தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, September 30, 2009

உன்னை போல் ஒருவன் - ‍மாத்தி யோசி

உன்னை போல் ஒருவனை எல்லாரும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. கூட்டத்தோட கோவிந்தா போடலாம்னு நானும் களம் இறங்கிட்டேன். இங்க எல்லாரும் படத்துல கமல் ரோலை நாசர் செஞ்சிருக்கலாம், பிரகாஷ் ராஜ் செஞ்சிருக்கலாம், சார்லி, ஓமக்குச்சி நரசிம்மன் செய்திருக்கலாம்னு கமலுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்துட்டாங்க. விஜயகாந்த் படத்துல வாசிம் கானா வருவாரே அவர் பண்ணிருக்கலாம்னு சொல்லாதது தான் மிச்சம்.

இவ்வளவு சிந்திக்கிற மக்கள்ஸ் கொஞ்சமாவது மாத்தி சிந்திச்சி பார்த்தீங்களா? இதே ரோலை விஜய், கவுண்டர், கேப்டன், லொள்ளு சபா மனோகர் இவுங்க எல்லாம் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்? அப்படி கற்பனை செஞ்சி பார்த்தது தான் இந்த பதிவு.

இப்ப‌ அந்த‌ சாமானிய‌ன் ரோலை இளைய‌ த‌ள‌ப‌தி டாக்ட‌ர் விஜ‌ய் செய்திருந்தா எப்ப‌டி இருந்திருக்கும்...

அவ‌ர் கைல‌ விதவித‌மா பை எடுத்துட்டு போய் வைக்கும் போது அவ‌ர் கைய காட்டறோம், பையை காட்டறோம். பையைக் காட்டறோம், கையைக் காட்டறோம்.

அடுத்து மார்க்கெட்ல‌ அவ‌ர் காய் வாங்க‌ போகும் போது ஒரு குழ‌ந்தை மேல‌ த‌க்காளி விழ‌ போகுது. அதை அவ‌ர் நாலு கிலோமீட்ட‌ர் தூர‌த்துல‌ இருந்து பார்க்க‌றாரு. அப்ப‌டியே அங்க‌ இருந்து ஜ‌ம்ப் ப‌ண்ணி ப‌ற‌ந்து வ‌ந்து அந்த‌ த‌க்காளியை எட்டி உதைச்சி, அந்த‌ குழ‌ந்தையைக் காப்பாத்த‌றாரு. இப்ப‌ அந்த‌ குழ‌ந்தை ஆச்ச‌ரிய‌மா யாருனு பார்க்குது. அந்த குழந்தை முகத்தை ஜூம் பண்றோம். அப்ப‌டியே சிரிக்குது. இப்ப‌ தான் டாக்ட‌ர் முக‌த்தையே காட்ட‌றோம். இது தான் இண்ட்ரோ.

உட‌னே அங்க‌ ஒரு குத்துப் பாட்டு. டாக்ட‌ர் கை வைக்காத‌ க‌ருப்பு க‌ல‌ர் ப‌னிய‌ன் போட்டு ஆட‌றாரு. அந்த‌ கை வைக்காத‌ ப‌னிய‌ன் எதுக்குனா, அவ‌ர் சாமானிய‌னு சொல்ற‌ குறியீடு. அந்த‌ குத்து பாட்டு முடியும் போது, அங்க‌ ஒருத்த‌ன் ஒரு பொண்ணு இடுப்புல‌ கை வைக்க‌றான். உட‌னே ஒரு ஃபைட். அவ‌னுக்கு துணையா ஆயிர‌ம் பேர் ட்ரெயின்ல வ‌ராங்க. ஆட்டோ, லாரில எல்லாம் அடி ஆள் வரது அந்த காலம். இப்ப டாக்டர் ரேஞ்ச்க்கு ட்ரெயின் தான் கரெக்ட். எல்லாரையும் டாக்ட‌ர் அடிச்சி பிரிச்சி மேய‌ராரு. அவர் கடைசியா மார்கெட்ல ஆனியன் வாங்கல. ஏன்னா அவரே சாம்ஆனியன்.

இது எல்லாம் முடிஞ்ச உடனே மாடில போய் உக்கார்ந்து, கமிஷ்னருக்கு ஃபோன் போடறாரு.

விஜய் : அண்ணா.. வணக்கங்கண்ணா!!!

லால் : சொல்லுங்க விஜய். எப்படி இருக்கீங்க?

விஜய் : தமிழ் நாட்ல என்னைய கண்டுபிடிச்ச முதல் ஆள் நீங்க தான். (இது பஞ்ச்... ஸ்கிரினப் பார்த்து பேசுவாரு)

லால் : தமிழ் நாட்லயே இப்படி இழுத்து இழுத்து பேசற‌ ஒரே ஆள் நீ தான்.

விஜய்னு கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் படத்தை எப்படி கண்டினியூ பண்ண முடியும்னு நீங்க நினைக்கலாம். ஆனா டாக்டரால அது நிச்சயம் முடியும். என்ன இன்னும் ஒரு நாலு குத்துப் பாட்டு, பத்து ஃபைட் வரும். அவ்வளவு தான். ஏன்னா இதுல நம்ம டாக்டர் ஒரு காமன் மேன்...

..........

இப்ப அந்த காமென் மேன் ரோலை லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் செய்திருந்தா எப்படி இருக்கும்?

ம‌ : ஹ‌லோ க‌மிஷ்ஷ்ஷ்ன‌ர் இருக்காரா? நான் தான் காஆம‌ன் மேன் பேச‌றேன்.

ச‌ : டேய் ம‌ண்டையா. நீ காம‌ன் மேனாடா. வேணும்னா டாப‌ர் மேனு சொல்லு. அந்த‌ நாயே வ‌ந்து உன் த‌லையை ந‌க்கி பாத்துட்டு செத்து போயிடும்.

ம‌: க‌மிஷ்ன‌ர்.. நாஆன் இந்த‌ ஊரை சுத்தி பாஆம் போட‌ போறேன்.

ச‌ : ஏன்டா. எவ‌னோ காக்காக்கு வெச்சிருந்த‌ ம‌சால் வ‌டையை எடுத்து தின்ன‌து இல்லாம‌ பாம் போட‌ போறேனு என‌க்கே ஃபோன் ப‌ண்ணி சொல்றியா? நீ சாதார‌ண‌மா போட‌ற‌ பாமே தாங்காது. இதுல‌ க‌ட‌லைப் ப‌ருப்பு எஃப்க்ட் சேர்ந்தா ஊர் தாங்காதே. இப்ப‌ நான் என்ன‌ ப‌ண்ணுவேன்.

ம‌ : நான் ஊருக்குள்ள பாம் போடாம‌ இருக்க‌ணும்னா நீங்க‌ நாலு தீவிர‌வாதியை ரிலீஈஈஸ் ப‌ண்ண‌னும்.

ச‌ : நாங்க‌ தீவிர‌வாதியை ரிலீஸ் ப‌ண்றோம்.. அது வ‌ரைக்கும் நீ உன் பாமை ரிலீஸ் ப‌ண்ணாம‌ இரு.

பாருங்க‌ ம‌க்க‌ளே. ஒரு க‌மிஷ்னர் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ங்க‌ளை ச‌மாளிக்க‌ வேண்டிய‌து இருக்குனு.

.........

சரி.. இப்ப மத்த நடிகர்கள் எல்லாம் ஃபோன் பண்ணிருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கெஸ்... எது எது எந்த நடிகர்னு நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.

வ‌ண‌க்க‌ம். Gummisioner, நான்... Gaaman man பேசறேன்.
ஏன்னா நான் Gamman Man கூடயும் , க‌ட‌வுளோடையும் தான் கூட்ட‌ணி வைப்பேன்... ஆங்.

ஹலோ கமிஷ்னர்... நான் த‌னி ஆள் இல்லை... காம‌ன் மேன்.
ஏ நான் பேண்டுக்கு வெளிய‌ ஜ‌ட்டி போட‌ற‌ சூப்ப‌ர் மேன் இல்ல.. பேண்டுக்குள்ள‌ ஜ‌ட்டி போட‌ற‌ காம‌ன் மேன்.. அது...

ஹ‌லோ க‌மிஷ்ன‌ர். நான் காம‌ன் மேன் பேச‌றேன் க‌மிஷ்ன‌ர். நான் சொல்ற‌தை கேளுங்க‌ க‌மிஷ்ன‌ர். நான் ஊரை சுத்தி பாம் வெச்சிருக்கேன் க‌மிஷ்ன‌ர். க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்... க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்...

டேய் அந்த‌ க‌மிஷ்ன‌ன் இருக்கானா? தீஞ்ச மண்டையா நான் தான்டா காம‌ன் மேன் பேச‌றேன்.

க‌ண்ணா... நான் காம‌ன் மேன் பேஸ்றேன்.
கண்ணா... கடலைப் போடற ஃபிகருங்க தான் மிஸ்ஸிடு கால் கொடுக்கும். காமென் மேன் கனெக்ஷன் கால் தான் பண்ணுவான்... இது எப்படி இருக்கு?

42 comments:

ராஜாதி ராஜ் said...

நல்லா இருக்குங்க...

" லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் " டாப் கிளாஸ்..

:))

ராஜாதி ராஜ்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சூப்பர்

நல்லா இருக்கு

" லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் " டாப் கிளாஸ்..

:))

ரிப்பீட்டே ....

gulf-tamilan said...

:))))))

gulf-tamilan said...

நல்லா இருக்கு!!!

sriram said...

பாலாஜி
சான்ஸே இல்ல, கலக்கிட்டீங்க...
என்ன பதிவு கொஞ்சம் லேட்டா வந்திருச்சு, உ போ ஒ பத்தி மக்கள் ஜூடா எழுதிக்கிட்டு இருந்த போது போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்,
லேட்டா வந்தாலும் லேடஸ்டா வந்திருக்கு...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

அடி ஆத்தி எதென்ன கூத்து

நாமக்கல் சிபி said...

வ‌ண‌க்க‌ம். Gummisioner இருக்காருங்களா? நான்... Gaaman man பேசறேன். ஏன்னா நான் Gamman Man கூடயும் , க‌ட‌வுளோடையும் தான் கூட்ட‌ணி வைப்பேன்... ஆங்.

கேப்டன்

ஹலோ கமிஷ்னர்... நான் த‌னி ஆள் இல்லை... காம‌ன் மேன்.
நான் பேண்டுக்கு வெளிய‌ ஜ‌ட்டி போட‌ற‌ சூப்ப‌ர் மேன் இல்ல.. பேண்டுக்குள்ள‌ ஜ‌ட்டி போட‌ற‌ காம‌ன் மேன்.. அது...

தல

ஹ‌லோ க‌மிஷ்ன‌ர். நான் காம‌ன் மேன் பேச‌றேன் க‌மிஷ்ன‌ர். நான் சொல்ற‌தை கேளுங்க‌ க‌மிஷ்ன‌ர். நான் ஊரை சுத்தி பாம் வெச்சிருக்கேன் க‌மிஷ்ன‌ர். க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்... க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்...

நம்ம மௌனராகம் கார்த்திக்

டேய் அந்த‌ க‌மிஷ்ன‌ன் இருக்கானா? தீஞ்ச மண்டையா நான் தான்டா காம‌ன் மேன் பேச‌றேன்.

கவுண்ட மணி!

க‌ண்ணா... நான் காம‌ன் மேன் பேஸ்றேன்.
கண்ணா... கடலைப் போடற ஃபிகருங்க தான் மிஸ்ஸிடு கால் கொடுக்கும். காமென் மேன் கனெக்ஷன் கால் தான் பண்ணுவான்... இது எப்படி இருக்கு?

- நோ கமெண்ட்ஸ்!

வெட்டிப்பயல் said...

//ஹ‌லோ க‌மிஷ்ன‌ர். நான் காம‌ன் மேன் பேச‌றேன் க‌மிஷ்ன‌ர். நான் சொல்ற‌தை கேளுங்க‌ க‌மிஷ்ன‌ர். நான் ஊரை சுத்தி பாம் வெச்சிருக்கேன் க‌மிஷ்ன‌ர். க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்... க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்...

நம்ம மௌனராகம் கார்த்திக்
//

Wrong :)

replace commissioner with Divya :)

Anonymous said...

நல்லா யோசிச்சிருக்கீங்க :)

வெட்டிப்பயல் said...

//ராஜாதி ராஜ் said...
நல்லா இருக்குங்க...

" லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் " டாப் கிளாஸ்..

:))

ராஜாதி ராஜ்.//

மிக்க நன்றி ராஜாதி ராஜ் :)

வெட்டிப்பயல் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சூப்பர்

நல்லா இருக்கு

" லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் " டாப் கிளாஸ்..

:))

ரிப்பீட்டே ....

//

நன்றி பாஸ் :)

வெட்டிப்பயல் said...

// gulf-tamilan said...
நல்லா இருக்கு!!!

//

நன்றி பாஸ் :)

வெட்டிப்பயல் said...

//sriram said...
பாலாஜி
சான்ஸே இல்ல, கலக்கிட்டீங்க...
என்ன பதிவு கொஞ்சம் லேட்டா வந்திருச்சு, உ போ ஒ பத்தி மக்கள் ஜூடா எழுதிக்கிட்டு இருந்த போது போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்,
லேட்டா வந்தாலும் லேடஸ்டா வந்திருக்கு...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

தல,
மிக்க நன்றி...

போன வாரமே எழுதலாம்னு பார்த்தா நேரமில்லை... இப்ப ஒரு மணி நேரம் கிடைச்சிது.. கேப்ல கடா வெட்டியாச்சி :)

Malini's Signature said...

கொஞ்சம் நாள் கழிச்சு வந்தாலும் சரி கலக்கல் பதிவு.... ஒரே சிரி சிரி சிரிப்புதான்...அதுவும் லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் ...சூப்பர் போங்க...

பாப்பா நல்லா இருக்காங்களா?

வெட்டிப்பயல் said...

//சின்ன அம்மிணி said...
நல்லா யோசிச்சிருக்கீங்க :)

//

மிக்க நன்றி சி.அ :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது சூப்பர்..,

நையாண்டி நைனா said...

visit and read Naiyaandi Naina also.

மின்னுது மின்னல் said...

ரைட்டு...:)

ஜீப்ல ஏறிட்டீங்க

:)

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல் வெட்டி :)

Karthik said...

கலக்கல்.. அடிக்கடி மாத்தி யோசிங்ணா.. :)))

Vidhya Chandrasekaran said...

ROTFL:)

Deepan Mahendran said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?

ஜோ/Joe said...

:)))))))))))))))))))))))))))))

சென்ஷி said...

//அந்த‌ கை வைக்காத‌ ப‌னிய‌ன் எதுக்குனா, அவ‌ர் சாமானிய‌னு சொல்ற‌ குறியீடு.//

இல்லை. கை வைக்காத பனியன்னா அவர் காங்கிரஸ்காரர் இல்லைங்கற குறியீடு! :-)

மங்களூர் சிவா said...

" லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் " டாப் கிளாஸ்..

:))

ஊர்சுற்றி said...

கலக்கல் இடுகை. :)

ஸ்ரீராம். said...

சூப்பர்....சூப்பர்....சூப்பர் ..சூ...ப்பருப்பு....."அவர் ஆனியன் வாங்கலை, ஏன்னா அவரே சாம் ஆனியன்.." சிரிச்ட்டேன். லொள்ளு சபா மனோகர் பயங்கர லொள்ளு!

Anonymous said...

Sooo funny..:)))


Regards,
Lakshmi

அரசூரான் said...

ஹலோ கமிஷ்னர்... நான் காமன்மேன் பேசுரேன்... கமிஷ்னர் வெட்டிப்பையன் பதிவ சுத்தி வெடி வெக்கிறார்... என்ன வெடியா? சிரிப்பு வெடி கமிஷ்னர்... சிரிப்பு வெடி ... :)

வெட்டிப்பயல் said...

//ஹர்ஷினி அம்மா said...
கொஞ்சம் நாள் கழிச்சு வந்தாலும் சரி கலக்கல் பதிவு.... ஒரே சிரி சிரி சிரிப்புதான்...அதுவும் லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் ...சூப்பர் போங்க...
//
மிக்க நன்றி ஹர்ஷினி அம்மா...

//
பாப்பா நல்லா இருக்காங்களா//

பாப்பா சூப்பரா இருக்காங்க... ரொம்ப அட்டகாசம் பண்ணிட்டு இருக்காங்க :)

வெட்டிப்பயல் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
இது சூப்பர்..,

10:23 PM//

மிக்க நன்றி பாஸ் :)

...............

//நையாண்டி நைனா said...
visit and read Naiyaandi Naina also.//

சாரி பாஸ்... ப்ளாக் பக்கம் வரவே நேரம் கிடைக்கறதில்லை... நிச்சயம் வந்து பார்க்கிறேன் :)

.............

//மின்னுது மின்னல் said...
ரைட்டு...:)

ஜீப்ல ஏறிட்டீங்க

:)

12:15//

ஆமாம் மின்னலு... என்ன பண்ண :)

..............

//நான் ஆதவன்☀ said...
கலக்கல் வெட்டி :)

12:23 AM//

நன்றி ஆதவன் :)

வெட்டிப்பயல் said...

// Karthik said...
கலக்கல்.. அடிக்கடி மாத்தி யோசிங்ணா.. :)))

4:22 AM//

ரொம்ப நன்றிப்பா...

...............

//வித்யா said...
ROTFL:)//

நன்றி வித்யா :)

...............

// சிவன். said...
ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?

8:19 AM//

அதெல்லாம் அப்படியே யோசிக்க வேண்டியது தான் :)

வெட்டிப்பயல் said...

//சென்ஷி said...
//அந்த‌ கை வைக்காத‌ ப‌னிய‌ன் எதுக்குனா, அவ‌ர் சாமானிய‌னு சொல்ற‌ குறியீடு.//

இல்லை. கை வைக்காத பனியன்னா அவர் காங்கிரஸ்காரர் இல்லைங்கற குறியீடு! :-)

11:02 AM//

சென்ஷி,
செம டைமிங் :)

மிகவும் ரசித்தேன் :)

.............

ஜோ,
மிக்க நன்றி :)


..............
சிவாண்ணே,
டாங்கிஸ் :)

வெட்டிப்பயல் said...

//ஊர்சுற்றி said...
கலக்கல் இடுகை. :)

10:10 AM//

மிக்க நன்றி ஊர்சுற்றி :)

............

// ஸ்ரீராம். said...
சூப்பர்....சூப்பர்....சூப்பர் ..சூ...ப்பருப்பு....."அவர் ஆனியன் வாங்கலை, ஏன்னா அவரே சாம் ஆனியன்.." சிரிச்ட்டேன். லொள்ளு சபா மனோகர் பயங்கர லொள்ளு!

8:40 PM//

நன்றி... நன்றி... நன்றி :)

வெட்டிப்பயல் said...

லஷ்மி,
மிக்க நன்றி :)

...........

// அரசூரான் said...
ஹலோ கமிஷ்னர்... நான் காமன்மேன் பேசுரேன்... கமிஷ்னர் வெட்டிப்பையன் பதிவ சுத்தி வெடி வெக்கிறார்... என்ன வெடியா? சிரிப்பு வெடி கமிஷ்னர்... சிரிப்பு வெடி ... :)

11:42 AM//

மிக்க நன்றி அரசூரான் :)

மணிவேலன் said...

கலக்கல் பதிவு :)

லொள்ளு சபா சான்ஸே இல்லை.......

CS. Mohan Kumar said...

ஹலோ.. என்ன கொஞ்ச நாளா ஆளை காணும்?

உ. போ. ஒ. போல் "ஆதவன்" பற்றியும் எழுதுங்க..

**********

சிறு வயது முதல் நமது விருப்பங்கள் எப்படி எல்லாம் மாறுகிறது.. இது பற்றி ஒரு சிறு article. படிக்க எனது blog-க்கு வரவும்.

"யாரை பிடிக்கும்?" மாறும் விதம்

Link:

http://veeduthirumbal.blogspot.com/

Mohan Kumar

மணிமகன் said...

Dear Vetti,

I had seen ur post in d following link. check it.
http://siragukalfriends.mywebdunia.com/2009/10/27/1256635020000.html

But I can't see ur name there! So I want to let u know abt dis.

வெட்டிப்பயல் said...

@மணிமகன்

மிக்க நன்றி....

வெட்டிப்பயல் said...

@மணிமகன்

மிக்க நன்றி....

Anonymous said...

why no articles for long time.before it used to be quite intresting.keep updating.

வடுவூர் குமார் said...

ம‌க‌ன்: ஏம்பா முன்னெல்லாம் "வெட்டிப்ப‌ய‌ல்" ப‌திவை அனுப்பி ப‌டிக்க‌ச்சொல்லுவீங்க‌,இப்பெல்லாம் அனுப்புவ‌தில்லையே?

நான்: அவ‌ர் எப்ப‌வாவ‌து தான் எழுதுகிறார் அதோடு அவ‌ருக்கு க‌ல்யாண‌மாகிவிட்ட‌து.


ம‌க‌ன்: அப்போ க‌ல்யாண‌த்துக்கு முன்னாடி வெட்டியாக‌ இருந்தாரா?


நான்: !!!! என்ன‌மா மாத்தி யோசிக்கிறாங்க‌ப்பா.

take it light.