காலங்காத்தால ஃபோன் பண்றதே இந்த அம்மாவுக்கு வேலையாப் போயிடுச்சி.
”என்னய்யா தூங்கிட்டு இருக்கியா?”
”இல்லை கபடி ஆடிட்டு இருக்கேன். ஏம்மா. எத்தனை தடவை சொல்லிருக்கேன். காலைல ஏழு மணிக்கு முன்னாடி ஃபோன் பண்ணாதீங்கனு. என்ன விஷயம்”
“இல்லய்யா, அந்த ரவி மாமா இருக்காரு இல்லை”
“ரவி மாமாவா? யார் அது?”
“என் அண்ணனோட சகலடா”
“சரி அவருக்கு என்னம்மா? சீக்கிரம் சொல்லுங்க. நான் இன்னும் ஒரு அரை மணி நேரம் தான் தூங்க முடியும்”
“உன் அத்தையோட தங்கச்சிப் பொண்ணு மீனாக்கு உங்க கம்பெனில வேலைக் கிடைச்சிருக்காம்”
“சரி. அதுக்கு?
“இப்ப தான் முதல் முறையா பெங்களூர் வருதாம். நேத்து தான் ரவி மாமா ஃபோன் பண்ணி விசாரிச்சாரு. நான் உன் நம்பரைக் கொடுத்திருக்கேன். ஏதாவது உதவி கேட்டா பண்ணுப்பா. சரியா?”
”ஏம்மா இப்படி எல்லாருக்கும் நம்பர் கொடுக்கற? எனக்கு இருக்குற வேலைக்கு அதெல்லாம் பண்ண முடியுமானு தெரியலை. காலைல எட்டரைக்கு போனா ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு தான் வரேன்”
“பாவம்யா. தனியா ஊரை விட்டு வருது. முடிஞ்ச வரைக்கும் உதவி பண்ணுயா. சரியா?”
“சரி சரி. இனிமே ஊருல இருந்து யாராவது வராங்கனு நம்பர் கொடுக்காதீங்க. நான் ராத்திரி பண்ணறேன்”
பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். கண்ணை மூடியவுடன் டார்டாய்ஸ் சுத்த துவங்கியது, திருக்கோவிலூர் தனலட்சுமி கல்யாண மண்டபத்தில் கொண்டு போய் என்னை நிறுத்தியது. நான் புது சட்டை, டிராயர் போட்டிருந்தேன். எனக்கு ஒம்பது வயதிருக்கலாம். அந்த அறை முழுக்க பெண்கள்.அந்த சிகப்பு, நீலம், வெள்ளை கலர் நிறைந்த ஜமக்கலத்தில் என் அக்காவுடன் அமர்ந்து புளியங்கொட்டைகளை வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தேன்.
“ஏய் என் அத்தை மடியில நீ ஏண்டி படுத்திருக்க. எழுந்திரிடி” பானுவின் குரல்.
“ஏய் இது ஏன் அத்தை. நான் எழுந்திரிக்க மாட்டேன்” மீனாவின் குரல்
“அத்தை! நீங்க எனக்கு தானே அத்தை. அவளுக்கு நீங்களே சொல்லுங்க அத்த” பானு என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“நான் ரெண்டு பேருக்கும் அத்தை தான்மா. நீ வேணா இந்த மடில தலை வெச்சி படுத்துக்கோ” சொல்லிவிட்டு பானுவை படுக்க வைத்தார்கள்.
“என்னடி இப்பவே ரெண்டு பேரும் அத்தைக்கு சண்டை போடறீங்க. நாளைக்கு யாரு வினோத்தை கல்யாணம் பண்ணிக்க போறாங்களோ அவுங்களுக்கு தான் அவுங்க அத்தை. யாரு கட்டிக்கறீங்க சொல்லுங்க” பக்கத்திலிருந்த காந்தா பாட்டி சொல்லிவிட்டு சிரித்தாள். இதை கேட்டதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. வேகமாக எழுந்து என் அம்மா அருகே சென்றேன்.
“ஏய் ரெண்டு பேரும் எழுந்திரிங்க. இது எங்க அம்மா. நான் தான் எங்கம்மா மடில தலை வெச்சி படுப்பேன். வேணும்னா நீங்க ரெண்டு பேரும் உங்க அம்மா மடில தலை வெச்சி படுத்துக்கோங்க. எழுந்திரிங்க” சொல்லிவிட்டு எட்டி உதைக்க ஆரம்பித்தேன். பானு எழுந்துவிட்டாள். அதற்குள் காந்தா பாட்டி என்னை கையை பிடித்து இழுத்துவிட்டார்கள்.
“பொம்பளை புள்ளைங்களை இப்படி எட்டி உதைக்கலாமா? மகாலஷ்மிங்கப்பா. இப்படி எல்லாம் பொம்பளை புள்ளைங்களை எட்டி உதைச்சா தரித்தரம் வந்துடும்பா. இனிமே என்னைக்கும் இப்படிப் பண்ணாத. புரியுதா” அதட்டினார்கள்.
“அப்பறம் நான் சொன்னா எழுந்திரிக்க வேண்டியது தானே. எங்கம்மா மடில எதுக்கு அதுங்க தலை வெச்சி படுக்கணும்?”
“அவுங்க அத்தை மடில தலை வெச்சி படுத்திருக்காங்க. அத்தை மடி மெத்தையடினு பாட்டு கூட இருக்கே. நீ வேணும்னா போய் உங்க அத்தை மடில படுத்துக்கோ. இல்லைனா வெளிய போய் விளையாடு. போ” துரத்திவிட்டார்கள். நானும் கோபத்தில் மீண்டும் ஒரு முறை படுத்திருந்த மீனாவை எட்டி உதைத்துவிட்டு ஓடி வந்துவிட்டேன்.
அதற்கு பிறகு அவளை பார்த்த நியாபகம் இல்லை. அவளைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுவதோடு சரி. என் அக்கா கல்யாணத்திற்கு கூட ரவி மாமா தான் வந்தாரே தவிர மீனா வரவில்லை.
குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பினேன். சரியாக எட்டரை மணிக்கு என் சீட்டில் இருந்தேன். ஆன்சைட் கால் ஆரம்பித்து ஒரு மணி நேரம் சென்றது. அவன் வாங்கிய திட்டை 10x ஆக மாற்றி எங்களுக்கு கொடுத்து கொண்டிருந்தாள். அதை நான் 20x ஆக மாற்றி டீமில் இருக்கும் ஜூனியர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
சரியாக பனிரெண்டரை மணிக்கு என் செல்போன் சிணுங்கியது.
“ஹலோ வினோத்?”
“யெஸ் ஸ்பீக்கிங்”
“நான் மீனா பேசறேன்”
“மீனா? எந்த மீனா”
ஃபோன் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. அது தமிழ்நாடு நம்பர். இன்னும் பெங்களூர் நம்பர் வாங்கவில்லை போல.
மறுபடி நான் அழைத்தேன்.
“மீனா, ஐ அம் டெரிபலி சாரி. காலைல அம்மா சொன்னாங்க. டென்ஷன்ல மறந்துட்டேன்”
“பரவாயில்லை. எனக்கும் என்ன ரிலேஷன்னு சொல்லனும்னு தெரியலை. அதான் வெச்சிட்டேன்”
“ஹா ஹா ஹா. தட்ஸ் ஃபைன். எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நான் வரேன்”
பில்டிங் நம்பரை சொன்னாள். ட்ரைனிங் பில்டிங் தான்.
வேகமாக ட்ரெயினிங் பில்டிங்கை நோக்கி நடந்தேன். அங்கே இருந்த கூட்டத்தில் யார் மீனா என்று தெரியவில்லை. அவள் எண்ணுக்கு அழைத்தேன். லைட் மஞ்சள் நிற சுடிதார் போட்டு சோபாவில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணுடைய செல்ஃபோன் சிணுங்கியது. அது தான் மீனாவாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன். ஆனால் அந்த பெண் வடநாட்டுக்காரி போல் இருந்தாள்.
”ஹலோ கிருஷ்ணா”
என் பின்னாலிருந்த படியிலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. திரும்பி பார்த்தேன். வெள்ளை நிற சுடிதாரில் தேவதை மாதிரி தெரிந்தாள் மீனா என்று சொல்லுவேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால் நீங்கள் இன்னும் பாரதிராஜா படத்திலிருந்து வெளி வரவில்லை என்று அர்த்தம்.
“மீனா?”
”யெஸ்”
“வெஜ்ஜா நான் வெஜ்ஜா?”
“என்னது?”
“வெஜ் சாப்பாடு வேண்டுமா நான் வெஜ் சாப்பாடு வேணுமானு கேட்டேன். அதுக்கேத்த ஃபுட் கோர்ட்க்கு போகலாம்”
“வெஜ்”
“அப்ப பக்கத்துல இருக்கற ஃபுட் கோர்ட்டேக்கே போகலாம்”
வழியில் எதுவும் பேசாமல் ஏதோ சிந்தனையிலே வந்தாள்.
சாப்பாடு வாங்கி கொண்டு எதிரெதிரில் அமர்ந்தோம்.
“சொல்லுங்க மீனா. ட்ரெயினிங் எல்லாம் எப்படி போகுது?”
“சொல்லுங்கவா? நான் உங்கள விட சின்ன பொண்ணு. மோர் ஓவர் நீங்க எனக்கு அத்தைப் பையன். அந்த ஞாபகம் இருக்கா?”
“அத்தைப் பையனா? இது என்ன காமெடியா இருக்கு. பானுக்கு தான் நான் அத்தைப் பையன். என்ன ஞாபகம் இல்லையா?”
முறைத்தாள்.
“சரி சரி. சாப்பிடு”
“சாப்பிட்டு தான் இருக்கேன். அப்பறம் உங்களால என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியல தானே? நான் எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?”
“என்ன பண்றது நான் அப்ப மாதிரியே இருக்கேன். நீ தான் ஆளே மாறிட்ட?”
“நிஜமாவா?”
“ஆமாம். சின்ன வயசுல அழகா சின்னதா குட்டி குரங்கு மாதிரி இருந்த”
“ஏய்ய்ய்”
“இரு சொல்லி முடிக்க விடு”
“சொல்லுங்க”
“இப்ப பெரிய குரங்கா மாறிட்ட”
கைல வெச்சிருந்த ஸ்பூனால அடிச்சிட்டா.
”அப்பறம் உனக்கு எல்லாம் எந்த அறிவாளி இந்த கம்பெனில வேலை போட்டு கொடுத்தான்?”
”ஹான்...உங்களுக்கே ஒரு அறிவாளி வேலை கொடுக்கும் போது எனக்கு கொடுக்காமலா போயிடுவான். அது மட்டுமில்லாமல் இந்த கம்பெனிக்குனே நான் தனியா ப்ரிப்பேர் பண்ணேன்”
“ஏன்?”
“சும்மா தான்”
“நம்பிட்டேன்”
“நல்லது”
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து அவளை ட்ரைனிங் பில்டிங்கில் விட்டு வந்தேன். அவள் நினைவாகவே இருந்தது. சின்ன வயசுல எல்லாம் இவ்வளவு துடுக்குத்தனமா பேசின மாதிரி நியாபகமில்லை. ஒரு வேளை சின்ன வயசுல பயமா கூட இருந்திருக்கலாம்.
சரியாக ஐந்து மணிக்கு செல் ஃபோன் சிணுங்கியது. மீனா தான்.
“எனக்கு அஞ்சே காலுக்கு பஸ் இருக்கு”
“சரி”
“நான் அதுல போகவா?”
“ஒரு வாரம் கெஸ்ட் அவுஸ் தானே?”
“ஆமாம்”
“அடுத்து?”
“PG தேடணும். நீங்க ஹெல்ப் பண்றீங்களா?”
“நான் வேணா வீடு எடுக்கறேன். ரெண்டு பேரும் சேர்ந்து தங்கிக்கலாம்”
“”
“ஏய் சும்மா சொன்னேன். டென்ஷன் ஆகாத. வெயிட் பண்ணு. ஒரு சிக்ஸ் தேர்ட்டிக்கா கிளம்பலாம். நான் வண்டிலயே உன்னை கொண்டு போய் விடறேன். ஓகேவா?”
“ஹ்ம்ம்ம். அதுவரைக்கும் நான் எங்க வெயிட் பண்றது?”
“என் பில்டிங்கு வா. ஆனா எதுவும் தொந்தரவு பண்ணக்கூடாது. சரியா?”
“நான் எதுவும் தொந்தரவு பண்ணமாட்டேன். சமத்தா இருப்பேன்”
“சரி கீழ வந்து ரிசப்ஷன்ல இருந்து கூப்பிடு. நான் வந்து கூப்பிட்டு போறேன்”
அவளை என் க்யூபிக்களுக்கு அழைத்து வந்து அருகில் உட்கார சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தேன். அரை மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியவில்லை. வேலை முடிந்த வரை ஆன்சைட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு புறப்பட்டோம்.
”அதுக்குள்ள முடிச்சிட்டீங்களா மாமா?”
“ஓய்... என்னது மாமாவா? ஒதை வேணுமா?”
“அப்பறம் வேற எப்படி கூப்பிடறது?”
“அத்தான்னு கூப்பிடு”
“நிஜமாவா? பக்கத்துல யாராவது கேட்டா சிரிக்க மாட்டாங்க?”
“ஏய்... சும்மா சொன்னேன். வினோத்னு கூப்பிடு”
“எப்பவுமேவா?”
“ஆபிஸ்குள்ள மாமானு கூப்பிடாத. புரியுதா?”
“அப்ப வெளிய கூப்பிடலாமா?”
“உன் ட்ரெயினர் கிருஷ்ணா எனக்கு ஃபிரெண்ட் தான். ட்ரெயினிங்ல பாஸ் ஆகணும்னு ஆசையில்லையா? ”
”சரி சரி இனிமே கூப்பிடல”.
அவளை என்னுடைய டூ-வீலரில் அழைத்து கொண்டு
சில PGக்கு அழைத்து சென்று காண்பித்தேன். மாதம் இரண்டாயிரத்தி ஐநூறிலிருந்து நான்காயிரம் வரை இருந்தது. பொதுவாக ரூமிற்கு இரண்டு அல்லது நான்கு பெட். வீக் டேல பிரேக் ஃபாஸ்ட், டின்னர். வீக் எண்ட்ல லஞ்ச். எல்லாமே கேவலமா இருக்கும்னு தங்கியிருந்தவங்கல தனியா விசாரிச்சதல சொன்னாங்க. எப்படியும் ரெண்டு நாள்ல முடிவு பண்ணிடலாம்னு விட்டுட்டோம்.
மணி எட்டாகியிருந்தது. அப்படியே சுக் சாகரில் ஆளுக்கு ஒரு மசால் தோசை சாப்பிட்டு விட்டு அவளை கெஸ்ட் அவுஸில் விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். வந்ததிலிருந்து அவள் நினைவாகவே இருந்தது. அவள் காலையிலிருந்து பேசியதெல்லாம் மீண்டும் ஒரு முறை மனதில் ஓடியது. எனக்கு இத்தனை வருடத்தில் அவளை பற்றிய நினைவு பெரிதாக வந்ததில்லை.
எங்க அக்கா மட்டும் ஒன்றிரண்டு முறை அம்மாவிடம், மீனாவை நம்ம வீட்டுக்கு மருமகளா கூப்பிட்டு வந்திடலாம். நல்ல பொண்ணுனு சொல்லிட்டு இருப்பாங்க. அதுக்கு அம்மா, யாருக்கு யார்னு நம்ம கைல என்னமா இருக்கு. அதெல்லாம் நடக்கற அப்ப பார்த்துக்கலாம்னு சொல்லுவாங்க. அப்பவெல்லாம் என் மனசுல பெருசா எதுவும் தோன்றியது இல்லை. இன்னைக்கு ஒரே நாள்ல நானே மாறிட்டேன். எப்படியும் அக்காவை வெச்சி வழிக்கு கொண்டு வந்திடலாம். இல்லைனா பாவாக்கிட்ட சொல்லிக்கூட சொல்ல சொல்லலாம். மருமகன் பேச்சுக்கு வீட்ல எதிரா யாரும் பேசமாட்டாங்க.
அதுக்கு எல்லாம் முன்னாடி அவள் மனசுல என்ன இருக்குதுனு தெரிஞ்சிக்கனும். இது வரைக்கும் அவள் பேசினது தான் என்னை இப்படியே யோசிக்க வெச்சிருக்கு. இருந்தாலும் கடைசியா நான் உங்களை ரிலேட்டிவாதான் நினைச்சேனு சொல்லிட்டா, அலைபாயுதேல வர கார்த்திக் மாதிரி பல்பு வாங்க முடியாது. அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்குவோம். அதுக்கு அப்பறம் வீட்ல பேசலாம்.
இதுக்கெல்லாம் இப்ப அவசரம் இல்லை தான். ஆனா இப்படி ஒரு குழப்பத்துல என்னால இருக்க முடியாது, அவக்கிட்ட இப்படி ரெண்டுங்கெட்டான் தனமாவும் பேச முடியாது . இந்த வீக் எண்ட் எப்படியும் மீனாவோட தான் ஸ்பெண்ட் பண்ற மாதிரி இருக்கும். எப்படியும் அப்ப பேசிடலாம். இந்த வீக் எண்ட்ல எல்லாம் தெளிவாகிடலாம். அப்படி எதுவும் எண்ணம் அவளுக்கு இல்லைனாலும் ஓகே தான். இப்பவே எஸ்ஸாகிடலாம். மனசுல ஆசையை வளர்த்துக்கறது நியாயம் இல்லை. அவ ஆமாம்னு சொன்னா எப்படி இருக்கும். ஹார்ட்ல ஆக்சிஜன் சப்ளை குறைந்த மாதிரி இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டேன். வார இறுதிக்காக ஆர்வமாக காத்திருந்தேன்.
நான்கு நாள் ஓடிய வேகமே தெரியவில்லை. யாரோ கடிகார முள்ளை கையால வேகமா சுத்திவிட்ட மாதிரி இருந்தது. வெள்ளிக்கிழமை சரியாக நான்கு முப்பது ஆகியிருந்தது. திடிரென்று ராமகிருஷ்ணா ஹெக்டேவிடமிருந்து மெயில். அவர் க்யூபிக்கலிளிருந்த பக்கத்து கான்ஃபரன்ஸ் அறைக்கு வர சொல்லியிருந்தார்.
சரியாக ஐந்து நிமிடத்தில் அங்கு இருந்தேன். அவர் அங்கு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த அறைக்கு அவர் இது வரை வர சொல்லியிருந்த நேரங்களில் அங்கு கொண்டாட்டங்கள் தான் இருக்கும். இன்று என்ன கொண்டாட்டமென்று தெரியவில்லை. இன்று மீனாவுடன் ஏதாவது படத்திற்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன். எங்கே நேரமாகிவிடுமோ என்று பயம்.
சரியாக நான்கு நாற்பத்தைந்திற்கு அவர் வந்து சேர்ந்தார். பொறுமையாக பேச ஆரம்பித்தார். குலோபல் எக்கனாமிக் கண்டிஷன்களினால் கம்பெனி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சில நபர்களை வேலையை விட்டு நீக்க வேண்டிய நிலை கம்பெனிக்கு வந்துள்ளதாகவும், அதை ஒவ்வொரு கட்டமாக செய்ய வேண்டிய நிலையில் இன்று எங்களை நீக்குவதாகவும் தெரிவித்தார். அங்கே திடீரென்று சலசலப்பு எழுந்தது. ஒவ்வொருவரும் எப்படி எங்களை அதில் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டார்கள். இது ஒவ்வொரு ப்ராஜக்டிலும் சீனியர் மேனஜர்கள் மேனஜர்களுடன் பேசி எடுத்த லிஸ்ட். இதை எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார். எங்களுக்கு இரண்டு சாய்ஸ்கள் இருப்பதாக தெரிவித்தார்.
ஒன்று தற்கொலை. மற்றொன்று கொலை.
அங்கே யாருக்கும் சிந்திக்க நேரமில்லை. அனைவரும் மேனஜரை ஃபோனில் பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள். யாரும் எடுக்கவில்லை போல. அனைவரையும் அங்கே ஒரு ஃபார்ம் கொடுத்து அதை நிரப்பிவிட்டு கிளம்ப சொன்னார்கள். யாரும் அவர் இடங்களுக்கு செல்ல கூடாது. அரை மணி நேரத்தில் கம்பெனியை விட்டு வெளியேறிவிட வேண்டும். அவர்களின்
பொருட்கள் அவர்கள் கொடுத்துள்ள விலாசத்திற்கு வந்து சேரும். அனைவரும் அவர்களுடைய டேக் (ஐடி கார்ட்)ஐ கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. இப்படி ஒரு நிலை வரும் என்பதை யாரும் யூகிக்கவில்லை. என்னையும் சேர்த்து தான். இந்த டைட்டானிக் கப்பல் மூழ்குமா என்று இறுமாந்திருந்த கேப்டன் எட்வர்ட் ஸ்மித் நிலைக்கு நாங்களும் ஆளாகியிருந்தோம்.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க தவிர்த்தோம். தரையைப் பார்த்து கொண்டே பில்டிங்கை விட்டு வெளியே வந்தேன். கடைசி ஒரு முறையாக கம்பெனியை சுற்றி நடந்தேன். ஒவ்வொரு இடமும் ஒரு நிகழ்ச்சியை நினைவுப்படுத்தியது. ஃபுட் கோர்டில் இருந்த காபி டே, பல ட்ரீட்களை நியாபகப்படுத்தியது. பல சிரித்த முகங்கள் நினைவில் வந்து மறைந்தன.
என் பிறந்த நாள் கொண்டாட்டத்தன்று அங்கு அனைவரும் என் முகத்தில் தடவிய கேக் சுவை நாவில் தோன்றி மறைந்தது. கால் செண்டர் பில்டிங் அருகே நடந்து கொண்டிருந்தேன். எத்தனை நாட்கள் இரவு ஒன்று இரண்டு மணி வரை வேலை பார்த்து இவர்களுடன் சேர்ந்து இரவு பணிரெண்டு மணிக்கு சுட சுட சாப்பிட்டது நினைவிற்கு வந்தது. மீண்டும் நான் வேலை செய்யும் பில்டிங் அருகே வந்து நின்றேன். ஐடி கார்ட் இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. அரை மணி நேரத்திற்கு முன்பு நான் இங்கு கோடிங் செய்து கொண்டிருந்தேன்.
மீனாவிடமிருந்து அழைப்பு வந்தது. அதை தவிர்த்து வீட்டிற்கு சென்றேன்.
இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. மீனாவிடமிருந்து நான்கைந்து SMSகள் மற்றும் மிஸ்ஸிடு கால்கள். அவளிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் வேலையில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் எனக்கு வேலை போய் விட்டதை என்னால் ஜீரணிக்கவும் முடியவில்லை. அன்று வந்திருந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்து பார்வையை ஓட்டினேன்.
அங்கே கொட்டை எழுத்தில் இருந்தது என் கவனத்தை ஈர்த்தது.
”****** நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக பத்தாயிரம் பேரை வேலையில் அமர்த்துகிறது”
65 comments:
கதையை படிச்சி கருத்து சொல்லிட்டு போங்க :)
கதை வெண்ணை மாதிரி வழுக்கீட்டு போச்சு.
ஆனா கடைசியில ஒரு மென் சோகம்.
//முரளிகண்ணன் said...
கதை வெண்ணை மாதிரி வழுக்கீட்டு போச்சு.
ஆனா கடைசியில ஒரு மென் சோகம்.//
நட்சத்திரம் இங்கு வந்து ஜொலித்ததற்கு நன்றி
சின்ன புள்ளத்தனமா இப்படி எல்லாரும் படிச்சிட்டு கருத்து சொல்லாம போனா எப்படி?
நல்லா இல்லைனா தைரியமா நல்லா இல்லைனாவது சொல்லலாமே :)
Something missing'ppa.... :))
//இராம்/Raam said...
Something missing'ppa.... :))//
அது!!!
இப்படி சொன்னா அது பெரிய மனுஷனுக்கு அழகு...
அடுத்த கதைல சரி பண்ணிடலாம் :)
கத ரொம்ப வேகமா சுவாரஷ்யமா போச்சு.. நெனச்சுப் பாத்தா ஊருக்குப் போகவே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு :((
//இராம்/Raam said...
Something missing'ppa.... :))//
:)) நெறய ஆங்கில வார்த்தைகள்... அதுக்கெல்லாம் இயல்பான (செயற்கையா இல்லாம) தமிழ் வார்த்தைகளும் இருக்குறப்ப அத போட்டிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்..
அப்புறம் அப்படியே டைப் பண்ணிட்டு ரிவைஸே பண்ணாம பப்ளிஷ் பண்ண மாதிரி ஒரு ஃபீலிங்...
//ஜியா said...
கத ரொம்ப வேகமா சுவாரஷ்யமா போச்சு.. நெனச்சுப் பாத்தா ஊருக்குப் போகவே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு :((
//
ரொம்ப நன்றிப்பா...
இப்படி கூப்பிட்டு கூட்டம் கூட்டமா தூக்கறாங்கனு கேள்விப்பட்டேன். பிராஜக்ட்ல இருக்கறவங்களையும் தூக்கறாங்கனு கேள்விப்பட்டு தான் கொஞ்சம் டெர்ரரா இருக்கு.
//ஜியா said...
//இராம்/Raam said...
Something missing'ppa.... :))//
:)) நெறய ஆங்கில வார்த்தைகள்... அதுக்கெல்லாம் இயல்பான (செயற்கையா இல்லாம) தமிழ் வார்த்தைகளும் இருக்குறப்ப அத போட்டிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்..
அப்புறம் அப்படியே டைப் பண்ணிட்டு ரிவைஸே பண்ணாம பப்ளிஷ் பண்ண மாதிரி ஒரு ஃபீலிங்...//
போன தடவை முடிந்த அளவு தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினேன். கொஞ்சம் இயல்பு மீறின மாதிரி இருந்தது. ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் இந்த மாதிரி ப்ளாக் சம்பந்தம் இல்லாதவங்க எல்லாம் பேசினா இல்லை நினைக்கும் போது கூட இவ்வளவு வார்த்தைகள் இருக்கும்னு யோசிச்சி தான் எழுதினேன்...
மூணு நாலு தடவை ரிவைஸ் பண்ணி, பப்ளிஷ் பண்ணதுக்கு அப்பறமும் கொஞ்சம் எடிட் செஞ்சேன். ஏன்னு தெரியல :)
//ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் இந்த மாதிரி ப்ளாக் சம்பந்தம் இல்லாதவங்க எல்லாம் பேசினா இல்லை நினைக்கும் போது கூட இவ்வளவு வார்த்தைகள் இருக்கும்னு யோசிச்சி தான் எழுதினேன்...//
அது என்னவோ உண்மதான்... நான் ஒரு ப்ளாகர் பார்வையிலேயே பாத்துட்டேன் :))
//
ஜியா said...
//ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் இந்த மாதிரி ப்ளாக் சம்பந்தம் இல்லாதவங்க எல்லாம் பேசினா இல்லை நினைக்கும் போது கூட இவ்வளவு வார்த்தைகள் இருக்கும்னு யோசிச்சி தான் எழுதினேன்...//
அது என்னவோ உண்மதான்... நான் ஒரு ப்ளாகர் பார்வையிலேயே பாத்துட்டேன் :))//
கதை எழுதும் போது இயல்பாவே வார இறுதி, அலைபேசி, உதவி எல்லாம் வந்துச்சி. அதையெல்லாம் வீக் எண்ட், செல்போன், ஹெல்ப் இப்படி மாத்தினேன்.
// முரளிகண்ணன் said...
கதை வெண்ணை மாதிரி வழுக்கீட்டு போச்சு.
ஆனா கடைசியில ஒரு மென் சோகம்./
ரிப்பீட்டே
ரொம்ப நாள் கழித்து ஒரு சுகமான கதை உங்ககிட்டருந்து... ஆனா சோகமா முடிச்சுட்டீங்களே.. :(
ம்ம், சில மாதங்களுக்கு பிறகு பிளாக் பக்கம் வந்தேன்,
1)கதை அருமை, நடை (ஃப்லோ) நல்லா இருக்கு.
2) கடைசில அப்ரப்ட்டா (தமிழ்ல என்ன?) முடிஞ்ச மாதிரி ஒரு பீலிங்க்.
3) மீனாவை ஏன் அவாய்ட் பண்ணனும்னு புரியல. அவமான உணர்ச்சின்னு எடுத்துக்கலாம்.
கதைக்கு அறுபது மதிப்பெண்கள். :))
பிகு: இன்னும் கொஞ்சம் கத்ரி பிடிச்ச்ருக்கலாம்.சில பாராக்கள் ஸ்க்ரோல் பண்ண வெச்சுட்டீங்க.
(எனக்கு பொறுமை கம்மி ஆகுது போல) :))
This is Bharat...
கதை நல்லா இருந்தது... but இத continue பண்ணுங்க ...
கதைனு தயவு செய்து தலைப்பு போடுங்க தல.. படிக்கறப்போ எதோ உன்மையா உங்களுக்கு நடந்ததா நினைச்சு படிச்சுட்டு இருந்தேன்.. சரி உங்க உண்மை காதல் கதைய தான் எழுதியிருக்கீங்கன்னு.. கடைசி வரை கதைனே தெரில.. சம்பவங்கள் எல்லாமே உங்களோட ஒத்துவருதா.. எனக்கு கதைனு புரியவச்சதே.. “பெங்களூர்”
வந்தது தான்.. உங்களோட மற்றொரு பதிவில் “யு எஸ்’ ல் இருப்பதாக படித்தேன்..
.. நல்லா வந்திருக்கு .. இன்னும் எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்..
அருமையான நடை, வழக்கமான "வெட்டி" ஸ்டைல் கதையோட்டம்... வாழ்த்துக்கள்.
//அது மட்டுமில்லாமல் இந்த கம்பெனிக்குனே நான் தனியா ப்ரிப்பேர் பண்ணேன்”//
subtext ஏதோ சொல்ல வருதே ...... :) ;)
ஆனா, தலைப்பை பார்த்தவுடனேயே முடிவு இப்படி தான் இருக்கப் போகுதுன்னு யூகிக்க முடிஞ்சது.... அதனால முடிவு ஏற்படுத்தின சோகத்தை முழுசா உணர முடியலை...
மொத்தத்துல "சக்கரத்தை" நல்லா சுழல விட்டுருக்கீங்க,,,, மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருமையா, அருமை!
ரொம்ப involve ஆகி எழுதி இருக்கீங்க, ஆராய்ச்சி பன்ன வேன்டிய ஆக்கம்தான், அப்புறம் மீனா என்ன ஆனாங்க? (பசங்கள பத்தி கேர் பன்னமாட்டான்களே)
Very nice story. Could visualize every single detail. Wonderful. I liked all your 'lollu' posts, but this one was something different.
I am a new reader btw. Enaku tamil le elutha olunga varathathale ipdi english le comment panren. Manikkavum!
என்னவோ எதிர்பார்த்து வேறு விதமாய் முடிந்திருக்கிறது கதை. வித்தியாசமா இருக்கு. ரொம்ப நல்லா, இயல்பா இருக்கு.
கதை மிகவும் பிடித்திருந்தது.... வேகம், சுவாரசியம் குறையாமல் இருந்தது... ஆனால் முடிவு எதிர்பாராதது... நன்றி...
//சென்ஷி said...
// முரளிகண்ணன் said...
கதை வெண்ணை மாதிரி வழுக்கீட்டு போச்சு.
ஆனா கடைசியில ஒரு மென் சோகம்./
ரிப்பீட்டே//
நன்றி சென்ஷி :)
//Raghav said...
ரொம்ப நாள் கழித்து ஒரு சுகமான கதை உங்ககிட்டருந்து... ஆனா சோகமா முடிச்சுட்டீங்களே.. :(//
வேலை போனது சோகம். ஆனா காதல் போச்சானு தெரியல. எப்படியும் அவன் அவள்ட சொல்லி எல்லாம் மாறிடும்னு நினைக்கிறேன்.
இன்னைக்கு நம்ம நிலைமையை எல்லாம் கதைல சேர்த்து வைத்தால் பின்னால் வரும் சந்ததியினருக்கு பயன்படும் அல்லமா? :-))))))))
//ambi said...
ம்ம், சில மாதங்களுக்கு பிறகு பிளாக் பக்கம் வந்தேன்,
//
சேம் ப்ளட் :)
//
1)கதை அருமை, நடை (ஃப்லோ) நல்லா இருக்கு.
//
மிக்க நன்றி பாஸ் :)
//2) கடைசில அப்ரப்ட்டா (தமிழ்ல என்ன?) முடிஞ்ச மாதிரி ஒரு பீலிங்க்.
//
கடைசியா அந்த காதல் கதை அப்படியே அந்தரத்துல தொங்கனதால இருக்கலாம். ஆனா அதை விட நான் காண்பிக்க விரும்பியது இன்றைய மென்பொருள் நிறுவனங்களின் முரண்பாட்டை.
எக்ஸ்பீரியன்ஸ்டை தூக்கிட்டு ஃபிரெஷர்ஸை போடு...
//3) மீனாவை ஏன் அவாய்ட் பண்ணனும்னு புரியல. அவமான உணர்ச்சின்னு எடுத்துக்கலாம்.
//
அதிர்ச்சி + அவமான உணர்ச்சி :)
//கதைக்கு அறுபது மதிப்பெண்கள். :))
//
பாஸ் ஆகிட்டேன் :)
//பிகு: இன்னும் கொஞ்சம் கத்ரி பிடிச்ச்ருக்கலாம்.சில பாராக்கள் ஸ்க்ரோல் பண்ண வெச்சுட்டீங்க.
(எனக்கு பொறுமை கம்மி ஆகுது போல) :))//
கத்திரி போடலாம்னு பார்த்தேன். ஆனா எதை தூக்கினாலும் பிரச்சனைனு ஃபீல் பண்ணேன் :)
// Anonymous said...
This is Bharat...
கதை நல்லா இருந்தது... but இத continue பண்ணுங்க ..//
மிக்க நன்றி பரத்...
எதை சொல்றீங்க. இந்த கதையையா இல்லை இதை போல் கதை எழுதுவதையா? :)
என்னங்க நீங்க இப்படி முடிச்சுட்டீங்க!! வித்தியாசமா முயற்சி செய்றீங்களோ...all the best!!:)
இருந்தாலும், நிறைய பேர் சொன்ன மாதிரி, something missing thaan.
ஆனா, வினோத்துக்கும் மீனாவிற்கும் இடையே நடக்கும் வசனங்கள் simply superbb!!
//நீங்கள் எதிர்பார்த்தால் நீங்கள் இன்னும் பாரதிராஜா படத்திலிருந்து வெளி வரவில்லை என்று அர்த்தம். //
ஹாஹா...நல்லா இருந்துச்சுப்பா!!
//“நான் வேணா வீடு எடுக்கறேன். ரெண்டு பேரும் சேர்ந்து தங்கிக்கலாம்”//
ஹாஹா...ரசித்து ரசித்து சிரித்து சிரித்து படித்தேன். super flow with gr8 timing comedy!:)
//Rithu`s Dad said...
கதைனு தயவு செய்து தலைப்பு போடுங்க தல.. படிக்கறப்போ எதோ உன்மையா உங்களுக்கு நடந்ததா நினைச்சு படிச்சுட்டு இருந்தேன்.. சரி உங்க உண்மை காதல் கதைய தான் எழுதியிருக்கீங்கன்னு.. கடைசி வரை கதைனே தெரில.. சம்பவங்கள் எல்லாமே உங்களோட ஒத்துவருதா.. எனக்கு கதைனு புரியவச்சதே.. “பெங்களூர்”
வந்தது தான்.. உங்களோட மற்றொரு பதிவில் “யு எஸ்’ ல் இருப்பதாக படித்தேன்..
.. நல்லா வந்திருக்கு .. இன்னும் எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்..
//
ஆஹா... மறுபடியும் சொந்த கதைனு நினைக்க ஆரம்பிச்சாச்சா? எனக்கு கண்ணாலம் ஆகி குழந்தை இருக்குது பாஸ். குடும்பத்துல குண்டு வெச்சிடாதிங்க :)
ஆனா இந்த அளவுக்கு உண்மைனு உங்களை நினைக்க வெச்சதுக்கு எனக்கு நானே பாராட்டிக்கலாம் :)
லேபில்ல : சிறுகதைனு போட்டிருக்கேன் பாஸ்...
//பாலகுமார் said...
அருமையான நடை, வழக்கமான "வெட்டி" ஸ்டைல் கதையோட்டம்... வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி பாலகுமார்...
//
//அது மட்டுமில்லாமல் இந்த கம்பெனிக்குனே நான் தனியா ப்ரிப்பேர் பண்ணேன்”//
subtext ஏதோ சொல்ல வருதே ...... :) ;)
//
ஹி ஹி ஹி... அதெல்லாம் வாசகர் யூகத்துக்கே விட்டாச்சி. நல்ல கம்பெனினு அதுக்காக தயார் படுத்திட்டாங்களா இல்லை வினோத்காகவானு நான் சொல்ல மாட்டேன் :)
//ஆனா, தலைப்பை பார்த்தவுடனேயே முடிவு இப்படி தான் இருக்கப் போகுதுன்னு யூகிக்க முடிஞ்சது.... அதனால முடிவு ஏற்படுத்தின சோகத்தை முழுசா உணர முடியலை...
//
ஹ்ம்ம்ம்.. பெரிய சஸ்பென்சா வைக்கனும்னு முயற்சி பண்ணல... ஆனா கடைசியா நடைமுறைல இருக்குற ஒரு முரண் வரணும்னு ஆசைப்பட்டேன்.
//மொத்தத்துல "சக்கரத்தை" நல்லா சுழல விட்டுருக்கீங்க,,,, மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//
விளக்கமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி :)
//மணிமகன் said...
அருமையா, அருமை!
5:09 AM
//
மிக்க நன்றி மணிமகன்
//Shafi Blogs Here said...
ரொம்ப involve ஆகி எழுதி இருக்கீங்க, ஆராய்ச்சி பன்ன வேன்டிய ஆக்கம்தான், அப்புறம் மீனா என்ன ஆனாங்க? (பசங்கள பத்தி கேர் பன்னமாட்டான்களே)
//
மிக்க நன்றி Shafஇ
மீனாவும் வினோத்தும் செட்டில் ஆவாங்கனு தான் நினைக்கிறேன்.
I think they are in Luv :)
//HaRi pRaSaD said...
Very nice story. Could visualize every single detail. Wonderful. I liked all your 'lollu' posts, but this one was something different.
I am a new reader btw. Enaku tamil le elutha olunga varathathale ipdi english le comment panren. Manikkavum!
//
That's fine Hari Prasad. Thanks for your comments.
You can try with http://tamileditor.org/
Its very easy to type in tamil. Just try using it.
//விக்னேஷ்வரி said...
என்னவோ எதிர்பார்த்து வேறு விதமாய் முடிந்திருக்கிறது கதை. வித்தியாசமா இருக்கு. ரொம்ப நல்லா, இயல்பா இருக்கு.
6:36 AM
//
மிக்க நன்றி விக்னேஸ்வரி...
காதல் கதை மாதிரி ஆரம்பிச்சி இப்படி முடிச்சது வித்யாசமா தெரிஞ்சிருக்கலாம் :)
//Chandru said...
கதை மிகவும் பிடித்திருந்தது.... வேகம், சுவாரசியம் குறையாமல் இருந்தது... ஆனால் முடிவு எதிர்பாராதது... நன்றி...
//
மிக்க நன்றி சந்திரு...
Story is very nice :-)
But the pink slip is very scary!
This should not happen to anyone.
நல்லா இருந்துச்சு கதை :) கடைசியா அநியாயத்துக்கு ஹீரோவுக்கு பல்பு குடுத்திட்டீங்க :))
இது தாண்டா கதை..!!
என்னடா..வழக்கம் போல வழியல், கொஞ்ச, கெஞ்சல் , சுபம் என்றே படித்துக்கொண்டு வந்தேன்..
நல்ல திருப்பம் (கெட்ட திருப்பம்)
அழகு !
//எங்களுக்கு இரண்டு சாய்ஸ்கள் இருப்பதாக தெரிவித்தார்.
ஒன்று தற்கொலை. மற்றொன்று கொலை. //
என்ன சொல்றதுனே தெரியல போங்க .. நல்ல ஆனால் உண்மை கதை .. உங்க வரிகள் கலக்கல்...
ஆரம்பம் இருந்து முடிவுக்கு முன்னவரை சூப்பர்.
கடைசில தான்...
உங்களுக்கே உரித்தான......அசத்தல் உரையாடலுடன், கதை அருமையாக இருக்கிறது அண்ணா:))
பதிவின் நீளம் அதிகமெனினும்.....உங்களது எழுத்து நடை, படிப்பதை சுவாரஸியமாக்கியது:)
// Thamizhmaangani said...
என்னங்க நீங்க இப்படி முடிச்சுட்டீங்க!! வித்தியாசமா முயற்சி செய்றீங்களோ...all the best!!:)
இருந்தாலும், நிறைய பேர் சொன்ன மாதிரி, something missing thaan.
//
நிறைய பேரா??
ராயல் மட்டும் தானே சொன்னாரு :)
//
ஆனா, வினோத்துக்கும் மீனாவிற்கும் இடையே நடக்கும் வசனங்கள் simply superbb!!//
மிக்க நன்றி தமிழ்மாங்கனி :)
//Prabu Raja said...
Story is very nice :-)
But the pink slip is very scary!
This should not happen to anyone.//
இது என் இரண்டு நண்பர்களுக்கு நிஜத்தில நடந்தது :(
//Divyapriya said...
நல்லா இருந்துச்சு கதை :) கடைசியா அநியாயத்துக்கு ஹீரோவுக்கு பல்பு குடுத்திட்டீங்க :))//
வேலை போனது மட்டும் தாம்மா இழப்பு...
காதல் கை கூடிடும்னு நினைக்கிறேன். பார்ட் 2 எழுதறயா? :)
//TBCD said...
இது தாண்டா கதை..!!
என்னடா..வழக்கம் போல வழியல், கொஞ்ச, கெஞ்சல் , சுபம் என்றே படித்துக்கொண்டு வந்தேன்..
நல்ல திருப்பம் (கெட்ட திருப்பம்)
அழகு !//
ஆஹா.. இந்த பின்னூட்டத்தை பார்த்து ரொம்ப சந்தோஷமாயிடுச்சி...
நிம்மதியா தூங்கலாம் :)
//சூரியன் said...
//எங்களுக்கு இரண்டு சாய்ஸ்கள் இருப்பதாக தெரிவித்தார்.
ஒன்று தற்கொலை. மற்றொன்று கொலை. //
என்ன சொல்றதுனே தெரியல போங்க .. நல்ல ஆனால் உண்மை கதை .. உங்க வரிகள் கலக்கல்//
மிக்க நன்றி சூரியன்...
//சரவணகுமரன் said...
ஆரம்பம் இருந்து முடிவுக்கு முன்னவரை சூப்பர்.
கடைசில தான்...
2:21 PM//
மொக்கையா போயிடுச்சா :)
// Divya said...
உங்களுக்கே உரித்தான......அசத்தல் உரையாடலுடன், கதை அருமையாக இருக்கிறது அண்ணா:))
பதிவின் நீளம் அதிகமெனினும்.....உங்களது எழுத்து நடை, படிப்பதை சுவாரஸியமாக்கியது:)//
ரொம்ப நன்றிமா...
நம்ம BB ல போடுற மாதிரி ஒரு NOM குறிப்பையும் கடைசில போட்டு வைங்க,வெட்டி அண்ணே!!!
நல்லாயிருக்கு!
இன்றைய ஐடி நிறுவனங்களின் நிலை, வேலை இழந்தவரின் மனநிலை, கம்பனியிலயிருந்து வெளியேறும் கடைசி நிமிடங்கள், பர்சனல் லைப்ல lay off இன் இம்பாக்ட்... எல்லாமே நல்லா இருக்கு.
மொதல்ல நல்லாதான் இருந்துச்சு. ராமகிருஷ்ணா ஹெக்டே உங்ககிட்ட மேட்டர சொன்னப்ப எனக்கே கொஞ்சம் கண்ணு கலங்கிடுச்சு.
நல்ல கதை..
கதை சென்ற விதம் மிக அருமை.
சக்கரம் மீண்டும் சுழலும்.
//தமிழினி..... said...
நம்ம BB ல போடுற மாதிரி ஒரு NOM குறிப்பையும் கடைசில போட்டு வைங்க,வெட்டி அண்ணே!!!//
ஹி ஹி ஹி...
அப்படி சொன்னா அங்க விழறதை விட இங்க அடி அதிகமா விழும்.. அதான் :)
//வாழவந்தான் said...
நல்லாயிருக்கு!
இன்றைய ஐடி நிறுவனங்களின் நிலை, வேலை இழந்தவரின் மனநிலை, கம்பனியிலயிருந்து வெளியேறும் கடைசி நிமிடங்கள், பர்சனல் லைப்ல lay off இன் இம்பாக்ட்... எல்லாமே நல்லா இருக்கு//
மிக்க நன்றி வாழவந்தான் :)
//மெகா சில்லறை said...
மொதல்ல நல்லாதான் இருந்துச்சு. ராமகிருஷ்ணா ஹெக்டே உங்ககிட்ட மேட்டர சொன்னப்ப எனக்கே கொஞ்சம் கண்ணு கலங்கிடுச்சு.//
தலைவா,
அது என்கிட்ட இல்லை.. கதாநாயகன்கிட்ட :)
// ILA said...
நல்ல கதை..
12:58 PM//
அண்ணே,
மிக்க நன்றி :)
// மங்களூர் சிவா said...
கதை சென்ற விதம் மிக அருமை.//
மிக்க நன்றி சிவா
//சக்கரம் மீண்டும் சுழலும்.//
நிச்சயமாக :)
அழகான காதல் கதை இப்படி ஆரம்ம்பத்திலேயே சோகமா முடிஞ்சு போச்சே!
அங்க வேலை போனா என்ன வேற இடத்தில் கிடைக்கும். காதல் கை கூடும் எனமனதை தேற்றி கொண்டேன்!
அருமை...அருமை...
நல்லா இருக்கு...இன்னும் சிறப்பாக எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...
தொடரும் போட்டு இருக்கலாமே....
இப்பதான் முதல் முறையா 'Lay Off' ஆகிறாப்போலே தெரியுது. software fieldல இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா! அமெரிக்காவிலே வெள்ளிக்கிழமை வந்தாலே கதிகலக்கும் pink slip வருமா! Voice Mailல message உட்டுருக்காங்களான்னு. இப்பல்லாம் we have developed நீர்யானைத் தோல். வடிவேலு அடிவாங்கியே பழக்கப்பட்டது போல எல்லாம் மரத்துப் போய்விட்டது.
Post a Comment