தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, June 13, 2009

ஆட்டோபயோகிராபி

ரெண்டு தங்கைகள் டேக் பண்ணிட்டாங்க. அதான் எழுதியாச்சு. இல்லைனா பின்னாடி இதையே காசு கொடுத்து வாங்கி படிச்சிருப்பீங்க. (ஸ்மைலி போடல.  அதனால சீரியஸ்)

உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
நான் பிறக்கறதுக்கு முன்னாடியே எனக்கு இந்த பேர் தான் வைக்கணும்னு முடிவுப் பண்ணிட்டாங்களாம். திருப்பதில இருப்பவர் பெயர் தான். வருஷம் ஒரு தடவையாவது தவறாம அப்பா திருப்பதி போயிட்டு வந்துடுவார். வாழ்க்கைல நிறைய கஷ்டத்தைக் கொடுத்தாலும் கடைசியா அதை வெங்கடாஜலபதி தீர்த்து வைப்பார்னு அப்பாவுக்கு தீவிர நம்பிக்கை (எனக்கும் தான்). பெண்ணா பிறந்திருந்தா பாலானு வைக்கலாம்னு திட்டமாம். நல்ல வேள பாலாஜியாகிட்டேன். பாலானு பேர் வெச்சிருந்தாங்க, அவுங்களை திட்டியே தீர்த்திருப்பேன். வீர சைவனாக்கூட மாறியிருப்பேன். வீர சைவினு சொல்லனுமோ? :)

உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும்னு சொல்ல முடியாது. அட்டெண்டன்ஸ்ல முன்னாடி வந்துடும். காலேஜ்ல அசைண்மெண்ட் முடிக்கலனா என்ன பனிஷ்மெண்ட்னு என்னை வெச்சி தான் க்ளாஸே தெரிஞ்சிக்கும். எனக்கு முன்னாடி மூணு பேரு. அதுல ரெண்டு பசங்க. க்ளாஸுக்கே வர மாட்டாங்க. ஒரு பொண்ணு. அது எப்படியும் அசைண்மெண்ட் பண்ணிடும். அதனால நான் தான். என் பேச்சு சாமர்த்தியத்தால க்ளாஸையே காப்பாத்தணும். பல சமயம் காப்பாத்தியும் இருக்கிறேன்.

அப்பறம் சினிமாலயும் பாலாஜினு எந்த ஹீரோக்கும் பேர் இருக்காது. வில்லனுக்கு கூட இருக்காது. 
பாலாஜினு பேர் வெச்ச நடிகரும் நல்லவரா இருந்தாலும், பெருசா சாதிக்கல. அதனால எனக்கு இந்த பேர் மேல ஒரு கடுப்பு. இப்ப தான் கடைசியா நான் இந்தியா போயிருக்கும் போது எங்க அம்மா சொன்னாங்க, “திருப்பதில மலை மேல இருக்கற சாமி பேர் வெச்சிருக்குற. உன் பையன் அதுக்கேத்த மாதிரி உயரத்துல இருப்பானு” எங்க பெரிய மாமா சொன்னாராம். யோசிச்சி பார்க்கும் போது அது ஓரளவு உண்மை தான். எங்க குடும்பத்துல நான் ஒரு ரோல் மாடல் தான்.  

கடைசியாக அழுதது எப்போது?
அடிக்கடி கண் கலங்கிடுது. இன்னைக்கு பசங்க பார்க்கும் போது கூட ஒரு காட்சில கண் கலங்குச்சு. நான் சின்ன வயசுல இருக்கும் போது எங்க அம்மா, அப்பாக்கூட சண்டை போட்டுக்குவாங்க. அதுவும் சப்ப மேட்டரா இருக்கும். ஒரு தடவை எங்க அம்மா கிணத்துல குதிக்க முயற்சி கூட பண்ணியிருக்காங்க. அப்ப நானும், என் அக்காவும் அம்மா கையை பிடிச்சி அழுத காட்சி நினைவுக்கு வந்தது. பசங்க படத்தைப் பத்தி தான் அடுத்த பதிவு.

மனசு விட்டு அழுதது, தமிழர்களின் வீரத்திற்கு சாட்சியாக வாழ்ந்த திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டதாக கேள்விப்பட்ட போது. தமிழீழ மக்களின் கனவுகளுக்கும் நம்பிக்கைக்கும் இருந்த கடைசி பிடிப்பும் அறுந்து போனதுனு நினைக்கும் போதும், அதுக்கு காரணமா அந்த இனத்துல வந்த நாங்களே காரணமாக இருப்பதை நினைக்கும் போது இப்பொழுதும் மனதிற்கு வலியாக இருக்கிறது.

உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
எனக்கு பிடிச்சி என்ன பயன்? என் பேப்பரைத் திருத்தியவர்களுக்கு பிடித்து இருந்தால் வாழ்க்கையே மாறியிருக்கலாம். என் கையெழுத்தைப் பார்த்து எங்க வீட்ல சொல்றது கோழி கிறுக்குனா இப்படி தான் இருக்கும்னு. ஆனா கையெழுத்து நல்லா இல்லைனா தலை எழுத்து நல்லா இருக்கும்னு சொல்லியிருக்காங்க. பார்க்கலாம்.

பிடித்த மதிய உணவு?
கிள்ளிப் போட்ட சாம்பாரும் உருளைக் கிழங்கு வறுவலும். அதே மாதிரி முருங்கைக் கீரை சாம்பார் வாழைக்காய்\சேப்பங்கிழங்கு வறுவல்.

நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
பின்ன என்ன என் கூடவேவா நட்பு வெச்சுக்க முடியும். இல்லை எனக்கு Multiple personality disorder இருக்குனு நினைச்சிட்டீங்களா?

கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
ரெண்டுமே பிடிக்கும். அருவினா கூட்டமா இருக்கும். கடல்னா பெருசா இருக்கும், அதனால நெரிசல் இல்லாம குளிக்கலாம். அதை விட ஆறு தான் பெஸ்ட். நான் காஞ்சிப் போன ஊர்ல இருந்து வந்தவன், அதனால குளிக்கறதுனா ரொம்ப ரொம்ப பிடிக்கும் :)

ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முகம் தான்.

உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்ச விஷயம் - தன்னம்பிக்கை
பிடிக்காத விஷயம் - சோம்பல், சோம்பல், சோம்பல்

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த விஷயம் : குழந்தைத்தனம்
பிடிக்காத விஷயம் : குழந்தைத்தனம்

இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
நான் தான் யார் பக்கத்துலயும் இல்லாம தனியா வந்திருக்கேன். வருந்தி எந்த பயணும் இல்லை. Financial commitments.

இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
சிகப்பு கலர் டீ சர்ட், அப்பறம் நீலம், வெள்ளை, வெந்தயக் கலர் கட்டம் போட்ட கைலி

என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
கம்ப்யூட்டரைப் பார்த்துட்டு இருக்கேன். என் ரூமேட் Schindler's list படத்தைப் பத்தி பேசிட்டு இருக்காரு.

வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வர்ணப் பேனாவா? வண்ணப் பேனானு நினைக்கிறேன். எந்த வண்ணமா இருந்தாலும் அதை வைத்து எழுதுபவர்கள் சந்தோஷப்படணும். ஒரு மாணவன் எழுதினா எப்படியும் நல்ல மதிப்பெண் வரணும், கதை எழுதினா நல்ல புத்தகத்துல வெளிவரணும், லவ் லெட்டர் எழுதினா நிச்சயம் ஒர்க் அவுட் ஆகணும்... இந்த மாதிரி.

பிடித்த மணம்?
காபி. தூறல் போட்டவுடன் கிளம்பும் மண்வாசனை.

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
ராஜியோட பதிவுகள்ல - அப்பாphobia

பூர்ணிமா பதிவுகள்ல கும்மி பதிவெல்லாம் பிடிக்கும்னாலும் குறிப்பா இந்த பதிவு ரொம்ப பிடிக்கும். 

நேர்மையா மனசுல இருந்து எழுதும் போது எல்லா பதிவுமே அழகா இருக்கும் என்பது என் எண்ணம். என்னால எப்பவுமே அப்படி எழுத முடியாது :(

நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

கைப்புள்ள - மேல நான் சொன்ன மாதிரி From the heart எழுதறதுல கைப்ஸ் அண்ணனை அடிச்சிக்க முடியாது. படிக்கறவங்களை ரசிக்க வைக்கணும்னு தனியா முயற்சி பண்ணாம சாதாரணமா எழுதறதையே அழகா கொண்டுவருபவர்

பினாத்தல் சுரேஷ் - இவர் அளவுக்கு கிரியேட்டிவா எழுத முடியாதானு என்னை ஏங்க வைக்கும் பதிவர். நம்ம ஒரு வரி சொன்னா அதுல இருந்து குறைந்தது பத்து கதைகளை சொல்பவர்.

ராயல் ராம் - அண்ணன் கதை எழுதறதுல சூரப் புலி. பெரிய எலக்கியவாதி. அதே சமயம் காமெடிலயும் கலக்குபவர்.

ஜியா - நல்ல நண்பர். அட்டகாசமா கதை, கவிதை, நகைச்சுவை இப்படி எல்லா ஏரியாவிலும் கில்லி.

பாஸ்டன் பாலா - நான் ப்ளாக் எழுத ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை என்னை தொடர்ந்து எழுத வைப்பவர்.

கப்பிப்பய - எந்த பதிவு எழுதினாலும் கப்பி அளவுக்கு சுவாரஸியமாக எழுத முடியாது என்பது என் நம்பிக்கை. கப்பியோட எந்த ஒரு பதிவும் பாதில நிறுத்த முடியாது.

பிடித்த விளையாட்டு?
பாஸ்கெட் பால், செஸ் (இதுல நான் காலேஜ் லெவல்ல முதல் பரிசு வாங்கியிருக்கேன். யுனிவர்சிட்டி செலக்‌ஷன் போய் கடைசி ரவுண்ட்ல புட்டுகிச்சு. அந்த கதையை ஒரு நாள் எழுதலாம்), ரம்மி (மூணாவதுல ரம்மி ஆட ஆரம்பிச்சிட்டேன். அது பிடிக்காம தான் அப்பா செஸ் போர்ட் வாங்கி கொடுத்து கத்துக்க வெச்சாரு).

கண்ணாடி அணிபவரா?
இல்லை. ஆனா கண்ணாடி போட்டா ஒரு புத்திசாலி லுக் கிடைக்கும்னு நம்பிக்கை.

எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நகைச்சுவை, சண்டை, சூப்பர் ஹீரோக்கள் படம், கார்டூன்ஸ் இப்படி எந்த மாதிரியா இருந்தாலும் பார்ப்பேன்.

கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க. இன்னைக்கு தான் பார்த்தேன். இது பசங்க பார்க்க வேண்டிய படமில்லை. பெரியவங்க பார்க்க வேண்டிய படம்.

பிடித்த பருவ காலம் எது?
இலையுதிர் காலம் (Fall). Massல இருக்கேன். இங்க Fall Colors எல்லாம் அருமையா இருக்கும்.

என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
வண்ணதாசன் சிறுகதைகள்
புலிநகக் கொன்றை
திரைக்கதை எழுதுவது எப்படி

இது மூணும் மாத்தி மாத்தி படிச்சிட்டு இருக்கேன்.

உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அப்படி எல்லாம் எந்த ரூலும் இல்லை. இப்ப பாப்பா ஃபோட்டோ இருக்கு.

பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் - மழை பெய்யும் சத்தம். எனக்கு மழைனா ரொம்ப பிடிக்கும்

பிடிக்காத சத்தம் - நாய் குறைக்கற சத்தம். பெங்களூர்ல ராத்திரி தனியா நடந்து போனா காரணம் தெரியும் :)

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கடலூர் (100 கி.மி). ஃபோன் வசதி இல்லாத அந்த நாட்கள்ல, சின்ன வயசுலயே ஹாஸ்டல்ல சேர்ந்து, தினமும் அழத நாட்கள்ல தான் வீட்டை விட்டு ரொம்ப தள்ளி போன மாதிரி உணர்ந்தேன். It was like a prison. After 1 year, I started loving it. May be I got used to it.

உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நிச்சயம் இருக்கும். அதைக் கண்டுபிடிக்கணும் :)

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என்னை மதிக்காதது. என்னை மதிக்காதவங்களை நான் அவ்வளவு சீக்கிரம் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டேன். எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும். ஒரு எடுத்துக்காட்டு சாரு விஷயம் :)

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பொறாமை, கோபம், காமம், குரோதம் இப்படி எல்லாமே இருக்கு.

உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
நல்லா தண்ணி ஓடுற ஆறு இருக்கும் அத்தனை இடங்களும் எனக்கு பிடிக்கும். அப்படி இல்லாம பிடிக்கறது திருப்பதி

எப்படி இருக்கணும்னு ஆசை?
ராஜ ராஜ சோழன் மாதிரி. இல்லை விவேகானந்தர் மாதிரி. அதாவது ஒண்ணு அரசனா, இல்லை ஆண்டியா. எப்படி இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யணும்.

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
இப்பவே அவுங்க பக்கத்துல இல்லை. 

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ஒரு வரில சொல்ற அளவுக்கு வாழ்க்கை அவ்வளவு சாதாரண விஷயமா தெரியலை. 

39 comments:

முரளிகண்ணன் said...

\\ராஜ ராஜ சோழன் மாதிரி. இல்லை விவேகானந்தர் மாதிரி. அதாவது ஒண்ணு அரசனா, இல்லை ஆண்டியா. எப்படி இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யணும்\\

இதுதான் வெட்டிபயல் டச்சா?

ஆயில்யன் said...

//பிடித்த மதிய உணவு?
கிள்ளிப் போட்ட சாம்பாரும் உருளைக் கிழங்கு வறுவலும். அதே மாதிரி முருங்கைக் கீரை சாம்பார் வாழைக்காய்\சேப்பங்கிழங்கு வறுவல்.//


பாஸ் ஸேம் ஃபீலிங்க் :)

எனக்கு வாழைக்காய் வறுவல் சூப்பரூ!

ஆயில்யன் said...

//கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
ரெண்டுமே பிடிக்கும். அருவினா கூட்டமா இருக்கும். கடல்னா பெருசா இருக்கும், அதனால நெரிசல் இல்லாம குளிக்கலாம்.///

டிபரெண்ட்! அதே நேரத்துல நிதர்சனம்

டேய் வாடா நாம அங்கால போய் குளிக்கலாம்ன்னு கிட்டதட்ட ஒரு 500 மீ வாக் போயி கூட குதிக்கலாம் - குளிக்கலாம் கடல்ல :)))

ஆயில்யன் said...

//கப்பிப்பய - எந்த பதிவு எழுதினாலும் கப்பி அளவுக்கு சுவாரஸியமாக எழுத முடியாது //

எங்கிருந்தாலும் உடன் பிளாக்கர் மேடைக்கு வரவும்!


(ரீ- எண்டீரி போட என்னாமா கூச்சப்படுறாரு ஆளு எங்க இருக்காருன்னே கண்டுபுடிக்க முடியல!)

ஆ! இதழ்கள் said...

அட்டெண்டன்ஸ்ல முன்னாடி வந்துடும்//

same blood...

எங்க குடும்பத்துல நான் ஒரு ரோல் மாடல் தான்//

Congrats...

அனைத்து பதில்களும் ரசிக்க வைத்தது.

அனுஜன்யா said...

Me the first? Wow!

அனுஜன்யா said...

//காலேஜ்ல அசைண்மெண்ட் முடிக்கலனா என்ன பனிஷ்மெண்ட்னு என்னை வெச்சி தான் க்ளாஸே தெரிஞ்சிக்கும். எனக்கு முன்னாடி மூணு பேரு. அதுல ரெண்டு பசங்க. க்ளாஸுக்கே வர மாட்டாங்க. ஒரு பொண்ணு. அது எப்படியும் அசைண்மெண்ட் பண்ணிடும். அதனால நான் தான். என் பேச்சு சாமர்த்தியத்தால க்ளாஸையே காப்பாத்தணும். //

ஹா ஹா ஹா. இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் பாலாஜி.

மீதி பதில்களும், சுவாரஸ்யமும், உண்மையுமாக இருக்கு.

அனுஜன்யா

Sridhar Narayanan said...

//நல்ல வேள பாலாஜியாகிட்டேன்.//

ஆம்பிளையா பிறந்ததுல அவ்வளவு சந்தோஷமா? (போட்டுக் கொடுத்திட்டோம்ல)

பாலாஜி சாதிக்கலையா? பல வெற்றிப் படங்கள் தயாரிச்சவருங்க. சிவாஜி, ரஜினி, கமல் எல்லாம் பெரிய ஹிட் கொடுத்த படங்கள்ல தயாரிச்சவர்ங்கிற பெருமை எப்போதும் உண்டு அவருக்கு.

நல்ல விலாவாரியா, சின்சியரா பதில் சொல்லியிருக்கீங்க. பின்னாளில் நாங்க காசு கொடுத்து வாங்கி படிக்கு போகும் பேட்டியில் மாற்றி சொல்லாமல் இருக்கவும் :))

Karthik said...

சூப்பர்ப்பா இருந்துச்சு. :)

Shafi Blogs Here said...

//பெண்ணா பிறந்திருந்தா பாலானு வைக்கலாம்னு திட்டமாம். நல்ல வேள பாலாஜியாகிட்டேன்.//

வெட்டிப்பயல்னு அழைக்கிறதுல ஒரு ஆனந்தம்...வெட்டிப்பொன்னு சொல்லும்போது வரலீங்க...

மங்களூர் சிவா said...

வெரி நைஸ் பாலாஜி!

ILA said...

//ராஜ ராஜ சோழன் மாதிரி. இல்லை விவேகானந்தர் மாதிரி. அதாவது ஒண்ணு அரசனா, இல்லை ஆண்டியா. எப்படி இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யணும்//
அதிகமா சினிமா பார்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே

Divyapriya said...

//கண்ணாடி அணிபவரா?
இல்லை. ஆனா கண்ணாடி போட்டா ஒரு புத்திசாலி லுக் கிடைக்கும்னு நம்பிக்கை.//

எனக்கும் அதே :))

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
\\ராஜ ராஜ சோழன் மாதிரி. இல்லை விவேகானந்தர் மாதிரி. அதாவது ஒண்ணு அரசனா, இல்லை ஆண்டியா. எப்படி இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யணும்\\

இதுதான் வெட்டிபயல் டச்சா?//

ஆஹா.. நமக்கெல்லாம் கூட டச் இருக்கா? :))

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
//பிடித்த மதிய உணவு?
கிள்ளிப் போட்ட சாம்பாரும் உருளைக் கிழங்கு வறுவலும். அதே மாதிரி முருங்கைக் கீரை சாம்பார் வாழைக்காய்\சேப்பங்கிழங்கு வறுவல்.//


பாஸ் ஸேம் ஃபீலிங்க் :)

எனக்கு வாழைக்காய் வறுவல் சூப்பரூ!//

சூப்பர் ஆயில்ஸ் :)

வெட்டிப்பயல் said...

// ஆயில்யன் said...
//கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
ரெண்டுமே பிடிக்கும். அருவினா கூட்டமா இருக்கும். கடல்னா பெருசா இருக்கும், அதனால நெரிசல் இல்லாம குளிக்கலாம்.///

டிபரெண்ட்! அதே நேரத்துல நிதர்சனம்

டேய் வாடா நாம அங்கால போய் குளிக்கலாம்ன்னு கிட்டதட்ட ஒரு 500 மீ வாக் போயி கூட குதிக்கலாம் - குளிக்கலாம் கடல்ல :)))//

ஆமாம் ஆயில்ஸ் :)

நான் குற்றாலும்ல குளிச்சிருக்கேன். ஒரே நெரிசல்.

அதே கடல்னா எந்த கூட்டம் இருந்தாலும் நமக்கு கவலை இல்லை :)

வெட்டிப்பயல் said...

// ஆயில்யன் said...
//கப்பிப்பய - எந்த பதிவு எழுதினாலும் கப்பி அளவுக்கு சுவாரஸியமாக எழுத முடியாது //

எங்கிருந்தாலும் உடன் பிளாக்கர் மேடைக்கு வரவும்!


(ரீ- எண்டீரி போட என்னாமா கூச்சப்படுறாரு ஆளு எங்க இருக்காருன்னே கண்டுபுடிக்க முடியல!)//

என்ன ஆனானே தெரியல. மெயிலும் காணோம். ஃபோன் பண்ணி தான் பிடிக்கணும் :)

வெட்டிப்பயல் said...

//ஆ! இதழ்கள் said...
அட்டெண்டன்ஸ்ல முன்னாடி வந்துடும்//

same blood...//

நம்ம எல்லாம் ஒரு வழிகாட்டியா இருந்திருக்கோம் :)

//
எங்க குடும்பத்துல நான் ஒரு ரோல் மாடல் தான்//

Congrats...

அனைத்து பதில்களும் ரசிக்க வைத்தது.//

மிக்க நன்றி ஆனந்த :)

வெட்டிப்பயல் said...

//அனுஜன்யா said...
Me the first? Wow!//

இல்ல யூத்.. ஜஸ்ட் மிஸ் :)

வெட்டிப்பயல் said...

//அனுஜன்யா said...
//காலேஜ்ல அசைண்மெண்ட் முடிக்கலனா என்ன பனிஷ்மெண்ட்னு என்னை வெச்சி தான் க்ளாஸே தெரிஞ்சிக்கும். எனக்கு முன்னாடி மூணு பேரு. அதுல ரெண்டு பசங்க. க்ளாஸுக்கே வர மாட்டாங்க. ஒரு பொண்ணு. அது எப்படியும் அசைண்மெண்ட் பண்ணிடும். அதனால நான் தான். என் பேச்சு சாமர்த்தியத்தால க்ளாஸையே காப்பாத்தணும். //

ஹா ஹா ஹா. இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் பாலாஜி.
//
நீங்க சிரிக்கறீங்க... அப்ப நான் பட்ட கஷ்டம் :)

இருந்தாலும் நான் அசைன்மெண்ட் எழுதாம தான் போவேன். ரெண்டு தடவை வார்னிங் கொடுத்த பிறகு தான் அதை எழுதுவோம் :)

//மீதி பதில்களும், சுவாரஸ்யமும், உண்மையுமாக இருக்கு.

அனுஜன்யா//

உண்மையா இருக்கறதால சுவாரஸ்யமா இருக்குனு நினைக்கிறேன் :)

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...
//நல்ல வேள பாலாஜியாகிட்டேன்.//

ஆம்பிளையா பிறந்ததுல அவ்வளவு சந்தோஷமா? (போட்டுக் கொடுத்திட்டோம்ல)
//
அப்படி இல்ல தல. பொண்ணா பொறந்து பாலானு பேர் வெச்சா கடுப்பாகிருக்கும். பொண்ணுங்களுக்கு அழகா வைக்கறதுக்கு எவ்வளவு பேர் இருக்கு :)

//
பாலாஜி சாதிக்கலையா? பல வெற்றிப் படங்கள் தயாரிச்சவருங்க. சிவாஜி, ரஜினி, கமல் எல்லாம் பெரிய ஹிட் கொடுத்த படங்கள்ல தயாரிச்சவர்ங்கிற பெருமை எப்போதும் உண்டு அவருக்கு.
//
ரீமேக் படமெல்லாம் லிஸ்ட்ல வராது தல :)

அதுவுமில்லாமல் அவர் நடிச்ச படத்துல எல்லாம் பெருசா ஜொலிக்கல

//
நல்ல விலாவாரியா, சின்சியரா பதில் சொல்லியிருக்கீங்க. பின்னாளில் நாங்க காசு கொடுத்து வாங்கி படிக்கு போகும் பேட்டியில் மாற்றி சொல்லாமல் இருக்கவும் :))//

அதுல நிச்சயம் மாற்றி சொல்ல மாட்டேன். my experiments with False அப்படினு எழுதலாமானு ஒரு யோசனை. இல்லைனா Discovery of Tamilnadu :)

வெட்டிப்பயல் said...

//Karthik said...
சூப்பர்ப்பா இருந்துச்சு. :)//

மிக்க நன்றி கார்த்திக் :)

வெட்டிப்பயல் said...

// Shafi Blogs Here said...
//பெண்ணா பிறந்திருந்தா பாலானு வைக்கலாம்னு திட்டமாம். நல்ல வேள பாலாஜியாகிட்டேன்.//

வெட்டிப்பயல்னு அழைக்கிறதுல ஒரு ஆனந்தம்...வெட்டிப்பொன்னு சொல்லும்போது வரலீங்க...//

ஹி ஹி ஹி...

நன்றி ஷாஃபி :)

வெட்டிப்பயல் said...

//
மங்களூர் சிவா said...
வெரி நைஸ் பாலாஜி!

//

நன்றி சிவாண்ணே!!!

வெட்டிப்பயல் said...

// ILA said...
//ராஜ ராஜ சோழன் மாதிரி. இல்லை விவேகானந்தர் மாதிரி. அதாவது ஒண்ணு அரசனா, இல்லை ஆண்டியா. எப்படி இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யணும்//
அதிகமா சினிமா பார்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே

//

நான் என்ன பண்ண? என் ஜாதக அம்சம் அப்படி தான் இருக்காம். அரசியல்ல களம் இறங்கினா மினிமம் மினிஸ்டர் ஆகலாமாம் :))

இதை சொன்ன ஜோசியரை நான் கண்டுபிடிக்கணும் :)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
//கண்ணாடி அணிபவரா?
இல்லை. ஆனா கண்ணாடி போட்டா ஒரு புத்திசாலி லுக் கிடைக்கும்னு நம்பிக்கை.//

எனக்கும் அதே :))//

சேம் பின்ச் :)

♫சோம்பேறி♫ said...

/* மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
இப்பவே அவுங்க பக்கத்துல இல்லை. */

இப்படி பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி? பக்கத்தில ஒரு :-) அல்லது :-( போட்டா தானே உங்க நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு புரியும்..

குமரன் (Kumaran) said...

கிள்ளிப் போட்ட சாம்பார்ன்னா என்ன பாலாஜி?

வெட்டிப்பயல் said...

//♫சோம்பேறி♫ said...
/* மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
இப்பவே அவுங்க பக்கத்துல இல்லை. */

இப்படி பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி? பக்கத்தில ஒரு :-) அல்லது :-( போட்டா தானே உங்க நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு புரியும்..//

ரொம்ப தெளிவா இருக்கீங்க :)

வெட்டிப்பயல் said...

// குமரன் (Kumaran) said...
கிள்ளிப் போட்ட சாம்பார்ன்னா என்ன பாலாஜி?
//

செந்தழல் ரவி இதைப் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தாரு. தேடிப் பார்த்தேன் கிடைக்கல :(

காய் வாங்க வசதி இல்லாதவங்க வெறும் காய்ஞ்ச மிளகாய் (வற மிளகாய்?) போட்டு வைக்கிற சாம்பார் தான் கிள்ளிப் போட்ட சாம்பார்னு சொல்லுவாங்க :)

rapp said...

//கிள்ளிப் போட்ட சாம்பாரும் //

கிள்ளிப் போட்ட சாம்பாருன்னா என்னது?

//பாலானு//

மதுபாலான்னு வெச்சிருப்பாங்க, வெறுமனே பாலான்னா வேச்சிருக்கப் போறாங்க?:):):)

//காலேஜ்ல அசைண்மெண்ட் முடிக்கலனா என்ன பனிஷ்மெண்ட்னு என்னை வெச்சி தான் க்ளாஸே தெரிஞ்சிக்கும்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... சேம் பிளட்:):):)

//
பாலாஜினு பேர் வெச்ச நடிகரும் நல்லவரா இருந்தாலும், பெருசா சாதிக்கல//

நடிப்புல மட்டும்தான சாதிக்கல, திரைத்துறையில் கலக்குனாரில்ல:):):)

//கையெழுத்து நல்லா இல்லைனா தலை எழுத்து நல்லா இருக்கும்//

ஹே அது:):):) இதை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):) வாழ்க்கையில படிக்கிற காலம் முச்சூடும் இவங்களால பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா:):):)

rapp said...

oops கமெண்ட்ஸ் படிக்கும் முன்னரே, என் கமெண்டை போட்டுட்டேன். அதால், கிள்ளிப் போட்ட சாம்பார் கேள்வி வாபஸ்.

rapp said...

//நான் குற்றாலும்ல குளிச்சிருக்கேன். ஒரே நெரிசல்//

பொள்ளாச்சி ரூட்னு நினைக்கிறேன். மங்கி பால்ஸ், திருமூர்த்தி பால்ஸ் இங்கெல்லாம் போய் பாருங்க. காலை நேரங்களில் போனா மிதமான கூட்டம்தான் இருக்கும். அதோட, நம் தென்மாநிலங்களோட பெரிய சொத்து இந்த அருவிகள். மத்த இடங்களில் ஒன்னு உபயோகத்தில் இல்லாதமாதிரி இருக்கும். இல்லைன்னா குளிக்கவே முடியாதமாதிரி பயங்கர ஜில்லுன்னு இருக்கும். அருவிகள் நான் ரொம்ப மிஸ் பண்ற ஒரு விஷயம்:(:(:(

வெட்டிப்பயல் said...

// rapp said...
//கிள்ளிப் போட்ட சாம்பாரும் //

கிள்ளிப் போட்ட சாம்பாருன்னா என்னது?

//பாலானு//

மதுபாலான்னு வெச்சிருப்பாங்க, வெறுமனே பாலான்னா வேச்சிருக்கப் போறாங்க?:):):)
//
பாலானு வைக்கறதா இருந்ததா சொன்னாங்க :)

மதுபாலா நல்ல பேரு :)

////காலேஜ்ல அசைண்மெண்ட் முடிக்கலனா என்ன பனிஷ்மெண்ட்னு என்னை வெச்சி தான் க்ளாஸே தெரிஞ்சிக்கும்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... சேம் பிளட்:):):)
//

:-))

//
//
பாலாஜினு பேர் வெச்ச நடிகரும் நல்லவரா இருந்தாலும், பெருசா சாதிக்கல//

நடிப்புல மட்டும்தான சாதிக்கல, திரைத்துறையில் கலக்குனாரில்ல:):):)
//
அது இங்க முரளி கண்ணன், உ.த மாதிரி பெரிய தலைங்க சொல்லும் போது தானே தெரிந்தது. அது வரைக்கும் தெரியாது :)

//
//கையெழுத்து நல்லா இல்லைனா தலை எழுத்து நல்லா இருக்கும்//

ஹே அது:):):) இதை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):) வாழ்க்கையில படிக்கிற காலம் முச்சூடும் இவங்களால பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா:):):)

//

கைழெழுத்து ட்ரைனிங் எல்லாம் அனுப்பனாங்க. அங்கயும் சரி பண்ண முடியல :)

வெட்டிப்பயல் said...

// rapp said...
//நான் குற்றாலும்ல குளிச்சிருக்கேன். ஒரே நெரிசல்//

பொள்ளாச்சி ரூட்னு நினைக்கிறேன். மங்கி பால்ஸ், திருமூர்த்தி பால்ஸ் இங்கெல்லாம் போய் பாருங்க. காலை நேரங்களில் போனா மிதமான கூட்டம்தான் இருக்கும். அதோட, நம் தென்மாநிலங்களோட பெரிய சொத்து இந்த அருவிகள். மத்த இடங்களில் ஒன்னு உபயோகத்தில் இல்லாதமாதிரி இருக்கும். இல்லைன்னா குளிக்கவே முடியாதமாதிரி பயங்கர ஜில்லுன்னு இருக்கும். அருவிகள் நான் ரொம்ப மிஸ் பண்ற ஒரு விஷயம்:(:(:(

//

மங்கி ஃபால்ஸ், திருப்பரப்பு ஃபால்ஸ் ரெண்டும் போயிருக்கேன். ரெண்டுமே பிடித்திருந்தது :)

கோவைல தானெ செட்டில் ஆகப்போறேன். அடிக்கடி போகலாம் :)

பினாத்தல் சுரேஷ் said...

அழைப்பிற்கு நன்றி வெ ப. விரைவில் போடுகிறேன் :-)

அப்பால, காசு செலவில்லாம இதைப் படிக்கத் தந்ததுக்கு நன்னி.

CVR said...

// It was like a prison. After 1 year, I started loving it. May be I got used to it.////


These walls are funny. First you hate 'em, then you get used to 'em. Enough time passes, you get so you depend on them. That's institutionalized.
---Shawshank Redemption.

:)

Prakash said...

நல்லாருக்கு.

//அப்பறம் சினிமாலயும் பாலாஜினு எந்த ஹீரோக்கும் பேர் இருக்காது. வில்லனுக்கு கூட இருக்காது. //

மூன்று முடிச்சு ல, கமல்ஹாசன் பேர் பாலாஜி :)

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு.
முருங்கைக் கீரை சாம்பார் வாழைக்காய்\சேப்பங்கிழங்கு வறுவல்.//

இது சூப்பர் கோம்போ, முருங்கை கீரை சாம்பார எங்க வீட்ல கழனிச்சாறுன்னு சொல்வாங்க.