தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, August 03, 2009

உரையாடல் போட்டி முடிவுகள் - சில‌ எண்ண‌ங்க‌ள்

உரையாடல் போட்டி முடிவுகள் வரும் சனிக்கிழமையன்று வெளிவரும்னு நம்ம அண்ணன் சிவராமன் (பைத்தியக்காரன்) அறிவித்திருக்கிறார்.


போட்டியில் பங்கேற்றவன் என்ற முறையில் எனக்கு இருக்கும் சில எதிர்பார்ப்புகளை கொடுக்கவே இந்த பதிவு. சில பல போட்டிகளை நடத்தியும் நடுவராக இருந்தும் இருக்கிறேன் என்பதால் நான் சொல்லப் போகும் விஷயங்களில் இருக்கும் கடினமும் தெரியும் என்றாலும் இதனால் கிடைக்கும் பலன் அதிகமாக இருக்கும் என்பதால் இதை இப்பொழுதே சொல்லி விடுகிறேன்.


மேலும் முடிவுகள் வெளியான பின்பு இதை சொன்னால் தோற்றதினால் வந்த வெறுப்பில் சொல்கிறான் என்றோ, வென்றதனால் வந்த திமிரில் சொல்கிறான் என்றோ சொல்லக்கூடும் என்ற எண்ணமும் இருக்கிறது.


போட்டி நடத்துனர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது :

கலந்து கொண்ட அனைத்து கதைகளுக்கும் நடுவர்களின் எண்ணங்கள் மற்றும் அவர்கள் கொடுத்த மதிப்பெண்களை வெளிப்படையாக வைக்க வேண்டும்.


நன்மைகள் :

கலந்து கொண்ட அனைவருக்கும் இதில் ஒரு வகைத் திருப்தி இருக்கும். தோற்றிருந்தாலும் தான் தோற்றதற்கான காரணமும், ஒரு கதை ஏன் வெற்றி பெற்றது என்ற காரணமும் தெரிவது நல்லது. இல்லையென்றால் இது நிச்சயல் தவறாகவே பார்க்கப்படும்.


மேலும் அண்ணன் சிவராமன் சென்னையில் இருப்பதாலும், பிரபல(?!*@#)ப் பதிவர்கள் குழுமம்(?) என்ற ஒன்று மறைமுகமாக செயல்படுவதாகவும் வலைப்பதிவர்கள் மனதில் இருக்கும் எண்ணம் வலுவாகவும் வாய்ப்புகள் அதிகம். இது பிறகு நடத்தப்படும் போட்டிகளை பாதிக்கும். இந்த குழும அரசியலில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை இங்கே தெளிவாக்கிவிடுகிறேன்.


சிரமங்கள் :

பொதுவாக வலையில் நடக்கும் போட்டிகளில் முதல் கட்ட தேர்வு வாசகர்களின் ஓட்டுக்கள் அடிப்படையில் இருக்கும். அதில் தேர்வாகும் பத்து அல்லது இருபது கதைகளை நடுவர்களிடம் கொடுத்து படிக்க சொல்வார்கள். அதைப் படித்து நடுவர்கள் மதிப்பெண்களும் கருத்துக்களும் தெரிவிப்பார்கள். அதைத் தொகுப்பது ஓரளவு எளிது. ஆனால் இங்கு இருக்கும் இருநூற்றம்பது கதைகளுக்கு கருத்துக்களைத் தெரிவிப்பதும் மதிப்பெண்கள் கொடுப்பதும் மிகவும் கடினம்.


குறைந்த பட்சம் வெற்றி பெற்ற கதைகளை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுத்தால் பரவாயில்லை.

இனி பதிவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது


"மாமா நான் ஒண்ணு சொல்லட்டுமா? கேள்விக் கேக்கறது ரொம்ப சுலபம். பதில் சொல்லிப் பார்த்தா தான் அதோட கஷ்டம் தெரியும்" இது பஞ்சதந்திரத்தில் கமல் சொல்வது.


அது போலவே குறை சொல்வது ரொம்ப சுலபம். அதை செய்து பார்த்தால் தான் கஷ்டம் தெரியும்.


நமது விமர்சனம் போட்டியாளரை இன்னும் சிறப்பாக செயல்பட வைக்க வேண்டுமே தவிர, அவர் மனதை புண்படுத்தி, "ஏன்டா இதை நடத்தினோம்"னு ஃபீல் பண்ண வைக்க கூடாது.

இந்த ஒரு போட்டியில் எழுதி தோற்றால் சிறுகதை எழுத தெரியாது அல்லது முடியாது என்ற எண்ணக்கூடாது. அதே போல இது அந்த ஒரு கதைக்கான விமர்சனம் மட்டுமே. நம் மொத்த எழுத்திற்கும் நமக்குமான விமர்சனம் என்றும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

அதேப் போல பிரபலப் பதிவர்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுடைய கதையை விட என் கதை சிறப்பாக இருக்கிறது. எப்படி அதற்கு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. எனக்கு வந்த பின்னூட்டங்களும் கிடைத்த ஓட்டுக்களுமே அதற்கு சாட்சி என்று வாக்குவாதம் செய்ய வேண்டாம். முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது எழுதுவதை விட சிறப்பாக எழுத முயலுங்கள். மிகச் சிறந்த சிறுகதை இதுவரை எழுதப்படவில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

ஊத‌ வேண்டிய‌ ச‌ங்கை நான் ஊதிவிட்டேன். இதுக்கு மேல உங்க‌ விருப்ப‌ம்.

போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ அனைவ‌ருக்கும் என் வாழ்த்துக‌ள்!!!

23 comments:

gulf-tamilan said...

ம். உண்மைதான்.போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ வெற்றி பெரும் அனைவ‌ருக்கும் என் வாழ்த்துக‌ள்!!!

சரவணகுமரன் said...

குட்

தமிழ் பிரியன் said...

பதிவர்களின் ஓட்டின் மூலம் தேர்ந்தெடுப்பது என்பது மிக மோசமான முடிவையே தரும் என்பது என் கருத்து. ஏனெனில் ஐபி, இமெயில் என்று எந்த கண்ட்ரோல் வைத்தாலும் அதை மீறி கள்ள ஓட்டுப் போடுவது இங்கு சாதாரணமாக நடக்கின்றது.

வெட்டிப்பயல் said...

//தமிழ் பிரியன் said...
பதிவர்களின் ஓட்டின் மூலம் தேர்ந்தெடுப்பது என்பது மிக மோசமான முடிவையே தரும் என்பது என் கருத்து. ஏனெனில் ஐபி, இமெயில் என்று எந்த கண்ட்ரோல் வைத்தாலும் அதை மீறி கள்ள ஓட்டுப் போடுவது இங்கு சாதாரணமாக நடக்கின்றது.
//

நான் ஓட்டெடுப்பு வைக்கணும்னு சொல்லலை. இது வரை நடந்த தேன்கூடு போட்டி, சங்கமம் போட்டியில் அவ்வாறு ஓட்டெடுப்பும் நடுவர்களின் மதிப்பெண்ணும் சேர்ந்து வெற்றியாளர்களை தீர்மானித்தது.

அங்கே நடுவர்களின் மதிப்பெண்களையும் கருத்துக்களையும் தெரிவிப்பது எளிது. இங்கே அது கடினம். காரணம் இருநூற்று ஐம்பது கதைகள்.

அப்படி அனைத்து கதைகளுக்கும் மதிப்பெண்ணும் கருத்தும் தெரிவித்தால் மிக்க மகிழ்ச்சி.

இராம்/Raam said...

/அதேப் போல பிரபலப் பதிவர்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுடைய கதையை விட என் கதை சிறப்பாக இருக்கிறது. எப்படி அதற்கு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. எனக்கு வந்த பின்னூட்டங்களும் கிடைத்த ஓட்டுக்களுமே அதற்கு சாட்சி என்று வாக்குவாதம் செய்ய வேண்டாம். முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது எழுதுவதை விட சிறப்பாக எழுத முயலுங்கள்.//உண்மைதான்... போட்டியிலே தன்னோட படைப்பு முதல் சுற்றில்யோ இல்லன்னா அடுத்த சுற்றிலே வரலன்னா நிறைய பேரு சோர்ந்து போயிறாங்க... அதைவிட முடிவுகள் அறிவிக்கிற இடத்திலே :( வேற போட்டு வைச்சி வெற்றிபெற்றவங்களை வேற சங்கடப்படுத்துறாங்க... :)

இதோட எல்லாமே முடிச்சிருச்சின்னு நினைக்காமே அடுத்த போட்டியிலே நம்ம திறமையை காட்டுவோமின்னு நினைக்கனும்... :)

வெட்டிப்பயல் said...

Gulf-tamilan, சரவணகுமரன்,
நன்றி ஹை :)

புருனோ Bruno said...

//இந்த ஒரு போட்டியில் எழுதி தோற்றால் சிறுகதை எழுத தெரியாது அல்லது முடியாது என்ற எண்ணக்கூடாது.//

அது எப்படி

விட்டுடுவோமா

இன்னும் எத்தனை பேர் போட்டி வைத்தாலும் நாங்க புதுசு புதுசா எழுதி கலந்துக்கொள்ளுவோம்.

விடவே மாட்டோம்

இந்த மாதிரி போட்டிகளில் கலந்து கொண்டு ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி :) :)

புருனோ Bruno said...

//அதே போல இது அந்த ஒரு கதைக்கான விமர்சனம் மட்டுமே. நம் மொத்த எழுத்திற்கும் நமக்குமான விமர்சனம் என்றும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.//

நன்றாக சொன்னீர்கள்

புருனோ Bruno said...

//பதிவர்களின் ஓட்டின் மூலம் தேர்ந்தெடுப்பது என்பது மிக மோசமான முடிவையே தரும் என்பது என் கருத்து. ஏனெனில் ஐபி, இமெயில் என்று எந்த கண்ட்ரோல் வைத்தாலும் அதை மீறி கள்ள ஓட்டுப் போடுவது இங்கு சாதாரணமாக நடக்கின்றது.//

ஆமாம்ல

//நான் ஓட்டெடுப்பு வைக்கணும்னு சொல்லலை. இது வரை நடந்த தேன்கூடு போட்டி, சங்கமம் போட்டியில் அவ்வாறு ஓட்டெடுப்பும் நடுவர்களின் மதிப்பெண்ணும் சேர்ந்து வெற்றியாளர்களை தீர்மானித்தது. //

ஆனால் அப்படி வைப்பதில் ஒரு negative point இருப்பதாக எனக்கு படுகிறது

அப்படி இரு கட்ட தேர்வு என்றால் --> நாமெல்லாம் கண்டிப்பாக இரண்டாவது கட்டம் போக மாட்டோம் என்று தவறாக எண்ணிக்கொண்டு சுமாராக அல்லது (என்னைப்போன்று) மோசமாக கதை எழுதும் பலர் கலந்து கொள்ள தயங்க வாய்ப்பு இருக்கிறது

--

இது போல் ஒரு கட்ட தேர்வும் ஒரு விதத்தில் நன்மையே

--

அல்லது இரு கட்ட தேர்வு என்றால் கூட ஒரேயடியாக முடிவை அறிவித்தல் நலம்

--

போட்டியின் நோக்கம் சிறந்த கதையை தேர்ந்தெடுப்பதாக இருந்தால் (உதாரணம் - வேலைக்கு ஆள் எடுப்பது போல், கல்லூரியில் இடம் அளிப்பது போல்) இரு கட்ட தேர்வு சிறந்த முறைதான்

ஆனால்

எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் போட்டி நடத்தப்பட்டால் ஒரு கட்ட தேர்வே சிறந்தது என்று நினைக்கிறேன்

உங்கள் கருத்து என்ன

வெட்டிப்பயல் said...

//புருனோ Bruno said...
//இந்த ஒரு போட்டியில் எழுதி தோற்றால் சிறுகதை எழுத தெரியாது அல்லது முடியாது என்ற எண்ணக்கூடாது.//

அது எப்படி

விட்டுடுவோமா

இன்னும் எத்தனை பேர் போட்டி வைத்தாலும் நாங்க புதுசு புதுசா எழுதி கலந்துக்கொள்ளுவோம்.

விடவே மாட்டோம்

இந்த மாதிரி போட்டிகளில் கலந்து கொண்டு ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி :) :)

//

தல,
இப்படி சொல்லிட்டா, உடனே நீங்க பிரபல பதிவர்னு சொல்லி ஓரம் கட்டிடுவாங்க :)

இப்படி நான் கலந்து தோத்தக் கதைகள் பத்துக்கு மேல இருக்கும் :)))

ஜெயிச்சது ஒண்ணு தான் :)

வெட்டிப்பயல் said...

டாக்டர்,

எனக்கு தெரிந்து, பதிவுலகம் சாராத எழுத்தாளர்கள் அல்லது நல்ல விமர்சகர்களிடம் (குறைந்தது மூன்று பேர்) தாள் பிரதி எடுத்துக் கொடுத்து மதிப்பிட சொல்லலாம். இது ஒரு சிறந்த முறையாக எனக்கு படுகிறது. ஏனெனில் இதில் சார்புத்தன்மை (Partiality) இருக்காது. இதில் கொஞ்சம் நேரம் எடுக்கும்.

அடுத்து மூன்று கட்ட தேர்வு முறை. 1. ஓட்டெடுப்பில் முதல் இருபது கதைகளை தேர்ந்தெடுப்பது.

2. அந்த இருபது கதைகளை எழுதியவர்களைக் கொண்டு மீதம் இருக்கும் பத்தொன்பது கதைகளுக்கு மதிப்பெண் கொடுக்க சொல்ல வேண்டும் (50 %).

3. நடுவர்கள் (இரண்டு அல்லது மூன்று பேர்) முதலில் தேர்ந்தெடுத்த இருபது கதைகளுக்கு மதிப்பிடுதல் (50%).

இதில் இரண்டு மற்றும் மூன்றாவதிலிருந்து வெற்றிப் பெற்றவர்களைத் தேர்ந்தெடுப்பது நலம்.

ஆனா எப்படி பண்ணாலும் குறை சொல்லத்தான் செய்வார்கள் :)

ஆ! இதழ்கள் said...

கலந்துகொள்வோர்களுக்கு இருக்க வேண்டிய மனநிலையை ஞாபகப் படுத்தியிருக்கீங்க...

Bhuvanesh said...

//அவர்களுடைய கதையை விட என் கதை சிறப்பாக இருக்கிறது. எப்படி அதற்கு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. //

இந்த மாதிரி போட்டிகளில் மாற்று கருத்து இல்லாத முடிவை யாராலும் கொடுக்க முடியாது!! சில சிறந்த கதைகள் முதல் இருபது இடத்துக்குள் வராமல் போகலாம்!! இருபத்தி ஓராவது இடத்திற்கு வரும் கதைக்கும் இருபதாவது இடத்தை பிடிக்கும் கதைக்கும் பெரிய வித்யாசம் இருக்காது.

ஆனால் இருபதாவதை நடுவர்கள் சில காரணங்களால் தேர்வு செய்திருப்பார்கள் என்று நம்ப வேண்டும்! போட்டியில் பங்கெடுத்துவிட்டு நடுவர்களை குறை கூறுவது சரி இல்லை என்பது என் கருத்து!

மணிகண்டன் said...

நான் படிச்சது வரைக்கும் இருபது கதை தேர்ந்தெடுக்கறது ரொம்பவே கஷ்டம் தான். ஆனா என்னோட கதை செலக்ட் ஆகாட்டி சண்டை போடுவேன். நிச்சயமா நீங்க சொல்லி கொடுத்த மாதிரியே கேள்வி கேக்கறேன். ரொம்ப நன்றி.

குசும்பன் said...

அண்ணாச்சி வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

வெட்டிப்பயல்னு பேரை வைச்சுட்டு இப்படி உருப்படியான பதிவைப் போட்டிருக்கீங்களே!பூங்கொத்து!

வெட்டிப்பயல் said...

மணிகண்டன்,
இன்னும் சண்டை ஆரம்பிக்கலையா? :-))))

வெட்டிப்பயல் said...

//குசும்பன் said...
அண்ணாச்சி வாழ்த்துக்கள்!

//

நன்றி அண்ணாச்சி :)

வெட்டிப்பயல் said...

//அன்புடன் அருணா said...
வெட்டிப்பயல்னு பேரை வைச்சுட்டு இப்படி உருப்படியான பதிவைப் போட்டிருக்கீங்களே!பூங்கொத்து!

//

மிக்க நன்றி அருணா...

ஏதோ நம்மால் முடிந்தது :-)

சும்மா said...

//மேலும் அண்ணன் சிவராமன் சென்னையில் இருப்பதாலும், பிரபல(?!*@#)ப் பதிவர்கள் குழுமம்(?) என்ற ஒன்று மறைமுகமாக செயல்படுவதாகவும் வலைப்பதிவர்கள் மனதில் இருக்கும் எண்ணம் வலுவாகவும் வாய்ப்புகள் அதிகம். இது பிறகு நடத்தப்படும் போட்டிகளை பாதிக்கும். இந்த குழும அரசியலில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை இங்கே தெளிவாக்கிவிடுகிறேன். //

அது எப்படிங்க, எனக்கு குழும அரசியலில் நம்பிக்கையில்லேன்னு சொல்லிக்கிட்டே கரேட்டா அரசியல் பண்ணுறீங்க?!!

வெட்டிப்பயல் said...

//சும்மா said...
//மேலும் அண்ணன் சிவராமன் சென்னையில் இருப்பதாலும், பிரபல(?!*@#)ப் பதிவர்கள் குழுமம்(?) என்ற ஒன்று மறைமுகமாக செயல்படுவதாகவும் வலைப்பதிவர்கள் மனதில் இருக்கும் எண்ணம் வலுவாகவும் வாய்ப்புகள் அதிகம். இது பிறகு நடத்தப்படும் போட்டிகளை பாதிக்கும். இந்த குழும அரசியலில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை இங்கே தெளிவாக்கிவிடுகிறேன். //

அது எப்படிங்க, எனக்கு குழும அரசியலில் நம்பிக்கையில்லேன்னு சொல்லிக்கிட்டே கரேட்டா அரசியல் பண்ணுறீங்க?!!

//

இது அரசியல் இல்லை... வலையுலகில் ஒரு மாதமாக நடந்து வரும் பிரச்சனைகளினால் வந்த வெறுப்பு. அது மேலும் தொடரக் கூடாது என்கிற எண்ணம்... அவ்வளவே!!!

வால்பையன் said...

தேற்றி கொண்டேன்!

மந்திரன் said...

//அது போலவே குறை சொல்வது ரொம்ப சுலபம். அதை செய்து பார்த்தால் தான் கஷ்டம் தெரியும். //

ஏன் இப்படி , சேம் சைடு கோல் ....
எல்லாரும் இப்படி நல்லவங்களாக இருந்தா எப்படி நாங்க படிக்கிறது ?

கொஞ்சம் சொதப்பல் , கொஞ்சம் மொக்கை , நிறைய சண்டை ,கொஞ்சம் சென்டிமென்ட் ..இது தான் இன்றைய வாசகர்களின் எதிர்பாப்பு ...

நாங்க எல்லாம் நாரதருக்கு தூரத்து சொந்தம் ..ஆமாம் சொல்லிபுட்டேன் ..