தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, April 06, 2009

கள்ளக்குறிச்சி - மும்முனைப் போட்டி

இந்த முறை எங்க ஊர் ஸ்டார் தொகுதி அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. கள்ளக்குறிச்சி பேரு வரலாறுல என்னால தான் ஃபேமஸ் ஆகனும்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்ப அதுக்கு நிறைய தடங்கல். சரி. அதை விடுங்க.

ரொம்ப நாளா ராசிபுரம்\ரிஷிவந்தியம் தொகுதில கள்ளக்குறிச்சி இருக்கறதை நினைச்சி ரொம்ப வருத்தப்பட்டிருக்கிறேன். இப்ப அதுக்கு ஒரு விடிவு காலம் வந்துடுச்சு. ரொம்ப சந்தோஷம்.
இந்த முறை மும்முனைப் போட்டியும் பலமா இருக்கப் போகுது. அப்படி என்னடா இருக்குனு நினைக்கறவங்களுக்கு. வன்னியர் ஏரியாவான தென்னாற்காடு மாவட்டத்துல தான் கள்ளக்குறிச்சி இருக்கு. அடுத்து திமுக சார்புல நிக்கற ஆதிசங்கர் திருக்கோவிலூர்காரர். அவருக்கு வேலை செய்ய பெரிய இளைஞர் படை இருக்கு. அதுவுமில்லாமல் இது போன முறை திமுக வெற்றி பெற்ற இடம் தான். அப்ப பாமக இருந்தாங்க. இப்ப அவுங்க ஓட்டைப் பிரிப்பாங்க.

இது எல்லாத்தையும் விட நான் எதிர்பாராத ஆச்சரியம் சுதிஷ் எங்க தொகுதில போட்டியிடறது தான். எங்க தொகுதில விஜயகாந்த ரசிகர்கள் ஏராளம். அவரோட மொக்கைப் படங்கள் எல்லாம் கூட நூறு நாள் தாண்டி ஓடும். அதுவும் இல்லாமல் விஜயகாந்த் அரசியல் பிள்ளையார் சுழி போட்டது எங்க ஊர்ல தான். எங்க ஊர் டைரக்டர் முருகதாஸ் கல்யாணத்துக்கு வந்த விஜயகாந்த பாமகவை பற்றி தாறுமாறாக விமர்சித்தது இங்கு தான். எலக்‌ஷன்ல நிக்காம சீட்டு வாங்க முடியுது, காவிரில தண்ணி கொண்டு வர முடியலையானு அவர் பேசி, கஜேந்திரா படத்துக்கு பிரச்சனை வந்தது எங்க ஊர்ல பேசின பேச்சால தான்.

அப்பறம் எங்க தொகுதில ஓரளவு கனிசமான நாயுடு ஓட்டும் இருக்கு. அது விஜயகாந்த்க்கு போகுமானு தெரியலை. ஆனா எனக்கு தெரிஞ்சி நாயுடு ஓட்டை விட அவர் எதிர்பார்க்கறது அவர் ரசிகர்கள் ஓட்டு தான். நான் முதல்ல விஜயகாந்த எங்க ஊர்ல தான் போட்டியிடுவார்னு நினைச்சேன். கொஞ்சம் மாறி விருத்தாச்சலம் போயிட்டாரு. அதுவும் பக்கத்து ஊரு தான். அதனால இந்த முறை எங்க ஊர்ல அவர் மனைவியை களம் இறக்குவார்னு நினைச்சேன். ஆனா மச்சானை நிறுத்திட்டாரு.

பாமக பற்றி சொல்லவேத் தேவையில்லை. இது தென்னாற்காடு மாவட்டம். கனிசமான வன்னியர் ஓட்டு இருக்கு. அதே சமயம் ஆதிமுக கூட்டணி பலமும் இருக்கு. எங்க ஏரியால மலைவாழ் மக்களும் அதிகம். அவுங்க எல்லாம் இன்னும் MGRக்கு தான் ஓட்டு போட்டுட்டு இருக்காங்க. அந்த பலமும் சேர்ந்தால் இதுவும் சமமான பலம் உள்ள கட்சி தான். இந்த நிலைமைல எங்க வீட்ல அப்பா, அம்மா யாருக்கு ஓட்டுப் போடுவாங்கனுக்கூட என்னால சொல்ல முடியல.

சரி, இப்படி இவங்க போட்டி போடறது இருக்கட்டும், எங்க தொகுதில என்ன என்ன பிரச்சனைனு சொல்றேன், அதை யாராவது சரி பண்றனு வாக்குறுதியாவது தராங்களானு பார்க்கலாம்.

* முதல் பிரச்சனை தண்ணீர் தான். சுத்தமா காஞ்சிப் போன ஏரியா. இப்ப ஓரளவு தண்ணீர் பிரச்சனை தீர்ந்து இருக்குனு சொன்னாலும் அது நிரந்தர தீர்வா தெரியல. என்னோட தண்ணீர்
தண்ணீர் பதிவுல கூட நான் சொல்லியிருந்தேன். எங்க ஊரை காஞ்சிப் போன கள்ளக்குறிச்சினு தான் எல்லாரும் சொல்லுவோம்னு.

* வேலை வாய்ப்பு - விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு, நிறைய பசங்க ஊரை விட்டு பெங்களூர், சென்னைனு போய் கொளுத்து வேலை செஞ்சிட்டு இருக்காங்க. அவுங்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தா நல்லா இருக்கும். தமிழ் நாட்லயே அதிகமா சர்க்கரை உற்பத்தி பண்றது எங்க ஊர்ல தான். அதே மாதிரி விசு அரட்டை அரங்கத்துல சொன்ன மாதிரி தமிழ்நாட்டின் இரண்டாவது நெல் களஞ்சியம்னு சொல்ற மாதிரி நிறைய அரிசி ஆலைகளும் இருக்கு. ஆனா அது எல்லாமே இப்ப பெருசா இயங்கற மாதிரி தெரியலை. அதை எல்லாம் மறுபடியும் பழைய படி கொண்டு வரணும்.

* சுகாதாரம் - கள்ளக்குறிச்சில இன்னும் முக்கியமான தெருல எல்லாம் கூட மூக்கை மூடிட்டு தான் நடக்க வேண்டியது இருக்கு. இத்தனைக்கும் பாரதி ஸ்கூல் தெரு (சிதம்பரம் பிள்ளை

தெரு இல்லை, மகாலட்சுமில இருந்து வர தெரு) இன்னும் கப்படிச்சிட்டு தான் இருக்குது. அதே மாதிரி இன்னும் பல இடங்களில் சாக்கடை வசதி சரியாக இல்லை. கலைஞர் ஆட்சியில் சிமெண்ட் ரோடும் சாக்கடையும் போடப்பட்டது ஆனால் இரண்டையும் தனித்தனியாக காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள். அதனால் சாக்கடை காண்ட்ராக்ட் எடுத்தவர் ஒரு அடிக்கூட சரியாக சாக்கடைக்கு குழி வெட்டாமல் இன்னும் கொடுமையாக நாற்றம் அடித்து கொண்டும், கொசு உற்பத்தி தொழிற்சாலையாகவும் இருக்கிறது.

* கல்வி - எங்க ஊர் அரசு பள்ளி மாதிரி ஒரு கேவலமான பள்ளிக்கூடத்தை பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு கேவலமான ரிசல்ட் தான் வரும். எல்லா டீச்சர்ஸும் இன்னும் டியூஷன் வெச்சி கொள்ளை அடிச்சி பசங்க வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்காங்க. எங்க ஊர் பசங்க எல்லாம் கடலூர், ராசிபுரம், நாமக்கல்னு போய் ஹாஸ்டல்ல தான் தங்கி படிக்கறாங்க. நான் பத்தாவதுல எடுத்த மார்க் தான் (நான் படிச்சது கடலூர் மாவட்டம்), விழுப்புரம் மாவட்டத்தின் முதல் மதிப்பெண்ணாக இருந்தது. அதே மாதிரி பணிரெண்டாவதுல நான் ராசிபுரம் SRVல எடுத்த மதிப்பெண்ணை விட எங்க ஊர்ல முதல் மார்க் குறைவு (AKTல கூட அதைவிட குறைவு. அப்ப அரசு பள்ளில கேட்கவே தேவையில்லை).

அதே மாதிரி நல்ல கல்லூரிகளும் இல்லை. நல்ல பள்ளியே இல்லைனு சொல்லும் பொது நல்ல கல்லூரிக்கு எங்க போறது. எங்க பக்கத்துல இருக்குற நெய்வேலி, ராசிபுரம், திருக்கோவிலூர்ல எல்லாம் கூட நல்ல பள்ளிக்கூடம் இருக்கு. ஆனா எங்க ஊர்ல இல்லை.

* கந்துவட்டி - எங்க ஊர்ல இந்த கந்துவட்டி பிரச்சனை ரொம்ப அதிகம். இதை யாராலயும் திருத்த முடியாதுனு தான் நினைக்கிறேன். பொதுவா இந்த கந்து வட்டி எப்படி இருக்கும்னா காலைல ஆயிரம் ரூபாய் கடன் அப்படினு சொல்லி 900 ரூபாய் வாங்கி போய் காய்கறி எல்லாம் வாங்கிட்டு வருவாங்க. சாயந்திரம் எட்டு மணிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கனும். இது தின வியாபாரம் செய்யறவங்களுக்கு. ஆனா இவுங்களுக்கு எல்லாம் கடன் கொடுத்து உதவ கூட்டுறவு வங்கிகள் முன்வருவதில்லை.

* சாலை வசதி - எங்க ஊரு NH 68 ல இருக்குதுனு தான் பேரு. அந்த அளவுக்கு மோசமான ஒரு ஹைவே தமிழ்நாட்லே பார்க்க முடியாது. வருஷம் வருஷம் ரோடு போடுவாங்க. அந்த வருஷம் மழைல ரோடே அடிச்சிட்டு போயிடும். வெள்ளக்காரன் போட்ட ரோடெல்லாம் இன்னும் நல்லா இருக்கு. ஆனா நம்ம ஆளுங்க போடறது ஒரு வருஷம் கூட தாங்க மாட்டீங்குது. இத்தனை குண்டுங்குழியுமா ரோடு வேற எங்காவது பார்க்க முடியுமானு தெரியலை. இதை எப்ப சரியா பண்ணுவாங்கனு தெரியல.

* ரயில் வசதி - எங்க ஊருக்கு ட்ரெயின் வரப்போகுதுனு ஒரு அம்பது வருஷமா சொல்லிட்டு இருக்காங்களாம். இன்னும் ட்ரெயின் வர வழியைக் காணோம். போன முறை எங்க ஊர்ல இருந்து மத்திய அமைச்சர் ஆன வேங்கடபதி ஏதாவது செய்வார்னு பார்த்தேன். அவர் எங்க ஊருக்கு மட்டுமில்லை, தமிழ்நாட்டுக்கே எதுவும் செய்யல. எப்படியாவது ட்ரெயின் வந்துடும்னு நினைச்சேன். ஆனா வரலை. இந்த முறையாவது யாராவது கொண்டு வருவாங்களானு தெரியலை.

விழிப்புணர்வு - கல்வராயன் மலைல இன்னும் மலைவாழ் மக்கள் சுத்தமா படிப்பறிவே இல்லாம இருக்காங்க. அவர்களிடையே கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு முதல்ல அவுங்களோட சமூக பொறுப்புகளை எடுத்து சொல்லி கல்வியறிவைப் பெருக்க வேண்டும்.

இப்பொழுதைக்கு இவ்வளவு தான். இதை யாராவது சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி எங்க தொகுதில ஏதாவது நல்லது நடந்தா சரி.

25 comments:

புன்னகை said...

பாலாஜி நல்லா எழுதியுருக்கிங்க
எந்த கட்சியையும் சாராத வாக்காளனா
இதை ஒரு தொடர் பதிவா கூப்பிட்டா
(தொகுதிகளின் பிரச்னைகளை , எதிர்பார்ப்பை வெளிபடுத்தற மாதிரி )
நல்லா இருக்கும்

Subbu said...

//பாமக பற்றி சொல்லவேத் தேவையில்லை. இது தென்னாற்காடு மாவட்டம். கனிசமான வன்னியர் ஓட்டு இருக்கு//

மெய்யாலுமா :))

வெட்டிப்பயல் said...

// புன்னகை said...
பாலாஜி நல்லா எழுதியுருக்கிங்க
எந்த கட்சியையும் சாராத வாக்காளனா
இதை ஒரு தொடர் பதிவா கூப்பிட்டா
(தொகுதிகளின் பிரச்னைகளை , எதிர்பார்ப்பை வெளிபடுத்தற மாதிரி )
நல்லா இருக்கும்//

மிக்க நன்றி புன்னகை. ஆனா இந்த மாதிரி தொடர் பதிவுகள் எனக்கே அலர்ஜி :-)

இதை யாராவது தொடர்ந்தால் எனக்கும் மகிழ்ச்சியே :-)

வெட்டிப்பயல் said...

//Subbu said...
//பாமக பற்றி சொல்லவேத் தேவையில்லை. இது தென்னாற்காடு மாவட்டம். கனிசமான வன்னியர் ஓட்டு இருக்கு//

மெய்யாலுமா :))//

இல்லாமலா இவ்வளவு தொந்தரவு கொடுத்தும் எல்லாரும் சேர்த்துக்கறாங்க :-)

Subbu said...

// வெட்டிப்பயல் said...
இல்லாமலா இவ்வளவு தொந்தரவு கொடுத்தும் எல்லாரும் சேர்த்துக்கறாங்க :-)
//

இல்ல நான்கூடடடடடடடடடடட வ----------

வெட்டிப்பயல் said...

//Subbu said...
// வெட்டிப்பயல் said...
இல்லாமலா இவ்வளவு தொந்தரவு கொடுத்தும் எல்லாரும் சேர்த்துக்கறாங்க :-)
//

இல்ல நான்கூடடடடடடடடடடட வ----------//

இருக்கலாம்... ஆனா இன்னும் நிறைய பேர் அந்த ஒரு காரணத்துக்காக தானே ஆதரிக்கறாங்க :-)

Subbu said...

//இருக்கலாம்... ஆனா இன்னும் நிறைய பேர் அந்த ஒரு காரணத்துக்காக தானே ஆதரிக்கறாங்க :-)//

அதென்னவோ உன்மைதாங்க :(

வித்யா said...

அண்ணே நம்ம ஊர்காரரா நீங்க. நானும் கள்ளக்குறிச்சி தான். ஏமப்பேர் கிராமம்:)

வெட்டிப்பயல் said...

//Subbu said...
//இருக்கலாம்... ஆனா இன்னும் நிறைய பேர் அந்த ஒரு காரணத்துக்காக தானே ஆதரிக்கறாங்க :-)//

அதென்னவோ உன்மைதாங்க :(

1:10 AM//

அதான் சுப்பு. நமக்கு பிடிக்கலைங்கறது வேற. உண்மை நிலைமை வேற :-)

வெட்டிப்பயல் said...

//வித்யா said...
அண்ணே நம்ம ஊர்காரரா நீங்க. நானும் கள்ளக்குறிச்சி தான். ஏமப்பேர் கிராமம்:)

1:16 AM//

வாவ் சூப்பர்...

நான் கள்ளக்குறிச்சியே தான்மா... நான் சொல்லாம விட்டதை நீயும் சேர்த்து சொல்லேன் :-)

ஏமப்பேர்ல சொசைட்டில தான் எங்க மாமா வேலை செஞ்சாரு. அப்ப அப்ப கரும்புச்சாரு கொண்டு வருவாரு. சூப்பரா இருக்கும் :-)

பாட்டாளி said...

இது பார்லிமென்ட் தேர்தல்,அப்படியே சேலம் மாவட்டம் ஆத்தூர்,வாழப்பாடி பகுதியையும் பற்றி எழுதியிருக்கலாம.

நாகை சிவா said...

நல்ல பதிவு வெட்டி!

Poornima Saravana kumar said...

வெட்டிப்பயல் said...
//வித்யா said...
அண்ணே நம்ம ஊர்காரரா நீங்க. நானும் கள்ளக்குறிச்சி தான். ஏமப்பேர் கிராமம்:)

1:16 AM//

வாவ் சூப்பர்...

நான் கள்ளக்குறிச்சியே தான்மா... நான் சொல்லாம விட்டதை நீயும் சேர்த்து சொல்லேன் :-)

ஏமப்பேர்ல சொசைட்டில தான் எங்க மாமா வேலை செஞ்சாரு. அப்ப அப்ப கரும்புச்சாரு கொண்டு வருவாரு. சூப்பரா இருக்கும் :-)

//

ஆஹா ஊர்காரங்க எல்லாம் ஒன்னு சேர்ந்திட்டாங்க போல!

கார்த்தி said...

sir, paathu itha vechey nammaluha therthal arikai ready panniduvainga....

Divyapriya said...

nallaa eludhi irukkeenga anna...niraiya korikkai irukku pola? :) idhellaam namma naatla niraiveradhukku ethana varusham aagumne solla mudiyale :(

Mohan said...

அட வெட்டிப்பயல்! நீங்க கள்ளக்குறிச்சியா? நான் ஆத்தூர் தான்! இந்த தடவை ஆத்தூர், ராசிபுரம் பாராளுமன்ற தொகுதில இருந்து கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதில சேர்த்துட்டாங்க....
நல்லா அலசி ஆராய்ந்து எழுதி இருக்கீங்க...வாழ்த்துக்கள்!

வெட்டிப்பயல் said...

//பாட்டாளி said...
இது பார்லிமென்ட் தேர்தல்,அப்படியே சேலம் மாவட்டம் ஆத்தூர்,வாழப்பாடி பகுதியையும் பற்றி எழுதியிருக்கலாம.//

வெச்சிக்கிட்டா பாஸ் வஞ்சனை பண்றோம். நமக்கு அந்த ஏரியால பிரச்சனை என்னனு அதிகமா தெரியாதே :-(

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...
நல்ல பதிவு வெட்டி//

நன்றி புலி :-)

வெட்டிப்பயல் said...

//Poornima Saravana kumar said...
வெட்டிப்பயல் said...
//வித்யா said...
அண்ணே நம்ம ஊர்காரரா நீங்க. நானும் கள்ளக்குறிச்சி தான். ஏமப்பேர் கிராமம்:)

1:16 AM//

வாவ் சூப்பர்...

நான் கள்ளக்குறிச்சியே தான்மா... நான் சொல்லாம விட்டதை நீயும் சேர்த்து சொல்லேன் :-)

ஏமப்பேர்ல சொசைட்டில தான் எங்க மாமா வேலை செஞ்சாரு. அப்ப அப்ப கரும்புச்சாரு கொண்டு வருவாரு. சூப்பரா இருக்கும் :-)

//

ஆஹா ஊர்காரங்க எல்லாம் ஒன்னு சேர்ந்திட்டாங்க போல!//

ஹா ஹா ஹா

வெட்டிப்பயல் said...

//கார்த்தி said...
sir, paathu itha vechey nammaluha therthal arikai ready panniduvainga....

11:18 AM//

ஏதாவது நல்லது பண்ணா ஓகே தான் :-)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...
nallaa eludhi irukkeenga anna...niraiya korikkai irukku pola? :) idhellaam namma naatla niraiveradhukku ethana varusham aagumne solla mudiyale :(//

ரொம்ப வருஷமா எதுவுமே நடக்கலையே. அதான் வாய்ப்பு கிடைச்சவுடனே போட்டு தாக்கறோம் :-)

வெட்டிப்பயல் said...

// Mohan said...
அட வெட்டிப்பயல்! நீங்க கள்ளக்குறிச்சியா? நான் ஆத்தூர் தான்! இந்த தடவை ஆத்தூர், ராசிபுரம் பாராளுமன்ற தொகுதில இருந்து கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதில சேர்த்துட்டாங்க....
நல்லா அலசி ஆராய்ந்து எழுதி இருக்கீங்க...வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி மோகன்...

அப்படியே ஆத்தூர்ல இருக்குற பிரச்சனை பற்றி கொஞ்சம் சொல்லலாமே :-)

குறும்பன் said...

இராசிபுரத்துக்கும் கள்ளக்குறிச்சிக்கும் என்ன தொடர்பு? விளங்கலையே? ரிஷிவந்தியம் இவ்வளவு நாளா கடலூர் தொகுதியில் இருந்தது. இப்ப கள்ளக்குறிச்சிக்கு வந்திருக்கு. கள்ளக்குறிச்சிக்கு இப்பதான் தனியாக சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி அந்தஸ்து கிடைச்சிருக்கு. கள்ளக்குறிச்சி கொடுத்து வச்ச ஊருங்க.

தேமுதிக யாரோட வாக்குகளை அதிகம் பிரிக்குமோ அவங்களுக்கு ஆப்பு.

அது சரி said...

நல்ல பதிவு... யார் ஜெயிப்பாங்கன்னு சொல்ல முடியாது...ஆனா யார் ஜெயிச்சாலும் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சி நீங்க இதை மீள்பதிவா போடலாம்...

Boston Bala said...

நன்றி!

தொகுதி விசயங்களை அவ்வப்போது தொடரவும்.

அப்பாவுடன் ஒரு பாட்காஸ்ட் போடலாமே?