தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, June 14, 2009

என்னை ஈர்த்த காதல் காட்சி

ஜானி படத்துல வர இந்த காட்சி சமீபத்துல பார்த்தேன். என்னவோ தெரியல, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. Very Romantic. கதாநாயகன், கதாநாயகி தொட்டுக்கல. காதல் வசனம் பேசல. இருந்தாலும் ஏதோ ரொமாண்டிக்கா இருந்த மாதிரி இருந்தது.

ஸ்ரீதேவி, கமல் தான் நல்ல ஜோடினு நினைச்சிட்டு இருந்தேன். இதைப் பார்க்கும் போது அந்த எண்ணத்தை மாத்திக்கலாம் போல. ஸ்ரீதேவி நடிப்பு வெகு பிரமாதம். இது போனஸ் ரஜினியைப் பிடிப்பவர்கள், பிடிக்காதவர்கள் ரெண்டு பேருக்கும் இதுமகேந்திரன் is a Genius. கை கொடுக்கும் கை ஃப்ளாப் ஆனாலும் ரஜினி பத்து படத்துக்கு ஒரு படமாவது மகேந்திரன் டைரக்‌ஷன்ல நடிச்சிருக்கணும். 

கமல், ஸ்ரீதேவி ஜோடிஇதுவும் அருமை தான். 

14 comments:

ஆயில்யன் said...

சின்ன வயதில் எங்க ஊரு பழைய படங்கள் தியேட்டரில் பார்த்த ஜானி ”காற்றில் எந்தன் கீதம்” பாடலும் ரஜினி ஓடிவரும் காட்சியும் மட்டுமே நன்றாக நினைவில் இருத்தி வைத்து பல ஆண்டுகள் கழித்து பார்த்தேன்! சூப்பர் :))

ஞாயிறு ஸ்பெஷலாய் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பாஸ் :)))

vijay said...

தலைவர் கொள்ளை அழகு ! :)

G.Ragavan said...

ஸ்ரீதேவியின் நடிப்புத்திறமையை இனிமேல்தான் சொல்ல வேண்டுமென்று இல்லை. எல்லாவிதமான பாத்திரங்களுக்கும் பொருத்தமானவர். முருகனாக முதலில் நடித்தார். பட்டிக்காட்டுப் பெண், அம்மன் வேடம், நவநாகரீகப் பெண், இன்னும் என்னென்னவோ வேடங்கள். அத்தனையிலும் பொருத்தமாக ஜொலித்தார். ஆந்திரத்தில் நாகேஷ்வரராவுடன் நடித்து விட்டு... அவர் மகன் நாகார்ஜுனாவிற்கும் ஜோடியாக நடித்தார்.

வணக்கத்திற்குரிய காதலியே என்ற படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போல மூன்று முடிச்சு. இதில் ரஜினிக்கும் ஸ்ரீதேவிக்கும் நடக்கும் போட்டி. இதுதான் கதாநாயகியாக ஸ்ரீதேவி முதலில் நடித்த படம். இந்தப் படத்தின் காட்சிகள் கிடைக்கவில்லையா?

G.Ragavan said...

மகேந்திரன் தமிழில் தப்பி வந்த இயக்குனர். ஜானியும் சரி.. பின்னாள் இயக்குனர்களுக்குப் பாடமான படங்கள்.

G.Ragavan said...

சிப்பியிருக்குது முத்துமிருக்குது பாட்டு ... அடடா... கடைசியில் இருவருடைய கைகளும் உரசிக் கொண்டே வந்து.... விரல்கள் பற்றிக் கொள்ளும். அப்பொழுது அப்படியே கமலில் தோளில் சாய்வாரே... ஸ்ரீதேவி... உங்கள் இடம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. மீனம்பட்டி தந்த அழகரசியே... மீண்டும் தமிழுக்கு நடிக்க வருக.

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
சின்ன வயதில் எங்க ஊரு பழைய படங்கள் தியேட்டரில் பார்த்த ஜானி ”காற்றில் எந்தன் கீதம்” பாடலும் ரஜினி ஓடிவரும் காட்சியும் மட்டுமே நன்றாக நினைவில் இருத்தி வைத்து பல ஆண்டுகள் கழித்து பார்த்தேன்! சூப்பர் :))

ஞாயிறு ஸ்பெஷலாய் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பாஸ் :)))

//

எனக்கு அந்த தீபா ரஜினி வீட்டுக்கு வர காட்சி மட்டும் நினைவில் இருந்தது. திடீர்னு இந்த காட்சி பார்க்கும் போது இது ரொம்ப பிடிச்சிருந்தது. அதான் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் :)

வெட்டிப்பயல் said...

//Vijay said...
தலைவர் கொள்ளை அழகு ! :)

//

ஆமாங்க... செம அழகு :)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...
ஸ்ரீதேவியின் நடிப்புத்திறமையை இனிமேல்தான் சொல்ல வேண்டுமென்று இல்லை. எல்லாவிதமான பாத்திரங்களுக்கும் பொருத்தமானவர். முருகனாக முதலில் நடித்தார். பட்டிக்காட்டுப் பெண், அம்மன் வேடம், நவநாகரீகப் பெண், இன்னும் என்னென்னவோ வேடங்கள். அத்தனையிலும் பொருத்தமாக ஜொலித்தார். ஆந்திரத்தில் நாகேஷ்வரராவுடன் நடித்து விட்டு... அவர் மகன் நாகார்ஜுனாவிற்கும் ஜோடியாக நடித்தார்.
//
ஆமாம் ஜி.ரா. இதே மாதிரி NTR, பாலைய்யா கூடவும் சேர்ந்து நடித்திருக்கிறார் :)

//வணக்கத்திற்குரிய காதலியே என்ற படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போல மூன்று முடிச்சு. இதில் ரஜினிக்கும் ஸ்ரீதேவிக்கும் நடக்கும் போட்டி. இதுதான் கதாநாயகியாக ஸ்ரீதேவி முதலில் நடித்த படம். இந்தப் படத்தின் காட்சிகள் கிடைக்கவில்லையா?//

மூன்று முடிச்சி இருக்கும். தேடவில்லை. கிடைக்கும் போது போடுகிறேன் ஜி.ரா :)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...
மகேந்திரன் தமிழில் தப்பி வந்த இயக்குனர். ஜானியும் சரி.. பின்னாள் இயக்குனர்களுக்குப் பாடமான படங்கள்.//

ஆமாம் ஜிரா... நல்ல இயக்குனர். அவர் பையன் தான் பேரைக் கெடுத்துட்டார் :)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...
சிப்பியிருக்குது முத்துமிருக்குது பாட்டு ... அடடா... கடைசியில் இருவருடைய கைகளும் உரசிக் கொண்டே வந்து.... விரல்கள் பற்றிக் கொள்ளும். அப்பொழுது அப்படியே கமலில் தோளில் சாய்வாரே... ஸ்ரீதேவி... உங்கள் இடம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. மீனம்பட்டி தந்த அழகரசியே... மீண்டும் தமிழுக்கு நடிக்க வருக.//

அட்டகாசமான நடிப்பு... அழகும்..

:)))

ஆ! இதழ்கள் said...

முதல் காட்சி மிக அருமை. ரஜினியும் ஸ்மார்ட்.

thnx 4 sharing

Divyapriya said...

தலைவர் என்னிக்குமே தலைவர் தான்

இரா. வசந்த குமார். said...

thalaivar thalaivar thaan...

http://kaalapayani.blogspot.com/2008/10/arr.html

வெட்டிப்பயல் said...

வசந்த்,
Chanceless... இப்படி ஒரு ஒற்றுமையா? :-))

கலக்கல் :-)