தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, December 23, 2007

பொறந்த வீடா? புகுந்த வீடா???

'பொறந்த வீடா புகுந்த வீடா
எந்த இடம் சொந்த இடம்' பாடல் ஒலித்து கொண்டிருந்தது...

"என்னங்க, அந்த காலிங் பெல் அடிக்குது இல்லை. நீங்க தான் போய் திறங்களேன்" மனைவியின் அதட்டல் கேட்டு போய் கதவை திறந்த சபாபதி, வெளியில் நின்றிருந்த போலிஸ் கான்ஸ்டிபலை கண்டு குழப்பமடைந்தார்.

"இது மிஸ்டர் ராம் குமார் வீடு தானே?"

"ஆமாம். அவர் என் சன் தான். ஏன் சார் எதாவது பிரச்சனையா?"

"அவரை கொஞ்சம் கூப்பிடறீங்களா?"

"அவன் வெளிய போயிருக்கான். இப்ப வந்துடுவான். என்ன விஷயம்னு கொஞ்சம் சொல்லுங்களேன். நானும் கவர்ன்மெண்ட் சர்வெண்ட் தான் சார்"

"உங்க மருமகள் உங்க எல்லார் பேர்லயும் வரதட்சனை கொடுமை கேஸ் போட்டிருக்காங்க சார். நீங்க கவர்ன்மெண்ட் சர்வெண்ட்னு தெரிஞ்சுது. அதனால எஸ் ஐ சார் இன்னும் கேஸ் ஃபைல் பண்ணல. உங்களை வர சொன்னார். எப்படியாவது பேசி காம்ப்ரமைஸ் பண்ணி பார்க்க சொன்னார். உங்க சன் செல் வெச்சிருக்காரா?"

"வெச்சிருக்கான் சார்"

"சரி சார். அப்ப அவரை ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க. நீங்களும் உங்க வீட்டுக்காரம்மாவும் அப்படியே என் கூட கிளம்பி வந்துடுங்க. ஏன்னா இது நான் - பெயிலபுல் கேஸ்."

"நானும் என் சன்னும் வேணா வரோமே சார்"

"இல்லைங்க. உங்க வீட்டுக்காரம்மா மேல தான் கேஸ் முக்கியமா இருக்கு. நீங்க அவுங்களை கண்டிப்பா கூப்பிட்டு வரனும். இல்லைனா எங்களுக்கு பிரச்சனையாகிடும். கேஸ் கொடுத்தா வாங்காம, காசு வாங்கிட்டு தப்பிக்க விட்டுட்டாங்கனு சொல்லிடுவாங்க. நீங்க வேணா தனியா ஆட்டோல வாங்க. எப்படியாவது சமாதானம் பண்ண பாருங்க. எதுக்கும் அந்த பொண்ணு வீட்டு சைட்லயும் பெரியவங்க கிட்ட ஒரு தடவை ஃபோன் பேசி பாருங்க"

"சரிங்க"

குழப்பமான மனநிலையில் உள்ளே சென்றார் சபாபதி.

அழுது அழுது கண்கள் வீங்கிய நிலையிலிருந்தாள் கவிதா. எவ்வளவு பேசியும் அவள் மனதை மாற்ற முடியவில்லை.

"சம்பந்தி, டி.எஸ்.பி உங்க கிளாஸ் மேட்னு சொன்னீங்களே. கொஞ்சம் பேசி பாருங்களேன்" கவலையுடன் விசாரித்து கொண்டிருந்தார் சபாபதி.

"நான் நீங்க சொன்னவுடனே அவனுக்கு தான் ஃபோன் பண்ணேன். இந்த கேஸ்ல கண்டிப்பா யாருக்கும் உதவ முடியாதுனு சொல்லிட்டான். வரதட்சனை கொடுமைனா நான்-பெயிலபில் வேற"

"என் பொண்ணுக்கு நீங்க எதுவும் சொல்லல இல்லை. அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா"

"இல்லைங்க. நீங்கதான் ஃபோன்லயே சொல்லிட்டீங்களே யாருக்கும் தெரிய வேண்டாம்னு"

"ஏதோ சின்ன புருஷன் பொண்டாட்டி சண்டை தான். அவனும் ஏதோ டென்ஷன்ல ஒரு அடி அடிச்சிட்டான். அதுக்கு போய் கேஸ் கொடுத்துட்டா"

"எனக்கும் என்ன செய்யறதுனே புரியல" கவலை தொய்ந்த முகத்துடன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார் சபாபதியின் சம்பந்தி முருகானந்தம்.

ஒரு மாதம் முடிந்த நிலையில் கவிதாவை பார்க்க அவள் வீட்டிற்கே சென்றான் ராம் குமார். ராம்குமாரை பார்த்ததும் அழுது கொண்டே வீட்டிற்குள் சென்று விட்டாள் கவிதா.

"வாங்க மாப்பிள. உட்காருங்க. நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேனுட்டா இந்த பாவி பொண்ணு. மன்னிச்சிக்கோங்க மாப்பிள" கெஞ்சி கொண்டிருந்தார் கவிதாவின் தந்தை.

"பரவாயில்லை மாமா. நான் அவள்ட கொஞ்சம் பேசலாமா?"

"தாராளமா மாப்பிள்ளை. அந்த ரூம்ல தான் இருக்கா" அவளிருந்த அறையை காட்டினார்

உள்ளே சென்று கதவை மூடினான் ராம் குமார். கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்த கவிதாவின் அருகிலமர்ந்து அவள் தலையை தன் மடியில் வைத்து அவள் கண்ணீரை துடைத்தான்.

"கவிதா, என்னை மன்னிச்சிடு. வேற வழி தெரியல"

"இருந்தாலும் நீங்க இப்படி பண்ணியிருக்க கூடாது. என் வீட்டுக்காரர், மாமனார், மாமியார் ஜெயிலுக்கு போக நானே காரணமாயிட்டேனே. அநியாயமா பொய்யா கேஸ் போட வெச்சிட்டீங்களே"

"ஒரு நாள் தான. நீ தான் கேஸை வாபஸ் வாங்கிட்ட இல்லை. நீ செஞ்ச இந்த தியாகத்தை நினைச்சி இன்னும் அம்மா, அப்பா பெருமையா பேசிட்டு இருக்காங்க."

"இருந்தாலும் உங்க சொந்தக்காரவங்க எல்லாம் என்னை பத்தி என்ன நினைப்பாங்க"

"சொந்தக்காரவங்களை எல்லாம் விடு. சேர்ந்து வாழப்போறது நம்ம தானே. நீ அன்னைக்கு கொடுத்த அந்த ஷாக் ட்ரீட்மெண்ட் தான் இன்னைக்கு என் தங்கச்சிய சந்தோஷமா வாழ வெச்சிருக்கு. அன்னைக்கு பயந்தவங்கதான் அவ மாமியார்"

"அதுக்கு உங்க தங்கச்சியவேவிட்டு கேஸ் போட சொல்லியிருக்கலாங்க. நானும் யோசிக்காம விட்டுட்டேன். இங்க தினம் தினம் எங்க அப்பாக்கிட்ட நான் வாங்கற திட்டுக்கு உயிரையே விட்டுடலாம்னு தோனுச்சி"

"இங்க பாரு கவி, என் தங்கச்சி மாமியார் பண்ண கொடுமைக்கு கண்டிப்பா கேஸ் கொடுத்திருக்கலாம். அவுங்களை ஜெயிலுக்கும் அனுப்பியிருக்கலாம். ஆனா அடுத்து அவ அந்த வீட்ல போய் வாழ முடியாது. ஆனா இப்ப நிலைமை அப்படியில்லை. அவுங்களே ஜெயிலுக்கு பயந்து மாறிட்டாங்க. உன்னையும் இனிமே எங்க வீட்ல ராணி மாதிரி நடுத்துவாங்க. அடுத்து என் தங்கச்சி மாமனாரையே அன்னைக்கு மாதிரி சமாதானம் பேச கூப்பிட்டு வரோம். நீ தனிக்குடுத்தனம்னா மட்டும் வருவேனு சொல்லு. ரெண்டு மூணு மாசத்துல அம்மா, அப்பா கூட போய் சேர்ந்திடலாம். சரியா?"

"ஹிம்ம்ம்"

"ஒரு மாசம் உன்னை பார்க்காம எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சிடா செல்லம். ஒண்ணு கொடேன்"

"ச்சீ. என்ன இது பகல்லயே? அதுவும் அப்பா வேற வெளிய இருக்காரு. நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க"

"உனக்கு ஒண்ணு தெரியுமா? தக்காளி விலை தங்கம் மாதிரி தினமும் ஏறிட்டே இருக்காம். உங்க அப்பாவை வேணா மார்கெட் போய் இன்னைக்கு என்ன விலைனு கேட்டு வர சொல்லுவோமா?"

"அடி வாங்க போறீங்க. ஒழுங்கா வீட்டுக்கு கிளம்புங்க"

அடுத்த நாள்

"கவிதா உன் தங்கச்சி லைன்ல இருக்கா, சீக்கிரம் வா" கவிதாவின் அப்பா கத்தியது தெரு முனை வரை கேட்டது.

"இருங்க வரேன்"

"சொல்லு அனிதா, எப்படிடி இருக்க?"

"நல்லா இருக்கேன். நேத்து மாமா வந்தாராமே?"

"ஆமா. அடுத்து தனிக்குடுத்தனம் போறோம். ஒரு மூணு மாசம் கழிச்சி மாமியார் வீட்டுக்கே போயிடறேன்"

"ஹிம்ம்ம்ம்"

"ஏன்டி அழற? மறுபடியும் உன்னை ஏதாவது திட்டினாளா உன் மாமியார்காரி?"

"இல்லை கவி. நீ கேஸ் கொடுத்ததுக்கப்பறம் மாறினவங்க தான். இப்பவும் என் மேல ஒரு பயத்தோட தான் இருக்காங்க. எனக்காக நீ எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க கூடாது கவி"

"என்னடி பண்ண? அவர் தங்கச்சிக்காக அப்படி ஒரு ப்ளான் பண்ணி அவரும் அவுங்க அப்பா, அம்மாவும் ஜெயிலுக்கு போகவே ரெடியாயிருந்தாங்க. எனக்கு தயக்கமாதான் இருந்துச்சி. ஆனா அவர் தங்கச்சி மாமியார் மாதிரி உன் மாமியார் பயந்து மாறினாங்கனா நமக்கும் நல்லது தானேனு ஒத்துக்கிட்டேன். எல்லாம் நல்ல படியா முடிஞ்சிது"

32 comments:

வெட்டிப்பயல் said...

இதுவும் சர்வேசன் போட்டிக்கு எழுதனது தான். ஆனா அனுப்ப நேரமில்லை... அவர் எந்த Time Zoneனு சொல்லலை :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இதுவும் நஒக-க்கு சமர்ப்பணமா? :-)

என்ன பாலாஜி இது?
கவிதா கேஸ் போட்டதே கடைசியில் கணவன் சொல்லித் தான் ஒரு ட்விஸ்டு-ன்னா
அதுக்குப் பின்னாடி அவ சொந்த தங்கச்சிக்கு இன்னொரு டிவிஸ்டா?

ந.ஓ.க தானே?
ந.இ.க இல்லையே! :-)

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப கன்பியூசிங்கா இருக்குங்க. :(

வெ. ஜெயகணபதி said...

நல்ல சிறுகதை வெட்டி... பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

டிவிட்ஸ்டோ, டிவிஸ்ட்...

கோபிநாத் said...

\\ இலவசக்கொத்தனார் said...
ரொம்ப கன்பியூசிங்கா இருக்குங்க. :(
\\

வழிமொழிகிறேன்...அவ்வ்வ்வ்வ்வ்

இராம்/Raam said...

கதை நல்லாயிருக்குப்பா.... :)

Anonymous said...

pramadham!! nalla kadhai!!!

ungal sirukadhai anaithume arumai..

Sirukadhai Selavar vettipaiyan Vaalga!!!!

- Kandan Mani kandan

கைப்புள்ள said...

உன்னோட புகுந்த வீட்டைப் பத்தி எதோ எழுதியிருக்கேன்னு நினைச்சு ஓடோடி வந்தா...இங்கே குமுதம் ஒரு பக்க கதைகளைப் போல ஒரூ சூப்பர் கதை இல்ல இருக்கு? எல்லாம் திருமணம் தரும் திருப்பங்களா?
:)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இதுவும் நஒக-க்கு சமர்ப்பணமா? :-)

என்ன பாலாஜி இது?
கவிதா கேஸ் போட்டதே கடைசியில் கணவன் சொல்லித் தான் ஒரு ட்விஸ்டு-ன்னா
அதுக்குப் பின்னாடி அவ சொந்த தங்கச்சிக்கு இன்னொரு டிவிஸ்டா?
//
முதல் ட்விஸ்ட் தான் எழுத நினைச்சது. ஆனா பொதுவா பொண்ணுங்க எப்பவுமே பொறந்த வீட்டுக்குனா தான் எதையும் செய்வாங்க. அதனால ரெண்டாவது தானா அமைஞ்சிடுச்சி :-)

//

ந.ஓ.க தானே?
ந.இ.க இல்லையே! :-)//

எந்த கதையுமே அனுப்பல :-)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

ரொம்ப கன்பியூசிங்கா இருக்குங்க. :(//

ஆஹா...
தெய்வமே! உங்களுக்கு கன்பியூசிங்க இருக்கா?

எதுக்கும் இன்னொரு முறை படிச்சி சொல்லுங்களேன் :-)

வெட்டிப்பயல் said...

//வெ. ஜெயகணபதி said...

நல்ல சிறுகதை வெட்டி... பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஜெயகண்பதி

வெட்டிப்பயல் said...

//மதுரையம்பதி said...

டிவிட்ஸ்டோ, டிவிஸ்ட்...//

ரொம்ப டாங்ஸ் மதுரையம்பதி :-)

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

\\ இலவசக்கொத்தனார் said...
ரொம்ப கன்பியூசிங்கா இருக்குங்க. :(
\\

வழிமொழிகிறேன்...அவ்வ்வ்வ்வ்வ்//

இன்னொருக்கா படிச்சி பார்த்து சொல்லேன் :-)

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

கதை நல்லாயிருக்குப்பா.... :)//

ஆஹா.. ராயலண்ணாவே நல்லாயிருக்குனு சொல்ற அளவுக்கு எழுதிட்டனா? ரொம்ப சந்தோஷம்

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

pramadham!! nalla kadhai!!!

ungal sirukadhai anaithume arumai..

Sirukadhai Selavar vettipaiyan Vaalga!!!!

- Kandan Mani kandan//

கண்டன் மணி கண்டன்,
உங்க வாழ்த்துக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா இங்க நிறைய பேர் இருக்காங்க. தேவ், ஜி.ரா, பினாத்தலார் மாதிரி :-)

வெட்டிப்பயல் said...

//கைப்புள்ள said...

உன்னோட புகுந்த வீட்டைப் பத்தி எதோ எழுதியிருக்கேன்னு நினைச்சு ஓடோடி வந்தா...இங்கே குமுதம் ஒரு பக்க கதைகளைப் போல ஒரூ சூப்பர் கதை இல்ல இருக்கு? எல்லாம் திருமணம் தரும் திருப்பங்களா?
:)//

தல,
குமதம் ஒரு பக்க கதை மாதிரி இருக்குனு சொல்றது பாராட்டா திட்டானு தெரியல :-)

இருந்தாலும் டேங்கிஸ் :-)

மங்களூர் சிவா said...

டபுள் 'நச்'

சூப்பர்!!

cheena (சீனா) said...

திருப்பத்திலும் திருப்பமா - பூந்து வெள்ளாட்றீங்களே

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

டபுள் 'நச்'

சூப்பர்!!//

நன்றி சிவா!!!

வெட்டிப்பயல் said...

/cheena (சீனா) said...

திருப்பத்திலும் திருப்பமா - பூந்து வெள்ளாட்றீங்களே//

முதல் திருப்பம் தான் ப்ளான் பண்ணது! ரெண்டாவது முதல் திருப்பத்துக்கான ஒரு முக்கிய காரணம் ;)

ராம்குமார் - அமுதன் said...

தல, கத நல்லா இருக்கு..... ஆனா என்ன போட்டி, வலைபதிவுகள்ல என்ன நிலவரம்ங்கறதுல்லாம் சரியா தெரியல.... எதுவா இர்ந்தாலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் :-))

கப்பி | Kappi said...

குடும்பஸ்தர் ஆனதுலருந்து குடும்பக்கதையா வருது :))

நல்ல கதை வெட்டிண்ணே!! வாழ்த்துக்கள்! :)

Nithi said...

நல்ல சிறுகதை ,கவிதா கேஸ் போட்டதே கடைசியில் கணவன் சொல்லித் தான் இது நல்ல திருப்பம் தான் ,இதற்கு அடுத்த திருப்பமும் நல்லா இருக்குங்க

G.Ragavan said...

திருப்பு திருப்புன்னு திருப்பீட்ட போ :) சரி.. இதப் போட்டீல சேத்தாங்களா இல்லையா?

குமரன் (Kumaran) said...

ரெண்டு நச்சும் நல்லா இருக்கு பாலாஜி.

//முதல் ட்விஸ்ட் தான் எழுத நினைச்சது. ஆனா பொதுவா பொண்ணுங்க எப்பவுமே பொறந்த வீட்டுக்குனா தான் எதையும் செய்வாங்க. அதனால ரெண்டாவது தானா அமைஞ்சிடுச்சி :-)//

இப்படியெல்லாம் சொல்லாதீங்க பாலாஜி. ஏதோ அனுபவத்துல தான் சொல்றீங்கன்னு நெனைச்சுக்கப் போறாங்க. :-)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

டபுள் 'நச்'

சூப்பர்!!//

மிக்க நன்றி சிவா

வெட்டிப்பயல் said...

//ராம்குமார் - அமுதன் said...

தல, கத நல்லா இருக்கு..... ஆனா என்ன போட்டி, வலைபதிவுகள்ல என்ன நிலவரம்ங்கறதுல்லாம் சரியா தெரியல.... எதுவா இர்ந்தாலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் :-))//

ரொம்ப நன்றிப்பா...
ஆனா போட்டிலயே கலந்துக்கல :-)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

குடும்பஸ்தர் ஆனதுலருந்து குடும்பக்கதையா வருது :))

நல்ல கதை வெட்டிண்ணே!! வாழ்த்துக்கள்! :)//

ஏன்பா எப்படி எழுதனாலும் ஒரு காரணமா?

சரி ரைட்டு விடு :-)

வெட்டிப்பயல் said...

//Nithiya said...

நல்ல சிறுகதை ,கவிதா கேஸ் போட்டதே கடைசியில் கணவன் சொல்லித் தான் இது நல்ல திருப்பம் தான் ,இதற்கு அடுத்த திருப்பமும் நல்லா இருக்குங்க//

மிக்க நன்றி நித்யா...

வெட்டிப்பயல் said...

// G.Ragavan said...

திருப்பு திருப்புன்னு திருப்பீட்ட போ :) சரி.. இதப் போட்டீல சேத்தாங்களா இல்லையா?//

சேக்கலையே :-))

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

ரெண்டு நச்சும் நல்லா இருக்கு பாலாஜி.
//
ரொம்ப நன்றி குமரன் :-))

//
//முதல் ட்விஸ்ட் தான் எழுத நினைச்சது. ஆனா பொதுவா பொண்ணுங்க எப்பவுமே பொறந்த வீட்டுக்குனா தான் எதையும் செய்வாங்க. அதனால ரெண்டாவது தானா அமைஞ்சிடுச்சி :-)//

இப்படியெல்லாம் சொல்லாதீங்க பாலாஜி. ஏதோ அனுபவத்துல தான் சொல்றீங்கன்னு நெனைச்சுக்கப் போறாங்க. :-)//

என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க... என்ன பண்ண????