தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, October 22, 2007

பயணக் கட்டுரை - 2

தமிழ் பேசறவங்கனு முகத்துலயே நல்லா எழுதி ஒட்டியிருந்தது.

அப்படியே பேச ஆரம்பிச்சதுல வலைப்பதிவை பற்றிய பேச்சு வந்தது.

நீங்க தான் வெட்டிப்பயலானு கேட்டு ஒரே ஆச்சரியம். உங்க ப்ளாக் தினமும் படிப்பேன். கதை எல்லாம் அருமையா எழுதறீங்க. உங்களை பார்ப்பேனு நான் நினைச்சி பார்க்கவேயில்லை. என் ஃபிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் உங்க கதையை பத்தி நிறைய பேசியிருக்கேன். கொல்ட்டி உண்மைக் கதையில்லைனு நம்பவே முடியல. தூறல் சான்சேயில்லைங்க... ஆனா சோகத்தை பிழிஞ்சிட்டீங்க. கரிக்கை சோழினு எப்படிங்க பேர் வைச்சிங்க. சூப்பர் பேரு சான்சேயில்லை. அது எப்படிங்க கவுண்ட மணியை வெச்சி இப்படி சூப்பரா எழுதறீங்க. உங்களை பார்த்தேனு போய் ஃபிரண்ட்ஸ்க்கு எல்லாம் மெயில் பண்ணனும்.

"இருந்தாலும் ஆட்டோகிராஃப் கேக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க. நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை. ப்ளீஸ் வேண்டாங்க."

"ஏக்ஸ்கியுஸ் மீ... நீங்க கொஞ்சம் முன்னாடி இருக்கற சீட்டுக்கு மாற முடியுமா?" அந்த விப்ரோ பெண்ணின் குரல் கேட்டு நினைவு திரும்பியது. அவள் பின்னால் ஒரு விப்ரோ பையன் நின்றிருந்தான். ஆஹா வலைப்பதிவரா இருக்கறதுல இது ஒரு பிரச்சனை. ஒரே நிமிஷத்துல எவ்வளவு யோசனை போகுது. சரி அவுங்க ஒரு VIPக்கூட ட்ராவல் பண்ற சான்சை மிஸ் பண்ணிட்டாங்கனு நினைச்சிக்கிட்டு முன்னாடி போய் அந்த பையனோட ஜன்னல் ஓர சீட்ல உக்கார்ந்தேன்.

அந்த ஃபிளைட்ல அனுஷ்கா, ரீமா சென் நடிச்ச ரெண்டு படமும், கோபிகா நடிச்ச எமட்டன் மகன் படமும் பார்த்துட்டே போனேன். ஏற்கனவே பார்த்திருந்தாலும் திரும்பவும் பார்த்துட்டு போனேன். குறிப்பிட்ட நேரத்தில் விமானம் சென்னையை சென்றடைந்தது. இரவு ஒரு மணிக்கும் சென்னை பளிச்சென்றிருந்தது... லக்கேஜ் வந்து சேர்வதற்கு ஒரு மணி நேரமானது.

வெளியே நின்ற கூட்டத்தில் அம்மா, அப்பா, தீபன் (என் ஃபிரெண்ட்) மூணு பேரும் அவ்வளவு கூட்டத்திலும் நன்றாக தெரிந்தார்கள். 16 மாதத்திற்கு பிறகு அம்மா, அப்பாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நான்கு மணி நேரமாக எனக்காக ஏர்போர்டில் நின்று கொண்டேயிருந்ததால், அம்மா சோர்வாக இருந்தாலும் முகத்தில் மகிழ்ச்சி அதிகமாகவேயிருந்தது. 20 மணி நேர பயண் அலுப்பும் அவர்களை பார்த்த ஒரு நொடியில் சென்றுவிட்டது.

அப்பாவும், என் நண்பனும் என்னிடமிருந்து பெட்டியை ஆளுக்கொருவராக வாங்கி கொண்டனர். காருக்கு சென்றவுடன் அம்மா தண்ணி, ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க. ஃபிளைட்ல ரெண்டு நாளா வெறும் கோக் மட்டும் குடிச்சிட்டு போனது அப்ப தான் நியாபகம் வந்துச்சி. எனக்கு ஸ்விட்னா ரொம்ப பிடிக்கும். ஆனா இங்க வந்ததுல இருந்து அதிகமா சாப்பிடறதில்லை. நமக்கு நாமே திட்டத்துல அதெல்லாம் எங்க தோணுது.

ஒரு வழியா நண்பனுக்காக வாங்கி சென்ற Sony DSC H2 கேமராவை அவனிடம் கொடுத்துவிட்டு, கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டேன்... வண்டி ஏற்போர்டிலிருந்து வரும் போதே எதிர்ல வந்த வண்டிகளை பார்த்து கொஞ்சம் ஜெர்க்கானேன். எல்லா திசைல இருந்தும் கண்டபடி வண்டி வந்து பார்த்து ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சா. அந்த எஃபக்ட் தான். ஒரு வாரத்துக்கு இந்த எஃபக்ட் இருந்துச்சு.

விழுப்புரத்துல ஒரு டீ வாங்கி குடிச்சோம். ஆஹா... இந்த ரோட்டோர டீக்கடைல குடிக்கிற டீக்கு இருக்குற ருசியே தனிதான். ரொம்ப ரசிச்சி குடிச்சேன். அப்பறம் விழுப்புரத்துல இருந்து உளுந்தூர்பேட்டை போற வழியில செம ட்ராஃபிக் ஜாம். என்னனு விசாரிச்சா யாருக்குமே தெரியல. எங்க டிரைவர் விவரமா தார் ரோட்டுக்கு கீழ இருக்குற மண் ரோட்டுலயே ஓட்டிட்டு போயிட்டாரு. கடைசியா பார்த்தா வழியில ஒரு ரயில்வே கேட்ல கொஞ்சம் முன்னாடியே கேட் போட்டிருக்காங்க. அதனால நிறைய டிரைவருங்க அப்படியே தூங்கிட்டாங்க. போற வழியில நாங்க நிறைய பேரை எழுப்பீட்டே போனோம்...

ஒரு வழியா ஊருக்கு 7 மணிக்கு போய் சேர்ந்தாச்சு. எல்லாம் வாசல்ல தண்ணி தெளிச்சி கோலம் போட்டிருந்தாங்க. கள்ளக்குறிச்சில ஒரு வருடத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. 7 மணிக்கு திருக்கோவிலூர் பெண்ணையாற்றிலிருந்து வரும் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் எல்லாரும் வெளி பைப்ல தண்ணி பிடிச்சிட்டு இருந்தாங்க.

விடியறதுக்கு முன்னாடி வந்துடனும் இல்லைனா எல்லாரும் பார்த்தா கண்ணு போட்ரூவாங்கனு எங்க பாட்டி சொல்லிருந்தாங்க போல. ஆனா ட்ராபிக் ஜாம் அவுங்களுக்கு எதிரா சதி பண்ணி கரெக்டா தெருவுல எல்லாரும் பார்க்கும் போது தான் விட்டுக்கு வந்து சேர்ந்தேன். வழியெல்லாம் ஒரே விசாரிப்பு. எல்லார்டயும் பேசிட்டு வீட்டுக்கு போனேன். வீட்டுக்குள்ள போனவுடனே அப்படி ஒரு சந்தோஷம். என்ன இருந்தாலும் 20 வருஷமா இருக்குற வீடாச்சே. ரொம்ப பாதுகாப்பான இடத்துல இருக்குற மாதிரி ஒரு மகிழ்ச்சி...

அன்னைக்கு வர வழியில பல இடங்களில் பயங்கரமா பட்டாசு வெடிச்சாங்க. எங்க ஊருல ராத்திரி முழுக்க ஒரு லோடு தேங்காய் உடைச்சிருக்காங்க. இருந்தாலும் இது ரொம்ப ஓவர் இல்லையா? சரி அதை பத்தி அடுத்த பாகத்துல பார்ப்போம்...

தொடரும்...

29 comments:

Boston Bala said...

ஆரம்பத்தில் 'வெட்டி' டச் என்றால், முடிவில் எங்களை டச் பண்ணிட்டிங்க

---வீட்டுக்குள்ள போனவுடனே அப்படி ஒரு சந்தோஷம். என்ன இருந்தாலும் 20 வருஷமா இருக்குற வீடாச்சே. ரொம்ப பாதுகாப்பான இடத்துல---

கலக்கல்!!!

துளசி கோபால் said...

விப்ரோ பையனையும், பொண்ணையும் பத்தி மேலதிகத் தகவல்கள் ஒண்ணும் இல்லையா?:-))))

இப்பத்தான் உங்க 'மாட்டோ' வை நம்ம பதிவில் பின்னூட்டமா நம்ம கொத்ஸ்க்கு சொல்லிட்டு வந்தேன்:-))))

ஊர்வந்தா இருக்கும் ஃபீலிங்ஸே தனி. சொல்ல வார்த்தை இருக்காது, அதையும் அனுபவிச்சாத்தான் புரியும்:-)

G.Ragavan said...

ஆட்டோகிராபெல்லாம் கேட்டாங்களா.. எங்கயோ போயிட்டப்பா....

மத்தபகுதியெல்லாம் படிச்சு முடிச்சு புன்னகைதான் பூக்குது.

தொடரு தொடரு...

Divya said...

\""இருந்தாலும் ஆட்டோகிராஃப் கேக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க. நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை. ப்ளீஸ் வேண்டாங்க."\"

உங்கள் கற்பனை நிறைவேறும் வெட்டி!

ரொம்ப அழகா, சுவாரஸ்யமா எழுதியிருக்கிறீங்க உங்க பயண அனுபவத்தை.......

பாராட்டுக்கள் வெட்டி, அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க, எதுக்கு பட்டாசு போட்டாங்கன்னு தெரிஞ்சிக்கனும்!!!

[\\ஒரு வழியா நண்பனுக்காக வாங்கி சென்ற Sony DSC H2 கேமராவை அவனிடம் கொடுத்துவிட்டு, கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டேன்... \
\"

நைஸா உங்க நண்பனுக்கு வாங்கிட்டு போன கிஃப்டையும் சொல்லி காட்டிடீங்க வெட்டி!]

ILA (a) இளா said...

//ஆட்டோகிராபெல்லாம் கேட்டாங்களா//
நெனப்பு பொழப்பை மட்டும் இல்லே பயணத்தையும் கெடுக்குமாம்.

---வீட்டுக்குள்ள போனவுடனே அப்படி ஒரு சந்தோஷம். என்ன இருந்தாலும் 20 வருஷமா இருக்குற வீடாச்சே. ரொம்ப பாதுகாப்பான இடத்துல---

கலக்கல்!!!

அபி அப்பா said...

தீபன் கவனிக்கவும்:-))

நாகை சிவா said...

சீட் மாதிரி வர்காந்ததை இப்படி பெருமையா அதுவும் சஸ்பென்ஸா சொல்லும் குணம் உனக்கு மட்டுமே உரித்தானது ராசா...

சென்னையை வெளிநாட்டு விமான நிலையத்தில் ஒரு தடவை தான் ரிடர்ன் வந்து இருக்கேன். லக்கெஜ் வர காட்டியும் நொந்துட்டேன்... அதுக்கு முன்னாடி விசாவுக்கு நின்னு அதுக்கும் மேல நொந்துட்டேன்...

அதிகாலை சாலை ஒர டீக்கடையின் தேநீரின் சுவையே தனி தான்...

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

ஆரம்பத்தில் 'வெட்டி' டச் என்றால், முடிவில் எங்களை டச் பண்ணிட்டிங்க

---வீட்டுக்குள்ள போனவுடனே அப்படி ஒரு சந்தோஷம். என்ன இருந்தாலும் 20 வருஷமா இருக்குற வீடாச்சே. ரொம்ப பாதுகாப்பான இடத்துல---

கலக்கல்!!!//

மிக்க நன்றி பாபா...
இது உண்மையில் உணர்ந்த ஒன்று...

வெட்டிப்பயல் said...

// துளசி கோபால் said...

விப்ரோ பையனையும், பொண்ணையும் பத்தி மேலதிகத் தகவல்கள் ஒண்ணும் இல்லையா?:-))))
//
அதுக்கு மேல எதுக்கு தகவல்???

//
இப்பத்தான் உங்க 'மாட்டோ' வை நம்ம பதிவில் பின்னூட்டமா நம்ம கொத்ஸ்க்கு சொல்லிட்டு வந்தேன்:-))))
//
பதிவ படிச்சா அனுபவிக்கனும். ஆராயக்கூடாதுனா???

சூப்பர்...

//
ஊர்வந்தா இருக்கும் ஃபீலிங்ஸே தனி. சொல்ல வார்த்தை இருக்காது, அதையும் அனுபவிச்சாத்தான் புரியும்:-)//
ரொம்ப சரி டீச்சர்...

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

ஆட்டோகிராபெல்லாம் கேட்டாங்களா.. எங்கயோ போயிட்டப்பா....

மத்தபகுதியெல்லாம் படிச்சு முடிச்சு புன்னகைதான் பூக்குது.

தொடரு தொடரு...//

ஜி.ரா,
படிச்சிதான் பின்னூட்டம் போட்டீங்களா?

வெட்டிப்பயல் said...

//Divya said...

\""இருந்தாலும் ஆட்டோகிராஃப் கேக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க. நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை. ப்ளீஸ் வேண்டாங்க."\"

உங்கள் கற்பனை நிறைவேறும் வெட்டி!
//

ரொம்ப டாங்ஸ்மா.. இருந்தாலும் ஆட்டோகிராஃப் எல்லாம் ரொம்ப ஓவர் ;)

// ரொம்ப அழகா, சுவாரஸ்யமா எழுதியிருக்கிறீங்க உங்க பயண அனுபவத்தை.......
//
மிக்க நன்றி

//
பாராட்டுக்கள் வெட்டி, அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க, எதுக்கு பட்டாசு போட்டாங்கன்னு தெரிஞ்சிக்கனும்!!!
//
இது வேறையா?

//
[\\ஒரு வழியா நண்பனுக்காக வாங்கி சென்ற Sony DSC H2 கேமராவை அவனிடம் கொடுத்துவிட்டு, கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டேன்... \
\"

நைஸா உங்க நண்பனுக்கு வாங்கிட்டு போன கிஃப்டையும் சொல்லி காட்டிடீங்க வெட்டி!]//

அது கிப்ட் இல்லை... இங்க இருந்து வாங்கிட்டு போய் அவந்த கொடுத்து திரும்ப காசு வாங்கியாச்சு... அது ஒரு பெரிய கதை :-)

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

//ஆட்டோகிராபெல்லாம் கேட்டாங்களா//
நெனப்பு பொழப்பை மட்டும் இல்லே பயணத்தையும் கெடுக்குமாம்.
//
அப்படி எதுவும் கெடுக்கலையே... நல்லபடியா ஊருக்கு போய் சேர்ந்தேன் ;)

//
---வீட்டுக்குள்ள போனவுடனே அப்படி ஒரு சந்தோஷம். என்ன இருந்தாலும் 20 வருஷமா இருக்குற வீடாச்சே. ரொம்ப பாதுகாப்பான இடத்துல---

கலக்கல்!!!//
மிக்க நன்றி விவ்ஸ் ;)

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

தீபன் கவனிக்கவும்:-))//

அவன் ப்ளாக் எல்லாம் படிக்க மாட்டான் ;)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

சீட் மாதிரி வர்காந்ததை இப்படி பெருமையா அதுவும் சஸ்பென்ஸா சொல்லும் குணம் உனக்கு மட்டுமே உரித்தானது ராசா...
//
நான் ஒன்னும் சீட் மாத்தி உக்காரல. அந்த பொண்ணுக்கு பக்கத்துல அந்த பையன் உட்கார்ந்து வந்தா சௌகர்யமா இருக்கும்னு நினைச்சிது போல... ரிக்வஸ்ட் பண்ணாங்க. நமக்கு எங்க உக்கார்ந்து வந்தா என்னனு போய் அந்த பையன் சீட்ல உக்கார்ந்துக்கிட்டேன்...

//
சென்னையை வெளிநாட்டு விமான நிலையத்தில் ஒரு தடவை தான் ரிடர்ன் வந்து இருக்கேன். லக்கெஜ் வர காட்டியும் நொந்துட்டேன்... அதுக்கு முன்னாடி விசாவுக்கு நின்னு அதுக்கும் மேல நொந்துட்டேன்...
//

அதே அதே... அதுவும் ஏர்போர்டுக்கு வெளிய அப்பா, அம்மா இருப்பாங்கனு யோசிக்கும் போது இருக்குற தவிப்பு இருக்கே.. இந்த அரை டவுசர் மண்டையனுங்களுக்கு அது எங்க புரியும்???

//
அதிகாலை சாலை ஒர டீக்கடையின் தேநீரின் சுவையே தனி தான்...
//
அதே அதே
3:40 PM//

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ILA(a)இளா said...
//ஆட்டோகிராபெல்லாம் கேட்டாங்களா//
நெனப்பு பொழப்பை மட்டும் இல்லே பயணத்தையும் கெடுக்குமாம்//

அச்சோ!
வெட்டி, எனக்குத் தோணவே இல்ல பாருங்க! பந்தலில் ஒரு ஆட்டோகிராப் போடுங்க தல!

//முன்னாடி போய் அந்த பையனோட ஜன்னல் ஓர சீட்ல உக்கார்ந்தேன்//

சரி விடுங்க! விப்ரோவும் விப்ரோவும் சேந்துக்குச்சு!
ஆனா ஜன்னலோர சீட்ல நீங்க ஒக்காந்தப்புறம் ஒங்க பக்கத்துல யாருப்பா ஒக்காந்தா?

//காருக்கு சென்றவுடன் அம்மா தண்ணி, ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க. ஃபிளைட்ல ரெண்டு நாளா வெறும் கோக் மட்டும் குடிச்சிட்டு போனது அப்ப தான் நியாபகம் வந்துச்சி//

ஹிஹி
எங்க வீட்டுல நடக்கறாப் போலவே இருக்கு! இப்பவே ஃபிளைட் பிடிச்சு போணும் ங்கிற ஆசைய கெளப்பி விடறீங்களே!
நவம்பர் மாசம் இதுக்குன்னே போயி வரலாமா-ன்னு யோசிக்கரேன்! என்ன சரியா? :-)

//போற வழியில நாங்க நிறைய பேரை எழுப்பீட்டே போனோம்...
//

அடா அடா அடா
பதிவுல ஏற்படுத்தற விழிப்புணர்ச்சி போதாதுன்னு கள்ளக்குறிச்சியிலுமா?

//திருக்கோவிலூர் பெண்ணையாற்றிலிருந்து வரும் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால்//

இங்க ஒரு குடம் ப்ளீஸ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்ன இருந்தாலும் 20 வருஷமா இருக்குற வீடாச்சே. ரொம்ப பாதுகாப்பான இடத்துல இருக்குற மாதிரி ஒரு மகிழ்ச்சி...//

:-)
அன்னை மடி மட்டுமில்ல!
நம் வீட்டின் மடியில், வெறுந் தரையில் தூங்குற சொகமே சொகம்!
அப்பிடி ஒரு பாதுகாப்பு!

//அன்னைக்கு வர வழியில பல இடங்களில் பயங்கரமா பட்டாசு வெடிச்சாங்க//

ஏன்? வெட்டிப்பயல்-ல "ட்"-டை வுட்டுட்டாங்களா? :-)

//எங்க ஊருல ராத்திரி முழுக்க ஒரு லோடு தேங்காய் உடைச்சிருக்காங்க//

ஏன்? சரவண பவன் புது பிராஞ்ச் ஏதாச்சும் ஓப்பன் பண்ணி சட்னி அரைக்கிறதுக்கா? :-)

இலவசக்கொத்தனார் said...

//சீட் மாதிரி வர்காந்ததை இப்படி பெருமையா அதுவும் சஸ்பென்ஸா சொல்லும் குணம் உனக்கு மட்டுமே உரித்தானது ராசா...//

ரிப்பீட்டேய்!

பாலராஜன்கீதா said...

//வர வழியில பல இடங்களில் பயங்கரமா பட்டாசு வெடிச்சாங்க. எங்க ஊருல ராத்திரி முழுக்க ஒரு லோடு தேங்காய் உடைச்சிருக்காங்க.//

இந்தியா 20-20 மட்டையடி ஆட்டத்தில் வெற்றி பெற்றதா ?

//இருந்தாலும் இது ரொம்ப ஓவர் இல்லையா? //
இல்லீங்ண்ணா 20 20 ஒவர்தான் (டாக்டர்.விஜய் குரலில் வாசிக்கவும்)
:-)

Anonymous said...

//காருக்கு சென்றவுடன் அம்மா தண்ணி, ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க. ஃபிளைட்ல ரெண்டு நாளா வெறும் கோக் மட்டும் குடிச்சிட்டு போனது அப்ப தான் நியாபகம் வந்துச்சி//

ஹிஹி
எங்க வீட்டுல நடக்கறாப் போலவே இருக்கு! இப்பவே ஃபிளைட் பிடிச்சு போணும் ங்கிற ஆசைய கெளப்பி விடறீங்களே!
நவம்பர் மாசம் இதுக்குன்னே போயி வரலாமா-ன்னு யோசிக்கரேன்! என்ன சரியா? :-)

ரீப்பிட்டேய்!!! எங்க அம்மா எங்கள receive பண்ண வந்தா, அவங்க ஒரு baggage கொண்டு வருவாங்க. sweet, பூ, தண்ணி, மினி‍ டிபன் எல்லாமும் இருக்கும்...எங்க அம்மா தான் அப்படினு நினச்சேன்... எல்லா அம்மாவும் அப்படி தானா? ஸுப்பர்!

SurveySan said...

ஆஹா. நானே ஊருக்கு போன மாதிரி இருக்கு.
கள்ளக்குறிச்சி எங்கே இருக்கு?

நான் இந்த தடவ போகும்போது எவ்ளோ பேர் ஆட்டோ க்ராஃப் கேக்கப் போறாங்களோ.. ஸ்ஸ்ஸ்ஸ். ஒட்டு தாடியோடதான் போகணும் ;)

Boston Bala said...

---ஏன்? வெட்டிப்பயல்-ல "ட்"-டை வுட்டுட்டாங்களா?---

உங்கள் பின்னூட்டங்களின் ரசிகர் மன்றத் தொண்டன் நான் ;)

கோபிநாத் said...

\\இந்த ரோட்டோர டீக்கடைல குடிக்கிற டீக்கு இருக்குற ருசியே தனிதான். ரொம்ப ரசிச்சி குடிச்சேன்\\

அட அட அதான் ருசியே ருசி தான் ;)

\\ 7 மணிக்கு திருக்கோவிலூர்\\

இங்க தான் சிவாஜி படம் பார்த்தேன்..:))

\ரொம்ப பாதுகாப்பான இடத்துல இருக்குற மாதிரி ஒரு மகிழ்ச்சி...\\

ம்ம்..கலக்கல் ;))

மங்களூர் சிவா said...

//
இருந்தாலும் ஆட்டோகிராஃப் கேக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க. நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை. ப்ளீஸ் வேண்டாங்க.
//
:-))

//எங்க ஊருல ராத்திரி முழுக்க ஒரு லோடு தேங்காய் உடைச்சிருக்காங்க//
//

எதாவது சாமி ஊர்வலமா??

cheena (சீனா) said...

அடப்பாவமே !! ஆட்டோகிராப் கேப்பான்னு கனவு கண்டா, சீட் மாறி உக்காரச் சொல்லிட்டாளே ... ம்ம்ம்ம்ம்

அதென்ன விப்ரோ பையன் விப்ரோ பொண்ணு - இருக்கட்டும் இருக்கட்டும்

அம்மா கையாலெ ஸ்வீட் - அம்மாக்குத் தான் தெரியும் குழந்தைக்கு என்ன பிடிக்கும்னு

கார்பயணம்-ரயில்வே கேட் - சுகம்

எத்தனி வர்சம் கழிச்சு வந்தாலும் வெளி நாட்டிலேந்து வந்தா வீடு சொர்க்கம்தான்.

படப வெடிச்சத்தம்-தேங்கா உடைச்சுக் கொண்டாடினாங்களக்கும். சரி சரி

கப்பி | Kappi said...

சென்னை ஏர்போர்ட் வாசல்ல வச்ச டிஜிட்டல் பேனர் பத்தி ஒன்னுமே சொல்லல? :)))

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ILA(a)இளா said...
//ஆட்டோகிராபெல்லாம் கேட்டாங்களா//
நெனப்பு பொழப்பை மட்டும் இல்லே பயணத்தையும் கெடுக்குமாம்//

அச்சோ!
வெட்டி, எனக்குத் தோணவே இல்ல பாருங்க! பந்தலில் ஒரு ஆட்டோகிராப் போடுங்க தல!

//முன்னாடி போய் அந்த பையனோட ஜன்னல் ஓர சீட்ல உக்கார்ந்தேன்//

சரி விடுங்க! விப்ரோவும் விப்ரோவும் சேந்துக்குச்சு!
ஆனா ஜன்னலோர சீட்ல நீங்க ஒக்காந்தப்புறம் ஒங்க பக்கத்துல யாருப்பா ஒக்காந்தா?
//
ஒரு வயசான அம்மா உக்கார்ந்து வந்தாங்க...

// //காருக்கு சென்றவுடன் அம்மா தண்ணி, ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க. ஃபிளைட்ல ரெண்டு நாளா வெறும் கோக் மட்டும் குடிச்சிட்டு போனது அப்ப தான் நியாபகம் வந்துச்சி//

ஹிஹி
எங்க வீட்டுல நடக்கறாப் போலவே இருக்கு! இப்பவே ஃபிளைட் பிடிச்சு போணும் ங்கிற ஆசைய கெளப்பி விடறீங்களே!
நவம்பர் மாசம் இதுக்குன்னே போயி வரலாமா-ன்னு யோசிக்கரேன்! என்ன சரியா? :-)
//
தாராளமா... இதெல்லாம் கேக்கனுமா?

//
//போற வழியில நாங்க நிறைய பேரை எழுப்பீட்டே போனோம்...
//

அடா அடா அடா
பதிவுல ஏற்படுத்தற விழிப்புணர்ச்சி போதாதுன்னு கள்ளக்குறிச்சியிலுமா?
//
இது வேறையா?

//
//திருக்கோவிலூர் பெண்ணையாற்றிலிருந்து வரும் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால்//

இங்க ஒரு குடம் ப்ளீஸ்!//

குடம் நீங்க எடுத்துட்டு வாங்க. நாங்க தண்ணி தரோம் ;)

மங்களூர் சிவா said...

//
கப்பி பய said...
சென்னை ஏர்போர்ட் வாசல்ல வச்ச டிஜிட்டல் பேனர் பத்தி ஒன்னுமே சொல்லல? :)))
//
ரிப்பீட்டேய்

கப்பி உன் கமெண்ட் என்ன குசும்பன் கமெண்ட் மாதிரியே இருக்கு??

குமரன் (Kumaran) said...

இந்தப் பயணக்கட்டுரைத் தொடர் இன்னும் எம்புட்டு நாளுக்கு இழுக்கப் போறீங்கன்னு ஒரு ஊகம் இருக்கு இப்ப.

உங்க கற்பனை எல்லாம் நல்லாத் தான் இருக்கு. :-)

MyFriend said...

அண்ணே, பெரிய பிரபலமா ஆயிட்டீங்க. ;-)