தத்துவம்
Tuesday, January 13, 2009
பிரிவு - 2
"ஐஸு ட்ரீட் எனக்குதான்... நீ சாப்பிடறதுக்கு நீ தான் பில் கட்டணும் புரியுதா???"
"டேய்! போனா போது, தனியா வரதுக்கு கூச்சப்பட்டயேனு வந்தா, ரொம்ப ஓவரா பேசற"
"யாரு நாங்க கூச்சப்பட்டமா???"
"வெக்கம், மானம் எதுவும் உனக்கு கிடையாதுனு எனக்கு தெரியும். திவ்யாவும் என்னை வர சொன்னா. அதனாலதான் நான் வந்தேன். பில் யாரு கட்றதுன்னு நாங்க முடிவு பண்ணிக்கறோம். நீங்க சாப்பிடுங்க சார்."
"சரி... ஏங்க நீங்க எதுவும் பேசாம உக்காந்திருக்கீங்க??? சாப்பிடும் போது வேற எதுக்கும் வாய திறக்கக்கூட்டாதுனு யாராவது சொல்லியிருக்காங்களா?"
"எல்லாருக்கும் சேர்த்துதான் நீங்க பேசிகிட்டு இருக்கீங்களே!"
"இது கொஞ்சம் ஓவர். சரி நீங்களும், ஐஸ்வர்யாவும் ஒரே காலேஜா?"
"ஆமாம். ஆனால் வேற வேற டிப்பார்ட்மென்ட். ஹாஸ்ட்டல்ல ஒரே ரூம்"
"ஆச்சர்யமா இருக்குங்க"
"ஏன்???"
"ஐஸ்வர்யாகூட இத்தனை வருஷம் இருந்துட்டு இப்படி அமைதியா இருக்கீங்களே!!!"
"டேய்... ரொம்ப பேசற.. நீ நினைக்கிற மாதிரி இவ ஒண்ணும் அமைதி கிடையாது. என்னைவிட அதிகமா பேசுவா"
"உங்களை பத்தி ஐஸ் சொல்லி இருக்கா. ஆனால் அவ சொன்னதைவிட அதிகமாவே பேசறீங்க"
"தலைவரே பாட்ஷால சொல்லி இருக்காருங்க, "இந்தியாக்க்காரன் பேசலனா செத்து போயிடுவான்னு". நான் உண்மையான இந்தியங்க."
ஒரு வழியாக பேசி சாப்பிட்டுவிட்டு சீட்டுக்கு வருவதற்குள் மணி 2 ஆனது.
...........................
10 நாட்களுக்க்கு பிறகு
"தனா. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்"
"சொல்லு"
"திவ்யா VB புக் கேட்டிருந்தா. நேத்தே எடுத்துட்டேன். ரூமுக்கு எடுத்துட்டு போக மறந்துட்டேன். இன்னைக்கு மதியம் கொண்டு போய் கொடுக்கலாம்னு பாத்தா வேலை அதிகமாகிடுச்சி. நான் இன்னைக்கு ஊருக்கு போறேன். நேரா இங்க இருந்தே புறப்படறேன். அவள்ட இந்த புக்கை நீ கொடுத்துடறயா ப்ளீஸ்"
"சரி கொடுத்துட்டு போ. நான் அவள்ட எப்படியாவது கொடுத்தடறேன்"
.......................................
"ஹலோ... திவ்யா???"
"ஆமாம். நீங்க யார் பேசறது?"
"நான் சஞ்சய் ராமசாமி பேசறன்"
"ஓ! தனாவா??? சொல்லுங்க நான் கல்பனாதான் பேசறன்"
"பரவாயில்லையே நியாபகம் வெச்சிருக்கீங்களே"
"உங்களை மறக்க முடியமா?"
"சரிங்க. ஐஸ் கிட்ட ஏதோ VB புக் கேட்டுருந்தீங்களாம். அதை உங்ககிட்ட
கொடுக்க சொல்லி அவ என்கிட்ட கொடுத்துட்டு போயிட்டா. உங்களை எங்க மீட்ட் பண்ணலாம்னு சொன்னீங்கனா நான் வந்து கொடுத்துடுவேன்"
"நீங்க எங்க தங்கி இருக்கீங்க?"
"நான் இங்கதான் எலக்ட்ரானிக் சிட்டிலதான் தங்கி இருக்கேன்"
"சரிங்க. எனக்கு இப்ப பிராஜக்ட் பார்ட்டி. இன்னும் 5 நிமிஷத்துல கிளம்பிடுவேன். எப்படியும் நாளைக்கு வந்து வேலையை முடிக்க வேண்டியிருக்கும். நீங்க எனக்கு நாளைக்கு கொடுக்க முடியுமா?"
"சரிங்க. நாளைக்கு ஆபிஸ் வந்து போன் பண்ணுங்க. நான் வந்து கொடுக்கறேன்"
"சரிங்க ரொம்பா தேங்ஸ்ங்க"
"ஓகே... நாளைக்கு பாக்கலாம். நீங்க பார்ட்டிக்கு கிளம்புங்க"
"சரிங்க... பாக்கலாம். பை"
...........................................
சனி கிழமை காலை 10 மணி.செல் போன் சிணுங்கியது.
"ஹலோ. தனா ஹியர்"
"நான் திவ்யா பேசறேன்"
"சொல்லுங்க. ஒரு 11 மணிக்கா புக் எடுத்துட்டு வந்து கொடுக்கறதா??"
"தூங்கிட்டு இருக்க்கீங்களா?"
"ஆமாங்க. இப்பதான் எழுந்திருக்கிறேன்..."
"நீங்க ஒரு 12 மணிக்கா பவித்ரா வரீங்களா? எனக்கு தனியா சாப்பிடறதுக்கு
ஒரு மாதிரி இருக்கு. நீங்க அப்படியே புக்கையும் எடுத்துட்டு வந்துடுங்க!"
"சரிங்க. நீங்க புறப்படறதுக்கு முன்னாடி ஒரு கால் பண்ணுங்க"
........................................
12:15, பவித்ரா ஹோட்டல்
"நான் உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கறேன்னு நினைக்கிறேன்.
சாரிங்க"
"எதுக்கு???"
"இல்லை... நான் ஜஸ்ட் உங்க ஃபிரண்டோடா ஃபிரண்டு. எனக்காக இவ்வளவு ஹெல்ப் பண்றீங்களேனு சொன்னேன். பொதுவா எனக்கு யாருக்கும் தொந்தரவு கொடுக்கறதுக்கு பிடிக்காது"
"ஏங்க இப்படி பேசறீங்க. நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட். அதுவும் இல்லாம இன்னைக்கு சனிக்கிழமை எனக்கு எதுவும் பிரோக்ராமும் இல்லை. சாப்பிடறதுக்கு ஒரு கம்பெனிக்காவது ஆள் இருக்கேனு நான் சந்தோஷமாத்தான்ன் இருக்கேன்"
"நான் இதுக்காக மட்டும் சொல்லல.. போன தடவை எனக்காக சனிக்கிழமை உக்காந்து அந்த வேலையை முடிச்சியிருக்கீங்க. நான் அதை அப்ப கவனிக்கல. நேத்துதான் நீங்க அதை எப்படி பண்ணியிருக்கீங்கனு பாக்கலாம்னு பாக்கும் போது உங்க மெயில்ல சென்ட் டேட் பாத்தேன்"
"ஏங்க இந்த மாதிரி பேசி என்னை பேசவிடாம பண்ணிடுவீங்க போல இருக்கு. நீங்க கொடுத்த அன்னைக்கு கஜினி ரிலீஸ். சூர்யா படம் ஃபர்ஸ்ட் டே பாக்கலைனா நமக்கு அவ்வளவுதான். அதனாலதான் சனிக்கிழமை வந்து பண்ண வேண்டியதா போச்சு. இந்த மாதிரி இனிமே பேசாதீங்க"
"சரிங்க"
தீடீர்னு நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது.
"ஐயய்யோ... என்னங்க இப்படி மழை பெய்யுது"
"இதுக்கு தாங்க... நான் இனிமே புண்ணியம் செய்யறதையே குறைச்சிக்கனும். நான் எங்க போனாலும் மழை பெய்யுது"
முறைத்தாள்.
"கண்டிப்பா இப்ப வெளிய போக முடியாது. மழை நின்ன உடனே கிளம்பலாம்"
"சரிங்க... இன்னைக்கு பாத்து இப்படியாயிடுச்சே. நான் வேற இதுக்கு அப்பறம் போய் வேலை செய்யனும்"
"VB கத்துக்கறீங்க போல இருக்கு"
"ஆமாங்க. உங்களை எவ்வளவு நாள்தான் தொந்தரவு பண்றது"
"சரி கத்துக்கோங்க.... அதுதான் உங்களுக்கும் நல்லது"
நாலு மணி வரை மழை பெய்தது. இருவரும் 4 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திவ்யா அதிகமாக பேசாதவள் என்று நான் நினைத்திருந்தது தவறு என்று எனக்கு புரிந்தது.
......................................
திங்கள் காலை 10 மணி.
"ஹாய் தனா" ஜிடாக் விண்டோ மாணிட்டரில் மின்னியது.
"ஹே திவ்யா. என் ஐடி எப்படி கிடைச்சுது உனக்கு???"
"ஐஸ்வர்யா கொடுத்தா"
"ஹிம்... அப்பறம் அன்னைக்கு ஆபிஸ்ல இருந்து எப்ப கிளம்பின???"
"நான் போய் ஒரு மணி நேரத்துல கிளம்பிட்டேன். வீட்ல போயி படிச்சேன்"
"ஹிம்"
இப்படியே தினமும் மெசஞ்சரிலும், போனிலும் பேசிக் கொண்டோம்.
அப்படியே ஒரு மாதத்திற்கு பிறகு தினமும் மதியம் மூவரும் ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தோம்.
................................
"டேய் தனா! நீங்க பண்றது ஓவர்டா"
"என்ன பண்றோம்"
"அவ முன்னாடி எல்லாம் ஒழுங்கா இருந்தா... இப்ப ரூம்க்கு வந்து சாப்பிட்டு முடிச்சவுடனே உனக்கு போன் பண்ணிடறா... எனக்கு தனியா இருக்க போர் அடிக்குது"
"அதுக்கு நான் என்ன பண்றது? வேணும்னா நல்ல புக் வாங்கி தரன்... படி"
"டேய்! ஓவரா பேசாதடா"
"சரி இனிமே நான் அவள்ட பேசல போதுமா???"
"ஏய் டென்ஷன் ஆகாத!!! நான் சும்மா சொன்னேன்... நீங்க ஏதோ பண்ணிக்கோங்க எனக்கு என்ன???"
.......................
இரவு 9 மணி. செல்போன் சிணுங்கியது. வழக்கம் போல் திவ்யா கூப்பிட்டிருந்தாள்.
"ஏய்! சொல்லு"
"சாப்பிட்டியா"
"இல்ல... ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு"
"ஒன்னுமில்லை"
"அழுதயா??? எனக்கு தெரியும்... உன் குரல் ஒரு மாதிரி இருக்கு"
" "
"ஏன் அமைதியா இருக்க சொல்லு? என்னாச்சு???"
"என் கிளாஸ் மேட் ராஜேஷ் இன்னைக்கு என்கிட்ட ப்ரபோஸ் பண்ணான் "
"என்னது??? உன்னை ஒருத்தன் லவ் பண்றானா??? என்னால நம்பவே முடியலையே!!!"
செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அவசரமாக கூப்பிட்டேன். 3 முறை கட் செய்து 4வது முறை வேறு வழியில்லாமல் எடுத்தாள்.
"ஏய் சாரி... ப்ளீஸ் நான் விளையாட்டுக்கு சொல்லிட்டேன். என்ன நடந்துச்சு சொல்லு"
"அவன் என்னை 5 வருஷமா லவ் பண்றானாம். என்னை லவ் பண்ணுனு கெஞ்சறான். இதுக்கு எங்க கிளாஸ்ல இருக்கற 4-5 பசங்க சப்போர்ட் வேற"
"உன் பிரச்சனை என்ன??? அவன் உனக்கு நல்ல ஃபிரண்டுன்னு சொல்லி இருக்க"
"நல்லா பேசனா லவ் பண்றன்னு அர்த்தமா? ஏன் இந்த பசங்க எல்லாம் இப்படி இருக்காங்க???"
" "
"ஏன் அமைதியா இருக்க??? ஏதாவது சொல்லு"
"நீ என்ன சொன்ன?"
"இந்த மாதிரி பேசறதா இருந்தா இனிமே பேச வேண்டாம்னு சொல்லிட்டேன்"
"இப்ப நான் என்ன செய்யனும்"
" நீ எதுவும் செய்ய வேணாம். உன்கிட்ட சொல்லனும்னு தோனுச்சி அதனால சொன்னேன்"
"சரி எதுவும் கவலைப்படாம தூங்கு...குட் நைட்"
அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை...."நல்லா பேசனா லவ் பண்றன்னு அர்த்தமா?" என் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது.
(தொடரும்.....)
Monday, January 12, 2009
பிரிவு 1
"தனா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?""சொல்லு... பாக்கலாம்"
"ஒண்ணும் இல்லை... என் ரூம் மேட் திவ்யாக்கு அவ பிராஜக்ட்ல எக்ஸெல்ல மேக்ரோ பண்ண சொல்லியிருக்காங்க. அவ எனக்கு போன் பண்ணி ஹெல்ப் பண்ண முடியுமானு கேட்டா. நீ தான் அதுல பெரிய ஆளேச்சே! கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் ப்ளீஸ்"
"திவ்யானா? அன்னைக்கு கமெர்ஷில் ஸ்ட்ரீட்ல உன்கூட லூசு மாதிரி ஒண்ணு இருந்துச்சே அதுவா?"
"ஏய், லூசு கீசுன்ன அவ்வளவுதான்"
"சரி சொல்லு என்ன பண்ணனும்"
"இரு நான் அவள்ட டீட்டெயிலா கேட்டு சொல்றேன்"
.........................
"ஹலோ திவ்யா நான் ஐஸூ பேசறேன். அந்த எக்ஸல்ல ஏதோ பண்ணனும்னு சொன்னியே, கொஞ்சம் டீட்டயிலா சொல்லு, தனா பண்ணி தரன்னு சொல்லி இருக்கான்""
"இரு நீ என்ன சொல்றனே எனக்கு புரியல. நான் தனா எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட் பண்ணறேன். அவன்ட நீயே பேசிக்கோ"
......................
"தனா உன் எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட பண்றேன். கொஞ்சம் அவள்ட என்ன செய்யனும்னு டீட்டெயிலா கேட்டுக்கோ"
"சரி"
"டேய்! அவளை எல்லாரையும் ஓட்டற மாதிரி ஓட்டாத"
"சரி.... சொல்லிட்ட இல்ல ஃபிரியா விடு"
.....................
"ஹலோ! நான் தனா பேசறேன். சொல்லுங்க என்ன செய்யனும்"என்ன வேணும்னு தெளிவாக சொன்னாள்.
"சரிங்க.. இது செய்யறதுக்கு ஒரு 5 மணி நேரமாகும். ஒரு மணி நேரத்துக்கு $60. மொத்தம் $300. எப்படி அனுப்பறீங்க?. இண்டர் நெட் டிரான்ஸ்பர் பண்ணிடறீங்களா?"
"என்னங்க இப்படி சொல்றிங்க? உங்களூக்கே இது அநியாயமா தெரியலையா?"
"சரி நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட்ன்றதால பாதி ரேட்ல பண்ணி தரேன். ஓகேவா?"
"ஐயய்யோ வேணாங்க... நான் வேற ஆளை பாக்கறேன்"
"கவலைப்படாதீங்க! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். எப்ப வேணும்னு சொல்லுங்க?"
"நாளைக்கு மதியத்துக்குள்ள பண்ணி தர முடியுமா?"
"சரிங்க நாளைக்கு மதியம் சாப்பிட போறதுக்கு முன்னாடி அனுப்பி வெச்சிடறேன்"
ஒரு மணி நேரத்துக்குள் முடித்துவிட்டு அனுப்பிவிட்டேன். நன்றி சொல்லி மெயில் அனுப்பினாள்....................................
ஒரு வாராத்திற்கு பிறகு...எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது
"ஹலோ தனா ஹியர்"
"நான் ஐஸ்வர்யா ஃபிரெண்டு திவ்யா பேசறேன்"
"எந்த ஐஸ்வர்யா?""
"நீங்க தனபாலன் தான?"
"ஆமாம் அப்படிதான் என்னை எல்லோரும் கூப்பிடறாங்க"
"உங்க பிராஜக்ட் மேட் ஐஸ்வர்யா பிரண்ட் திவ்யா. அன்னைக்கு கூட எக்ஸேல்ல மேக்ரோ பண்ணி குடுத்தீங்களே"
"நியாபகம் இருக்குங்க. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அப்பறம் ஐஸ்கிட்ட நான் இந்த மாதிரி கேட்டன்னு சொல்லிடாதிங்க"
"சரிங்க. அப்பறம் ஒரு சின்ன பிரச்சனை"
"சொல்லுங்க உங்க மேனஜரை போட்டு தள்ளனுமா?"
"ஐயய்யோ அதெல்லாம் இல்லை. அன்னைக்கு நீங்க பண்ண மேக்ரோவை நான் பண்ணன்னு சொல்லி குடுத்துட்டேன். அது எங்க மேனஜ்ருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. இப்ப அதைவிட கொஞ்சம் அட்வான்சா ஒன்னு கொடுத்து பண்ண சொல்லி இருக்காரு. ப்ளீஸ் நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். "
"இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? நான் பண்ணதை நீங்க பண்ணீங்கனு கதைய விட்ருக்கீங்க"
"ஸாரிங்க. நீங்க வேற கம்பனி. இதை சொன்னா பிரச்சனையாயிடும்"
"புரியுது. என்ன செய்யனும்னு சொல்லுங்க? எப்படி செய்யனும்னு உங்களுக்கு நான் சொல்லி தரேன்"
ஒரு வழியாக விளக்கினாள்.
"உங்களுக்கு VB தெரியுமா?"
"தெரியாதே! காலேஜ்ல நாலாவது செமஸ்டர்ல படிச்சேன். மறந்து போச்சு"
"ஃபிரியா விடுங்க... எனக்கு நாலாவது செமஸ்டர் படிச்சமானே நியாபகம் இல்லை. எப்ப வேணும்?"
"திங்க கிழமை காலைல. முடியுமா?"
"என்னங்க மணி 4 ஆயிடுச்சி. நான் பொதுவா வெள்ளிக்கிழமை 1 மணிக்கு மேல எந்த வேலையும் பண்ணமாட்டேன்"
"சாரிங்க... இந்த ஒரு தடவை மட்டும்"
"இந்த தடவை நானே பண்ணி தரன். ஆனால் எனக்கு ட்ரீட் கொடுக்கனும். ஓகேவா???"
"ட்ரீட்டா??? "
"பின்ன... போன தடவையே 300 டாலர் வாங்கியிருக்கனும். மிஸ் பண்ணிட்டேன். இந்த தடவை எப்படியும் ட்ரீடாவது கொடுக்கனும்""
""என்னங்க பேச்சையே கானோம்"
"சரிங்க. நீங்க பண்ணி குடுங்க. ட்ரீட் வெச்சிக்கலாம்.....எங்கனு நீங்களே சொல்லுங்க"
"லீலா பேலஸ்"
"இதெல்லாம் கொஞ்சம் ஓவர்..."
"சரி ப்ரிகேட் ரோட்ல இருக்கற "Cafe Coffee Day"ல வெச்சிக்கலாம். அடுத்த வீக் என்ட். ஓகேவா???"
"சரிங்க"
"திங்க கிழமை காலைல உங்க மெயில் பாக்ஸ்ல எக்ஸல் இருக்கும்"
"ரொம்ப தேங்ஸ்ங்க"
.....................................
"டேய்! மேக்ரோ பண்ணி குடுக்கறதுக்கு ட்ரீட் கேட்டயாமே... உண்மையா???"
"ஆமாம்... அப்ப தான் அடிக்கடி கேக்க மாட்டா. கத்துக்கனும்னு தோனும்"
"கிழிக்கும்... இனிமே ட்ரீட் கொடுத்தே உங்கிட்ட வேலை வாங்கிடலாம்னு அவ நேத்து கூட ரூம்ல சொல்லிட்டு இருந்தா!!!"
"ஓ!!! பாத்தா லூசு மாதிரி இருக்கா... இப்படியெல்லாம் வேற பேசறாளா??? அவளுக்கு இருக்கு.நான் வேற அவளுக்கு முன்னாடியே அந்த எக்ஸெல அனுப்பி வெச்சிட்டேன்"
"சரி வீக் என்ட்தான் பாக்க போறியே அப்பறமென்ன??? அப்ப கேட்டுக்கோ"
"ஏய் டுபுக்கு.. நான் சும்மா பேச்சுக்கு சொன்னா, சீரியசா எடுத்துக்க்கிட்டயா? ட்ரீட் எல்லாம் எதுவும் வேணாம். அவள்ட சோல்லிடு"
"சரி"
.....................
அடுத்த நாள் எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது.
"ஹலோ! தனா ஹியர்"
"நான் திவ்யா பேசறேன்"
"சொல்லுங்க திவ்யா!!! அடுத்த எக்ஸல் ரெடியாயிடுச்சா???"
"ஐயய்யோ அதெல்லாம் இல்லைங்க. சும்மா தான் போன் பண்ணேன்""
"சொல்லுங்க"
"நேத்து ஐஸ்வர்யாட்ட ட்ரீட் வேணாம்னு சொன்னிங்களாமே? நிஜமாவா?"
"இல்லையே நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே"
"நீங்க வேணாம்னு சொன்னிங்கனு அவ சொன்னா"
"சும்மா சொன்னங்க. நான் தான் வேணாம்னு சொன்னேன்"
"நான் அவள்ட சும்மா ஓட்றத்துக்காக சொன்னதை அவ உங்ககிட்ட வந்து சொல்லிட்டா. சீரியஸா எடுத்துக்காதீங்க. நான் உங்களுக்கு கண்டிப்பா ட்ரீட் கொடுக்கறேன்"
"உங்க இஷ்டம். சரி நீங்க எந்த பிரான்ச்ல வேலை பாக்கறீங்க? உங்க கம்பனிதான் ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலையும் வெச்சிருக்கானே""
"நான் எலக்ட்ரானிக் சிட்டில இருக்கேன். போன வாரம் வரைக்கும் மடிவாளால இருந்தேன்"
"சரி அப்ப ஏதாவது ஓரு நாள் லன்ச்க்கு மீட் பண்ணுவோம்"
"வாவ்!!! இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே... இன்னைக்கு நான் என் பிரெண்ட்ஸ் கூட போகனும்.. நாளைக்கு மீட் பண்ணுவோமா?"
"சரிங்க......"
(தொடரும்)