தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, April 01, 2009

ஓட்டு குத்தியாச்சா?

என்னடா எலக்‌ஷனுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கே அதுக்குள்ள ஓட்டு போட சொல்றானேனு பார்க்கறீங்களா?

இது அந்த ஓட்டு இல்லைங்க. நம்ம ப்ளாகுட்ல நடத்தின கல்லூரி போட்டிக்கு. இந்த முறை போட்டில இருக்கற படைப்புகள் கொஞ்சம் சுமார் தான் (என் கதையையும் சேர்த்து தான் சொல்றேன்). அதனால ஓட்டு குத்தாம போயிடாதீங்க. இப்ப நீங்க கொடுக்கற உற்சாகம் தான் அடுத்த போட்டிக்கு டானிக்கா இருக்கும். 

என் படைப்புக்கான லிங் இதோ. படிச்சிட்டு ஓட்டு போடுங்க. அப்படியே நர்சிம்மோட இந்த தொடரை தவற விட்டவங்களும் படிங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச படைப்பு இது தான்.

மத்த படைப்புக்கான லிங் எல்லாம் ஓட்டு போடற பக்கத்துலயே இருக்கு. படிச்சி பக்குவமா குத்துங்க மக்கா.  அப்பறம் கள்ள ஓட்டு குத்தினா ஐயாயிரம் கொடுக்க இது திருமங்களம் இடை தேர்தல் இல்லை. அதனால ஒரு படைப்பு ஒண்ணு மட்டும் குத்துங்க.


15 comments:

உள்ளத்தில் இருந்து.. said...

ரொம்ப நாளைக்கு முன்னாடியே போட்டாச்சு உங்களுக்கு.

எனக்கு ரொம்ப பிடிச்சது சத்யராஜ்குமாரோட கல்லறை ஆட்டம் தான்.

அது சரி என்னைக்கு ரிசல்ட் ?

வெட்டிப்பயல் said...

//உள்ளத்தில் இருந்து.. said...
ரொம்ப நாளைக்கு முன்னாடியே போட்டாச்சு உங்களுக்கு.

எனக்கு ரொம்ப பிடிச்சது சத்யராஜ்குமாரோட கல்லறை ஆட்டம் தான்.

அது சரி என்னைக்கு ரிசல்ட்?//

அது ஏப்ரல் 9

ஓட்டு போட்டதுக்கு நன்றி...

சத்யராஜ்குமாரோடது எனக்கும் பிடிச்சிது. ஆனா அது என்னோட கல்லூரி நினைவுகளைக் கிளறவில்லை.

ஒரு நல்ல (திகில்) கதையை படித்த திருப்தி இருந்தது. ஆனா தலைப்புக்கு எந்த அளவுக்கு நியாயம் செய்ததுனு சொல்லத் தெரியவில்லை :-(

இது என்னோட தனிப்பட்ட கருத்து... அவர் ரேஞ்ச் எல்லாம் தனி :-)

Sampath said...

// அப்பறம் கள்ள ஓட்டு குத்தினா ஐயாயிரம் கொடுக்க இது திருமங்களம் இடை தேர்தல் இல்லை //
காசு குடுக்காம ஓட்டு போடா சொல்லி நீங்க தமிழனை கேவலப்படுத்துறீங்க .... ஐயாயிரம் குடுக்கலைன்னா கூட பரவால்ல .... ஒரு ஐநூறாவது குடுங்கப்பு .... அட அதுவும் கூட முடியலைன்னா ஒரு ஐம்பது ரூபாயாவது .... வாங்கி வாங்கி பழக்கமாயிடுச்சுங்க எங்களுக்கு ....

சரி சரி உங்களுக்கு ஒரு ஓட்ட குத்தியாச்சு ... மறக்காம அந்த அமௌன்ட் / டிடி அனுப்பி விடுங்க ....

உள்ளத்தில் இருந்து.. said...

// ஆனா அது என்னோட கல்லூரி நினைவுகளைக் கிளறவில்லை. //

கரெக்ட் தான். கதை அமைந்த விதம் நல்லா இருந்தது. ஆனால் கல்லூரி நினைவுகளை கிளரவில்லை.

கார்க்கி said...

ஆஜர் தல.. இரும்படிக்கிற இடத்தில ஈ... :)))

வெட்டிப்பயல் said...

//கார்க்கி said...
ஆஜர் தல.. இரும்படிக்கிற இடத்தில ஈ... :)))
//

என்னப்பா பண்ணறது ஈயா இருந்தாலும் இரும்பு அடிக்கிற இடத்துல இருக்கறணும்னு ஆசையா இருக்கே. அதான் போக வேண்டியதா போச்சு ;)

வெட்டிப்பயல் said...

//உள்ளத்தில் இருந்து.. said...
// ஆனா அது என்னோட கல்லூரி நினைவுகளைக் கிளறவில்லை. //

கரெக்ட் தான். கதை அமைந்த விதம் நல்லா இருந்தது. ஆனால் கல்லூரி நினைவுகளை கிளரவில்லை.
//

ஆமாம் பாஸ். அதனால தான் நர்சிம் பதிவைக் குறிப்பிட்டேன்.

ஆ! இதழ்கள் said...

தங்கள் ப்ளாகிற்கு “பட்டாம் பூச்சி விருது கொடுத்திருக்கிறோம்”.

http://www.ananthblogs.co.cc/2009/04/blog-post.html

Sridhar Narayanan said...

ஓட்டுப் போட்டாச்சி. ஐயாயிரம் எல்லாம் வேணாம். நாங்களும் ரவுதானுங்களே - #27. நீங்களா பாத்து ஒரு 4, 3... எதுனா போட்டுக் கொடுங்க தல :))

Divyapriya said...

pottudarom :)

வெட்டிப்பயல் said...

//ஆ! இதழ்கள் said...
தங்கள் ப்ளாகிற்கு “பட்டாம் பூச்சி விருது கொடுத்திருக்கிறோம்”.

http://www.ananthblogs.co.cc/2009/04/blog-post.html//

நன்றி பாஸ்...

பதிவு போட்டாச்சு :-)

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...
ஓட்டுப் போட்டாச்சி. ஐயாயிரம் எல்லாம் வேணாம். நாங்களும் ரவுதானுங்களே - #27. நீங்களா பாத்து ஒரு 4, 3... எதுனா போட்டுக் கொடுங்க தல :))//

அதெல்லாம் நீங்க சொல்லனுமா... அப்பவே உங்க பதிவுக்கு ஓட்டு போட்டாச்சு...

உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் ;)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...
pottudarom :)//

டாங்கிஸ் தங்கச்சி :-)

கார்க்கி said...

//என்னப்பா பண்ணறது ஈயா இருந்தாலும் இரும்பு அடிக்கிற இடத்துல இருக்கறணும்னு ஆசையா இருக்கே. அதான் போக வேண்டியதா போச்சு//

தல இப்பதான் பார்த்தேன். நான் சொன்னது என்னை. நீங்க, நர்சிம்ம் இன்னும் பலர் கலக்கிய இடத்தில் நானானு சொன்னேன். இப்படி சொல்லிட்டிங்களே.. :(((((((((

வெட்டிப்பயல் said...

//
கார்க்கி said...
//என்னப்பா பண்ணறது ஈயா இருந்தாலும் இரும்பு அடிக்கிற இடத்துல இருக்கறணும்னு ஆசையா இருக்கே. அதான் போக வேண்டியதா போச்சு//

தல இப்பதான் பார்த்தேன். நான் சொன்னது என்னை. நீங்க, நர்சிம்ம் இன்னும் பலர் கலக்கிய இடத்தில் நானானு சொன்னேன். இப்படி சொல்லிட்டிங்களே.. :(((((((((

//

ஆஹா... பாஸ்டன் பாலா லிஸ்ட்ல முதல் இடத்துல வந்துட்டு இவ்வளவு தன்னடக்கமா? :-))))