தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, June 17, 2009

நகைச்சுவைப் படங்கள்!!!

சமீபத்துல ட்விட்டர்ல தமிழின் சிறந்த நகைச்சுவைப் படங்கள் பத்தி பேச்சு வந்தது. புரட்சி தமிழன் சத்யராஜ் சொன்னாராம்.. தமிழின் மிக சிறந்த மூன்று நகைச்சுவைப் படங்கள் காதலிக்க நேரமில்லை, நடிகன், உள்ளத்தை அள்ளித்தா அப்படினு. மூன்றும் சிறந்த நகைச்சுவைப் படங்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மிக சிறந்த மூன்றுப் படங்களா என்பதை ஒத்துக் கொள்ள முடியாது.


என்னைப் பொருத்தவரை, அப்படி மூன்று படங்களை சொல்வதே மிக கடினம். ஒரு வேளை ஒவ்வொரு நடிகருக்கும் சிறந்த நகைச்சுவைப் படங்கள்னு சொல்லலாம்னு யோசிச்சேன். அதுல வந்தது தான் இந்த லிஸ்ட்...சிவாஜி - பலே பாண்டியா

ஜெமினி கணேசன் - அவ்வை சண்முகி (கல்யாண பரிசு)
முத்துராமன் - காதலிக்க நேரமில்லை (பாமா விஜயம்)
ஜெய்சங்கர் - பட்டணத்தில் பூதம்
ரஜினி - தில்லு முல்லு
கமல் - மைக்கல் மதன காமராஜன்
விஜயகாந்த் - நானே ராஜா நானே மந்திரி
சத்யராஜ் - நடிகன் (பங்காளி)
பிரபு - அரங்கேற்ற வேளை (மை டியர் மார்த்தாண்டன்)
கார்த்திக் - உள்ளத்தை அள்ளி தா (பிஸ்தா)
ராமராஜன் - கரகாட்டகாரன்
பாக்யராஜ் - இன்று போய் நாளை வா (அந்த ஏழு நாட்கள்)
பாண்டிய ராஜன் - ஆண் பாவம் (ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்)
எஸ்.வீ. சேகர் - மணல்கயிறு (கதாநாயகன்)
பார்த்திபன் - டாட்டா பிர்லா (வெற்றி கொடி கட்டு)
முரளி - சுந்தரா டிராவல்ஸ்
பிரபு தேவா - காதலா காதலா (நினைவிருக்கும் வரை)
மோகன் - சகாதேவன் மகாதேவன்
அரவிந்த சாமி - புதையல்
நாசர் - மகளிர் மட்டும்
ஜெயராம் - முறை மாமன் (பெரிய இடத்து மாப்பிள்ளை)
விஜய் - Friends (பூவே உனக்காக)
அஜித் - அட்டகாசம்
சூர்யா - Friends
பிரஷாந்த் - வின்னர்
மாதவன் - டும் டும் டும் (எதிரி)
ரமேஷ் அரவிந்த் - சதி லீலாவதி
தனுஷ் - திருடா திருடி


இந்த லிஸ்ட்ல காமெடியன்களை நம்பாமல் அதிகமாக நகைச்சுவைப் படங்களை நடித்தவர் கமல் மட்டும் தானு நினைக்கிறேன். அவர் நடித்த நகைச்சுவைப் படங்களைப் பற்றி எழுதனும்னா அதுக்கு தனிப் பதிவே போடணும். இந்த லிஸ்ட்ல எனக்கு மிகவும் பிடித்த ஐந்து படங்கள்னா, அது


காதலிக்க நேரமில்லை
தில்லு முல்லு
மைக்கல் மதன காமராஜன்
ஆண் பாவம்
கரகாட்டகாரன்


புதுசா வந்திருக்குற நாயகர்கள்ல சூர்யா, தனுஷ், ஜீவா மூணு பேரும் நல்ல நகைச்சுவைப் படங்கள் தர முடியும்னு நினைக்கிறேன்.

27 comments:

ஆயில்யன் said...

//தில்லு முல்லு & ஆண் பாவம்//

எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப் புடிச்ச படங்கள் எத்தனை வாட்டி பார்த்திருப்பேன்னு கணக்கு வைச்சுக்க முடியாத அளவுக்கு திகட்ட திகட்ட பார்த்தாச்சு! :)))))

நகைச்சுவையால் முதலிடம் பெற்ற இந்த படங்களும்,தன் நடிப்பால் நகைச்சுவை உணர்வினை வரவழைத்த கேப்டனின் நரசிம்மாவும் இடம் பெறாதது ஒரு குறையே :(

வந்தியத்தேவன் said...

உங்களுக்கு பிடித்த லிஸ்ட்டில் உள்ள 5 படங்களும் எத்தனை முறைபார்த்தாலும் சலிக்காதவை. அனைத்தும் கிளாஸ் படங்கள். கமலின் பெரும்பாலான படங்கள் திரும்பதிரும்ப பார்க்கலாம். சுந்தர்.சி இயக்குனராக நல்ல நகைச்சுவைப் படங்களைக் கொடுத்தார் நடிக்க வந்தபின்னர் அந்த இடம் வெறுமையாக இருக்கின்றது.

rapp said...

//உள்ளத்தை அள்ளித்தா //

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............................இதை எப்டி மனசாட்சியோட சொன்னாரோ, இதை விட சபாஷ் மீனா பல மடங்கு சூப்பராயிருக்கும்.

☀நான் ஆதவன்☀ said...

//ஜெய்சங்கர் - பட்டணத்தில் பூதம்//

அதைவிட "பொம்மலாட்டம்" நல்லாயிருக்கும்.

//உள்ளத்தை அள்ளித்தா //

சத்தியமா உங்களுக்கே ஓவரா தெரியல..

☀நான் ஆதவன்☀ said...

//அரவிந்த சாமி - புதையல்//

இதையெல்லாம் லிஸ்ட்ல சேர்த்திருக்கவே கூடாது

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
//தில்லு முல்லு & ஆண் பாவம்//

எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப் புடிச்ச படங்கள் எத்தனை வாட்டி பார்த்திருப்பேன்னு கணக்கு வைச்சுக்க முடியாத அளவுக்கு திகட்ட திகட்ட பார்த்தாச்சு! :)))))//

சேம் ப்ளட்.. நானும் குறைந்தது நூறு தடவையாவது பார்த்திருப்பேன் :)

//
நகைச்சுவையால் முதலிடம் பெற்ற இந்த படங்களும்,தன் நடிப்பால் நகைச்சுவை உணர்வினை வரவழைத்த கேப்டனின் நரசிம்மாவும் இடம் பெறாதது ஒரு குறையே :(//

நரசிம்மாவை லிஸ்ட்ல போட்டா அப்பறம் அதுக்கு நிகரா எதுவுமே போட முடியாதே :(

புருனோ Bruno said...

எஸ்.ஜே.சூர்யா - நீயூ

பாண்டிய ராஜன் - ஆண் பாவம் (கதாநாயகன்)

ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன் ??

ஜெயராம் - முறை மாமன் (பெரிய இடத்து மாப்பிள்ளை)

தெனாலி ??

--

உள்ளத்தை அள்ளித்தா எனக்கும் மிகவும் பிடித்த படம்

ஆனால் இங்கு மறுமொழியில் அது துவைக்கப்படுகிறது :) :) :)

வெட்டிப்பயல் said...

//வந்தியத்தேவன் said...
உங்களுக்கு பிடித்த லிஸ்ட்டில் உள்ள 5 படங்களும் எத்தனை முறைபார்த்தாலும் சலிக்காதவை. அனைத்தும் கிளாஸ் படங்கள்.//
மிக்க நன்றி வந்தியத்தேவன்

// கமலின் பெரும்பாலான படங்கள் திரும்பதிரும்ப பார்க்கலாம்.//

ஆமாம்... எதை சொல்ல எதை விட... கமல் + க்ரேஸி நல்ல கூட்டணி :)

// சுந்தர்.சி இயக்குனராக நல்ல நகைச்சுவைப் படங்களைக் கொடுத்தார் நடிக்க வந்தபின்னர் அந்த இடம் வெறுமையாக இருக்கின்றது.
//

ஆமாம்.. வின்னர் கைப்புள்ளய மறக்க முடியுமா? :)

வெட்டிப்பயல் said...

//rapp said...
//உள்ளத்தை அள்ளித்தா //

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............................இதை எப்டி மனசாட்சியோட சொன்னாரோ, இதை விட சபாஷ் மீனா பல மடங்கு சூப்பராயிருக்கும்.//

ஆமாம் ராப்... அவர் எப்படி அப்படி சொன்னாருனே புரியல. ஒரு வேளை அவரே ஜோக்கா சொன்னாரோ :)

வெட்டிப்பயல் said...

//நான் ஆதவன்☀ said...
//ஜெய்சங்கர் - பட்டணத்தில் பூதம்//

அதைவிட "பொம்மலாட்டம்" நல்லாயிருக்கும்.
//
பொம்மலாட்டம் பார்த்த நினைவு இல்லை. மாத்திடலாம் :)

//
//உள்ளத்தை அள்ளித்தா //

சத்தியமா உங்களுக்கே ஓவரா தெரியல..

1:01 AM//

உள்ளத்தை அள்ளித்தால காமெடி சீன்ஸ் நிறைய இருக்கு. உள்ளத்தை அள்ளித்தா ஒரு ட்ரெண்ட் செட்டர் இல்லையா? :)

வெட்டிப்பயல் said...

// ☀நான் ஆதவன்☀ said...
//அரவிந்த சாமி - புதையல்//

இதையெல்லாம் லிஸ்ட்ல சேர்த்திருக்கவே கூடாது

//

:-))))

புதையல் எனக்கு பிடித்திருந்தது :)

வெட்டிப்பயல் said...

//புருனோ Bruno said...
எஸ்.ஜே.சூர்யா - நீயூ
//
நிறைய டபுல் மீனிங் டயலாக்ஸ் :)

//
பாண்டிய ராஜன் - ஆண் பாவம் (கதாநாயகன்)

ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன் ??
//
ஆண் பாவத்திற்கு அடுத்து ஊரைத்தெரிஞ்சிக்கிட்டேன் சொல்லலாம். குறிப்பா மாமா பிஸ்கோத்து :)

//ஜெயராம் - முறை மாமன் (பெரிய இடத்து மாப்பிள்ளை)

தெனாலி ??
//
தெனாலி தான் முதல்ல எழுதினேன். அப்பறம் கமல் ரசிகர்கள் சண்டைக்கு வருவாங்கனு தான் விட்டுட்டேன் :)

அப்படியும் நைஸா காதலா காதலா, சதி லீலாவதி சேர்த்தாச்சு :)

//உள்ளத்தை அள்ளித்தா எனக்கும் மிகவும் பிடித்த படம்

ஆனால் இங்கு மறுமொழியில் அது துவைக்கப்படுகிறது :) :) :)//

அது தான் எனக்கும் புரியல :)

சார் டெம்போ எல்லாம் வெச்சி கடுத்திருக்கோம் சார். கொஞ்சம் பாத்து போட்டு கொடுங்க சார். எல்லாம் இன்னும் நிறைய பேர் சொல்ற டயலாக்.

வெட்டிப்பயல் said...

அப்படியே தலைவர் படம் ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க. எங்க வீட்டு பிள்ளை போடலாமா? அதுல காமெடியே இல்லையே...

மங்களூர் சிவா said...

ராமராஜன் - கரகாட்டக்காரன்??

why கொலவெறி?
:)))))))))

Karthik said...

செம்ம செம்ம லிஸ்ட்.. :))

கமல் படத்தில் 'பஞ்சதந்திரம்' எனக்கு பிடிக்கும்.

முரளிகண்ணன் said...

காசேதான் கடவுளடா, உத்தரவின்றி உள்ளே வா, சோப்பு சீப்பு கண்ணாடி,
கலாட்டா கல்யாணம் போன்றவையும் சேர்க்கலாம். இவை அவுட் அன்ட் அவுட் காமெடி படங்கள்.

starjan said...

சூப்பர்ஸ்டாரின் காமெடி நல்லா இருக்கும்....

வாங்க

www.ensaaral.blogspot.com

ஆ! இதழ்கள் said...

சபாபதி தெரியுமோ?

எனக்கு ரொம்பப் பிடிக்கும்...

மனுநீதி said...

பாண்டியராஜன் படங்கள்ல எனக்கு 'வாய்கொழுப்பு'ம் ரொம்ப பிடிக்கும்.

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
ராமராஜன் - கரகாட்டக்காரன்??

why கொலவெறி?
:)))))))))//

காமெடி பாட்டுக்காக மட்டுமே பிச்சிட்டு ஓடன படம் இல்லையா? :)

வெட்டிப்பயல் said...

//Karthik said...
செம்ம செம்ம லிஸ்ட்.. :))

கமல் படத்தில் 'பஞ்சதந்திரம்' எனக்கு பிடிக்கும்.

3:08 AM//

மிக்க நன்றி கார்த்திக் :)

கமல் படம்ல எனக்கு பிடிச்சதை சொன்னா தனி லிஸ்டே வரும் :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
காசேதான் கடவுளடா, உத்தரவின்றி உள்ளே வா, சோப்பு சீப்பு கண்ணாடி,
கலாட்டா கல்யாணம் போன்றவையும் சேர்க்கலாம். இவை அவுட் அன்ட் அவுட் காமெடி படங்கள்.

//

எந்த நாயகர்களுக்கு கீழ சேக்கறதுனு தெரியல :(

வெட்டிப்பயல் said...

//starjan said...
சூப்பர்ஸ்டாரின் காமெடி நல்லா இருக்கும்....

வாங்க

www.ensaaral.blogspot.com

4:11 AM//

சூப்பர் ஸ்டார் காமெடில பட்டையை கிளப்பறதால தான் குழந்தைகளை அட்ராக்ட் பண்ண முடிந்தது. ஆனா முழு நீள காமெடி படம் மிக குறைவு :)

வெட்டிப்பயல் said...

//ஆ! இதழ்கள் said...
சபாபதி தெரியுமோ?

எனக்கு ரொம்பப் பிடிக்கும்...

10:13 AM//

நான் முழுசா பார்த்ததில்லை ஆனந்த் :(

rapp said...

ஆண்பாவம் செம சூப்பர். அதுக்கு சரிசமமா மனைவி ரெடி படமும் இருக்கும்.(இது பாண்டியராஜன் மாமனார் தயாரிச்ச படம்).

அதுப்போலவே, இல்லம் (சிவக்குமார், அமலா ஐ.வி.சசி இயக்கத்தில் நடிச்சது) படமும் கலக்கலோ கலக்கல்.(மலையாளத்தில் மோகல்லால், கார்த்திகா பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிச்சது).

இந்த ரெண்டு படத்தோட டிவிடியும் கிடைக்க மாட்டேங்குது, நெட்லயும் கிடைக்கமாட்டேங்குது. லிங்க் இருந்தா யாராவது கொடுத்தா நல்லாருக்கும்.

பிஸ்தா படம் உள்ளத்தை அள்ளித்தாவைவிட நல்லாருக்கும்.

ஒருவிதத்தில் பிரம்மா படம் கூட காமடி தூக்கலான படம்தான்.

கல்யாணப்பரிசா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

முத்துராமன், ஜெய்ஷங்கர் ரெண்டு பேருக்குமே, வீட்டுக்கு வீடு சூப்பர் படம்தான்.(இதைத்தான் ராமநாராயணன் எடுத்தார் ஞாபகம் இருக்கா:):):) விஸ்வநாதன் ராமமூர்த்தின்னு). இதில்தான், நாகேஷ், ம்ம்ம்ம்ம்ம்மாட்டிக்கினான் அப்டின்னு இழுத்து இழுத்து பேசுவாரே:):):)

விஜயகாந்த்க்கு எப்படி நரசிம்மா விட்டீங்க?:):):)

எஸ்.வீ.சேகர் சிம்லா ஸ்பெஷல் சூப்பராயிருக்குமே.

மனுநீதி said...

//இந்த ரெண்டு படத்தோட டிவிடியும் கிடைக்க மாட்டேங்குது//

@Rapp

ஆனந்த் தியேட்டர் பக்கத்துல இருக்க ராஜ் வீடியோ விஷன்ல கிடைக்கும். கேட்டு பாருங்க.

Bleachingpowder said...

என் தலைவன் டி ராஜேந்தரோட படங்களில் சிறந்த காமெடி படத்தை மட்டும் வெளியிடாமல் இருப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்