தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, January 04, 2008

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 9

ஆம்பலில் இதுவரை..

சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்

ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்
தம்பி எழுதிய ஆறாவது ஆம்பல்
கப்பி எழுதிய ஏழாவது ஆம்பல்
தேவ் எழுதிய எட்டாவாது ஆம்பல்"ஏ அஞ்சலி! நம்ம பானு வரதுக்கு லேட் ஆகுமாம் எப்பவும் போல ஏணியை இறக்கி வெச்சிடு" சொல்லி கொண்டே அஞ்சலி அருகில் சாப்பாட்டு தட்டுடன் அமர்ந்தாள் மீனா.

"மகராணி எங்க போயிருக்காங்க?"

"அவ சுரேஷோட ஷாப்பிங் போனாளாம். அப்படியே படத்துக்கு போயிட்டு வரலாம்னு போயிட்டாங்களாம்"

"அது என்னடி படிக்கும் போதே படம் கிடம்னு சுத்திட்டு இருக்கா?"

"ஏய்! நீ ஏன் இப்படி சீன் போடற? அவ லவ் பண்றா, படத்துக்கு போறா. இதுல என்ன இருக்கு? சுரேஷும் ரொம்ப நல்ல பையன் தான்"

'சுரேஷ் நல்ல பையனு இவ எனக்கு சொல்றா' மனதிற்குள் சொல்லி கொண்டாள்

"சரி அப்ப நீயே ஏணியை இறக்கி வெச்சிடு. நான் லைட் ஆஃப் பண்றதுக்குள்ள தூங்கிடுவேன். அதுவுமில்லாம இந்த வார்டனுக்கும் எனக்கும்

நேத்து தான் சண்டை"

"செல்லம் இல்லை. எனக்காக இதை செஞ்சிடு அஞ்சலி. கார்த்திக் ராத்திரி ஃபோன் பண்றனு சொல்லிருக்கான்பா. ப்ளீஸ்"

"யாரு அந்த கெமிக்கல் கார்த்தியா? எக்கேடோ கெட்டு போ!"

"ஏணி எடுத்து வெச்சிடற இல்லை? சரியா ஒரு மணிக்கு எல்லாம் எடுத்து வெச்சிடுடா. ப்ளீஸ்"

"சரி"

ஒரு மணி வரை என்ன செய்வதென்று புரியாமல் அடுத்த அறைக்கு சென்றாள் அஞ்சலி. அங்கே லதாவின் பழைய டைரி அவள் படுக்கை மேல்

கிடந்தது. அவள் வரும் வரை அவளுக்கு தெரியாமல் படிக்க ஆரம்பித்தாள் அஞ்சலி. காலேஜ் முதல் நாள்

"எங்க க்ளாஸ்ல ஆறே பொண்ணுங்க தான்.
Anita - மெட்ராஸ் பொண்ணு. எதுக்கெடுத்தாலும் இங்கிலீஷ்லயே பேசறா
Anjali - விழுப்புரம் பக்கத்துல ஒரு ஊர். பேர் மறந்து போச்சு. ரொம்ப நல்ல பொண்ணு. நல்லா பேசறா
Meena - இவ ஊர் சேலம். வாய திருந்தா மூடவே மாட்டா போல தெரியுது.
Banu - இவ மதுர பக்கத்து பொண்ணு. இன்னைக்கு முழுக்க அமைதியா இருந்தா.
Archana - இவ ஊரு திண்டுக்கல். இன்னும் இவக்கிட்டயும் பேசல.

ஸ்கூல்ல இருந்த மாதிரி எங்க எல்லாரோட பேரையும் சேர்த்து குருப்பா ஒரு பேர் வைக்கனும். என்ன வைக்கலாம்?

ஹிம்ம்ம்... எல்லாரோட முதல் எழுத்தையும் சேர்த்து பார்க்கலாம்.
AAMBAL கரெக்ட்- "ஆம்பல்"

"வேங்கையும் பூங்கொடி"ல படிச்ச பூ...

"ஆம்பல் பூத்த
அதரங்கள் நெகிழ
அன்றைய கடமைகள்
ஆற்ற வந்தாள்."

.....................................................

"இங்க பாருப்பா சுரேசு.. உங்க ஐயாரு கண்டிப்பா சொல்லிட்டாக நீ அவுக தங்கச்சி புள்ளய தான் கட்டிக்கனுமாம்"

"அம்மா உனக்கு எத்தனை முறைமா சொல்றது. அவுக ரொம்ப வசதியான இடம். அந்த பொண்ணும் நிறையா படிச்சிருக்கு. என்

உத்யோகத்துக்கு அதெல்லாம் ஒத்து வராதுமா"

"இங்க பாரு. அவக தங்கச்சி தான் இதை பத்தி உங்க அயாருக்கிட்ட பேசிருக்காங்க. பொட்ட புள்ள என்ன படிச்சா என்ன? வேலைக்கா போக

போகுது. உன் கூட நல்லா குடும்பம் நடத்துவாய்யா. நீ எதுவும் பயப்படாத"

"அம்மா. எனக்கு என்னுமோ இது சரியாப்படல. மெட்ராஸ்ல படிக்கிற புள்ள. அதுவுமில்லாம என் உத்யோகம் வேற ஒரு மாதிரி. எப்ப

வீட்டுக்கு வருவேன், எப்ப போவேனு எனக்கே தெரியாது"

"அதெல்லாம் நீ ஏண்டா பயப்படற. கயலு ரொம்ப தங்கமான பொண்ணு. உன்னைய நல்லா வெச்சி பார்த்துக்குவா"

"எதுக்கும் நீயே ஒரு தடவை பேசி பாரும்மா"

"அவளுக்கு நீயே வேணும்னா ஃபோன் பண்ணி கேட்டுக்கோ. உங்க ஐயா அந்த காலெண்டர்ல அவ நம்பர் எழுதி வெச்சிருக்காரு. அப்பறம்

ஃபோன் பண்ணி கயல்னு கேக்காத லதானு கேளு"

"தெரியும்மா..."

(தொடரும்...)
.....................

இதை ஆன்மீக முற்போக்குவாதி(???) KRS தொடருவார்...

20 comments:

வெட்டிப்பயல் said...

ஆணி ரொம்ப அதிகமா ஆயிடுச்சி. அதுவுமில்லாம ஒரு வாரமா வீட்ல இண்டர்நெட் ப்ராப்ளம். அதான் ரொம்ப லேட் ஆகிடுச்சி...

எல்லாரும் பெரிய மனசு பண்ணி என்னை மன்னிக்கவும் :-)

கப்பி | Kappi said...

ஆம்பலுக்கு விளக்கம் கொடுக்க என்னமா யோசிக்கறீங்கய்யா..ஜூப்பரு :))


கயல்..லதா..பானு..அஞ்சலி..சுரேஷ்..சுரேஷ் ராகவன்..பிரபு..ஆம்பல்...கேஆரெஸ் தல..கமான் :)))


வெட்டிகாரு..ஒக்க ஸ்மால் ரிக்வெஸ்டூஉ..ஈ போஸ்ட்ல முந்தைய பாகங்கள் லின்க்ஸு இச்சேசாவா? :D

கோபிநாத் said...

வெட்டிகாரு ஒரு வழியாக புதிய கிளை கதை போட்டு முடிச்சுட்டார்...அடுத்த KRSக்கு வெயிட்டிங்..;))

Divya said...

ஆம்பல் - பெயர் விளக்கம் அருமை!

உங்களுக்கு தெரிந்த எல்லா பெண்கள் பெயரையும் கதைல கோர்த்துவிடனும்னு முடியு பண்ணிட்டீங்களா??

லேட்டா பதிவு போட்டாலும்.......உங்களுக்கே உரித்தான அழகான நடை மற்றும் உரையாடல் [ அம்மா -மகன் உரையாடல்] எல்லாம் அசத்தல்!

KRS எப்படி தொடர்கிறார் என அறிய ஆவலுடன் வெயிட்டீங்!

Anonymous said...

Kadhai pokku sooper.KRS oda id kudukkama poiteengale!! Next aambal enga paakaradhu? link anupungoo

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Anita = A
Anjali = A
Meena = M
Banu = B
Archana = A
Latha = L

யோவ் இருய்யா...
லிஸ்டுல இருக்குற பொண்ணுங்க பேரை எல்லாம் மனப்பாடம் பண்ணிக்குறேன்! :-)
இப்படி AAMBAL ன்னு ALAMBAL பண்ணி வச்சிட்டு போயிட்டீரு!

//கயல்..லதா..பானு..அஞ்சலி..
சுரேஷ்..சுரேஷ்..ராகவன்..பிரபு..
ஆம்பல்...கேஆரெஸ் தல..கமான் :)))//

கப்பி...இதுக்கு மேல கொழப்பாதீங்கப்பா! :-)
எப்படியும் ஒரு வாரத்துக்குள்ளாற தெளீவாக் குழம்பி, கதையைப் போட்டுடறேன்! :-)

KARTHIK said...

மற்றவைகளில் உள்ளது போல் இதிலும் krs லிங்க் இணைத்து விடவும்.
நன்றி.

KARTHIK said...

இவர்(KRS)எந்த சைட் ல எழுதறார்னு சொல்லுங்க plz.

வெட்டிப்பயல் said...

//karthik said...

இவர்(KRS)எந்த சைட் ல எழுதறார்னு சொல்லுங்க plz.//

லிங் கொடுத்திருக்கேன் தலைவா.. பாருங்க...

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

ஆம்பலுக்கு விளக்கம் கொடுக்க என்னமா யோசிக்கறீங்கய்யா..ஜூப்பரு :))


கயல்..லதா..பானு..அஞ்சலி..சுரேஷ்..சுரேஷ் ராகவன்..பிரபு..ஆம்பல்...கேஆரெஸ் தல..கமான் :)))

//
அவரு பட்டைய கிளப்பிடுவாரு...

//

வெட்டிகாரு..ஒக்க ஸ்மால் ரிக்வெஸ்டூஉ..ஈ போஸ்ட்ல முந்தைய பாகங்கள் லின்க்ஸு இச்சேசாவா? :D//

டன் ;)

வெட்டிப்பயல் said...

//கோபிநாத் said...

வெட்டிகாரு ஒரு வழியாக புதிய கிளை கதை போட்டு முடிச்சுட்டார்...அடுத்த KRSக்கு வெயிட்டிங்..;))/

மிக்க நன்றி ரசிகன் :-)

வெட்டிப்பயல் said...

//Divya said...

ஆம்பல் - பெயர் விளக்கம் அருமை!

உங்களுக்கு தெரிந்த எல்லா பெண்கள் பெயரையும் கதைல கோர்த்துவிடனும்னு முடியு பண்ணிட்டீங்களா??
//
எனக்கு இவ்வளவு பேர் தான் தெரியும்னு சொன்னதுக்கு மிக்க நன்றி ;)

//
லேட்டா பதிவு போட்டாலும்.......உங்களுக்கே உரித்தான அழகான நடை மற்றும் உரையாடல் [ அம்மா -மகன் உரையாடல்] எல்லாம் அசத்தல்!
//
மிக்க நன்றி :-)

// KRS எப்படி தொடர்கிறார் என அறிய ஆவலுடன் வெயிட்டீங்!//
அவருக்கென்ன.. பட்டையை கிளப்பிடுவாரு...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Anita = A
Anjali = A
Meena = M
Banu = B
Archana = A
Latha = L

யோவ் இருய்யா...
லிஸ்டுல இருக்குற பொண்ணுங்க பேரை எல்லாம் மனப்பாடம் பண்ணிக்குறேன்! :-)

//
பொண்ணுங்க பேரெல்லாம் ஒரு தடவை படிச்சவுடனே உங்களுக்கு மனப்பாடம் ஆகிடும்னு கேள்விப்பட்டேன் ;)

// இப்படி AAMBAL ன்னு ALAMBAL பண்ணி வச்சிட்டு போயிட்டீரு!
//
இப்படி பட்டையை கிளப்பறதால தான் உங்களுக்கு இந்த கதை :-)

// //கயல்..லதா..பானு..அஞ்சலி..
சுரேஷ்..சுரேஷ்..ராகவன்..பிரபு..
ஆம்பல்...கேஆரெஸ் தல..கமான் :)))//

கப்பி...இதுக்கு மேல கொழப்பாதீங்கப்பா! :-)
எப்படியும் ஒரு வாரத்துக்குள்ளாற தெளீவாக் குழம்பி, கதையைப் போட்டுடறேன்! :-)//

ஓகே.. சீக்கிரம் போடவும் ;)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

Kadhai pokku sooper.KRS oda id kudukkama poiteengale!! Next aambal enga paakaradhu? link anupungoo//

ஆஹா...
ஒரு விவசாயி திருப்பதிக்கு வழி காட்டினானு அவன் கால்ல விழுந்தாராம் ராமானுஜர். அந்த விவசாயிக்கு கிடைச்ச பெருமை மாதிரி மாதவிப்பந்தலுக்கு உங்களுக்கு நான் வழி காட்டறேன்... இதோ இங்க கிளிக்கோங்கோ

வெட்டிப்பயல் said...

//karthik said...

மற்றவைகளில் உள்ளது போல் இதிலும் krs லிங்க் இணைத்து விடவும்.
நன்றி.//

கொடுத்தாச்சுங்க... சூரியனுக்கு டார்ச் லைட் ;)

KARTHIK said...

நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அந்த விவசாயிக்கு கிடைச்ச பெருமை மாதிரி மாதவிப்பந்தலுக்கு உங்களுக்கு நான் வழி காட்டறேன்... //

அடப்பாவிங்களா! நம்ம கதையை நமக்கே திருப்புறாங்களே!
பாலாஜி, இப்போ நான் உங்க கால்-ல வுழணுமா, வழியைக் காட்டனதுக்கு? :-)

இங்க பின்னூட்டம் போடறதுக்கு, அங்கன கதையைப் போடுங்க-ன்னு சொல்றதும் காதில் விழுது! :-)

SurveySan said...

I have to get caught up on this தொடர்கதை of yours.

i will do that later.

அவ்வளவா நேரம் கெடைக்கரதில்லையோ இப்பெல்லாம்?
நேரம் இருக்கும்போது, இந்த புது வெளையாட்ட கண்டுக்கோங்க.
Click here for details

cheena (சீனா) said...

ஆம்பல் = பெயர்க் காரணம் - 9 வது தொடாரில். ம்ம்ம். கதை - திகில் தொடர் கதை அருமையான திருப்பங்களுடன் செக்று கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்.

Anonymous said...

it's interesting..story ended??? but i couldn't find any links after 11th part...:-(