முதல் பகுதி படிக்க இங்கே சொடுக்கவும்
அந்த அரசாங்க பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பெரிய அளவில் கூட்டமில்லையென்றாலும், ஓரளவு கூட்டமிருந்தது.
எந்த க்ரூப் எடுப்பது என்று அங்கே நின்றிருந்த பெண்களின் பெற்றோர்கள் ஓரளவு தீர்மானித்திருந்தனர். காவேரியின் பத்தாம் வகுப்பு வகுப்பாசிரியர் அவளுக்கு "ஏ" க்ரூப் எடுக்குமாறு சொல்லி அனுப்பியிருந்தார். அவளுக்கு அது என்னவென்று பெரிதாக தெரியாத நிலையிலும், அது படித்தால் மேற்கொண்டு என்னவேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று அவர் சொல்லியிருந்த காரணத்தால் அவள் அந்த க்ரூப்பையே தெர்ந்தெடுத்திருந்தாள்.
ஒவ்வொருவராக பள்ளி முதல்வர் அறையில் சென்று அவர்களுக்குரிய க்ரூப்பை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தனர். காவேரி சென்ற பொழுது உள்ளே முதல்வருடன் மூன்று ஆசிரியைகள் நின்றிருந்தனர்.
சிகப்பு புடவை கட்டியிருந்த ஆசிரியை, காவேரியிடம் பேச ஆரம்பித்தார்.
"இங்க பாரும்மா. நீ கேட்ட க்ரூப்ல சீட்டு தீர்ந்துடுச்சி. மொத்தம் 60 பேரு தான் ஒரு வகுப்புல. எல்லா சீட்டும் முடிஞ்சிடுச்சி. அதனால நீ வேற எதாவது க்ரூப் எடுத்துக்கோ"
இதை கேட்டதும் காவேரிக்கு எதுவும் புரியவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் அந்த ஒரு க்ரூப் மட்டும் தான்.
பக்கத்திலிருந்த கண்ணாடி அணிந்திருந்த டீச்சர் அவள் திருதிருவென்று முழிப்பதை பார்த்து புரிந்து கொண்டார்
"இங்க பாரும்மா, முதல் குருப் கிடைக்காதவங்க ப்யூர் சயின்ஸ் எடுப்பாங்க, இல்லைனா தையல் பாடம் எடுக்கலாம். உனக்கு எது விருப்பம்னு சொல்லு"
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தையல் படிக்கறதுன்னா அப்பா வீட்லயே படிக்கலாம்னு சொல்லுவாரு. பக்கத்து வீட்டு சரசு அக்காவைவிட வேற யார் நல்லா தைச்சிட போறாங்க. அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே அந்த சிகப்பு புடவை டீச்சர் பேச துவங்கினார்.
"புதுசா வந்திருக்க க்ரூப்பை விட்டுட்டீங்களே டீச்சர். கம்ப்யூட்டருக்குனு புது க்ரூப் வந்திருக்குமா. ஆனா இங்க யாருக்கும் பெருசா சொல்லி தர தெரியாது. ஆனா அதுல கணிதம், இயற்பியல், வேதியல் எல்லாம் இருக்கு. இந்த உயிரியல் பாடம் மட்டுமில்ல. "
அவர் சொல்லியதை கேட்டதும் அதையே படிக்கலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டாள். அவர்களிடம் அதற்கான சம்மதமும் சொல்லிவிட்டு வந்தாள். அப்பாவுடன் கிராமத்திற்கு புறப்படும் போது அவளுக்கு ஒருவித வருத்தம் கலந்த பயமே மனதில் படர்ந்திருந்தது.
தினமும் கிராமத்திலிருந்து பேருந்து மூலமாக பள்ளிக்கு வந்து கொண்டிருந்தாள் காவேரி. அவள் பக்கத்து தெருவிலிருந்த செண்பகமும் அதே வகுப்பில் அவளுடன் படித்து கொண்டிருந்தது அவளுக்கு ஒருவிதத்தில் தைரியத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்தது. ஒரு வழியாக பள்ளியில் சேர்ந்து ஒன்றரை மாதங்களாகியிருந்தது.
முதல் மாதம் நடந்த மாத தேர்வில் வேதியியலில் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைந்திருந்தனர். அதில் காவேரியும் அடக்கம். அவளுக்கு நினைத்து பார்க்கவே வெட்கமாக இருந்தது. இது வரை கிராமத்து பள்ளியில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து வந்தவளுக்கு இந்த தோல்வி ஒரு வகையில் அதிர்ச்சியே.
பின்னர் செண்பகம் சொல்லி தான் அவளுக்கு விஷயம் புரிந்தது. அந்த டீச்சரிடம் டியூஷன் படிக்கும் மாணவிகள் மட்டுமே தெர்ச்சி பெற்றிருப்பதாகவும், மற்றவர்கள் எல்லாம் வேண்டுமென்றே ஃபெயிலாக்கினார் என்றும் புரிந்தது. அவரிடம் கண்டிப்பாக டியூஷன் சேர வேண்டும் என்ற உண்மை அவளுக்கு புரிய ஆரம்பித்தது. வகுப்பில் இருக்கும் அனைவரும் அவரிடம் டியுஷன் சேர்ந்தனர். காவிரிக்கு அப்பாவிடமிருந்து டியூனுக்கு முப்பது ரூபாய் வாங்குவதே அவளுக்கு பெரிய விஷயமாக பட்டது.
அவள் டியூஷன் போன போது அந்த வீட்டிலிருந்து மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். வேதியியல் டீச்சரின் வீட்டுக்காரர், ஆண்கள் பள்ளியில் கணக்கு வாத்தியாராம். நன்றாக கணக்கு பாடம் சொல்லி தரக்கூடியவர். அவர் வீட்டில் மாணவர்கள் கூட்டம் குவிந்திருக்கும். ஆனால் அதன் இன்னொரு முக்கிய காரணம் வேதியியல் டீச்சரிடம் படிக்கும் பெண் பிள்ளைகள் தான் என்பது அவருக்கும் தெரியாமலில்லை.
அப்படி ஒரு நாள் அவள் டியூஷனிலிருந்து வரும் போது தான் வினோத்தை பார்த்தாள்...
(தொடரும்...)
....................................................................................................................................
நண்பர்களே
இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.
இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.
இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.
ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.
இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.
மூன்றாவது அத்தியாயத்தை எழுத காதல் ஆராய்ச்சியாளர், தன்னடக்கத்தின் மொத்த உருவம் அண்ணன் CVR அவர்களை அழைக்கிறேன்.
10 comments:
கதை சூப்பரா போகுது..
சென்ஷி
சுவாரஸ்யமாத்தான் எடுத்துட்டு போயிருக்கீங்க தல!!!
அடுத்த பகுதியில என்ன பண்ணலாம்னு பாக்கறேன்!! :-)
.:: மை ஃபிரண்ட் ::. said...
[ஃபர்ஸ்ட்டூ ப்லேஸ் இங்கே
///
போனா போகுது விட்டு கொடுங்க..:)
நன்றி
நன்றாக கொண்டு போயிருக்கீங்க.
காவேரி என்று திருத்தி விடுங்கள் (காவிரி*)
//இரண்டாவது அத்தியாயத்தை எழுத காதல் ஆராய்ச்சியாளர்,...........//
மூன்றாவது
//சென்ஷி said...
கதை சூப்பரா போகுது..
சென்ஷி //
மிக்க நன்றி சென்ஷி...
//CVR said...
சுவாரஸ்யமாத்தான் எடுத்துட்டு போயிருக்கீங்க தல!!!
அடுத்த பகுதியில என்ன பண்ணலாம்னு பாக்கறேன்!! :-) //
எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் ;)
//மின்னுது மின்னல் said...
.:: மை ஃபிரண்ட் ::. said...
[ஃபர்ஸ்ட்டூ ப்லேஸ் இங்கே
///
போனா போகுது விட்டு கொடுங்க..:) //
முடியாது ...
//✪சிந்தாநதி said...
நன்றி
நன்றாக கொண்டு போயிருக்கீங்க.
காவேரி என்று திருத்தி விடுங்கள் (காவிரி*) //
சிந்தாநதி,
மிக்க நன்றி...
தவறு சரி செய்யப்பட்டுவிட்டது :-)
Great goin...
Post a Comment