தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, March 29, 2010

நாங்க நினைச்சிட்டோம்.. பேசிட்டோம்... ஆரம்பிக்கணும்...

அவசரம்.. அவசரம்.. அவசரம்... ஏன் இந்த அவசரம். நீங்க நினைச்ச ஒரு வாரத்துல ஆரம்பிக்கணும்னு என்ன இருக்கு? காரணம் சொல்லாம இப்படி சங்கம் ஆரம்பிக்கணும்னு குதிக்க வேண்டிய காரணம் என்ன?

ஏற்கனவே பிரபல பதிவர்கள்னு ஒரு கூட்டம் யாருக்கும் பின்னூட்டம் போடறது இல்லை. செட்டு சேர்ந்து அவுங்களுக்குள்ளயே பின்னூட்டம் போட்டுக்கறாங்கனு இங்க கம்ப்ளைண்ட் இல்லையா? இப்ப இந்த சங்கத்தை ஆரம்பிக்கணும்னு முதல்ல நிக்கறதும் அவுங்க தானே.

//அவர்களும் நட்பை வளர்ப்பதையும், தொடர்வதையும், எழுத்து ஆர்வத்தை தூண்டுவதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இந்த அமைப்பினை நடத்துவதாகச் சொன்னார்கள்//

They have a goal.

அது தான் என்னனு நீங்க சொல்லுங்களேன். இன்னைக்கு ரெண்டு கேள்வி கேட்டாலே இவ்வளவு குதிக்கும் நீங்கள் நாளைக்கு சங்கம்னு ஆரம்பிச்சி அதுக்கு தலைவரா உட்கார்ந்தா, உங்களை மதிக்காதவங்க மேல எல்லாம் நாட்டாமை மாதிரி, யாரும் இவரோட பழக கூடாதுனு தீர்ப்பு சொல்ல மாட்டீங்கனு என்ன நிச்சயம்?

இந்தியா வந்தா யார் யாரை பார்க்கணும்னு இப்பவே ரூல்ஸ் போடற உங்களை நாங்க எப்படி நம்பறது? எதுக்கு நம்பணும்? உன்னை யாரு சேர சொன்னா, ஏமாந்தவங்க எங்களுக்கு கிடைப்பாங்கனு மனசுக்குள்ள சொல்றது கேக்குது.

புத்தகத்துல பத்து பர்செண்ட் டிஸ்கௌண்ட் கேட்கலாம்னு இன்னைக்கு ஆரம்பிக்கிறது, நாளை பிரிமியர் ஷோ, கவர்னு வந்து நிக்காதுனு என்ன நிச்சயம்?

வலைப்பதிவு ஒரு குடும்பம், கதம்பம்னு சொல்றது எல்லாம் கேக்கறதுக்கு நல்லா இருக்கும். நாளைக்கே போலி மாதிரி ஒருத்தவன் உங்க பொண்டாட்டி பிள்ளைங்க படத்தை நெட்ல போட்டு அசிங்கமா கதை எழுதினா என்ன செய்வீங்க? அப்ப போலிஸ் ஸ்டேஷனுக்கு உண்மை தமிழன் அண்ணனை கூப்பிட்டு அலையணுமா? இப்ப இருக்குற மாதிரி குறிப்பிட்ட நண்பர்கள். பிடிச்சிருந்தா குடும்பத்தோட பழகிக்கலாம். அதுவும் அவரவர் விருப்பம். இப்ப யாரும் யாரையும் குடும்பத்தை கூப்பிட்டு வானு சொல்ல முடியாது. நாளைக்கு உங்க சங்கம் சொல்லாதுனு என்ன நிச்சயம்?

அடுத்து சங்கம் மூலமா யாரிடம் சலுகை பெறணும்னு முயற்சி பண்ணறமோ அவுங்களை பத்தி வலையுலகுல தப்பா எழுத முடியாது. நாளைக்கே கலைஞர் ஆளுக்கு ஒரு பட்டா தரனும்னு சொன்னா, முத்தமிழே, வித்தமிழேனு கவிதை எழுதி எல்லாரும் பாராட்டணும். இந்த கொடுமைக்கா ப்ளாக், கட்டற்ற மட்டற்றனு சொல்லிட்டு இருக்கோம். யாரிடமாவது சலுகை எதிர்பார்க்கிறோம்னா நம்ம பதிவை அவுங்களுக்கு விக்கறோம்னு தான் அர்த்தம்.

டெக்னிகல் உதவி என்றால் ஏற்கனவே ஆரம்பித்து, நடுத்துவார் இல்லாமல் இருக்கும்

http://tamilblogging.blogspot.com/

சேர்ந்து உதவலாம். இதை எடுத்து செயல்படுத்துவதில் பலருக்கு ஈகோ தடுக்கலாம்.

//தலைநகரான சென்னையில் மட்டும் முகம் தெரிந்து வெறும் 60 பதிவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..? //

எதுக்கு முகம் தெரியணும்? வலைப்பதிவோட பலமே அது தானே? விருப்பம் இருப்பவர்கள் முகத்தை காட்டட்டும். ஆனால் எல்லாரும் முகம் காட்டணும்னு எதிர்பார்க்கறது முட்டாள் தனம். காட்டணும்னு சட்டம் போட்டா ஃபாஸிஸம்.

யாராவது கேள்வி கேட்டா தமிழன் எதிரினு பில்ட் அப் வேற. இந்த பச்சை தமிழன், நீல தமிழன், பிங் தமிழன் எல்லாம் கேட்டு கேட்டு சலிச்சி போச்சு.

வலைப்பதிவே இப்படி தைரியமா கேள்வி கேட்க தான். அதையே இந்த சங்கம்\குழுமம்.... தடுத்து நிறுத்தும் என்பது தான் என்னுடைய முதல் பிரச்சனை.

நாங்க நினைச்சிட்டோம்... பேசிட்டோம். ஆரம்பிக்கணும்னு சொன்னா...27 comments:

வெட்டிப்பயல் said...

My comment in
http://naayakan.blogspot.com/2010/03/blog-post_28.html

முதல்ல ஆரம்பிச்சிடுவோம் அப்பறம் பார்த்துக்கலாம்...

ஏன் இந்த அவசரம்?

டெக்னிகல் உதவி என்றால் ஏற்கனவே ஆரம்பித்து, நடுத்துவார் இல்லாமல் இருக்கும்

http://tamilblogging.blogspot.com/

சேர்ந்து உதவலாம்.

டோண்டு\போலி டோண்டு பிரச்சனைகளை எதிர்கொள்வது என்றால் சில நாட்டாமைகளை உருவாக்க வேண்டும். இது வலையுலகின் கயுத்தை நெறிப்பது போல

டீச்சர் இவன் என்னைக் கில்லிட்டான் என்று கம்ப்ளைண்ட் எல்லாம் வலையுலகிற்கு ஒத்துவராது.

ஊருக்கு வரும் போது யார் யாரை சந்திக்க வேண்டும் என்பது அவர் அவர் விருப்பம். அனைவருடைய பதிவிலும் ஈமெயில் ஐடி உள்ளது. உங்களை ஒருவர் சந்திக்க விரும்பினால் அவர் ஈமெயில் செய்யக் கூட மாட்டார் என்றால் அவரை சந்திக்க வேண்டியது வீண். இப்படி குழு ஏற்படுத்தினால் அதில் பல பிரச்சனைகள் வர செய்யும்.

நாளைக்கே ஒருவர் இந்தியா வந்து குறிப்பிட்ட நபர்களை மட்டும் சந்தித்து விட்டு போனால், அவர் சந்தித்த நபர்களை குழுவில் இருக்கும் நண்பர் ஒருவர் விளையாட்டிற்காக, “ஏன்பா குழுமத்துல ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் இல்லை. அப்படி என்ன ரகசியம் பேசினீங்க” என்று கேட்டால் அடுத்த முறை நிச்சயம் அந்த பதிவர் யாரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியாது. இது நடக்காது என்று நிச்சயம் சொல்ல முடியுமா?

சிறுகதைப் பட்டறை, கவிதை பட்டறை எல்லாம் அவர் அவர் விருப்பம். இதை வலையுலகிற்கு பொதுவாக்க (சங்க\குழுமம் நிதியை பயன்படுத்த) இயலாது. அதை சிவராமன் அவர்களே எடுத்து சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். விளக்கம் வேண்டும் என்றால் கொடுக்கத் தயார்.

மருத்துவ/கல்வி உதவி என்றால் இப்பொழுது இருக்கும் முறையே சிறந்ததாக எனக்குப்படுகிறது. இதில் சில பிரச்சனைகள் இருக்கிறது என்று இதை முன்னின்று நடத்தும் என்றென்றும் அன்புடன் பாலா, நர்சிம் போன்றவர்கள் சொன்னால் அதைக் கேட்டு கொள்கிறேன். ஆனால் அதற்கு இப்படி ஒரு குழு பதியப்பட (Register) வேண்டுமா என்பதும் என் கேள்வி?

வெறும் மாஸ் காட்ட என்றால் இதில் சொல்ல எதுவும் இல்லை :)

V.Radhakrishnan said...

:)

யாத்ரீகன் said...

பதிவு போட முடியாம நெறய ஆணி இருந்தா.ஆணிபுடுங்க உதவிக்கு ஆளனுப்புவாங்களா சங்கத்தில? யாருமே இதபேசலயே :-(

ச்சின்னப் பையன் said...

//யாத்ரீகன் said...
பதிவு போட முடியாம நெறய ஆணி இருந்தா.ஆணிபுடுங்க உதவிக்கு ஆளனுப்புவாங்களா சங்கத்தில? யாருமே இதபேசலயே :-(

//

ஆணிகளை நான் பாத்துப்பேன். என் தளத்தில் யாராவது இடுகைகள் போட்டு ஹிட்டு ஏத்துவாங்களா?

:-))

வெட்டிப்பயல் said...

//V.Radhakrishnan said...
:)//

:)

வெட்டிப்பயல் said...

// யாத்ரீகன் said...
பதிவு போட முடியாம நெறய ஆணி இருந்தா.ஆணிபுடுங்க உதவிக்கு ஆளனுப்புவாங்களா சங்கத்தில? யாருமே இதபேசலயே :-(

//

இதை உ.தமிழன் அண்ணனுக்கு ஃபார்வேர்ட் செய்கிறேன் ;)

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...
//யாத்ரீகன் said...
பதிவு போட முடியாம நெறய ஆணி இருந்தா.ஆணிபுடுங்க உதவிக்கு ஆளனுப்புவாங்களா சங்கத்தில? யாருமே இதபேசலயே :-(

//

ஆணிகளை நான் பாத்துப்பேன். என் தளத்தில் யாராவது இடுகைகள் போட்டு ஹிட்டு ஏத்துவாங்களா?

:-))

//

பாஸ்வேர்டை மட்டும் சொல்லுங்க. பார்த்துக்கலாம். உடனே *******னு அனுப்பாதீங்க :-)

செந்தில் நாதன் said...

//யாத்ரீகன் said...
பதிவு போட முடியாம நெறய ஆணி இருந்தா.ஆணிபுடுங்க உதவிக்கு ஆளனுப்புவாங்களா சங்கத்தில? யாருமே இதபேசலயே :-(//

:-)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

நீண்ட நாளைக்கு பிறகு வெட்டிப்பயல் டச்! :)

ஆனாலும் மேட்டர் சிரியஸா இருக்கும் போது.. இப்படி வந்து பின்னூட்டத்தில் நம்ம ஆளுங்க அடிச்சு ஆடுறதையும் ரசிக்க முடிகிறது.

யாத்ரீகனும், சின்னப்பையனும்( இன்னும் எத்தனை நாளைக்கு?!) என்ன நினைக்குறாங்கன்னு எழுதலாமே! :)

வெட்டிப்பயல் said...

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
நீண்ட நாளைக்கு பிறகு வெட்டிப்பயல் டச்! :)
//
நன்றி தல :)

//ஆனாலும் மேட்டர் சிரியஸா இருக்கும் போது.. இப்படி வந்து பின்னூட்டத்தில் நம்ம ஆளுங்க அடிச்சு ஆடுறதையும் ரசிக்க முடிகிறது.//

இதுக்காக தானே சண்டை போடறதே. நாளைக்கு இந்த சங்கம் இதுக்கெல்லாம் ஃபத்வா போட்டா என்ன செய்ய?

//

யாத்ரீகனும், சின்னப்பையனும்( இன்னும் எத்தனை நாளைக்கு?!) என்ன நினைக்குறாங்கன்னு எழுதலாமே! :)/

லாமே...

மாயன் said...

எனக்கு மட்டும் தான் சங்கம் எல்லாம் சரிப்படாதுன்னு தோணுதோன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. நிறைய பேரு இருக்கீங்க போல...

வெட்டிப்பயல் said...

// மாயன் said...
எனக்கு மட்டும் தான் சங்கம் எல்லாம் சரிப்படாதுன்னு தோணுதோன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. நிறைய பேரு இருக்கீங்க போல...

//

அதெல்லாம் கச கசனு இருக்காங்க பாஸ். வந்து இப்படி பக்கத்துல உட்காருங்க :)

வெண்பூ said...

வெல்கம் பேக் வெட்டி.. ஆஹா..ச்சின்னப்பையனெல்லாம் இருக்காரா ஆட்டத்துல :)))

என் கருத்துகளையும் பதிவிட ரெடி ஆகிட்டு இருக்கேன், இன்னும் ரெண்டு நாளில் ரிலீஸ்.. சென்னையில பதிவரா இருந்துட்டு இதைப் பத்தி பதிவு போடலைன்னா தள்ளி வெச்சிட்டா என்ன பண்ணுறது???? :)

கார்த்தி said...

Namkkum intha matter'kum sambantham illainalum... Happy to see you back...

சரவணன்-சாரதி said...

ஹாய், இதே விஷயத்தை என்னுடைய ப்ளாகிலும் சொல்லி இருக்கேன் பாஸ். சில வார்த்தைகள், கருத்துக்கள் எல்லாம் அப்படியே.
ஆச்சர்யமா இருக்கு..... பகிர்வுக்கு நன்றி பாஸ்.

குசும்பன் said...

வெட்டிப்பயல் இல்லை நீங்க சுட்டி & கெட்டி பயல்:)))

செமயா இருக்கு பதிவு:)

sriram said...

வெட்டி..
சங்க விசயமெல்லாம் கெடக்கட்டும், ஊருக்கு வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு,இன்னும் போன் நம்ப்ர் தரல, கூப்பிட்டு சொல்ற வழியப் பாருங்க..

நாம ஏன் அகில உலக பாஸ்டன் தமிழ் இணைய எழுத்தாளர்கள் முன்னெற்ற கழகம் தொடங்கக் கூடாது? யோசிச்சு சொல்லுங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வெட்டிப்பயல் said...

//வெண்பூ said...
வெல்கம் பேக் வெட்டி.. //
மிக்க நன்றி வெண்பூ...

//ஆஹா..ச்சின்னப்பையனெல்லாம் இருக்காரா ஆட்டத்துல :)))

என் கருத்துகளையும் பதிவிட ரெடி ஆகிட்டு இருக்கேன், இன்னும் ரெண்டு நாளில் ரிலீஸ்.. சென்னையில பதிவரா இருந்துட்டு இதைப் பத்தி பதிவு போடலைன்னா தள்ளி வெச்சிட்டா என்ன பண்ணுறது???? :)

//

சீக்கிரம் பதிவு போடுங்க... சென்னைல இருந்துட்டு இவ்வளவு லேட்டா பதிவு போட்டா எப்படி?

வெட்டிப்பயல் said...

//கார்த்தி said...
Namkkum intha matter'kum sambantham illainalum... Happy to see you back...

12:23 AM//

Thankspa...

வெட்டிப்பயல் said...

// சரவணன்-சாரதி said...
ஹாய், இதே விஷயத்தை என்னுடைய ப்ளாகிலும் சொல்லி இருக்கேன் பாஸ். சில வார்த்தைகள், கருத்துக்கள் எல்லாம் அப்படியே.
ஆச்சர்யமா இருக்கு..... பகிர்வுக்கு நன்றி பாஸ்.
//

வாவ் சூப்பருங்க :)

வெட்டிப்பயல் said...

//குசும்பன் said...
வெட்டிப்பயல் இல்லை நீங்க சுட்டி & கெட்டி பயல்:)))

செமயா இருக்கு பதிவு:)

//

தல,
நீங்க சொன்னா சரி தான் :-)

வெட்டிப்பயல் said...

// sriram said...
வெட்டி..
சங்க விசயமெல்லாம் கெடக்கட்டும், ஊருக்கு வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு,இன்னும் போன் நம்ப்ர் தரல, கூப்பிட்டு சொல்ற வழியப் பாருங்க..

நாம ஏன் அகில உலக பாஸ்டன் தமிழ் இணைய எழுத்தாளர்கள் முன்னெற்ற கழகம் தொடங்கக் கூடாது? யோசிச்சு சொல்லுங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

//

ஆரம்பிச்சா அமெரிக்க பதிவர்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கலாம் ;)

வெண்பூ said...

சங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்

சென்ஷி said...

//யாராவது கேள்வி கேட்டா தமிழன் எதிரினு பில்ட் அப் வேற. இந்த பச்சை தமிழன், நீல தமிழன், பிங் தமிழன் எல்லாம் கேட்டு கேட்டு சலிச்சி போச்சு.//

:))

இந்தத் தமிழர்கள் தொல்லை தாங்க முடியலையேப்பூ ....

Anonymous said...

தள்ளி உக்காருங்க பாலாஜி, எடம் கிடைக்காது போல இருக்கே :)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

அப்பாவி தங்கமணி said...
This comment has been removed by the author.