலாம். (BANYAN போன்ற பல நிறுவனங்கள் உள்ளது)//
இதை போல செய்வதுதான் மனதிற்கும் மகிழ்ச்சியாக இருக்கும்!!!

குமரன் (Kumaran) said...

நானும் அதைத் தான் சொன்னேன் பாலாஜி. இப்போதெல்லாம் பெற்றோர், உறவினர், ஆசிரியர்களை விட ஒருவருக்கு தங்கள் நண்பர்களே நல்லவழியையும் தீயவழியையும் காண்பிப்பவர்களாக இருக்கிறார்கள். உங்களைப் பெற்றதால் உங்கள் நண்பர்களும் அவர்களால் நீங்களும் கொடுத்துவைத்தவர்கள்.

'உன் நண்பர்களைப் பற்றி சொல். நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்'.

நாமக்கல் சிபி said...

//செல்வன் said...

பாலாஜி,

உங்களுக்கு இந்த விருது கிடைத்தது உங்கள் எழுத்துக்கு கிடைத்த வாசகர் அங்கீகாரம் என்றே கொள்ள வேண்டும்.இதற்கு முழுக்க முழுக்க தகுதியானவர் தான் நீங்கள். $100 உதவும் கரத்துக்கு அனுப்பியதில் மிக உயர்ந்து நிற்கிறீர்கள்.உங்களுக்கும் சர்வேசனுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி செல்வன்...
துவக்கத்திலிருந்து எனக்கு தாங்கள் அளித்த ஊக்கமே அனைத்திற்கும் காரணம்!!!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

//சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் பாலாஜி.//

மிக்க நன்றி சேதுக்கரசி!!!

தங்களுக்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

நல்ல காரியத்துடன் உங்கள் புத்தாண்டை நன்றாகவே ஆரம்பிக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran) said...

நானும் அதைத் தான் சொன்னேன் பாலாஜி. இப்போதெல்லாம் பெற்றோர், உறவினர், ஆசிரியர்களை விட ஒருவருக்கு தங்கள் நண்பர்களே நல்லவழியையும் தீயவழியையும் காண்பிப்பவர்களாக இருக்கிறார்கள். உங்களைப் பெற்றதால் உங்கள் நண்பர்களும் அவர்களால் நீங்களும் கொடுத்துவைத்தவர்கள்.

'உன் நண்பர்களைப் பற்றி சொல். நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்'.//

முற்றிலும் சரியான வார்த்தைகள் குமரன். இன்று நண்பர்களே நம்மை முற்றிலும் செதுக்கும் சிற்பிகளாக இருக்கிறார்கள்.

சாத்வீகன் said...

வாசக நெஞ்சங்களையும் வாக்குகளையும் ஒரு சேர அள்ளிய 2006ம் ஆண்டின் சிறந்த பதிவரே..
உதவும் மனத்தால் உயர்ந்து நிற்கின்றீர்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

வெட்டிபயல்,

விவரங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.
வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி.

அனாதை இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு பயன்படும் விதத்தில் நமது சர்வே முடிந்தது இந்த புத்தாண்டின் ஒரு நல்ல தொடக்கம்.

I hope this inspire more of us to donate for such noble causes.

Happy new year everyone!

Anonymous said...

இன்னும் நிறைய எழுதுங்கள்.
உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வெட்டி...

புத்தாண்டில் ஒரு புது வசந்தம் வீச பேனா (தட்டச்சு) பதித்திருக்கிறீர்கள் வெட்டி...

கைப்புள்ள said...

தங்கள் எழுத்தின் மூலம் கிடைத்த பரிசு, தேவையுள்ள ஒரு நிறுவனத்தைச் சென்று சேர்வதில் அறிந்து மகிழ்ச்சியாகவும் அதே சமயம் பெருமையாகவும் உள்ளது. தாங்கள் தங்கள் எழுத்தில் மேன்மேலும் பல சிறப்புகளையும் அதன் மூலம் பல ஏற்றங்களையும் வாழ்வில் காண வாழ்த்துகிறேன்.

Anonymous said...

இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வாழ்வில் வளமும் நலமும் பெருகட்டும்!!!

நாமக்கல் சிபி said...

//Udhayakumar said...

நல்ல காரியத்துடன் உங்கள் புத்தாண்டை நன்றாகவே ஆரம்பிக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!!!//

மிக்க நன்றி உதய்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

//சாத்வீகன் said...

வாசக நெஞ்சங்களையும் வாக்குகளையும் ஒரு சேர அள்ளிய 2006ம் ஆண்டின் சிறந்த பதிவரே..
உதவும் மனத்தால் உயர்ந்து நிற்கின்றீர்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

எல்லாம் இங்கே இருப்பவர்களின் ஊக்கமே காரணம்!!! அனைத்து புகழும் எனக்கு ஊக்கமளித்த உங்களுக்கே!!!

தங்களுக்கும் தங்கல் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

//SurveySan said...

வெட்டிபயல்,

விவரங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.
வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி.

அனாதை இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு பயன்படும் விதத்தில் நமது சர்வே முடிந்தது இந்த புத்தாண்டின் ஒரு நல்ல தொடக்கம்.

I hope this inspire more of us to donate for such noble causes.

Happy new year everyone!//

சர்வேசன்,
தங்களுக்கு தான் என் முதல் நன்றி!!!
இந்த பரிசு தாங்கள் அளித்ததே!!!

இதை வெளியிடலாம் என்றும் நீங்கள் சொல்லியது மகிழ்ச்சியாக உள்ளது...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

enRenRum-anbudan.BALA said...

//உம்முடைய நண்பர்களாக இருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் பாலாஜி.
//
Ditto !

Wish you and family a wonderful 2007 :)

இராம்/Raam said...

பாலாஜி,

வாழ்த்துக்கள்,

குமரன் சொன்னது போல் உன்னை எம் நண்பராய் பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி.

நாமக்கல் சிபி said...

//ஆதிபகவன் said...

இன்னும் நிறைய எழுதுங்கள்.
உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.//

ஆதிபகவான்,
மிக்க நன்றி!!!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

//ஜி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வெட்டி...

புத்தாண்டில் ஒரு புது வசந்தம் வீச பேனா (தட்டச்சு) பதித்திருக்கிறீர்கள் வெட்டி...//

மிக்க நன்றி ஜி...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

//கைப்புள்ள said...

தங்கள் எழுத்தின் மூலம் கிடைத்த பரிசு, தேவையுள்ள ஒரு நிறுவனத்தைச் சென்று சேர்வதில் அறிந்து மகிழ்ச்சியாகவும் அதே சமயம் பெருமையாகவும் உள்ளது. தாங்கள் தங்கள் எழுத்தில் மேன்மேலும் பல சிறப்புகளையும் அதன் மூலம் பல ஏற்றங்களையும் வாழ்வில் காண வாழ்த்துகிறேன்.//

மிக்க நன்றி தல!!!
எல்லாம் உங்க ஆசி தான் :-)

நாமக்கல் சிபி said...

//அருட்பெருங்கோ said...

இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வாழ்வில் வளமும் நலமும் பெருகட்டும்!!!//

மிக்க நன்றி Mr.காதல் ;)


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

///enRenRum-anbudan.BALA said...

//உம்முடைய நண்பர்களாக இருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் பாலாஜி.
//
Ditto !

Wish you and family a wonderful 2007 :)//

பாலா,
எல்லாம் தங்களை போல் இருப்பவர்களை பார்த்து ஏற்படும் எண்ணம் தான். தங்களுக்கு என் நன்றிகள் பல...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

//ராம் said...

பாலாஜி,

வாழ்த்துக்கள்,

குமரன் சொன்னது போல் உன்னை எம் நண்பராய் பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி.//

ராம்,
எல்லாம் நீங்கள் கொடுத்த ஊக்கமும் உற்சாகமுமே காரணம்!!!

நண்பர்களுக்காக ஏங்கிய எனக்கு இத்தனை நண்பர்களை கொடுத்ததற்கு நான் தான் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்!!!

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் பாலாஜி.
வெட்டி என்று கூப்பிட மனம் வரவில்லை.
இன்னும் நிறைய எழுத வேண்டும்.
கையில் இருக்கும் spinach

உங்களுக்குக் கொடுக்கும் உற்சாகத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கப்பி | Kappi said...

உளமார்ந்த வாழ்த்துக்கள் வெட்டி!!

கதிர் said...

Happy New Year Wishes to you Vetti!!

I am so happy when i read this.
**Sorry For belated Wishes** :))

Anonymous said...

ungl vetrikkum, ungal udhavikkum unaladakathirkum, ungal padaippirkkum enathu valthu+vanakkam

Njy a very happy n prosp new year 2007 vetti

கோபிநாத் said...

அன்பு பாலாஜி
புதிய ஆண்டிலும்
உங்கள் எண்ணங்களும்
கனவுகளும் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

//வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் பாலாஜி.
வெட்டி என்று கூப்பிட மனம் வரவில்லை.//
மிக்க நன்றி வல்லிசிம்ஹன்!!!
தாராளமா வெட்டி கூப்பிடலாம்... அதுக்கு தானே வெச்சிருக்கோம்!

// இன்னும் நிறைய எழுத வேண்டும்.
கையில் இருக்கும் spinach

உங்களுக்குக் கொடுக்கும் உற்சாகத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.//
கண்டிப்பாக நிறைய எழுத முயற்சிக்கிறேன்!!!

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

உளமார்ந்த வாழ்த்துக்கள் வெட்டி!!//

மிக்க நன்றி கப்பி!
எல்லாம் நீங்க கொடுக்கும் உற்சாகம் தான்.

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

Happy New Year Wishes to you Vetti!!

I am so happy when i read this.
**Sorry For belated Wishes** :))//

Thx a lot Thambi...

நாமக்கல் சிபி said...

//Dreamzz said...

ungl vetrikkum, ungal udhavikkum unaladakathirkum, ungal padaippirkkum enathu valthu+vanakkam

Njy a very happy n prosp new year 2007 vetti//

Thk u very much Dreamzz

May this new year bring all happiness to you and your family...

நாமக்கல் சிபி said...

//கோபிநாத் said...

அன்பு பாலாஜி
புதிய ஆண்டிலும்
உங்கள் எண்ணங்களும்
கனவுகளும் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி கோபிநாத்...
இந்த ஆண்டு தங்களுக்கும் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்!

Anonymous said...

வாழ்த்துக்கள் வெட்டி :)

Anonymous said...

பாலாஜி,

வாழ்த்துக்கள்....தற்போதுதான் இந்த பதிவினையும், பின்னூட்ட்ங்களையும் படித்தேன்....

மெளலி...

நாமக்கல் சிபி said...

//தூயா said...

வாழ்த்துக்கள் வெட்டி :) //

மிக்க நன்றி தூயா...

நாமக்கல் சிபி said...

//Mathuraiampathi said...

பாலாஜி,

வாழ்த்துக்கள்....தற்போதுதான் இந்த பதிவினையும், பின்னூட்ட்ங்களையும் படித்தேன்....

மெளலி... //

மிக்க நன்றி மௌளி சார்...

Anonymous said...

புதுவருஷத்துல அடி தூள் கிளப்புறீங்க...மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

G.Ragavan said...

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
நின் சேவடி செவ்வித் திருக்காப்புச் செய்யும் வெட்டியெனும் பாலாஜியைக் கா!

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் பாலாஜி. உன்னுடைய பெயரில் இருக்கும் வெட்டி என்பது வெட்டிவேரில் இருக்கும் வெட்டியைத்தானே குறிக்கிறது! அப்படித்தான் எல்லாரும் நினைக்கிறோம்.

நாமக்கல் சிபி said...

// Dubukku said...

புதுவருஷத்துல அடி தூள் கிளப்புறீங்க...மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்!!! //

தலைவா,
மிக்க நன்றி!!!
எல்லாம் உங்க ஆசிதான் :-)

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
நின் சேவடி செவ்வித் திருக்காப்புச் செய்யும் வெட்டியெனும் பாலாஜியைக் கா!
//
மிக்க நன்றி!!!
அவன் காக்கும் கடவுள் தானே.. நம்மை அனைவரையும் தாய் போல் காப்பவன் அவனே!!!

// என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் பாலாஜி. உன்னுடைய பெயரில் இருக்கும் வெட்டி என்பது வெட்டிவேரில் இருக்கும் வெட்டியைத்தானே குறிக்கிறது! அப்படித்தான் எல்லாரும் நினைக்கிறோம். //
மிக்க நன்றி ஜி.ரா.
எல்லாம் நீங்க கொடுக்கற உற்சாகம் தான் :-)

Anonymous said...

ஹா ஹா ஹா.. வாழ்த்துக்கள் பாலாஜி
நாம் உங்களுக்கு ஓட்டு போட்டேன். முடிவை தெரிஞ்சிக்க மறந்துட்டேன். நீங்க ஞாபகப்படுத்திடீங்க..

Anonymous said...

ஹா ஹா ஹா.. வாழ்த்துக்கள் பாலாஜி
நாம் உங்களுக்கு ஓட்டு போட்டேன். முடிவை தெரிஞ்சிக்க மறந்துட்டேன். நீங்க ஞாபகப்படுத்திடீங்க..

நாமக்கல் சிபி said...

//.:: MyFriend ::. said...

ஹா ஹா ஹா.. வாழ்த்துக்கள் பாலாஜி
நாம் உங்களுக்கு ஓட்டு போட்டேன். முடிவை தெரிஞ்சிக்க மறந்துட்டேன். நீங்க ஞாபகப்படுத்திடீங்க..//

மிக்க நன்றி myfriend...
நீங்க எல்லாம் ஓட்டு போட்டதால தான் நான் ஜெயிச்சிருக்கேன்... மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் வெட்டிப்பயலாரே!