தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, July 10, 2009

தாயாக நீயும் தலை கோத வந்தால்...

டேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு,

"ஆச்சர்யம் தான்!
நட்பு கடலில்
முத்து குளித்து
வைரத்தை அல்லவா
எடுத்திருக்கிறேன்!!"

பெருமை பொங்க கேட்டாள் சுஜா...

"லூசா நீ? கடல்ல போய் வைரம் கிடைக்குமா? சும்மா எதையாவது அடிச்சு விட்டு கவிதைனு சொன்னா நாங்க நம்பிடுவோமா?" பாலா சொல்லி கொண்டிருக்கும் போதே சுஜாவின் முகம் துவண்டு போனது.

"உங்கிட்ட போயி இதை காட்னேன் பாரு. என் புத்திய செருப்பாலத்தான் அடிச்சுக்கனும்" அவள் சொல்லி முடிக்கவும் பாலா அவள் காலை பார்த்தான்.

"கட் ஷு போட்டிருக்கங்கற தைரியத்துல சொல்லிட்ட. சரி வீட்டுக்கு போன உடனே உனக்கு போன் பண்ணி ஞாபகப்படுத்தறேன்"

"சரிங்க சார். முதல்ல நீங்க இங்க இருந்து கிளம்புங்க. இது எங்க ப்ராஜக்ட் ஏரியா. நீங்க இங்க வரதே தப்பு" கொஞ்சம் சூடாக சொன்னாள்.

"ஐயோ உன்னைய பார்க்க யார் வந்தா? நான் இங்க என் பிரெண்ட் அனிதாவை பார்க்க வந்தேன். என்ன அனிதா நான் உன்னை பார்க்க வரக்கூடாதா?"

"நீ தாராளமா வரலாம் கிருஷ்ணா. உன்னை யார் வர வேணாம்னு சொல்றது?" பாலாவிற்கு சப்போர்டாக பேசினாள் அனிதா.

"அது" சுஜாவை வென்ற சந்தோஷத்தில் சொன்னான் பாலா.

பாலா (எ) பாலகிருஷ்ணா, அனிதா, சுஜா மூவரும் ஒரே கல்லூரியில் படித்து கேம்பஸ் இண்டர்வியுவில் அந்த மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்திருந்தனர். பாலாவும் சுஜாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது கல்லூரியிலிருக்கும் போதே அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல அவர்களுக்குள் தினமும் நடக்கும் சண்டையும் பிரபலமானதே.

சுஜாவிற்கு எப்போழுதுமே பாலா அவள் மேல் எந்த அளவிற்கு நட்பாயிருக்கிறான் என்பதே கேள்வியாக இருக்கும். நண்பர்களுக்கு மத்தியிலிருக்கும் பொஸ்ஸசிவ்னஸ் அவளுக்கு எப்போழுதுமே அதிகமாக இருந்தது. ஆனால் பாலாவிற்கு அது இல்லாததால் அவன் அவளளவுக்கு நட்பாயில்லையோ என்ற சந்தேகம் எப்போழுதுமிருந்து கொண்டிருந்தது. இதை அவனிடமும் அடிக்கடி கேட்டு கொண்டிருப்பாள்.அதற்கு பெரும்பாலும் அவன் பதில் நக்கல் தோனியிலே இருக்கும்.

சரியாக 10 மணிக்கு சுஜாவின் செல்போன் சிணுங்கியது. Bala calling...

"சொல்லு... என்ன விஷயம்"

"வீட்டுக்கு போனவுடனே ஞாபகப்படுத்துறேனு சொன்னேனே... அதுக்கு தான் கூப்பிட்டேன்"

"என்னது?"

"இல்லை உன் புத்திய எதாலயோ அடிச்சிக்கனும்னு சொன்னியே அதை சொன்னேன்"

"இப்ப இதுக்கு தான் கூப்பிட்டியா?"

"இல்லை. தூக்கம் வரலை அதுக்கு தான் நீ என்ன பண்றனு கேக்கலாம்னு கூப்பிட்டேன்"

இருவரும் வழக்கம் போல் பல மணி நேரம் பேசிக்கொண்டு தூங்க சென்றனர்...
அடுத்த நாள் காலை...

பாலாவின் எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது.

"பாலா ஹியர்"

"ஏய் நான் தான்"

"நான் தான்னா? எனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அதுல நீங்க யாரு?"

"ஹிம்.. கெய்தான் ஃபேன். அடிச்சேன்னு வெச்சிக்கோ அவ்வளவுதான். ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசனும்னு போன் பண்ணேன்"

"என்ன சீக்கிரம் சொல்லு... இந்த பக்கம் அந்த கல்கத்தா ஃபிகர் என்னையே லுக் விட்டுட்டு இருக்குது"

"நீ தேறவே மாட்ட. அப்பறம் நான் எழுதின கவிதையெல்லாம் எனக்கே ஃபார்வேர்டா வந்திருக்கு. இந்த கவிதை ஞாபகமிருக்கா?

பார்த்து கொண்ட நட்பு
பார்க்காத நட்பு
கைகோர்த்து திரிந்த நட்பு
துயரங்களில் தோள் தந்த நட்பு
வெற்றிகளை கொண்டாடும் நட்பு
இமை போல் காத்த நட்பு
இப்படியாய் பலவித நட்புகளை
பாடிய தமிழ் காவியங்கள்
வெட்கி ஓடி ஒளிந்து கொண்டனவாம்!!!
ஒரு தாயை போன்ற
உனது தூய்மையான அன்பில்
மழலையாய் தவழும்
எனது நட்பை பற்றி
இதுவரை பாடாததால்!!!!!!

இது போன வாரம் வந்துச்சு. இப்பக்கூட ஒண்ணு வந்திருக்கு"

"இதுக்கு தான் இப்ப அவசரமா போன் பண்ணியா? நீயே எழுதி உனக்கு அனுப்பிட்டு இப்ப ஃபார்வேர்ட்ல வந்துச்சினு கதை விடறயா? வேணும்னா நீ யாருக்காவது அனுப்பிருப்ப.. அவன் படிச்சிட்டு இதெல்லாம் கவிதையானு சொல்லி உனக்கு ரிவர்ஸ்ல அனுப்பியிருப்பான். இதுக்கு இவ்வளவு பில்ட்-அப்பா?"

எதுவும் பேசாமல் அவள் ரிஸிவரை வைத்ததில் அவளுடைய கோபம் அவனுக்கு புரிந்தது.

ஐந்து நிமிடத்தில் சுஜாவின் கணினியில் புதிய மின்னணு கடிதம் எட்டி பார்த்தது. அதை அவள் சொடுக்கவும் அது பாலாவிடமிருந்து என்று புரிந்தது.

அன்புள்ள தோழிக்கு,
நீ எனக்காக எழுதிய கவிதைகளை எனக்கு காட்டாமலே வைத்திருந்ததை அன்று எதேச்சயாய் பார்த்தேன். அதில் இந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது

என் பாசத்தை
நீ புரியாமலிருக்கலாம்
என் அன்பை
நீ அவமதிக்கலாம்
என் கவிதைகளை
நீ நிராகரிக்கலாம்
என்றாலும்
எனது அகராதியில்
நட்பென்ற வார்த்தைக்கு
அர்த்தமாய் இருப்பது
நீதான்.............
நீ மட்டும்தான்...........

எனக்கு உன்னை போல் கவிதைகளை எழுதவோ ரசிக்கவோ தெரியாது... நான் முயற்சிக்கவும் இல்லை...

என் தோழி எனக்காக எழுதிய கவிதைகள் இது என்று பெருமையாக என் நண்பர்களுக்கு (நமக்கு பொதுவான நண்பர்கள் அல்ல) அனுப்பினேன். அதை அவர்கள் வழக்கம் போல் ஃபார்வேர்ட் செய்து அது உனக்கே வந்து சேர்ந்துவிட்டது. நீ எழுதிய கவிதைகளை எத்தனை பேர் ரசித்திருக்கிறார்கள் பார். நான் உனக்கு கொடுக்க தவறிய உற்சாகத்தை இதன் மூலம் நீ பெறுவாய் என்றே நம்புகிறேன்.

எனக்கு கவிதை தெரியாதென்றாலும் இந்த வரிகளை முதல்முறையிலிருந்து இன்று வரை கேட்கும் போது உன் முகம் மட்டுமே நினைவுக்கு வருகிறது.சுஜா பல நாட்கள் வருந்தியதற்காக இன்று வருந்தினாள்... சந்தோஷத்துடன்.

15 comments:

வெட்டிப்பயல் said...

இது ஒரு மீள்பதிவு...

சென்ஷி said...

//வெட்டிப்பயல் said...

இது ஒரு மீள்பதிவு...//

படிச்சு தெரிஞ்சுக்கிட்டோம் :))

Sridharan said...

நல்லா இருக்கு!!!!நல்லா இருக்கு!!!!

♫சோம்பேறி♫ said...

ச்ச்வீட்ட் ஸ்டோரி..

பை த வே, இந்த கவிதைகள் நீங்க எழுதினதா?

வெட்டிப்பயல் said...

//சென்ஷி said...
//வெட்டிப்பயல் said...

இது ஒரு மீள்பதிவு...//

படிச்சு தெரிஞ்சுக்கிட்டோம் :))

3:27 AM//

இருந்தாலும் சொல்ல வேண்டியது நம்ம கடமையில்லையா :)

வெட்டிப்பயல் said...

//Sridharan said...
நல்லா இருக்கு!!!!நல்லா இருக்கு!!!!

//

மிக்க நன்றி ஸ்ரீதரன் :)

வெட்டிப்பயல் said...

//♫சோம்பேறி♫ said...
ச்ச்வீட்ட் ஸ்டோரி..
//
மிக்க நன்றி பாஸ் :)

//
பை த வே, இந்த கவிதைகள் நீங்க எழுதினதா?
//
என்னைய பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டீங்களே?? நான் எல்லாம் என்னைக்கு கவிதை எழுதியிருக்கேன் :)))

இது தோழி ஒருத்தவங்க அப்ப எழுதி கொடுத்து அதுக்கு கதை எழுத சொன்னாங்க. அதை வெச்சி எழுதனது :)

Ungalranga said...

சூப்பர் ஸ்டோரி

அசத்தலா வந்திருக்கு.

என் மனசை கவர்ந்த கதைகளில் இதுவும் ஒண்ணாகிடுச்சி.

வாழ்த்துக்கள்!!

மணிகண்டன் said...

kalakkal balaji.

Ramesh Chinnasamy said...

கதை நல்லா இருக்கு. அனிதாவ அப்புடியே விட்டுட்டீங்களே. நான் வேணும்னா company குடுக்கட்டுமா?

வெட்டிப்பயல் said...

//ரங்கன் said...
சூப்பர் ஸ்டோரி

அசத்தலா வந்திருக்கு.

என் மனசை கவர்ந்த கதைகளில் இதுவும் ஒண்ணாகிடுச்சி.

வாழ்த்துக்கள்!!
//

மிக்க நன்றி ரங்கன் :)

வெட்டிப்பயல் said...

//மணிகண்டன் said...
kalakkal balaji.
//

மணிகண்டன்கிட்ட இருந்து இப்படி ஒரு பின்னூட்டம் வரது ரொம்ப சந்தோஷமா இருக்கு :)

வெட்டிப்பயல் said...

//மெகா சில்லறை said...
கதை நல்லா இருக்கு. அனிதாவ அப்புடியே விட்டுட்டீங்களே. நான் வேணும்னா company குடுக்கட்டுமா?
//

என்னை விட மோசமான பேர்ல எழுதறீங்க :)

நாளைக்கு வெளிய பேர் சொல்லும் போது பிரச்சனையாகிடப் போகுது :)

இன்னைக்கு ரேஞ்ச்ல கம்பெனி கொடுக்கறதை விட கம்பெனில வேலை வாங்கி கொடுத்தா சந்தோஷப்படுவாங்க :)

kanagu said...

சூப்பரா இருக்குங்க :)

/*இதுக்கு தான் இப்ப அவசரமா போன் பண்ணியா? நீயே எழுதி உனக்கு அனுப்பிட்டு இப்ப ஃபார்வேர்ட்ல வந்துச்சினு கதை விடறயா? வேணும்னா நீ யாருக்காவது அனுப்பிருப்ப.. அவன் படிச்சிட்டு இதெல்லாம் கவிதையானு சொல்லி உனக்கு ரிவர்ஸ்ல அனுப்பியிருப்பான். இதுக்கு இவ்வளவு பில்ட்-அப்பா?"*/

இத படிச்சி ஓரே சிரிப்பு..

ஆனா அதுக்கும் அப்புறம் வேற மாறி கதை போயிடுச்சி :)

Shan Nalliah / GANDHIYIST said...

Greetings from Norway,,,!!!Please write more..!!!