மூன்று வருடமாக வலையுலகில் இயங்குகிறேன். இப்படி ஒரு போட்டியைப் பார்த்ததில்லை. அதற்கு முக்கிய காரணம் இருபது கதைகளுக்கு பரிசு என்பதும் புத்தகத்தில் வரப்போகிறது என்பதும் தான். அதனால் நிறைய பதிவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.
நான் படித்த வரை நிறைய தரமான கதைகள் இருக்கின்றன. எதைத் தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பதில் பெரும் குழப்பம் இருக்க போவது உறுதி. தேர்வு செய்யப்படும் இருபது கதைகளைத் தெரிந்து கொள்ள நானும் ஆவலாகவே இருக்கிறேன்.
போட்டி ஆரம்பித்தவுடன் முதல் பத்திலே ஜாம்பவான்களான லக்கி, பெனாத்தலார் எல்லாம் இறங்கி சிக்ஸர் அடித்து அதகளமாக ஆரம்பித்துவிட்டார்கள். சரி இதைப் படிச்சிட்டு போட்டி குறையும்னு பார்த்தா அதை விட அதகளமான கதைகள் வர ஆரம்பித்தன. எப்படியும் போட்டி கடைசி நாள்ல சில ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்னு பார்த்தேன். அதே மாதிரி நேத்து தான் வடகரை வேலன் அண்ணாச்சி, கேபில் சங்கர் எல்லாம் எழுதியிருக்காங்க.
இன்னைக்கும் எப்படியும் சில கதைகள் வரும்னு எதிர்பார்க்கிறேன்...
இவ்வளவு பேரை சிறுகதைகள் எழுத தூண்டியதற்கு சிவராமன் அண்ணாவிற்கு பாராட்டுகளும் நன்றிகளும். அதே போல இரா.வசந்தகுமாரின் சேவையும் பாராட்டுக்குரியது. அவரையும் இங்கே நான் பாராட்ட விரும்புகிறேன்.
கதையை எழுதியவர்கள் மறக்காமல் இங்கே பதியவும். மேலும் sivaraman71@gmail.com க்கு மடல் அனுப்பிவிடவும். இந்திய நேரம் 12:00 மணிக்குள் அனுப்பிவிடவும். EST, PST எல்லாம் நினைத்து ஏமாந்துவிட வேண்டாம்.
இந்த பதிவு ஒரு ரிமைண்டர் பதிவு.... மறக்காம எழுதியவர்கள் மேலே சொன்னது போல் கதையை சரியான முறையில் சமர்ப்பிக்கவும்...
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள்!!!
10 comments:
நன்றி நண்பா... அனைத்து நண்பர்களுக்கும் ரிமைண்டர் செய்ததற்கு :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
படித்தேன் நெகிழ்ந்தேன்
பாராட்டிற்கு'றி'யது..?
:) ச்சும்மா..!
ரவியின் விமர்சன ஆரம்பம் ஏற்படுத்திய பதற்றங்களுக்கும் ஒரு நன்றி..!!
//பைத்தியக்காரன் said...
நன்றி நண்பா... அனைத்து நண்பர்களுக்கும் ரிமைண்டர் செய்ததற்கு :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//
ஆஹா... இதுக்கெல்லாம் நன்றியா?
பலரை நல்ல கதைகள் எழுத வைத்ததற்கு நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். முடிவுகளை வெளியிடும் போது அனைத்து கதைகளுக்கும் நடுவர்கள் கொடுக்கும் விமர்சனங்களை சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும். வெற்றி பெற்றவர்கள் தொட்டவர்கள் இருவருக்கும் இது ஒரு திருப்தியைத் தரும்.
இது செய்யறது ரொம்ப கஷ்டம்னு தெரியும். இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.
//ரமேஷ் வைத்யா said...
படித்தேன் நெகிழ்ந்தேன்
//
மிக்க நன்றி தல...
//இரா. வசந்த குமார். said...
பாராட்டிற்கு'றி'யது..?
//
தப்பு தான் வசந்த். மாத்திட்டேன். மன்னிக்கவும் :(
//
:) ச்சும்மா..!
ரவியின் விமர்சன ஆரம்பம் ஏற்படுத்திய பதற்றங்களுக்கும் ஒரு நன்றி..!!
//
அவர் விமர்சனம் பாதியிலே நின்றது வருத்தம் தான். இனிமே தொடரும்னு நினைக்கிறேன். இந்த மார்க் விஷயம் நமக்கு அலர்ஜி. அதே மாதிரி எல்லா கதையையும் நாலே வரில விமர்சனம் செய்வது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
உங்களுடைய விமர்சனத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இருபது பேருக்கு பரிசுகள் என்று அறிவித்தது, அனைவரின் வலைப்பூவிலும் அவர்கள் gadget இணைக்க வைத்து விளம்பரப்படுத்தியது இதெல்லாம் உரையாடல் போட்டியின் வெற்றிக்கான சில முக்கிய காரணிகள்.
Good job பைத்தியக்காரன்.. And u too..
அடடே! போட்டியில் பங்குபெறத் தவறிவிட்டேன்!
:((
//♫சோம்பேறி♫ said...
இருபது பேருக்கு பரிசுகள் என்று அறிவித்தது, அனைவரின் வலைப்பூவிலும் அவர்கள் gadget இணைக்க வைத்து விளம்பரப்படுத்தியது இதெல்லாம் உரையாடல் போட்டியின் வெற்றிக்கான சில முக்கிய காரணிகள்.
Good job பைத்தியக்காரன்.. And u too..
//
ஆமாம் பாஸ்...
அது இல்லாம ஆர்வமாக கலந்து கொண்டவர்கள் அனைவருமே காரணம்...
//பகலவன் பிரமீளா said...
அடடே! போட்டியில் பங்குபெறத் தவறிவிட்டேன்!
:((//
ஆஹா...
பரவாயில்லைங்க. எப்படியும் அடுத்து நிறைய போட்டிகள் வரும்... நிச்சயம் கலந்து கொள்ளவும் :)
Post a Comment