தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, September 04, 2009

ஜட்ஜா போகறீங்களா? சில டிப்ஸ்

இப்ப எல்லாம் எந்த டீவி சேனல் பார்த்தாலும் ரியாலிட்டி ஷோனு ஒண்ணு நடத்தி உயிர வாங்கறானுங்க. அதுலயும் அந்த நிகழ்ச்சிகள்ல வர நடுவர்கள் பண்ற அலும்பு தாங்கல. ஜட்ஜா இருக்குறதுக்கு ஒரே தகுதி பிரபலமா இருக்குறது தான். இப்ப தான் வலைப்பதிவு ரொம்ப பிரபலம் ஆகிட்டு வருதே, இந்த நிலைமைல இங்க நம்ம ஆளுங்களை கூப்பிட்டா, இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைனு நீங்க ஒதுங்கிடக்கூடாதுனு சொல்லித் தர தான் இந்த பதிவு.

முதல்ல பாட்டுப் போட்டி.

ஒரு பாட்டுப் போட்டிக்கு உங்களை ஜட்ஜா கூப்பிட்டா என்ன எல்லாம் கமெண்ட் குடுக்கலாம்னு பார்க்கலாம்.

1. ”பல்லவி நல்லா இருந்தது. சரணம்ல விட்டுட்டீங்க” இந்த இடத்துல பல்லவி நல்லா இருந்தது, சரண்யாவை விட்டுட்டீங்கனு சொல்லி மாட்டிக்க கூடாது. உங்களுக்கு தெரிஞ்ச ஒரே பல்லவி , சகாதேவன் மகாதேவன்ல S.V. சேகருக்கு ஜோடியா நடிச்சவங்களா இருக்கலாம். அதெல்லாம் வெளிய காட்டிக்க கூடாது

2.“ஸ்ருதி சேரல”. இந்த இடத்துல வடிவேல் ஸ்டைல்ல ”சுரூதி” சேரலனு சொல்லி மாட்டிக்க கூடாது. கொஞ்சம் ஸ்டைலா சொல்லனும்.

3.”டெம்போ இல்லை” - உங்களுக்கு தெரிஞ்ச டெம்போ வீடு காலி பண்றதுக்கு பயன்படுத்துற டெம்போவா இருக்கலாம். திடீர்னு டெம்போ மறந்து போய் “லாரி இல்லை”னு சொல்லிடாதீங்க. அப்பறம் வீட்டுக்கு ஆட்டோ வரும்.

4.“பீட்ட விட்டுட்டீங்க” - பீட்டர் விட்டுட்டீங்க இல்ல. இது Beatஅ விட்டுட்டீங்க. அப்படியே ஸிங் மிஸ் ஆகிடுச்சினும் சேர்த்துக்கலாம்.

5. “பிட்ச் சரியில்லை” - நம்மளுக்கு தெரிஞ்சது க்ரிக்கெட் பிட்ச் மட்டுமா இருக்கலாம். இருந்தாலும் தைரியமா சொல்லுங்க. தப்பி தவறி சேப்பாக்கம் ஸ்டேடியம் பிட்ச் மாதிரி இருக்கணும்னு சொல்லி மாட்டிக்காதீங்க.

இப்படி எதுவுமே சொல்ல தெரியலை. பயமா இருக்குனு ஃபீல் பண்ணீங்கனா, இதை பயன்படுத்துங்க. இது தான் பிரம்மாஸ்திரம்.

ரொம்ப சீரியஸா முகத்தை வெச்சிட்டு கேளுங்க.

“என்ன பாட்டு எடுத்துருக்கீங்க? உங்க ரேஞ்சுக்கான பாட்டே இல்லை இது. I was expecting more from you. You disappointed me" அப்படினு தமிழும் இங்கிலீசும் கலந்து அடிங்க.

இப்ப டான்ஸ் போட்டிக்கு ஜட்ஜா கூப்பிட்டா.

இதுல ரெண்டு விதம் இருக்கு. ஒண்ணு ஜோடியா ஆடறது. அடுத்து தனியா ஆடறது.

முதல்ல ஜோடியா ஆடறதைப் பார்ப்போம்

1. ”கெமிஸ்ட்ரி சரியில்லை”. உங்களுக்கு பிடிக்காதது கணக்கு பாடமா இருக்கலாம். அதுக்காக சரியா கணக்கு பண்ணலனு சொல்லிடாதீங்க. நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க. இது தான் முக்கியம். திடீர்னு தமிழ் பற்று வந்து வேதியியல் சரியில்லைனு சொல்லிடாதீங்க.

2. கோ-ஆர்டினேஷன் இல்லை (அ) சிங்க் இல்லை - இங்க வாய் தவறி சில்க் இல்லைனு சொல்லிடக் கூடாது. இதுக்கும் யாரும் காரணம் கேட்க மாட்டாங்க.

3. எக்ஸ்பிரஷன் சரியில்லை. இதுக்கு வந்து, டான்ஸ் நல்லா இருந்தது, ஆனா எக்ஸ்பிரஷன் மிஸ்ஸிங்னு சொல்லணும். இது பொதுவா நல்லா ஆடறவங்களுக்கு ஆப்பு வைக்க பயன்படுத்தலாம்.

4. கான்செப்ட் இல்லை - போட்டிக்கு எப்படியும் ஏதாவது கான்செப்ட் சொல்லுவாங்க. பழைய பாட்டு, குத்து பாட்டு, வெஸ்டர்ன், டூயட் இப்படினு. நல்லா டான்ஸ் ஆடினா, டான்ஸ் நல்லா இருந்தது கான்செப்ட் இல்லைனு சொல்லணும். நல்லா ஆடலனா கான்செப்ட் நல்லா இருந்தது, டான்ஸ் எங்கனு கேட்கனும். அதை கேட்டதும் அவுங்க அப்படியே தலை குனிஞ்சி நின்னுடுவாங்க. நாம கெத்து காட்டணும்.


இது எல்லாத்தை விட ரொம்ப சுலபமானது, ”எனக்கு பிடிக்கல. நீங்க நல்லா ஆடினீங்க. எல்லா ஜட்ஜுக்கும் பிடிச்சிருக்கு, ஆடியன்ஸுக்கும் பிடிச்சிருக்கு, என் வீட்டு நாய் குட்டிக்கு கூட பிடிச்சிருக்கு. ஆனா எனக்கு பிடிக்கல. எனக்கு டான்ஸ் தெரியாதுடா”. அப்படினு சொல்லிக் கூட மார்க் போடலாம். ஆனா அப்ப அழுகணும். இல்லைனா ஆட்டய விட்டு தொரத்திடுவாங்க.

இப்ப தனியா ஆடற டான்ஸ்க்கு ஜட்ஜா போனா என்ன எல்லாம் கமெண்ட்ஸ் கொடுக்கலாம்னு பார்க்கலாம்.

1. ஸ்டெப் மிஸ் பண்ணிட்டீங்க - இது தைரியமா அடிச்சி விடலாம். அதை டான்ஸ் ஆடினவங்க கிட்டயே கேட்கலாம். ”ஸ்டெப் மிஸ் பண்ணிட்டீங்க தானே? கரெக்டா இல்லையா”னு கேட்கனும். அவுங்களும் பப்பரப்பேனு பார்த்துட்டு என்ன பண்றதுனு தெரியாம, ஒரு வேலை நிஜமாவே எதையோ மிஸ் பண்ணிட்டமோனு நினைச்சி தலையை ஆட்டிடுவாங்க. ஊரே நம்மல பார்த்து, இவன் பெரிய ஆளுடானு நினைச்சிக்கும்.

2. எனர்ஜி குறைஞ்சிடுச்சி - இதுக்கு குசும்பனைக் கேட்டா இன்னும் தெளிவா விளக்கம் கொடுப்பாரு.

3. சாங் செலக்‌ஷன் - உங்க திறமைக்கு ஏத்த பாட்டு இது இல்லை. இன்னும் நல்ல பாட்டா செலக்ட் பண்ணிருக்கணும்னு சொல்லணும். எந்த பாட்டா இருந்தாலும் கவலைப் படாம சொல்லுங்க. கலந்துக்கறவங்களும் ரொம்ப பெருமையா காமிராவைப் பார்ப்பாங்க.

4. ஒரிஜினாலிட்டியை கெடுத்துட்டீங்க - பாதி பேர் பிரபு தேவா பாட்டைத் தான் ஆடுவாங்க. எப்படியும் அவரை விட நல்லா ஆடினாலும் நாம தைரியமா அடிச்சி விடலாம். அவர் எப்படி ஆடியிருந்தாரு, பாட்டோட ஒரிஜினாலிட்டியே கெடுத்துட்டீங்க அப்படினு அலப்பற கொடுக்கணும்.

இது எல்லாத்தையும் விட சுலபமானது, ”என்ன பண்ணீங்க??? I didnt expect this from you. ஸ்டெப் மிஸ் பண்ணிட்டீங்க, சிங் இல்லை, சாங் செலக்‌ஷன் சரியில்லை. போன ரவுண்ட்ல எப்படி ஆடினீங்க. I expected more from you. I am totally disappointed" இப்படினு சொல்லி அந்தர் பண்ணிடணும். தொர இங்கிலிபிஸெல்லாம் பேசுதுனு எல்லாரும் அப்படியே மெர்சலாயிடுவாங்க. டான்ஸ் ஆடினவங்க சோகமா நடந்து போவாங்க. உடனே பேக் க்ரவுண்ட்ல ஒரு சோக மியூசிக் போட்டுடுவாங்க. அப்படியே அவுங்க அழாம போனா கூட தலைல ஒரு தட்டு தட்டி அழ வெச்சிடுவாங்க. நமக்கு கவலை இல்லை

............

இது எல்லாம் எங்களுக்கு பயன்படாதுனு ஃபீல் பண்றீங்களா? சிறுகதைப் போட்டிக்கு உங்களை ஜட்ஜா போட்டா எப்படி எல்லாம் கமெண்ட் கொடுக்கலாம்னு அடுத்த பதிவுல பார்க்கலாம்... விடு ஜூட்...


பி.கு : ஊர்ல இருந்து மனைவி, குழந்தை எல்லாம் வந்துட்டாங்க. அதனால ஆன்லைன்லயோ வலையுலகிலோ அதிகம் பார்க்க முடியாது. பாப்பா ஏதாவது தட்டி சிஸ்டம் ரீஸ்டார்ட் பண்ணிடறாங்க. அதனால GTalkல எப்பவும் ஆன்லைன்ல இருக்குற மாதிரி தெரியும். நீங்க பிங் செய்து நான் ரெஸ்பாண்ட் செய்யலைனா தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

44 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Dubukku said...

:))) கரெக்டா சொன்னீங்க அதுவும் இந்த பாட்டு போட்டி ஜட்ஜுங்க தொல்லை தாங்க முடியலை...

//அதனால GTalkல எப்பவும் ஆன்லைன்ல இருக்குற மாதிரி தெரியும். நீங்க பிங் செய்து நான் ரெஸ்பாண்ட் செய்யலைனா தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.///

ஹா ஹா ...இதை ரொம்பவே ரசிச்சேன்.....:))))))))

Venkatesh Kumaravel said...

தாறுமாறு! இந்த இடம் சான்ஸே இல்ல.

//நல்லா ஆடலனா கான்செப்ட் நல்லா இருந்தது, டான்ஸ் எங்கனு கேட்கனும். அதை கேட்டதும் அவுங்க அப்படியே தலை குனிஞ்சி நின்னுடுவாங்க. நாம கெத்து காட்டணும்//
--இப்படி இப்படி தான் பின்னூட்டம் போடணும்னு பதிவு போட்டுருங்க--

Vidhoosh said...

practice பத்தல? அது விட்டிடீங்களே???

--வித்யா

Anonymous said...

மொக்கையா ஆடினாலும் அவன் ஆட்டத்துல இருக்கணும்னு நினைச்சா "அவன் கிழிச்சிட்டான்" ன்னு அலர்ற மாதிரி சொல்லலாம்.

Malini's Signature said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பதிவு பாக்க ரொம்ப மகிழ்ச்சி.....பாப்பாவுக்கு விண்டர் வரதுள்ளே நல்ல ஊரை சுத்தி காட்டுங்க :-).

வெட்டிப்பயல் said...

//
உலவு.காம் (ulavu.com) said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்
//

நன்றி பாஸ்.. இந்த பட்டை, நாமம் எல்லாம் எதுவும் இல்லாத மாதிரி வசதி கொடுங்களேன்.

வெட்டிப்பயல் said...

//Dubukku said...
:))) கரெக்டா சொன்னீங்க அதுவும் இந்த பாட்டு போட்டி ஜட்ஜுங்க தொல்லை தாங்க முடியலை...//

வாங்க தல... ஆமாம். இப்ப வீட்ல வந்துட்டதால, இதெல்லாம் பார்க்க வேண்டியதா போயிடுச்சி. இதை விட ஒரு கொடுமை திருமதி செல்வம், மேகலானு ரெண்டு நாடகம் பார்க்க சொல்லி கொடுமைப் படுத்தறாங்க. கேட்டா உங்க ப்ளாக் அளவுக்கு அது மொக்கை இல்லைனு சொல்றாங்க...

//
//அதனால GTalkல எப்பவும் ஆன்லைன்ல இருக்குற மாதிரி தெரியும். நீங்க பிங் செய்து நான் ரெஸ்பாண்ட் செய்யலைனா தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.///

ஹா ஹா ...இதை ரொம்பவே ரசிச்சேன்.....:))))))))
//

தினமும் வீட்ல போய் பார்க்கும் போது நாலு அஞ்சி பேர் பிங் பண்ணிருக்காங்க. நான் பார்க்கும் போது எல்லாரும் ஆஃப் லைன்ல இருக்காங்க. நடுவுல எத்தனை பேர் பிங் பண்றாங்கனு வேற தெரியல. அதான் பதிவுல சொல்லியாச்சி :)

வெட்டிப்பயல் said...

//Vidhoosh/விதூஷ் said...
practice பத்தல? அது விட்டிடீங்களே???

--வித்யா
//

ஆமாங்க வித்யா. அதை மிஸ் பண்ணிட்டேன்.. எடுத்து கொடுத்ததுக்கு நன்றி ஹை :)

வெட்டிப்பயல் said...

// வெங்கிராஜா said...
தாறுமாறு! இந்த இடம் சான்ஸே இல்ல.
//
வாங்க பாஸ்... உங்க ப்ரஃபைல் ஃபோட்டோ நல்லா இருக்குது...

//நல்லா ஆடலனா கான்செப்ட் நல்லா இருந்தது, டான்ஸ் எங்கனு கேட்கனும். அதை கேட்டதும் அவுங்க அப்படியே தலை குனிஞ்சி நின்னுடுவாங்க. நாம கெத்து காட்டணும்//
--இப்படி இப்படி தான் பின்னூட்டம் போடணும்னு பதிவு போட்டுருங்க--
//

குசும்பனோட பின்னூட்ட டெம்ப்ளேட் பதிவு பயங்கர ஃபேமஸாச்சே :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
மொக்கையா ஆடினாலும் அவன் ஆட்டத்துல இருக்கணும்னு நினைச்சா "அவன் கிழிச்சிட்டான்" ன்னு அலர்ற மாதிரி சொல்லலாம்.
//

என்னங்க இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டீங்க. அதை அப்படி சொல்லக் கூடாது. அதுக்கும் இப்படி நிறைய டெக்னிகல் டேர்ம்ஸ் இருக்கு. அதை இன்னொரு பதிவுல பார்க்கலாம் ;)

வெட்டிப்பயல் said...

//ஹர்ஷினி அம்மா said...
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பதிவு பாக்க ரொம்ப மகிழ்ச்சி.....பாப்பாவுக்கு விண்டர் வரதுள்ளே நல்ல ஊரை சுத்தி காட்டுங்க :-).
//

மிக்க நன்றி ஹர்ஷினி அம்மா. எப்படியும் ஃபால் கலர் பார்க்க வைட் மௌன்டைன்ஸ் போவோம். இந்த வீக் வேலை இல்லைனா ஊர் சுத்த கிளம்பினாலும் கிளம்பிடுவோம் :)

Porkodi (பொற்கொடி) said...

hahaha haiyo vetti kalakkitinga..! :))

edhai quote panradhu indha postaye thangathula porichu ella potti nadathra dubukku cha dubakkur partieskum anupanum!

Porkodi (பொற்கொடி) said...

//இதை விட ஒரு கொடுமை திருமதி செல்வம், மேகலானு ரெண்டு நாடகம் பார்க்க சொல்லி கொடுமைப் படுத்தறாங்க. கேட்டா உங்க ப்ளாக் அளவுக்கு அது மொக்கை இல்லைனு சொல்றாங்க...//

தன்னுடைய ப்லாக் மொக்கை என்பதை ஒத்துக் கொள்ள முடியாத, பெண்கள் நடித்து பெண்களால் விரும்பி பார்க்கப்படும் பெண்களுக்கான இந்த சீரியல்களை இவ்வாறு விமர்சிக்கும் ஆணீய சிந்தனையை கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்.

ஹிஹி... எல்லாரும் பேசறாங்களே நம்மளாலயும் முடியுதானு கொஞ்சம் ட்ரை பண்ணி பாத்தேன்.. வேறொண்ணுமில்ல. :)

அப்புறம் அந்த விஸ்வத்தோட அம்மா (குயிலி) எதுக்கு 10 ரூபா குடுத்தா 1000 ரூபாக்கு நடைக்கறாங்க? ;)

வெட்டிப்பயல் said...

//Porkodi (பொற்கொடி) said...
hahaha haiyo vetti kalakkitinga..! :))
//

நன்றி நன்றி நன்றி!!!

//
edhai quote panradhu indha postaye thangathula porichu ella potti nadathra dubukku cha dubakkur partieskum anupanum!
//

தங்கத்துல பொறிச்சதை எனக்கு கொடுத்துடுங்க. அவுங்களுக்கு எல்லாம் பிரிண்ட் அவுட் போதும் ;)

வெட்டிப்பயல் said...

//Porkodi (பொற்கொடி) said...
//இதை விட ஒரு கொடுமை திருமதி செல்வம், மேகலானு ரெண்டு நாடகம் பார்க்க சொல்லி கொடுமைப் படுத்தறாங்க. கேட்டா உங்க ப்ளாக் அளவுக்கு அது மொக்கை இல்லைனு சொல்றாங்க...//

தன்னுடைய ப்லாக் மொக்கை என்பதை ஒத்துக் கொள்ள முடியாத, பெண்கள் நடித்து பெண்களால் விரும்பி பார்க்கப்படும் பெண்களுக்கான இந்த சீரியல்களை இவ்வாறு விமர்சிக்கும் ஆணீய சிந்தனையை கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்.
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்

//ஹிஹி... எல்லாரும் பேசறாங்களே நம்மளாலயும் முடியுதானு கொஞ்சம் ட்ரை பண்ணி பாத்தேன்.. வேறொண்ணுமில்ல. :)//

அதான பார்த்தேன் :)

//அப்புறம் அந்த விஸ்வத்தோட அம்மா (குயிலி) எதுக்கு 10 ரூபா குடுத்தா 1000 ரூபாக்கு நடைக்கறாங்க? ;)
//
அப்பறம் எப்படி நாடகத்தை அத்தன நாள் ஓட்ட‌றது?

sriram said...

வாங்க தல, இதுதான் நீங்க Work from home பண்ற லட்சணமா??
பதிவு சூப்பர்..
josh பத்தல - இது பாட்டு டான்ஸ் ரெண்டுக்குமே சொல்லணும்- அர்த்தமெல்லாம் கேக்கப்படாது..
அப்புறம் செலக்ட் பண்ண வேணாம்னு முடிவு பண்ணிட்டா - THis is not your best, you can better than this, this is not your day அப்படின்னு ஏதாவது சொல்லி அவங்கள அழ விட்டு Waitlist பண்ணலாம்..

Porkodi (பொற்கொடி) said...

இந்த வெட்டி நாமக்கல்லானது என்ன மாயம்னு எனக்கு புரிய மாட்டேங்குனு கேட்டேன்லா.. புத்திக்கு எட்ட மாட்டேங்கு.. கொஞ்சம் விளக்கப்பு..

இராம்/Raam said...

கலக்கல்... :)

வெட்டிப்பயல் said...

//sriram said...
வாங்க தல, இதுதான் நீங்க Work from home பண்ற லட்சணமா??//
பாஸ்... அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை... எட்டு டூ பத்து இந்த நிகழ்ச்சி :)

//

பதிவு சூப்பர்..
josh பத்தல - இது பாட்டு டான்ஸ் ரெண்டுக்குமே சொல்லணும்- அர்த்தமெல்லாம் கேக்கப்படாது..
அப்புறம் செலக்ட் பண்ண வேணாம்னு முடிவு பண்ணிட்டா - THis is not your best, you can better than this, this is not your day அப்படின்னு ஏதாவது சொல்லி அவங்கள அழ விட்டு Waitlist பண்ணலாம்..

4:26 PM//

சூப்பரு :)

வெட்டிப்பயல் said...

பொற்கொடி,
தப்பான நேரத்துல இந்த கேள்வி கேட்டுடறீங்க. நான் மிஸ் பண்ணிடறேன்.

2007 ஆரம்பத்துல புது ப்ளாகர் வந்துச்சு. பழைய ப்ளாகர்ல இருந்து புதுசுக்கு மாத்தறேனு சிபி அண்ணன் என் ப்ளாகை அவர் கணக்குக்கு மாத்தி, ஏதோ கோக்கு மாக்கு ஆகிடுச்சி. அது வரைக்கும் எழுதுன பதிவு எல்லாம் அவர் பேருக்கு மாறிடுச்சி :)

வெட்டிப்பயல் said...

// இராம்/Raam said...
கலக்கல்... :)

9:35 PM//

நன்றி ஹை :)

Karthik said...

ரணகளம்..அதகளம். :))))

மங்களூர் சிவா said...

/
பாப்பா ஏதாவது தட்டி சிஸ்டம் ரீஸ்டார்ட் பண்ணிடறாங்க.
/

அதெப்பிடி ரீஸ்டார்ட் அமுக்கிதானே நாங்க எல்லாம் ரீஸ்டார்ட் செய்யறோம்
:)))))))))))))

மங்களூர் சிவா said...

mind blowing
floor blowing
roof blowing
wall blowing

இதெல்லாம் விட்டுட்டீங்களே தல
:)))))))))

கப்பி | Kappi said...

:)))

SUFFIX said...

ஆமாங்க, கொடுமை இந்த ஜட்ஜா இவங்க பண்ணுர ரவுசுங்க, பாவம் புள்ளைங்க!!

Deepan Mahendran said...

யாருக்கு தெரியும்,
கலா மாஸ்டர் உங்க ப்ளாக் படிப்பவராக இருந்தால்
அடுத்த மானாட மயிலாடவுல நீங்க கூட ஆடலாம் !!!

நாஞ்சில் நாதம் said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பர் பாஸ்

Divyapriya said...

mukkiyamaanadha vittuteengale...paattu nallaa paadineenga, aanaa "attitude" sari illa :)

Porkodi (பொற்கொடி) said...

ஓ அப்படியா சங்கதி.. சரி சரி. பதில் சொன்னமைக்கு நன்றி ஹை!

//பாப்பா ஏதாவது தட்டி சிஸ்டம் ரீஸ்டார்ட் பண்ணிடறாங்க. அதனால GTalkல எப்பவும் ஆன்லைன்ல இருக்குற மாதிரி தெரியும். //

ஹிஹிஹி.. பொய் சொல்லலாம் அதுக்காக இப்படியா? பாப்பா இப்போதைக்கு இங்க வந்து பேச மாட்டானு என்னா வேணாலும் சொல்லிடறது.. நடத்துங்க!

வெட்டிப்பயல் said...

//Karthik said...
ரணகளம்..அதகளம். :)//

நன்றி ஹை :)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
/
பாப்பா ஏதாவது தட்டி சிஸ்டம் ரீஸ்டார்ட் பண்ணிடறாங்க.
/

அதெப்பிடி ரீஸ்டார்ட் அமுக்கிதானே நாங்க எல்லாம் ரீஸ்டார்ட் செய்யறோம்
:)))))))))))))//

அது கொஞ்ச நாள்ல உங்களுக்கே புரியும் ;)

கீ போர்ட்ல அவ்வளவு விஷயம் பண்ண முடியுமானு அவுங்க அது மேல ஏறி உக்காரும் போது தான் தெரியும் ;)

வெட்டிப்பயல் said...

// மங்களூர் சிவா said...
mind blowing
floor blowing
roof blowing
wall blowing

இதெல்லாம் விட்டுட்டீங்களே தல
:)))))))))//

அண்ணே,
அதெல்லாம் செலக்ட் பண்ண சொல்ல வேண்டியது ;)

இது ரிஜக்‌ஷனுக்கு

வெட்டிப்பயல் said...

//கப்பி | Kappi said...
:)))//

டாங்கிஸ்பா

வெட்டிப்பயல் said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
ஆமாங்க, கொடுமை இந்த ஜட்ஜா இவங்க பண்ணுர ரவுசுங்க, பாவம் புள்ளைங்க!!

//

ஆமா தல... அதைப் பார்த்து தான் இந்த பதிவே :)

வெட்டிப்பயல் said...

//சிவன். said...
யாருக்கு தெரியும்,
கலா மாஸ்டர் உங்க ப்ளாக் படிப்பவராக இருந்தால்
அடுத்த மானாட மயிலாடவுல நீங்க கூட ஆடலாம் !!!

//

அவ்வ்வ்வ்

மக்கள் அந்த கொடுமையை வேற அனுபவிக்கணுமா? :)

வெட்டிப்பயல் said...

// நாஞ்சில் நாதம் said...
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பர் பாஸ்

8:16 AM//

நன்றி பாஸ் :)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...
mukkiyamaanadha vittuteengale...paattu nallaa paadineenga, aanaa "attitude" sari illa :)

4:48 PM//

இவ்வளவு முக்கியமானதை எப்படி விட்டேன்???

டாங்கிஸ் தங்கச்சி :)

வெட்டிப்பயல் said...

//Porkodi (பொற்கொடி) said...
ஓ அப்படியா சங்கதி.. சரி சரி. பதில் சொன்னமைக்கு நன்றி ஹை!

//பாப்பா ஏதாவது தட்டி சிஸ்டம் ரீஸ்டார்ட் பண்ணிடறாங்க. அதனால GTalkல எப்பவும் ஆன்லைன்ல இருக்குற மாதிரி தெரியும். //

ஹிஹிஹி.. பொய் சொல்லலாம் அதுக்காக இப்படியா? பாப்பா இப்போதைக்கு இங்க வந்து பேச மாட்டானு என்னா வேணாலும் சொல்லிடறது.. நடத்துங்க!

7:49 PM//

:))

மந்திரன் said...

என் இந்த வெறித்தனம் ?
ஆனால் ரொம்ப நன்றாக இருந்துச்சு ..

மணிகண்டன் said...

வெட்டிப்பயல்,
உங்கக்கிட்ட இருந்து இன்னும் அதிகமா எதிர்பார்க்கறோம்.
மொக்கையை குறைச்சிட்டு துறைச்சார்ந்த பதிவுகள்.
உங்க எழுத்து நடை சுவாரசியம் தான் ஆனாலும் ஏதோ எங்கயோ மிஸ் ஆகுது. அதை மட்டும் கண்டுபிடிச்சி சேர்த்து விட்டுட்டா, உங்களை அடிச்சிக்க முடியாது. Anyways, all the best.

இது எப்படி இருக்கு ?

Unknown said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடிச்சு தல...சூப்பராகீதுபா...

Anonymous said...

hi.. just dropping by here... have a nice day! http://kantahanan.blogspot.com/