தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, April 30, 2009

தருண் கதைகள்

கடவுள் நம்பிக்கை சின்ன வயசுல சொல்லி சொல்லி தான் வருதுனு நிறைய பேர் சொல்றாங்க. அதைப் பற்றி பெரிய விவாதம் எல்லாம் கூட என் வலைப்பதிவுல நடந்திருக்கு. ஆனா நாத்திகம் வயது வந்து பக்குவம் வந்தவுடன் ஏற்பதுனு அங்க சொல்லியிருந்தாங்க. அது எந்த அளவுக்கு உண்மைனு தெரியலை.

என் அக்கா பையனுக்கு சின்ன வயசுல இருந்து கடவுள் நம்பிக்கை இல்லை. சின்ன வயசுனா மூணு வயசுல இருந்தே. இப்ப ஆறு வயசு தான் ஆகுது. இங்க ஆத்திகமா, நாத்திகமானு நான் விவாதிக்க விரும்பல. சில அழகான விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அவனுக்கு மூணு வயசாகும் போது சாமி கும்பிட வர மாட்றான், கோவிலுக்கு வர மாட்றான், அப்படியே வந்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் பண்றானு அக்காவுக்கு ரொம்ப வருத்தம். அப்படியே வந்தாலும் நிறைய கேள்வி.

பிள்ளையாரு இவ்வளவு குண்டா இருக்காரு, அவரு ஏன் எலி மேல போறாரு. எலி வேணா யானை மேல போகலாம், யானை போய் எலி மேல போக முடியுமா?இது தான் எங்க அக்கா என்கிட்ட அவனைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ண முதல் கேள்வி.

அடுத்து, சாமி எல்லாம் ஏன் கல்லா இருக்கு? (கல்லுல ஏன் சாமி செய்யறாங்கனு கேக்கல)

ராமருக்கு துப்பாக்கி சுட தெரியுமா?

இந்த மாதிரி தினமும் ஏதாவது கேள்வி கேட்டுட்டு இருந்தான். இப்ப கேள்வி கேக்கறதை விட்டுட்டு கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. தினமும் ஏதாவது ஒரு கதை.

அவர் கடைசியா சொன்ன கதை கேட்டு எனக்கே ஒரே சிரிப்பு. ஜெய் ஹனுமான் பார்த்துட்டு இருந்தான். உடனே அக்காகிட்ட கதை சொல்ல ஆரம்பிச்சிட்டானாம்.

அம்மா "அனுமான் பொறக்கும் போது க்ரிஸ்டியனா பொறந்தாரும்மானு."

உடனே அக்கா, "என்னடா உளர்ற?" அப்படினு கேட்டுருக்காங்க.

"ஆமாம்மா. சீரியஸா தான் சொல்றேன். அவர் முதல்ல க்ரிஸ்டியனா பொறந்தாரு. அப்பறம் அவருக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசை வந்துடுச்சி. உடனே பெருமாள் சாமிட்ட போய் எனக்கு கல்யாணம் பண்ணி வைனு சொல்லிருக்காரு.

அப்ப பெருமாள் தான் இவரை ஹிந்துவா மாறினா தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேனு சொல்லிட்டாரு. உடனே இவரும் மாறிட்டாரு. அப்பறம் பெருமாள் இவரை உன் அழகுக்கு பொண்ணே கிடைக்கலனு சொல்லி ஏமாத்திட்டாரு."

அப்படினு சொல்லிருக்கான். அக்கா இதை என்கிட்ட சொல்லி, இவனுக்கு எப்படித்தான் இதெல்லாம் தோணுதுனே புரியலனு சொல்லி ஃபீல் பண்ணாங்க.

அவர் பேரு தருண். இனிமே அவர் கதைகளை எல்லாம் என் வலைப்பதிவுல தொகுக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்.

குழந்தைகளின் உலகம் அழகானது மட்டுமல்ல ஆச்சரியமானதும் கூட.

11 comments:

Suresh said...

அருமை :-)

ILA said...

மணிரத்னம் படத்துல வர கொழைந்தயாட்டம் இல்லே .. பேச்சு

கோபிநாத் said...

\\அவர் பேரு தருண். இனிமே அவர் கதைகளை எல்லாம் என் வலைப்பதிவுல தொகுக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்\\

சூப்பர் ஐடியா!!..செய்யுங்கள் பாலாஜி ;)

வெட்டிப்பயல் said...

//Suresh said...
அருமை :-)

2:12 PM//

மிக்க நன்றி சுரேஷ்... ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்கீங்க போல :-)

வெட்டிப்பயல் said...

// ILA said...
மணிரத்னம் படத்துல வர கொழைந்தயாட்டம் இல்லே .. பேச்சு//

அவ்வளவு எல்லாம் இருக்காது. ஆனா நான் ஆச்சரியப்படற அளவுக்கு இருக்கும் ;-)

வெட்டிப்பயல் said...

//கோபிநாத் said...
\\அவர் பேரு தருண். இனிமே அவர் கதைகளை எல்லாம் என் வலைப்பதிவுல தொகுக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்\\

சூப்பர் ஐடியா!!..செய்யுங்கள் பாலாஜி ;)

6:21 PM//

மிக்க நன்றி கோபி...

நிச்சயம் செய்திடுவோம் :-)

Boston Bala said...

அருமை!

Divyapriya said...

haa haa haa :D nalla irukku...thodarunga...

மங்களூர் சிவா said...

:)))))))))))
கலக்கறான் போங்க!

ஹர்ஷினி அம்மா - said...

/குழந்தைகளின் உலகம் அழகானது மட்டுமல்ல ஆச்சரியமானதும் கூட./

சில சமையம் அவர்களின் வேடிக்கை பேச்சு நம்மை யோசிக்க வைக்கும்

குமரன் (Kumaran) said...

:-)