தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, February 11, 2009

பிங் ஜட்டி - வேலடைன்ஸ் டே காமெடி

தொ 1 : இன்னைக்கு சட்டசபைல நம்ம தலைவருக்கு ஒரே பப்பி ஷேமா போயிடுச்சி

தொ 2 : ஏன்?

தொ 1: வழக்கம் போல எதிர்கட்சிக்காரன் வேட்டியை உருவிட்டான்.

தொ 2 : அது எப்பயும் நடக்கறது தானே. அதுல என்ன இருக்கு?

தொ 1 : நம்ம தலைவர் அண்ட்ராயருக்கு பதிலா ஃபிரியா வந்துச்சேனு பிங் ஜட்டி போட்டிருந்தது எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி.

..........

தொ 1: என்ன நம்ம தலைவர் திடீர்னு ரெடிமேட் கடை ஆரம்பிட்டாரு.

தொ 2: எல்லாம் போன வேலண்டைன்ஸ் டேக்கு வந்த பிங் ஜட்டியை வெச்சி என்ன பண்றதுனு தெரியாமத்தான்.

..........

தொ : என்ன தலைவரே திடீர்னு பேண்ட் சட்டைக்கு மாறிட்டீங்க.

த : பிங் ஜட்டி போட்டு வேட்டி கட்டினா பின்னாடி கலர் தெரியுதுனு வீட்ல சொன்னாங்க. அதான்...

..........

தொ 1: என்ன தலைவர் கொஞ்ச நாளா வெளியே வரதில்லை.

தொ 2: எவனோ யூஸ் பண்ண ஜெட்டியை அனுப்பி வெச்சிட்டான். அது தெரியாம நம்ம தலைவர் போட்டு அவருக்கு சொறி, படை வந்துடுச்சு.

..........

தொ 1 : இன்னும் எலக்‌ஷனே வரலை. அதுக்குள்ள பங்கீடு பத்தி பேச்சு வார்த்தை நடத்த பொ.மு.க தலைவர் வந்திருக்காரு.

தொ 2 : எல்லாம் வேலண்டைன்ஸ் டேக்கு வர பிங் ஜட்டியை எப்படி பிரிச்சிக்கறதுனு பேச்சு வார்த்தை மூலமா சுமூக தீர்வு காணத்தான்.

.........

இதுக்கு மேலயும் புரியாதவங்க இந்த வலைப்பதிவை பார்க்கவும்

இதுல என்னோட கருத்து என்னனா, இந்த மாதிரி பிங் ஜட்டி அனுப்பினா, அதை வெச்சும் சம்பாதிக்க ஆரம்பிச்சிடுவாங்க நம்ம அரசியல்வாதிங்க. அவுங்களுக்கு ஏதாவது இப்படி அனுப்பனும்னு நினைச்சா வில்லு பட டீவீடியை அனுப்பி வைக்கவும்.

54 comments:

Namakkal Shibi said...

//இதுல என்னோட கருத்து என்னனா, இந்த மாதிரி பிங் ஜட்டி அனுப்பினா, அதை வெச்சும் சம்பாதிக்க ஆரம்பிச்சிடுவாங்க நம்ம அரசியல்வாதிங்க. அவுங்களுக்கு ஏதாவது இப்படி அனுப்பனும்னு நினைச்சா வில்லு பட டீவீடியை அனுப்பி வைக்கவும்//

நல்ல தொழிலா இருக்கே!

வெட்டிப்பயல் said...

//Namakkal Shibi said...
//இதுல என்னோட கருத்து என்னனா, இந்த மாதிரி பிங் ஜட்டி அனுப்பினா, அதை வெச்சும் சம்பாதிக்க ஆரம்பிச்சிடுவாங்க நம்ம அரசியல்வாதிங்க. அவுங்களுக்கு ஏதாவது இப்படி அனுப்பனும்னு நினைச்சா வில்லு பட டீவீடியை அனுப்பி வைக்கவும்//

நல்ல தொழிலா இருக்கே!
//

தள,
அரசியல்ல இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா? :)

Namakkal Shibi said...

/
தள,
அரசியல்ல இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா? :)//

பின்னே!

ஜாதக அமைப்புப் படி அரசியல்லயும் தலைவர் ரேஞ்சுக்கு வரலாம்னு வாத்தியார் சொல்லி இருக்காரே!

Namakkal Shibi said...

இல்லாமல அட்லீஸ்ட் ஸ்டாலின்(தள)ரேஞ்சுக்கு வந்திருக்கோம்!
:))

ஜெகதீசன் said...

:))

கோவி.கண்ணன் said...

//தொ 1 : நம்ம தலைவர் அண்ட்ராயருக்கு பதிலா ஃபிரியா வந்துச்சேனு பிங் ஜட்டி போட்டிருந்தது எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி.//

:)

நானும் அந்த வெப்சைட் பார்த்தேன்.

ப்ரியா கிடைச்சா பிங்க் ஜட்டிகூட போட்டுக்குவாங்க அரசியல்வாதிங்க - கலக்கிட்டிங்க

வெட்டிப்பயல் said...

.. Namakkal Shibi said...
/
தள,
அரசியல்ல இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா? :)//

பின்னே!

ஜாதக அமைப்புப் படி அரசியல்லயும் தலைவர் ரேஞ்சுக்கு வரலாம்னு வாத்தியார் சொல்லி இருக்காரே!

10:47 PM//

சூப்பர்...

அப்ப அப்படியே நமக்கும் ஒரு சீட் ரிசர்வ் பண்ணிடறேன் :)

வெட்டிப்பயல் said...

// Namakkal Shibi said...
இல்லாமல அட்லீஸ்ட் ஸ்டாலின்(தள)ரேஞ்சுக்கு வந்திருக்கோம்!
:))//

அப்ப இளைய தளபதி போஸ்ட் எனக்கு தானே :)

வெட்டிப்பயல் said...

//ஜெகதீசன் said...
:))//

மிக்க நன்றி ஜெகதீசன் :)

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...
//தொ 1 : நம்ம தலைவர் அண்ட்ராயருக்கு பதிலா ஃபிரியா வந்துச்சேனு பிங் ஜட்டி போட்டிருந்தது எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி.//

:)

நானும் அந்த வெப்சைட் பார்த்தேன்.

ப்ரியா கிடைச்சா பிங்க் ஜட்டிகூட போட்டுக்குவாங்க அரசியல்வாதிங்க - கலக்கிட்டிங்க//

மிக்க நன்றி கோவி... அது ப்ரியா இல்லை ஃப்ரியா :)

ஷங்கர் Shankar said...

// அவுங்களுக்கு ஏதாவது இப்படி அனுப்பனும்னு நினைச்சா வில்லு பட டீவீடியை அனுப்பி வைக்கவும் //

அதுக்கு பிங்க் ஜட்டியே பரவாயில்லை!

வெட்டிப்பயல் said...

//ஷங்கர் Shankar said...
// அவுங்களுக்கு ஏதாவது இப்படி அனுப்பனும்னு நினைச்சா வில்லு பட டீவீடியை அனுப்பி வைக்கவும் //

அதுக்கு பிங்க் ஜட்டியே பரவாயில்லை!

11:12 PM//

என்ன ஷங்கர் இப்படி சொல்லிட்டீங்க. பிங் ஜட்டியை பயன்படுத்த முடியும். விக்க முடியும். அதே வில்லு பட டீவிடியை?

ஸ்ரீதர்கண்ணன் said...

தொ 1: வழக்கம் போல எதிர்கட்சிக்காரன் வேட்டியை உருவிட்டான்.

தொ 2 : அது எப்பயும் நடக்கறது தானே. அதுல என்ன இருக்கு?

தொ 1 : நம்ம தலைவர் அண்ட்ராயருக்கு பதிலா ஃபிரியா வந்துச்சேனு பிங் ஜட்டி போட்டிருந்தது எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி.

செம லொள்ளு சாமி ... முடியல :))))))))))))))

கார்க்கி said...

அதுக்கு எதுக்குண்ணா வில்லு?????

ஆனா ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்..

ஸ்ரீதர்கண்ணன் said...

மிக்க நன்றி கோவி... அது ப்ரியா இல்லை ஃப்ரியா :)

இதுலயும் ஒரு காமெடிஆஆஆஆஆஆ :)

வெட்டிப்பயல் said...

//ஸ்ரீதர்கண்ணன் said...
தொ 1: வழக்கம் போல எதிர்கட்சிக்காரன் வேட்டியை உருவிட்டான்.

தொ 2 : அது எப்பயும் நடக்கறது தானே. அதுல என்ன இருக்கு?

தொ 1 : நம்ம தலைவர் அண்ட்ராயருக்கு பதிலா ஃபிரியா வந்துச்சேனு பிங் ஜட்டி போட்டிருந்தது எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி.

செம லொள்ளு சாமி ... முடியல :))))))))))))))

11:15 PM//

டாங்கிஸ் ஸ்ரீதர்கண்ணன் :)

அபி அப்பா said...

ஜட்டியுமா பிரளயத்தை ஏற்ப்படுத்தும் மை காட்:-))

வெட்டிப்பயல் said...

//கார்க்கி said...
அதுக்கு எதுக்குண்ணா வில்லு?????
//
அப்பறம் எப்படித்தான் அவுங்களை பயமுறுத்தறது... நீங்க வேணா ஏகன் பட டீவிடியை அனுப்புங்க. அதுவும் டெரர் தான் :)

//
ஆனா ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்..
11:15 PM//
மிக்க நன்றி கார்க்கி :)

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...
ஜட்டியுமா பிரளயத்தை ஏற்ப்படுத்தும் மை காட்:-))//

அண்ணே,
அப்படி சொல்லிட்டு இனிமே அதை பயன்படுத்த வேண்டாம்னு முடிவு எடுத்துடாதீங்க :)

வெட்டிப்பயல் said...

//ஸ்ரீதர்கண்ணன் said...
மிக்க நன்றி கோவி... அது ப்ரியா இல்லை ஃப்ரியா :)

இதுலயும் ஒரு காமெடிஆஆஆஆஆஆ :)//

ஹி ஹி ஹி...

ஏதோ நம்மால முடிஞ்சது :)

கைப்புள்ள said...

எல்லா ஜோக்ஸும் சூப்பர். நல்ல டைமிங் போஸ்ட்.

//அவுங்களுக்கு ஏதாவது இப்படி அனுப்பனும்னு நினைச்சா வில்லு பட டீவீடியை அனுப்பி வைக்கவும்.
//

டாக்டரும் தொண்டர் படை எல்லாம் வச்சிருக்காருப்பா...அமெரிக்காவுக்கு ஆட்டோ கீட்டோ அனுப்பிச்சிற போறாரு.
:)

வெட்டிப்பயல் said...

//கைப்புள்ள said...
எல்லா ஜோக்ஸும் சூப்பர். நல்ல டைமிங் போஸ்ட்.
//
டாங்கிஸ் அண்ணா...

//

//அவுங்களுக்கு ஏதாவது இப்படி அனுப்பனும்னு நினைச்சா வில்லு பட டீவீடியை அனுப்பி வைக்கவும்.
//

டாக்டரும் தொண்டர் படை எல்லாம் வச்சிருக்காருப்பா...அமெரிக்காவுக்கு ஆட்டோ கீட்டோ அனுப்பிச்சிற போறாரு.
:)//

ஹி ஹி ஹி...

அப்படியெல்லாம் அனுப்பினா தமிழ்நாட்ல ஆட்டோவே இருக்காது :)

முரளிகண்ணன் said...

வெட்டிப்பயல் பின்னிட்டீங்க

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
வெட்டிப்பயல் பின்னிட்டீங்க//

மிக்க நன்றி முக :)

ஜி said...

செம டைம்லி காமெடிஸ்... :))

வெட்டிப்பயல் said...

//ஜி said...
செம டைம்லி காமெடிஸ்... :))//

மிக்க நன்றி ஜியா :)

Anonymous said...

too good :)

வெண்பூ said...

சான்ஸே இல்லை வெட்டி.. சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வருது..

Subbu said...

முடியல வயிரு வலிக்கிது :)) அழுதுருவேன் ஆமா அழுதுருவேன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

MSV Muthu said...

//ஏதாவது இப்படி அனுப்பனும்னு நினைச்சா வில்லு பட டீவீடியை அனுப்பி வைக்கவும்//

:) :) excellent!

Anonymous said...

Nice jokes. Athuvum Villu CD too good.

வேத்தியன் said...

நல்ல கற்பனைங்க...
:-)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
too good :)//

மிக்க நன்றி நண்பரே!!!

வெட்டிப்பயல் said...

// வெண்பூ said...
சான்ஸே இல்லை வெட்டி.. சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வருது..//

வெண்பூ
மிக்க நன்றி

வெட்டிப்பயல் said...

//Subbu said...
முடியல வயிரு வலிக்கிது :)) அழுதுருவேன் ஆமா அழுதுருவேன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

சுப்பு,
இவனுங்க பண்றதையெல்லாம் பார்த்தா இதை விட காமெடியாத்தான் இருக்குது :)

வெட்டிப்பயல் said...

//MSV Muthu said...
//ஏதாவது இப்படி அனுப்பனும்னு நினைச்சா வில்லு பட டீவீடியை அனுப்பி வைக்கவும்//

:) :) excellent!//

முத்து,
பார்த்து... நம்ம கார்க்கி வந்து புடிச்சிக்க போறாரு :)

வெட்டிப்பயல் said...

//
Anonymous said...
Nice jokes. Athuvum Villu CD too good.//

நன்றி நண்பரே!

வெட்டிப்பயல் said...

//வேத்தியன் said...
நல்ல கற்பனைங்க...
:-)//

மிக்க நன்றி வேத்தியன்...

நாகை சிவா said...

:)

கேவலமா இருக்கு! இரு தரப்பையும் பார்த்தா! என்னத்த பண்ண!

நாகை சிவா said...

//அவுங்களுக்கு ஏதாவது இப்படி அனுப்பனும்னு நினைச்சா வில்லு பட டீவீடியை அனுப்பி வைக்கவும்.//

அனுப்பி வைப்பதை விட பிடிச்சு வச்சு குருவி படத்தை 100 தடவை பார்க்க வைக்கனும்

rapp said...

pink is the new black:):):)

Divyapriya said...

ஹய்யோ அண்ணா, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...ROTFL :D

Poornima Saravana kumar said...

:))))

ச்சின்னப் பையன் said...

:-))))

நசரேயன் said...

கலக்கல்

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...
:)

கேவலமா இருக்கு! இரு தரப்பையும் பார்த்தா! என்னத்த பண்ண!

9:00 AM//

ஆமாம் புலி... அவனுங்க பண்ற கேவலத்துக்கு சமமா இவுங்களும் பண்றாங்க :)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...
//அவுங்களுக்கு ஏதாவது இப்படி அனுப்பனும்னு நினைச்சா வில்லு பட டீவீடியை அனுப்பி வைக்கவும்.//

அனுப்பி வைப்பதை விட பிடிச்சு வச்சு குருவி படத்தை 100 தடவை பார்க்க வைக்கனும்//

புலி,
நான் இன்னும் அவ்வளவு கொடூரமா மாறல :)

வெட்டிப்பயல் said...

//rapp said...
pink is the new black:):):)//

:))

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
ஹய்யோ அண்ணா, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...ROTFL :D//

ரொம்ப நன்றி தங்கச்சி :)

வெட்டிப்பயல் said...

//Poornima Saravana kumar said...
:))))//

ரொம்ப நன்றி தங்கச்சி :)

வெட்டிப்பயல் said...

// ச்சின்னப் பையன் said...
:-))))//

டாங்கிஸ் ச்சி பை :)

வெட்டிப்பயல் said...

// நசரேயன் said...
கலக்கல்

//

மிக்க நன்றி நசரேயன் :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வில்லு படத்துக்குப் பதிலா நான் கடவுள் கொடுத்தா எப்படியிருக்கும்..?

எல்லாருமே கஞ்சா அடிக்க காசிக்குப் போய்த் தொலைய மாட்டாங்களா..?

நாமளாவது நிம்மதியா இருக்கலாமே..?

என்ன நான் சொல்றது..?

வெட்டிப்பயல் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வில்லு படத்துக்குப் பதிலா நான் கடவுள் கொடுத்தா எப்படியிருக்கும்..?

எல்லாருமே கஞ்சா அடிக்க காசிக்குப் போய்த் தொலைய மாட்டாங்களா..?

நாமளாவது நிம்மதியா இருக்கலாமே..?

என்ன நான் சொல்றது..?//

இன்னும் நான் அந்த படமே பார்க்கலையே... இங்க பாஸ்டன்ல ரிலிஸ் ஆகலை :(