தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, May 11, 2009

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்

முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!

எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா...

வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.

க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?

வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.

க: தெரியும். எவனும் வரமாட்டானுங்கற‌ தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...

வி: ராஜாவின் பார்வையிலேல நானும் அஜித்தும் நடிச்சதைப் பார்த்து தான் பிதாமகன்ல சூர்யாவும் விக்ரமும் நடிச்சாங்க. பட கதை கூட ஒண்ணு தான். அதுல அஜித் சாகறதுக்கு நான் பழிவாங்குவேன். பிதாமகன்ல சூர்யா சாவுக்கு விக்ரம் பழிவாங்குவாரு.

க‌: ஆமா அதுல‌ விக்ர‌ம் வில்ல‌ன் க‌ழுத்தை க‌டிச்சி ப‌ழிவாங்குவாரு. நீ ந‌டிச்சி எங்க‌ளை ப‌ழி வாங்கிட்ட‌. அப்ப‌டித்தானே. ஏன்டா உன‌க்கு எல்லாம் ம‌ன‌சாட்சியே இல்லையா? அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?

வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.

க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?

வி: என்னங்கணா?

க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான். ஆனா அப்பவும், சுக்கிரன், சனினு ஏதாவது படத்துல தலையை காட்டி உன் பேரை கெடுத்துக்கற.

வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.

க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?

வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!

வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி

க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே...

வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... இன்னும் கண்ணுலயே இருக்கு. அங்க கபடி ப்ராக்டீஸ் பண்ணி தான் கில்லி படத்துல ஆல் இந்தியா இண்டர் நேஷனல் மேட்ச்ல ஜெயிச்சோம். அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.

க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.

வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...

க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?

வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)

இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார். உனக்கு இருக்குடி)

க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?

வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். பாட்டு ஹிட் ஆனதுக்கு அப்பறம் படத்துல கதையை பத்தி யாராவது யோசிப்பாங்களா?எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல

க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?

வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.

க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.

க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...

(தொடரும்...)

(இன்னும் பல படங்கள் இருப்பதால் ஒரே பகுதியில் முடிக்க இயலவில்லை... அடுத்து பல சூப்பர் ஹிட் படங்கள் காத்திருக்கின்றன)

24 comments:

வெட்டிப்பயல் said...

எனக்கு இன்னைக்கு ஹாப்பி பர்த் டே. அதுக்கு ஸ்பெஷலா இன்னைக்கு ராத்திரி ஒரு கதை எழுதி போடலாம்னு இருக்கேன் :)

Kurai Ondrum Illai said...

Many more happy returns of the Day !!!!
Vaazhiga Vazgamudan!!!

TBCD said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெட்டி !

TBCD said...

:) இது தொடர்ச்சிக்கு

கார்த்தி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெட்டி.....

ஆயில்யன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி ! :)

ஆயில்யன் said...

//நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே//

செம டெரரான படங்கள் !

பார்த்தவங்க எல்லாருமே கண்டிப்பா டெரராக்கிய படமும் கூட....! :))))

ஆயில்யன் said...

//அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... இன்னும் கண்ணுலயே இருக்கு//

இதை விட இன்னுமொரு பெரிய கூத்து அதை ஸ்டெப் பை ஸ்டெபா எக்ஸ்குளுசிவ் ஸ்டில்ஸ் எடுத்து குமுதம் அந்த வாரத்து ஹிட் கொடுத்துச்சு :)

ILA said...

இங்கேயும் ஒரு வாழ்த்துக்கள்!

வெட்டிப்பயல் said...

//Kurai Ondrum Illai said...
Many more happy returns of the Day !!!!
Vaazhiga Vazgamudan!!!//

மிக்க நன்றி நண்பரே!!!

// TBCD said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெட்டி //

மிக்க நன்றி பாஸ் :)

//
கார்த்தி said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெட்டி.....//
நன்றி கார்த்தி

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி ! :)

3:19 PM//

நன்றி ஆயில்ஸ் :-)

வடகரை வேலன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் பாலாஜி.

//ஆல் இந்தியா இண்டர் நேஷனல் மேட்ச்//

கலக்குறீங்க வெட்டி.

Srinath said...

Many More Happy Returns of the Day.

ஆ! இதழ்கள் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Triumph said...

ஹாப்பி பர்த் டே.

Subash said...

சூப்பர் பேட்டிங்ணா
அடுத்த பாகத்திற்கு வெயஜட்டிங்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

What a lengthy mokkai...Comedy a konjam kastapatu theda vendi iruku..Idhula thodar padhivu vera.
..Velanginapladhan..
...Krish

Chandrasekaran said...

இந்த பதிவு முன்னாடியே போட்டதாச்சே

Divyapriya said...

happy bday naa...
குருவியய்யெல்லாம் பாக்கும் போது நீங்க சொல்லியிருக்க படமெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை :))

Poornima Saravana kumar said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா:))

Poornima Saravana kumar said...

சூப்பர்ண்ணா...
கவுண்டரின் கலாய்ப்பே தனிதான்:)
விஜயை நல்லாவே போட்டு தாக்கறீங்க:)

குமரன் (Kumaran) said...

Belated Happy Birthday Balaji.

Truth said...

he he he... nice.
b'day?? Happy B'day :-)

வெட்டிப்பயல் said...

வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைத்திற்கும் என் நன்றி