தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, February 14, 2009

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

இந்த கதை நான் சின்னை வயசுல எப்பவோ படிச்சது. எங்க படிச்சனு ஞாபகமில்லை. யாரும் தரவு கிரவுனு எதுவும் கேட்டுடாதீங்க.

மஹாபாரதத்துல போருக்கான நாள் குறிக்கப்பட்ட பிறகு, போர் வியூகங்களை பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பஞ்ச பாண்டவர்கள், திருஷ்டதுய்மன், கண்ணன் மற்றும் முக்கியமான படை தளபதிகளும் அமர்ந்து விவாதித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் யாசகம் கேட்டு ஒருவன் வந்து வெளியே நிற்கிறான். இதை கேள்விப்பட்டு பீமன் தன் அண்ணன் தருமனிடம் அந்த விஷயத்தை சொல்கிறான்.

முக்கியமான விவாதத்திலிருப்பதால் யாசகம் கேட்டு வந்தவனை நாளை வருமாறு சொல்லி அனுப்ப சொல்கிறான் யுதிஷ்டிரன். உடனே எழுந்து சென்ற பீமன் பலமாக முரசு கொட்டுகிறான். அங்கே அனைவருக்கும் ஆச்சர்யம். எதற்காக பீமன் இப்படி செய்கிறான் என்று.

யுதிஷ்டிரன் பீமனை விசாரிக்கிறான். அதற்கு பீமனோ, ”அண்ணா! நீங்கள் காலத்தை வென்று விட்டீர்கள்” என்று உரைக்கிறான். யுதிஷ்டிரனுக்கு விளங்கவில்லை. உடனே பீமன், “அண்ணா, நீங்கள் நாளை வரை உயிரோடு இருப்பீர்கள் என்றும், நாளை வரை யாசகம் கேட்க வந்த அவர் பசியோடு இருந்தாலும் இங்கே வந்து யாசகம் கேட்கும் அளவிற்கு உடல் பலுவோடு இருப்பார் என்றும் வருங்காலத்தை கணித்துவிட்டீர்கள். அப்படியென்றால் நீங்கள் காலத்தை வென்றுவிட்டதாக தானே அர்த்தம். அதான் அதை நான் கொண்டாடுகிறேன்” என்று சொன்னானாம்.

தன் தவறை உணர்ந்த யுதிஷ்டிரன் உடனே அதற்கு மன்னிப்பு கேட்டு, அந்த யாசகம் கேட்டு வந்தவருக்கு பொன்னும் பொருளும் அள்ளி கொடுத்தானாம்.

இந்த கதையின் நியதி : Propose பண்ணி செருப்படி வாங்கனும்னு இருக்கவங்க நாளைக்கு வரைக்கும் தள்ளி போடாதீங்க. இன்னைக்கே எவனாவது உசார் பண்ணிட போறானுங்க. அதனால ஒளவை பாட்டி சொன்ன மாதிரி, நன்றே செய் (நல்ல ஃபிகரா பாரு), ஒன்றே செய் (அதுல ஒரு ஃபிகருக்கு மட்டும் ப்ரபோஸ் பண்ணு), அதுவும் இன்றே செய் (இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணுடா பேமானி)னு ப்ரபோஸ் செஞ்சிடுங்க.

அனைவருக்கும் அன்பர்கள் தின நல்வாழ்த்துகள்!!!


அப்பறம் இந்த தமிழ் பண்பாடு, லொட்டு லொசுக்குனு சொல்றவங்களுக்கு இந்த விடீயோ!!!


25 comments:

கைப்புள்ள said...

//இந்த கதையின் நியதி : Propose பண்ணி செருப்படி வாங்கனும்னு இருக்கவங்க நாளைக்கு வரைக்கும் தள்ளி போடாதீங்க. இன்னைக்கே எவனாவது உசார் பண்ணிட போறானுங்க. அதனால ஒளவை பாட்டி சொன்ன மாதிரி, நன்றே செய் (நல்ல ஃபிகரா பாரு), ஒன்றே செய் (அதுல ஒரு ஃபிகருக்கு மட்டும் ப்ரபோஸ் பண்ணு), அதுவும் இன்றே செய் (இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணுடா பேமானி)னு ப்ரபோஸ் செஞ்சிடுங்க.//

அதுக்கு எதுக்கு வேலண்டைன்ஸ் டே வரைக்கும் வெயிட் பண்ணனும்? ஆடி அமாவாசை நாளு கெழமை எதுவும் பாக்காம பட்டுன்னு சொல்லிட வேண்டியது தானே? உசார் பண்ணனும் முடிவெடுக்கறவனும் வேலண்டைன்ஸ் டே வரைக்கும் வெயிட் பண்ணிக்கிட்டா இருப்பான்?
:))

முரளிகண்ணன் said...

ஆஹா என்ன ஒரு கனெக்சன். புல்லரிக்குது. எனக்கு காதல் வர்ற வயசில இப்படி கீதாபோதேசம் பண்ண ஆளில்லாம் போயிருச்சே!

நாமக்கல் சிபி said...

ஆமாங்க! டிலே பண்ண பண்ண வேற யாராச்சும் உஷார் பண்ணிடுவாங்க!

அப்பப்போ புரபோஸ் பண்ணிடுறது நல்லது!

:(

அபி அப்பா said...

ஜூப்பர் பாலாஜி! அவரு எதுக்கு சொன்னாரு, அதை எங்க கொண்டு வந்து சங்கிலி போடுறீங்க! வர வர மாதவிபந்தல் கீழயே ரொம்ப தங்குறீங்கன்னு நெனைக்கிறேன்:-))

அபி அப்பா said...

ஏற்கனவே குஜால் பாட்டை எல்லாம் கண்ணன் பாட்டா மாத்தினவரு தானே நீங்க! நடத்துங்க!:-))

Unknown said...

நல்ல காரியம் செய்வதை தள்ளிப் போடாமல் நினைத்தவுடன் செய்து விட வேண்டும். நாளை நம் மனதைப் பற்றி நமக்கே தெரியாது. தேவையான நல்ல கருத்து. நன்றி

வெண்பூ said...

ஒன்றே செய்,, நன்றே செய்க்கு இப்படி ஒரு அர்த்தமா? கலக்குங்க..

Anonymous said...

யப்பா பாலாஜி,

முடியலப்பா முடியல.

Divyapriya said...

அன்பர்கள் தினமா? நல்ல translation அண்ணா...

வெட்டிப்பயல் said...

// கைப்புள்ள said...
//இந்த கதையின் நியதி : Propose பண்ணி செருப்படி வாங்கனும்னு இருக்கவங்க நாளைக்கு வரைக்கும் தள்ளி போடாதீங்க. இன்னைக்கே எவனாவது உசார் பண்ணிட போறானுங்க. அதனால ஒளவை பாட்டி சொன்ன மாதிரி, நன்றே செய் (நல்ல ஃபிகரா பாரு), ஒன்றே செய் (அதுல ஒரு ஃபிகருக்கு மட்டும் ப்ரபோஸ் பண்ணு), அதுவும் இன்றே செய் (இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணுடா பேமானி)னு ப்ரபோஸ் செஞ்சிடுங்க.//

அதுக்கு எதுக்கு வேலண்டைன்ஸ் டே வரைக்கும் வெயிட் பண்ணனும்? ஆடி அமாவாசை நாளு கெழமை எதுவும் பாக்காம பட்டுன்னு சொல்லிட வேண்டியது தானே? உசார் பண்ணனும் முடிவெடுக்கறவனும் வேலண்டைன்ஸ் டே வரைக்கும் வெயிட் பண்ணிக்கிட்டா இருப்பான்?
:))//

இதுவரைக்கும் சொல்லலைனா வேஸ்ட்... இதுக்கு மேலயும் சொல்லலைனா டோட்டல் வேஸ்ட் :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
ஆஹா என்ன ஒரு கனெக்சன். புல்லரிக்குது. எனக்கு காதல் வர்ற வயசில இப்படி கீதாபோதேசம் பண்ண ஆளில்லாம் போயிருச்சே!//

ஹி ஹி ஹி...

நமக்கு எப்படியெல்லாம் கனெக்ட் பண்ணனும்னு தோனுதோ அப்படியெல்லாம் பண்ண வேண்டியது தான். மேட்ச் ஆகுதா இல்லையாங்கறது தான் மேட்டர் ;)

வெட்டிப்பயல் said...

// Namakkal Shibi said...
ஆமாங்க! டிலே பண்ண பண்ண வேற யாராச்சும் உஷார் பண்ணிடுவாங்க!

அப்பப்போ புரபோஸ் பண்ணிடுறது நல்லது!

:(//

என்னது அப்பப்போவா????

அதுக்கு தான் நன்றே செய்! ஒன்றே செய்னு சொல்லியிருக்கேன் :)

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...
ஜூப்பர் பாலாஜி! அவரு எதுக்கு சொன்னாரு, அதை எங்க கொண்டு வந்து சங்கிலி போடுறீங்க! வர வர மாதவிபந்தல் கீழயே ரொம்ப தங்குறீங்கன்னு நெனைக்கிறேன்:-))

2:33 AM//

நாங்க மாதவிபந்தல் பக்கமே போறதில்லை...

நானே ”பாலாஜி” தான் :)

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...
ஏற்கனவே குஜால் பாட்டை எல்லாம் கண்ணன் பாட்டா மாத்தினவரு தானே நீங்க! நடத்துங்க!:-))

2:34 AM//

திஸ் இஸ் அ டூ மச்... அது அஜால் குஜால் பாட்டா? இன்னைக்கு மறு பதிப்பு பண்ணிட வேண்டியது தான் :)

வெட்டிப்பயல் said...

//சுல்தான் said...
நல்ல காரியம் செய்வதை தள்ளிப் போடாமல் நினைத்தவுடன் செய்து விட வேண்டும். நாளை நம் மனதைப் பற்றி நமக்கே தெரியாது. தேவையான நல்ல கருத்து. நன்றி//

ஆமாம் சுல்தான். அதற்காக சொல்லப்பட்ட கதை தான். மேலும் நாளை என்பது நம் கையில் இல்லை. அதனால் இன்றே செய்னு சொல்லியிருக்காங்க.

வெட்டிப்பயல் said...

//வெண்பூ said...
ஒன்றே செய்,, நன்றே செய்க்கு இப்படி ஒரு அர்த்தமா? கலக்குங்க//

ஹி ஹி ஹி...

நமக்கு தேவையான மாதிரி அர்த்தம் சொல்லிக்க வேண்டியது தான். மேட்ச் ஆகுதா இல்லையா :)

வெட்டிப்பயல் said...

//வடகரை வேலன் said...
யப்பா பாலாஜி,

முடியலப்பா முடியல.//

வாங்கண்ணா...

ஏதோ நம்மால முடிஞ்சது :0

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

Please sign this petition and FWD it

Appeal to Security Council to End the Humanitarian Crisis in Sri Lanka

http://www.petitiononline.com/sgsl159/petition.html

வேத்தியன் said...

//நன்றே செய் (நல்ல ஃபிகரா பாரு), ஒன்றே செய் (அதுல ஒரு ஃபிகருக்கு மட்டும் ப்ரபோஸ் பண்ணு), அதுவும் இன்றே செய் (இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணுடா பேமானி)னு ப்ரபோஸ் செஞ்சிடுங்க.//

ஓ கிரேட் கிரேட்...
அருமையான விளக்கமுங்க...
:-)

RAMASUBRAMANIA SHARMA said...

காலத்திற்கேற்ற யோசனைகள்....நன்றூ...

வெட்டிப்பயல் said...

// Ravi said...
Please sign this petition and FWD it

Appeal to Security Council to End the Humanitarian Crisis in Sri Lanka

http://www.petitiononline.com/sgsl159/petition.html//

நன்றி ரவி...

வெட்டிப்பயல் said...

// வேத்தியன் said...
//நன்றே செய் (நல்ல ஃபிகரா பாரு), ஒன்றே செய் (அதுல ஒரு ஃபிகருக்கு மட்டும் ப்ரபோஸ் பண்ணு), அதுவும் இன்றே செய் (இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணுடா பேமானி)னு ப்ரபோஸ் செஞ்சிடுங்க.//

ஓ கிரேட் கிரேட்...
அருமையான விளக்கமுங்க...
:-)//

ஹி ஹி ஹி...

நன்றி வேத்தியன் :)

வெட்டிப்பயல் said...

// RAMASUBRAMANIA SHARMA said...
காலத்திற்கேற்ற யோசனைகள்....நன்றூ...

11:52 AM//

நன்றி ராமசுப்ரமணிய ஷர்மா :)

Poornima Saravana kumar said...

//நன்றே செய் (நல்ல ஃபிகரா பாரு), ஒன்றே செய் (அதுல ஒரு ஃபிகருக்கு மட்டும் ப்ரபோஸ் பண்ணு), அதுவும் இன்றே செய் (இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணுடா பேமானி)னு ப்ரபோஸ் செஞ்சிடுங்க.
//

சூப்பர் அண்ணா!!!
சான்சே இல்லை :)