தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, April 17, 2009

தல, தள ரசிகர்களுக்கு...

ஆர்குட்ல அடிச்சிக்கிட்டீங்க விட்டாச்சு. யூ ட்யூப்ல அடிச்சிக்கிட்டீங்க, பார்த்து சிரிச்சிட்டு விட்டாச்சு. இப்ப வலைப்பதிவுலயும் ஆரம்பிச்சிட்டீங்களா?

விஜய் வில்லுல நடிச்சா, அஜித் போட்டி போட்டு ஏகன்ல நடிப்பாரு. அதாவது அவர் தம்பி டைரக்ட் பண்ற படத்துல நடிச்சா, இவர் அண்ணன் டைரக்ட் பண்ற படத்துல நடிப்பாராம். ரெண்டுமே கேவலமா இருந்தது அடுத்த விஷயம்.

இப்படி ரெண்டு பேருமே போட்டி போட்டு மக்களை டார்ச்சர் தான் பண்றாங்க. அப்படி இருக்கும் போது நீங்க இப்படி அலப்பற கொடுக்கறீங்களே. உங்களுக்கே இது நியாயமா இருக்கா?
நீங்க எல்லாம் கொடுக்கற அலப்பறைல தான் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பஞ்ச டயலாக் சாரி சாரி.. பஞ்ச் டயலாக் பேசி டார்ச்சர் பண்றாங்க. ஒருத்தர் தெலுகு படத்தை ரீமேக் பண்ணா இன்னொருத்தர் போட்டி போட்டு தமிழ் படத்தையே ரீமேக் பண்றார். இந்த கொடுமைக்கு நீங்க இவ்வளவு பில்ட் அப் கொடுத்துட்டு இருக்கீங்க.

ஒழுங்கா பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும்னு நடிச்சிட்டு இருந்த விஜயையும், வாலி, அமர்க்களம், முகவரினு நடிச்சிட்டு இருந்த அஜித்தையும் ஏத்திவிட்டு ஏத்திவிட்டு உருப்படியில்லாம பண்ணிட்டீங்க. இப்பவாவது நீங்க அடங்கினா தானா அவுங்களும் நல்ல படத்துல நடிக்க ஆரம்பிப்பாங்க. அது தான் எல்லார் ஆசையும்.

7 comments:

கார்த்தி said...

ஹ ஹ ஹ ஹ என்ன சார் திடீர்னு அவங்கள "நடிக்க" சொல்லீடீங்க. :) இந்த வருடம் எத்தன தெலுங்கு படம் ஹிட் தெரியுமா, இன்னும் அதெல்லாம் இன்னும் ரீமேக் பண்ணனும் இல்ல ??

பதி said...

//ஏத்திவிட்டு ஏத்திவிட்டு உருப்படியில்லாம பண்ணிட்டீங்க. இப்பவாவது நீங்க அடங்கினா தானா அவுங்களும் நல்ல படத்துல நடிக்க ஆரம்பிப்பாங்க. அது தான் எல்லார் ஆசையும்.//

ஆனாலும் உங்க ஆசை பேராசைனு உங்களுக்கே தெரியலை?

:)

நாகை சிவா said...

ஏன் வெட்டி!

நேரத்தை வேஸ்ட் பண்ணுற....

அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகனும் என்ற ஆசை மட்டும் இருந்தால் பத்தாது. அதுக்கான உழைப்பும் வேணும். வெட்டி பந்தா வுக்கு தான் லாய்க்கு

விடு விடு

இதுவும் கடந்து போகும்!

அடுத்து எங்க தானை தலைவர் ரீத்திஷ் வராரு!

Divyapriya said...

sariyaa sonnengnaa :)

பாபு said...

athellaam kandukkaatheenga

கவிதா | Kavitha said...

இரண்டும் இரண்டு வேஸ்டுங்க..

அதுங்கள பத்தி பேசினா நாமளும் வேஸ்டா ஆகிடுவோம்..

என்ன.. இவங்களும் அரசியல் ல வந்து நம்ம உயிரை வாங்காமல் இருந்தால் நலம்.. ! :)

Poornima Saravana kumar said...

ஒழுங்கா பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும்னு நடிச்சிட்டு இருந்த விஜயையும், வாலி, அமர்க்களம், முகவரினு நடிச்சிட்டு இருந்த அஜித்தையும் ஏத்திவிட்டு ஏத்திவிட்டு உருப்படியில்லாம பண்ணிட்டீங்க. இப்பவாவது நீங்க அடங்கினா தானா அவுங்களும் நல்ல படத்துல நடிக்க ஆரம்பிப்பாங்க. அது தான் எல்லார் ஆசையும்//

நானும் இந்த மாதிரிதான் அப்பப்போ சொல்லுவேன்:))