தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, July 03, 2009

நாடோடிகள்!!!

பெங்களூர்ல வேலை செஞ்சிட்டு இருக்கும் போது, ஒரு நாள் ரூம்ல இருந்து ஃபிரெண்டு ஒருத்தன் ஃபோன் பண்ணான். பாலாஜி, இன்னைக்கு சீக்கிரம் ரூமுக்கு வந்துடு, ஒரு பஞ்சாயத்து இருக்குது. சீக்கிரம்னு சொன்னது ராத்திரி பத்து மணிக்குள். நானும் பயங்கர ஆவலா கிளம்பி போனேன்.

ரூம்ல ப்ரதர் உக்கார்ந்திருந்தாரு. அவரை சுத்தியும் பசங்க. ப்ரதர் யாருனா மாடோட ஊர்காரர். மாடு எங்க காலேஜ் மேட் தான். ஜிம் எல்லாம் போய் செமயா உடம்பை தேத்தி வெச்சிருந்ததால மாடுனு பேர் வந்துடுச்சி. கிரிக்கெட்ல அவன் புலி. ஹாஸ்டல் டே மேட்ச்ல எல்லா கப்பும் அவன் தான் வாங்குவான். அதே மாதிரி பரிட்சைலயும் சில பல கப் வாங்குவான். ப்ரதர் எல்லாரையும் ப்ரதர்னு சொல்றதால அவர் பேரே ப்ரதர் ஆகிடுச்சி. சேலம், அம்மாப்பேட்டை ஏரியாவை சேர்ந்தவங்க. அந்த சமயத்துல மாடும், பிரதரும் வேலை தேடிட்டு இருந்தாங்க. நாங்க எல்லாம் ஆஃபிஸ் போனதுக்கு அப்பறம் ஒரு பத்து மணிக்கா ஒரு சுமோல சேலத்துல இருந்து மாடோட நண்பர்கள் வந்திருக்காங்க. அவனோட ஃபிரெண்ட் ஒருத்தவனுக்கு அன்னைக்கு மைசூர்ல வெச்சி ரிஜிஸ்டேர் மேரேஜ். கையெழுத்து போட ஒரு ஆள் தேவைனு மாட கூப்பிட வந்திருக்காங்க.

அந்த பொண்ணு சைட்ல கொஞ்சம் வெயிட்டு போல. அதனால மாடு கொஞ்சம் பயத்துல, இன்னைக்கு இண்டர்வியூ இருக்கு. வர முடியாதுனு சொல்லிருக்கான். சரினு பிரதர் கிளம்பி போயிருக்காரு. காலைல பத்து மணிக்கு போயிட்டு ராத்திரி ஒன்பது மணிக்கு எல்லாம் வந்துட்டாரு. என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்க எல்லாருக்கும் பயங்கர இண்ட்ரஸ்ட். எல்லாரும் அவரை ஹீரோ கணக்கா பாக்கறாங்க.

”பிரதர், அது எப்படி ஒரு நாள்லே ரெஜிஸ்டர் பண்ண முடியும். அதுக்கு நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு இல்லை”

உடனே ஒரு லுக் கொடுத்துட்டு பிரதர் பேச ஆரம்பிச்சாரு, “அதெல்லாம் ஒழுங்கா பண்றவங்களுக்கு தான் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம். காசு கொடுத்தா எந்த ஃபார்மாலிட்டியும் இல்லை”

“இவ்வளவு பிரதர் செலவாச்சு?”

“இருபதாயிரம் கேட்டானுங்க. நாம யாரு, அஞ்சாயிரத்துல முடிச்சிட்டோம் இல்ல”

“ஏது பிரதர் காசு?”

“என்ன பிரதர் அப்படி கேட்டுட்டீங்க. எல்லாம் பசங்க காசு தான். சுமோ கூட பசங்களோடது தான்”

”இப்ப பொண்ணு மாப்பிளை எங்க பிரதர்?”

“பொண்ணு மாப்பிளை பெங்களூர்ல தான் இருக்காங்க. சனி, ஞாயிறு முடிஞ்சதும், அந்த பொண்ணு காலேஜிக்கு போயிடும். மாப்பிளை அடுத்த வாரம் படிக்கறதுக்கு சிங்கப்பூர் போறான்”

“என்ன பிரதர் சொல்றீங்க? படிக்கிற பொண்ணா?”

“ஆமாம் பிரதர். பையன் MS படிக்க சிங்கப்பூர் போறான். வரதுக்குள்ள பொண்ணை மிரட்டி கல்யாணம் பண்ணி வெச்சிட்டா என்ன பண்றதுனு பயந்து தான் ரிஜிஸ்டர் பண்ணிட்டான்”

“என்னங்க பிரதர், பஸ்ல சீட்டு பிடிக்க துண்டை போட்டு வைக்கிற மாதிரி சொல்றீங்க”

“ஆமாம் பாஸ். இப்ப எல்லா அப்படி தான். பொண்ணுங்க பதினெட்டாவது பர்த் டே கொண்டாடிட்டா, அப்பா அம்மா வயித்துல நெருப்பை கட்டிக்க வேண்டியது தான். டென்த் சர்டிஃபிகேட்டே இதுக்கு தானே யூஸ் ஆகுது”

”சரி, அந்த பொண்ணு வீட்டுக்கு எப்ப பிரதர் சொல்லுவாங்க?”

“அதெல்லாம் எவனாவது மாப்பிளை அமெரிக்கால இருந்து வந்ததுக்கு அப்பறம் தான் சொல்லுவாங்க. அது வரைக்கும் மறைக்க வேண்டியது தான்”

“அப்படி தெரியும் போது மேரேஜ் சர்டிஃபிகேட் தேடி கண்டுபிடிச்சி பார்ப்பாங்க இல்ல?”

“ஆமாம் பிரதர். ஆனா அதுக்கெல்லாம் ரெண்டு மூணு வருஷமாகும்”

“சரி, அப்படி பார்க்கும் போது நீங்க கையெழுத்து போட்டது தெரிஞ்சிடுமில்லை”

“ஆமாம். ஆட்ரஸ்கூட சேர்த்து எழுதி கொடுத்துட்டு தானே வந்திருக்கோம்”

“அப்ப வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணுவாங்களே பிரதர். என்ன பண்ணுவீங்க?”

“நான் ஏன் பயப்படணும்? மாடு தானே பயப்படணும்”

இதைக் கேட்டதும் மாடு டெர்ரர் ஆகிட்டான்.

“நான் ஏன் பயப்படணும்?”

“பின்ன, உன் கையெழுத்து போட்டு, உன் வீட்டு அட்ரஸை கொடுத்துட்டு வந்தா உன்னை பிடிக்காம என்னையா பிடிப்பாங்க?”

“என்ன பிரதர் சொல்றீங்க?”

“ஆமாம். நான் மறந்து போய் அவன் பர்சை எடுத்துட்டு போயிட்டேன். கையெழுத்துக்கு ஐடி புருஃப் கேட்டாங்க. மாடோட பர்ஸ்ல அவன் லைசன்ச் இருந்துச்சு. அதைப் பார்த்து அவன் கையெழுத்து போட்டுட்டு, அவன் வீட்டு அட்ரஸை எழுதி கொடுத்துட்டு வந்துட்டேன்”

“அடப்பாவி. அதுல ஃபோட்டோ இருக்குமே. அதைக்கூடவா அவுங்க பார்க்கல”

“டேய் நம்ம ஊர் லைசன்ஸ்ல இருக்குற ஃபோட்டோல எவன் முகம் சரியா தெரிஞ்சிருக்கு. எல்லாம் குத்துமதிப்பா வெச்சி அடிக்கிறது தான்”

...............

இந்த நிகழ்ச்சி முடிஞ்சி ஒரு மூணு வருஷம் கழிச்சி தான் நான் பெங்களூர் போனேன். அந்த விஷயத்தைப் பத்தி பரட்டைக்கிட்ட சொல்லி சிரிச்சிட்டு இருந்தேன். அப்ப தான் பரட்டை ஒரு விஷயத்தை சொன்னான்.

அந்த பொண்ணு வீட்ல இது தெரிஞ்சவுடனே, அந்த பொண்ணை மிரட்டி டைவர்ஸ் வாங்க வெச்சிட்டாங்களாம். அப்பறம் அந்த பொண்ணோட தாய் மாமா பையனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சி வெளிநாட்டுக்கு அனுப்பிட்டாங்களாம். மாடு தப்பிச்சிட்டானு தான் ப்ரதருக்கு ஒரே ஃபீலிங்கா போயிடுச்சி...

நாடோடிகள் படத்துக்கு போக சொல்லி இன்னைக்கு மாடுக்கு ஃபோன் பண்ணனும்.

30 comments:

The Shrek said...

//“நான் ஏன் பயப்படணும்? மாடு தானே பயப்படணும்”
இதைக் கேட்டதும் மாடு டெர்ரர் ஆகிட்டான்.
“நான் ஏன் பயப்படணும்?”
“பின்ன, உன் கையெழுத்து போட்டு, உன் வீட்டு அட்ரஸை கொடுத்துட்டு வந்தா உன்னை பிடிக்காம என்னையா பிடிப்பாங்க?”//

LMAO :)))))))))))))))

ரங்கன் said...

செம..

வாழ்க.. மாடு..!!

நாங்களும் சேலம்தாண்டியோவ்.. நாம கிச்சிபாளையம்.. நீங்க?

வெட்டிப்பயல் said...

// The Shrek said...
//“நான் ஏன் பயப்படணும்? மாடு தானே பயப்படணும்”
இதைக் கேட்டதும் மாடு டெர்ரர் ஆகிட்டான்.
“நான் ஏன் பயப்படணும்?”
“பின்ன, உன் கையெழுத்து போட்டு, உன் வீட்டு அட்ரஸை கொடுத்துட்டு வந்தா உன்னை பிடிக்காம என்னையா பிடிப்பாங்க?”//

LMAO :)))))))))))))))

//

ரொம்ப நாளா ஆளையே காணோம் :-)

வெட்டிப்பயல் said...

// ரங்கன் said...
செம..

வாழ்க.. மாடு..!!

நாங்களும் சேலம்தாண்டியோவ்.. நாம கிச்சிபாளையம்.. நீங்க?

//

நான் சேலம் இல்லை. நான் கள்ளக்குறிச்சி.

மாடும், ப்ரதரும் தான் சேலம் :-)

G3 said...

Aanalum brother romba terrora thaan iruppar pola :))))

Seemachu said...

இந்த மாதிரி நான் காலேஜ் படிக்கும் போது எனக்குத் தெரிஞ்சு 3 கல்யாணம் நடந்திச்சி. 3 ஜோடிகளுமே இப்பவும் தம்பதிகளாகத்தான் இருக்காங்க. ஆனால் வாழ்க்கைத்தரம் தான் சொல்லிக்கொள்ளும் படியா இல்லை..

படிக்கும் போது படிப்பை மட்டும் கவனிப்பதுதான் உசிதம். ஆனால் இது யாருக்குமே படிக்கும் போது புரியாது !! எனக்கும் தான் !!

சென்ஷி said...

;)

படிக்க சுவாரசியமா இருந்தாலும் உண்மையில் ஜெயிக்கறது ரொம்ப சிலர்தான் வெட்டி. நேர்ல பார்த்த அனுபவத்தை சொல்றேன்.

ஆ! இதழ்கள் said...

பின்ன, உன் கையெழுத்து போட்டு, உன் வீட்டு அட்ரஸை கொடுத்துட்டு வந்தா உன்னை பிடிக்காம என்னையா பிடிப்பாங்க?”//

சரியான டுவிஸ்டூ...

:)))

மங்களூர் சிவா said...

இது மெய்யாலும் நடந்ததா??
பாவம்யா அந்த துண்டு போட்டு சீட்டு புடிச்சவன்
:((

Priyadarshini said...

Hi Balaji,
Iam Silent Reader in ur blog(past 6 months) i think i read all ur updates.All updates are very nice.

வினோத்கெளதம் said...

Odi poi kalyanam pannuravanga nilamai mosam thaan..
athuku help pannuravan nilamai padu kevalam..

இராம்/Raam said...

:))

ஆயில்யன் said...

எங்க காலேஜ்லயும் இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சு !

ப்ரெண்ட்ஸ் எல்லார் முன்னிலையிலும் நடந்த திருமணம் காலேஜ் முடிஞ்சு 3 வருசம் கழிச்சு திரும்ப ஒண்ணா சேருணும்ங்கற முடிவு எடுத்து எல்லாரும் பிரிஞ்சு போனாங்க!

சமீபத்துல லீவுக்கு போனப்ப ரெண்டு பேரும் 3 வருசத்துக்கு பிறகு சேர்ந்து இப்ப வெளிநாட்ல நல்லபடியா இருக்காங்கன்னு சொன்னதும் எதோ ஒரு சந்தோஷம் மனசுல...!

இத்தனைக்கும் பையன் வேற மதம் பொண்ணு வேற மதம் - அதுவும் ரெண்டு பேருமே கலவர பூமிக்காரங்க :))))

நாகை சிவா said...

:)))

பொது வாழ்க்கையில் இது எல்லாம் சாதாரணம்ப்பா :)

வெட்டிப்பயல் said...

// G3 said...
Aanalum brother romba terrora thaan iruppar pola :))))

//

நம்ம கூட வந்து சேர பசங்க எல்லாருமே அப்படி தான் இருக்காங்க.. என்ன பண்ண? :-)

வெட்டிப்பயல் said...

//Seemachu said...
இந்த மாதிரி நான் காலேஜ் படிக்கும் போது எனக்குத் தெரிஞ்சு 3 கல்யாணம் நடந்திச்சி. 3 ஜோடிகளுமே இப்பவும் தம்பதிகளாகத்தான் இருக்காங்க. ஆனால் வாழ்க்கைத்தரம் தான் சொல்லிக்கொள்ளும் படியா இல்லை..

படிக்கும் போது படிப்பை மட்டும் கவனிப்பதுதான் உசிதம். ஆனால் இது யாருக்குமே படிக்கும் போது புரியாது !! எனக்கும் தான் !!

//

என்ன பண்ண.. வயசு அப்படி :-)

வெட்டிப்பயல் said...

//சென்ஷி said...
;)

படிக்க சுவாரசியமா இருந்தாலும் உண்மையில் ஜெயிக்கறது ரொம்ப சிலர்தான் வெட்டி. நேர்ல பார்த்த அனுபவத்தை சொல்றேன்.

//

சென்ஷி,
காதல்ல ஜெயிச்சி வாழ்க்கைலயும் ஜெயிக்கறவங்க மிகவும் குறைவு சென்ஷி. எதுவும் சொல்றதுக்கில்ல :(

வெட்டிப்பயல் said...

//ஆ! இதழ்கள் said...
பின்ன, உன் கையெழுத்து போட்டு, உன் வீட்டு அட்ரஸை கொடுத்துட்டு வந்தா உன்னை பிடிக்காம என்னையா பிடிப்பாங்க?”//

சரியான டுவிஸ்டூ...

:)))

//

நமக்கு டுவிஸ்டூ... மாடுக்கு ஆப்பு :)

வெட்டிப்பயல் said...

// மங்களூர் சிவா said...
இது மெய்யாலும் நடந்ததா??
பாவம்யா அந்த துண்டு போட்டு சீட்டு புடிச்சவன்
:((

//

சிவாண்ணே,
பதிவைப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது :)

சீட்டு போட்டவன் ரொம்ப பாவம் தான். என்ன செய்ய. புத்திசாலித்தனமா பண்றோம்னு நினைச்சி சீட்டு போட்டு வெளியில போனா வேலைக்கு ஆகுமா? :(

வெட்டிப்பயல் said...

//Priyadarshini said...
Hi Balaji,
Iam Silent Reader in ur blog(past 6 months) i think i read all ur updates.All updates are very nice.//

ஊக்கத்திற்கு மிக்க நன்றி பிரியதர்ஷினி...

வெட்டிப்பயல் said...

//
வினோத்கெளதம் said...
Odi poi kalyanam pannuravanga nilamai mosam thaan..
athuku help pannuravan nilamai padu kevalam..

//

நாடோடிகள் படம் பார்த்தாச்சா வினோத்? பார்க்கலைனா பாருங்க...

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...
:))//

:)

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
எங்க காலேஜ்லயும் இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சு !

ப்ரெண்ட்ஸ் எல்லார் முன்னிலையிலும் நடந்த திருமணம் காலேஜ் முடிஞ்சு 3 வருசம் கழிச்சு திரும்ப ஒண்ணா சேருணும்ங்கற முடிவு எடுத்து எல்லாரும் பிரிஞ்சு போனாங்க!

சமீபத்துல லீவுக்கு போனப்ப ரெண்டு பேரும் 3 வருசத்துக்கு பிறகு சேர்ந்து இப்ப வெளிநாட்ல நல்லபடியா இருக்காங்கன்னு சொன்னதும் எதோ ஒரு சந்தோஷம் மனசுல...!

இத்தனைக்கும் பையன் வேற மதம் பொண்ணு வேற மதம் - அதுவும் ரெண்டு பேருமே கலவர பூமிக்காரங்க :))))

//

ஆயில்ஸ்,
இந்த மாதிரி விஷயங்களைக் கேக்கும் போது நம்மை அறியாமலே ஒரு சந்தோஷம் வந்துடுது :)

Anonymous said...

சினிமா விமர்சனம்னு வந்தா அத விட தூள் கிளப்பீட்டிங்க பாலாஜி.

ஊர்சுற்றி said...

உண்மையிலேயே விம்ர்சனம்னுதான் வந்தேன்... ஆனா இந்த விசயமும் ரொம்ப சுவாரசியமா இருந்தது.

ஆனா, நான் ஒரு விமர்சனம் எழுதலாம்னு இருக்கேன்.... வந்து படிச்சிட்டு உங்க கருத்தையும் சொல்லிட்டுப் போங்க. :)

Prabu Raja said...

நானும் சேலம் அம்மாபேட்டை தான். :-)
மாடு, பிரதர் இவர்களின் உண்மை பெயர் சொல்லுங்களேன்?

வெட்டிப்பயல் said...

//வடகரை வேலன் said...
சினிமா விமர்சனம்னு வந்தா அத விட தூள் கிளப்பீட்டிங்க பாலாஜி.
//

நன்றி அண்ணாச்சி :)

வெட்டிப்பயல் said...

//ஊர்சுற்றி said...
உண்மையிலேயே விம்ர்சனம்னுதான் வந்தேன்... ஆனா இந்த விசயமும் ரொம்ப சுவாரசியமா இருந்தது.

ஆனா, நான் ஒரு விமர்சனம் எழுதலாம்னு இருக்கேன்.... வந்து படிச்சிட்டு உங்க கருத்தையும் சொல்லிட்டுப் போங்க. :)
//

டாங்க்ஸ் பாஸ் :)

எழுதிட்டு அப்படியே லிங்கை கொடுங்க தல :)

வெட்டிப்பயல் said...

//Prabu Raja said...
நானும் சேலம் அம்மாபேட்டை தான். :-)
மாடு, பிரதர் இவர்களின் உண்மை பெயர் சொல்லுங்களேன்?
//

மாடு பேர் ப்ரேம் குமார்... ப்ரதர் பேரு நிஜமாலுமே மறந்து போச்சி :)
ப்ரதர் ப்ரதர்னு சொல்லி...

மாடை பார்த்தா இந்த‌ விஷ‌ய‌த்தை எல்லாம் கேக்காதீங்க‌ :)

salem-jettiman said...

singapore party oru adhistakarar
avar kadhai "kadhal" cinema pol agi irundhal???