தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, April 12, 2009

கோழியின் அட்டகாசங்கள் - 8

இது காலேஜ்ல மூணாவது வருஷம் படிக்கும் போது நடந்தது.

OP ரூமேட் யாரோ ஒரு டேஸ்காலர் பையனோட டிபன் பாக்ஸை ஹாஸ்டலுக்கு எடுத்துட்டு வந்துட்டான். அதைப் பார்த்த உடனே OPக்கு திடீர்னு ஒரு ஐடியா வந்துடுச்சி. அன்னைக்கு பார்த்து ஹாஸ்டல்ல தக்காளி சாதம் போட்டாங்க. போய் அந்த டிபன் பாக்ஸ் முழுசா தக்காளி சாதம் எடுத்துக்கிட்டான்.

ராத்திரி ஒரு பதினோரு மணி இருக்கும். கோழி ரூம் ஒரு செகண்ட் ஃப்ளோர்ல மூலைல இருக்கும். அதுக்கு அடுத்த மூலைல இருக்குற ரூமூக்கு டிபன் பாக்ஸோட போனான் OP. திடீர்னு அங்க இருந்து கத்த ஆரம்பிச்சான், ”டேய் இருமீ சீக்கிரம் வாடா... இங்க சிக்கன் பிரியாணி இருக்கு. தீரப்போகுது சீக்கிரம் வாடா”னு கத்தினான். இருமியும், கோழியும் ஒரே ரூம் தான்.

இருமிக்கு இந்த ப்ளான் ஏற்கனவே தெரியும். அதனால ரூம்ல இருந்து கொஞ்சம் பொறுமையா நடந்து வந்தான். கோழி வேகமா ஓட ஆரம்பிச்சிட்டான். உடனே இருமி, OP கோழி வராண்டா அதை எடுத்துட்டு இந்தப் பக்கம் வந்துடுனு கத்த ஆரம்பிச்சான். உடனே OP அந்த டிபன் பாக்ஸை எடுத்துட்டு வெளிய வந்தான். வெளிய கோழி வேகமா ஓடி வந்துட்டு இருந்தான்.

உடனே OP அந்த பக்கம் படிக்கட்டுல இறங்கி ஓட ஆரம்பிச்சிட்டான். கோழியும் அவனை விடாம துரத்தினான். இப்படியே ஹாஸ்டலயே மூணு ரவுண்ட் சுத்தி வந்துட்டானுங்க. ஒரு இருபது முப்பது நிமிஷம் ஓடிருப்பானுங்க. ஒரு வழியா OP கோழி ரூம் முன்னாடியே மாட்டிக்கிட்டான். கோழி அந்த டிபன் பாக்ஸை எடுத்துட்டு ரூமுக்கு ஓடினான். உடனே அந்தப் பக்கம் இருந்த பசங்க எல்லாரும் கோழி ரூமுக்கு ஓடினாங்க.

வேகமா டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட ஆரம்பிச்சான். எல்லா பசங்களும் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிட்ட உடனே கண்டுபிடிச்சிட்டாங்க. கோழி மட்டும் அதைக் கவனிக்காம டிபன் பாக்ஸ் முழுசா சாப்பிட்டுட்டான். யாருமே அவன்கிட்ட அவன் சாப்பிட்டு முடிக்கற வரைக்கும் எதுவும் சொல்லலை. அவன் சாப்பிட்ட வேகத்தைப் பார்க்கணுமே. முப்பது செகண்ட்ல டிபன் பாக்ஸ் காலி. சாப்பிட்டு முடிச்சிட்டு பாக்கறான். எல்லாரும் அவனை ஒரு மாதிரியாப் பார்க்கறானுங்க. ”இது மெஸ்ல போட்ட தக்காளி சாதம்டா கோழி”னு பொறுமையா ஒருத்தன் சொல்றான்.

உடனே, அவனை டேப்பரா பார்த்துட்டு, கோழி சொன்னான் “இந்த மாதிரி ஹாஸ்டலை மூணு சுத்து சுத்தி வந்தா தக்காளி சாதம் கூட சிக்கன் பிரியாணி மாதிரி தாண்டா தெரியும்”.

13 comments:

ஆயில்யன் said...

பாவம் அந்த பயபுள்ளைய ஒரு பிரியாணிக்காக இப்படி ஓடவிட்டுட்டீங்களேப்பா :(

//உடனே, அவனை டேப்பரா பார்த்துட்டு, கோழி சொன்னான் “இந்த மாதிரி ஹாஸ்டலை மூணு சுத்து சுத்தி வந்தா தக்காளி சாதம் கூட சிக்கன் பிரியாணி மாதிரி தாண்டா தெரியும்”.
//

ஆனாலும் சிங்கம் அசிங்கப்படலை பார்த்தீங்களா.....!

:))

வெட்டிப்பயல் said...

// ஆயில்யன் said...
பாவம் அந்த பயபுள்ளைய ஒரு பிரியாணிக்காக இப்படி ஓடவிட்டுட்டீங்களேப்பா :(
//
ஹாஸ்டல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தானே :-)

//
//உடனே, அவனை டேப்பரா பார்த்துட்டு, கோழி சொன்னான் “இந்த மாதிரி ஹாஸ்டலை மூணு சுத்து சுத்தி வந்தா தக்காளி சாதம் கூட சிக்கன் பிரியாணி மாதிரி தாண்டா தெரியும்”.
//

ஆனாலும் சிங்கம் அசிங்கப்படலை பார்த்தீங்களா.....!

:))//

அதெல்லாம் அவன் சொல்லிட்டா நாங்க விட்டுடுவோமா? இதை பல தடவை சொல்லி கேவலப்படுத்தியாச்சி இல்லை :-)

ஆ! இதழ்கள் said...

ம்ம்... இனிமையான நினைவுகள்.

Anonymous said...

//“இந்த மாதிரி ஹாஸ்டலை மூணு சுத்து சுத்தி வந்தா தக்காளி சாதம் கூட சிக்கன் பிரியாணி மாதிரி தாண்டா தெரியும்”.//

ஹா ஹா. பாவம் அந்தபுள்ள.

Anonymous said...

thala, in which college did you study. Even in my college hostel such things have happened. Most of the koli incidents have happened in my college/hostel too.

Do every college have a Koli

Divyapriya said...

எனக்கு உங்க பதிவுகள்லையே ரொம்ப பிடிச்சது கோழியின் அட்டகாசங்கள் தான்...ரொம்ப நாள் கழிச்சு இப்ப மறுபடியும்...ஆனா பாவம் கோழி, இப்படி ஓட விட்டுட்டீங்களே :) படிக்க படிக்க, ரொம்பவே சிரிப்பா இருந்துச்சு :))

Mohan said...

ஒரு பச்சப் புள்ளைய கதற கதற ஓட விட்டு சாப்பிட விட்டிருக்கீங்க! ம்ம்...

Saravana Kumar MSK said...

//Divyapriya said...

எனக்கு உங்க பதிவுகள்லையே ரொம்ப பிடிச்சது கோழியின் அட்டகாசங்கள் தான்...ரொம்ப நாள் கழிச்சு இப்ப மறுபடியும்...ஆனா பாவம் கோழி, இப்படி ஓட விட்டுட்டீங்களே :) படிக்க படிக்க, ரொம்பவே சிரிப்பா இருந்துச்சு :))//

Rippeettu.. :)

hasan05 said...

Hi!

I'm new in Vettipayal, Very nice story.

Kozhli Oru Kozhlikka ga Oodicham!!

Wish u a Happy Tamil New Year Greetings to All including Kozhli'kkum


Thanks & Regards
T.R.Harihara SudhaN

கெக்கே பிக்குணி said...

//கோழி மட்டும் அதைக் கவனிக்காம டிபன் பாக்ஸ் முழுசா சாப்பிட்டுட்டான்.//
"டிபன் பாக்ஸை" கோழி சாப்பிட்டது. புதுமையோ புதுமை:-)

Poornima Saravana kumar said...

பாவம் கோழி:)

Poornima Saravana kumar said...

இந்த மாதிரி ஹாஸ்டலை மூணு சுத்து சுத்தி வந்தா தக்காளி சாதம் கூட சிக்கன் பிரியாணி மாதிரி தாண்டா தெரியும்
//

:(

கார்க்கி said...

மறுபடியும் கோழியா? என் புட்டிக்கதை ஏழுவை படிச்ச பல பேர் சொன்னது கோழியும் இப்படித்தான்னு.. கொஞ்சம் எனக்காக விட்டுக் கொடுங்களேன்.. நம்ம வியாபராத்த கவுத்துடாதீங்க சகா :))