தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, November 04, 2008

ஒரு நல்ல பேரா பார்த்து சொல்லுங்கப்பா...

சுத்தி வளைச்சி சொல்ல விருப்பமில்லை. ஒரு குட்டி தேவதை வீட்டுக்கு புதுசா வந்திருக்காங்க. அவுங்களுக்கு பேர் வைக்கனும். இந்த எழுத்துக்கள்ல நல்ல பேரா சொல்லுங்க. ப (pa), பா(ba), பி(pi, bi), யெ(ye),யே,யொ(yo),யோ. இந்த எழுத்துக்கள்ல பேர் யோசிக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. நல்லதா பார்த்து சொல்லுங்க. 

 தற்போது சென்னையிலிருக்கிறேன். நாளை இரவு பெங்களூர் புறப்படலாம் என திட்டம் (நவம்பர் 5). 

75 comments:

MyFriend said...

வாழ்த்துக்கள் பாலாஜிண்ணா, அண்ணி & குட்டி தேவதை. :-)

Anonymous said...

Heelo Balaji anna,Hearty Congratualtions.. Hope mother and child are in good health. My suggestions for the little angel - Bharathi,Bhavya Priyadharshini, Preethi, Yohini. Will come up with new names later.

Anonymous said...

Bharathi---
Yazhini---
Yoshiya--

தமிழ் said...

பாக்யம்
பாக்யா
பல்லவி
பாலகுமாரி(பாலாஜியின் பிள்ளை)
பாமினி
பாலாமணி
பரிமளா

'y' ல ஆரம்பிக்கிற பேரெல்லாம் நல்லா இருக்குமான்னு தெரியல...

மனமிருந்தால் மார்க்கபந்து!

முரளிகண்ணன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

பெற்றோர்களுக்கும் தேவதைக்கும் வாழ்த்துகள் !

Sridhar Narayanan said...

//சுத்தி வளைச்சி சொல்ல விருப்பமில்லை. //

ஏதோ பொண்ணு கேக்கப் போற மாதிரி ஒரு பில்டப்பு கொடுக்கறீங்க :-)

உங்களுக்கும் உங்க மனைவிக்கும் வாழ்த்துகள் பல. குட்டி தேவதைக்கு அன்பு முத்தங்கள் :-)

எழுத்தை வச்சுத்தான் பேரு வைக்கனுமா என்ன? அப்படி எல்லாம் ரெஸ்ட்ரிக்ஷன் வச்சுக்காம நல்ல அழகான பெயரா தேர்ந்தெடுங்க. 'தேவதை'ங்கிற பேரே நல்லாத்தான் இருக்கு. :-)

Anonymous said...

congrats balaji

Raghav said...

வாழ்த்துக்கள் பாலாஜி.. எல்லாரும் வளைகாப்பு அன்னைக்கு சொன்ன மாதிரி பத்மாவதி நல்ல சாய்ஸ்

பாபு said...

pavithra
bavana
banu

கிரி said...

அப்பா ஆனதுக்கு வாழ்த்துக்கள் பாலாஜி

பேர் வைக்கறதுக்குள்ள ஒரு வழி ஆகிடுவீங்கன்னு நினைக்கிறேன் :-) (அனுபவம் பேசுது)

Anonymous said...

வாழ்த்துகள் :)

Anonymous said...

Bhargavi,Bhamini

Anonymous said...

பிபாஷா

அமிர்தவர்ஷினி அம்மா said...

குட்டி தேவதைக்கு என் வாழ்த்துக்கள்

பனிமலர்
பாரதி
பிரியதர்ஷினி
ப்ரியம்வதா
யோகினி
யாழினி

இப்பெயர்கள் பதிவை பார்த்தவுடனே தோன்றிற்று. யோசித்து இன்னும் சில பெயர்கள் தருகிறேன்.

Anonymous said...

Bhavana, Pavarna.

Anonymous said...

Piya, Piyusha, Piyali, Piyasa

துளசி கோபால் said...

ஆஹா...ஆஹா.....
வெட்டிக்கு ஒரு குட்டி.....
குட்டிப்பாப்பான்னு சொல்லவந்தேன்.

அப்பா, அம்மா, பாப்பா மூவருக்கும் மனம் நிறைஞ்ச அன்பும் ஆசிகளும்.

நல்லா இருங்க.

Anonymous said...

Yazhini, Yeola, Yorin, Yohina, Yameena, Yameen, Yahotra, Yahana. A few.

--> Hermione.

Anonymous said...

romba easy..pibasha basu apidinu name vechudunga!!!ANYWAYZ MY HEARTY CONGRATS

Subramanian Vallinayagam said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.... :)

சின்னப் பையன் said...

பெற்றோர்களுக்கும் தேவதைக்கும் வாழ்த்துகள் !

ஜே கே | J K said...

வாழ்த்துகள் வெட்டியண்ணே.

Vijay said...

Great News!! வாழ்த்துக்கள்!!

பாலகுமார் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள், பாலாஜி!
:)

கைப்புள்ள said...

Hearty Congrats to you and your family members Balaji. God bless your little angel.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் பாலாஜி.

இந்தப் பேரெல்லாம் பிடிச்சிருக்கா பாருங்க.

யாமளை, மலர்ச்செல்வி, யோகதா (யோகத்தைத் தருபவள்), மாதங்கி (மீனாட்சியின் பெயர்)

இன்னும் ஏதாவது நினைவுக்கு வந்தா சொல்றேன்.

Anonymous said...

வாழ்த்துக்கள்!

என் பங்குக்கு தேவதைக்கு நானும் ஒரு பெயர் சொல்றேன்.

'பவதாரிணி' - 'பவா'

ஷைலஜா said...

வாழ்த்துகள் பாலாஜீ

mgnithi said...

வாழ்த்துகள் வெட்டி.

Anonymous said...

yazhini,yamini,yamuna. ethukum oruthadavai LALITHA SAHASRA NAMAM .padichi parunga. friend ippdithan parthanga

Poornima Saravana kumar said...

Wav! congrats..
முதல்ல நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்பறேன்..
உங்க ப்ளாக்கால தான் நானும் ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன்.

yaamini
yathra
yoshini
preethu
brindha
parkavi
bavya

Anonymous said...

யோகேஸ்வரி நல்லாயிருக்குமா??
அப்பா ஆனதுக்கு வாழ்த்துகள்

விலெகா said...

வாழ்த்துக்கள் பாலாஜிண்ணா, அண்ணி & குட்டி தேவதை. :-)

ரிப்பீட்டு,
யோகசினி, பாரீமுல்லை,
இப்புடியெல்லாம் தமிழில் பேர் வைக்கவேண்டாம்:---)))

வெண்பூ said...

வாழ்த்துக்கள் வெட்டி, உங்களுக்கும், உங்கள் தங்கமணிக்கும் & புதுவரவு தேவதைக்கும்...

வெண்பூ said...

வெட்டிப்பயல்னு பேர் வெச்சிகிட்டாலும் வெட்டியா இல்லைன்னு ப்ரூஃப் பண்ணிட்டிங்க.. வாழ்த்துக்கள் :)))

நசரேயன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

Divyapriya said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா...

கை வசம் சில பேரு இருக்கு...meanings ஓட பிடிங்க :)

Babita Little girl*
Baruni Goddess Durga
Bhamini Lady*
Bhanuni Charming woman
Bhavana Feeling*
Bhavini Emotional
Bhavna Good Feelings; Emotions
Bhavya Mangnificent
Bhrithi Strengthened; Nourished; Cherished
Bhumika Earth
Bishakha Star

Panchami Goddress Parvathi*
Panini Skilful
Panita Admired
Parinita Complete
Parnika A small leaf; Goddess Parvathi

Yogita A female disciple
Yoshita Women

நாகராஜன் said...

வாழ்த்துக்கள் பாலாஜி.
நீங்கள் கொடுத்த எழுத்துகளில் எனக்கு பிடித்த பெயர்கள் இதோ.
பவித்ரா
பவதாரணி

நிலாக்காலம் said...

வாழ்த்துக்கள்!! :-)

சில பெயர்கள்:
பத்மஜா, பல்லவி, பவித்ரா, பாவை, பிரணதி, பிரகதி, பிரஷாந்தி, பிரதியுஷா, பிரதிமா, பிரவீணா, பிரீதி, பிரியா, பிரியம்வதா, பிரியதர்ஷிணி, பிரியங்கா, பானு, பார்கவி, பாரதி, பாவனா, பிருந்தா, யசோதா, யோகா, யோகிதா, யோகதா, யோகப்பிரியா, யோகப்பிரபா.

இன்னும் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்.

இலவசக்கொத்தனார் said...

மீண்டும் வாழ்த்துகள்! தனிமடல் பாருங்க!

லக்ஷ்மி said...

வாழ்த்துகள் பாலாஜி.

எனக்கு சட்டுனு தோணின சில பெயர்கள்:

1. பானுக்கிரஹி
2. பானுரேகா
3. பாரதி
5. யோஷா

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

யொ(yo),யோ
ithu rendaiyum join pannina...YOYO :))
anna adika varatinga..will find good names

குட்டிபிசாசு said...

தங்களுக்கும் சகோதரிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

பவதாரணி, பாவை, பதுமை, யோகா, பானுமதி...

தென்றல் said...

வாழ்த்துக்கள், பாலாஜி!

Anonymous said...

Congrats...

"Prateeksha"

Anonymous said...

பத்மவாசனி (அ) பத்மவாசினி
:P

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என் தம்பி யாரு?
பாலாஜி!
அவரு உண்டியல்-ல கொட்டோ கொட்டு-ன்னு கொட்ட வேணாமா?

இன்னும் நிறைய அழகிய தமிழ்ப் பெயர்களா (அதுவும் கலைவாணியின்) பெயர்களா கொட்டுங்க மக்கா! :))

கலைவாணியின் பேரை ஆசைப்படறது தங்கச்சி என்பது பின் குறிப்பு! :))

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துக்கள் பாலாஜி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கலைவாணியின் திருத் தமிழ்ப் பெயர்கள்:
பாரதி
யாழினி
பாவினி
பண்மொழி
பாமதி
பண்மதி
பாமுகில்
யாதவி

அன்னையின் இதர மதுர நாமங்கள்:
பத்மஜா
பத்மஸ்ரீ
பார்கவி
பவித்ரா
பல்லவி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ப, பா, பி -க்கு முன் சொன்ன பெயர்கள் பொருந்து விடும்!

யெ,யே,யொ,யோ என்பதற்கு "யா" என்பதும் இன எழுத்து தான்! அதிலும் தேடலாம்! அதான் யாதவி என்றும் சொன்னேன் :)

Unknown said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த‌ வாழ்த்துக்கள்!!

உங்கள் மனமார்ந்த, பொருளுடைய பெயராய் அமைய வாழ்த்துகள்! (long-term view: பெற்றெடுத்தவர் பேச்சைக் கேட்பது நல்லது - ரங்கமணி அட்வைஸ்!)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சரண்யா/பாலாஜி - முன் சொன்ன பெயர்களுக்கான பொருள்:

அன்னையின் திருத் தமிழ்ப் பெயர்கள்:
1. பாரதி = பாக்களின் ரதி என்று அன்னையாகவும் கொள்ளலாம், பாரதி என்று கலைவாணியாகவும் கொள்ளலாம், நம்ம பாரதிக் கவிஞனாகவும் கொள்ளலாம்! :)
2. யாழினி = யாழ் ஏந்தியவள் (மாணிக்க வீணா தாரிணீ)
3. பாவினி = இனிக்கும் பாக்களுக்கு இறைவி.
4. பண்மொழி = பண்மொழி, பண்ணின் நேர் மொழியாள் என்று திருமறைக்காட்டு (வேதாரண்யம்) அம்பாளுக்குப் பெயர். "பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ" என்று பாடித் திருக்கதவம் திறந்தார் சம்பந்தப் பெருமான்.

5. பாமதி = மதி தரும் பாக்களின் நாயகி
6. பண்மதி = மதி தரும் பண்களின் நாயகி
7. பாமுகில் = மேக சந்தேசம் பாட வல்லவள்

8. யாதவி = யாதவர் குலக் கொழுந்தான நப்பின்னைப் பிராட்டி.
யது கிரி நாச்சியார்/யாதவி என்று மேலக்கோட்டை மகாலக்ஷ்மித் தாயாருக்குப் பெயர்.

அன்னையின் இதர மதுர நாமங்கள்:
1. பத்மஜா = தாமரையில் உதித்தவள், மகாலக்ஷ்மி
2. பத்மஸ்ரீ = தாமரைச் செல்வி, மகாலக்ஷ்மி
3. பார்கவி = சரஸ்வதி, பிருகு முனிவரின் புதல்வி (பார்வதி)
4. பவித்ரா = பவித்திரமானவள் / தூய்மையானவள்
5. பல்லவி = ராகமுள்ள பாடலின் துவக்கம்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பா-ன்னு தானே துவங்கணும்?
பா-லாஜி? :)))

"பாவை" என்பது இன்னொரு அழகான தமிழ்ப் பெயர்.
அகிலனின் சித்திரப் பாவை!
கோதையின் திருப்-பாவை!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆங்...
பண்மொழி =
அது சம்பந்தர் தேவாரம் அல்ல!
சம்பந்தர் சொல்ல, அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்னும் சில:

தமிழில்:
1. யாமினி = இரவு்/இரவின் அழகான நிலவு! (யாமம்)
2. பிறைமதி = பிறைச் சந்திரன்; பிறைமதி என்று குறளில் வரும்!
3. பிறைநுதல் = பிறை போன்ற நெற்றி உடையவள்; தலைவிக்கான தமிழிலக்கிய வர்ணனை

இதர:
1. யுவிகா = என்றும் இளமை பொருந்தியவள். பத்மாவதித் தாயார் அர்ச்சனையில் ஒரு நாமம்!
2. பத்மினி = கலைமகள்/அலைமகள் (தாமரையில் இருப்பவள்)
3. பார்த்திவி = அன்னை சீதை
4. பாவனா = புனிதமானவள்
5. பாக்யஸ்ரீ = அதிர்ஷ்டத்-திருச்செல்வி, அலைமகள்
5. பாவ்யா = சிறந்தவள்
6. யோகிதா = யோகம் பொருந்தியவள், யோகிகளால் வணங்கப்படுபவள்

இந்த லிஸ்ட்டு போதலைன்னா, மத்ததெல்லாம் தொலைபேசும் போது :))

பாப்பாவுக்கு முத்தங்கள்! யம்மாடி,
பதிவு போட்டு பேரு வச்ச மகராசன்-ன்னு, உங்கப்பா இனி வரலாற்றில் வழங்கப்படுவார்! :))

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

வெட்டிப்பயல் said...

Thx a lot everyone...

Kavinaya said...

மனமார்ந்த வாழ்த்துகள்!

சகாதேவன் said...

குட்டிப் பாப்பாவுக்கு என் வாழ்த்துக்கள்.
1. பரிமளா (மகாபாரத்தில் வரும் பெயர்- அபிமன்யு மனைவி?)
2. பாகம்பிரியாள் (பார்வதி)
வேறு பெயர் தோன்றினால் சொல்கிறேன்

சகாதேவன்

pudugaithendral said...

CONGRATS

Anonymous said...

you can think your mother's / mother in law's name also for your daughter. Best wishes for new born

வெட்டிப்பயல் said...

Starting to Blore now. Will be there tonight.

திவாண்ணா said...

குழந்தைக்கு ஆசிகள்!

Anonymous said...

Congrats Balaji anna...

Pavithra or Pallavi may be a good choice...

If you have belief in numerology then can consider that as well

Ramanaa

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

Unknown said...

வாழ்த்துக்கள் வெட்டி...

இப்போதைக்கு, தோணின பெயர்:

யோகினி...

கூடிய சீக்கிரம், இன்னும் நிறைய பெயர் சொல்லுறேன்...

வெட்டிப்பயல் said...

Reached Blore Safely.. In Office. I will update my contact number soon.

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துக்கள் பாலாஜி!!!

பேரு வச்சாச்சா??

Anonymous said...

மனம்நிறை வாழ்த்துக்கள்!
எங்கள் மகளுக்கும் இதே எழுத்துக்கள் தான் வந்தது. நிறைய குழப்பத்துக்குப்பின, வேறு எழுத்தில் பெயரிட்டோம் :)
முதல் எழுத்தப்பாக்காம உங்களுக்குப் புடிச்ச பேரா வைங்க சார் !

பரிசீலித்த சில பெயர்கள்:

'யாகவி'
'நிவேதா'
'நிறைமதி'
'மேகா'

'இனி'-ன்னு short and sweet-ஆக கூப்பிட

'இனியா'
'யாழினி'
'நிலவினி'
'மலரினி'
'தமிழினி'
'முகிழினி'
....
....
:)

nagai said...

pashitha

CVR said...

மிக மகிழ்ச்சியான செய்தி!!
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
:)

SurveySan said...

வாழ்த்துக்கள்.

பேரு வச்சாச்சா?

வச்சதும், புகைப்படத்துடன் ஒரு பதிவப் போட்டு, லயன் கிங், லயன் மாதிரி நாட்டுக்கொரு நற்செய்தி சொல்லிடுங்க ;)

Anonymous said...

VaazhthukkaL! Palar kooRiya 'Yazhini' ungaL magaLukku sariyaaga porundhum endRae ninaikkiRaen.

Maelum sila peyargaL:
Preethaa
Priyadevi
Priyasri/Priyasree
Priyamaalini/Priyamalni
Priyamalnidevi
Bindhu
Brindhaadevi

Peyar vaithapin pathivida maRavaatheergal..........