தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, May 10, 2009

ரியல் எஸ்டேட்டா? ரீல் எஸ்டேட்டா???

ரியல் எஸ்டேட். இந்த முறை நான் இந்தியா போயிருந்த போது கள்ளக்குறிச்சில இருந்து சென்னை போற வழி முழுக்க (250 கி.மீ) சாலையின் இரண்டு பக்கங்களிலும் வேலியெல்லாம் போட்டு, அன்னை நகர், மாரியம்மன் நகர், ஆரோக்ய மாதா நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி அவின்யூ இப்படி ஏதாவது ஒரு ரியல் எஸ்டேட் போர்ட். விவசாய நிலத்தை கூட விட்டு வைக்கலை. ஊர்ல இருக்குறப் பாதி பேருக்கு மேல ரியல் எஸ்டேட் தான் பண்றாங்க. 


என்ன நைனா இப்படி ஊர்ல இருக்குற எல்லாரும் ரியல் எஸ்டேட் பண்ணா, யார் தான் வாங்குவாங்குனு கேட்டேன். ”எனக்கும் அது தான் புரியல. சும்மா சுத்திட்டு இருந்தவங்க எல்லாம் இப்ப லட்சத்துலயும், கோடிலயும் தான் பேசறாங்க. அடிக்கடி வீட்டுக்கு வந்து பையன் தான் அமெரிக்கால இருக்கான் இல்லை, அந்த இடத்துல வாங்கிப் போடுங்க. இன்னும் மூணு மாசத்துல டபுல், ட்ரிபில் ஆகும்னு சொன்னாங்க” அப்படினு சொன்னாரு. ஏற்கனவே ஸ்டாக் மார்க்கெட்ல பலமா நான் பாடம் கத்துக்கிட்டதால இந்த டபுல், ட்ரிபில் எல்லாத்துலயும் நமக்கு பயம் தான். அப்படி அவுங்க சொல்ற இடத்தைப் பார்த்தாலும் ஊருல இருந்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தள்ளி இருக்கும். கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் ஒரு வீடு கூட தெரியாது.

அப்பறம் ரியல் எஸ்டேட்லயே சீட்டு கட்டி வாங்கறதும் இருக்கு. இவுங்க மாசத்துக்கு ஒரு அறுநூறு, ஆயிரம்னு கட்ட சொல்லுவாங்க. நாப்பது மாசம் இல்லை அறுபது மாசம் முடிஞ்ச உடனே நமக்கு ஒரு கிரவுண்ட். அது மட்டுமில்லாம மாசம் மாசம் குலுக்கல்ல ஏதாவது ஒரு பரிசு கொடுக்கறாங்க. அந்த பரிசு பெரும்பாலும் எலக்ட்ரிக்கல் சாமான்கள் தான். டீவிடீ ப்ளேயர், செல் ஃபோன், ஹோம் தியேட்டர், மைக்ரோ வேவ் இப்படி. இதுல என்ன சமாச்சாரம்னு கேட்டா, இந்த சீட்டு நடத்த இவுங்க பட்ஜட் போடும் போது சும்மா நூறு, ஆயிரம் சீட்டுனு கணக்கு வெச்சி போடறாங்க. பத்து பேர் வெச்சி நடத்துற சீட்டே உன்னை பிடி என்னை பிடி தான். இதுல இந்த அளவுக்கு நடத்தும் போது நிச்சயம் டவுசர் கிழிஞ்சிடும். 

அதுவுமில்லாமல் இவுங்க அதுக்கு ஒரு ப்ரவுச்சர் வெச்சிருப்பாங்க பாருங்க. அப்படியே கலர், கலரா வீடு இருக்கும். அழகான ரோடு, அதுல ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாடியும் ஒரு மரம். நிறைய தெரு விளக்குகள். அங்க ஷர்ட், மிடி போட்டுட்டு ஒரு ஃபாரின் பிகர், டை, கோட் எல்லாம் போட்டுட்டு ஒருத்தர். அப்பறம் அடுத்த பக்கத்துல யாருக்கும் புரியாத கணக்கு ஒண்ணு இருக்கும். அதுல நாம மாசம் கட்டுற பணம், மொத்தமா கட்டுற பணம் அப்பறம் அந்த நிலத்தோட மதிப்பு (அது அவுங்களே அடிச்சி விடறது), கடைசியா நமக்கு கிடைக்கிற லாபம். (பக்கத்துல அப்படியே ஒரு நாமத்தையும் போடலாம். அதை நாமலே போட்டுக்கணும்னு அவுங்க விட்டுடறாங்க). கடைசி பக்கத்துல இவுங்க குலுக்கல்ல கொடுக்குற இலவச ஐட்டங்கள். இந்த மாதிரி ஒரு நாலஞ்சி ப்ரவுச்சர் பார்த்துட்டேன். 

இப்படி நூறு, இரு நூறு சீட்டுனு நடத்தறீங்களே ரிஸ்க் இல்லையானு கேட்டேன். உடனே, இது சாதாரணமா நடத்துற சீட்டா இருந்தா, சீட்டு எடுத்துட்டு எவனாவது ஊரை விட்டு ஓடிப்போயிடுவான். ஆனா இதுல அப்படி இல்லை. நாப்பது சீட்டும் முடிஞ்சவுடனே தான் ரிஜிஸ்ட்ரேஷன். அப்படியே எவனாவது பாதில நிறுத்திட்டா, நமக்கு வந்த வரைக்கும் லாபம். அப்படினு சொன்னாங்க. அதே மாதிரி இடத்தோட விலை எப்படி சொல்றீங்கனு கேட்டேன். அதுக்கு ஒரு பத்து, இருபது ஏக்கர்ல இது பண்ணறோம். ரோடுக்கு கொஞ்சம் பக்கத்துல இருக்கறது தான் விலை அதிகம். பின்னாடி போக போக விலை ரொம்ப குறைவு. சீட்டு கட்டுற யாருக்கும் எந்த ப்ளாட் அவுங்களுக்கு கிடைக்கும்னு தெரியாது. அது கடைசியா குலுக்கல்ல தான் முடிவாகும்.
அதுவுமில்லாமல் முன்னாடி இருக்குற ப்ளாட் எல்லாம் குலுக்கல்லயே வைக்க மாட்டோம். அதை தனியா பின்னாடி வித்துடுவோம். மீதி இருக்கறதெல்லாம் தான் குலுக்கல்ல இருக்கும். அது யாருக்கும் தெரியாது அப்படினு சொன்னாங்க. நல்லா விவரமாத்தான்யா இருக்கீங்கனு நினைச்சிக்கிட்டேன்.

அப்பறம் எப்படி நூறு, இருநூறுனு சீட்டுக்கு ஆள் கிடைக்குதுனு கேட்டேன். சாதாரணமா சீட்டுக்கு பத்து பேர் கிடைக்கறதே கஷ்டம். மாசம் அறுநூறு, எழுநூத்தம்பதுனு வைக்கறதால நிறைய பேர் நாலஞ்சி சீட்டு போடறாங்க. பத்து, இருபது சீட்டு போடற ஆள் எல்லாம் கூட இருக்காங்க. பின்னாடி டபுல், ட்ரிபுல் ஆகும்னு எல்லாருக்கும் நம்பிக்கை தான். கடைசியா நான் இது தான் அவுங்ககிட்ட சொல்லிட்டு வந்தேன், ஒரு வருஷத்துல டபுல், ட்ரிபுல் ஆகும்னு நினைச்சா அது பேர் நம்பிக்கை இல்லை. பேராசை. அப்படி நினைச்சி இடம்னு இல்லை எது வாங்கினாலும் பெருநஷ்டம் வர வாய்ப்பிருக்குனு.

13 comments:

வெட்டிப்பயல் said...

வந்தது வந்துட்டீங்க. அப்படியே இந்த கதையையும் படிச்சிட்டு போயிடுங்க ;)

புருனோ Bruno said...

தல

இப்ப கொஞ்ச நாளா இந்த துறையும் தள்ளாடுதாமே

Bleachingpowder said...

//இந்த முறை நான் இந்தியா போயிருக்கும் போது கள்ளக்குறிச்சில இருந்து சென்னை போற வழி முழுக்க //

ஏங்க அமெரிக்காவில இருந்து சென்னை வரனும்னா கள்ளக்குறிச்சி வழியா தான் பிளேன் வருமாங்க???

வெட்டிப்பயல் said...

//புருனோ Bruno said...
தல

இப்ப கொஞ்ச நாளா இந்த துறையும் தள்ளாடுதாமே//

மொத்தமா கேஷ் குடுத்து வாங்கறது தள்ளாடுதாம். ஆனா அதுவும் சிட்டில தான். மத்த படி சின்ன டவுன்ல எல்லாம் பிசினஸ் நடந்துட்டு தான் இருக்காம். இன்னைக்கு கூட விசாரிச்சேன். என் ரூமேட் கூட நாமக்கல்ல இடம் வாங்கனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்ணிட்டு இருக்காரு. எதுவும் விலை குறையலயாம்.

வெட்டிப்பயல் said...

//Bleachingpowder said...
//இந்த முறை நான் இந்தியா போயிருக்கும் போது கள்ளக்குறிச்சில இருந்து சென்னை போற வழி முழுக்க //

ஏங்க அமெரிக்காவில இருந்து சென்னை வரனும்னா கள்ளக்குறிச்சி வழியா தான் பிளேன் வருமாங்க??//

ஆமாம் பாஸ். அப்படியே அங்க டீ, காபி, டிபன், பாதாம் பால் சாப்படறவங்களாம் சாப்பிடலாம். வண்டி பத்து நிமிஷம் தான் நிக்கும் ;)

மங்களூர் சிவா said...

அமெரிக்கா சப்-ப்ரைம் க்ரிஸிஸ் வந்தமாதிரியே இங்கயும் வரும்னு நினைச்சோம் ஒன்னும் நடக்கலை. விலை குறையும்கிற மாதிரியே தெரியலையே.

எதுக்கும் ஒரு ரெண்டுவருசம் வெயிட் பண்றது நல்லதுன்னு நினைக்கிறேன்.

ஆ! இதழ்கள் said...

நாமக்கல்ல இடம் வாங்கனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்ணிட்டு இருக்காரு. எதுவும் விலை குறையலயாம்.//

உண்மைதான் வெளிநாட்டில இருக்கிறவங்க எல்லாம் அந்த நாட்டின் ரியல் எஸ்டேட் நிலை பார்த்து நம்ம ஊருல வாங்கி போட்றுவோம் சீப்பா கிடைக்கும்ன்னு நினைக்கிறாங்க... ஆனா இங்க விலை குறையவே இல்லை. 200% 300%னு ஏறிய விலைகளில் 20% டிஸ்கவுண்ட்னு பெருசா விளம்பரம் குடுக்குறாங்க. உண்மையிலே இன்னும்(?) குறையல..

அதுசரி உங்க கிட்ட யாருங்க தொழில் ரகசியத்த அவுத்து விட்டது.

:)

இது நம்ம ஆளு said...

அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்

சந்தோஷ் = Santhosh said...

வெட்டி,
அங்க தான்னு இல்ல எல்லா ஊரிலும் இந்த கொடுமை நடந்துகிட்டு இருக்கு.. இதனால் விளை நிலமெல்லாம் plot ஆக மாறி வீணா போயிட்டு இருக்கு.. இதுக்கு எப்ப ஒரு முடிவு வருமுன்னு தெரிலை..

செந்தழல் ரவி said...

திருவண்ணாமலையில ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு கிரீன் கார்டன் போட்டாங்க..

எங்கம்மா மாசம் 750 ரூவா கட்டுச்சு.

நான் கூட கிண்டல் பண்ணேன்...

இப்ப என்னடான்னா, அந்த இடத்த ஒட்டி ஒரு பைபாஸ் ரோடு வந்திருச்சு..

10 மடங்கு அதிக விலை போவுதாம்பா...

இந்த மாதிரி சக்சஸ் ஸ்டோரியும் உண்டு வெட்டியாரே ~!!

வீரசுந்தர் said...

//அப்படி நினைச்சி இடம்னு இல்லை எது வாங்கினாலும் பெருநஷ்டம் வர வாய்ப்பிருக்குனு.//

மனுசனுக்கு ஆசை இருக்கற வரைக்கும், அந்த ஆசைய பணமாக்கறதுக்கும் ஒரு கும்பல் இருக்கத்தான் செய்யும். :)

தமிழ்நெஞ்சம் said...


Politicians' Drama 2009

Anonymous said...

மாதம் 250 ரூபாய் என 36 மாதம் கட்டி நான் ஒரு இடம் வாங்கினேன்; நாலரை செண்ட்.

இப்ப அந்த இடம் செண்ட் 40,000 க்குப் போகுதாம். இது போல நல்ல திட்டங்களும் உண்டு. ஆனா இவங்க ஏதும் கவர்ச்சிப் பரிசெல்லாம் சொல்லல.