தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, May 03, 2009

சரத்பாபு - அந்தர் பல்டி அடித்த வெட்டி???

இது சரத்பாபு கவிதா அக்கா பேட்டியில் கொடுத்திருந்தது

கவிதா: இதுவரை மக்களுக்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது செய்ததுண்டா?

நிறைய உண்டு இந்தியா முழுக்கவும் இது என்னுடைய மொத்த நேரத்தில் 400 நாட்கள் ஏழைக்குழந்தைகளுடன் செலவிட்டு இருக்கிறேன். அவர்களுக்கு கல்வி மற்றும் உழைப்பை பற்றிய விழிப்புணர்வு, விளக்கங்கள், ஊக்கங்கள் (Awareness) கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். 850 நாட்கள் இளைஞர்கள் தொழில் தொடங்க தேவையான அறிவுரை, தொழில் சார்ந்த அறிவு, மனதளவில் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து இதுவரை 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் என்னால் தொழில் அதிபர்களாக ஆகியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். 3000 மேற்பட்ட மாணவ மாணவியருக்கு அவர்களின் career பற்றிய விழுப்புணர்வையும், ஊக்கத்தையும், ஆதரவையும் தந்திருக்கிறேன்.


இது சமுதாயத்தை நேசிப்பவர்களாலும், அக்கறை கொண்டவர்களாலும் தான் செய்ய முடியும். நான் என்னுடைய போன பதிவில் சொல்லியதையே இங்கேயும் சொல்கிறேன். வெறும் படித்திருக்கிறார், இளைஞர், கஷ்டமான நிலையிலிருந்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார், MNCயில் சேராமல் சொந்த காலில் நிற்கிறார் என்ற காரணங்களை வைத்து அவரை ஆதரிக்க என்னால் முடியவில்லை. பல நல்ல திட்டங்கள் புத்திசாலிகளை விட மக்களை அதிகமா நேசிப்பவர்களால் தான் கொண்டு வர முடிந்தது. இவர் சமுதாயத்தை நேசிக்கிறார், அதன் வளர்ச்சியில் அக்கரை கொண்டுள்ளார் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

கவிதா:- மகளிர் மேம்பாட்டுக்கென அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கு துவக்கப்படும். வீட்டில் உள்ள பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் நல்ல வாய்ப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்துவேன். இந்தத் திட்டத்தில் நான் நேரடியாகவே ஈடுபடுவேன். - எப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், இதற்கான உங்களின் திட்டத்தின் தொகுப்பு ஏதாவது இருந்தால் விளக்கமுடியுமா?

கவிதா, முதலில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பிரித்து, படிக்காத முன்னரே சிறுதொழில் செய்துவரும், அதாவது சின்ன சின்ன தொழில் பூ கட்டுதல், காய்கறி வியாபாரம், போன்றவற்றின் கொள்முதலை ஒவ்வொரு ஏரியாவிலும் மையப்படுத்துவேன். ஒரு பூ கட்டும் பெண் செலவு செய்து கோயம்பேடு சென்று வாங்கிவரும் செலவை குறைப்பேன். 50 பேருக்கு ஒருவர் சென்று வாங்கிவந்தால் போதுமே. எவ்வளவு பணம் மிச்சமாகும். இது போல் ஒவ்வொரு சிறுதொழிலிலும் எளிதான முறைகளை செயற்படுத்த தேவையான அறிவுரையை வழங்குவேன். படித்தவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றது போன்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன். அதற்கான முழு திட்டத்தையும் இன்னும் முடிக்கவில்லை.

நான் அவரிடம் எதிர்பார்த்ததும் இதை தான். அவர் கற்ற கல்வி, அவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் இந்த சமூகத்திற்கு அவர் பயன்படுத்த முதலில் அவருக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும். அது இருக்கிற பட்சத்தில் அவரை ஆதரிப்பது நமது கடமை.

அடுத்து வலையுலகில் அவரை ஆதரிப்பவர்களுக்கு... எலக்‌ஷன்ல ஒருத்தர் நின்னா அவர் பப்ளிக் ஃபிகர். சினிமா நடிகர்களை எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்களோ அதே அளவுக்கு சரத் பாபுவையோ எலக்‌ஷனில் நிற்பவர் எவரை வேண்டுமானாலும் விமர்சிக்க முடியும். இசையை விமர்சிக்கும் சுப்புடுவிடம், எங்க நீ பாடி காட்டுனு சொல்றதும், திரைப் பார்வை மதன் கிட்ட எங்க நீ விஜய் மாதிரி நடிச்சி காட்டு, இல்லை அஜித் மாதிரி பேசிக்காட்டுனு சொல்றது எப்படி காமெடியோ, அதே மாதிரி தான் நீங்க போடற பல பின்னூட்டங்களும் இருக்கிறது. இங்க திரைவிமர்சனம் எழுதற யாராலும் குசேலன் மாதிரி குப்பைப் படத்தை கூட டைரக்ட் பண்ண முடியாது (ரீமேக்காக இருந்தாலும்) என்பது தான் நிதர்சனம்.

நமக்கு பிடிச்சிருக்கு ஆதரிக்கறோம், மத்தவங்களுக்கு விருப்பம் இல்லை அவுங்க ஆதரிக்கலை. அவ்வளவு தான். We should learn to "Agree to Disagree". கருத்து மோதல்களை தனி நபர் தாக்குதல் ஆக்காதீர்கள்.

இவர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதியில் எனக்கு மிகவும் பிடித்தது, ஒரு நாளைக்கு அறுபது மரக்கன்றுகள் என்ற விகிதத்தில் ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு லட்சத்தி எட்டாயிரம் மரக் கன்றுகளை நட்டு பராமரிப்பது. இது மட்டும் நிறைவேறினால்...... நினைக்கவே ஆனந்தமாக இருக்கிறது.

வலைப்பதிவை படிக்கறவங்க சொல்லி பத்து ஓட்டுக்கூட தேத்த முடியாதுனு பெரியவங்க சொல்லியிருக்காங்க.  சில நண்பர்கள் வீடு அந்த ஏரியால இருக்கு. மாமியார் வீடு அங்க தான் இருக்கு. அதை வைத்து ஒரு பத்து ஓட்டு கேன்வாஸ் பண்ணப் போறேன். அங்கயும் நம்ம எடுத்து தான் சொல்ல முடியுமே தவிர நிச்சயம் நீங்க அவருக்கு ஓட்டு போடணும்னு யாரையும் மிரட்ட முடியாது. ஏதோ என்னால் முடிந்தது. உங்களாலும் இதைப் போல் முடியும் பட்சத்தில் தெரிந்தவர்களிடம் சிலேட்டு சின்னத்தில் வாக்களிக்க சொல்லவும்.

24 comments:

கவிதா | Kavitha said...

:))))))))) Chooooooo ChuweeeeT..... !!!!

சிங். செயகுமார். said...

gd effort.

வெட்டிப்பயல் said...

//கவிதா | Kavitha said...
:))))))))) Chooooooo ChuweeeeT..... !!!!//

நான் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். உங்களோட கேள்விகள் நேர்மையும், அவரோட பதில்களிலிருந்த நேர்மையும் எனக்கு பிடித்திருந்தது.

வெட்டிப்பயல் said...

//சிங். செயகுமார். said...
gd effort.//

நன்றி நண்பரே!!!

கார்த்தி said...

Aama Vetti, Naanum mothalla Suresh potruntha interview paatha pothu perusa impress aahala... Aana Kavitha (Akka) potrukka pathivu romba theliva irukku...

Athey maathiri slate sinnam koda konjam poruhtama irukku... Slate'la thaaney ellarum ezutha padikka "aarambikirom"....

Me also anthar balti after the interview'ya....

Kanna said...

//நமக்கு பிடிச்சிருக்கு ஆதரிக்கறோம், மத்தவங்களுக்கு விருப்பம் இல்லை அவுங்க ஆதரிக்கலை. அவ்வளவு தான். We should learn to "Agree to Disagree". கருத்து மோதல்களை தனி நபர் தாக்குதல் ஆக்காதீர்கள் //

agreed. my openion is exactly same.

good post.. keep it up..


if any of my comment or post hurted you, extreemly sorry for that.

that is not my intension. sorry..

கவிதா | Kavitha said...

Aama Vetti, Naanum mothalla Suresh potruntha interview paatha pothu perusa impress aahala... Aana Kavitha (Akka) potrukka pathivu romba theliva irukku...

Athey maathiri slate sinnam koda konjam poruhtama irukku... Slate'la thaaney ellarum ezutha padikka "aarambikirom"....

Me also anthar balti after the interview'ya....//

:))) கார்த்தி நன்றி...

ம்ம்.. இதை எல்லாம் மக்கா நீங்க செய்ய வேண்டியது.. :)))) (அவரை கேள்வி கேட்டு நோண்டி பதிவு போடவேண்டியது)

ஆனாலும் உங்களுக்காகவே செய்தது... அதனால் கிரெடிட் உங்களுக்குத்தான்.. நீங்க எல்லாம் கேள்விக்கேட்டு சரத்'க்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்க்காட்டி அவரை கேள்வி கேட்கனும்னு நானும் நினைத்து இருக்க மாட்டேன் இல்லையா?

சோ எல்லாமே நன்மைக்கே.. !! :)))))))

சரத் வெற்றி பெற முடிந்த உதவிகளை செய்யலாம்..

//உங்களோட கேள்விகள் நேர்மையும், அவரோட பதில்களிலிருந்த நேர்மையும் எனக்கு பிடித்திருந்தது.//

:))
நேர்மை = கவி ' ன்னு உங்களுக்கு தெரியாதா? :)))

SUBBU said...

//அந்தர் பல்டி அடித்த வெட்டி??? //

:))))))))))))

லக்கிலுக் said...

நல்ல காமெடி. நன்றி :-)

நான் ஆதவன் said...

சரியான தலைப்பு வெட்டி :))

r.selvakkumar said...

வலைஞர்கள் வழியா அவருக்கு ஏற்கனவே ஒரு 100 ஓட்டு ரெடின்னுதான் நான் நினைக்கறேன்.

வெட்டிப்பயல் said...

// கார்த்தி said...
Aama Vetti, Naanum mothalla Suresh potruntha interview paatha pothu perusa impress aahala... Aana Kavitha (Akka) potrukka pathivu romba theliva irukku...

Athey maathiri slate sinnam koda konjam poruhtama irukku... Slate'la thaaney ellarum ezutha padikka "aarambikirom"....

Me also anthar balti after the interview'ya....//

கார்த்தி,
சுரேஷ் நம்மல கேள்வி கேட்க சொல்லியிருந்தார். நாம தான் அவருக்கு அதை அனுப்பல. அவருக்கு வந்த கேள்விகளை கேட்டார்.

ஆனா கவி அக்கா மத்தவங்க மனசுல இருந்து, கேட்க தயங்கிய கேள்விகளை For Ex : நீங்கள் அரசியலுக்கு வர நினைப்பது, 1. உங்கள் வியாபாரத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ளவும், 2. தேர்தல் நிதி என்று இது வரையில் நீங்கள் சம்பாதிருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் வெளுப்பாக்கிக் கொள்ளவும். - உங்களின் விளக்கம்?!

இந்த மாதிரி கேள்விகளை கேட்டார். நிறைய பேரை கேள்வி கேட்டு பழக்கமில்லையா? அதான் :-)

வெட்டிப்பயல் said...

////உங்களோட கேள்விகள் நேர்மையும், அவரோட பதில்களிலிருந்த நேர்மையும் எனக்கு பிடித்திருந்தது.//

:))
நேர்மை = கவி ' ன்னு உங்களுக்கு தெரியாதா? :)))//

ஹமாம் பேரை மாத்திடுவோமா? :-)

வெட்டிப்பயல் said...

// SUBBU said...
//அந்தர் பல்டி அடித்த வெட்டி??? //

:))))))))))))//

இப்பவெல்லாம் தலைப்பு முன்ன மாதிரி கொடுக்காம ரொம்ப அடக்கி வாசிக்கறனு ஒரு பழம்பெரும் பதிவர் சொன்னாரு. அதான் :-)

வெட்டிப்பயல் said...

//லக்கிலுக் said...
நல்ல காமெடி. நன்றி :-)//

அரசியல்னாவே காமெடிதானே லக்கி. என்ன உங்களை மாதிரியோ தொல்ஸ் அண்ணா மாதிரியோ தொடர்ந்து காமெடி எழுத வரல :-)

நன்றிக்கு நன்றி ;)

வெட்டிப்பயல் said...

//
நான் ஆதவன் said...
சரியான தலைப்பு வெட்டி :))//

ஹி ஹி ஹி

வெட்டிப்பயல் said...

//r.selvakkumar said...
வலைஞர்கள் வழியா அவருக்கு ஏற்கனவே ஒரு 100 ஓட்டு ரெடின்னுதான் நான் நினைக்கறேன்.//

நல்லது நடந்தா சரி :-)

Suresh said...

வாழ்த்துகள் உங்க இந்த மனது என்க்கு ரொம்ப பிடித்து இருக்கு ;)

Suresh said...

//நமக்கு பிடிச்சிருக்கு ஆதரிக்கறோம், மத்தவங்களுக்கு விருப்பம் இல்லை அவுங்க ஆதரிக்கலை. அவ்வளவு தான். We should learn to "Agree to Disagree". கருத்து மோதல்களை தனி நபர் தாக்குதல் ஆக்காதீர்கள் //

நம்ம கருத்தும் அது தான்

Suresh said...

//Aama Vetti, Naanum mothalla Suresh potruntha interview paatha pothu perusa impress aahala... Aana Kavitha (Akka) potrukka pathivu romba theliva irukku...//

ஆம் கார்த்தி அதை நானே கவிதாவிடவும், சரத் இடமும் சொன்னேன் கவிதா பேட்டி என்னை விட 100 மட்ங்கு சூப்பர், ஒரு வேளை அவரை எனக்கு ரொம்ப பிடித்து போனதா கூட இருக்கலாம் ;) இல்லை என்றால் எனக்கு வந்த கேள்விகள் அனைத்தும் கேட்டேன்....

அவரது மண்ம் இப்படி நிக்குறதே பெரிய விஷியம் என்று நினைத்தேன் அதனால் ரொம்ப கேள்விகளில் ஏன் இப்படி ஏன் அப்படி என்று கேட்கவில்லை

ஆனா கவிதா அவர்களது பேட்டி பார்த்து சும்மா நச் கேள்விகள் என்று ரொம்ப ரசித்தேன், காரணம் இது இன்னும் நிறைய பேரை தெளிவு படுத்தும்

Suresh said...

//:))
நேர்மை = கவி ' ன்னு உங்களுக்கு தெரியாதா? :)))//

ஹமாம் பேரை மாத்திடுவோமா? :-)//

சூப்பர் ரசித்தேன் சிரித்தேன்

Suresh said...

//சுரேஷ் நம்மல கேள்வி கேட்க சொல்லியிருந்தார். நாம தான் அவருக்கு அதை அனுப்பல. அவருக்கு வந்த கேள்விகளை கேட்டார்.

ஆனா கவி அக்கா மத்தவங்க மனசுல இருந்து, கேட்க தயங்கிய கேள்விகளை For Ex : நீங்கள் அரசியலுக்கு வர நினைப்பது, 1. உங்கள் வியாபாரத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ளவும், 2. தேர்தல் நிதி என்று இது வரையில் நீங்கள் சம்பாதிருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் வெளுப்பாக்கிக் கொள்ளவும். - உங்களின் விளக்கம்?!

இந்த மாதிரி கேள்விகளை கேட்டார். நிறைய பேரை கேள்வி கேட்டு பழக்கமில்லையா? அதான் :-)//

அவரது கேள்விகள் ஒன்னு ஒன்னும் சும்மா அனைத்து மக்களின் மனதில் இருக்கும் கேள்விகள் சும்மா பட்டாசு மாதிரி நல்ல கேள்விகள், பதிலும் அதற்க்கு நல்ல நேர்மையான பதில்கள்

அவரது தமிழ் தேர்தல் அறிக்கை பத்திரிக்கையில் வரும் அதை பற்றி தமிழ் நாடே பேசும்

தீப்பெட்டி said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க....
உங்கள் புரிதல் வரவேற்கத்தக்கது.

///அடுத்து வலையுலகில் அவரை ஆதரிப்பவர்களுக்கு... எலக்‌ஷன்ல ஒருத்தர் நின்னா அவர் பப்ளிக் ஃபிகர். சினிமா நடிகர்களை எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்களோ அதே அளவுக்கு சரத் பாபுவையோ எலக்‌ஷனில் நிற்பவர் எவரை வேண்டுமானாலும் விமர்சிக்க முடியும். இசையை விமர்சிக்கும் சுப்புடுவிடம், எங்க நீ பாடி காட்டுனு சொல்றதும், திரைப் பார்வை மதன் கிட்ட எங்க நீ விஜய் மாதிரி நடிச்சி காட்டு, இல்லை அஜித் மாதிரி பேசிக்காட்டுனு சொல்றது எப்படி காமெடியோ, அதே மாதிரி தான் நீங்க போடற பல பின்னூட்டங்களும் இருக்கிறது. இங்க திரைவிமர்சனம் எழுதற யாராலும் குசேலன் மாதிரி குப்பைப் படத்தை கூட டைரக்ட் பண்ண முடியாது (ரீமேக்காக இருந்தாலும்) என்பது தான் நிதர்சனம்.///

இந்த வரிகள் சத்தியமான வாக்கியம்..

Divyapriya said...

good effort naa...