தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, May 12, 2009

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய் பகுதி 2

க: ஏன்டா தமிழன் தமிழன்னு ஒரு படம் நடிச்சியே அது கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: டைரக்டர் ரெண்டே வரில எனக்கு கதை சொன்னாருணா... ஒரு தறுதலை தபால் தலையில் வருகிறான். இது தான்ணா அதோட கதை.

க: டேய் ரெண்டு வரில சொல்றதுக்கு அது என்னடா திருக்குறளா? கதை கேக்கறதுக்கு ஒனக்கு ஒரு மணி நேரமாகுமாடா? காசு போடறது எவனோ, படம் பாக்கறது எவனோங்கற தைரியத்துல நீ நடிச்சிட்டு இருக்க. யூத்னு ஒரு படம் நடிச்சியே அது நியாபகம் இருக்கா?

வி: அது மறக்கக்கூடிய படமாணா? ஆல் தோட்ட பூபதி பாட்டுக்கு தமிழ் நாடே ஆடுச்சேணா...

க: அது உன் ஆட்டத்துக்கு இல்லடி. சிம்ரன் ஆடனதால தமிழ் நாடே ஆடுச்சு.
அப்பறம் என்னடா அந்த படத்துக்கு கேப்ஷன் Life is Beautiful? ஏன்டா நீ படத்து கதையை காப்பி அடிச்ச, பரவாயில்ல. இப்படி காப்பி அடிச்ச படத்தோட பேரையே கேப்ஷனா வெக்கறியே உனக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா?

வி: என்னங்கண்ணா பண்றது. படத்துக்கு கேப்ஷன் இங்கிலிஷ்ல தான் வைக்கணுமாம். டைரக்டர்கிட்ட இந்த படத்துல நிறைய சீன் எந்த படத்துல இருந்து காப்பி அடிச்சதுனு கேட்டேன். அது நல்லா இருந்ததால அதையே கேப்ஷனா வெச்சாச்சுங்கண்ணா.

க: அடப்பாவிகளா! அதுல எதுக்குடா உனக்கு வெக்க வேண்டிய பேரை விவேக்குக்கு வெச்சிங்க?

வி: அது என்ன பேருங்கணா? நியாபகம் இல்லையே!!!

க: கருத்து கந்தசாமி. படம் முழுக்க கருத்து சொல்லியே மக்கள கொன்னுட்டனு உன் பேருல பொது நல வழக்கு வேற இன்னும் இருக்காம்.

வி: அண்ணா என்னங்கணா இதுக்கெல்லாம் போயி டென்ஷனாகிட்டு.

க: இதெல்லாம் விட இன்னோரு கொடுமை அந்த புதிய கீதை. அதுல உனக்கு எதுக்குடா ஆறு விரல்?

வி: கமல், விக்ரம், சூர்யா மாதிரி ஏதாவது வித்யாசமான கெட்டப்ல வரணும்னு ஆசைப்பட்டேண்ணா. அதனால தான் ஆறு விரல் வெச்சிக்கிட்டேன். உங்களால என்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்கவே முடியாதே!!!

க:டேய்!!! கைல ஒரு விரல் அதிகமா வெச்சிக்கிட்டா அடையாளம் தெரியாதா? உன்னைய என்ன பண்றதுன்னே தெரியலையே. அதுல க்ளைமாக்ஸ் அதுக்கு மேல கொடுமை. வண்டில சைட் ஸ்டேண்ட் தட்டிவிட்டு ஆக்ஸிடெண்ட் ஆன ஒரே ஆள் நீதான்டா.

வி: என்னங்கணா இப்படி திட்றீங்க. நீங்க ரொம்ப மோசம்.

க: டேய் விஜய் மண்டையா! உன்னைய நம்பி காசு கொடுத்து தைரியமா வந்தா நீ இப்படி புதுமை பண்றேனு டகாட்டி வேலை பண்ணா உன்னைய என்ன பண்றது? நீயே சொல்லு அந்த திருமலை படமெல்லாம் மனுசன் பார்க்க முடியுமா? அதுல கடைசி சீன்ல நீ பேசற பஞ்ச் டயலாக் கொடுமை தாங்காம வில்லனே திருந்திடறான். நாங்க பாவம் என்ன பண்ணுவோம்?

வி: !@#$%

க: சரி.. கில்லி படத்துல எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க?

(விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: சொல்லு மேன்!

வி: அது வேற மேட்சுங்கணா. அதுல லோக்கல் டீமோட கில்லி டீம் ஆடுதுண்ணா. இது ஆல் இந்தியா இண்டர்நேஷனல் மேட்ச்க்காக‌ கலந்துக்கற மேட்ச்ணா. (ஒரு வழியாக சமாளிக்கிறார் விஜய்)

க: டேய் டக்கால்டி மண்டையா. தமிழ் நாடு டீம்ல தான் ஓட்டேரி நரி, டுமீல் குப்பம் வவ்வாலு, ஆதி வாசி எல்லாம் இருக்கறாங்களாடா? சும்மா அடிச்சு விடாதடா.

வி: போங்கணா. என் படத்துல போய் லாஜிக் எல்லாம் பாக்கறீங்க.

க: அது சரி. கில்லி கூட பரவால. அந்த மதுரனு ஒரு படம் நடிச்சியே அது மனசன் பாப்பானாடா? மீசைய ட்ரிம் பண்ணி கைல டேட்டு கூத்துனா அடையாளம் தெரியாதுனு தமிழ் நாட்டுக்கு புது டெக்னிக் சொல்லி கொடுத்ததே நீ தான்டா.

வி: ஏன்ணா அவன் மட்டும் கோட்டு போட்டா அடையாளம் தெரியாதுனு நடிக்கல?

க: அவன் எவன்டா?

வி: பேரெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அந்த படத்த பேரோட க்ளூ தரேன். 'ஜ'ல ஆரம்பிச்சி 'னா'ல முடியும்.

க: ஏன்டா உங்க அக்கப்போர்ல எங்கள கொடுமைப்படுத்தறீங்க? உங்களுக்குனு இருக்கானுங்க பாரு ரசிகர்னு சொல்லிட்டு அவனுங்கள சொல்லனும்.
அது எப்படிடா தைரியமா அந்த பேரரசு படத்துல எல்லாம் நடிச்ச?

வி: அண்ணா. அவர் எவ்வளவு பெரிய டைரக்டரு. அவர மாதிரி புதுசா சிந்திக்கிற டைரக்டரே தமிழ்நாட்ல கிடையாதுங்கணா.

க: டேய் அவன் போன வாரம் தான் துவைச்சு காயப்போட்டேன். இந்த மூஞ்சில சந்தனத்த பூசினா அடையாளம் தெரியாதுனுங்கறதெல்லாம் பெரிய சிந்தனையாடா. அவனை சொல்லக்கூடாது. முதல்ல உங்கள போட்டு நாலு சாத்து சாத்தனா சரியா போயிடும். இனிமே அவன் கூட சேராத. புரியுதா?

வி: சரிங்கண்ணா.

க: அப்பறம் குஷி படத்துல எதுக்கு ரெண்டு தடவை நடிச்ச?

வி: இல்லைங்களேணா. ஒரு தடவை தானே நடிச்சேன்.

க: நான் சொல்றது சச்சின்னு ரெண்டாவது தடவை அதே கதைல நடிச்சியே அதை சொல்றேன்.

வி: ஓ! குஷி படத்துலயும் சச்சின் படத்துலயும் ஒரே கதையாணா? அது எனக்கு தெரியாதே!

க: அடங்கொக்கா மக்கா. நீ நடிக்கிற படத்து கத உனக்கே தெரியாதா? ஒழுங்கா கதைய கேட்டு நடி. உன்னைய நம்பி காசு கொடுத்து வந்து அடிக்கடி எல்லாரும் ஏமாந்து போறோம். அப்பறம் இன்னோரு விஷயம் தெலுகு படம் பாக்கறத குறைச்சிக்கோ. நம்ம ஊர்லயே நல்ல டைரக்டருங்க எல்லாம் அருமையான கதையோட இருக்காங்க. நீ ஒழுங்க கதை கேட்டு நடி. அப்பறம் பஞ்ச் டயலாக் பேசறத இன்னையோட நிறுத்திடு. ஓகேவா?

வி: சரிங்கண்ணா... இனிமே ஒழுங்கா நடிக்கிறேன்னா... அப்படியே எல்லாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிமே உங்களை ஏமாத்தாம ஒழுங்கா கதை கேட்டு நடிக்கிறேங்க.
வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் அதுல கீழ இருக்கறவன் மேல வருவான் மேல இருக்கவன் கீழ போவான். ஆதி ஃப்ளாப் ஆயிடுச்சினு போக்கிரிய மிஸ் பண்ணிடாதீங்க...

க: டேய். இப்பதான சொன்னேன். இனிமே நீ மட்டும் பஞ்ச் டயலாக் பேசின உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஒழுங்கா ஓடி போயிடு...

(Part - 3 நாளைக்கு)

9 comments:

ஆயில்யன் said...

//அது உன் ஆட்டத்துக்கு இல்லடி. சிம்ரன் ஆடனதால தமிழ் நாடே ஆடுச்சு.//


அதானே....!

ஹீரோவுக்கு நெனைப்ப பார்த்தீங்கள...?

:))

ஆயில்யன் said...

//உங்க அக்கப்போர்ல எங்கள கொடுமைப்படுத்தறீங்க? உங்களுக்குனு இருக்கானுங்க பாரு ரசிகர்னு சொல்லிட்டு அவனுங்கள சொல்லனும்//

:))))))))))))

Truth said...

Oh My Gosh! :-)
waiting for the third part.
pudhiya geethai naan kelvi patadhe illa. paakanum koodiya seekram :P

வடகரை வேலன் said...

//அப்பறம் குஷி படத்துல எதுக்கு ரெண்டு தடவை நடிச்ச?//

பாலாஜி ஐயோடெக்ஸ் வாங்க காசு அனுப்புங்க. விழுந்து விழுந்து சிரிச்சதுல நிறைய அடி பட்டிருச்சு.

VISA said...

yow acid mandaiyaa......
oh sorry vetti payal sir kalakitteal.

Poornima Saravana kumar said...

ஏன்டா உங்க அக்கப்போர்ல எங்கள கொடுமைப்படுத்தறீங்க? உங்களுக்குனு இருக்கானுங்க பாரு ரசிகர்னு சொல்லிட்டு அவனுங்கள சொல்லனும்.
//

அவங்களை எப்படிண்ணா திருத்தறது?
சொன்னா கேட்க்கமாட்டேங்கறாங்க!

Poornima Saravana kumar said...

டேய். இப்பதான சொன்னேன். இனிமே நீ மட்டும் பஞ்ச் டயலாக் பேசின உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஒழுங்கா ஓடி போயிடு...//

நல்லா சிரிச்சேன்:))

தமிழ்ப்பிரியா said...

ரொம்ப நல்லவரு சார் நீங்க. அவர் படத்த மட்டுமில்லாம அவர் costume, punch dialogue எல்லாத்தயும் நல்லா watch பண்ணியிருக்கீங்க. உங்க மன தைரியத்த பாராட்டி, உங்களுக்குதாண்ணா இந்த வருஷ வீரசாகச விருது

Chandrasekaran said...

பகுதி 3ஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்