தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, June 25, 2008

சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு

ஏதோ நம்ம தங்கச்சி "டிப்ஸ்" திவ்யா ரேஞ்சுக்கு இல்லைனாலும் நம்ம ரேஞ்சுக்கு கொஞ்சம் சிப்ஸ் ;)

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

வித்யா : என்ன குழப்பம்?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான்

சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.

நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?

நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்...

164 comments:

SathyaPriyan said...

வெட்டி உங்களுக்கு கல்யாணம் ஆகும் போது நீங்க என்னவா இருந்தீங்க?

இப்போ என்னவா இருக்கீங்க?

SathyaPriyan said...

//
அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.
//
இது சூப்பர்.........

உங்க டேமேஜருக்கு தமிழ் தெரியுமா?

வெட்டிப்பயல் said...

சத்யப்பிரியன்,

பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

வெட்டிப்பயல் said...

//இது சூப்பர்.........

உங்க டேமேஜருக்கு தமிழ் தெரியுமா?//

அவருக்கு தமிழ் தெரியும்னு நீங்க நம்பறீங்களா? ;)

Sridhar Narayanan said...

//எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "கல்யாண பரிசு" தங்கவேல் பூரி கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.//

அவ்வ்வ்வ்வ்வ்...... எப்படி இப்படி? :-))

வெட்டிப்பயல் said...

// Sridhar Narayanan said...

//எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "கல்யாண பரிசு" தங்கவேல் பூரி கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.//

அவ்வ்வ்வ்வ்வ்...... எப்படி இப்படி? :-))//

எல்லாம் பார்க்கறது தான் ;)

Arunkumar said...

//
எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும்
//
LOL :) sema galatta pannirkinga...

appo, DBAs OK va ? ;-)

Arunkumar said...

//
அவருக்கு தமிழ் தெரியும்னு நீங்க நம்பறீங்களா? ;)
//

LOL :)

அப்டியே தெரிஞ்சா தான் என்ன ?
கரெக்டா கோழி வாங்கிட்டு வந்து குடுத்துடுவாரா ?
அதே ஆட்டுக்கறி தான் :)

வெட்டிப்பயல் said...

//Arunkumar said...

//
எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும்
//
LOL :) sema galatta pannirkinga...

appo, DBAs OK va ? ;-)//

இதை யாராவது டேமஜர்ஸ் தான்.. சாரி மேனஜர்ஸ் தான் வந்து சொல்லனும் ;)

வெட்டிப்பயல் said...

//Arunkumar said...

//
அவருக்கு தமிழ் தெரியும்னு நீங்க நம்பறீங்களா? ;)
//

LOL :)

அப்டியே தெரிஞ்சா தான் என்ன ?
கரெக்டா கோழி வாங்கிட்டு வந்து குடுத்துடுவாரா ?
அதே ஆட்டுக்கறி தான் :)//

சூப்பர் :-)

சத்தம் போட்டு சிரித்தேன் :-))

இலவசக்கொத்தனார் said...

வெட்டி இதோட தெலுகு வெர்ஷன் ரெடியா? :P

rapp said...

//நம்ம "கல்யாண பரிசு" தங்கவேல் பூரி கதை மாதிரி//

அது அறிவாளி என்ற படங்க. சூப்பர் பதிவு. எப்பங்க அந்த தொடர்கதை வரும்?

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

வெட்டி இதோட தெலுகு வெர்ஷன் ரெடியா? :P//

கொத்ஸ்,
ஏன் இந்த கொலை வெறி??? :-))

உங்களை போன பதிவுக்கு ஆவலோட எதிர்பார்த்தேன்...

தமிழன்-கறுப்பி... said...

//எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "கல்யாண பரிசு" தங்கவேல் பூரி கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.//

சூப்பரு...சரியான கண்ணோட்டம்:))

(ஆமா நீங்க என்ன வேலை பாக்குறிங்க)

SathyaPriyan said...

//
Arunkumar said...
/
அவருக்கு தமிழ் தெரியும்னு நீங்க நம்பறீங்களா? ;)
/

LOL :)

அப்டியே தெரிஞ்சா தான் என்ன ?
கரெக்டா கோழி வாங்கிட்டு வந்து குடுத்துடுவாரா ?
அதே ஆட்டுக்கறி தான் :)
//
தல நீங்க இன்னும் டேமேஜர்ஸ் பத்தி சரியா தெரிஞ்சுக்கலே.

இவ்வளோ நாள் ஆடா வாங்கி கொடுத்தோம் அது காஸ்ட்லி ஆச்சேன்னு மாடு வாங்கி கொடுத்து கோழி பண்ண சொல்லுவாங்க.

Anonymous said...

Excellent post. Enjoyed it very much.

Ramya

வெட்டிப்பயல் said...

// rapp said...

//நம்ம "கல்யாண பரிசு" தங்கவேல் பூரி கதை மாதிரி//

அது அறிவாளி என்ற படங்க. //
ஓ.. நான் எதுக்கும் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தப்பா இருந்தா மாத்திடறேன். நன்றி

//சூப்பர் பதிவு. //
மிக்க நன்றி :-)

//எப்பங்க அந்த தொடர்கதை வரும்?//
அந்த கதை மொத்தமா எழுதி முடிச்சிட்டு தான் போடலாம்னு இருக்கேன். இன்னொரு ப்ரேக் தாங்காது. ஒரு வாரம் தொடர்ந்து தினமும் போடற மாதிரி எழுதி வெச்சிட்டு போடறேன்.

ஞாபகப்படுத்தியதற்கு நன்றி :-)

வெட்டிப்பயல் said...

// தமிழன்... said...

//எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "கல்யாண பரிசு" தங்கவேல் பூரி கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.//

சூப்பரு...சரியான கண்ணோட்டம்:))
//
நன்றி :-)

// (ஆமா நீங்க என்ன வேலை பாக்குறிங்க)//

பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

இராம்/Raam said...

அட்டகாசம் ராசா.... :)))

//இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.//

எலேய்... இது நீயா எழுதினியா??? இல்ல வீட்டிலே இருக்குறவங்க சொன்னதே இங்க டைப் பண்ணி வைச்சிருக்கியா?????? :))

அப்புறம் எல்லாத்துக்கும் மேலே அட்மின்'ன்னு ஒரு இளிச்சவாயி கோஷ்டிக இருக்குமில்ல? அவங்களான்னா ஒன்னும் பிரச்சினை இல்லை'லே?? :)

வெட்டிப்பயல் said...

//தல நீங்க இன்னும் டேமேஜர்ஸ் பத்தி சரியா தெரிஞ்சுக்கலே.

இவ்வளோ நாள் ஆடா வாங்கி கொடுத்தோம் அது காஸ்ட்லி ஆச்சேன்னு மாடு வாங்கி கொடுத்து கோழி பண்ண சொல்லுவாங்க.//

இது உண்மையாலுமே யோசிக்க வேண்டிய விஷயம் தான்...

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

Excellent post. Enjoyed it very much.

Ramya//

Thx Ramya

rapp said...

//ஞாபகப்படுத்தியதற்கு நன்றி //
ஆஹா மறந்து போக இருந்தீங்களா? சீக்கிரம் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எலேய்... இது நீயா எழுதினியா??? இல்ல வீட்டிலே இருக்குறவங்க சொன்னதே இங்க டைப் பண்ணி வைச்சிருக்கியா?????? :))//

ராமு
இதுக்கும் நாமளே பதிலைச் சொல்லிறலாம்!
பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

ஆராய்ஞ்சா உண்மை வெளீல வந்துரும்! :-))

இராம்/Raam said...

//நம்ம "கல்யாண பரிசு" தங்கவேல் பூரி கதை மாதிரி//

அது அறிவாளி என்ற படங்க. //
ஓ.. நான் எதுக்கும் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தப்பா இருந்தா மாத்திடறேன். நன்றி//

அது கல்யாண பரிசு தான்......

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

அட்டகாசம் ராசா.... :)))

//

ரொம்ப நன்றி ராயலண்ணே :-)

//
//இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.//

எலேய்... இது நீயா எழுதினியா??? இல்ல வீட்டிலே இருக்குறவங்க சொன்னதே இங்க டைப் பண்ணி வைச்சிருக்கியா?????? :))
//

இது எல்லாமே நம்ம சொந்த கருத்து தான் ;)

அப்பறம்
பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

//
அப்புறம் எல்லாத்துக்கும் மேலே அட்மின்'ன்னு ஒரு இளிச்சவாயி கோஷ்டிக இருக்குமில்ல? அவங்களான்னா ஒன்னும் பிரச்சினை இல்லை'லே?? :)//
அவுங்களும் இளிச்சவாயி கோஷ்ட்டி தான். ஆனா அவுங்ககிட்ட வேலை வாங்க முடியாது. பழியை வேணும்னா போட்டுடலாம். சாம்பார்ல உப்பு இல்லைனு சொன்னா நீங்க வாங்கிட்டு வந்த உப்பு உப்பு கரிக்கவே இல்லை. தித்திப்பா இருந்துச்சு. அதான் சாம்பார் இப்படி வந்திருக்குனு அவுங்க மேலயே பழியை போட்டுடலாம் ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
வெட்டி இதோட தெலுகு வெர்ஷன் ரெடியா? :P//

அதெல்லாம் தசாவதாரம் ரிலீஸ் பண்ணும் போதே ரிலீஸ் பண்ணியாச்சு கொத்ஸ்! :-)

தெலுங்கு தமிழ்-னு என்ன காமெடி பண்ணிக்கிட்டு?
இது சாப்ட்வேர் பதிவு! ஜாவா வெர்ஷன், பாவா வெர்ஷன்-னு வேணும்னா கேளுங்க! :-)

வெட்டிப்பயல் said...

// rapp said...

//ஞாபகப்படுத்தியதற்கு நன்றி //
ஆஹா மறந்து போக இருந்தீங்களா? சீக்கிரம் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்!//

நான் மறக்கல. மக்கள் ஞாபகம் வெச்சிருக்காங்கனு எனக்கு ஞாபகம் வரவெச்சீங்க...

அதுல நிறைய ட்விஸ்ட் வேற இருக்கு. அதனால மறக்க மாட்டேன் :-)

வெட்டிப்பயல் said...

//ஆராய்ஞ்சா உண்மை வெளீல வந்துரும்! :-))//

இது வரைக்கும் வந்தது எதுவும் உண்மையில்லயே. அதுவுமில்லாம இதை படிச்சவுடனே எல்லாருக்கும் அவுங்க ஞாபகம் தான் வரணும். என் ஞாபகம் வரக்கூடாது ;)

சின்னப் பையன் said...

ஹாஹா.. சூப்பர்... :-))))

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

//நம்ம "கல்யாண பரிசு" தங்கவேல் பூரி கதை மாதிரி//

அது அறிவாளி என்ற படங்க. //
ஓ.. நான் எதுக்கும் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தப்பா இருந்தா மாத்திடறேன். நன்றி//

அது கல்யாண பரிசு தான்......//

அண்ணே,
அது அறிவாளி தானாம்.
கல்யாண பரிசுல மன்னார் அண்ட் கம்பெனி ஜோக் தானாம்.

நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (அதாவது வயசான கோஷ்டில ஒருத்தர்) ;)

இராம்/Raam said...

//ராமு
இதுக்கும் நாமளே பதிலைச் சொல்லிறலாம்!
பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

ஆராய்ஞ்சா உண்மை வெளீல வந்துரும்! :-))/

உண்மை வெளியே வருமா??? இல்லை வீட்டுக்கு போனா, உள்ளே அடிவாங்கிட்டு வெளியே வந்து சவுண்ட்'டை விட்டு ஓடுறமாதிரி ஆகுமா???

அது என்ன கவுண்டர் படம்'ப்பா வெட்டி??? :)))

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
வெட்டி இதோட தெலுகு வெர்ஷன் ரெடியா? :P//

அதெல்லாம் தசாவதாரம் ரிலீஸ் பண்ணும் போதே ரிலீஸ் பண்ணியாச்சு கொத்ஸ்! :-)

தெலுங்கு தமிழ்-னு என்ன காமெடி பண்ணிக்கிட்டு?
இது சாப்ட்வேர் பதிவு! ஜாவா வெர்ஷன், பாவா வெர்ஷன்-னு வேணும்னா கேளுங்க! :-)//

அதெல்லாம் ஜாவா பாவலர் கப்பி நிலவர் வந்து விளக்குவாரு ;)

இராம்/Raam said...

//அவுங்களும் இளிச்சவாயி கோஷ்ட்டி தான். ஆனா அவுங்ககிட்ட வேலை வாங்க முடியாது. பழியை வேணும்னா போட்டுடலாம். சாம்பார்ல உப்பு இல்லைனு சொன்னா நீங்க வாங்கிட்டு வந்த உப்பு உப்பு கரிக்கவே இல்லை. தித்திப்பா இருந்துச்சு. அதான் சாம்பார் இப்படி வந்திருக்குனு அவுங்க மேலயே பழியை போட்டுடலாம் ;)//

ஏன் மேன் பேசமாட்டே???? பூச்சி புடிக்கிறவனுங்களுக்கு எங்களையெல்லாம் பார்த்தா இப்பிடிதான் இருக்கும்....

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...

ஹாஹா.. சூப்பர்... :-))))//

டேங்கிஸ் ச்சின்னப் பையன்

வெட்டிப்பயல் said...

// இராம்/Raam said...

//ராமு
இதுக்கும் நாமளே பதிலைச் சொல்லிறலாம்!
பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

ஆராய்ஞ்சா உண்மை வெளீல வந்துரும்! :-))/

உண்மை வெளியே வருமா??? இல்லை வீட்டுக்கு போனா, உள்ளே அடிவாங்கிட்டு வெளியே வந்து சவுண்ட்'டை விட்டு ஓடுறமாதிரி ஆகுமா???

அது என்ன கவுண்டர் படம்'ப்பா வெட்டி??? :)))//

ரொம்ப முக்கியம்...

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

//அவுங்களும் இளிச்சவாயி கோஷ்ட்டி தான். ஆனா அவுங்ககிட்ட வேலை வாங்க முடியாது. பழியை வேணும்னா போட்டுடலாம். சாம்பார்ல உப்பு இல்லைனு சொன்னா நீங்க வாங்கிட்டு வந்த உப்பு உப்பு கரிக்கவே இல்லை. தித்திப்பா இருந்துச்சு. அதான் சாம்பார் இப்படி வந்திருக்குனு அவுங்க மேலயே பழியை போட்டுடலாம் ;)//

ஏன் மேன் பேசமாட்டே???? பூச்சி புடிக்கிறவனுங்களுக்கு எங்களையெல்லாம் பார்த்தா இப்பிடிதான் இருக்கும்....//

நீங்க இன்னும் என்னை தப்பாவே புரிஞ்சி வெச்சிட்டு இருக்கீங்க. நான் பூச்சி புடிக்கிற கூட்டம் கிடையாது :-)

அதுக்கும் மேல ;)

இராம்/Raam said...

//வெட்டிப்பயல் said...

அதுக்கும் மேல ;)//

அதுக்கு மேலே இருக்கிறது'லே ஆட்டுக்கறி வாங்கி கொடுத்து சிக்கன்- 65 செய்ய சொல்லுற கோஷ்டிக இருக்கு..... அப்போ அவனா நீயி????? :))

மருதநாயகம் said...

//ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு//

இன்னிக்கு வேலைய குடுத்துட்டு அது இன்னும் முடியலையா நேத்தே முடிஞ்சிரும்னு நெனெச்சேன் அப்படிம்பாரு

வெட்டிப்பயல் said...

//அதுக்கு மேலே இருக்கிறது'லே ஆட்டுக்கறி வாங்கி கொடுத்து சிக்கன்- 65 செய்ய சொல்லுற கோஷ்டிக இருக்கு..... அப்போ அவனா நீயி????? :))//

அதுவுமில்லை.. எல்லாமே தப்பு தப்பா சொல்லுங்க. இதுக்கு தான் சொன்னேன்...

பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

இப்ப பாருங்க. பதிவை விட்டுட்டு எல்லாரும் என்னை ஆராய்ச்சி பண்ண வைக்கறீங்க...

வெட்டிப்பயல் said...

// மருதநாயகம் said...

//ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு//

இன்னிக்கு வேலைய குடுத்துட்டு அது இன்னும் முடியலையா நேத்தே முடிஞ்சிரும்னு நெனெச்சேன் அப்படிம்பாரு//

இது சூப்பரு :-)

rapp said...

//உண்மை வெளியே வருமா??? இல்லை வீட்டுக்கு போனா, உள்ளே அடிவாங்கிட்டு வெளியே வந்து சவுண்ட்'டை விட்டு ஓடுறமாதிரி ஆகுமா???அது என்ன கவுண்டர் படம்'ப்பா வெட்டி??? :)))//
ராஜ்கிரண் நடிச்ச 'என் ராசாவின் மனசிலே' என்ற படங்க. நீங்க பொதுவா வெட்டினு போட்டதால வெட்டிஆபிசரான நான் வந்து பதில் சொல்லிட்டேன். மூக்க நுழைச்சதுக்கு மன்னிச்சுக்கங்க

Kavinaya said...

உண்மைகள புட்டு புட்டு வச்சுருக்கீங்க. சூப்பரு! :)

ஆயில்யன் said...

//அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?//

”சொல்றியா?” விட ”சொல்றியா!” போட்டா எதோ எங்களை மாதிரி ஆளுங்களும் கொஞ்சம் சந்தோஷப்படுவோம்ல :)))

ஆயில்யன் said...

//
இராம்/Raam said...
அப்புறம் எல்லாத்துக்கும் மேலே அட்மின்'ன்னு ஒரு இளிச்சவாயி கோஷ்டிக இருக்குமில்ல? அவங்களான்னா ஒன்னும் பிரச்சினை இல்லை'லே?? :)//

என்னா ஆர்வம் பாருங்களேன் ???

:))))))))

கப்பி | Kappi said...

:)))))

வெட்டிப்பயல் said...

//rapp said...

//உண்மை வெளியே வருமா??? இல்லை வீட்டுக்கு போனா, உள்ளே அடிவாங்கிட்டு வெளியே வந்து சவுண்ட்'டை விட்டு ஓடுறமாதிரி ஆகுமா???அது என்ன கவுண்டர் படம்'ப்பா வெட்டி??? :)))//
ராஜ்கிரண் நடிச்ச 'என் ராசாவின் மனசிலே' என்ற படங்க. நீங்க பொதுவா வெட்டினு போட்டதால வெட்டிஆபிசரான நான் வந்து பதில் சொல்லிட்டேன். மூக்க நுழைச்சதுக்கு மன்னிச்சுக்கங்க//

அந்த வீடியோவை நிறைய தடவை பார்த்திருக்கேன். படம் ஞாபகமில்லை.. பெரிய டேட்டா பேஸா இருப்பீங்க போல ;)

வெட்டிப்பயல் said...

//கவிநயா said...

உண்மைகள புட்டு புட்டு வச்சுருக்கீங்க. சூப்பரு! :)//

ரொம்ப நன்றி :-)
ஆனா இதுல இருக்கறது எல்லாமே உண்மையில்லை :-)

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...

//அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?//

”சொல்றியா?” விட ”சொல்றியா!” போட்டா எதோ எங்களை மாதிரி ஆளுங்களும் கொஞ்சம் சந்தோஷப்படுவோம்ல :)))//

இப்ப "?" இருக்கறது கொஞ்ச நாள்ல "!" ஆகிடும்னு நினைக்கிறேன் ;)

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...

//
இராம்/Raam said...
அப்புறம் எல்லாத்துக்கும் மேலே அட்மின்'ன்னு ஒரு இளிச்சவாயி கோஷ்டிக இருக்குமில்ல? அவங்களான்னா ஒன்னும் பிரச்சினை இல்லை'லே?? :)//

என்னா ஆர்வம் பாருங்களேன் ???

:))))))))//

ஆஹா.. இது புரியாம நான் வேற தப்பா சொல்லிட்டனே :-( ;)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

:)))))//

:)

rapp said...

என் ப்ளாக் பேரப் பார்த்தாலே தெரியலயாங்க(வெட்டி ஆபிசர்), வேறன்ன வேலை. இப்படி பொது அறிவு வளர்த்துக்கறதுதான்.

தமிழன்-கறுப்பி... said...

51 test

NewBee said...

//சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...என்னதிது?....

:)))) சரி! நல்லவுங்கன்னு தானே சொல்லியிருக்கீங்க...போகட்டும்.

ஆமா! இத உங்க டேமேஜர்கிட்ட காட்டினீங்களா? :)

NewBee said...

நல்லா எழுதியிருக்கீங்க :))..இன்னுமும் என் ஸ்மைல் மறையல...:)))

Kavinaya said...

//ஆனா இதுல இருக்கறது எல்லாமே உண்மையில்லை :-) //

இது வேறயா... போச்சுடா! எதுங்க உண்மை(யில்ல)?

Selva Kumar said...

முக்கியமான ஆள விட்டுடீங்க!!!
BENCH !!!!
எந்த பிரச்சனயும் இல்ல!!!

College Student with Salary மாதிரி !!

வெட்டிப்பயல் said...

//rapp said...

என் ப்ளாக் பேரப் பார்த்தாலே தெரியலயாங்க(வெட்டி ஆபிசர்), வேறன்ன வேலை. இப்படி பொது அறிவு வளர்த்துக்கறதுதான்.//

அப்ப நம்ம கூட்டத்தை சேர்ந்தவரா நீங்க? சூப்பர்...

Boston Bala said...

சூப்பர்!!! back to form :)

வெட்டிப்பயல் said...

//தமிழன்... said...

51 test//

Pass :-)

வெட்டிப்பயல் said...

//NewBee said...

//சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...என்னதிது?....

:)))) சரி! நல்லவுங்கன்னு தானே சொல்லியிருக்கீங்க...போகட்டும்.

ஆமா! இத உங்க டேமேஜர்கிட்ட காட்டினீங்களா? :)//

பின்னூட்டம் படிக்கிற பழக்கமெல்லாம் இல்லையா? ;)

வெட்டிப்பயல் said...

//NewBee said...

நல்லா எழுதியிருக்கீங்க :))..இன்னுமும் என் ஸ்மைல் மறையல...:)))//

மிக்க நன்றி :-)

வெட்டிப்பயல் said...

//கவிநயா said...

//ஆனா இதுல இருக்கறது எல்லாமே உண்மையில்லை :-) //

இது வேறயா... போச்சுடா! எதுங்க உண்மை(யில்ல)?//

என்னங்க இப்படி கேக்கறீங்க?

வீட்டுல இப்படி எல்லாம் பேசினா என்ன ஆகும்னு தெரியாத என்ன?

ஆம்ப்லேட் கேட்டதுக்கே கத்தி குத்துனு குசும்பன் பதிவுல படிக்கலையா?

சதங்கா (Sathanga) said...

வெட்டி,

பேக் டூ த ஃபார்ம்னு பாலா சொல்றாரு. அப்ப ஃபார்மல இல்லையா இவ்வளவு நாளு ? :))))

குமரன் (Kumaran) said...

மேனேஜர், டெவலப்பர் - ரெண்டுக்கும் சொன்னதை இரசிச்சுச் சிரிச்சேன் பாலாஜி. மேனேஜரைப் பத்தி சொன்னது தான் இருக்குறதுலேயே அருமை. மினியாபொலிஸ் வந்து என் குழுவுல சேர்ந்துக்கோங்க. நான் ஆட்டுக்கறியெல்லாம் குடுக்காமலேயே சிக்கன் 65 கேப்பேன். :-) சும்மா. பத்து நாள் வேலையை இருபது நாள்ல செஞ்சிக் குடுத்தா போதும்ன்னு சொல்வேன். :-) இதுவும் சும்மா. :-)
உங்க டேமேஜருக்குத் தமிழ் தெரியும்ல. இல்லை இப்ப ஆளு மாறியாச்சா?

Sathiya said...

//இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு.//
அப்போ நீங்களும் இப்படிதானா பாலாஜி? நானும் இந்த குறை கண்டுபிடிக்கறதுல கொஞ்சம் அனுபவிச்சிருக்கேன். அப்புறம் அவங்க உங்களை நோண்டி நோண்டி குறையை கேட்டாலும், அதை மட்டும் சொல்லவே கூடாதுன்னு புரிஞ்சிகிட்டேன்.

Subbiah Veerappan said...

////இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்////

உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட துறை என்பதால் பதிவை சூப்பராகவே எழுதி்யுள்ளீர்கள் பாலாஜி!

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்ய்யோ.....

சூப்பர்.

எங்க காலத்துலே இப்படி ஒரு சாய்ஸ்
இல்லாமப் போச்சே....

வெங்க்கி said...

என் மனைவி யின் சொந்தக்கார பெண் ஒன்று சாப்ட்வேர் துறையில் சென்னையில் வேலை பார்க்கிறார்.. அவருக்கு மாப்பிள்ளை பார்த்து இருவரயும் தனிமையில் சந்திக்க ஏற்பாடு செய்தனர்..அதில் அந்த பெண் "மாப்பிள்ளையிடம்" தனக்கு பெங்களூர் ல் வேலை கிடைத்து இருப்பதாகவும், சென்னையை விட 3000 ரூ கூட, தான் அங்கே போக முடிவெடுத்ததாகவும் சொன்னார்.. இதைக்கேட்ட மாப்பிள்ளை, நீ அங்கே பொய் விட்டால், நான் சென்னையில் இருந்து என்ன செய்வது.. எனவே எப்படி என்ற கேட்டாராம்.. அதற்க்கு அந்த பெண்..வெள்ளி கிழமை நாடு இரவு பஸ் பிடித்து சென்னை வந்து விடுவேன் என்று கூற.. அந்த மாப்பிள்ளை, பெங்களூர் சாப்ட்வேர் கும்பல் நடவடிக்கைகள் எனக்கு நன்றாகவே தெரியும்.. நீ சென்னையில் பணிபுரிவதானால் ஓகே இல்லைஎன்றால் சாரி என்று கூறிவிட்டு சென்றாராம்..

அது என்ன "பெங்களூர் சாப்ட்வேர் கும்பல் நடவடிக்கைகள்" ???

உங்களுக்கு தெரியுமா ??

MyFriend said...

ரொம்ப நாள் கழிச்சு உங்க ஸ்டைலில் உங்க நகைச்சுவை துணுக்கு. சூப்பர்ண்ணே. :-)

ஆக, எல்லாரும் டெவெலப்பரை தேடலாம்ன்னு சொல்றீங்க? :-))))

Sen22 said...

இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா...

ஆயில்யன் said...

//:: மை ஃபிரண்ட் ::. said...

ரொம்ப நாள் கழிச்சு உங்க ஸ்டைலில் உங்க நகைச்சுவை துணுக்கு. சூப்பர்ண்ணே. :-)

ஆக, எல்லாரும் டெவெலப்பரை தேடலாம்ன்னு சொல்றீங்க? :-))))//

பரவாயில்ல உங்க அட்வைஸ மைஃப்ரெண்டு கப்புன்னு புடிச்சிக்கிட்டாங்களே!

வெட்டிப்பயல் said...

//ஒரு வழிப்போக்கன் said...

முக்கியமான ஆள விட்டுடீங்க!!!
BENCH !!!!
எந்த பிரச்சனயும் இல்ல!!!

College Student with Salary மாதிரி !!//

நான் பெஞ்ச்ல இருக்கேனு எந்த அறிவாளியும் பொண்ணு தேட மாட்டான் வழிப்போக்கன்.

ஆனா அப்படி ஆள் கிடைச்சா கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் (நிச்சயத்துக்கு அப்பறம்) நல்லா கடலை போடலாம் ;)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

சூப்பர்!!! back to form :)//

நன்றி பாபா...
ஆனா போன பதிவை பார்த்துட்டே நிறைய பேர் சொல்லிட்டாங்க. பெருசா இருந்ததால நீங்க படிச்சிருக்க மாட்டீங்கனு தெரியும் ;)

வெட்டிப்பயல் said...

//சதங்கா (Sathanga) said...

வெட்டி,

பேக் டூ த ஃபார்ம்னு பாலா சொல்றாரு. அப்ப ஃபார்மல இல்லையா இவ்வளவு நாளு ? :))))//

நீங்க ரொம்ப நாளா என் ப்ளாக் படிக்கலனு நினைக்கிறேன். ஒரு வருஷமா ஃபார்ம்ல இல்லை ;)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

மேனேஜர், டெவலப்பர் - ரெண்டுக்கும் சொன்னதை இரசிச்சுச் சிரிச்சேன் பாலாஜி. மேனேஜரைப் பத்தி சொன்னது தான் இருக்குறதுலேயே அருமை. மினியாபொலிஸ் வந்து என் குழுவுல சேர்ந்துக்கோங்க. நான் ஆட்டுக்கறியெல்லாம் குடுக்காமலேயே சிக்கன் 65 கேப்பேன். :-) சும்மா. பத்து நாள் வேலையை இருபது நாள்ல செஞ்சிக் குடுத்தா போதும்ன்னு சொல்வேன். :-) இதுவும் சும்மா. :-)//

நீங்க ரெண்டு பொசிஷன்லயும் இருந்ததால ரசிக்க முடியுது. நான் அப்படியே உங்களுக்கு ஆப்போசிட் ;)
(ராயலண்ணே! இது தான் உங்களுக்கு க்ளூ)

//
உங்க டேமேஜருக்குத் தமிழ் தெரியும்ல. இல்லை இப்ப ஆளு மாறியாச்சா?//
அவர் எப்பவுமே எனக்கு மேனஜரா இருந்ததில்லை ;)

வெட்டிப்பயல் said...

// Sathiya said...

//இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு.//
அப்போ நீங்களும் இப்படிதானா பாலாஜி?//
நான் பேசிக்கலா சாப்பாடு நல்லா இருந்தா ரசிச்சி சாப்பிட்டு பாராட்டுவேன். ஆனா கொஞ்சம் குறை இருந்தாலும் கண்டிபிடிச்சி சொல்லிடுவேன்.

இங்க வீட்ல முதல் தடவை வெஜ் பிரியாணி செய்யும் போது கொஞ்சம் சீரகம் அதிகமா போட்டுட்டாங்க. அதை முதல் வாய் சாப்பிட்டவுடனே சொல்லிட்டேன். அச(பய)ந்துட்டாங்க ;)

//நானும் இந்த குறை கண்டுபிடிக்கறதுல கொஞ்சம் அனுபவிச்சிருக்கேன். அப்புறம் அவங்க உங்களை நோண்டி நோண்டி குறையை கேட்டாலும், அதை மட்டும் சொல்லவே கூடாதுன்னு புரிஞ்சிகிட்டேன்.//
நான் மாற இன்னும் கொஞ்ச நாள் ஆகும்னு நினைக்கிறேன் ;)

வெட்டிப்பயல் said...

// SP.VR. SUBBIAH said...

////இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்////

உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட துறை என்பதால் பதிவை சூப்பராகவே எழுதி்யுள்ளீர்கள் பாலாஜி!//

மிக்க நன்றி ஆசிரியரே...

வெட்டிப்பயல் said...

//துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்ய்யோ.....

சூப்பர்.

எங்க காலத்துலே இப்படி ஒரு சாய்ஸ்
இல்லாமப் போச்சே....//

டீச்சர்,
பசங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியலயா???

வெட்டிப்பயல் said...

//கீ - வென் said...

என் மனைவி யின் சொந்தக்கார பெண் ஒன்று சாப்ட்வேர் துறையில் சென்னையில் வேலை பார்க்கிறார்.. அவருக்கு மாப்பிள்ளை பார்த்து இருவரயும் தனிமையில் சந்திக்க ஏற்பாடு செய்தனர்..அதில் அந்த பெண் "மாப்பிள்ளையிடம்" தனக்கு பெங்களூர் ல் வேலை கிடைத்து இருப்பதாகவும், சென்னையை விட 3000 ரூ கூட, தான் அங்கே போக முடிவெடுத்ததாகவும் சொன்னார்.. இதைக்கேட்ட மாப்பிள்ளை, நீ அங்கே பொய் விட்டால், நான் சென்னையில் இருந்து என்ன செய்வது.. எனவே எப்படி என்ற கேட்டாராம்.. அதற்க்கு அந்த பெண்..வெள்ளி கிழமை நாடு இரவு பஸ் பிடித்து சென்னை வந்து விடுவேன் என்று கூற.. அந்த மாப்பிள்ளை, பெங்களூர் சாப்ட்வேர் கும்பல் நடவடிக்கைகள் எனக்கு நன்றாகவே தெரியும்.. நீ சென்னையில் பணிபுரிவதானால் ஓகே இல்லைஎன்றால் சாரி என்று கூறிவிட்டு சென்றாராம்..
//

கீ-வென்,
3000 சம்பளத்துக்காக தனி தனி வாழ்க்கை... சீக்கிரம் வெறுத்துவிடும்.

//
அது என்ன "பெங்களூர் சாப்ட்வேர் கும்பல் நடவடிக்கைகள்" ???

உங்களுக்கு தெரியுமா ??//

அப்படி எல்லாம் எதுவும் இருக்கற மாதிரி தெரியல. எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் :-)

லைஃப் ஸ்டைல் ஒரே மாதிரி தான் இருக்கும். வேலை செய்யற கம்பெனியை பொறுத்து சில சமயம் மாறுபடும்.

வெட்டிப்பயல் said...

//:: மை ஃபிரண்ட் ::. said...

ரொம்ப நாள் கழிச்சு உங்க ஸ்டைலில் உங்க நகைச்சுவை துணுக்கு. சூப்பர்ண்ணே. :-)
//
ரொம்ப நன்றி தங்கச்சி :-)

//
ஆக, எல்லாரும் டெவெலப்பரை தேடலாம்ன்னு சொல்றீங்க? :-))))//

நான் சொல்லி தான் உனக்கு தெரியனுமா என்ன்??

வெட்டிப்பயல் said...

// Sen22 said...

இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா...//

இன்னும் கூட இருக்கு ;)

சரவணகுமரன் said...

சூப்பர்... வெட்டிப்பயல்...

ஏன் Marketing, HR எல்லாம் விட்டுடீங்க?

தமிழினி..... said...

DM,GPM எல்லா விட்டுடிங்களே...
--ஒரு பாவப்பட்ட சாப்ட்வேர் developer.

Yogi said...

:))))))

ஜே கே | J K said...

கலக்கிபுட்டீங்க....

gils said...

avvvvvvvv....annatha phirstu time here..thru g3...pinni pedaladichirukeenga..enaku damager parta vida tester part pudichirunthichi :D annachi.apdiye intha maintanence pasanga..support makkal ivangalukum epdi amaiyumnu potrunga :D kozhiyur narayan kanaka porutham podreenga..soooperrrrapu

//po, DBAs OK va ? ;-)//
halo saga..ummaiyum nambi oruthanga ponna kudathapramum intha kili sosiyam kostin thevaya :D

Ramya Ramani said...

ஆஹா டெவலப்பர் வாழ்க்கைய்ய படம் புடிச்சு காட்டீங்களே வெட்டி! ஜூப்பரு

Ramya Ramani said...

\\ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. \\

டாமேஜர பத்தி சூப்பர் காமென்ட் :) வாழ்க வெட்டி அண்ணே!

\\இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு.\\

தப்பு கண்டுபிடிச்சிட்டு சந்தோஷமா கொண்டாடுவாரே!! ;)

அக்கவுண்டு மானேஜர்,டெலிவெரி மானேஜர் எல்லாம் எப்படி?? No Commentsah !!

FunScribbler said...

நல்லா இருக்கு பதிவு! எங்களுக்கு ரேம்ம்ம்பபப usefulலா இருந்துச்சு:)

#BMN said...

வெட்டி, Testers மேல இப்படி ஒரு அபிப்பிராயம் வெச்சிருகீங்களே... இது நியாயமா?...இதை Testers சமூகத்திலிருந்து வன்மையா கண்டிக்கிறேன்.

Sathiya said...

//ஆக, எல்லாரும் டெவெலப்பரை தேடலாம்ன்னு சொல்றீங்க? :-))))//

ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கணும். இந்த மேனேஜர், டெஸ்ட் இஞ்சினியர் எல்லாம் ஆறு மணி ஆச்சுன்னா வீட்டுக்கு வந்துடுவாங்க (சில பேரை தவிர்த்து). ஆனால் இந்த டெவலப்பர்ஸ் எப்பொழுதும் லேட்டா தான் வருவாங்க(இதுவும் சில பேரை தவிர்த்து).

puduvaisiva said...

"நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்."
very funny!!

:-)))))))))))))

puduvai siva

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...

சூப்பர்... வெட்டிப்பயல்...

ஏன் Marketing, HR எல்லாம் விட்டுடீங்க?//

அதிகம் பரிட்சையம் இல்லாததால. அதுவுமில்லாம இவுங்களை எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்னு சொல்றதில்லை ;)

வெட்டிப்பயல் said...

//தமிழினி..... said...

DM,GPM எல்லா விட்டுடிங்களே...
--ஒரு பாவப்பட்ட சாப்ட்வேர் developer.//

அந்த பொசிஷன் போயும் கல்யாணம் ஆகலைனா அவுங்க ரொம்ப பாவம் :(

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

you gotta do this
http://surveysan.blogspot.com/2008/06/blog-post_25.html//

சீக்கிரம் வரேன் சர்வேசன். மொதல்ல வெட்டி ஸ்டைல் பதிவுகள் கொஞ்சம் போட்டுட்டு வரேன். அப்ப தான் ப்ளாக் எழுதற ஆசை எனக்கே இருக்கும்...

வெட்டிப்பயல் said...

//பொன்வண்டு said...

:))))))//

நன்றி பொன்வண்டு :-)

வெட்டிப்பயல் said...

//ஜே கே | J K said...

கலக்கிபுட்டீங்க....//

மிக்க நன்றி :-)

வெட்டிப்பயல் said...

//gils said...

avvvvvvvv....annatha phirstu time here..thru g3...pinni pedaladichirukeenga..enaku damager parta vida tester part pudichirunthichi :D annachi.apdiye intha maintanence pasanga..support makkal ivangalukum epdi amaiyumnu potrunga :D kozhiyur narayan kanaka porutham podreenga..soooperrrrapu
//
முதல் வருகைக்கு நன்றி.. அப்படியே நம்மல பத்தி சொன்ன G3 அக்காவுக்கும் நன்றி ;)

மெயிண்டனன்ஸ், சப்போர்ட் மக்கள் பத்தியும் சொல்லலாம்னு தான் பார்த்தேன். ஆனா மெயிண்டனன்ஸ்ல இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பொலம்பறதை கேட்டிருக்கேன். அவுங்களை இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான் விட்டுட்டேன். மொத்தத்துல ரொம்ப பாவப்பட்டவங்க ;)

// //po, DBAs OK va ? ;-)//
halo saga..ummaiyum nambi oruthanga ponna kudathapramum intha kili sosiyam kostin thevaya :D//
ஆஹா.. இது நமக்கு தெரியாம போயிடுச்சே :-)

மங்களூர் சிவா said...

ஹா ஹா பாலாஜி செம ஃபார்ம்-க்கு வந்துட்டீங்க !!

செம கலக்கல்!!

மங்களூர் சிவா said...

/
SathyaPriyan said...

வெட்டி உங்களுக்கு கல்யாணம் ஆகும் போது நீங்க என்னவா இருந்தீங்க?

இப்போ என்னவா இருக்கீங்க?
/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

மங்களூர் சிவா said...

/
SathyaPriyan said...

//
அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.
//
இது சூப்பர்.........

உங்க டேமேஜருக்கு தமிழ் தெரியுமா?
/

ரிப்பீட்டேேஏஏஏஏஏய்

மங்களூர் சிவா said...

/
இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

/

ஏறக்குறைய எல்லா ஆம்பளைங்களும் இந்த கேட்டகிரில வருவாங்கன்னு நினைக்கிறேன்!!

:)))))))))))))

மங்களூர் சிவா said...

/
டெஸ்ட் இஞ்சினியராம்.

து அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும்.
/

:)

/
அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.
/

ஹா ஹா கொளுத்திட்டீங்க!!

வெட்டிப்பயல் said...

//Ramya Ramani said...

ஆஹா டெவலப்பர் வாழ்க்கைய்ய படம் புடிச்சு காட்டீங்களே வெட்டி! ஜூப்பரு//

ரொம்ப நன்றி ரம்யா...
ஆனா நான் டெவலப்பர் இல்லை ;)

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

\\ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. \\

டாமேஜர பத்தி சூப்பர் காமென்ட் :) வாழ்க வெட்டி அண்ணே!

//

நொம்ப நன்றி தங்கச்சி :-)

// \\இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு.\\

தப்பு கண்டுபிடிச்சிட்டு சந்தோஷமா கொண்டாடுவாரே!! ;)
//
அதானே வேலையே ;)
ஆனா வீட்ல அதை செஞ்சா பூரி கட்டை பறக்கும் ;)

//
அக்கவுண்டு மானேஜர்,டெலிவெரி மானேஜர் எல்லாம் எப்படி?? No Commentsah !!//

அந்த வயசாகியும் கல்யாணமாகலைனா ரொம்ப பாவம் :(

வெட்டிப்பயல் said...

//Thamizhmaangani said...

நல்லா இருக்கு பதிவு! எங்களுக்கு ரேம்ம்ம்பபப usefulலா இருந்துச்சு:)//

அதுக்கு தானே பதிவே போட்டிருக்கோம் ;)

ஆனா எல்லா சாப்ட்வேர் இஞ்சினியரும் கல்யாணத்துக்கு அப்பறம் டெவலப்பர் கேட்டகிரி தான் ;)

மங்களூர் சிவா said...

/
டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.
/

மாப்பு வெச்சிட்டியேய்யா ஆப்பு!!!!!

:)))))))))

முக்கிய அறிவிப்பு நான் சாப்ட்வேர் இல்லிங்கோ!!

வெட்டிப்பயல் said...

//மித்ரா குட்டி said...

வெட்டி, Testers மேல இப்படி ஒரு அபிப்பிராயம் வெச்சிருகீங்களே... இது நியாயமா?...இதை Testers சமூகத்திலிருந்து வன்மையா கண்டிக்கிறேன்.//

மித்ரா குட்டி,
டெஸ்டர்ஸ் மேல எனக்கு இருக்கற அபிப்பிராயம் இல்லை. டெவலப்பர்ஸ்க்கு இருக்கற அபிப்பிராயம். நான் முதல் ரெண்டு வருஷம் Functional Testingla தான் இருந்தேன் ;)

அப்பறம், ஆம்பளைங்களுக்கு எல்லாம் டெஸ்டிங்கு ட்ரெயினிங் கொடுக்கனும். ஆனா பொம்பளைங்க எல்லாம் பர்த்லயே டெஸ்டர்ஸ் தான் ;)

மங்களூர் சிவா said...

/
இராம்/Raam said...

எலேய்... இது நீயா எழுதினியா??? இல்ல வீட்டிலே இருக்குறவங்க சொன்னதே இங்க டைப் பண்ணி வைச்சிருக்கியா?????? :))

/

ரிப்பீட்டேய்

/
அப்புறம் எல்லாத்துக்கும் மேலே அட்மின்'ன்னு ஒரு இளிச்சவாயி கோஷ்டிக இருக்குமில்ல? அவங்களான்னா ஒன்னும் பிரச்சினை இல்லை'லே?? :)
/

இவரு எதுக்கு இங்க சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிறாரு!?!?!?

:)))))))))))

மங்களூர் சிவா said...

//எலேய்... இது நீயா எழுதினியா??? இல்ல வீட்டிலே இருக்குறவங்க சொன்னதே இங்க டைப் பண்ணி வைச்சிருக்கியா?????? :))//

ராமு
இதுக்கும் நாமளே பதிலைச் சொல்லிறலாம்!
பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

ஆராய்ஞ்சா உண்மை வெளீல வந்துரும்! :-))

மங்களூர் சிவா said...

/
நீங்க இன்னும் என்னை தப்பாவே புரிஞ்சி வெச்சிட்டு இருக்கீங்க. நான் பூச்சி புடிக்கிற கூட்டம் கிடையாது :-)

அதுக்கும் மேல ;)//

அதுக்கு மேலே இருக்கிறது'லே ஆட்டுக்கறி வாங்கி கொடுத்து சிக்கன்- 65 செய்ய சொல்லுற கோஷ்டிக இருக்கு..... அப்போ அவனா நீயி????? :))
/

:))))

வெட்டிப்பயல் said...

//Sathiya said...

//ஆக, எல்லாரும் டெவெலப்பரை தேடலாம்ன்னு சொல்றீங்க? :-))))//

ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கணும். இந்த மேனேஜர், டெஸ்ட் இஞ்சினியர் எல்லாம் ஆறு மணி ஆச்சுன்னா வீட்டுக்கு வந்துடுவாங்க (சில பேரை தவிர்த்து). ஆனால் இந்த டெவலப்பர்ஸ் எப்பொழுதும் லேட்டா தான் வருவாங்க(இதுவும் சில பேரை தவிர்த்து).//

அண்ணே,
நீங்க எந்த நாட்ல சொல்றீங்க? டெஸ்டர்ஸ்க்கு இருக்கற பிரச்சனை தான் இருக்கறதுலயே அதிகம்.

ஏதாவது Bug இருக்குனு சொன்னா உடனே இது டெவலப்மெண்ட் என்விரான்மெண்ட்ல வேலை செய்யுது உங்க டேட்டால தான் தப்புனு சொல்லுவானுங்க. அதை நிருபிக்கறதுக்குள்ள உயிரே போயிடும். சிஸ்டம் டெஸ்டிங் பண்ணும் போது உயிரே போயிடும். அதை விட Data Preparation...

அனுபவிச்சா தான் தெரியும் டெஸ்டர்ஸ் கஷ்டத்தை :-(

மங்களூர் சிவா said...

/
ஆயில்யன் said...

//:: மை ஃபிரண்ட் ::. said...

ரொம்ப நாள் கழிச்சு உங்க ஸ்டைலில் உங்க நகைச்சுவை துணுக்கு. சூப்பர்ண்ணே. :-)

ஆக, எல்லாரும் டெவெலப்பரை தேடலாம்ன்னு சொல்றீங்க? :-))))//

பரவாயில்ல உங்க அட்வைஸ மைஃப்ரெண்டு கப்புன்னு புடிச்சிக்கிட்டாங்களே!
/

ரிப்பீட்டு

ஆயிலு கலக்கற!!

மங்களூர் சிவா said...

/

நான் பெஞ்ச்ல இருக்கேனு எந்த அறிவாளியும் பொண்ணு தேட மாட்டான் வழிப்போக்கன்.

ஆனா அப்படி ஆள் கிடைச்சா கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் (நிச்சயத்துக்கு அப்பறம்) நல்லா கடலை போடலாம் ;)
/

அப்பிடி ஒரு கும்பல் நமக்கு ப்ரெண்டா இருக்காங்க/ளுவ!!

:)))))))

வெட்டிப்பயல் said...

//siva said...

"நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்."
very funny!!

:-)))))))))))))

puduvai siva//

அவுங்க நிலைமை உங்களுக்கு Funnyயா இருக்கு? யாராவது சந்தோஷப்பட்டா சரி தான் ;)

வெட்டிப்பயல் said...

//உண்மை said...

super.//

மிக்க நன்றி உண்மை :-)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

ஹா ஹா பாலாஜி செம ஃபார்ம்-க்கு வந்துட்டீங்க !!

செம கலக்கல்!!//

மிக்க நன்றி சிவா...

எத்தனை நாளைக்கு தான் அவுட் ஆஃப் பார்ம்லயே இருக்கறது. போர் அடிக்குது :-)

வெட்டிப்பயல் said...

// மங்களூர் சிவா said...

/
SathyaPriyan said...

வெட்டி உங்களுக்கு கல்யாணம் ஆகும் போது நீங்க என்னவா இருந்தீங்க?

இப்போ என்னவா இருக்கீங்க?
/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்//

அதே பதில்

பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

வெட்டிப்பயல் said...

//ஏறக்குறைய எல்லா ஆம்பளைங்களும் இந்த கேட்டகிரில வருவாங்கன்னு நினைக்கிறேன்!!

:)))))))))))))//

தப்பா புரிஞ்சிருக்கியே சிவா...

பசங்க எல்லாம் பாவம். டெவலப்பர் கேட்டகிரி. பொண்ணுங்க தான் பர்த்லயே டெஸ்டர்ஸ் ;)

வெட்டிப்பயல் said...

//அதுக்கு மேலே இருக்கிறது'லே ஆட்டுக்கறி வாங்கி கொடுத்து சிக்கன்- 65 செய்ய சொல்லுற கோஷ்டிக இருக்கு..... அப்போ அவனா நீயி????? :))
/

:))))//

நான் அவன் இல்லை :-)

வெட்டிப்பயல் said...

// மங்களூர் சிவா said...

/

நான் பெஞ்ச்ல இருக்கேனு எந்த அறிவாளியும் பொண்ணு தேட மாட்டான் வழிப்போக்கன்.

ஆனா அப்படி ஆள் கிடைச்சா கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் (நிச்சயத்துக்கு அப்பறம்) நல்லா கடலை போடலாம் ;)
/

அப்பிடி ஒரு கும்பல் நமக்கு ப்ரெண்டா இருக்காங்க/ளுவ!!

:)))))))//

நீ எழுதற கவிதை எல்லாம் பார்த்தாலே தெரியுது ;)

Anonymous said...

Good boss..keep it up

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

Good boss..keep it up//

Thank you boss :-)

Divya said...

அண்ணா......கல்க்கல்ஸ் போஸ்ட்:)))

Divya said...

\\ஏதோ நம்ம தங்கச்சி "டிப்ஸ்" திவ்யா ரேஞ்சுக்கு இல்லைனாலும் நம்ம ரேஞ்சுக்கு கொஞ்சம் சிப்ஸ் ;)\\

குருவை மிஞ்சும் சிஷ்யை நானில்லீங்கோ:))

எப்பவுமே நீங்க தான் அண்ணா 'டாப்பு' !!

Divya said...

\\எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.\\

இப்படியெல்லாம் உண்மைய ஒத்துக்கவும் ஒரு 'கெத்து' வேணும் அண்ணே:))

Divya said...

Happy to see you back to form.......FULL form:))

Rock on Anna!!!

G.Ragavan said...

சூப்பர் பதிவு பாலாஜி. செம கலக்கல். போட்டுத் தாக்கியிருக்க...

// //
உங்க டேமேஜருக்குத் தமிழ் தெரியும்ல. இல்லை இப்ப ஆளு மாறியாச்சா?//
அவர் எப்பவுமே எனக்கு மேனஜரா இருந்ததில்லை ;) //

அவரு தப்பிச்சுட்டாரேன்னு வருத்தப்படுறதா! நீ மாட்டிக்கலையேன்னு சந்தோஷப்படுறதா! :D

வெட்டிப்பயல் said...

// Divya said...

அண்ணா......கல்க்கல்ஸ் போஸ்ட்:)))//

நொம்ப டேங்ஸ் தங்கச்சி :-)

வெட்டிப்பயல் said...

//Divya said...

\\ஏதோ நம்ம தங்கச்சி "டிப்ஸ்" திவ்யா ரேஞ்சுக்கு இல்லைனாலும் நம்ம ரேஞ்சுக்கு கொஞ்சம் சிப்ஸ் ;)\\

குருவை மிஞ்சும் சிஷ்யை நானில்லீங்கோ:))

எப்பவுமே நீங்க தான் அண்ணா 'டாப்பு' !!//

நீ வேணா இப்படி பெருந்தன்மையா சொல்லலாம்மா.. ஆனா டிப்ஸ்னா தமிழ்மணத்துல திவ்யா தான் :-)

அதை யாராலயும் மாத்த முடியாது.

இது சும்மா காமெடி போஸ்ட் தானே :-)

வெட்டிப்பயல் said...

//Divya said...

\\எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.\\

இப்படியெல்லாம் உண்மைய ஒத்துக்கவும் ஒரு 'கெத்து' வேணும் அண்ணே:))//

நான் தான் டெவலப்பர் இல்லையே :-))

ஆனா ஒரு விதத்துல பசங்க எல்லாருமே டெவலப்பர் தான் :-)

வெட்டிப்பயல் said...

//Divya said...

Happy to see you back to form.......FULL form:))

Rock on Anna!!!//

Thx ma...

வெட்டிப்பயல் said...

// G.Ragavan said...

சூப்பர் பதிவு பாலாஜி. செம கலக்கல். போட்டுத் தாக்கியிருக்க...
//
நன்றி ஜி.ரா...

// //
உங்க டேமேஜருக்குத் தமிழ் தெரியும்ல. இல்லை இப்ப ஆளு மாறியாச்சா?//
அவர் எப்பவுமே எனக்கு மேனஜரா இருந்ததில்லை ;) //

அவரு தப்பிச்சுட்டாரேன்னு வருத்தப்படுறதா! நீ மாட்டிக்கலையேன்னு சந்தோஷப்படுறதா! :D//

அவர் யாரை சொன்னாருனு தெரியல. நான் உங்களை தான் சொன்னாருனு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க செந்தில்னு நினைக்கறீங்க போல.ஆனா என் பதில் ரெண்டுக்குமே கரெக்டா போச்சு :-)

G.Ragavan said...

// அவர் யாரை சொன்னாருனு தெரியல. நான் உங்களை தான் சொன்னாருனு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க செந்தில்னு நினைக்கறீங்க போல.ஆனா என் பதில் ரெண்டுக்குமே கரெக்டா போச்சு :-) //

நானும் என்னைத்தான் சொன்னேன் :D

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

// அவர் யாரை சொன்னாருனு தெரியல. நான் உங்களை தான் சொன்னாருனு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க செந்தில்னு நினைக்கறீங்க போல.ஆனா என் பதில் ரெண்டுக்குமே கரெக்டா போச்சு :-) //

நானும் என்னைத்தான் சொன்னேன் :D//

சிரிக்காதீங்க.. இன்னும் சான்ஸ் இருக்கு ;) No More **** :-))

ஜி said...

:))) ஏன் இந்த கொலவெறி??? இப்படி எடுத்துக் கொடுத்தீங்கன்னா அப்புறம் பின்னால ரொம்ப சேதாரமாகிப் போயிடுமே?? :)))

Syam said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ.....
இம்புட்டு நல்லவரா நீங்க...
:-)

Syam said...

//மேல சிவப்பு நிறத்துல இருக்குற கட்டத்துல வெள்ளைக்கலருல "X"னு போட்டுருக்கறதை சொடுக்கவும்.
//

இது எங்க இருக்கு....?

J J Reegan said...

யப்பா இந்த மென்பொருள் வேலைக்கே நம்மல்லாம் போகல...

பதிவுல மட்டும் நாம மானம் போகாம இருந்தா சரி...

வெட்டிப்பயல் said...

// ஜி said...

:))) ஏன் இந்த கொலவெறி??? இப்படி எடுத்துக் கொடுத்தீங்கன்னா அப்புறம் பின்னால ரொம்ப சேதாரமாகிப் போயிடுமே?? :)))//

ஜி,
உனக்கு தான் ஏற்கனவே க்யூல நிக்கறாங்களே. அப்பறம் ஏன் இந்த கவலை?

வெட்டிப்பயல் said...

//Syam said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ.....
இம்புட்டு நல்லவரா நீங்க...
:-)//

நாட்டாமை,
உங்களுக்கு ஏன் இந்த கவலை? இதெல்லாம் சின்னஞ்சிறுசுங்க பட வேண்டிய கவலை :-p

வெட்டிப்பயல் said...

// Syam said...

//மேல சிவப்பு நிறத்துல இருக்குற கட்டத்துல வெள்ளைக்கலருல "X"னு போட்டுருக்கறதை சொடுக்கவும்.
//

இது எங்க இருக்கு....?//

அது விண்டோவை க்ளோஸ் பண்ண நாட்ஸ் :-))

வெட்டிப்பயல் said...

// J J Reegan said...

யப்பா இந்த மென்பொருள் வேலைக்கே நம்மல்லாம் போகல...

பதிவுல மட்டும் நாம மானம் போகாம இருந்தா சரி...//

அது சரி :-)

Sanjai Gandhi said...

//ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்//

ஹாஹா.. கை புள்ள கழக கண்மணிகள்னு சொல்லுங்க.. :P

Ramkumar said...

ஜொல்லுப்பாண்டியண்ணே,
வெட்டிப்பயல் அவர்களே,

உங்க ரெண்டு பேரயும் தலையா வச்சிக்கிட்டு நான் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுருக்கேன்,

என்ன வாழ்த்துங்கண்ணே

நன்றி,
போக்கிரி பையன்
http://pokkiripayan.blogspot.com/

ஷைலஜா said...

வெட்டிப்பயல்! என்ன நினச்சிட்டு இப்படில்லாம் எழுதறீங்க... ம்?:):)இருங்க இருங்க இதை கூடிய சீக்கிரம் ஒரு தொலைக்காட்சில மகளிர் நிகழ்ச்சில சோல்லத்தான் போறேன்....சாஃப்ட்வேர் மக்களின் பிரச்சினைகளை (ஆண்களும் பங்கு பெறுகிறமாதிரிதான்:)) சொல்லிஅதற்கு தீர்வு இணையத்தில் எழுதும் உங்களமாதிரீ அறிவாளிகளான சாஃப்ட்வேர்மக்களைக்கொண்டே கேட்டுப்பெற்று அவங்களில் ஒருத்தரை நிலையத்துக்கு அழைக்கவும் ஏற்பாடு நடக்குது....
இப்போவே அனுமதி கேட்டுக்கறேன் ஜூனியர் க்ரேசிமோகன் அவரக்ளே!ரசிச்சேன் ,ரசிச்சேன்,ரொம்பவே
ரசிச்சேன்!!!ஆமா அமெரிக்காலபொதிகை தெரியும்தானே?:)

வெட்டிப்பயல் said...

// SanJai said...

//ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்//

ஹாஹா.. கை புள்ள கழக கண்மணிகள்னு சொல்லுங்க.. :P//

கல்யாணமானா எல்லா ஆம்பிளைங்களும் கைப்புள்ள தான் :P

வெட்டிப்பயல் said...

//போக்கிரி பையன் said...

ஜொல்லுப்பாண்டியண்ணே,
வெட்டிப்பயல் அவர்களே,

உங்க ரெண்டு பேரயும் தலையா வச்சிக்கிட்டு நான் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுருக்கேன்,

என்ன வாழ்த்துங்கண்ணே

நன்றி,
போக்கிரி பையன்
http://pokkiripayan.blogspot.com///

தமிழ் போக்கிரி மாதிரி காப்பி பேஸ்டா இல்லாம தெலுகு போக்கிரி மாதிரி சூப்பர் டூப்பரா எழுத வாழ்த்துகள்!!!

வெட்டிப்பயல் said...

//ஷைலஜா said...

வெட்டிப்பயல்! என்ன நினச்சிட்டு இப்படில்லாம் எழுதறீங்க... ம்?:):)இருங்க இருங்க இதை கூடிய சீக்கிரம் ஒரு தொலைக்காட்சில மகளிர் நிகழ்ச்சில சோல்லத்தான் போறேன்....சாஃப்ட்வேர் மக்களின் பிரச்சினைகளை (ஆண்களும் பங்கு பெறுகிறமாதிரிதான்:)) சொல்லிஅதற்கு தீர்வு இணையத்தில் எழுதும் உங்களமாதிரீ அறிவாளிகளான சாஃப்ட்வேர்மக்களைக்கொண்டே கேட்டுப்பெற்று அவங்களில் ஒருத்தரை நிலையத்துக்கு அழைக்கவும் ஏற்பாடு நடக்குது....
இப்போவே அனுமதி கேட்டுக்கறேன் ஜூனியர் க்ரேசிமோகன் அவரக்ளே!ரசிச்சேன் ,ரசிச்சேன்,ரொம்பவே
ரசிச்சேன்!!!ஆமா அமெரிக்காலபொதிகை தெரியும்தானே?:)//

உங்களுக்கு இல்லாத அனுமதியா.. தாராளமா இதை நீங்க எங்க வேணா யூஸ் பண்ணிக்கலாம். ஆனா என்னை ஜீனியர் க்ரேசி மோகனு சொல்லி க்ரேசியை கேவலப்படுத்தறீங்களே...

நானே சீக்கிரம் பெ(ண்)ங்களூர்க்கு வந்துடுவன் போல இருக்கு :-)

பொதிகை இங்க தெரியாது. ஆனா யூ ட்யுப்ல எல்லாத்தையும் பார்த்துக்கலாம் :-)

ஷைலஜா said...

வெட்டிப்பயல் said...
//உங்களுக்கு இல்லாத அனுமதியா.. தாராளமா இதை நீங்க எங்க வேணா யூஸ் பண்ணிக்கலாம். ஆனா என்னை ஜீனியர் க்ரேசி மோகனு சொல்லி க்ரேசியை கேவலப்படுத்தறீங்களே...//

நன்றிப்ரதர்.
கேவலமில்ல ..இப்படில்லாம் எழுத ஆரம்பிச்சிதான அவரும் முன்னுக்கு வந்திருக்காரு?

//நானே சீக்கிரம் பெ(ண்)ங்களூர்க்கு வந்துடுவன் போல இருக்கு :-)//

வாங்க வாங்க....அப்டியே அந்த ஆன்மீகவள்ளலையும் கூட்டிவந்திடுங்க:)

//பொதிகை இங்க தெரியாது. ஆனா யூ ட்யுப்ல எல்லாத்தையும் பார்த்துக்கலாம் :-)//

சரி....எல்லாம் நிச்சயமானால் கண்டிப்பா இங்கயே தகவல் தரேன்.

9:33 PM

Syam said...

//அது விண்டோவை க்ளோஸ் பண்ண நாட்ஸ் :-))//

ROTFL.... :-)

கைப்புள்ள said...

//எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.
//

சான்ஸே இல்ல. செம கலக்கல் காமெடி. எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. நல்லா ரசிச்சி சிரிச்சேன். கவுண்டர் கலக்குன போன பதிவுக்கும் சேத்து தான் சொல்றேன்.
:)

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

// அவர் யாரை சொன்னாருனு தெரியல. நான் உங்களை தான் சொன்னாருனு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க செந்தில்னு நினைக்கறீங்க போல.ஆனா என் பதில் ரெண்டுக்குமே கரெக்டா போச்சு :-) //

நானும் என்னைத்தான் சொன்னேன் :D//

சிரிக்காதீங்க.. இன்னும் சான்ஸ் இருக்கு ;) No More **** :-)) //

அட.... ஆமாம்ல.... அத மறந்துட்டேன்... அப்போ ஆப்பு வரனும்னா எப்ப வேணும்னாலும் வரலாம்னு சொல்லு!!!!

மோகன் கந்தசாமி said...

/////ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. //////
நூறு சதம் உண்மை. ஏதாவது உதவி கேட்டால் தேவை இல்லாதவற்றை பேசி கடைசி வரை சரியான பதில் தரமாட்டார்கள். கடைசியில் நானே பிரச்சினையை சரி செய்ய வேண்டும் அல்லது சரியான நபரை தேட வேண்டியிருக்கும்.

Unknown said...

Adhu sari. Ippidi unmaya eduthu kudutha adhuthu varra namma payapullaingalukku kalyanam oru kanavathaan irukkum poanga. Aana romba naazh kalichi nalla sirichaen... Nanri.

வெட்டிப்பயல் said...

//ஷைலஜா said...

வெட்டிப்பயல் said...
//உங்களுக்கு இல்லாத அனுமதியா.. தாராளமா இதை நீங்க எங்க வேணா யூஸ் பண்ணிக்கலாம். ஆனா என்னை ஜீனியர் க்ரேசி மோகனு சொல்லி க்ரேசியை கேவலப்படுத்தறீங்களே...//

நன்றிப்ரதர்.
கேவலமில்ல ..இப்படில்லாம் எழுத ஆரம்பிச்சிதான அவரும் முன்னுக்கு வந்திருக்காரு?//

சரி.. இவ்வளவு தடவை சொல்றீங்க... பட்டம் தானே.. இருந்துட்டு போகுது :-)

//
//நானே சீக்கிரம் பெ(ண்)ங்களூர்க்கு வந்துடுவன் போல இருக்கு :-)//

வாங்க வாங்க....அப்டியே அந்த ஆன்மீகவள்ளலையும் கூட்டிவந்திடுங்க:)
//

அவருக்கு சம்பளம் கொடுத்து பெங்களூர் கம்பெனிக்கு எல்லாம் கட்டுப்படியாகாது... அவரு ரொம்ப பெரிய இடம் ;)

// //பொதிகை இங்க தெரியாது. ஆனா யூ ட்யுப்ல எல்லாத்தையும் பார்த்துக்கலாம் :-)//

சரி....எல்லாம் நிச்சயமானால் கண்டிப்பா இங்கயே தகவல் தரேன்.//

சூப்பரு...

வெட்டிப்பயல் said...

//Syam said...

//அது விண்டோவை க்ளோஸ் பண்ண நாட்ஸ் :-))//

ROTFL.... :-)//

நாட்ஸ்,
ரெண்டு வருஷமா நம்ம ப்ளாக் படிக்கறீங்க. இதுக்கூடவா நோட் பண்ணல :-)

வெட்டிப்பயல் said...

//கைப்புள்ள said...

//எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.
//

சான்ஸே இல்ல. செம கலக்கல் காமெடி. எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. நல்லா ரசிச்சி சிரிச்சேன். கவுண்டர் கலக்குன போன பதிவுக்கும் சேத்து தான் சொல்றேன்.
:)//

ரொம்ப டாங்ஸ் தல... எல்லாம் உங்க ஆசி தான் :-)

வெட்டிப்பயல் said...

// G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

// அவர் யாரை சொன்னாருனு தெரியல. நான் உங்களை தான் சொன்னாருனு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க செந்தில்னு நினைக்கறீங்க போல.ஆனா என் பதில் ரெண்டுக்குமே கரெக்டா போச்சு :-) //

நானும் என்னைத்தான் சொன்னேன் :D//

சிரிக்காதீங்க.. இன்னும் சான்ஸ் இருக்கு ;) No More **** :-)) //

அட.... ஆமாம்ல.... அத மறந்துட்டேன்... அப்போ ஆப்பு வரனும்னா எப்ப வேணும்னாலும் வரலாம்னு சொல்லு!!!!//

அதே அதே!!!

வெட்டிப்பயல் said...

//மோகன் கந்தசாமி said...

/////ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. //////
நூறு சதம் உண்மை. ஏதாவது உதவி கேட்டால் தேவை இல்லாதவற்றை பேசி கடைசி வரை சரியான பதில் தரமாட்டார்கள். கடைசியில் நானே பிரச்சினையை சரி செய்ய வேண்டும் அல்லது சரியான நபரை தேட வேண்டியிருக்கும்.//

அங்கேயும் அதே கதை தானா? :-)

வெட்டிப்பயல் said...

//Blogger avana said...

Adhu sari. Ippidi unmaya eduthu kudutha adhuthu varra namma payapullaingalukku kalyanam oru kanavathaan irukkum poanga.//

இதுக்கே இப்படினா சாப்ட்வேர்ல பொண்ணு தேடும் மாப்பிள்ளைகளுக்கு போட்டா அழுதுடுவீங்க போல :-))

// Aana romba naazh kalichi nalla sirichaen... Nanri.//
ரொம்ப நாள் கழிச்சா??? தினமும் ஏதாவது நகைச்சுவை காட்சிகளை யூ ட்யூப்ல பார்த்தாவது சிரிங்க.

இல்லைனா எங்க தல டுபுக்கு ப்ளாக் படிங்க :-)

Fathima Sagar said...

Amazing! Chance illa! BTW, Naan oru Java/J2EE Developer. Wud b an interesting read if u write it on the reverse situation also.

rajini said...

சூப்பர்.அப்பு என்ன செய்யரிங்க?

Unknown said...

nice analyze...

//சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.//

ha ha ha... enjoyed lot.
Thanks.
--Mastan