தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, September 27, 2007

முட்டாப்பய

"சிவா நேத்து ஈவனிங் திடீர்னு அம்மாக்கு உடம்பு சரியில்லை. அதான் நீ அவார்ட் வாங்கும் போது வர முடியல. எங்க அந்த அவார்டை கொஞ்சம் காட்டு". ஆர்வமாக வாங்கி பார்த்தாள் நித்யா.

அதை கொடுத்துவிட்டு எதை பற்றியும் சிந்திக்காமல் தன் கணினியில் முழுகினான் சிவா.

Most Valuable Person Of the Company பொன்னெழுத்துக்களில் மின்னி கொண்டிருந்தது.

"ஏய் சொல்ல மறந்துட்டேன். Congrats." சொல்லிவிட்டு அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் ஏமாற்றமாக தன் இடத்தில் சென்று அமர்ந்தாள் நித்யா.

"Congrats சொன்னா ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல தெரியல. இவனுக்கெல்லாம் ஒரு அவார்ட்" மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு மேனஜர் சிவாவை கான்ஃபரன்ஸ் ரூமிற்கு அழைத்து சென்றார்.

"சிவா, நீ டெவலப் பண்ண டூல் இனிமே கம்பெனில இருக்கற எல்லாருக்கும் பயன்பட போகுது. உனக்கு இங்க நல்ல ஸ்கோப் இருக்கு"

"தேங்க்ஸ் சரவ்"

"ஆனா நீ டீம்ல யார்கிட்டயும் சரியா பேச மாட்றனு எல்லாரும் ஃபீல் பண்றாங்க. நானும் நீ டீம்ல மிங்கிலாகி பார்த்ததேயில்லை"

" "

"நீ ப்ரில்லியண்ட்தான். ஆனா இந்த மாதிரி கம்பெனில ப்ரில்லியண்டா இருக்கறதைவிட நல்ல டீம் வொர்க்கரா இருக்கனும். இது உன் கெரியரை
கெடுத்துடக்கூடாதுனு தான் உன்னை தனியா கூப்பிட்டு சொல்றேன். உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்கிட்ட சொல்லு. ஐ வில் ட்ரை டு கெட் இட் ரிசால்வ்ட்"

" "

"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"

"அப்படியெல்லாம் இல்லை சரவ்"

"எல்லாம் நீ நடந்துக்கறதுல தான் இருக்கு. சரி. இனிமே டீம்ல எல்லார்கிட்டயும் சகஜமா பழகு. அப்பறமா பேசலாம்"

வெளியே வந்தவுடன் தன் இடத்திற்கு சென்று அமைதியாக வேலையை செய்ய துவங்கினான்.

9 மணி பஸ் பிடித்து கொரமங்களா சென்று சேரும் போது மணி 11 ஆகியிருந்தது. பெங்களூரை தவிர வேறு எந்த ஊரிலும் 15 கிலோமிட்டர்

செல்ல இரண்டு மணி நேரமாகாது என்று நினைத்து கொண்டு வீட்டில் நுழைந்தான்.

அந்த ஒரு படுக்கையறை மட்டும் கொண்ட வீட்டில் சிவா தனியே தங்கியிருந்தான். பெங்களூரிலிருக்கும் கட்டட பொறியாளர்களுக்கு ஜன்னல், ஷெல்ப் எல்லாம் என்ன என்றே தெரியாது என்பதை அந்த வீடும் நிருபித்திருந்தது. உடை மாற்றிவிட்டு படுக்கைக்கு சென்றான் சிவா.

அவனுக்கு அவன் மேனஜரிடம் பேசியதே நினைவில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"

"நீ புத்திசாலியா இருக்கறதால...நீ புத்திசாலியா இருக்கறதால"

"ஏன்டா உன் மண்டைல இருக்கறது என்ன மூளையா இல்லை களி மண்ணா? ஒரு தடவையாது பாஸாகறயா? எப்படிடா நீ ஒம்போதாம் க்ளாஸ் வரைக்கும் பாஸான?"

அமைதியாக நின்று கொண்டிருந்தான் சிவா.

"சரி கைய நீட்டு"

கையை நீட்டினான். கணக்கு வாத்தியார் சுப்பிரமணி அடித்த அடியில் அந்த பிரம்பு உடைந்து போனது.

"டேய் கோபாலு, போய் ஸ்டாஃப் ரூம்ல இன்னொரு பெரம்பு இருக்கும் அதை எடுத்துட்டு வா. இதுக்கெல்லாம் இவ்வளவு அடி வாங்கனாலும் உறைக்காது. நம்ம கைதான் வலிக்கும்"

கோபால் வேகமாக ஓடி போய் புது பிரம்பை கொண்டு வந்தான்.

ஃபெயிலானவர்கள் ஒவ்வொருவராக அடி வாங்கி கொண்டிருந்தனர்.

"என்னமா கவிதா. நல்லா படிக்கிற பொண்ணு நீ. நீ போய் ஃபெயிலாயிருக்க. என்ன ஆச்சு?"

அமைதியாக தலையை குனிந்த படி நின்றிருந்தாள் கவிதா.

"சரி கையை நீட்டு. இந்த தடவை அடி வாங்கினா தான் அடுத்த முறை நல்லா படிப்ப"

அவள் பயந்து கொண்டே கையை நீட்டினாள்.

"வர வர மாமியா கழுத போல ஆனாளாம். என்ன?" சொல்லி கொண்டே அடித்தார்.

" "

"வர வர மாமியா கழுத போல ஆனாளாம்"

அவள் அழுது கொண்டே அமர்ந்தாள்.

அடுத்த நாள்.

ஆங்கில வகுப்பு

"மெமரி போயம்ஸ் எல்லாம் மூணு தடவை எழுதிட்டு வர சொன்னேனே. எல்லாம் நோட் எடுத்து வைங்க.
எழுதாதவங்க ஒழுங்கு மரியாதையா வெளிய வந்து முட்டி போட்டு எழுதிட்டு உள்ள வாங்க"

முதல் ஆளாக சிவா எழுந்து சென்றான்.

"அதான நீ எல்லாம் எங்க உருப்பட போற. உங்க அப்பா கூட கட்சில சேர்ந்துடு. இந்த பள்ளிக்கூடமாவது உருப்படும்"

முறைத்து கொண்டே சென்றான் சிவா.

"என்னடா முறைக்கிற? ஒழுங்கா போய் முட்டி போடு"

வகுப்பிலிருந்து ஒரு பதினைந்து மாணவர்கள் எழுந்து சென்றனர். கவிதா எழுந்து செல்வதை பார்த்தவுடன் ஆசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஏம்மா கவிதா, நேத்து நான் மெமரி போயம்ஸ் எழுதிட்டு வர சொன்னேன் தானே?"

"ஆமா சார்" மெல்லிய குரலில் சொன்னாள் கவிதா.

"அப்ப ஏன் எழுதிட்டு வரல? உடம்பு ஏதாவது சரியில்லையா?"

அமைதியாக இருந்தாள்.

"ஏம்மா ஃபர்ஸ்ட் ரேங் எடுக்கற பொண்ணு. நீயே இப்படி இருக்கலாமா? சரி எல்லாரும் உள்ள போய் உக்காருங்க. நாளைக்கு எழுதிட்டு வாங்க"

அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். மதிய உணவு வேளையின் போது அழுது கொண்டிருந்தாள் கவிதா. சிவாவிற்கு கவிதா அழுவதை பார்த்து பிடிக்காமல் நேராக அவளிடம் சென்றான்.

"ஏய் இப்ப என்ன ஆச்சுனு இப்படி அழுவற? அவர் தான் முட்டி போட வேணாம்னு சொல்லிட்டார் இல்லை"

"நான் ஒண்ணும் அதுக்கு அழுவல"

"பின்ன? நேத்து அடி வாங்கனதுக்கா? எங்க கையை காட்டு"

அவள் கை சிவந்திருந்தது.

"ஏன் இப்பல்லாம் ஒழுங்கா படிக்க மாட்ற? நல்லா தானே படிச்சிட்டு இருந்த? அத்தை ஏதாவது வேலை செய்ய சொல்லி திட்றாங்களா? இல்லை அந்த கிழவி ஏதாவது சொல்லுதா?"

அவன் கிழவி என்று குறிப்பிட்டது அவன் பாட்டியைத்தான். கவிதா சிவாவின் தாய் மாமன் மகள்.

அவனை சுட்டெரிப்பது போல முறைத்தாள்.

"சரி முறைக்காத. ஒழுங்கா சொல்லு. ஃபெயிலாயிடுவனு சொல்லியிருந்தா, அந்த பேப்பர் கட்டையே சுட்டுட்டு வந்திருப்பேன். நீதான் சொல்லாம விட்டுட்ட. நேத்து உன்னை அடிச்சப்பவே அந்தாள ரெண்டுல ஒண்ணு பார்த்திருப்பேன். அப்பறம் விஷயம் அப்பாக்கிட்ட போயிடும்னு தான் விட்டுட்டேன்"

அவள் அழுது கொண்டே இருந்தாள்.

"இப்ப சொல்றயா இல்லையா?"

"என்னைவிட நீ எத்தனை வருஷம் பெரியவன்?"

"ரெண்டு வருஷம். ஏன் இப்ப அதுக்கு என்ன?"

"ஒழுங்கா படிக்காம நீ ஏற்கனவே ரெண்டு வருஷம் பெயிலாயிட்ட. இப்ப நீ படிக்கற லட்சணத்துக்கு எப்படியும் பாஸாக மாட்ட. நான் நல்லா படிச்சா எங்க அப்பா எனக்கு படிச்ச மாப்பிள்ளையா பார்த்து கட்டி கொடுத்துடுவாறோனு பயமா இருக்கு. அதான் நானும் படிக்காம ஃபெயிலாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்"

"எனக்கு கட்டி கொடுக்காமவிட்டுடுவாறா என் மாமன். அவ்வளவு தான். உன்னைய தூக்கிட்டு போயாவது கட்டிக்க மாட்டேன்"

"தூக்குவ தூக்குவ" கண்ணை துடைத்து கொண்டே கேலியாக அவள் சொன்னது அவனை என்னமோ பண்ணியது.

"பார்த்துக்கிட்டே இரு. உன்னைய மட்டும் கட்டிகொடுக்க மாட்டேனு சொன்னா எங்க ஆளுங்களோட வீடு புகுறனா இல்லையானு"

"இவ்வளவு பண்றதுக்கு ஒழுங்கா படிச்சி பாஸாகறனு சொல்லலாம் இல்லை"

"ஏய். இதுக்கெல்லாம் படிக்க முடியாது. நான் எவ்வளவு ஈஸியா சொல்லிட்டு இருக்கேன். நீ என்னுமோ கஷ்டப்பட்டு படினு சொல்ற. அதெல்லாம் ஆகற விஷயமா? இந்த பழப்பசங்க தான் படிப்பானுங்க. நாங்க எல்லாம் வீரனுங்க. சூப்பர் ஸ்டார் மாதிரி படிக்காத மேதைங்க. புரியுதா?"

"என்னுமோ பண்ணு. ஆனா நீ பாஸாகற வரைக்கும் நானும் பாஸாக மாட்டேன். நீ வாங்குற அடியை நானும் வாங்கனும். இப்பல இருந்தே நான் உன் பொண்டாட்டியா பழகிக்கிறேன்."

"ஏய். நீ அடி வாங்கறத பார்த்துட்டு என்னால இருக்க முடியாது. உன்னை எந்த வாத்தியாவது அடிச்சானா அவனுக்கு அன்னைக்கு பூச தான். நீயே முடிவு பண்ணிக்கோ"

"இங்க பாரு, நான் பர்ஸ்ட் ரேங் எடுக்கும் போது செகண்ட் ரேங் எடுக்கற பையனோட பேரை என் பேர் பின்னாடி சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல. நீ எப்படியும் எனக்கு அடுத்தோ எனக்கு முன்னாடியோ வர போறதில்லை. அதான் உன் இடத்துக்கு நான் வரேன். ஆனா அடி வாங்கும் போது தான் உயிர் போகற மாதிரி வலிக்குது. உனக்கும் அப்படித்தானே வலிக்கும்னு நினைக்கும்போது உன் வலியை அனுபவிக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு"

அவன் எதுவும் பேசாமல் அவனிடத்திற்கு போய் அமர்ந்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் கவிதா 4 முறை அடி வாங்கினாள். இரண்டு முறை வகுப்பிற்கு வெளியே முட்டி போட்டு கொண்டிருந்தாள்.

அதன் பிறகு சிவாவின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தன. அடுத்து நடந்த மாத தேர்வில் சிவா பாஸ் மார்க் எடுத்திருந்தான். ஏதோ சூழ்ச்சி நடந்திருக்குமென ஆசிரியர்களும், சில மாணவர்களும் நினைத்து கொண்டனர்.

ஒரு ஞாயிறு மாலை அவன் கணக்கு ஆசிரியர் சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்றான்.

"என்னப்பா? யாரு வேணும்"

"இது கணக்கு வாதியார் சுப்பிரமணியம் வீடு தானே?"

"ஆமாம். நீ யாருப்பா?"

"நான் அவர் ஸ்டுடண்ட் மேடம். சார் இருக்காரா?"

"இருக்காருப்பா. உள்ள வா.
என்னங்க இங்க உங்களை பார்க்க உங்க ஸ்டுடண்ட் யாரோ வந்திருக்காங்க பாருங்க" சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

"வாப்பா. என்ன விஷயம்? வீடு தேடி வந்திருக்க?"

"சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"

"சரி உள்ளே வா". தனியாக அவனை ஒரு அறைக்குள் அழைத்து சென்று அவனை அவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தார்.

"சொல்லுப்பா. என்ன பிரச்சனை?"

"சார். எங்க அப்பா கட்சி, அரசியல்னு இருந்துட்டாரு. எனக்கும் சின்ன வயசுல இருந்து யாரும் படிக்கனும்னு பெருசா சொன்னதில்லை. நான் ஃபெயிலானப்ப கூட அதை கேட்டுட்டு அங்க இருந்த எல்லாரும், எந்த வாத்திடா உன்னை ஃபெயிலாக்கனது. சொல்லு. அடிச்சி பாஸாக்க வைச்சிடறோம்னு தான் சொன்னாங்க. தவிர, என்னை படினு யாரும் சொன்னதில்லை. எனக்கு படிக்கனும்னு பெருசா தோனனதுமில்லை. ஆனா இப்ப திடீர்னு படிக்கனும்னு ஆசை வந்துடுச்சி சார். நானும் எவ்வளவோ கஷ்டப்பட்டு போன பரிட்சைக்கு படிச்சேன், ஆனா என்னால பாஸ் மார்க் மேல வாங்க முடியல சார். படிச்சது எல்லாம் பரிட்சைல மறந்து போகுது சார். எனக்கும் கணக்குல 100 மார்க் வாங்கனும், க்ளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கனும்னு ஆசையா இருக்கு சார். நீங்க தான் உதவி செய்யனும்"

அவனை ஆச்சரியமாக பார்த்தார் சுப்பிரமணியம்.

"நீ இப்படி பேசும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. வாழ்க்கைல எந்த ஒரு விஷயத்துல வெற்றி பெறதுக்கு இந்த விஷயங்கள் தான் முக்கியம். அது ஆர்வம், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி. இது இருந்தா தானா ஜெயிக்கலாம். சரி, போன வருஷம் நடந்த உலக கோப்பைல பாகிஸ்தானோட அதிக ரன் அடிச்சது யாரு?"

"சித்து சார்... 93 ரன் அடிச்சாரு"

"ரஜினியை ராபின் ஹூட்னு எந்த படத்துல சொல்லுவாங்க?"

"நான் சிகப்பு மனிதன் சார்"

"பாரு. இதெல்லாம் உனக்கு எப்படி நியாபகமிருக்கு?"

" "

"எல்லாத்துக்கும் ஆர்வம் தான் காரணம். அப்பறம் அதை நினைச்சிட்டே கொஞ்ச நேரம் இருக்கறது. சித்து 93 எடுத்து அவுட் ஆனப்ப இன்னும் 7 அடிச்சிருக்கலாமேனு கொஞ்ச நேரம் முழுக்க மனசுல இருக்கும். ரஜினி படமும் அப்படிதான். அப்படி யாராவது இருந்து இந்த சமூகத்தை திருத்தினா எப்படி இருக்கும்னு இருக்கும். இப்படி ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டதுக்கப்பறம் அதை பத்தி மனசு கொஞ்ச நேரம் சிந்திச்சா அது அவ்வளவு சீக்கிரம் மறக்காது.

அப்பறம் படிக்கறதை மறக்க கூடாதுனா மூணு "R" முக்கியம். "Read", "Recall" "Revise". படிக்கும் போது வேற எதை பத்தியும் சிந்திக்காம படிக்கனும். அது தான் ரீட். படிச்சதை கொஞ்ச நேரம் கழிச்சி திரும்ப நினைவுக்கு கொண்டு வர பார்க்கனும். அது தான் ரீ கால். அப்பறம் படிச்சதை திரும்ப திரும்ப படிக்கனும். ஏற்கனவே படிச்சிட்டோமேனு நினைக்க கூடாது. அது தான் ரிவைஸ். நானே ஒவ்வொரு வகுப்புக்கும் போறதுக்கு முன்னாடி ரிவைஸ் பண்ணிட்டு போவேன்"

அவர் பேசுவதை ஆர்வமாக அவன் கேட்டு கொண்டிருந்தான். நன்றாக படிக்க வேண்டும் என்ற வெறி அவன் கண்களில் தெரிந்ததை அவர் கவனித்தார். இவன் இவ்வளவு மாறியதற்கு காரணத்தை அவர் அறியவில்லை.

சிவாவின் நடத்தையில் பெரும் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. அவன் கண் எப்பொழுதும் சிவந்தேயிருந்தது. ஒவ்வொரு வகுப்பிற்கும் முன் அவன் முகம் கழுவி வந்தான். அவன் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்து கொள்வதை பார்த்த நண்பர்களுக்கு அவன் ராத்திரி அதிகமாக தூங்குவதில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அடுத்து நடந்த ஒவ்வொரு தேர்விலும் அவன் படிப்படியாக முன்னேறி கொண்டே வந்தான்.

கவிதாவிற்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளும் அவனுடன் போட்டி போட்டு படிக்க ஆரம்பித்தாள். அவளை சில பாடங்களில் அவன் முந்தியதும், அனைவருக்கும் முன் பதில் சொல்லியதும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி அவன் வீட்டுக்கு சென்று அத்தையிடம் அவன் படிக்க ஆரம்பித்ததை சொல்லி சந்தோஷப்பட்டாள். அவன் அம்மாவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

"எங்க இவனும் இவுங்க அப்பா மாதிரியே ஆயிடுவானோனு பயந்துட்டு இருந்தேன். நல்ல வேளைம்மா இவன் படிக்க ஆரம்பிச்சிட்டான். இந்த வருஷம் மட்டும் இவன் பாசாயிட்டா நம்ம கொலதெய்வத்துக்கு கடாவெட்டி பொங்க வைக்கறேனு வேண்டிக்கிட்டிருக்கேன்"

"அத்தை அவர் படிக்கறத பார்த்தா ஸ்டேட் ரேங் எடுத்துடுவாரோனு எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீங்க என்னனா பாசானா போதும்னு வேண்டிக்கிட்டிருக்கீங்க"

"என்னுமோ நல்லா படிச்சா சரிதான்"

ஒரு வழியாக பத்தாவது தேர்வை நல்ல படியாக எழுதி முடித்தனர் சிவாவும், கவிதாவும். சிவா பெரும்பாலும் கணக்கு வாத்தியார் சுப்பிரமணி வீட்டிலே தங்கி படித்தான். கணக்கில் கண்டிப்பாக நூத்துக்கு நூறு வாங்குவான் என நம்பினார் சுப்பிரமணி.

"சார் தந்தி வந்திருக்கு" போஸ்ட்மேன் சொல்லியதை கேட்டதும் கவிதாவும் அவள் அம்மாவும் பயந்தே விட்டனர்.

கவிதாவின் அப்பா தந்தியை வாங்கி பார்த்தார். மிகவும் சந்தோஷமாக கவிதாவை அழைத்தார்.

"கவிதா இந்த நம்பர் நம்ம சிவாதானு கொஞ்சம் சொல்லு 973654673"

"ஆமாம்பா. மாமாது தான். ஏன்ப்பா? என்னாச்சு?"

"இது உன் நம்பர் தானே 973654662"

"ஆமாம்பா. ஏன்? சீக்கிரம் சொல்லுங்கப்பா"

"நீ 482 மார்க் வாங்கியிருக்கம்மா. நம்ம சிவா 481 மார்க் வாங்கியிருக்கான். அனேகமா டிஸ்ட்ரிக்ட்ல முதல் மார்க் நீ தானு நினைக்கிறேன். என் ஃபிரெண்ட் மெட்ராஸ்ல இருந்து பார்த்து தந்தியடிச்சிருக்கான். இரு நான் போய் சிவாட்ட சொல்லிட்டு வந்திடறேன். என் தங்கச்சி கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா"

கவிதாவால் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவள் பெயருக்கு பின்னால் அவன் பெயர் திருமண பத்திரிக்கைக்கு முன் தினசரி பத்திரிக்கையில் வர போவதை நினைத்து சந்தோஷப்பட்டு வானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.

"அப்பா, அத்தைட்ட நான் போய் சொல்லிட்டு வந்திடறேன்பா. ப்ளீஸ்பா"

மகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவளை சைக்கிளில் அனுப்பி வைத்தார். சந்தோஷமாக சைக்களில் வேகமாக மிதித்து வந்தாள் கவிதா.

................

"டேய் சிவா கடைசியா ஒரு தடவை அவளை பார்த்துட்டு வந்துடுடா. அவ கண்ணு உன்னை தான் தேடுதுனு நினைக்கிறேன்" சிவாவின் அம்மா அழுது கொண்டே சொன்னார்.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே உணர்ச்சியற்று நின்று கொண்டிருந்தான் சிவா. அனைவரும் எவ்வளவு சொல்லியும் அவன் கடைசி வரை கவிதாவை சென்று பார்க்கவில்லை. அவள் மேல் வண்டியேற்றிவிட்டு சென்ற அந்த கார் டிரைவரை எப்படியும் கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து சில நாட்களில் அதையும் விட்டுவிட்டான்.

..............

"கவிதா உன் பேரை தவிர யார் பேருக்கும் பின்னால என் பேரு வரவிடாம இது வரைக்கும் பார்த்துட்டு இருக்கேன். கவிதா உனக்கு ஒண்ணு தெரியுமா? அந்த பழைய முட்டாள் சிவா சந்தோஷமா இருந்தான் கவிதா"

"ஆண்டவா நான் மறுபடியும் முட்டாளாவே ஆயிடறேன். எனக்கு என் கவிதாவை மட்டும் திருப்பி தா. நான் முட்டாளாவே இருந்துடறேன்... நான் முட்டாளாவே இருந்துடறேன். எனக்கு எந்த அவார்டும் வேண்டாம். கவிதாவை மட்டும் கொடு. ப்ளீஸ்"

வழக்கம் போல் அவன் தலையணை முழுதும் கண்ணீரால் ஈரமாகியிருந்தது...

90 comments:

வெட்டிப்பயல் said...

எப்பவும் என் கதைல நான் தான் முதல் பின்னூட்டம் போடனும்னு எழுதப்படாத விதி போலருக்கு...

ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு கதை எழுதியிருக்கேன். பிடிச்சிருந்தா சொல்லுங்க. பிடிக்கலைனாலும் தாராளமா சொல்லலாம்...

Anonymous said...

Excellent Touch.....

Yes.....Everyone gets experience in different way to boost the moral to succeed ( I got this by a Christian Father who used to call me Karuma b'cos I am Karuppu). Now I am a owner of a consulting company in USA.

The Father is in India still as HM making fun of students b'cos my brother's sons are students.

-K

ILA (a) இளா said...

ஏதோ சம்மட்டி வெச்சு மனசை ரெண்டா உடைச்சா மாதிரி இருக்கு வெட்டி. அழுவாச்சியா வருது

இராம்/Raam said...

அடபாவி.... இப்பிடி செண்டியா ஆக்கிட்டே..... :((


ஒன்னோட எல்லா கதை முடிவு மாதிரி இருக்குமின்னு அந்த முதல் கோடு வரைக்கும் எதிர்பார்த்தேன்..... :(

வெட்டிப்பயல் said...

//
ஒன்னோட எல்லா கதை முடிவு மாதிரி இருக்குமின்னு அந்த முதல் கோடு வரைக்கும் எதிர்பார்த்தேன்..... :(//

எல்லா கதை முடிவுமா?

கொல்ட்டி, தூறல், ஏன்?

இதெல்லாம் முடிவு மறந்து போச்சா?

இராம்/Raam said...

//
ஒன்னோட எல்லா கதை முடிவு மாதிரி இருக்குமின்னு அந்த முதல் கோடு வரைக்கும் எதிர்பார்த்தேன்..... :(//

எல்லா கதை முடிவுமா?

கொல்ட்டி, தூறல், ஏன்?

இதெல்லாம் முடிவு மறந்து போச்சா?
//

அதெல்லாம் இந்த அளவுக்கு ஃபீல் பண்ண வைக்கலைப்பா.... :( அது எல்லாமே சாப்ட்வேர் ஃபீல்ட்'லே நடக்கிற கதையா தோணுதினாலே கூட இருக்கலாம்.

ஆனா இந்த கதையை ஐடி ஃபீல்ட்'லிலே ஸ்டார்ட் பண்ணினாலும் கதை நகர்ந்தது வேற இடத்திலே......

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

//
ஒன்னோட எல்லா கதை முடிவு மாதிரி இருக்குமின்னு அந்த முதல் கோடு வரைக்கும் எதிர்பார்த்தேன்..... :(//

எல்லா கதை முடிவுமா?

கொல்ட்டி, தூறல், ஏன்?

இதெல்லாம் முடிவு மறந்து போச்சா?
//

அதெல்லாம் இந்த அளவுக்கு ஃபீல் பண்ண வைக்கலைப்பா.... :( அது எல்லாமே சாப்ட்வேர் ஃபீல்ட்'லே நடக்கிற கதையா தோணுதினாலே கூட இருக்கலாம்.

ஆனா இந்த கதையை ஐடி ஃபீல்ட்'லிலே ஸ்டார்ட் பண்ணினாலும் கதை நகர்ந்தது வேற இடத்திலே......//

சரி... இப்ப தானே பழகிக்கறேன்.. போக போக வெளி உலகத்துக்கு வருவேனு நினைக்கிறேன் :-)

G.Ragavan said...

நல்லா கதை சொல்ற. ரொம்ப நல்லாவே கதை சொல்ற. உங்கிட்ட கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு. நெறையவே இருக்கு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Most Valuable Person Of the Company பொன்னெழுத்துக்களில் மின்னி கொண்டிருந்தது//

Most Valuable Person Of the Company of Kavitha ???

சோக முடிவுன்னாலும், நல்ல புரிதலோடத் தான் முடிச்சி இருக்கீங்க பாலாஜி!
உங்க கதைகளில் முடிவு மாறி மாறி வந்தாலும், எல்லாவற்றிலும் ஒரு ஜீவன் இருக்கத் தான் செய்கிறது!

அனா அதுக்குக் கதை காரணம் அல்ல!
உஙக வசனங்கள் தான் காரணம்! -
கதை ஆழத்தைக் காட்டிலும் வசன ஆழம் நிறைய! இது என் தனிப்பட்ட கருத்து தான்!

இந்தக் கதையிலும் கூட
//நான் பர்ஸ்ட் ரேங் எடுக்கும் போது செகண்ட் ரேங் எடுக்கற பையனோட பேரை என் பேர் பின்னாடி சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல//

//நீ 482 மார்க் வாங்கியிருக்கம்மா. நம்ம சிவா 481 மார்க் வாங்கியிருக்கான்
...
அவள் பெயருக்கு பின்னால் அவன் பெயர் திருமண பத்திரிக்கைக்கு முன் தினசரி பத்திரிக்கையில் வர போவதை நினைத்து//

இது தான் கதையின் முடிவை எதிர்ப்பவர்களையும் ஆறுதல் செய்ய வைக்கும் டெக்னிக்கா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவ கண்ணு உன்னை தான் தேடுதுனு நினைக்கிறேன்//

முட்டாப் பய இங்கன மட்டும் முட்டாத பையனா இருந்திருக்கலாமோ? கதையின் பாரம் இங்க தான்!

Unknown said...

கதை நல்லா இருந்தது!

ஆமா, இதுல கவிதா கொல்ட்டா இல்ல சிவாவா, இல்ல உறவு முறையிலேயே தெலுகு பேசறவங்களா, ஒண்ணுமே புரியலியே? (இன்னிக்கு கொலை வெறி அதுனால இந்த வரி!)

இராம்/Raam said...

//சரி... இப்ப தானே பழகிக்கறேன்.. //


ஏலேய் இதுக்கு பேரு'ந்தாய்யா தன்னட்டக்கம்..... :)

//போக போக வெளி உலகத்துக்கு வருவேனு நினைக்கிறேன் :-)///

வா..வா...

"ஏன்" மாதிரி ஃபீல் பண்ண வைக்கிற கதைகளை எதிர்பார்க்கிறோம்....

Boston Bala said...

கதையில் ரசிக்கவைத்த இடங்கள்:
* பெங்களூரை தவிர வேறு எந்த ஊரிலும் 15 கிலோமிட்டர் செல்ல இரண்டு மணி நேரமாகாது என்று நினைத்து கொண்டு வீட்டில் நுழைந்தான்.

* பெங்களூரிலிருக்கும் கட்டட பொறியாளர்களுக்கு ஜன்னல், ஷெல்ப் எல்லாம் என்ன என்றே தெரியாது என்பதை அந்த வீடும் நிருபித்திருந்தது.
-----

திடீர்னு மெஸேஜ்.. ஆங்காங்கே 'உருகுதே..மருகுதே'... ஆரம்பத்தில் வெட்டி ஸ்டைல் காதல் கதையோ என்று தோன்ற வைப்பது...

எல்லாமே கலக்கல் என்றாலும் முடிவில் திரைப்படத்தை முடிக்கத் தெரியாத பாரதிராஜா ஆயிட்டீங்களே :(

படிக்கிற வயசில் சினிமா பார்த்தால் தொழில் வல்லுநர் ஆகலாம்; நெட்டுரு போட்டால் நிரலி எழுதலாம்; போன்ற விஷயங்களை விட்டுடலாம். சடார் முடிவு கொடுக்கணும்னு தேவையில்லாத இடைச்செருகலோ என்று க்ளைமேக்ஸ் தோணவைக்குது.

அருமையான நடை. எடுப்பான உடை. உருக்கமான ஆடை. தொடுப்பில்லாத இடை. (ரைமிங்கா சொல்ல நினைச்சேன்... ;) சுருக்கமாக லாஜிக் இல்லாத கதை :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

Excellent Touch.....

Yes.....Everyone gets experience in different way to boost the moral to succeed ( I got this by a Christian Father who used to call me Karuma b'cos I am Karuppu). Now I am a owner of a consulting company in USA.

The Father is in India still as HM making fun of students b'cos my brother's sons are students.

-K//

Thx a lot Friend...

Even I studied in a Christian school. But the Father (His name was Agnel) was too good.

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

ஏதோ சம்மட்டி வெச்சு மனசை ரெண்டா உடைச்சா மாதிரி இருக்கு வெட்டி. அழுவாச்சியா வருது//

அப்படியெல்லாம் சொல்லப்படாது.. வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜம் :-)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

நல்லா கதை சொல்ற. ரொம்ப நல்லாவே கதை சொல்ற. உங்கிட்ட கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு. நெறையவே இருக்கு.//

தெய்வமே,
நீங்களே இப்படி சொல்லலாமா?
உங்ககிட்ட இருந்து கத்துக்கறது தான் இதெல்லாம்...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Most Valuable Person Of the Company பொன்னெழுத்துக்களில் மின்னி கொண்டிருந்தது//

Most Valuable Person Of the Company of Kavitha ???

சோக முடிவுன்னாலும், நல்ல புரிதலோடத் தான் முடிச்சி இருக்கீங்க பாலாஜி!
//
மிக்க நன்றி தலிவா...

//
உங்க கதைகளில் முடிவு மாறி மாறி வந்தாலும், எல்லாவற்றிலும் ஒரு ஜீவன் இருக்கத் தான் செய்கிறது!
//
டபுல் நன்றி

// அனா அதுக்குக் கதை காரணம் அல்ல!
உஙக வசனங்கள் தான் காரணம்! -
கதை ஆழத்தைக் காட்டிலும் வசன ஆழம் நிறைய! இது என் தனிப்பட்ட கருத்து தான்!
//
புகழறீங்களா திட்றீங்களானே புரியல :-))

//
இந்தக் கதையிலும் கூட
//நான் பர்ஸ்ட் ரேங் எடுக்கும் போது செகண்ட் ரேங் எடுக்கற பையனோட பேரை என் பேர் பின்னாடி சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல//

//நீ 482 மார்க் வாங்கியிருக்கம்மா. நம்ம சிவா 481 மார்க் வாங்கியிருக்கான்
...
அவள் பெயருக்கு பின்னால் அவன் பெயர் திருமண பத்திரிக்கைக்கு முன் தினசரி பத்திரிக்கையில் வர போவதை நினைத்து//

இது தான் கதையின் முடிவை எதிர்ப்பவர்களையும் ஆறுதல் செய்ய வைக்கும் டெக்னிக்கா?//

இதுல டெக்னிக் எதுவுமில்லை. மனசுல பட்டதை எழுதினேன் :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அவ கண்ணு உன்னை தான் தேடுதுனு நினைக்கிறேன்//

முட்டாப் பய இங்கன மட்டும் முட்டாத பையனா இருந்திருக்கலாமோ? கதையின் பாரம் இங்க தான்!//

அவன் கடைசியா அவளை ஒரு முறை பார்த்திருக்கலாம். ஏன் பார்க்கலனு தெரியல :-(

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

//சரி... இப்ப தானே பழகிக்கறேன்.. //


ஏலேய் இதுக்கு பேரு'ந்தாய்யா தன்னட்டக்கம்..... :)
//
உண்மையை சொன்னா தன்னடக்கம்னு சொல்லிடுவீங்க. ஏதோ நீங்க சொன்னா சரி தான் :-)

//
//போக போக வெளி உலகத்துக்கு வருவேனு நினைக்கிறேன் :-)///

வா..வா...
//
நீங்க சொல்லி வராம போயிடுவனா ;)

// "ஏன்" மாதிரி ஃபீல் பண்ண வைக்கிற கதைகளை எதிர்பார்க்கிறோம்....//
இப்ப தான் அந்த கதைல ஃபீலிங் இல்லைனு சொன்னீங்க...

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

கதையில் ரசிக்கவைத்த இடங்கள்:
* பெங்களூரை தவிர வேறு எந்த ஊரிலும் 15 கிலோமிட்டர் செல்ல இரண்டு மணி நேரமாகாது என்று நினைத்து கொண்டு வீட்டில் நுழைந்தான்.

* பெங்களூரிலிருக்கும் கட்டட பொறியாளர்களுக்கு ஜன்னல், ஷெல்ப் எல்லாம் என்ன என்றே தெரியாது என்பதை அந்த வீடும் நிருபித்திருந்தது.
-----
//
அதெல்லாம் எனக்கு அடிக்கடி தோனும் விஷயங்கள். இதை விட கொடுமை சில வீடுகளில் பாத் ரூம் கிட்சனுக்கு வெகு அருகிலிருக்கும் :-(

//
திடீர்னு மெஸேஜ்.. ஆங்காங்கே 'உருகுதே..மருகுதே'... ஆரம்பத்தில் வெட்டி ஸ்டைல் காதல் கதையோ என்று தோன்ற வைப்பது...

எல்லாமே கலக்கல் என்றாலும் முடிவில் திரைப்படத்தை முடிக்கத் தெரியாத பாரதிராஜா ஆயிட்டீங்களே :(
//
முடிவை யோசிச்சிட்டு தான் கதையையே கொண்டு போனேன் :-)

// படிக்கிற வயசில் சினிமா பார்த்தால் தொழில் வல்லுநர் ஆகலாம்; நெட்டுரு போட்டால் நிரலி எழுதலாம்; போன்ற விஷயங்களை விட்டுடலாம். சடார் முடிவு கொடுக்கணும்னு தேவையில்லாத இடைச்செருகலோ என்று க்ளைமேக்ஸ் தோணவைக்குது.
//
அவன் மனசுல தோன்ற ஃப்லோ அது. நாம எப்படி அவனை வேற மாதிரி சிந்திக்க சொல்ல முடியும்???

சிவாவின் சிந்தனையை பாலாஜியால் மாற்ற முடியுமா? (பாஸ்டன் பாலாஜியா, வெட்டி பாலாஜியானு யாரும் கேக்க கூடாது ;))

// அருமையான நடை. எடுப்பான உடை. உருக்கமான ஆடை. தொடுப்பில்லாத இடை. (ரைமிங்கா சொல்ல நினைச்சேன்... ;) சுருக்கமாக லாஜிக் இல்லாத கதை :)//
டீ.ஆருக்கு போட்டியா வருவீங்க போல :-)

பாபா,
இந்த மாதிரி ஒரு பையன் என் கூட படிச்சிருக்கான்.. உங்களுக்கு எது லாஜிக் இல்லையோ. அது ரியாலிட்டி. அந்த பையன் அப்பா டாக்டர்.

அவர் இறந்த பிறகு ஃபெயிலாயிட்டுருந்த பையன் அவுங்க அப்பா ஆசையை நிறைவேத்த படிக்க ஆரம்பிச்சி முதல் ரேங் எடுத்தான். அதுவும் இந்த மாதிரி கொஞ்ச கொஞ்சமா இல்லை. அடுத்த ரெண்டாவது மாசத்துல இருந்து.

ராத்திரி முழுக்க படிப்பான். அவன் கண் எப்பவுமே சிவந்தே இருக்கும். அடிக்கடி முகம் கழுவுவான். அதே மாதிரி செம ஓட்டு ஓட்டுவான். மாட்டினா கதை கந்தல்...

அவனும் டாக்டரானான்.

Truth Is Stranger Than Fiction

SP.VR. SUBBIAH said...

///அப்பறம் படிக்கறதை மறக்க கூடாதுனா மூணு "R" முக்கியம். "Read", "Recall" "Revise". படிக்கும் போது வேற எதை பத்தியும் சிந்திக்காம படிக்கனும். அது தான் ரீட். படிச்சதை கொஞ்ச நேரம் கழிச்சி திரும்ப நினைவுக்கு கொண்டு வர பார்க்கனும். அது தான் ரீ கால். அப்பறம் படிச்சதை திரும்ப திரும்ப படிக்கனும். ஏற்கனவே படிச்சிட்டோமேனு நினைக்க கூடாது. அது தான் ரிவைஸ். நானே ஒவ்வொரு வகுப்புக்கும் போறதுக்கு முன்னாடி ரிவைஸ் பண்ணிட்டு போவேன்"///

நல்ல உத்தி!
அதேபோல வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மூன்று E உண்டு
அவை:
1.Education
2.Exposure
3.Employment

Anonymous said...

அழுகாச்சி அழுகாச்சியா வருது...

நாகை சிவா said...

//இந்த மாதிரி ஒரு பையன் என் கூட படிச்சிருக்கான்.. உங்களுக்கு எது லாஜிக் இல்லையோ. அது ரியாலிட்டி. அந்த பையன் அப்பா டாக்டர்.

அவர் இறந்த பிறகு ஃபெயிலாயிட்டுருந்த பையன் அவுங்க அப்பா ஆசையை நிறைவேத்த படிக்க ஆரம்பிச்சி முதல் ரேங் எடுத்தான். அதுவும் இந்த மாதிரி கொஞ்ச கொஞ்சமா இல்லை. அடுத்த ரெண்டாவது மாசத்துல இருந்து.

ராத்திரி முழுக்க படிப்பான். அவன் கண் எப்பவுமே சிவந்தே இருக்கும். அடிக்கடி முகம் கழுவுவான். அதே மாதிரி செம ஓட்டு ஓட்டுவான். மாட்டினா கதை கந்தல்...

அவனும் டாக்டரானான். //

இதே போல என் கூடவும் ஒரு பையன் படித்தான்... அவங்க அப்பாவும் டாக்டர், இப்ப அவனும் டாக்டர்.. இப்பவும் அவனை நாங்க ஓட்டுவோம்.. மச்சி எங்களை அவமானப்படுத்துற மாதிரி இப்படி நல்லா படிச்சு டாக்டர் ஆயிட்டியேடா என்று.. ஆனால் உண்மை உன் கதையில் வருகின்றது போல் அவன் சூழ்நிலை அப்படி..

எப்படி இருந்த அவன் இப்படி மாறிட்டானே என்று நாங்கள் வருத்தப்படும் அளவுக்கு மாறிட்டான். இன்று ஒரு டாக்டராக அவனை பாக்கும் போது மனதுக்கு நிறைவாக தான் உள்ளது.

Anonymous said...

/*** Thx a lot Friend...

Even I studied in a Christian school. But the Father (His name was Agnel) was too good. ***/

Yes I had 2 very good Guide/philosophers who were the HMs when I was studying....The person was English teacher.

Anyhow he made me ...He made my success.....I am taking it as positive....

KEEP SMILING ...
-K

ஜி said...

நீண்ட நாட்களுக்கப்புறம் ஒரு சூப்பர் கதை... :)) கடைசில மனசுல நிக்குது...

இலவசக்கொத்தனார் said...

யோவ், சந்தோஷமா கலாட்டாவா கதை எழுத வேண்டிய நேரத்தில் இது என்ன செண்டியா கதை? சரியே இல்லை....

Unknown said...

நல்லாருக்கு பாலாஜி.தெளிவான நடை.அழகான உரையாடல்கள்.25 வருஷ கதையை ஒரு பக்கத்தில் சொல்லும்போது சில பிரேக்குகள் வரும் (கவிதாவின் மரணம்).அதையும் நன்றாக கையாண்டிருக்கிறீர்கள்

கப்பி | Kappi said...

இதுக்குத்தான் இத்தனை நாள் காத்துட்டிருந்தேன் வெட்டி!!!

அருமையான கதை!! உங்களுக்குள்ள ஒரு சூப்பர் கதைசொல்லி இருக்கான் :)

kamal said...

வெட்டீப்பயல் அவர்களே என்ன பண்றீங்க

வெட்டிப்பயல் said...

//SP.VR. SUBBIAH said...

///அப்பறம் படிக்கறதை மறக்க கூடாதுனா மூணு "R" முக்கியம். "Read", "Recall" "Revise". படிக்கும் போது வேற எதை பத்தியும் சிந்திக்காம படிக்கனும். அது தான் ரீட். படிச்சதை கொஞ்ச நேரம் கழிச்சி திரும்ப நினைவுக்கு கொண்டு வர பார்க்கனும். அது தான் ரீ கால். அப்பறம் படிச்சதை திரும்ப திரும்ப படிக்கனும். ஏற்கனவே படிச்சிட்டோமேனு நினைக்க கூடாது. அது தான் ரிவைஸ். நானே ஒவ்வொரு வகுப்புக்கும் போறதுக்கு முன்னாடி ரிவைஸ் பண்ணிட்டு போவேன்"///

நல்ல உத்தி!
அதேபோல வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மூன்று E உண்டு
அவை:
1.Education
2.Exposure
3.Employment//

ஆஹா...
இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு போல :-)

மிக்க நன்றி ஐயா...

வெட்டிப்பயல் said...

// கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

கதை நல்லா இருந்தது!
//
மிக்க நன்றி கே.பி

//
ஆமா, இதுல கவிதா கொல்ட்டா இல்ல சிவாவா, இல்ல உறவு முறையிலேயே தெலுகு பேசறவங்களா, ஒண்ணுமே புரியலியே? (இன்னிக்கு கொலை வெறி அதுனால இந்த வரி!)//

ஒண்ணு கொல்ட்டியா இருந்தா ரெண்டு பேரும் இருக்கனும். இல்லைனா ரெண்டு பேரும் இருக்க முடியாது. அவ்வளவு தான் :-))

வெட்டிப்பயல் said...

//இதே போல என் கூடவும் ஒரு பையன் படித்தான்... அவங்க அப்பாவும் டாக்டர், இப்ப அவனும் டாக்டர்.. இப்பவும் அவனை நாங்க ஓட்டுவோம்.. மச்சி எங்களை அவமானப்படுத்துற மாதிரி இப்படி நல்லா படிச்சு டாக்டர் ஆயிட்டியேடா என்று.. ஆனால் உண்மை உன் கதையில் வருகின்றது போல் அவன் சூழ்நிலை அப்படி..

எப்படி இருந்த அவன் இப்படி மாறிட்டானே என்று நாங்கள் வருத்தப்படும் அளவுக்கு மாறிட்டான். இன்று ஒரு டாக்டராக அவனை பாக்கும் போது மனதுக்கு நிறைவாக தான் உள்ளது.//

புலி ரெண்டு பேரும் ஒரே பையனை சொல்றோமா?

நான் சொல்ற பையன் ராசிபுரத்துல என் கூட SRVல படிச்சான்...

ஆனா இந்த மாதிரி பல கதாநாயகர்கள் நம்ம மத்தியில இருக்காங்க. ஆனா விக்ரமன் படத்தால இவுங்களை எல்லாம் யாரும் நம்ப மாட்றாங்க :-)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

/*** Thx a lot Friend...

Even I studied in a Christian school. But the Father (His name was Agnel) was too good. ***/

Yes I had 2 very good Guide/philosophers who were the HMs when I was studying....The person was English teacher.

Anyhow he made me ...He made my success.....I am taking it as positive....

KEEP SMILING ...
-K//

அதே தான்...

வாழ்க்கைல எதையும் நல்லதா எடுத்துட்டு ஜெயிக்கனும்னு நினைக்கறவங்க கண்டிப்பா ஜெயிப்பாங்க...

வெட்டிப்பயல் said...

//ஜி said...

நீண்ட நாட்களுக்கப்புறம் ஒரு சூப்பர் கதை... :)) கடைசில மனசுல நிக்குது...//

ஏதோ உங்கள மாதிரி ஆளுங்க கொடுக்கற ஊக்கம் தான்...

மனசுல நின்னா போதும் :-)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

யோவ், சந்தோஷமா கலாட்டாவா கதை எழுத வேண்டிய நேரத்தில் இது என்ன செண்டியா கதை? சரியே இல்லை....//

ஒரு வேளை இடுக்கண் வருங்கால் நகுகக்கு ஆப்போஸிட்டா இருக்குமோ ;)

வெட்டிப்பயல் said...

//செல்வன் said...

நல்லாருக்கு பாலாஜி.தெளிவான நடை.அழகான உரையாடல்கள்.25 வருஷ கதையை ஒரு பக்கத்தில் சொல்லும்போது சில பிரேக்குகள் வரும் (கவிதாவின் மரணம்).அதையும் நன்றாக கையாண்டிருக்கிறீர்கள்//

செல்வன் அண்ணா,
மிக்க நன்றி...
எல்லாம் நீங்க கொடுக்கற உற்சாகம் தான் :-)

மெளலி (மதுரையம்பதி) said...

பாகவுந்தி பாபு.....

Unknown said...

வழக்கமான வெட்டி பிராண்ட் சாப்ட்வேர் கதை :))

Divya said...

\அப்பறம் படிக்கறதை மறக்க கூடாதுனா மூணு "R" முக்கியம். "Read", "Recall" "Revise". படிக்கும் போது வேற எதை பத்தியும் சிந்திக்காம படிக்கனும். அது தான் ரீட். படிச்சதை கொஞ்ச நேரம் கழிச்சி திரும்ப நினைவுக்கு கொண்டு வர பார்க்கனும். அது தான் ரீ கால். அப்பறம் படிச்சதை திரும்ப திரும்ப படிக்கனும். ஏற்கனவே படிச்சிட்டோமேனு நினைக்க கூடாது. அது தான் ரிவைஸ். நானே ஒவ்வொரு வகுப்புக்கும் போறதுக்கு முன்னாடி ரிவைஸ் பண்ணிட்டு போவேன்"\

மாணவர்களுக்கு ரொம்ப பயன் படக்கூடிய தகவல்/அறியுரை,

நெகிழ வைத்தது கதையின் முடிவு.


சிவாவின் அமைதிக்கு காரணம், காதல் தோல்வியாக இருக்கலாம் என ஊகிக்கவைத்து, இப்படி சோகமாக முடிச்சிடீங்க வெட்டி.......

உங்களுக்கே உங்களுக்கு சொந்தமான அந்த யதார்த்தமான கதை நடை........அருமை வெட்டி, வாழ்த்துக்கள்!

[பெங்களூரை தவிர வேறு எந்த ஊரிலும் 15 கிலோமிட்டர்

செல்ல இரண்டு மணி நேரமாகாது என்று நினைத்து கொண்டு வீட்டில் நுழைந்தான்/ - உங்கள் Bangalore வாழ்க்கையின் பிரதிபலிப்பா?]

Anonymous said...

/*** Thx a lot Friend...

Even I studied in a Christian school. But the Father (His name was Agnel) was too good. ***/


Are u from ST.Joseph's cuddalore? Because we too had a Father named Agnel.

கோபிநாத் said...

யோவ்..என்ய்யா இப்படி எல்லாம்..:(

நல்லாவே கதை சொல்லியிருக்கப்பா...

கார்த்திக் பிரபு said...

arambichuteengala idho padichitu solrane coments i

Anonymous said...

After finishing the story, i got a feeling of watching a scene in a tamil movie.

Its good.

Sathiya said...

எங்க இருந்து பிடிக்கிறீங்க இது மாதிரி கதையெல்லாம்? கதையா இல்ல அனுபவமா? ரொம்ப நல்லாயிருக்கு! படிக்கும் போது பருத்தி வீரன் கார்த்தி சிவாவாகவும், கவிதா ப்ரியமணியாகவும் மனசுல தோனுச்சு!

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

இதுக்குத்தான் இத்தனை நாள் காத்துட்டிருந்தேன் வெட்டி!!!
//
எதுக்குப்பா???

//
அருமையான கதை!!
உங்களுக்குள்ள ஒரு சூப்பர் கதைசொல்லி இருக்கான் :)//
மிக்க நன்றி...
கப்பி நிலவர் அளவுக்கு இல்லைனாலும் ஏதோ நம்ம ரேஞ்சுக்கு எழுதனும் இல்லையா???

வெட்டிப்பயல் said...

// kamal said...

வெட்டீப்பயல் அவர்களே என்ன பண்றீங்க//

ஆணி புடுங்கிட்டே உங்க கேள்விக்கு பதில் சொல்லிட்டு இருக்கேன் ;)

வெட்டிப்பயல் said...

// மதுரையம்பதி said...

பாகவுந்தி பாபு.....

12:07 AM//

சால தேங்ஸண்டி...

வெட்டிப்பயல் said...

//தேவ் | Dev said...

வழக்கமான வெட்டி பிராண்ட் சாப்ட்வேர் கதை :))//

அது என்ன வெட்டி பிராண்ட்???
இது எங்க சாப்ட்வேர் கதை?

வேணும்னா இப்ப சாப்ட்வேர் இன்ஜினியரா இருக்கற ஒருத்தவனோட வாழ்க்கைனு சொல்லலாம்...

வெட்டிப்பயல் said...

//Divya said...

\அப்பறம் படிக்கறதை மறக்க கூடாதுனா மூணு "R" முக்கியம். "Read", "Recall" "Revise". படிக்கும் போது வேற எதை பத்தியும் சிந்திக்காம படிக்கனும். அது தான் ரீட். படிச்சதை கொஞ்ச நேரம் கழிச்சி திரும்ப நினைவுக்கு கொண்டு வர பார்க்கனும். அது தான் ரீ கால். அப்பறம் படிச்சதை திரும்ப திரும்ப படிக்கனும். ஏற்கனவே படிச்சிட்டோமேனு நினைக்க கூடாது. அது தான் ரிவைஸ். நானே ஒவ்வொரு வகுப்புக்கும் போறதுக்கு முன்னாடி ரிவைஸ் பண்ணிட்டு போவேன்"\

மாணவர்களுக்கு ரொம்ப பயன் படக்கூடிய தகவல்/அறியுரை,

நெகிழ வைத்தது கதையின் முடிவு.
//

வாங்க மேடம்.. பார்த்து வருஷ கணக்குல ஆகுது...

//
சிவாவின் அமைதிக்கு காரணம், காதல் தோல்வியாக இருக்கலாம் என ஊகிக்கவைத்து, இப்படி சோகமாக முடிச்சிடீங்க வெட்டி.......
//
என்ன பண்ண??? சோகமும் வாழ்க்கைல ஒரு பகுதி தானே?

// உங்களுக்கே உங்களுக்கு சொந்தமான அந்த யதார்த்தமான கதை நடை........அருமை வெட்டி, வாழ்த்துக்கள்!
//
மிக்க நன்றி திவ்யா...

// [பெங்களூரை தவிர வேறு எந்த ஊரிலும் 15 கிலோமிட்டர்
செல்ல இரண்டு மணி நேரமாகாது என்று நினைத்து கொண்டு வீட்டில் நுழைந்தான்/ - உங்கள் Bangalore வாழ்க்கையின் பிரதிபலிப்பா?]//
ஆமாம்.. என்னுடையது மட்டுமல்ல பெங்களூர் வாசிகள் அனைவருக்கும் பொருந்தும் :-(

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

/*** Thx a lot Friend...

Even I studied in a Christian school. But the Father (His name was Agnel) was too good. ***/


Are u from ST.Joseph's cuddalore? Because we too had a Father named Agnel.//

Yes, I am from St.Joseph's Cuddalore (Manjakuppam). Ref.Fr.Agnel was hostel father when I was studying.

I studied from 93 - 98 (7 to 11)

வெட்டிப்பயல் said...

// Delete
கோபிநாத் said...

யோவ்..என்ய்யா இப்படி எல்லாம்..:(
//
ஏன்யா நீயெல்லாம் கதை எழுதறனு கேக்கறீங்களா? என்ன பண்ண? விதி வலியது :-(

// நல்லாவே கதை சொல்லியிருக்கப்பா...//
மிக்க நன்றி

வெட்டிப்பயல் said...

//கார்த்திக் பிரபு said...

arambichuteengala idho padichitu solrane coments i//

இன்னுமா முடிக்கல :-(

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

After finishing the story, i got a feeling of watching a scene in a tamil movie.

Its good.//

Thx a lot friend

வெட்டிப்பயல் said...

//Sathiya said...

எங்க இருந்து பிடிக்கிறீங்க இது மாதிரி கதையெல்லாம்? கதையா இல்ல அனுபவமா? ரொம்ப நல்லாயிருக்கு! படிக்கும் போது பருத்தி வீரன் கார்த்தி சிவாவாகவும், கவிதா ப்ரியமணியாகவும் மனசுல தோனுச்சு!//

வாங்க சத்யா.

அனுபவமெல்லாம் இல்லைங்க... சும்மா தோனுச்சி. கதைல முதல்ல தோணுனது அந்த பேர் வர விஷயம். முதல் மார்க் ரெண்டாவது மார்க். அதுக்கப்பறம் அப்படியே பில்ட் அப் பண்ணிக்க வேண்டியது தான் :-)

Anonymous said...

// பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது :-) //

Well, nice punch line. The story is also good.

குமரன் (Kumaran) said...

பாலாஜி, எல்லாரும் சொல்லிட்டாங்க. ஆனாலும் நானும் என் பங்குக்குச் சொல்லணுமில்லை. கடைசி வரியில கொஞ்சம் கண் கலங்கிருச்சுப்பா. ரொம்ப நல்லா இருக்கு.

கொத்ஸும் நீங்களும் பேசுனதைப் பார்த்தா ஏதோ விஷேஷம் இருக்கும் போல இருக்கே? அப்படி இருந்தா வாழ்த்துகள். :-)

கதிர் said...

நிறைய சினிமா ஞாபகத்துக்கு வருது.
வைதேகி காத்திருந்தாள்
அழகி
ஒரு ராம்கி படம் பேர் ஞாபகமில்ல.

//கவிதா உன் பேரை தவிர யார் பேருக்கும் பின்னால என் பேரு வரவிடாம இது வரைக்கும் பார்த்துட்டு இருக்கேன். கவிதா உனக்கு ஒண்ணு தெரியுமா? அந்த பழைய முட்டாள் சிவா சந்தோஷமா இருந்தான் கவிதா"//

இந்த டயலாக் தனுஷ் பேசற மாதிரி கற்பனை பண்ணி பாத்தேன்.

இப்படித்தான் நாலுவரி டயலாக்ல அஞ்சு முறை கதாநாயகி பேர சொல்லுவார். ஊதுபத்தி விக்கிறவன் மாதிரி. :))

நல்லாருக்கு வெட்டி.

மடல்காரன்_MadalKaran said...

அறிவுரை, கதையுரை, வசனவுரை, கருத்துரை எல்லாமே நல்லா இருக்கு..
சோகத்த சொன்ன விதமும் ...

வெட்டியார் உங்களின் குத்து (பஞ்ச்)..

அன்புடன், கி.பாலு

வித்யா கலைவாணி said...

நல்ல உண்ர்வுபூர்வமான கதை. வாழ்த்துக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கொத்ஸும் நீங்களும் பேசுனதைப் பார்த்தா ஏதோ விஷேஷம் இருக்கும் போல இருக்கே? அப்படி இருந்தா வாழ்த்துகள். :-)//

ஆமா...நானே கேக்கோணம்னு நெனைச்சேன்...ஏதோ விஷேஷம் இருக்கும் போல இருக்கே....
அப்படியும் இருக்கும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :-))

மங்களூர் சிவா said...

க்ளைமேக்ஸ் தவிர மத்ததெல்லாம் ஓகே.

கதைய முடிக்க வேற வழி இல்லைன்னு இப்டி முடிச்சிட்டிங்களோ?

ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியாவா பூடிச்சி

Anonymous said...

நான் போட்ட கமெண்டை காணோமே :(

மஞ்சூர் ராசா said...

"Read", "Recall" "Revise".

என் குழந்தைக்கு நேற்றிலிருந்து இதை திரும்பத்திரும்ப சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

மிகவும் நன்றி நண்பா

Anonymous said...

அடடா ! அருமை !!!

MyFriend said...

என்னது இது? இப்படி ஒரே அழுவாச்சியா இருக்கு??

வெ. ஜெயகணபதி said...

கதை நல்லா இருக்கு வெட்டி, ஆனால் என்னை அறியாமல் கண்ணில் வரும் கண்ணீரைதான் கட்டுபடுத்த முடியவில்லை..:(

வெ. ஜெயகணபதி said...

கதையின் முடிவு என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்துகிறது வெட்டி...

வெட்டிப்பயல் said...

// srikanth said...

// பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது :-) //

Well, nice punch line. The story is also good.//

Thx a lot Srikanth...

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

பாலாஜி, எல்லாரும் சொல்லிட்டாங்க. ஆனாலும் நானும் என் பங்குக்குச் சொல்லணுமில்லை. கடைசி வரியில கொஞ்சம் கண் கலங்கிருச்சுப்பா. ரொம்ப நல்லா இருக்கு.
//
மிக்க நன்றி குமரன்...

// கொத்ஸும் நீங்களும் பேசுனதைப் பார்த்தா ஏதோ விஷேஷம் இருக்கும் போல இருக்கே? அப்படி இருந்தா வாழ்த்துகள். :-)//
இதுக்கும் நன்றி ...

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

நிறைய சினிமா ஞாபகத்துக்கு வருது.
வைதேகி காத்திருந்தாள்
அழகி
ஒரு ராம்கி படம் பேர் ஞாபகமில்ல.

//கவிதா உன் பேரை தவிர யார் பேருக்கும் பின்னால என் பேரு வரவிடாம இது வரைக்கும் பார்த்துட்டு இருக்கேன். கவிதா உனக்கு ஒண்ணு தெரியுமா? அந்த பழைய முட்டாள் சிவா சந்தோஷமா இருந்தான் கவிதா"//

இந்த டயலாக் தனுஷ் பேசற மாதிரி கற்பனை பண்ணி பாத்தேன்.

இப்படித்தான் நாலுவரி டயலாக்ல அஞ்சு முறை கதாநாயகி பேர சொல்லுவார். ஊதுபத்தி விக்கிறவன் மாதிரி. :))

நல்லாருக்கு வெட்டி.//

இலக்கியவாதி தம்பி நல்லா இருக்குனு சொல்றது பெரிய விஷயம் தான் ;)

வெட்டிப்பயல் said...

// மடல்காரன் said...

அறிவுரை, கதையுரை, வசனவுரை, கருத்துரை எல்லாமே நல்லா இருக்கு..
சோகத்த சொன்ன விதமும் ...

வெட்டியார் உங்களின் குத்து (பஞ்ச்)..

அன்புடன், கி.பாலு//

மிக்க நன்றி பாலு...

வெட்டிப்பயல் said...

// வித்யா கலைவாணி said...

நல்ல உண்ர்வுபூர்வமான கதை. வாழ்த்துக்கள்.//

நன்றி வித்யா

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கொத்ஸும் நீங்களும் பேசுனதைப் பார்த்தா ஏதோ விஷேஷம் இருக்கும் போல இருக்கே? அப்படி இருந்தா வாழ்த்துகள். :-)//

ஆமா...நானே கேக்கோணம்னு நெனைச்சேன்...ஏதோ விஷேஷம் இருக்கும் போல இருக்கே....
//

ஆமா வர திங்க கிழமை கொலம்பஸ் டே, அடுத்து சரஸ்வதி பூஜை, ஹேலோவின், தீபாவளி, க்ரிஸ்மஸ் எல்லாம் இருக்கு...

இதை எதுக்கு என்கிட்ட கேக்கனும்?

// அப்படியும் இருக்கும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :-))//
மிக்க நன்றி...
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் ;)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

க்ளைமேக்ஸ் தவிர மத்ததெல்லாம் ஓகே.

கதைய முடிக்க வேற வழி இல்லைன்னு இப்டி முடிச்சிட்டிங்களோ?

ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியாவா பூடிச்சி//

க்ளைமாக்ஸ் எனக்கு தெரிஞ்சி இது தான் சரி...

அவ்வளவு தாங்க... ஏதோ நமக்கு தெரிஞ்சதை வெச்சி தானே எழுத முடியும் :-(

வெட்டிப்பயல் said...

//துர்கா|thurgah said...

நான் போட்ட கமெண்டை காணோமே :(//

வேற பதிவுல போட்டதெல்லாம் இங்க வந்து தேடினா எப்படி கிடைக்கும் தங்கச்சி???

வெட்டிப்பயல் said...

// மஞ்சூர் ராசா said...

"Read", "Recall" "Revise".

என் குழந்தைக்கு நேற்றிலிருந்து இதை திரும்பத்திரும்ப சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

மிகவும் நன்றி நண்பா//

ஏதோ நமக்கு தெரிந்ததை கதை மூலமாக சொல்லிவிடலாம் என நினைத்தேன்.. உங்களுக்காவது பயனாவது மிக்க மகிழ்ச்சி...

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

அடடா ! அருமை !!!//

மிக்க நன்றி...

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

என்னது இது? இப்படி ஒரே அழுவாச்சியா இருக்கு??//

என்ன பண்ண? ஒரு சிலருக்கு இப்படி தான் அமையிது.. அவுங்க அவுங்க தான் வாழ்க்கையை மாத்திக்கனும்...

வெட்டிப்பயல் said...

// வெ. ஜெயகணபதி said...

கதை நல்லா இருக்கு வெட்டி, ஆனால் என்னை அறியாமல் கண்ணில் வரும் கண்ணீரைதான் கட்டுபடுத்த முடியவில்லை..:(//

நோ ஃபீலிங்க்ஸ்...

எல்லாம் வாழ்க்கைல ஒரு பகுதி தான் :-)

நாமக்கல் சிபி said...

பாதிக்கு மேல படிக்கும்போதே கிளைமாக்ஸ் தெரிஞ்சி போச்சு வெட்டி!

வீக் எண்ட் அதுவுமா அழ வெச்சிட்டியே!

:(

aparnaa said...

//ILA(a)இளா said...
ஏதோ சம்மட்டி வெச்சு மனசை ரெண்டா உடைச்சா மாதிரி இருக்கு வெட்டி. அழுவாச்சியா வருது//

adhe feelings..
chanceless vetti..kallaketeenga.

Anonymous said...

padichu mudikkirappo.. kannu rendum kalangiடுச்சு vetti

பாலராஜன்கீதா said...

கவிதா கார் விபத்தில் இறப்பதுதான் சினிமாத்தனமாக உள்ளது. மற்றபடி கதை நன்றாக இருக்கிறது.

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

பாதிக்கு மேல படிக்கும்போதே கிளைமாக்ஸ் தெரிஞ்சி போச்சு வெட்டி!

வீக் எண்ட் அதுவுமா அழ வெச்சிட்டியே!

:(//

சிங்கம் அழுது இப்ப தான் கேள்விப்படறேன் ;)

வெட்டிப்பயல் said...

//aparnaa said...

//ILA(a)இளா said...
ஏதோ சம்மட்டி வெச்சு மனசை ரெண்டா உடைச்சா மாதிரி இருக்கு வெட்டி. அழுவாச்சியா வருது//

adhe feelings..
chanceless vetti..kallaketeenga.//

மிக்க நன்றி அபர்ணா...

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

padichu mudikkirappo.. kannu rendum kalangiடுச்சு vetti//

hmmm

வெட்டிப்பயல் said...

//பாலராஜன்கீதா said...

கவிதா கார் விபத்தில் இறப்பதுதான் சினிமாத்தனமாக உள்ளது. மற்றபடி கதை நன்றாக இருக்கிறது.//

தெரிஞ்சவங்க யாராவது கார் விபத்துல செத்தா இப்படி தான் நினைப்பீங்களோ :-)

Raj said...

இந்த கதை ரொம்ப டச்சிங்கா இருந்தது....வெட்டி.....நான் நினைக்கிறேன்..நீங்க எழுத்துக்கு இன்னும் நேரம் ஒதுக்கினா இன்னும் பெட்டரா ஒரு சிறந்த எழுத்தாளரா வர வாய்ப்பு இருக்கு

வெட்டிப்பயல் said...

//Raj said...

இந்த கதை ரொம்ப டச்சிங்கா இருந்தது....வெட்டி.....நான் நினைக்கிறேன்..நீங்க எழுத்துக்கு இன்னும் நேரம் ஒதுக்கினா இன்னும் பெட்டரா ஒரு சிறந்த எழுத்தாளரா வர வாய்ப்பு இருக்கு//

மிக்க நன்றி ராஜ் :)

இப்ப ஒதுக்கற நேரமே அதிகம் தான் ராஜ்... இந்தியா போனா எனக்கு இதுக்கு கூட நேரம் இருக்காது :)

vijay said...

great...

if any good director read this ,then it will be super duper film in all Languages..

Best WISHES..