"ரவி எழுந்திரிடா. எழுந்திரிச்சி இந்த பேப்பர் பாரு"
"என்னடா? இது சாயந்திரமா காலைலயா? மணி என்ன?"
"இது காலைல ஏழு மணி. முதல்ல கண்ணை திற. இந்த பேப்பரை பாரு"
"என்ன போட்டிருக்கு?"
"தினேஷ் ஒருத்தனை கொன்னுட்டாரு. அவரையும் யாரோ கொன்னுட்டாங்க. தினேஷை கொன்னவனை போலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவன் எல்லாத்தையும் சொல்லிட்டான். உடனே அவுங்க ஃபோன் பண்ணி வெற்றியையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க போல. பெரிய கவர் ஸ்டோரியா Times of Indiaல முதல் பக்கத்துல வந்திருக்கு?"
"எப்ப?"
"இரு நான் இன்னும் முழுசா படிக்கலை"
"சீக்கிரம் படி"
இதாங்க விஷயம் அதுல போட்டிருந்தாங்க. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏமாற்றி வேலைக்கு சேர்ந்த பெண்களை ஒரு கும்பல் பயமுறுத்தி காசு பறித்தது. மேலும் பல தவறான விஷயத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்று அவர்களுக்குள் நடந்த பிரச்சனையில் இருவர் மரணமடைந்தனர். ஒருவரை அருகிலிருந்த மக்கள் பிடித்து கொடுத்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தமிழ்நாட்டிலிருந்த அவர்களுடைய கூட்டாளி வெற்றி என்பவர் கைது செய்யப்பட்டார். வெற்றியும், கொலை செய்யப்பட்ட தினேஷும் அந்த பெண்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்டில் பணி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இன்ஸ்டிடியூட் மொத்தமும் சீல் வைக்கப்பட்டது. அங்கே படித்த மாணவர்களிடமும் போலிஸ் விசாரணை செய்தது.
அங்கே படித்து வேலைக்கு சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பற்றிய தகவலை போலிஸ் வெளியிட மறுத்து விட்டது. அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடமும் போலிஸ் அவர்களை விசாரிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளது.
அதே பக்கத்துல சாப்ட்வேர் கம்பனி HR நிறைய பேர் பேட்டி கொடுத்திருக்காங்க. இந்த Fake பிரச்சனையை எப்படி எதிர் கொள்றதுனு எல்லாரும் இன்னைக்கு பேச போறதா சொல்லியிருக்காங்க. இந்த விஷயம் இவ்வளவு சீரியஸாகும்னு யாரும் நினைச்சி பார்க்கலனு சொன்னாங்க.
"ரவி. இதெல்லாம் இருக்கட்டும், நேத்து சாயந்திரம் வரும் போது நீ தூங்கிட்டு இருந்த. ராத்திரி எழுப்பி பார்த்தோம், அப்பவும் அடிச்சி போட்ட மாதிரி தூங்கிட்டு இருந்த. என்ன ஆச்சு?"
"ஓ. எனக்கு இப்ப தான் ஞாபகமே வருது. நேத்து மதியமே நான் இன்ஸ்டிடியூட்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டேன். தினேஷ் என்கிட்ட CD கொடுக்காம ஏமாத்திட்டு போயிட்டான். எனக்கு என்ன பண்றதுனு தெரியல. மொதல்ல அவன் அந்த குமார்கிட்ட தான் போய் மீதி CD எல்லாம் வாங்குவானு யோசிச்சி வேகமா வீட்டுக்கு வந்து அந்த Caller ID spoofing சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண ஃபோன்ல இருந்து குமாருக்கு ஃபோன் பண்ணேன். அப்ப கரெக்டா தினேஷ் அங்க தான் இருந்தான். அவன்கிட்ட CD கொடுக்க வேண்டாம்னு சொன்னேன். அவன் சரினு சொன்னான். எனக்கு அதுக்கு அப்பறம் என்ன பண்றதுனு தெரியாம யோசிச்சிட்டே இருந்தேன்"
"அப்படியே தூங்கிட்டியா?"
"இல்லை. திடீர்னு நித்யா ஃபோன் பண்ணி, அவளை யாரோ பொண்ணு பார்க்க வராங்க, உடனே கிளம்பி வானு வீட்ல சொன்னாங்கனு சொன்னா. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. அவளுக்கும் என்னனு புரியல. உடனே கிளம்பிட்டா. எனக்கு எதுவுமே யோசிக்க முடியல. ஏதோ யோசிச்சிட்டே இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன். பத்து பதினைஞ்சி நாளா சரியா தூக்கமில்லை. அதான் அப்படியே தூங்கிட்டேன்"
"ஹிம்ம்ம்... அப்ப நீ ஃபோன் பண்ணும் போது அந்த குமாரும், தினேஷும் உயிரோட இருந்துருக்காங்க."
"ஆமாம். ஒரு வேளை நான் ஃபோன் பண்ணதால தான் அவுங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு செத்துட்டாங்களோ?"
"டேய், நீ ஏன் டென்ஷனாகற. வீ ஆர் ஜஸ்ட் ய டூல். அவனுங்க என்ன என்ன தப்பு பண்ணாங்களோ. அந்த CDக்காக ரெண்டு உயிர் போயிருக்குனா அதுல என்னவெல்லாம் இருக்குதோ. அவனுங்க இதுக்கு முன்னாடி யாரையாவது கொன்னு கூட இருக்கலாம். நீ டென்ஷனாகாத. நம்ம எதுவும் தப்பு பண்ணல"
"இருந்தாலும்.. இப்ப எனக்கு ஒரு மாதிரி இருக்கு. ஒரு வேளை நாம முன்னாடியே போலிஸ்ல போயிருந்தா, இப்படியெல்லாம் ஆகாம இருந்திருக்குமோ?"
"இங்க பாரு. எதுவும் நம்ம கைல இல்லை. அவன் பண்ண தப்புக்கு அவனுக்கு தண்டனை. அவ்வளவு தான். நீ முதல்ல எழுந்து குளிச்சிட்டு வா. நம்ம ஆபிஸ் போவோம். இன்னைல இருந்து ஒழுங்கா வேலை பார்க்கலாம். எந்த டென்ஷனும் வேண்டாம். முன்ன மாதிரியே சந்தோஷமா இருக்கலாம். சரியா?"
"ஹும்ம்ம்"
ஒரு வேளை நான் பண்ண தப்பால தான் நித்யா என் வாழ்க்கைல இருந்து இவ்வளவு சீக்கிரம் போறாளோ???
அடுத்த நாள் முழுக்க எல்லா பேப்பர்லையும் இதை பத்தி தான் பேசிக்கிட்டாங்க. இந்த பிரச்சனையை தீர்க்க சாப்ட்வேர் கம்பெனி எல்லாம் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாங்க. இனிமே எந்த இயர் பாஸ் அவுட்டா இருந்தாலும் ஃபிரெஷ்ஷரா எடுத்துக்குவோம். அதே மாதிரி ஜாவா, டாட் நெட், மெயின் ஃபிரேம்னு கோர்ஸ் போறவங்களை அந்த குறிப்பிட்ட ஃபீல்ட்ல இண்டர்வியூ பண்ணி எடுத்துக்குவோம். ஆனா அவுங்களை ஃபிரெஷ்ஷரா தான் சேர்த்துக்குவோம். அவுங்களை அந்த ட்ரெயினிங்கு ஏத்த மாதிரி ப்ராஜக்ட்ல போட்டுடுவோம்னு சொல்லி எல்லா கம்பெனிகளும் சொல்லிட்டாங்க.
அப்பறம் TCS, Infosys, Wipro, Satyam எல்லாம் சேர்ந்து ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணியிருக்காங்க. அதுல எல்லா சாப்ட்வேர் கம்பெனிங்களும் அவுங்க எம்ப்ளாயூ இன்ஃபர்மேஷனை ரெஜிஸ்டர் பண்ணனும். ஒவ்வொரு சாப்ட்வேர் இஞ்சினியருக்கும் ஒரு நம்பர் தரப்படும்னும் இனிமே இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணும் போது ரெஸ்யூமேல அந்த நம்பரும் கொடுக்கனும்னு சொல்லிட்டாங்க. அதனால இப்ப இருக்கற எல்லாருக்கும் ஒரு நம்பர் தருவாங்க. அது கடைசி வரைக்கும் மாறவே மாறாது. அமெரிக்கால சோஷுயல் செக்கியூரிட்டினு ஒரு நம்பர் இருக்குமாம். அதே மாதிரியே சாப்ட்வேர் இஞ்சினியர் நம்பர்னு ஒண்ணு கொடுத்துடுவாங்க.
அதனால எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத யாரும் அவ்வளவு சீக்கிரம் ஃபேக் போட்டு வர முடியாது. அதே சமயம், quantitative aptitude, Shakuntula Devi இதெல்லாம் படிக்க விருப்பமில்லாதவங்க ஏதாவது கோர்ஸ் போயிட்டு அது மட்டும் அட்டெண்ட் பண்ணி போகலாம்.
முடிஞ்ச வரைக்கும் கம்பெனி எல்லாம் இறங்கி வந்திருக்காங்க. பார்க்கலாம், இதுல எப்படி நம்ம ஆளுங்க ஏமாத்தறாங்கனு.
......
என்னடா காலங்காத்தால ஆபிஸ் போகாம வேற பக்கம் போயிட்டு இருக்கனு பாக்கறீங்களா? நித்யா ஊர்ல இருந்து வந்துட்டேனு ஃபோன் பண்ணா. நான் தான் உடனே கிளம்பி வரேனு சொல்லிட்டு கிளம்பிட்டேன். ரெண்டு நாளா சரியா வேலையே செய்ய முடியலைங்க. சும்மா அவளை பார்த்துட்டாக்கூட போதும். போய் நல்லா வேலை செய்யலாம்னு தோனுது. அதான் கிளம்பிட்டேன்.
வழியிலயே வினோதினி அக்காவும், வினிதாவும் போயிட்டு இருந்தாங்க. வினிதா ஏதோ இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண போறா போல. அனேகமா வினோதினி அக்கா யார் மூலமாவது ரெஃபரன்ஸ் பிடிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன்.
நித்யா குளிச்சிட்டு ஃபிரெஷ்ஷா இருக்குறா. தூக்க கலக்கத்துல இருப்பானு நினைச்சேன்.
"என்னாச்சு?"
"எல்லாம் நல்ல படியா முடிஞ்சிது"
"ஏன் இவ்வளவு அவசரம்?"
"ஜெர்மனில இருக்காராம். விப்ரோல வேலை பார்க்கறாராம். ரெண்டு வாரம் வெக்கேஷன்ல வந்திருக்கார். அதான் உடனே கிளம்பி வர சொல்லிட்டாங்க"
"ஹிம்ம்ம்... எப்ப கல்யாணம்?"
"தெரியல"
"ஜெர்மனி போறயா?"
"அப்படி தான் நினைக்கிறேன். பார்க்கலாம். எல்லாம் நல்ல படியா முடியனுமில்லை"
"ஹிம்ம்ம்"
"அது சரி. நான் தான் ரோமிங்ல இருக்கனு தெரியுது இல்லை. அப்பறம் எதுக்கு நான் சாப்பிட்டுட்டேன், நீ ஒழுங்கா சாப்பிடுனு ரெண்டு நாளா மெசேஜ் பண்ணிட்டே இருந்த? உன்னால இருபது ரூபாய் தண்டம்"
"நீ தானே மெசேஜாவது அனுப்புனு கெஞ்சின"
"நான் கெஞ்சினனா? சும்மா சொன்னேன். நீ சீரியசா எடுத்துக்கிட்டா நான் என்ன பண்ண?"
"சரி. நான் கிளம்பறேன்"
என்னால இதுக்கு மேல இங்க இருக்க முடியாது.
"இரு. இப்ப போய் என்ன பண்ண போற? உனக்கு என்ன வேலையா இருக்கு? என் கூட கொஞ்ச நேரமிறேன்"
எப்படி மனசாட்சி இல்லாம சொல்றா பாருங்க.
"உன் கூட வாழ்க்கை முழுசும் இருக்கனும்னு தான் ஆசைப்பட்டேன். ஆனா இப்ப என்னால இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. ப்ளீஸ் நான் கிளம்பறேன்"
"என்ன சொன்ன? திரும்ப சொல்லு"
"நான் எதுவும் சொல்லல. நான் கிளம்பனும்"
"ரவி. என்ன சொன்ன? என் முகத்தை பார்த்து சொல்லு"
"நான் எதுவும் சொல்லலைனு சொன்னேன் இல்லை"
"நிஜமா நீ எதுவும் சொல்லல. என் கூட வாழ்க்கை முழுசும் இருக்கனும்னு ஆசைப்பட்டேனு சொல்லல? பொய் சொல்லாத"
"ஆமாம் சொன்னேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ இல்லாம இருக்க முடியுமானு தெரியலை. இந்த ரெண்டு நாள்ல மத்த எந்த விஷயத்தையும் யோசிக்க விடாம என் மனசு முழுக்க நீ தான் ஆக்ரமிச்சிட்டு இருந்த. இப்ப என்னனா என்னை விட்டுட்டு போறனு சொல்ற. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் நித்யா. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை?"
நித்யா கண்ணும் கலங்கிருக்கு...
"எனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையாங்கறது முக்கியமில்லை. உனக்கே எதுவும் வேலையில்லை. உன்னை எப்படி எங்க அப்பா, அம்மா நம்புவாங்க? அதை யோசிச்சியா ரவி?"
"எனக்கு வேலையில்லைங்கறது தான் பிரச்சனையா? அப்படினா நான் இப்ப உன்கிட்ட உண்மையை சொல்றேன். நான் கூகுள்ல வேலை செய்யறேன். மூணு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ். நான் இப்ப எந்த நாட்டு கம்பெனில இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணாலும் எடுத்துக்குவாங்க. உங்க வீட்ல பயப்பட வேண்டாம்னு சொல்லு. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துக்குவனு சொல்லு"
"என்னது நீ கூகுள்ல வேலை செய்யறையா? உனக்கு கூகுல்ல சர்ச்சே ஒழுங்கா பண்ண தெரியாது. அதிர்ச்சில ஏதாவது மூளை குழம்பிடுச்சா?"
"சத்தியமா நான் கூகுள்ல தான் வேலை செய்யறேன். இங்க பாரு என் ஐடி கார்ட்"
"அப்ப என்கிட்ட இத்தனை நாள் பொய் சொல்லிருக்க? அப்படி தானே?"
"நீ என்கிட்ட நாலு வேலை கிடைச்சிதுனு ஏமாத்தின, நான் பதிலுக்கு பண்ணேன். உன்கிட்ட உண்மையை சொல்லனும்னு நிறைய தடவை முயற்சி பண்ணேன். ஆனா வாய்ப்பு கிடைக்கல. அந்த பிரச்சனைல நான் இதை மறந்திட்டேன். ஐ அம் ரியலி சாரி"
"சரி இப்ப நீ என்னை நிஜமா காதலிக்கறனு நான் நம்பனும்னா நான் என்ன பண்ண சொன்னாலும் பண்ணுவியா?"
"மாட்டேன். இது வரைக்கும் நான் உன்கிட்ட பழகின விதத்துல உனக்கு ஏன் மேல நம்பிக்கை வரலனா, இனிமேலும் வர வேண்டாம்"
"போடா" சொல்லிவிட்டு கன்னத்தில் அறைந்தாள்.
"இப்படி பேசி பேசியே என்னை மயக்கிட்டியேடா"
"என்ன? நான் உன்னை மயக்கினனா?"
"ஆமாம். உன் கூட ஒரு நாள் கூட பேசலைனா என்னால நார்மலா இருக்க முடியாத அளவுக்கு மயக்கி வெச்சிருக்க? நீ சாப்பிட்டயா சாப்பிடலயானு தெரியாம என்னால சாப்பிட கூட முடியாத அளவுக்கு மயக்கி வெச்சிருக்க? நான் அன்னைக்கு சொன்னப்ப அதை கூட புரிஞ்சிக்காம உன் புருஷன் கன்னத்துல ரெண்டு கொடுப்பானு சொல்ற. உனக்கு மனசாட்சியே இல்லைனு நினைச்சிக்கிட்டேன்"
"லூசு. நான் உன் புருஷன் கன்னத்துல ரெண்டு கொடுப்பானு சொன்னேன். என்ன கொடுப்பானு சொன்னனா? எப்படியும் நான் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேங்கற தைரியத்துல சொன்னேன்"
"சரி அப்படி என்ன கொடுப்ப?"
"வேணும்னா இப்ப கொடுக்கவா"
"ஏய். பக்கத்துல வராத. யாரும் இல்லாத வீட்ல வந்து இப்படி ஒரு சின்ன குழந்தைக்கிட்ட தப்பா பண்றியே. போ. தள்ளி போ"
"ஐய்யோ... அடிப்பாவி. நான் உன்னை தொட்டனா? பக்கத்துல வரதுக்கே இந்த மொத்து மொத்தற. கல்யாணத்துக்கு அப்பறம் உனக்கு இருக்கு. ஆ. இதை மறந்துட்டனே. என்னை பிடிச்சிருந்தும் எனக்கு வேலை இல்லைனு நீ வேற ஒருத்தனை பார்த்துட்டு ஓகே சொல்லிட்டு வந்திருக்க இல்ல"
"உனக்கு எல்லாம் எவன் வேலை கொடுத்தான்? நீ வினோதினி அக்காகிட்ட சொன்னா எனக்கு விஷயம் வராம போயிடுமா?"
"அடிப்பாவி. உனக்கு தெரியுமா? இதுக்கு தான் பொண்ணுங்ககிட்ட ரகசியம் சொல்ல கூடாதுனு சொல்லியிருக்காங்க போல"
"நீ சொன்ன அடுத்த நாளே அந்த அக்கா என்கிட்ட சொல்லிட்டாங்க"
"அப்ப இப்ப பொண்ணு பாக்கறது எல்லாம் ட்ராமாவா?"
"இல்லை. அது உண்மை. ஆனா போய் எனக்கு விருப்பமில்லைனு சொல்லிட்டு வந்துட்டேன். நம்ம விஷயத்தை என் அண்ணிகிட்டயும் லைட்டா சொல்லிட்டு வந்திருக்கேன். ஹெல்ப் பண்றேனு சொல்லியிருக்காங்க"
"எப்படி அவ்வளவு தைரியமா சொல்லிட்டு வந்த? நான் உன்னை ப்ரபோஸ் பண்ணலைனா?"
"நீ பண்ணுவனு எனக்கு தெரியும்"
"ஹிம்ம்ம்"
"அப்பறம் பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடுச்சினு வினோதினி அக்கா சொன்னாங்க"
"ஆமாம். ஆனா என்னால தான் ரெண்டு உயிர் போச்சுனு எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு"
"இல்லை ரவி. உன்னால நிறையா நல்லது நடந்திருக்கு. இந்த பூமிக்கு எந்த உயிர் வரணும், எந்த உயிர் போகனும் எப்பவோ முடிவு பண்ணியாச்சு. அது நம்ம கைல இல்லை"
"ஹிம்ம்ம்... இருந்தாலும் எனக்கு மனசுல ஒரு வருத்தம் இருந்துட்டே இருக்கு"
"கவலைப்படாத. நான் உன் கூட இருக்கேன்"
"நித்யா, உன் கையை நான் கொஞ்ச நேரம் பிடிச்சிக்கறதா? எனக்கு ஏதோ ரொம்ப பாதுகாப்பா இருக்கற மாதிரி இருக்கும்"
என்னங்க இதுக்கு போய் முறைக்கிறா?
"சரி முறைக்காத. நான் கேக்கல"
"கொஞ்ச நேரம் பிடிச்சிக்கறனு சொல்ற? இந்த வாழ்க்கை முழுக்க பிடிச்சிக்கறனு சொல்லு" கையை நீட்டினாள்...
"வாழ்க்கை முழுக்க பிடிச்சிருந்தா வலிக்காது?"
""
"ஐய்யோ நான் விளையாட்டுக்கு சொன்னேன்... அடிக்காத அடிக்காத"
(ஆடு புலி ஆட்டம் முடிஞ்சிது... இங்க வேற ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சி. நாம நடையை கட்டுவோம்)
தத்துவம்
உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Friday, September 05, 2008
Thursday, September 04, 2008
யாருக்கும் புரியாத என்னுடைய கதை
லிப்ட் ப்ளீஸ்னு முன்னாடி நான் ஒரு தொடர் எழுதினேன். அப்ப யாருக்கும் புரியல. உங்களுக்கு புரியுதானு பார்த்து சொல்லுங்க :)...
இந்த கதை பிடிச்சா இப்ப எழுதற ஆடு புலி ஆட்டமும் உங்களுக்கு பிடிக்கறதுக்கான வாய்ப்பு அதிகம். அது இன்னும் ஒரு பாகத்தோட முடியப்போகுது.. படிச்சி பாருங்க... பிடிக்கும் ;)
--------------------------------------1-------------------------------------------
ஈஸிஆர் ரோட்டின் இருளை கிழித்துக் கொண்டு சென்னையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த சிகப்பு நிற மாருதி எஸ்டீம்.
வழக்கத்தைவிட வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பாண்டியிலிருந்து சென்னை வரும் சொகுசு பேருந்துகளே பெரும்பாலும் அந்நேரத்தில் பார்க்க முடிந்தது.
வேகமாக சென்று கொண்டிருந்த அந்த எஸ்டீம், தன் வேகத்தை குறைத்து சாலையின் ஓரத்தில் நின்றது. காரின் ஜன்னல் திறந்தது...
"என்னங்க இந்த நேரத்திலும் லிஃப்டா???" காரிலிருந்து கேட்டவருக்கு சுமார் முப்பத்தி ஐந்து வயதிருக்கும் போல் தோன்றியது.
"ஆமாங்க... கொஞ்சம் அவசரமா கோயம்பேடு போகனும். நீங்க சிட்டிக்குள்ள இறக்கிவிட்டுட்டீங்கனா நான் டேக்ஸி பிடிச்சி போயிக்கறேன்"
"நான் அண்ணா நகர்தான் போறேன்... அப்படியே உங்கள கோயம்பேடுல இறக்கி விட்டுடறன். ஏறுங்க!!!"
காருக்குள் ஏறிய பெண்ணிற்கு சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும் போல் தோன்றியது. அந்த காலத்து காஞ்சனாவை நியாபகப்படுத்தினாள்.
"என்னங்க இந்த நேரத்துல இப்படி தனியா இந்த மாதிரி இடத்துல நின்னுக்கிட்டு இருக்கீங்களே.. அப்படி என்ன அவசரம். காலைல போகக்கூடாதா?"
"இல்லைங்க சேலத்துல இருக்கிற அப்பாக்கு உடம்பு சரியில்ல. நெஞ்சுவலினு போன் வந்துச்சு... சரி எப்படியும் ஏதாவது பஸ் பிடிச்சி போயிடலாம்னு புறப்பட்டுட்டேன்"
"பரவாயில்லைங்க இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாம் தைரியமா இருக்கீங்க"
"இல்லைனா பொழைக்க முடியாதுங்களே"
"அதுவும் சரிதான்... நீங்க என்ன பண்றீங்க?"
"நான் எம்.எஸ்.ஸி மைக்ரோபயலஜி படிச்சிருக்கேன். இங்க திருவான்மியூர்ல இருக்குற அன்னை ஹாஸ்பிட்டல்ல லேப் டெக்னீஷியனா இருக்கிறேன்"
"ஓ!!! அப்ப நிறைய இரத்தம் பாப்பீங்க போல இருக்கே!!!"
"ஹிம்... இரத்தம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்..."
....
காரில் ஒரு இனம் புரியாத நிசப்தம் நிலவியது.
--------------------------------------2-------------------------------------------
"என்னங்க இப்படி பக்கத்துல இருக்குற பிரெண்ட் வீட்டுக்கு போறன்னு அக்காட்ட சொல்லிட்டு இப்ப எங்கயோ போயிட்டு இருக்கீங்க???"
"கொஞ்சம் பேசாம அமைதியா வா"
"சரி. நம்ம இப்ப எங்க போறோம்???"
"ஊட்டி"
"என்ன ஊட்டியா??? என்னங்க இப்படி பண்றீங்க"
"பின்ன டூ-வீலர்ல ஊட்டி போறோம்னு சொன்னா உங்க வீட்ல ஒத்துக்குவாங்களா??? அதனாலதான் பிரெண்ட் வீட்ல லன்ச்க்குன்னு சொல்லி கூப்பிட்டு வந்துருக்கேன். சாயந்திரம் 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போயிடலாம்... அமைதியா வா"
"இருந்தாலும் நீங்க பண்றது தப்பு.. ஃபிரெண்ட் வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்டு எங்க மாமாகிட்ட வண்டி வாங்கிட்டு வந்து இப்படி ஊட்டி போனாம்னு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க"
"இங்க பாரு... நான் காலேஜ் படிக்கும் போதே பிரெண்ட்ஸ் கூட நிறைய தடவை டூ-வீலர்ல ஊட்டி போயிருக்கேன். அப்பவே அவன் அவன் கேர்ள் பிரெண்ட்ஸோட வருவாங்க. நான் மட்டும் எந்த பொண்ணையும் ஏத்தாம தனியா வருவேன். அப்பவே மனசுல தீர்மானிச்சுக்கிட்டேன். கால்யாணம் ஆனவுடனே கண்டிப்பா என் பொண்டாட்டிய வண்டில கூப்பிட்டு வருவேன்னு. இப்பவே 6 மாசம் லேட். நல்ல வேளை உங்க அக்கா வீடு கோயம்பத்தூர்ல இருக்கு"
"இருந்தாலும் யாராவது பாத்து மாமாகிட்ட சொல்லிட்டா"
"அதெல்லாம் யாரும் பாக்க மாட்டாங்க. தெரிஞ்சாலும் உங்க மாமா எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாரு. நான் என் பொண்டாட்டிய தான கூப்பிட்டு போறேன். இந்த மாதிரி பேசாம சந்தோஷமா எதாவது பேசிட்டு வா"
"நீங்க நிஜமாலுமே எந்த பொண்ணையும் கூப்பிட்டு போகலையா???"
"பார்த்தியா!!! இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் சந்தேக புத்தி போகவே போகாது"
--------------------------------------3-------------------------------------------
"உங்க ரெக்கார்ட பாத்தா நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு"
"டாக்டர்... நீங்க சரியா புரிஞ்சிக்க மாட்றீங்க"
"இல்ல. நீங்க சொல்றது எனக்கு புரியுது. எனக்கு என்னுமோ நீங்க நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு.எதுக்கும் நான் என் சீனியர் டாக்டர்கிட்ட கன்ஸெல்ட் பண்ணி சொல்றன். அவர் ஒரு கான்ஃபரன்ஸ்க்கு டெல்லி போயிருக்கார். நீங்க எதுக்கும் அடுத்த வாரம் வாங்க... நான் அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிடறேன். அவர் டெஸ்ட் பண்ணா கரெக்டா இருக்கும்னு நான் ஃபீல் பண்றேன்"
"ஓகே டாக்டர். தேங்க்ஸ்"
"ஓகே. அடுத்த வாரம் பாக்கலாம்"
----------------------------------------------4--------------------------------------------
"இப்பவே மணி 5 ஆச்சு... சீக்கிரம் போங்க. வீட்டுக்கு போய் சேரதுக்குள்ள எப்படியும் 8 ஆயிடும்"
"ஏய்!!! ஐயா டிரைவிங் பத்தி என்ன நினைச்ச!!! 6:30க்கு எல்லாம் வீட்ல இருக்கலாம்"
"ஐயோ சாமி !!! நீங்க பொறுமையாவே போங்க... லேட்டா போனாலும் பிரச்சனையில்லை"
"என்ன சீக்கிரம் போன்னு சொல்லற... பொறுமையா போனு சொல்லற... மனஷன பைத்தியமாக்கறதுன்னு முடிவு பண்ணிட்ட"
"உங்க இஷ்டத்துக்கு ஓட்டுங்க!!! நான் எதுவும் சொல்லல"
.....
"என்னங்க இப்படி தூறல் போட ஆரம்பிச்சிடுச்சு... மழை பெய்யறதுக்குள்ள சீக்கிரம் போங்க"
"கவலைப்படாத சீக்கிரம் போய் சேந்துடலாம்..."
பத்தாவது ஹேர் பின் வளைவில் வண்டி அதன் கட்டுப்பாட்டை இழந்தது. மழையில் நனைந்து வழுவழுப்பாக இருந்த ரோட்டை பிரேக்கால் வெற்றி கொள்ள முடியவில்லை. வண்டி எதிரில் வந்த காரில் மோதியது.
----------------------------------------------5--------------------------------------------
"என்னங்க இரத்தம்னா பிடிக்குமா??? "
"ஆமாங்க... அதுவும் பாவம் செய்றவங்க இரத்தம்னா ரொம்ப பிடிக்கும்"
அவள் கையில் மின்னிய கத்தி அந்த இருளிலும் அவன் கண்களில் பயத்தை உண்டாக்கி அதன் கடமையை செய்தது.
"ஏ...என்ன செய்யப்போற நீ... நான் எந்த தப்பும் பண்ணல"
"என்ன நீ எதுவும் தப்பு பண்ணலையா??? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஊட்டில நடந்தது உனக்கு நியாபகமில்ல" அவள் வார்த்தைகள் மிக கடுமையாக இருந்தன.
"ஊட்டிலயா??? நான் எந்த தப்பும் செய்யலையே"
"ஊட்டில இருந்து இறங்கற ஒரு வண்டில மோதிட்டு வந்தியே நியாபகமில்ல???" அவள் கண்கள் சிவந்திருந்தன.
"அது என் தப்பு இல்ல.. அந்த டூ-வீலர்தான் ராங் சைட்ல வந்தான்"
"இருக்கட்டும்... ரெண்டு உயிர் அடிப்பட்டு துடிச்சிட்டு இருக்கும் போது... உனக்கு வண்டிய நிறுத்தி காப்பாத்தனும்னு தோனல... இல்ல"
"போலிஸ் கேஸாகிடும்னு பயந்து நிறுத்தாம வந்துட்டேன்... என்ன மன்னிச்சிடு" அவன் வார்த்தைகள் பயத்தில் குழறின.
"அன்னைக்கு நீ மட்டும் நிறுத்தியிருந்தா நான் என் புருஷன இழந்திருக்கமாட்டேன்..."
"வேணாம் என்ன எதுவும் பண்ணிடாத... ப்ளீஸ்.... என்ன எதுவும் பண்ணிடாத ஆஆஆஆஆஆஆஆஆ.........."
----------------------------------------------6--------------------------------------------
"என்ன எஸ்.ஐ சார்... காலைலே ஆக்ஸிடெண்ட் கேஸா"
"ஆமாம்... நம்ம தாலி அறுக்கறத்துக்குனே வரானுங்க.
நானும் இந்த ஏரியா வேணாம்... மாத்திக்குடுங்கனா அந்த டி.எஸ்.பி வேற விடமாட்றான்... வாரத்துக்கு ஒரு பொணம் பாக்க வேண்டியதா இருக்கு"
"இன்னைக்கு எத்தன???"
"ஒன்னுதான்... தண்ணியடிச்சிட்டு ஓட்டிருப்பான்னு நினைக்கறேன். மரத்துல போய் மோதியிருக்கான்...
சரி... டாக்டர் எப்ப வருவாரு???"
"போன் பண்ணிட்டன் சார்... வந்துடுவாரு. ஷிப்ட் முடிஞ்சி அஞ்சி நிமிஷத்துக்கு முந்திதான் மூர்த்தி சார் போனாரு"
"சரி... நான் ஒரு கான்ஸ்டெபுல இங்க போட்டுட்டு போறேன். போஸ்ட்மார்டம் முடிஞ்சவுடனே ரிப்போர்ட்ட அவர்ட குடுத்துடுங்க. இன்னைக்கு வேற என் மச்சான் ஊர்ல இருந்து வரான். நான் 7 மணிக்குள்ள கறி வாங்காம போனா என் வூட்டுக்காரி என்ன வீட்லயே சேத்துக்க மாட்டா... நான் ரொம்ப நேரம் இங்க வெயிட் பண்ண முடியாது"
"சரி சார்..."
"மாரிமுத்து... நான் எஸ்.ஐதான் பேசறன். உடனே புறப்பட்டு ஜி.எச் வந்துடுங்க. ஒரு ஆக்ஸிடெண்ட் கேஸ். நீங்க பக்கத்துல இருந்து போஸ்ட் மார்ட்டம் ரிப்போட்ட வாங்கிட்டு வந்துடுங்க.. நீங்க வர வரைக்கும் நான் இங்க வெயிட் பண்றேன்"
--------------------------------------7--------------------------------------
"என்னங்க சகல... இன்னைக்கு உங்க ஃபிரெண்ட்ஸ் யாரும் லன்ச்க்கு கூப்பிடலயா???"
"அன்னைக்கு சாப்பிட்ட லன்ச்சே இன்னும் செரிக்காம இருக்கு"
"உங்களுக்கு மட்டுமா??? எனக்கும்தான்... நீங்க ஏன் வண்டி சாவிய குடுத்திங்கனு என்ன புடிச்சி திட்டிக்கிட்டே இருந்தா"
"பின்ன... இவரே யூஸ் பண்ணாத வண்டிய குடுத்தா திட்டாம என்ன செய்வாங்க??"
"பரவால விடுக்கா... எல்லாம் இவர சொல்லனும்.
இப்ப நெனச்சாலும் எனக்கு கொல நடுங்குது.
நல்ல வேள புண்ணியவான் ஒருத்தன் கார நிறுத்தி ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போனான்... இல்லனா... நெனிச்சுப்பாக்கவே பயமா இருக்கு"
--------------------------------------8--------------------------------------
"என்ன சரவணன்... ஏதோ ரொம்ப சிக்கலான கேஸ்னு சொன்னீங்க!!! பாத்தா அப்படி ஒண்ணும் தெரியலையே"
"சார்... நீங்க இது என்னவா இருக்கும்னு ஃபீல் பண்றீங்க???"
"உங்க குழப்பம் என்னனு சொல்லுங்க... நான் அப்பறம் சொல்றேன்"
"நான் டெஸ்ட் பண்ணத வெச்சி பாக்கும் பொது அவருக்கு Schizophreniaவா இருக்குமோனு சந்தேகப்படறேன்"
"எத வெச்சி அப்படி சொல்றீங்க???"
"முதல் காரணம்... அவர் பேச்சு சில சமயம் சம்பந்தமே இல்லாம இருந்துச்சு"
"அடுத்து..."
"அவர ஹிப்னாடிக் ட்ரிட்மெண்ட் பண்ணும் போது அவர் ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஏதோ ஆக்ஸிடெண்ட் பண்ணியிருக்கார். அதுல வண்டி ஓட்னவர் இறந்துட்டார். அவர் மனைவி விதவையாகிட்டாங்கனு தீர்க்கமா நம்பறார். அதுவும் இல்லாம அவுங்க இவர பழிவாங்க தேடறாங்கனு பரிபூர்ணமா நம்பறார்"
"வேற..."
"அவருக்கு நிறைய உருவங்கள் நகரமாதிரி தெரிஞ்சிருக்கு... ஆனா அதெல்லாம் போட்டோல இருக்குற உருவங்கள்... இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கு"
"சரி... இப்ப உங்க சந்தேகம் என்ன??? சொல்லுங்க"
"போதுவா Schizophrenia பேஷண்ட்டுக்கு ஆடியோ ஹாலோஸினேஷன் தான இருக்கும்... இவருக்கு எப்படி விஷ்வல் ஹாலோஸினேஷன் இருக்குன்றதுதான்"
"சரவணன்!!! யு ஹேவ் ப்ருவ்ட் யுவர் பிரில்லியன்ஸி. பட் நீங்க பண்ண தப்பு நீங்க முதல்ல ஒரு விஷயத்தை திர்மானிச்சிட்டு அப்பறம் ஆராய ஆரம்பிச்சிருக்கிங்க. சரி Schizophreniaனா என்ன சொல்லுங்க?"
"அது ஒருவகையான மன நோய். அது இதனாலதான் வருதுனு சொல்ல முடியாது. ஆனால் அதனுடைய அறிகுறிகள் ஒரு விஷயத்தில் தீவிர நம்பிக்கை, மாய ஒலிகள், நேர்த்தியற்ற பேச்சு, தீவிரமடையும் நிலையில் செயல்பட முடியாத நிலை"
"சரியா சொன்னீங்க... ஆனா அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு.. அத கவனிச்சீங்களா???"
"சார்... யூ மீன் டு சே... இட்ஸ் பெண்டங்குலார் ஹாலோஸினோஸிஸ்" (Peduncular Hallucinosis)
"யு ஆர் அப்சல்யூட்லி ரைட்... பொதுவா இந்த டிஸிஸால பாதிக்கப்பட்டவங்க கண்ணுக்கு இந்த மாதிரி பல மாய தோற்றங்கள் தெரியும். முதல்ல சொன்னதுக்கும் இதுக்கும் வித்தியாசம்... இதுல மாய உருவங்கள் தெரியும் ஆனா Schizophreniaல மாய ஒலிகள் மட்டும் கேக்கும்."
"ஆனா பெண்டங்குலார் ஹாலோஸினோஸிஸ் மாய குரல் எதுவும் கேக்காதே... "
"அங்க தான் நீங்க தப்பு பண்ணறீங்க... Caplan 1980ல பண்ண முக்கியமான தீஸிஸ்ல இது இருக்கு... இந்த நோயால பாதிக்கப்பட்டங்களுக்கு சில சமயம் உருவங்களுடன் சத்தங்களும் கேட்கும்னு சொல்லி ப்ரூஃப் கொடுத்துருக்காரு"
"சார்... ஆனா அவர் பண்ண அந்த ஆக்ஸிடெண்ட் பயம்... அந்த பொண்ணு பழி வாங்குவானு அவர் கொண்டிருந்த தீவிர நம்பிக்கை"
"அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே பயம்னு... அவ்வளவுதான்.
அதுக்குத்தான் மனசாட்சினு பேர்"
"எனக்கு என்னுமோ அவர் Schizophreniaவாலயும் அஃபக்ட் ஆகியிருப்பார்னு இன்னமும் தோனுது சார்...
எனக்கு இருந்த அந்த ஒரு சின்ன சந்தேகத்தால தான் நான் அவர்ட எதையும் சொல்லல..."
"குட்... டெஸ்ட்க்கு எப்ப வருவார்னு சொன்னீங்க???"
"நாளைக்கு சாயந்திரம் 7 மணிக்கு அப்பாயின்மெண்ட்"
"அப்ப நாளைக்கு தெரிஞ்சிடும்..."
---------------------------------------9---------------------------------------
"என்னது!!! ஹார்ட் பீட் முதல்ல நின்னதுக்கப்பறம்தான் ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கா???"
"ஆமாம் சார்... டாக்டர் அப்படிதான் சொன்னாரு. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்லயும் ஹார்ட் அட்டாக்னு தான் எழுதியிருக்காறாம். எதுக்கும் உங்கள ஒரு தடவ போன் பண்ண சொன்னாரு"
"இந்த போனை கண்டுபிடிச்சவன முதல்ல உள்ள தூக்கி போடனும்யா. எதுக்கு எடுத்தாலும் போன் பண்ண சொல்லிடுவானுங்க... அதுதான் ஹார்ட் அட்டாக்னு ரிப்போர்ட் கொடுத்துட்டாரில்ல. கேஸ க்ளோஸ் பண்ண வேண்டியதுதான்"
(முற்றும்)

Subscribe to:
Posts (Atom)