தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, May 26, 2009

The Da Vinci Code - நினைவுகள்!

குசும்பனோட போட்டோ பதிவுல இருந்த டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் நாவல் பார்த்ததும் எனக்கு டான் ப்ரௌன் நாவல்கள் பற்றிய நினைவுகள் வந்தது. அதைப் பத்தி எழுத தான் இந்தப் பதிவு.

பெரும்பாலோனோர்க்கு டான் ப்ரௌன் அறிமுகமானது அவருடைய தி டா வின்சி கோட் நாவலில் தான். எனக்கும் அப்படி தான். அந்த நாவலை மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் படிக்க ஆரம்பித்தேன். இரவு சாப்பிட செல்லவில்லை. நண்பர்கள் எவ்வளவு கூப்பிட்டும் அதை வைக்க மனம் இல்லாமல் படித்து கொண்டிருந்தேன். முடிக்கும் போது விடிகாலை நான்கு மணி.

அதற்கு பிறகு ஒரு வாரம் கழித்து அவர் எழுதிய மீதி மூன்று புத்தகங்களும் வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அடுத்து படித்தது ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ். எனக்கு அது தி டா வின்சி கோடை விட மிகவும் பிடித்திருந்தது. அடுத்து டிசப்ஷன் பாயிண்ட். பாதிக் கதையிலே சஸ்பென்சை கண்டுபிடித்து விட்டேன். டிஜிட்டல் ஃபோர்ட்ரஸும் சுமார் ரகம் தான்.


தி டாவின்சி கோட் படித்து முடித்துவிட்டு ஒரு வாரம் (மாதம்னு கூட சொல்லலாம்) எல்லார்கிட்டயும் அதைப் பத்தி தான் பேச்சு. அதுவும் நண்பர்களிடமெல்லாம் செம்ம பில்ட் அப்.

"மச்சி, உனக்கு கொல்டன் நம்பர் தெரியுமா?"

"அது என்னடா?"

"அது தெரியாம எப்படி தான் இத்தனை நாள் இருக்கீங்களோ?"

"சரி இப்ப சொல்றதுனா சொல்லு. இல்லைனா ஃபிரியா விடு"

"இருங்கடா சொல்றேன். கவனமா கேளு.இந்த உலகம் முழுக்க ஒரு ஒழுங்குல தான் நடந்துட்டு இருக்கு. ஒரு எடுத்துக்காட்டுக்கு, நம்ம ஹைட்டை தலைல இருந்து முழுங்கை வரை இருக்கும் நீளத்தால வகுத்தா வர வேல்யூ, அதே மாதிரி நம்ம முழுங்கை வர இருக்குற நீளத்தை நம்ம தொப்புள் வரை இருக்குற நீளத்தால வர வேல்யூ எல்லாமே ஒரே நம்பர். அதை ஃபைனு (Phi) சொல்லுவாங்க. அது 1.618"

"நிஜமாவாடா சொல்ற?" 

"ஆமாம். அது மட்டுமில்லை. ஒவ்வொரு பூவிலும் ஒரு லேயர் இதழ்களை அதுக்கு அடுத்த லேயர்ல உள்ள இதய்களின் எண்ணிக்கைல வகுத்தாலும் அது தான் வரும். அதே மாதிரி ஒரு கிளைகள்ல உள்ள இலைகளை அதுல இருந்து வர இன்னோரு கிளைல வர இலைகளின் எண்ணிக்கைல வகுத்தாலும் இதே தான் வரும்"

"காத்துல விழுந்தா கூடவா?"

"டேய் சீரியசா பேசும் போது காமெடி பண்ணாதடா"

"சரி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"

"நான் நேத்து படிச்சேன் இல்லை அந்த புக்ல போட்டிருந்தது"

"தொர இங்கிலிஸ் புக் எல்லாம் படிச்சிட்டு என்ன என்னவோ பேசுது பாருடா"

"இப்படி படிச்சி ஜென்ரல் நாலேட்ஜை வளர்த்துக்கோங்கடா"

"சரி அப்பறம்"

"ஜீசஸ்க்கு கல்யாணமாகி குழந்தை இருக்கு. அதுவாது தெரியுமா?"

"டேய் பாலாஜி, இப்படி பேசி மத கலவரத்தை உருவாக்கிடாதடா. அப்பறம் நீ அடிக்கு பயந்து மதம் மாறி கண்வர்ட் ஆகிடுவ. நாங்க தாண்டா உதை வாங்கணும்"

"ம‌ச்சி. நீ எதுக்கும் ப‌ய‌ப்ப‌டாத‌. எல்லாத்துக்கும் சாட்சி இருக்கு. நான் அதைப் ப‌த்தி தான் இண்ட‌ர்நெட்ல‌ ஆராய்ச்சி ப‌ண்ணிட்டு இருக்கேன்"

"ஏன்டா வ‌ர‌ வ‌ர‌ கார்த்திக் மாதிரி பேச‌ ஆர‌ம்பிச்சிட்ட‌. அவ‌ர் தான் நான் உல‌க‌த்துல‌ ந‌ட‌க்க‌ற‌தை எல்லாம் இண்ட‌ர்நெட்ல‌ பார்த்துட்டு இருக்கேனு சொல்லிட்டு க‌ட்சி ஆர‌ம்பிச்சாரு. நீயும் இண்ட‌ர்நெட்ல‌ சாட்சி இருக்குனு க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கிடுவ‌ போலிருக்கே"

"டேய் இதுக்கு நான் ம‌ட்டும் சாட்சி இல்லைடா. "பிரியாரி ஆஃப் ச‌யான்ஸ்" தெரியுமா?"

"என்னது பிரியாணியா??? “

“பிரியாணி இல்லடா டாக்... Priory Of Sions. அவுங்க தான் ஜீசசோட வம்சாவழியினரைக் காப்பாத்திட்டு வராங்க. கலிலியோ, லியனார்டோ டாவின்சி எல்லாம் அதுல மெம்பர்ஸ். அவுங்க தான் ஜீசசோட பசங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு”

“நண்பா கலிலியோ, லியனார்டோ டாவின்சி எல்லாம் அவுங்களுக்கு பாதுகாப்பா இருப்பாங்க. ஆனா நமக்கு யாரும் பாதுகாப்பு இல்லை. இப்படி கண்ட கண்ட புக் எல்லாம் படிச்சி கெட்டு போயிடாதடா. இப்படி ஏதாவது வெளிய பேசிட்டிருந்தா பெரிய கலவரமே உருவாகிடும்டா”

”உங்களுக்கு எல்லாம் இப்ப தெரியாதுடா. ஒரு நாள் இந்த ஆராய்ச்சி வெற்றி பெரும் போது தெரிஞ்சிக்குவீங்கடா” அப்படினு ஒரு பில்ட் அப்பை கொடுத்து வெச்சிருந்தேன். அப்படியே அது ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் படிக்கும் போது மாறிடுச்சி.

தி டாவின்சி கோட் படம் வந்தவுடனே முதல் நாளே போய் பார்த்தேன். புத்தகம் படிக்கிறதுல இருந்த விறுவிறுப்பு படம் பாக்கும் போது சுத்தமா மிஸ்ஸிங். அந்த காரணத்துக்காகவே ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் பார்க்காம தவிர்த்திட்டேன். தலைவரோட அடுத்த நாவல் The Lost Symbol வர செப்டம்பர் 15 வெளிவரப் போகுது. அதுல நம்ம இலவசக்கொத்தனார் (Freemasonry) பற்றிய ரகசியங்கள் இருக்கும்னு பேசிக்கறாங்க... எப்படியும் பதிவுலகத்துல ஒரு பரபரப்பு இருக்கும்னு நினைக்கிறேன். 


பி.கு : எல்லாம் எழுதி முடிச்சிட்டு ஒரு தடவை கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்னு குசும்பன் ஃபோட்டோ பார்த்தா அதுல இருக்குற புக் டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் இல்லை. அதுக்காக இவ்வளவு பெரிய பதிவை போடாம இருக்க முடியுமா? ;)

28 comments:

பினாத்தல் சுரேஷ் said...

டா வின்ஸி கோட் படித்தவர்கள் அனைவரும் படித்தே ஆகவேண்டிய காவியங்கள் எட்டு பதிவுகளாக இங்கே இருக்கின்றன: http://penathal.blogspot.com/2006/06/1.html (2, 3 என்று மாற்றிப்படித்துக்கொள்ளவும்)

புருனோ Bruno said...

// எனக்கு அது தி டா வின்சி கோடை விட மிகவும் பிடித்திருந்தது. அடுத்து டிசப்ஷன் பாயிண்ட். பாதிக் கதையிலே சஸ்பென்சை கண்டுபிடித்து விட்டேன். டிஜிட்டல் ஃபோர்ட்ரஸும் சுமார் ரகம் தான்.//

என் கருத்தும் இது தான்

முரளிகண்ணன் said...

இந்த பை (1.618) மேட்டரை வைத்து
எங்கள் குரூப்பில் ஒரு பெரிய விவாதம் நடந்து, அது கைகலப்பு வரை
போனது.

இதற்க்காகவே இயங்கும் ஒரு வலைத்தளத்தை என்னேரமும் என் நண்பன் மேய்ந்து கொண்டேயிருப்பான்.

அவன் நிக் நேம் பை பாண்டியா.


:-)))

அது ஒரு கனாக் காலம் said...

நான் முதல்ல படிச்சது டிஷப்ஷன் பாயின்ட் ... மிகவும் பிடித்தது, மற்ற இரண்டும் நல்லாவே இருந்தது..ஆனால் டிஜிட்டல் ...இன்னும் படிக்க வில்லை. பினாத்தலாரின் கதையும் மிகவும் ரசித்தேன்

சென்ஷி said...

:-))

வெட்டி, நீ ஏஞ்ஜல்ஸ் & டெமோன்ஸ் பத்தி அடுத்த பதிவு கண்டிப்பா எழுதுறே!

சென்ஷி said...

//பினாத்தல் சுரேஷ் said...

டா வின்ஸி கோட் படித்தவர்கள் அனைவரும் படித்தே ஆகவேண்டிய காவியங்கள் எட்டு பதிவுகளாக இங்கே இருக்கின்றன: http://penathal.blogspot.com/2006/06/1.html (2, 3 என்று மாற்றிப்படித்துக்கொள்ளவும்)/

அல்லது உப்புமா சமைத்துக்கொள்ளவும் :))

Sridhar V said...

படம் பாக்கலைன்னு சொல்ல ஒரு பதிவா? இதெல்லாம் ஓவரு...:)

Deception Point மிக நல்ல கதைதான். ஆனா கொஞ்சம் தயார் பண்ணிகிட்டு படிக்கனும். துருவ பகுதிகளில் நடக்கும் ஆராய்ச்சிகள் பற்றி நிறைய தகவல்கள் இருக்கும்.

♫சோம்பேறி♫ said...

நீங்கள் digital fortressஸை மற்ற மூன்று நாவல்களுக்கு முன்பே படித்திருந்தால் சுமார் என்று தோன்றியிருக்காது என்று நினைக்கிறேன். மேலும் அவர் அதை எழுதிய காலத்தில் cryptography புது டெக்னாலஜி. நீங்கள் படிக்கும் போது அப்படி அல்ல என்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம்.

Deception point மட்டுமல்ல. அவரது மற்ற கதைகளின் முடிவும் ஊகிக்கக் கூடியவையே.. ஏனென்றால் ரமணிசந்திரன் போல Dan brownனின் அணைத்து கதைகளும் ஒரே மாதிரியானவையே! ஹீரோயினை சுற்றி வரும் கதை, கூடவே இருக்கும் வில்லன். இன்னும் பல.

பக்கத்துக்கு பக்கம் புது தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி 'அட' போட வைப்பதும், சுவாரசியம் குறையாமல் கதையை நகர்த்துவதும் தான் அவர் வெற்றி ரகசியம்.

சந்தேகமில்லாமல் Angels n demons அவருடைய மாஸ்டர் பீஸ்.

வெட்டிப்பயல் said...

//பினாத்தல் சுரேஷ் said...
டா வின்ஸி கோட் படித்தவர்கள் அனைவரும் படித்தே ஆகவேண்டிய காவியங்கள் எட்டு பதிவுகளாக இங்கே இருக்கின்றன: http://penathal.blogspot.com/2006/06/1.html (2, 3 என்று மாற்றிப்படித்துக்கொள்ளவும்)//

எங்க எங்கயோ லிங் போய் இன்னைக்கு சாயந்திரம் தான் உங்க இல்லறவியல் படிச்சேன் :)

நீங்க எழுதுன கால கட்டத்துல எனக்கு புரியலை... இப்ப நல்லா புரியுது :)

அடுத்து இதுவா???

படிச்சிட்டா போச்சி

வெட்டிப்பயல் said...

//புருனோ Bruno said...
// எனக்கு அது தி டா வின்சி கோடை விட மிகவும் பிடித்திருந்தது. அடுத்து டிசப்ஷன் பாயிண்ட். பாதிக் கதையிலே சஸ்பென்சை கண்டுபிடித்து விட்டேன். டிஜிட்டல் ஃபோர்ட்ரஸும் சுமார் ரகம் தான்.//

என் கருத்தும் இது தான்//

நன்றி டாக்டர் :)

வெட்டிப்பயல் said...

// முரளிகண்ணன் said...
இந்த பை (1.618) மேட்டரை வைத்து
எங்கள் குரூப்பில் ஒரு பெரிய விவாதம் நடந்து, அது கைகலப்பு வரை
போனது.

இதற்க்காகவே இயங்கும் ஒரு வலைத்தளத்தை என்னேரமும் என் நண்பன் மேய்ந்து கொண்டேயிருப்பான்.

அவன் நிக் நேம் பை பாண்டியா.


:-)))//

வாங்க தல...

நான் கொடுத்த லிங்ல இருக்கே.. அந்த தளமா?

நிக் நேம்... நோ கமெண்ட்ஸ் :)

வெட்டிப்பயல் said...

// அது ஒரு கனாக் காலம் said...
நான் முதல்ல படிச்சது டிஷப்ஷன் பாயின்ட் ... மிகவும் பிடித்தது, மற்ற இரண்டும் நல்லாவே இருந்தது..ஆனால் டிஜிட்டல் ...இன்னும் படிக்க வில்லை. பினாத்தலாரின் கதையும் மிகவும் ரசித்தேன்//

நான் முதல்ல ரெண்டு மாஸ்டர் பீசும் படிச்சதால அடுத்து பிடிக்காம போயிடுச்சி போல :)

வெட்டிப்பயல் said...

// சென்ஷி said...
:-))

வெட்டி, நீ ஏஞ்ஜல்ஸ் & டெமோன்ஸ் பத்தி அடுத்த பதிவு கண்டிப்பா எழுதுறே//

ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் தானே.. எழுதிடுவோம் :)

வெட்டிப்பயல் said...

//சென்ஷி said...
//பினாத்தல் சுரேஷ் said...

டா வின்ஸி கோட் படித்தவர்கள் அனைவரும் படித்தே ஆகவேண்டிய காவியங்கள் எட்டு பதிவுகளாக இங்கே இருக்கின்றன: http://penathal.blogspot.com/2006/06/1.html (2, 3 என்று மாற்றிப்படித்துக்கொள்ளவும்)/

அல்லது உப்புமா சமைத்துக்கொள்ளவும் :))

11:25 PM//

உப்புமா நமக்கு சுத்துமா பிடிக்காத உணவு.. அதுக்கு பினாத்தலார் பதிவை படிச்சிடலாம் :)

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...
படம் பாக்கலைன்னு சொல்ல ஒரு பதிவா? இதெல்லாம் ஓவரு...:)

Deception Point மிக நல்ல கதைதான். ஆனா கொஞ்சம் தயார் பண்ணிகிட்டு படிக்கனும். துருவ பகுதிகளில் நடக்கும் ஆராய்ச்சிகள் பற்றி நிறைய தகவல்கள் இருக்கும்.

//

ஆனா மத்த ரெண்டு நாவல்கள் அளவுக்கு என்னை கவரவில்லை. மத்ததை படிச்சிட்டு நிறைய பில்ட் அப் கொடுக்கலாம் :)

வெட்டிப்பயல் said...

// ♫சோம்பேறி♫ said...
நீங்கள் digital fortressஸை மற்ற மூன்று நாவல்களுக்கு முன்பே படித்திருந்தால் சுமார் என்று தோன்றியிருக்காது என்று நினைக்கிறேன். மேலும் அவர் அதை எழுதிய காலத்தில் cryptography புது டெக்னாலஜி. நீங்கள் படிக்கும் போது அப்படி அல்ல என்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம்.
//
நிச்சயமா.. அதுவுமில்லாம் க்ரிப்டோகிராபி எல்லாம் ஃபைனல் இயர்ல படிச்சது வேற. அதான் :)


//
Deception point மட்டுமல்ல. அவரது மற்ற கதைகளின் முடிவும் ஊகிக்கக் கூடியவையே.. ஏனென்றால் ரமணிசந்திரன் போல Dan brownனின் அணைத்து கதைகளும் ஒரே மாதிரியானவையே! ஹீரோயினை சுற்றி வரும் கதை, கூடவே இருக்கும் வில்லன். இன்னும் பல.
//
முதல்ல படிச்சதால டாவின்சி கோட்ல கண்டுபிடிக்க முடியல :)

//
பக்கத்துக்கு பக்கம் புது தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி 'அட' போட வைப்பதும், சுவாரசியம் குறையாமல் கதையை நகர்த்துவதும் தான் அவர் வெற்றி ரகசியம்.
//
தொழில் நுட்பம்னு சொல்ல முடியாது. புது தகவல் (Controversial)ல ஏதாவது சொல்லி நம்மல கட்டிப் போட்டுடுவாரு :)

//
சந்தேகமில்லாமல் Angels n demons அவருடைய மாஸ்டர் பீஸ்.//

நிச்சயமாக :)

Divyapriya said...

டாவின்ஸி கோட் படிச்சவங்க எல்லாருமே இப்படி தான் பண்ணிட்டு இருக்காங்க :)) நாங்க காலேஜ் படிக்கும் போது, கூட்டமா இந்த புக்க படிச்சிட்டு இத பத்தி பேசிட்டு இருப்போம் :)

Bharath said...

என்னாது “pi”ஒட value 1.618 ஆ?? எங்க ஸ்கூல்ல 3.14159 ன்னு சொல்லிக்குடுத்து ஏமாத்திட்டாங்களே..

Bharath said...

ஓஹோ நீங்க “Phi"அ சொன்னீங்களா.. எங்க மாதிரி ஞான சூனியங்களுக்கு விளக்காலாம்ல... அப்படியே கொஞ்சம் Fibanocci series பத்தியும் சொல்லிடுங்க..

sri said...

he he very true, the same thing happen to me , Dan brown books are very good.

I too didnot like da vinci code movie, Angles and demon was very bad too. I went with my friend and they wanted to hit me in the theater itself :)

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

Ramesh Chinnasamy said...

ஆஹா நானும்கூட இப்புடிதான் பெனாத்துனேன் Da Vinci Code படிச்சப்ப

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
டாவின்ஸி கோட் படிச்சவங்க எல்லாருமே இப்படி தான் பண்ணிட்டு இருக்காங்க :)) நாங்க காலேஜ் படிக்கும் போது, கூட்டமா இந்த புக்க படிச்சிட்டு இத பத்தி பேசிட்டு இருப்போம் :)

12:57 AM//

காலேஜா... சூப்பர்...

நான் வேலைல இருந்தேன்... எங்க கம்பெனி புலட்டின் போர்ட்ல இதை பத்தி பயங்கர ஆராய்ச்சி நடந்தது. என் ரூம்ல யாரும் படிக்காததால நான் செம பில்ட் அப் :)

வெட்டிப்பயல் said...

// Bharath said...
ஓஹோ நீங்க “Phi"அ சொன்னீங்களா.. எங்க மாதிரி ஞான சூனியங்களுக்கு விளக்காலாம்ல... அப்படியே கொஞ்சம் Fibanocci series பத்தியும் சொல்லிடுங்க.//

பரத்,
நாம கொடுக்கறதே பில்ட் அப்.. இதெல்லாம் சொன்னா துரத்தி துரத்தி அடிச்சிருப்பானுங்க :)

வெட்டிப்பயல் said...

// Srivats said...
he he very true, the same thing happen to me , Dan brown books are very good.

I too didnot like da vinci code movie, Angles and demon was very bad too. I went with my friend and they wanted to hit me in the theater itself :)//

Thank u Srivats...

After seeing The Da Vinci Code, I decided not to watch Angels and Demons :)

I saw few reviews saying that The Da Vinci Code movie was much better :)

வெட்டிப்பயல் said...

//மெகா சில்லறை said...
ஆஹா நானும்கூட இப்புடிதான் பெனாத்துனேன் Da Vinci Code படிச்சப்ப//

ஊரே இப்படி தான் போல :)

உண்மை said...

http://www.hindu.com/cp/2009/05/29/stories/2009052950070300.htm

மணிமகன் said...

mudiuva enna solla varinga?