சூர்யாவின் கைகளில் அந்த திருமண பத்திரிக்கை மின்னிக்கொண்டிருந்தது. ஆம் நீங்கள் எதிர்பார்த்தது சரிதான். அவன் தன் வாழ்க்கையே இவளுக்காகத்தான் என்று நினைத்து கொண்டிருந்த ராதிகாவின் திருமண பத்திரிக்கை தான் அது.
நாளை மறுநாள் அவளுடைய திருமணம். அவனை அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. யாரும் பார்த்துவிடாமலிருக்க அவசரமாக கண்ணீரை துடைத்தான்.
வேகமாக குளித்துவிட்டு வந்து அவனுடைய பீரோவை திறந்தான். மேலே அந்த சிகப்பு நிற டி-சர்ட் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. அவன் எவ்வளவோ வேண்டாமென்று சொல்லியும் அந்த டி-சர்டை அவனுடைய பிறந்த நாளுக்கு வாங்கி கொடுத்து அழகு பார்த்தவள் ராதிகா. கிராமத்திலிருந்து வந்ததாலோ ஏதோ காரணத்தால் அவனுக்கு இந்த மாதிரி துணிகள் பிடிப்பதில்லை. ஆனால் ராதிகாவின் பேச்சை தட்ட அவனுக்கு மனம் வராததால் அந்த டி-சர்ட் வாங்கி கொண்டான். அந்த பிறந்த நாள் அவனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
ராதிகா வாங்கி கொடுத்த அந்த டி-சர்டை அணிந்து கொண்டு அவளை அவனது ஸ்ப்ளெண்டரில் உட்கார வைத்து சினிமாவிற்கு அழைத்து சென்றான். அன்று இரவு டின்னர் கூட முருகன் இட்லி கடையில் சேர்ந்தே சாப்பிட்டனர். அவன் பிறந்த நாள் நியாபகம் வந்தவுடன் அவனுக்கு அவள் கொடுத்த கிரிட்டிங் கார்ட் ஞாபகமும் வந்தது. அதை அவன் பீரோ லாக்கரில் தேடி எடுத்தான்.
Many More Happy Returns Of the Day என்று எழுதியிருந்த வாழ்த்து அட்டையின் உள்ளே I Luv U So Much என்று ராதிகாவின் கையெழுத்து அழகாக தெரிந்தது. அதை பார்த்ததும் மீண்டும் அவனை அறியாமல் கண்ணீர் எட்டி பார்த்தது. அடுத்த நிமிடம் ஏதோ மனதை பிசைவது போலிருந்தது சூர்யாவிற்கு. எடுத்த பொருட்களை மீண்டும் பீரோவில் வைத்து வேகமாக அந்த இடத்தை காலி செய்தான்.
ராதிகாவின் திருமணம் முடிந்தவுடன் சென்னையை காலி செய்வது என்று முடிவு செய்து கொண்டான். சூர்யாவில் மனதை நன்கு தெரிந்த அவன் அக்கா அவனை கிராமத்திற்கு அவளுடனே வந்து தங்குமாறு வற்புறுத்தி கூறியிருந்தாள். அவனுக்கு அவளுடன் தங்கும் எண்ணமில்லை. அவள் வீட்டுக்காரர் சிடுமூஞ்சி. அவனால் அங்கு காலம் தள்ள முடியாது. வேறு எங்காவது சென்றுவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தான். ஊரைவிட்டு சென்றால் ராதிகாவின் நினைப்பு மறந்துவிடுமா என்ன? பைத்தியக்காரன்.
அந்த திருமண மண்டபம் மக்கள் கூட்டத்தில் நிறைந்து வழிந்தது. சூர்யாவை பார்க்கும் பொழுது எல்லாம் ராதிகாவின் மனம் வேதனையால் துடித்து கொண்டிருந்தது. என்ன செய்வது? எல்லாம் விதியின் விளையாட்டு. சூர்யாவிற்கும் மனதில் வலியிருந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளாமல் சிரித்து கொண்டிருந்தான். ஆண் பிள்ளையில்லவா?
சூர்யாவை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த மாப்பிள்ளையின் தந்தையை அவன் கவனிக்க தவறவில்லை.
"ஐநூறு ரூபாய்க்கு சேஞ்ச் வெச்சிருக்கீங்களா? கொஞ்சம் அவசரமா தேவைப்படுது"
"இருங்க. தேடி பாக்கறேன்" வேகமாக பர்சை எடுத்து திறந்தான் சூர்யா. அதில் அவன் வைத்திருந்த ராதிகாவுடன் சேர்ந்து எடுத்திருந்த புகைப்படம் அந்த கழுகு கண்களிலிருந்து தப்பவில்லை. சூர்யாவும் அதை கவனித்துவிட்டான்.
"என்னங்க சம்பந்தி பர்ஸில கூட பொண்ணு ஃபோட்டோவா? வீடு முழுக்கத்தான் வெச்சிருந்தீங்கனு பார்த்தா. இதுலயுமா?"
"என்னங்க பண்றது? தாயில்லாத பொண்ணாச்சேனு ரொம்ப பாசத்தை கொட்டி வளர்த்துட்டேன். அதான் அவள் முகத்தை நினைக்கும் போதெல்லாம் பார்க்கலாமேனு பர்ஸில வெச்சிருக்கேன். அவளை இப்ப அமெரிக்காக்கு அனுப்பிட்டு எப்படி இருப்பனோனு புரியல"
"கவலைப்படாதீங்க. சீக்கிரம் என் பையனுக்கு பிராஜக்ட் முடிஞ்சதும் இந்தியா வந்துடுவாங்க. நீங்களும் நம்ம கூடவே வந்து தங்கிக்கோங்க. எல்லாம் சேர்ந்தே இருப்போம்...."
(சர்வேசன் போட்டில கலந்துக்கறது இந்த திருப்பம் போதுமானு கொஞ்சம் சொல்லுங்களேன்!)
60 comments:
//(சர்வேசா... போட்டில கலந்துக்கறது இந்த திருப்பம் போதுமா?)//
போதும்பா போதும்!
திருப்பூ திருப்பூ-ன்னு திருப்பிட்டியே!
கதைக்கும் கதையாசிரியருக்கும் என் வாழ்த்துக்கள்! :-)
புதுமாப்பிள்ளை எழுதும் கதை அல்லவா? அதான் கல்யாண மண்டப வாசம் கதை ஃபுல்லா வீசுது! :-)
பொண்ணைக் காட்டாமலேயே அப்பா பொண்ணு கதையைச் சொல்லிட்டீங்க! நச்-னு இருக்கு பாலாஜி!
திருப்பம் நல்லாத்தேன் இருக்கு. சிங்கம் married ஆ வந்து நல்லாவே நச்சுன்னு கதை சொல்லிருக்கு
போதும்ய்யா போதும்...
சர்வேசா.. எல்லாம் உம்மால்... எந்த பக்கமும் போக முடியல...
மிக அருமையா திருப்பிருக்கீங்க பாலாஜி. வாழ்த்துக்கள்...
ஆமா! அதென்ன கே.ஆர்.எஸ் கதையாசிரியருக்கு வாழ்த்துன்னு சொல்லியிருக்காரு?, அப்ப அது நீங்க இல்லையா?...ரெண்டே ரெண்டு fake ரெஸியும் பதிவு போட்டீங்க ஒடனே உங்களை எப்படியெல்லாம் சந்தேகிக்கிறார் பாருங்க.... :-) நாராயண, நாராயண
சூப்பரு அண்ணாச்சி!!!
கலக்குங்க!!! :-D
///(சர்வேசன் போட்டில கலந்துக்கறது இந்த திருப்பம் போதுமானு கொஞ்சம் சொல்லுங்களேன்!)///
இதெல்லாம் ஓவரு!!!
இந்த நெக்கலு தானே வேண்டாங்கறது!!! :-P
:)))) எங்கேயோ மெயில் ஃபார்வார்ட்ல வந்த ஆங்கில கதை மாதிரியே இருக்குதே... :((
//புதுமாப்பிள்ளை எழுதும் கதை அல்லவா? அதான் கல்யாண மண்டப வாசம் கதை ஃபுல்லா வீசுது! :-)//
ரிப்பீட்டே!!
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//(சர்வேசா... போட்டில கலந்துக்கறது இந்த திருப்பம் போதுமா?)//
போதும்பா போதும்!
திருப்பூ திருப்பூ-ன்னு திருப்பிட்டியே!
கதைக்கும் கதையாசிரியருக்கும் என் வாழ்த்துக்கள்! :-)
//
அது என்ன கதைக்கும் கதையாசிரியருக்கும்???
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
புதுமாப்பிள்ளை எழுதும் கதை அல்லவா? அதான் கல்யாண மண்டப வாசம் கதை ஃபுல்லா வீசுது! :-)
//
கல்யாண மணடபம் சீன் கடைசி ஒரு பத்தில தான் வருது. கதையை நல்லா படிச்சீங்களா???
//
பொண்ணைக் காட்டாமலேயே அப்பா பொண்ணு கதையைச் சொல்லிட்டீங்க! நச்-னு இருக்கு பாலாஜி!
//
பொண்ணை தான் ஒரு சீன்ல காண்பிச்சேனே! கண் கலங்கினாலே அப்பாவை பார்த்து...
//சின்ன அம்மிணி said...
திருப்பம் நல்லாத்தேன் இருக்கு. சிங்கம் married ஆ வந்து நல்லாவே நச்சுன்னு கதை சொல்லிருக்கு
//
ரொம்ப டாங்கிஸ் சின்ன அம்மணி...
//நாகை சிவா said...
போதும்ய்யா போதும்...
//
என்ன புலி இப்படி சொல்லிட்ட...
எப்படியும் ஒரு மூணு, நாலு கதை போடலாம்னு பார்த்தேன் ;)
//
சர்வேசா.. எல்லாம் உம்மால்... எந்த பக்கமும் போக முடியல...
//
:-))
//மதுரையம்பதி said...
மிக அருமையா திருப்பிருக்கீங்க பாலாஜி. வாழ்த்துக்கள்...
//
மிக்க நன்றி மதுரையம்பதி...
//
ஆமா! அதென்ன கே.ஆர்.எஸ் கதையாசிரியருக்கு வாழ்த்துன்னு சொல்லியிருக்காரு?, அப்ப அது நீங்க இல்லையா?...ரெண்டே ரெண்டு fake ரெஸியும் பதிவு போட்டீங்க ஒடனே உங்களை எப்படியெல்லாம் சந்தேகிக்கிறார் பாருங்க.... :-) நாராயண, நாராயண
//
அவருக்கு இருக்கு ஆப்பு...
இது எங்க வீட்ல சொல்லி நான் எழுதுன கதைனு கதை விட்டுட்டு இருக்காரு :@
// CVR said...
சூப்பரு அண்ணாச்சி!!!
கலக்குங்க!!! :-D
//
மிக்க நன்றி தல!
//
///(சர்வேசன் போட்டில கலந்துக்கறது இந்த திருப்பம் போதுமானு கொஞ்சம் சொல்லுங்களேன்!)///
இதெல்லாம் ஓவரு!!!
இந்த நெக்கலு தானே வேண்டாங்கறது!!! :-P
//
அங்க பெனாத்தலார் எழுதன கதையெல்லாம் படிச்சீங்க இல்லை. அதுல கொஞ்சமாவது இருக்க வேணாம்...
//ஜி said...
:)))) எங்கேயோ மெயில் ஃபார்வார்ட்ல வந்த ஆங்கில கதை மாதிரியே இருக்குதே... :((//
தல,
நாம சொந்தமா யோசிச்சி தான் எழுதினோம். அந்த கதை நமக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்களேன்..
//இலவசக்கொத்தனார் said...
//புதுமாப்பிள்ளை எழுதும் கதை அல்லவா? அதான் கல்யாண மண்டப வாசம் கதை ஃபுல்லா வீசுது! :-)//
ரிப்பீட்டே!!//
யூ டூ "கதையாசிரியர்" கொத்ஸ்???
//கப்பி பய said...
:))//
இதுக்கு என்ன அர்த்தம்???
திருப்பம் சும்மா நச்சுன்னு இருக்கு வெட்டி!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
பாலாஜி,
அவ்வளவுதானா கதை?? :)
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்...நல்லாருக்கு. ஆனா பரிசு பெறும் அளவுக்கு நல்லாயிருக்கான்னு எனக்குச் சொல்லத் தெரியலை. திருப்பம்...இருக்குது. எதிர்பாராத திருப்பம்தான். ஆனா அந்தத் திருப்பாதால பெரிய திக்பக் சந்தோசம் எதுவும் வரலை.
அதுவுமில்லாம சூர்யாவை அவன்னு சொன்னதுல சின்ன சறுக்கல்னே நெனைக்கிறேன். சம்பந்தி அவர்னு ஆகும் போது சூர்யாவும் அவர்னு இருக்கனும். ஆனா அவர்னா உண்மை தெரிஞ்சு போகும். அந்த அவன் வராமச் சொல்லீருந்தா நல்லாயிருந்திருக்கும்.
திருப்பக் கதைகள்ளயே நான் ரொம்பவும் ரசிச்சது பேய்க்கதைதான். ஜெனி புல்லாங்குழல் ஊதுன கதை. அப்புறம் பினாத்தலாரின் பொன்னியில் செல்வன்.
எப்பா சாமீ!!!
டூ மச். அசத்திருக்கீங்க...
எங்கே திரும்பினாலும் திருப்பங்களா இருக்குது? சர்வேசன்.... நல்லாயிருங்க.
பாராட்டுக்கள் வெட்டியாரே.
நல்ல கதை. மிக நல்ல திருப்பம்.
ஆனா, திருப்பம் 'திடுக் திடுக்' தரலை (அட்லீஸ்ட் எனக்கு) :)
ஒரு ஷாக்/ஸ்வீட் ஸர்ப்ரைஸ் இருந்தாதான் நல்லா எடுபடுமோ. படிக்கரவங்க, அச்சச்சோ, ஐ! இப்படி ஏதாவது ஒரு பீலிங்குக்கு உட்படுத்தணும். இல்ல?
//Gragavan: திருப்பக் கதைகள்ளயே நான் ரொம்பவும் ரசிச்சது பேய்க்கதைதான். ஜெனி புல்லாங்குழல் ஊதுன கதை. அப்புறம் பினாத்தலாரின் பொன்னியில் செல்வன்.
//
ஜி.ரா, என் கதைய படிக்கல போல ;)
Congrats! That's a great twist. I am a silent reader of all the 'Nach' kathaigal. I've guessed the ending for all others when I read the beginning..but yours is unpredictable. I like it. All the best.
Balaji Kadai semma turn adichirrukku pa.. kalakkal. vetri pera vaazthukkal
// Divya said...
திருப்பம் சும்மா நச்சுன்னு இருக்கு வெட்டி!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
//
ரொம்ப நன்றிமா!!!
//இராம்/Raam said...
பாலாஜி,
அவ்வளவுதானா கதை?? :)
//
ராயலண்ணா,
உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு கதை எழுத வராதுண்ணா! இப்ப தான் எழுத முயற்சி செய்யறோம்...
ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை!!!
//G.Ragavan said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்...நல்லாருக்கு. ஆனா பரிசு பெறும் அளவுக்கு நல்லாயிருக்கான்னு எனக்குச் சொல்லத் தெரியலை. திருப்பம்...இருக்குது. எதிர்பாராத திருப்பம்தான். ஆனா அந்தத் திருப்பாதால பெரிய திக்பக் சந்தோசம் எதுவும் வரலை.
//
ஜி.ரா,
எல்லா திருப்ப கதையும் படிச்சேன். சில கதைகள் திக்னு இருக்கு. சில கதைகள் மனசை பாரமாக்குது. சில கதைகள் "அட!!!"னு ஆச்சர்யப்பட வைக்குது (குறிப்பா பினாத்தலாரின் பொ.செ). அதான் கொஞ்சம் எல்லாத்தையும் தள்ளி எழுதலாம்னு இந்த கதை முயற்சி செஞ்சேன். படிச்சி முடிச்சவுடனே ஒரு சின்ன அசட்டு சிரிப்பு வரனும்னு. வேற எதுவும் பெருசா முயற்சி செய்யல. அது வந்துச்சா என்னனு நீங்க தான் சொல்லனும்.
//
அதுவுமில்லாம சூர்யாவை அவன்னு சொன்னதுல சின்ன சறுக்கல்னே நெனைக்கிறேன். சம்பந்தி அவர்னு ஆகும் போது சூர்யாவும் அவர்னு இருக்கனும். ஆனா அவர்னா உண்மை தெரிஞ்சு போகும். அந்த அவன் வராமச் சொல்லீருந்தா நல்லாயிருந்திருக்கும்.
//
சூர்யாவை அவனு சொன்னது எனக்கு தப்பா தெரியல. சம்பந்தியை மட்டும் அவர்னு சொன்னது தப்பு தான். அதை சரி செய்தாச்சு. அன்னைக்கே மாத்தனும்னு நினைச்சேன். விட்டுட்டேன்.
//திருப்பக் கதைகள்ளயே நான் ரொம்பவும் ரசிச்சது பேய்க்கதைதான். ஜெனி புல்லாங்குழல் ஊதுன கதை. அப்புறம் பினாத்தலாரின் பொன்னியில் செல்வன்.
//
எனக்கு ரொம்ப பிடிச்சது கொத்ஸ் கதைதான் :-))
//bsubra said...
எப்பா சாமீ!!!
டூ மச். அசத்திருக்கீங்க...
//
ரொம்ப சந்தோஷம் பாபா!!! இந்த ரியாக்ஷன் தான் நான் எதிர்பார்த்தது :-)
//காட்டாறு said...
எங்கே திரும்பினாலும் திருப்பங்களா இருக்குது? சர்வேசன்.... நல்லாயிருங்க.
பாராட்டுக்கள் வெட்டியாரே.
//
மிக்க நன்றி காட்டாறு...
//SurveySan said...
நல்ல கதை. மிக நல்ல திருப்பம்.
ஆனா, திருப்பம் 'திடுக் திடுக்' தரலை (அட்லீஸ்ட் எனக்கு) :)
//
நீங்க திடுக் திடுக் தரும் கதையையா எழுத சொன்னீங்க? நீங்க எதிர்பார்க்காத ஒரு திருப்பம். கதையை ரெண்டாவது முறை சிந்திக்க வைக்கிற ஒரு திருப்பம். அவ்வளவு தானே! நீங்க சொன்ன அந்த நல்ல திருப்பம் தான் என் டார்கெட். திடுக் திடுக் தரணும்னா வேற தான் எழுதனும் ;)
//
ஒரு ஷாக்/ஸ்வீட் ஸர்ப்ரைஸ் இருந்தாதான் நல்லா எடுபடுமோ. படிக்கரவங்க, அச்சச்சோ, ஐ! இப்படி ஏதாவது ஒரு பீலிங்குக்கு உட்படுத்தணும். இல்ல?
//
இதுல ஸ்வீட் ஸர்ப்ரைஸ் இருக்குனு நினைச்சேன் :-(
(நிறைய ஷாக் கதைகள் இருக்கே)
// வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
எல்லா திருப்ப கதையும் படிச்சேன். சில கதைகள் திக்னு இருக்கு. சில கதைகள் மனசை பாரமாக்குது. சில கதைகள் "அட!!!"னு ஆச்சர்யப்பட வைக்குது (குறிப்பா பினாத்தலாரின் பொ.செ). அதான் கொஞ்சம் எல்லாத்தையும் தள்ளி எழுதலாம்னு இந்த கதை முயற்சி செஞ்சேன். படிச்சி முடிச்சவுடனே ஒரு சின்ன அசட்டு சிரிப்பு வரனும்னு. வேற எதுவும் பெருசா முயற்சி செய்யல. அது வந்துச்சா என்னனு நீங்க தான் சொல்லனும். //
வரலைன்னுதான் சொல்வேன்.
// சூர்யாவை அவனு சொன்னது எனக்கு தப்பா தெரியல. சம்பந்தியை மட்டும் அவர்னு சொன்னது தப்பு தான். அதை சரி செய்தாச்சு. அன்னைக்கே மாத்தனும்னு நினைச்சேன். விட்டுட்டேன். //
ம்ம்ம்ம்... இல்லை. இங்க நான் மாறுபடுறேன். why should i bother to think the writter can be young or old? யார் எழுதீருந்தாலும் அது பொருந்தாதுன்னுதான் தோணுது. இருந்தாலும் இதுபத்தி வாதம் பண்ண விரும்பலை. உனக்குத் தெரியாததை எதுவும் நான் சொல்லீரப் போறதில்லை.
//எனக்கு ரொம்ப பிடிச்சது கொத்ஸ் கதைதான் :-)) //
பிடிக்குமே. ராகவனுக்குப் பைத்தியம்னா பிடிக்காமலா இருக்கும். :)))))))))))))
கொத்ஸ் கதை எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. உன் கதையப் படிச்சிட்டுத்தான் அவர் கதையப் படிச்சேன். அதுனால அதைச் சொல்லலை.
நல்லா இருக்குங்க. பாராட்டுக்கள்.
//நீங்க திடுக் திடுக் தரும் கதையையா எழுத சொன்னீங்க? நீங்க எதிர்பார்க்காத ஒரு திருப்பம். கதையை ரெண்டாவது முறை சிந்திக்க வைக்கிற ஒரு திருப்பம்//
திடுக் திடுக் வேணும்னு அவசியம் இல்லை. ஆனா, 'அட!' போட வைக்கணும்.
உங்கள் கதையில் திருப்பம் நிச்சயமா இருந்தது. இன்னும் 'நச்' கூட்டணும். இன்னும் பொடி போடுங்க வெட்டி;)
சொல்ல மறந்துட்டேன். belated, திருமண வாழ்த்துக்கள்!
இனி எல்லாம் சுகமே!
super kadhai vetti.. asathala thiruppi irukkinga.. inime ellarum ungala thiruppu thiruppu-nu kooptraporaanga :)
//
இதுக்கு என்ன அர்த்தம்???//
நல்லாயிருக்குன்னு அர்த்தம்ங்ண்ணா :)
தங்கமனி வந்ததால கொஞ்சம் யோசிச்சு எழுதின மாரி ஒரு உணர்வு!
திருப்பம் இருக்கு! ஃபோட்டோ இல்லாமலியே வேற விதமா சொல்லியிருந்தா நச் கூடியிருக்குமென நினைக்கிறேன்! அது வலியத் தினிச்ச மாதிரி ஒரு உணர்வைத் தந்தது!
வாழ்த்துகள்!
நல்லாயிருக்கு ராசா ;)
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!!
வெற்றி பெற வாழ்த்துகள் வெட்டி :-)
( ஆனா , போட்டியில நாங்களும் கலந்துக்குவோம் ;-) )
//(சர்வேசா... போட்டில கலந்துக்கறது இந்த திருப்பம் போதுமா?)//
ப்ளாக்கர் புல்லா எங்க பாத்தாலும் திருப்பம்தான் பாத்து போகலைன்னா தடுக்கி விழ வேண்டியதுதான் போல!!
கதை நல்லா இருக்கு!!
//
புதுமாப்பிள்ளை எழுதும் கதை அல்லவா? அதான் கல்யாண மண்டப வாசம் கதை ஃபுல்லா வீசுது! :-)
//
ரிப்பீட்டேய்
//
வெட்டிப்பயல் said...
அவருக்கு இருக்கு ஆப்பு...
இது எங்க வீட்ல சொல்லி நான் எழுதுன கதைனு கதை விட்டுட்டு இருக்காரு :@
//
வெட்டி அப்டியெல்லாம் இல்லைன்னு நாங்க எல்லாரும் நம்பிட்டோம்!!!
திருப்பம் நல்லா இருந்தது! முதல படிக்கும் போது புரியல, திருப்(ம்)பவும் படிச்ச வுடனே தான் புரிஞ்சது;)
நன்றாக கொண்டு போய் எதிர்பாராத திருப்பம் தந்திருக்கிறீர்கள்.... ஆனால் அந்த அவன் என்பது உறுத்தவே செய்கிறது.
பல இடங்களில் அவன் இடத்தில் சூர்யா என்ற பெயரையே போடலாம்,அவனை -தன்னை, மற்றும் சில இடங்களில் அவன்=நீக்கிவிட்டால் கூட பொருத்தமாகவே இருக்கும்,
கதை கருத்து நல்லாத்தான் இருக்கு, சூர்யா கேரக்டர்ஐ மாத்திரம் கொஞ்சம் அவன்னு போடாம வேற மாதிரி போட்டா பொருத்தமா இருக்கும்
இதே நாட் வைத்து வேறு களத்தில் நானும் ஒன்னு யோசிச்சுவைச்சிருந்தேன் முன்னாடி...:))
(போட்டிக்கு இல்லை ..சும்மா)
நல்லா வந்திருக்கு...சிந்தாநதி சொன்ன மாதிரி அந்த அவன் கொஞ்சம் உறுத்தலா இருக்கு. அவர் சொன்ன டெக்னிக் நல்லா இருக்கு
எப்பா - கதய திருப்பு திருப்புன்னு திருப்பறாங்கப்பா - யாரது இந்த ட்விஸ்ட கண்டுப்டிச்சது ??
கத நல்லா இருக்கு - உண்மைலேயே கழுகுக்கண்கள் பர்சில் உள்ள படத்தப் பார்க்கும் போது மனம் அடித்துக் கொண்டது. சடாரென சம்பந்தி ஆனதும் மனம் லேசாகிப் போனது
//Anonymous said...
Congrats! That's a great twist. I am a silent reader of all the 'Nach' kathaigal. I've guessed the ending for all others when I read the beginning..but yours is unpredictable. I like it. All the best.//
Dear Friend,
Thx a lot for ur comment.
//தேவ் | Dev said...
Balaji Kadai semma turn adichirrukku pa.. kalakkal. vetri pera vaazthukkal//
ரொம்ப நன்றி தேவண்ணா!!!
// G.Ragavan said...
// வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
எல்லா திருப்ப கதையும் படிச்சேன். சில கதைகள் திக்னு இருக்கு. சில கதைகள் மனசை பாரமாக்குது. சில கதைகள் "அட!!!"னு ஆச்சர்யப்பட வைக்குது (குறிப்பா பினாத்தலாரின் பொ.செ). அதான் கொஞ்சம் எல்லாத்தையும் தள்ளி எழுதலாம்னு இந்த கதை முயற்சி செஞ்சேன். படிச்சி முடிச்சவுடனே ஒரு சின்ன அசட்டு சிரிப்பு வரனும்னு. வேற எதுவும் பெருசா முயற்சி செய்யல. அது வந்துச்சா என்னனு நீங்க தான் சொல்லனும். //
வரலைன்னுதான் சொல்வேன்.
//
ஹிம்ம்ம்...
//
// சூர்யாவை அவனு சொன்னது எனக்கு தப்பா தெரியல. சம்பந்தியை மட்டும் அவர்னு சொன்னது தப்பு தான். அதை சரி செய்தாச்சு. அன்னைக்கே மாத்தனும்னு நினைச்சேன். விட்டுட்டேன். //
ம்ம்ம்ம்... இல்லை. இங்க நான் மாறுபடுறேன். why should i bother to think the writter can be young or old? யார் எழுதீருந்தாலும் அது பொருந்தாதுன்னுதான் தோணுது. இருந்தாலும் இதுபத்தி வாதம் பண்ண விரும்பலை. உனக்குத் தெரியாததை எதுவும் நான் சொல்லீரப் போறதில்லை.
//
I still feel its autors choice.
Lets Agree to Disagree :-)
//
//எனக்கு ரொம்ப பிடிச்சது கொத்ஸ் கதைதான் :-)) //
பிடிக்குமே. ராகவனுக்குப் பைத்தியம்னா பிடிக்காமலா இருக்கும். :)))))))))))))
//
கண்டுபிடிச்சிட்டீங்களே :-)
//
கொத்ஸ் கதை எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. உன் கதையப் படிச்சிட்டுத்தான் அவர் கதையப் படிச்சேன். அதுனால அதைச் சொல்லலை.//
ஓ.. அதானே பார்த்தேன் :-)
//புதுகைத் தென்றல் said...
நல்லா இருக்குங்க. பாராட்டுக்கள்.//
மிக்க நன்றி புதுகை தென்றல்...
//urveySan said...
//நீங்க திடுக் திடுக் தரும் கதையையா எழுத சொன்னீங்க? நீங்க எதிர்பார்க்காத ஒரு திருப்பம். கதையை ரெண்டாவது முறை சிந்திக்க வைக்கிற ஒரு திருப்பம்//
திடுக் திடுக் வேணும்னு அவசியம் இல்லை. ஆனா, 'அட!' போட வைக்கணும்.
உங்கள் கதையில் திருப்பம் நிச்சயமா இருந்தது. இன்னும் 'நச்' கூட்டணும். இன்னும் பொடி போடுங்க வெட்டி;)
//
ஹிம்ம்ம்
முயற்சி பண்றேனுங்க சர்வேசன்.
// சொல்ல மறந்துட்டேன். belated, திருமண வாழ்த்துக்கள்!
இனி எல்லாம் சுகமே!//
மிக்க நன்றி தல...
//Arunkumar said...
super kadhai vetti.. asathala thiruppi irukkinga.. inime ellarum ungala thiruppu thiruppu-nu kooptraporaanga :)//
ஆஹா...
ரொம்ப நன்றிங்க அருண்.
இங்க பாதி பேர் நல்லா இல்லைனு சொல்லிட்டாங்க. நீங்களாவது நல்லா இருக்குனு சொன்னீங்களே :-)
//kappi guy said...
//
இதுக்கு என்ன அர்த்தம்???//
நல்லாயிருக்குன்னு அர்த்தம்ங்ண்ணா :)//
விளக்கம் கொடுத்த KTM கப்பி வாழ்க!!!
//சிங்கம் Singleஆ மட்டும் வராது.. Marriedஆவும் வரும் ;)
//
கதையை படிச்சவுடனே தெரியுது.
:))
//Blogger VSK said...
தங்கமனி வந்ததால கொஞ்சம் யோசிச்சு எழுதின மாரி ஒரு உணர்வு!
//
இதெல்லாம் நொம்ப ஓவர்... இதுக்கு முன்னாடி நான் எழூதின கதைகள் நீங்க படிச்சதில்லையா?
//
திருப்பம் இருக்கு! ஃபோட்டோ இல்லாமலியே வேற விதமா சொல்லியிருந்தா நச் கூடியிருக்குமென நினைக்கிறேன்! அது வலியத் தினிச்ச மாதிரி ஒரு உணர்வைத் தந்தது!
//
ஓ!!!
இருக்கலாம் ..
//
வாழ்த்துகள்!//
மிக்க நன்றி :-)
//கோபிநாத் said...
நல்லாயிருக்கு ராசா ;)//
ரொம்ப நன்றி கோபி :-)
//அருட்பெருங்கோ said...
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!!
வெற்றி பெற வாழ்த்துகள் வெட்டி :-)
( ஆனா , போட்டியில நாங்களும் கலந்துக்குவோம் ;-) )//
அருட்பெருங்கோ,
நான் போட்டிலயே கலந்துக்கல :-)
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
//மங்களூர் சிவா said...
//(சர்வேசா... போட்டில கலந்துக்கறது இந்த திருப்பம் போதுமா?)//
ப்ளாக்கர் புல்லா எங்க பாத்தாலும் திருப்பம்தான் பாத்து போகலைன்னா தடுக்கி விழ வேண்டியதுதான் போல!!
கதை நல்லா இருக்கு!!
//
ரொம்ப நன்றி :-)
//
//
புதுமாப்பிள்ளை எழுதும் கதை அல்லவா? அதான் கல்யாண மண்டப வாசம் கதை ஃபுல்லா வீசுது! :-)
//
ரிப்பீட்டேய்
//
இதெல்லாம் நொம்ப ஓவர் :-)
//
//
வெட்டிப்பயல் said...
அவருக்கு இருக்கு ஆப்பு...
இது எங்க வீட்ல சொல்லி நான் எழுதுன கதைனு கதை விட்டுட்டு இருக்காரு :@
//
வெட்டி அப்டியெல்லாம் இல்லைன்னு நாங்க எல்லாரும் நம்பிட்டோம்!!!//
ரொம்ப நல்லவரா இருக்கீங்களே ;)
//Blogger Sathiya said...
திருப்பம் நல்லா இருந்தது! முதல படிக்கும் போது புரியல, திருப்(ம்)பவும் படிச்ச வுடனே தான் புரிஞ்சது;)//
ஆஹா...
இது தான் இந்த மாதிரி கதைக்கு வெற்றியே! கடைசி வரி படிச்சதுக்கப்பறம் ரெண்டாவது தடவை படிக்க வைக்கறது :-))
(சும்மா பில்ட் அப்காக சொன்னது ;))
//✪சிந்தாநதி said...
நன்றாக கொண்டு போய் எதிர்பாராத திருப்பம் தந்திருக்கிறீர்கள்.... ஆனால் அந்த அவன் என்பது உறுத்தவே செய்கிறது.
//
சிந்தாநதி,
இந்த கருத்துல நான் மாறுபடுகிறேன். இது கதையாசிரியருக்கு இருக்கும் உரிமையாக எடுத்து கொள்கிறேன். அவன் என்று கதையாசிரியர் சொல்வதால் கதை மாந்தர்களின் வயதை நாமே யூகம் செய்து கொள்வது எல்லா இடங்களிலும் சரியல்ல என்பது என் தாழ்ந்த கருத்து :-)
//
பல இடங்களில் அவன் இடத்தில் சூர்யா என்ற பெயரையே போடலாம்,அவனை -தன்னை, மற்றும் சில இடங்களில் அவன்=நீக்கிவிட்டால் கூட பொருத்தமாகவே இருக்கும்,//
இப்படி செய்திருந்தாலும் நன்றாக இருந்திருக்கும் என்பதை நிச்சயம் ஒத்து கொள்கிறேன்.
//Ravikumar Veerasamy said...
கதை கருத்து நல்லாத்தான் இருக்கு, சூர்யா கேரக்டர்ஐ மாத்திரம் கொஞ்சம் அவன்னு போடாம வேற மாதிரி போட்டா பொருத்தமா இருக்கும்//
ரவிக்குமார்,
மிக்க நன்றி...
சிந்தாநதிக்கு சொன்னது தான் உங்களுக்கும் ;)
Post a Comment