தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, January 14, 2014

கரும்புனல் - வாசிப்பனுபவம்

நண்பர் (பினாத்தல்) சுரேஷ் எழுதியப் புத்தகம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே “கரும்புனல்” வாங்கினேன் என்பது தான் உண்மை. கதைக்களம் பிஹார், (இன்றைய ஜார்கண்ட்) என்பதாலும், இதில் உள்ள பிரச்சனைகளான நில கையகப்படுத்தும் சிக்கல் (Land Acquisition Issue), நிலக்கரி சுரங்க ஊழல், நக்சலைட் பிரச்சனை என்று என் பரிட்சைக்குத் தேவையான விஷயங்களும் இருப்பதாலும் படிக்கத் துவங்கினேன். நேற்று இரவு படித்து முடிக்கும் பொழுது இரண்டு மணி. காலை ஐந்து மணி வரை தூக்கம் வராமல், சிந்தனை முழுக்க இக்கதையில் வரும் உச்சிடி கிராமமும், அம்மக்களும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும், அதை தவிர்க்க முடியாத நிறுவன குறைபாடுகளும், தனி மனித வக்கிரமும் மட்டுமே தோன்றிக் கொண்டிருந்தது.

இது உண்மை சம்பவமாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் உண்மைக்கு மிக நெருக்கமாக இருந்திருக்க முடியும் என்ற எண்ணமே தூங்க விடவில்லை. இதை யார் தடுத்திருக்க முடியும். ஊழல் ஒரு பக்கம், சாதி வெறி ஒரு பக்கம். தனி மனித தவறுகளுக்கு, நிறுவனங்கள் என்ன பொறுப்பு ஏற்க முடியும். ஊழலைத் தடுக்க ஒரு தனி பிரிவு அல்லது ஒரு ப்ராசஸ்
கொண்டு வந்தாலும், அதை நடைமுறைப் படுத்துவதும் தனி மனிதர்கள் தானே. அதுவும் Coal India Limited மாதிரி மஹாரத்னா கம்பெனிகளில் நடக்கும் ஊழலை தனிமனிதன் ஒருவனால் தீர்க்க முடியுமா?

அடுத்து, அந்த ஊர் மக்கள் என்ன மாதிரியான போரட்டத்தை மேற்கொண்டு, தங்கள் தேவைகளை வென்றிருக்க முடியும்? சத்தியாகிரஹம்? காந்தியினுடைய சத்தியாகிரஹம் எல்லாம் Mass Movements. இல்லை There are exceptions like champaral, Kheda and even Individual Satyagraha. இவர்களுடைய பிரச்சனைக்காக இந்த ஊர் மக்கள் தவிர யார் வருவார்கள்? இவர்கள் கேட்டதைக் கொடுப்பதாகச் சொல்லித்தானே ஏமாற்றுகிறார்கள். கொடுக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தால் தானே போராட்டம் எல்லாம் மக்கள் கவனம் பெறும். இவ்வளவும் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, இதற்குத் தானே PESA, Land Acquisition Act 2013 எல்லாம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதிலும் பல exceptions இருக்கிறது. களத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே உண்மையான நிலைத் தெரியும். புத்தகங்களில் படிப்பதை வைத்து முடிவுக்கு வர முடியாது.

தனி மனிதர்கள் செய்யும் இது போன்ற தவறுகளால் ஏற்பட்டுள்ள விளைவுகள். இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனையாக பிரதமரே ஒத்துக் கொண்டுள்ள நக்சலிசம். அதன் காரணமாக இரண்டு பக்கங்களும் நிகழும் இழப்புகள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைத் தெரியாத வெளிச்சம். இப்படி தொடர் சிந்தனைகள் இப்பொழுது வரைத் தொந்தரவு செய்கிறது. நிச்சயம் உங்களுக்கு இதே மாதிரி எண்ணங்கள் வராமல் போகலாம்.

(பினாத்தல்) சுரேஷ் எழுத்தாளராக என்னைக் கவர்ந்த இடங்கள்:

- சாம்பலும், கரியும் என் மேல் ஒட்டியிருந்ததைப் போன்ற உணர்வைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தது.

- டெக்னிகல் விஷயங்களை எளிமையாக புரியும் படி விளக்கி இருந்தது. குறிப்பாக ஏன் இவ்வளவு நிலம் தேவை என்ற இடங்கள்.

- Underground Minesக்குள் சந்துரு நடக்கும் பொழுது எனக்கு மூச்சு முட்டியது போலத் தோன்றியது. ஒரு வித பயத்தைக் கொடுத்தது.

- நிலத்தைக் கையகப்படுத்தும் முறைகளை எளிமையாக விளக்கியது.

- ஊழல், சாதியப் பிரச்சனை இரண்டும் ஏற்படுத்தும் கொடூரமான விளைவுகளை எனக்கு அறிமுகமில்லாத ஆனால் அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ள களத்தில் கொடுத்தது. இதைத் தொடர்ந்து எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சிந்தனைகள்.

நெருடலாக நான் உணர்ந்த இடங்கள்:

- மலைவாழ் பெண்ணிற்கு தீபா என்ற பெயர் (பெனத்தலாரின் பதில் @vettipaiyal ஐயா, என்னோட ஒருதலைக்காதலி மலைவாசி தீபா :-) )

- சீலிங் ஃபேன் காற்று பேப்பர்களைக் கூட அசைக்கவில்லை என்று இரண்டு இடங்களில் வருவது (Page 84, 153)

- கடைசியில் வரும் சில ட்விஸ்ட்கள். அது இல்லாமலே இது நல்ல நாவல் என்பது என் எண்ணம். ஏனோ வலிந்து திணித்ததைப் போல இருந்தது.

- இன்னும் கூட இதை விரித்து எழுதியிருக்கலாம் என்பது என் எண்ணம். ஏனோ Fastfood சாப்பிட்டதைப் போல் இருந்தது.

இது நாவலைப் புரமோட் செய்யப்பட்ட விமர்சனம் அல்ல. சொல்லப்போனால் இது விமர்சனமே இல்லை. இது என் எண்ணங்களின் வெளிப்பாடே.

கொத்ஸ் - எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் ;)

4 comments:

இலவசக்கொத்தனார் said...

என்னடா பையன் நல்ல படிக்கா எழுதிக்கிட்டுப் போறானேன்னு பார்த்தேன். கடைசி வரியில் வெச்சான் பாருடா ஆப்பு! :)

Unknown said...

கதைக்களம் பிஹார், (இன்றைய சத்திஸ்கர்) என்பதாலும், இதில் உள்ள பிரச்சனைகளான நில கையகப்படுத்தும் சிக்கல் (Land Acquisition Issue), நிலக்கரி சுரங்க ஊழல், நக்சலைட் பிரச்சனை என்று என் பரிட்சைக்குத் தேவையான விஷயங்களும் இருப்பதாலும் படிக்கத் துவங்கினேன் ... How can it be Bihar and Chhattisgarh put together , It should be Jharkhand , Check ur facts thambi.Further the flat understanding of all halfbaked leftist writers that land acquisition for the mining and corporate lobby as the reason for the existence of naxalism is a cliched one , U hv to get out of it . Poraata muraigal ennavaaga irukkavendum enbathupatriya ungal paarvaiyaana , களத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே உண்மையான நிலைத் தெரியும். புத்தகங்களில் படிப்பதை வைத்து முடிவுக்கு வர முடியாது.enbathu naxalismkkaana kaarangalukkum porunthum இதற்குத் தானே PESA, Land Acquisition Act 2013 எல்லாம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதிலும் பல exceptions இருக்கிறது , koodavae NTFP enbathin pinnaal iyangum middle class baniyaa muthalatthuvam patriyum arinthu kollavum

வெட்டிப்பயல் said...

// இலவசக்கொத்தனார் said...
என்னடா பையன் நல்ல படிக்கா எழுதிக்கிட்டுப் போறானேன்னு பார்த்தேன். கடைசி வரியில் வெச்சான் பாருடா ஆப்பு! :)//

கொத்ஸ்,
இது எப்பவும் நடக்கறது தானே ;)

வெட்டிப்பயல் said...

@Alex Paul Menon,
Thank you for visiting my blog and your feedback. Sorry for the factual error. I will be more careful from now on.